நீயே நினைவாய் - 13
காருண்யாவின் மேல் எவ்வளவு கண்மூடித்தனமான அன்பு இருந்தால், யுவன் இந்தளவு தனக்கே தெரியாமல், தன்னையே மாற்றி கொண்டிருப்பான், என நினைக்க நினைக்க, காருண்யாவின் கண்களில் இருந்து நீரூற்று போல் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
"காரு! டோண்ட் பீ எமோஷனல், கீப் காம்" என அவளை சமாதானப்படுத்தி, அந்த கூட்டத்தை முடித்து வைத்தான் யுவமித்ரன்.
"எக்ஸ்க்யூஸ் மீ சார், நாங்க அவங்க கூட ஒரு போட்டோ எடுத்துக்கலாமா?" என ஐந்து மாணவிகள், காருண்யாவுடன் போட்டோ எடுத்து கொள்ள யுவனிடம் அனுமதி கேட்டனர்.
"யெஸ் தாராளமா" என்று கூறி வழிவிட்டு நின்றான் மித்ரன்.
"மேம்! உங்க டாக்க நாங்க பில்லபாங் ஜூவில் கேட்டிருக்கோம்.அப்ப்பா அந்த ஃபீல வார்த்தையால சொல்ல முடியாது. உங்களோட பேச்ச கேட்ட அப்புறம் தான், நாங்களும் எங்க சார்பில ஏதாவது பண்ணனும்னு தோணுச்சு. அதுவும் நீங்க அடிக்கடி சொல்லுவீங்களே, 'இந்த பூமி முதல்ல தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் தான் சொந்தம். பரிணாம வளர்ச்சியில் கடைசில வந்த மனுஷன், அத அபகரிக்க நினைப்பது ரொம்ப தவறு, அபகரிப்பதோடு இல்லாமல் மற்ற உயிர்களை அடியோடு அழிப்பது கொடுமை' அப்படின்னு நீங்க சொன்ன விஷயம், எங்கள ரொம்பவே பாதிச்சுடுச்சு, அதனால நாங்க நிறைய மாறியிருக்கோம்" என்று கூறி அந்த மாணவிகள் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
"யுவன் நீங்க ஏன் ஓரமா நிக்கறீங்க? நீங்களும் வாங்க!" என அடுத்த புகைப்படத்திற்கு, அவனையும் தங்களோடு இணைத்து கொண்டாள் காருண்யா.
காதல் கொண்ட அவள் உள்ளம், முதல்முறை அவன் அருகில் நின்று புகைப்படம் எடுத்து கொண்டதில், ஆனந்த கூத்தாடியது. பாவம் காதல் பித்து பிடித்த அவள் மனதிற்கு தெரியவில்லை, இதுவே முதலும், கடைசியுமான புகைப்படம் என்று.
"யுவன் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு! ஏதோ பெரிசா சாதிச்ச ஃபீலிங் இருக்கு. என்னோட சாதாரண பேச்சை கேட்டு, இத்தன பேர் மனசுல இவ்வளவு பெரிய மாற்றம் வரும்னு, கனவுல கூட நான் நினைச்சதில்லை. எனக்கு பிடிச்ச விஷயத்த எனக்கு பிடிச்ச மாதிரி பண்ணேன், அவ்வளவுதான்".
"அதுவே போதும் காருண்யா. நமக்கு பிடிச்ச விஷயத்தை, முழு ஈடுபாடோட செஞ்சா, கண்டிப்பா அதுக்கான பலன் கிடைக்குங்கறது உங்க விஷயத்துல ப்ரூஃப் ஆயிடுச்சு. இதையே தொடர்ந்து செய்யுங்க, ஐ ஆம் ப்ரௌட் ஆஃப் யூ"
"சரி யுவன்! நான் கிளம்பறேன். அதுக்கு முன்னாடி, உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். அதை எப்படி சொல்றதுன்னு தெரியல" என்று கூறி தரையை பார்த்துக்கொண்டு, வெட்கத்துடன் நின்றாள் காருண்யா.
"ஐயையோ எதையும் சொல்லிடாதீங்க! எப்படி உங்கள நினைச்சு, நான் பெருமையா பீல் பண்றேனோ, அதே மாதிரி நீங்களும், என்ன நினைச்சு பெருமையா பீல் பண்ற நேரத்துல, உங்க மனசுல உள்ளத சொன்னா போதும். அதுவரைக்கும் உங்க கண்களே நீங்க நெனச்சத என்கிட்ட சொல்லிடுச்சு, அதுவே போதும்" என்று கூறி சிரித்தான் யுவன்.
"சரி அப்ப நான் கிளம்புறேன்!" என்று வெட்கத்துடன் கூறிவிட்டு விடைபெற்றுச் சென்றாள் காருண்யா.
