மித்ரன், "என்ன மாளு? உன் முகத்தில எள்ளும், கொள்ளும் வெடிக்குது. என்னாச்சு?"
"ம்ம் இந்த மங்குனி என் பர்த்டேக்கு ஸர்ப்ரைஸ் தரேன்னு கூட்டீட்டு போய், ஒரு ஓடாத தேங்கி நிக்கிற நதிக்கு பக்கத்துல நிறுத்திட்டான். செம்ம கப்பு, அதான் கோபம்".
"ஏன் மாளவிகா, அங்க இருந்த வானத்து நிலவு பௌர்ணமியாய் ஜொலிச்சுதே அத பாக்கலியா?"
"எல்லாம் பாத்தேன்! ஏதோ அந்த ஸீன் ரொம்ப அழகா இருந்ததால, நீ அடி வாங்காம தப்பிச்ச!" என்று மாளு கூற அனைவரும் சிரித்தனர்.
"சரி, எனிவே விஷ் யூ எ வெரி ஹாப்பி பர்த்டே மாளு" என்று மித்ரன் வாழ்த்தினான். காருண்யாவும் அவளை கட்டிப்பிடித்து வாழ்த்தி, அவள் காதில் ரகசியமாய் இன்னிக்கு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என்றாள்.
இவள் என்ன என்று கேட்கும் முன், சித்தார்த்தின் தலைமையில் ஹோட்டல் ஊழியர் ஒருவர், தாஜ்மஹால் வடிவ கேக்கை கொண்டு வந்து, மாளவிகாவின் முன்னே வைத்தார்.
"கமான் மாளு! கட் த கேக்!" என்று குதூகலத்தோடு கூறினாள் காருண்யா.
மாளவிகாவும் அவள் கூற்றின் படி கேக்கை வெட்ட, அதை முழுவதுமாக வெட்ட முடியாமல் ஏதோ தட்டு பட்டது.உடனே ஆர்வமாகி, அது என்னவென்று அந்த பகுதியை தோண்டி பார்க்க, இதய வடிவ சிறிய பெட்டி ஒன்று இருந்தது. அந்த பெட்டியை திறக்கவும், அது 'வில் யூ மேரி மீ' என்று சத்தம் எழுப்பியது. அந்த பெட்டியின் உள்ளே, ஒற்றை வெள்ளை கல் பதித்த ஒரு தங்க மோதிரமும் இருந்தது. மாளவிகா புரிந்தும் புரியாமலும் முழிக்க,
"என்ன மாளு! எங்க அண்ணன் சித்தார்த்தை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா? ஆக்சுவலி இது தான் சித்து அண்ணனோட ப்ளான். அந்த நதிக்கரை ரொமேண்டிக் ஐடியா நம்ம மித்ரன் சாரோடது. சீக்கிரம் உன் பதிலை சொல்லு" என மாளவிகாவை சீண்டினாள் காருண்யா.
மாளவிகாவோ கண்கள் நிறைய கண்ணீர் நிறைந்து, அது கன்னம் தொட்டு வழிந்து ஓடுவது கூட தெரியாமல் நின்றிருந்தாள்.
"ஐயோ சாரி மாளவிகா! நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா? நீயும் என்னை லவ் பண்றன்னு நினைச்சு தான், இவ்வளவும் பண்ணேன். நீ என்னடான்னா இப்படி அழுவுற.சாரி! நம்ம கடைசி வரைக்கும் ஃப்ரெண்ட்ஸாவே இருக்கலாம்" என சித்தார்த் புலம்பி கொண்டிருக்கும் போதே, அவன் நடு மண்டையில் நச்சென்று ஒரு குட்டு விழுந்தது, குட்டியது காருண்யா தான்.
"ஏன்டா அண்ணா! எங்க அண்ணி சொல்ற மாதிரி, நீ சரியான மங்குனியாத்தான் இருக்க, அந்த கண்ணீர் ஆனந்த கண்ணீர் டா மரமண்ட. இதுவே அவளுக்கு உன்ன பிடிக்கலைன்னா, இந்நேரம் அந்த பெட்டியை உன் மூஞ்சில வீசி இருப்பா! உனக்கு புரிய வைக்கறதுக்குள்ள எனக்கு வயசாயிடும் போலையே!" என அழகாக புலம்பினாள் காரு.