"இருங்க காருண்யா மறக்காம, அடுத்த மாதம் பத்தாம் தேதி, உங்க ஜூவிற்கு பக்கத்துல இருக்குற, காபி ஷாப்க்கு வந்துடுங்க, நிச்சயம் உங்களை பெருமைப்படுத்துவேன்னு நினைக்கிறேன்" என்று கூறி அவளை வழி அனுப்பி வைத்தான் யுவன்.
அவனிடம் தன் காதலை தெரிவிக்க இன்னும் முழுதாய் இருபத்து ஒன்று நாட்கள் இருந்ததை எண்ணி, அவள் இருபத்தியோரு வயது பெண்மை பூரிப்படைந்தது. அந்த ஆஸ்திரேலியா குளிரிலும், காதல் கொண்ட அவள் உள்ளம் நெருப்பாய் கொதித்தது. வரும் வாரங்களில், ஞாயிற்றுக்கிழமைக்காக மிகவும் ஆவலுடன் காத்திருந்தாள். ஆனால் எப்போதும் வரும் யுவன், அந்த வாரங்களில் வரவில்லை. அவனோடு சேர்த்து கவினையும் காணவில்லை.
சரியாக பதினெட்டாம் தேதி, யுவனிடம் இருந்து ஒரு கடிதம், காருண்யாவின் ஜூ அட்ரெஸ்க்கு வந்தது.
"காருண்யா வரும் இருபதாம் தேதி உங்களை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன், நீங்க சொல்ல போகும் விஷயத்தை காதும், மனசும் குளிர கேட்க வேண்டும். இப்படிக்கு உங்களின் யுவன்" என்று எழுதியிருந்தான். இதை படிக்க காருண்யா பட்டபாடு அவளுக்கே தெரியும். அவளுக்கு தமிழ் பேசத் தெரிந்த அளவு படிக்க தெரியாது, ஏதோ திக்கி திணறி படித்து முடித்தாள். படித்து முடித்ததும், மகிழ்ச்சியை விட ஆசுவாசமே மிகுதியாய் வந்தது அவளுக்கு.
இரண்டு நாட்கள் இரண்டு யுகங்களாய் கடந்தது, அவன் குறிப்பிட்டிருந்த இருபதாம் தேதியும் வந்துவிட்டது. என்றுமே ஜீன்ஸ் மற்றும் டீ சர்ட்டுடன் ஒப்பனை இன்றி திரியும் அவள், அன்று முதல் முறையாக, தனக்கென நேரம் செலவழித்து ஒப்பனையோடு சேர்த்து, இந்திய பாரம்பரிய உடையான புடவையையும் உடுத்தி கொண்டாள். கண்ணாடி முன்னின்று, தன்னை ஒரு தரத்திற்கு இரு தரம் சரி பார்த்து கொண்டாள். முதல் முதலாக நம்மை புடவையில் காணும் யுவன், எப்படி ரியாக்ஷன் கொடுப்பான், என்றெல்லாம் கிறுக்குத்தனமாய் யோசித்து குழம்பினாள். "அம்மா தாயே தனக்கு தானே பேசிக் கொண்டது போதும், ஒழுங்கா சீக்கிரம் காபிஷாப்பிற்கு போற வழியப்பாரு" என்று அவள் மனசாட்சி அவளது மண்டையில் நங்கென்று கொட்டியது.
காருண்யா குறித்த நேரத்தில் கிளம்பிச் சென்று, அந்த காபி ஷாப்பில் காத்திருந்தாள். ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் அல்ல காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை, அந்த காபி ஷாப்பிலேயே யுவமித்ரனுக்காக காத்திருந்தாள். இரவு 8 மணி ஆன பின்பும், சிறிது நம்பிக்கை இருக்க அந்த காபி ஷாப்பின் மேனேஜரிடம், தன்னை யாராவது தேடி கொண்டு வந்தால், இந்த தொலைபேசி எண்ணிற்கு போன் பண்ணுமாறு சொல்லுங்கள், என்று தொலைபேசி எண்ணையும் கொடுத்து விட்டு வந்தாள்.
மனம் முழுவதும் பாரத்துடன் வீடு திரும்பியவளுக்கு, வாழ்க்கை சூனியமாகி போனது. அடுத்த நாளும், அந்த காபி ஷாப்பிற்கு சென்று, தன்னை யாரேனும் தேடிக்கொண்டு வந்தார்களா என்று விசாரித்தாள். அவர்கள் இல்லை என்று பதில் கூற காருண்யா விரக்தியின் விளிம்பிற்கே சென்றாள்.