"ஓ இதுல இப்படி ஒரு சங்கதி இருக்கா? நானும் சித்து நினைச்ச மாதிரி தான் நினைச்சேன்" என்றான் மித்ரன்.
"சுத்தம்! நீங்க முதல்ல உங்க ரூம்க்கு போங்க, நான் எங்க ரூம்க்கு போறேன். அவங்க ரெண்டு பேரும், கொஞ்சம் மனம்விட்டு பேசட்டும்" என்று கூறி மித்ரனையும் அவ்விடத்தை விட்டு அழைத்து சென்றாள்.
இவர்கள் போகும் போது பின்னாடியே ஓடி வந்த சித்தார்த், "தாங்க்யூ சோ மச் காருண்யா. உன் ஐடியா நல்லா ஒர்க் அவுட் ஆயிடுச்சு" என்று சொல்லிவிட்டு ஓடி சென்றான்.
"ஓஹோ உங்க ஐடியாவா? பரவாயில்லையே, நம்ம ரெண்டு பேரும், ஒரே மாதிரி அவங்க ரெண்டு பேரையும் இன்னிக்கு சேர்த்து வைக்கணும்னு நினைச்சிருக்கோம். சரி நீங்க கேர்ள்ஸ் ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுங்க, நாளைக்கு காலைல சீக்கிரமாவே மணிகண்டன் சாரோட, ஜூவிற்கு போகணும்" என்று கூறிவிட்டு அவன் அறையை நோக்கி விரைந்து சென்றான் மித்ரன்.
காருண்யாவும் அவளிற்கென ஒதுக்கப்பட்ட அறையில் சென்று ஓய்வெடுக்க, அதை கலைக்கும் விதமாக குறுஞ்செய்தி வந்ததற்கான சத்தம் கேட்டது. அதை எடுத்து பார்க்க, அது மித்ரனிடம் இருந்து வந்திருந்தது.
"எங்க அம்மாவ பத்தி கேட்டீங்கள்ள, ஆசை ஆசையாய் எங்க அப்பாவை காதலிச்சு, கல்யாணம் பண்ணாங்க, அதுக்கு சாட்சியா நான் பொறந்ததால, என்ன ரெண்டு பேரும் தல மேல் தூக்கி வெச்சு ஆடினாங்க, ஆனால் திடீர்னு ஒரு நாள் அவங்களோட தாய் வீட்டு ஞாபகத்தாலும், எங்க அப்பா கூட போட்ட சின்ன சண்டையாலும் மனசுடஞ்சு போய் தற்கொலை செய்துகிட்டாங்க. அவங்களை நம்பி, நான் ஒருத்தன் இருக்கேங்கறத மறந்து, அவங்க பிரச்சினையை மட்டும் பெரிசா நினைச்சு போய்ட்டாங்க. அன்னிலேர்ந்து இன்னிக்கு வரை, நான் அவங்க மேல கோபமா தான் இருக்கேன். ஏதோ இதையெல்லாம் உங்ககிட்ட சொல்லணும்னு தோணுச்சு. நீங்க கேட்டதால சொன்னேன். ஆனா படிச்சு முடிச்சப்புறம் மறந்துடுங்க ப்ளீஸ். இதுக்கு நீங்க எனக்கு பதிலும் அனுப்ப வேண்டாம்" என்ற நீண்ட குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி இருந்தான்.
இதை படித்த காருண்யாவிற்கு, நிச்சயம் மித்ரனின் அம்மா, இச்சிறு பிரச்சினைக்காக உயிரை மாய்த்து கொண்டிருக்கமாட்டார் என தோன்றியது. வேறு ஏதோ பலத்த காரணம் இருக்க வேண்டும் என்றும் யூகித்தாள். முதலில் மாளவிகா வந்தவுடன், மித்ரனை பற்றி விசாரிக்க வேண்டும் என்று முடிவெடுத்து, அவளுக்காக காத்திருந்தாள்.
அரைமணி நேர இடைவெளியில் மாளவிகாவும் அறைக்கு வந்துவிட்டாள். வந்தவுடன் காருண்யாவின் கைகளை பிடித்து,
"தாங்க்ஸ் எ லாட் காரு. இத்தன நாள் வரைக்கும் ஃப்ரெண்ட்ஸாவே இருந்துட்டு, சட்டுனு எப்படி போய் காதலை சொல்றதுன்னு ரெண்டு பேரும் தயங்கி கிட்டே இருந்தோம். இப்ப உன்னால நல்லது நடந்துடுச்சு" என கட்டிக்கொண்டாள்.
"அப்புறம் காரு! நம்ம ஏன் மித்ரன் சார்கிட்ட சொல்லி, உன் காதலனை தேட சொல்லக்கூடாது. அவருக்கு நிறைய இன்ஃப்லுயண்ஸ் இருக்கு, நிச்சயம் அவரால கண்டுபிடிக்க முடியும்".
"அய்யோ வேண்டாம்! அவரிடம் எல்லாம் இதை சொல்ல வேண்டாம். நானே பார்த்து கொள்கிறேன்" என அவசர அவசரமாக மறுத்தாள் காருண்யா.
"ஏன் காருண்யா வேண்டாங்கற? உனக்கு இந்த ஊரே புதுசு, இதில் எங்க உன்னால அவர தேட முடியும். உன் நல்லதுக்கு தான் சொல்றேன் ஒருவேளை, நீ உன்னுடைய பழைய காதலனை மறந்து, இப்பொழுது மித்ரன் சாரை விரும்ப ஆரம்பிச்சிட்டியா? அப்படின்னா சொல்லு, நான் ஏன் கேக்கறேன்னா, பிளைட்ல நீங்க ரெண்டு பேரும் கைகோர்த்து உட்கார்ந்திருந்ததை நானும் கவனித்தேன். என்னதான் நடக்குது உங்க ரெண்டு பேருக்குள்ளே? நீ இப்ப இவரை லவ் பண்றியா?" என்று உடைத்து கேட்டாள் மாளவிகா.
"நான் அப்பவும், இப்பவும், எப்பவும் மித்ரனை, என் யுவமித்ரனைத்தான் காதலிக்கிறேன்" என்று உரக்க கத்திவிட்டு கதறி அழத்தொடங்கினாள் காருண்யா.
"காரு! காரு! என்னாச்சு இப்ப எதுக்கு அழுவுற?" என்று மாளவிகா பல தடவை கேட்டும் பதில் கூறாமல், அழுது கொண்டே இருந்தாள் காருண்யா.
சரி, சிறிது நேரம் அவள் அழுது ஓயட்டும் என காத்திருந்தாள் மாளவிகா. பத்து நிமிடங்கள் கழித்து, ஆசுவாசமான காருண்யா மெல்ல பேச தொடங்கினாள்.
"ஆமாம் மாளவிகா! நான் தேடி வந்தது இந்த மித்ரனைத்தான். ஆனால் இவர் பெயர் மித்ரன் என்று எனக்கு தெரியாது. என்னை பொருத்தவரை என் மனதில் நிறைந்திருப்பவர் யுவன் தான் அதாவது யுவமித்ரன் தான்".
"என்ன காருண்யா? ஒரேடியா குழப்புற அவர் ஆஸ்திரேலியா வந்ததே இல்ல. நீ இந்தியா வந்ததும் இல்ல. அப்புறம் எப்படி ரெண்டு பேரும் பார்த்து, பழகி, காதலிச்சு ஒரேடியாக குழப்பமா இருக்கு, தெளிவா நடந்ததை சொல்லு" என்று மாளவிகா பொறுமையாக கேட்டாள்.
மறுபடியும் மாளவிகாவோடு சேர்ந்து காருண்யாவும் நான்கு வருடங்கள் பின்னோக்கி பயணித்தாள்.
முதல் சந்திப்பை பற்றி கேட்டதும், மித்ரன் மேல் காருண்யா கொண்டிருக்கும் கணக்கிலடங்கா காதலின் காரணம் புரிந்தது.
"சூப்பர் செல்லம்! எந்த ஒரு பொண்ணுமே கண்ணியமா, அடுத்தவங்கள புண்படுத்தாத ஆண்மகனை தான் தேர்ந்தெடுப்பாங்க, அதையே தான் நீ சரியா செஞ்சிருக்க. அப்புறம் என்ன நடந்தது சொல்லு?"
அந்த சந்திப்பிற்கு பிறகு அடுத்த நாளே யுவனும், கவினும் மறுபடி ஜூவிற்கு வந்தார்கள். கவின் என்னை தேடி வந்து மன்னிப்பு கேட்டான்.
"மிஸ் என்னை மன்னிச்சுடுங்க! நேத்து தெரியாம கிண்டல் பண்ணிட்டேன். இனிமேல் வாழ்க்கையில் யாரையும் கிண்டல் பண்ணமாட்டேங்க" என்றான்.
"சரி இந்த நாட்டுல, நம்ம இந்தியர்களை பத்தி உயர்வான கருத்து வெச்சிருக்காங்க. தயவு செய்து அதை பாழாக்கிடாதீங்க கவின்" என்றாள் காருண்யா.
"என் பெயர் எப்படி உங்களுக்கு தெரியும்?"
"உங்க பெயரும் தெரியும், உங்க ஃப்ரெண்டோட பெயர் யுவன்னும் தெரியும். சரி நீங்க ரெண்டு பேரும் அங்க இருக்கிற கேஃபிட்டேரியால வெயிட் பண்ணுங்க, இன்னும் பத்து நிமிஷத்துல என் ட்டியூட்டி முடிஞ்சுடும், வந்துடறேன்" என்று கூறி அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தாள்.
சொன்னபடி பத்து நிமிடத்தில் அவர்களையும் சந்தித்தாள்.
"சொல்லுங்க கவின், எங்கிட்ட சாரி கேக்கவா இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க?"
"ஆமாம் மேடம்"
"மேடம்னுலாம் கூப்பிடாதீங்க, கால் மீ காருண்யா, எனிவே தாங்க்யூ ஃபார் கம்மிங். ஜஸ்ட் எ மினிட்" என்று கூறிவிட்டு மூவருக்குமாக கேப்பிச்சீனோ காபி எடுத்து வந்தாள்.
"நேத்திக்கு அனிமல்ஸ பாக்க வந்தீங்க, இன்னிக்கு என்னை பாக்க வந்ததால, என் ஸ்பெஷல் கெஸ்ட் நீங்க" என்று கூறி குடிக்க கொடுத்தாள்.
"ரொம்ப தேங்க்ஸ் காருண்யா. எங்க நீங்க கோவமா இருப்பீங்களோனு பயந்துட்டேன்".
"தப்ப உணர்ந்தப்புறம், எதுக்கு கோவப்படணும். ஏன் உங்க ஃப்ரெண்ட் எதுவும் பேசவேமாட்டேங்கிறார்".
"ம்ம்! இவன் பண்ண வேலைக்கு, என்னால எப்படி உங்ககிட்ட முகம் கொடுத்து பேச முடியும். ஆக்சுவலி நான் வரவே மாட்டேன்னு சொன்னேன். இவன் தான் கம்பல் பண்ணி கூட்டீட்டு வந்தான்" என்று பல்லை கடித்து கொண்டே கூறினான் மித்ரன்.
"இட்ஸ் ஆல் ரைட் நான் அத அப்பவே மறந்துட்டேன். எனிவே நைஸ் டு மீட் யூ. எனக்கு அடுத்த ட்யூட்டி இருக்கு, ப்யூச்சர்ல சான்ஸ் இருந்தா சந்திப்போம்!" என கூறி விடைப்பெற்று சென்றாள் காருண்யா.
இப்போது இறந்தகாலத்தில் இருந்து முதலில் வெளிவந்தது மாளவிகா தான்."சே என்ன காரு ஒரு போன் நம்பர், அட்ரெஸ்லாம் வாங்காம, ப்யூச்சர்ல சான்ஸ் இருந்தா பாக்கலாம்னு சொல்லிட்ட? உனக்கு பாத்த உடனே தான் மித்ரன பிடிச்சு போச்சுல்ல?"
"நமக்கு பல பேரை பாத்த உடனே பிடிக்கும், அதுக்காக பிடிச்சவங்களை எல்லாம் காதலிக்க முடியுமா என்ன? நான் அப்போதெல்லாம் அவர் மேல் காதலில் விழவில்லை. அது ஒரு சுவாரஸ்யமான விஷயம்".
"என்ன அதுன்னு சீக்கிரம் சொல்லு? என்னால சஸ்பென்ஸ் தாங்க முடியாது".