"ஒருவேளை யுவனுக்கு என்னை பிடிக்கவில்லையோ, அதனால்தான் வரவில்லையோ" என அவள் யோசிக்க "அவனுக்கு தான், உன்னை பிடித்திருக்கிறது என்று, அவன் வாயாலே சொல்லிவிட்டானே, அவனுக்கு என்ன அவசரமோ பொறுமையாக ஒரு வாரம் காத்திரு!" என்று அவள் மூளை அவள் இதயத்தைக் கட்டிப்போட்டது.
இந்த ஒரு வார காலமும், அவள் காபி ஷாப்பில் சென்று தினமும் யுவனுக்காக காத்திருந்தாள். ஆனால் அவன் வந்தபாடில்லை. பொறுமை இழந்த அவள், அவன் கல்லூரிக்கே சென்று பார்ப்பது என முடிவெடுத்து, அடுத்த நாளே அவன் கல்லூரிக்கு சென்றாள். அங்கிருந்த இந்திய மாணவர்கள், இவளை அடையாளம் கண்டு கொள்ள, அவர்களிடம் விசாரித்தாள் "நாங்களும் கடைசியா போன வாரம் தான் பார்த்தோம். அதுக்கப்புறம் அவர் எங்கேன்னு தெரியல" என்று கூறினார். கவினின் தொலைபேசி எண்ணும், யுவனின் தொலைபேசி எண்ணும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. ஒன்றும் புரியாத குழப்பத்தில், வீடு வந்து சேர்ந்தாள் காருண்யா.
கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் தோன்ற, தினமும் காலையில் எழுந்து காபி ஷாப் போவதும், பிறகு தன்னுடைய வேலைகளை பார்ப்பதும், மறுபடியும் வேலை முடிந்து திரும்பும் போது, காபி ஷாப் சென்று காத்திருப்பதுமாக, தன் காலத்தைக் கடத்தினாள் காருண்யா.
ஒரு மாதம் இப்படியே போக, திடீரென்று அவளுக்கு ஒரு ஐடியா தோன்றியது. நாம் ஏன் போய், கல்லூரி பிரின்ஸிபலை விசாரிக்கக்கூடாது என்று முடிவெடுத்து, அவர்களிடம் விசாரிக்கச் சென்றாள்.
"அவங்க ரெண்டுபேருமே படிப்ப டிஸ்கண்டினு பண்ணிட்டாங்க மா. இவ்வளவு தான் என்னால சொல்ல முடியும்" என்றார் அந்த கல்லூரியின் பிரிண்ஸிபல்.
"சரி சார்! அவங்களோட இந்தியா அட்ரஸ் கொடுங்க, நான் போய்ப் பார்த்துக்கறேன்!"
"சாரிமா கல்லூரி ரூல்ஸ் படி, அதெல்லாம் தரமுடியாது!" என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லி விட்டு தன் வேலையை கவனிக்கத் தொடங்கினார் பிரின்ஸிபல்.
சமூக வலைத்தளத்தில் தேடலாம் என்றால், அதில் யுவன் மற்றும் கவின் இரண்டு பேருமே அக்கவுண்ட் எதுவும் வைத்திருக்கவில்லை. யுவனுக்கு இதிலெல்லாம் நாட்டம் இல்லை, அதனால் தன் நண்பனான கவினையும் அதில் ஈடுபட அனுமதிக்கவில்லை.
"எல்லாம் வல்ல இறையே இதுதான் உன் முடிவா? நானும், யுவனும் வாழ்க்கையில் சேரக்கூடாது என்று நீ முடிவு செய்து விட்டாயா? அதனாலதான் இப்படி அலைகழிக்கிறாயா? என்னால் முடிந்த அளவு நானும் முயற்சி செய்து விட்டேன், இனிமேல் என்னால முடியாது" என மனம் சோர்ந்து, யுவனை தேடுவதை கைவிட்டாள் காருண்யா.
ஆனால் தினமும் அவனுக்காக அந்த காபி ஷாப்பில் காத்திருந்தாள்.
மாதங்கள் உருண்டோடி இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் யுவனின் ஞாபகம் அதிகரித்ததே தவிர துளியும் குறையவில்லை. வீட்டில் இருந்தால் தான் அவன் ஞாபகம் எட்டி பார்க்கிறது என்றால், வேலைக்கு போனால் அவனின் ஞாபகம் இவளை மூச்சு திணற வைத்தது. குட்டி சிவப்பு நிற பாண்டா, இவளிடம் ஓடி வரும் போதெல்லாம், யுவனின் நினைவால் இவள் கண்களிலும் கண்ணீர் முட்டி கொண்டு வந்தது.
"அட லூசு! நீ என்ன கற்காலத்திலா இருக்க? அவனவன் எமன்கிட்டே இருந்து தன்னுடைய கணவனை போராடி காப்பாத்தி இருக்காங்க. நீ என்னடான்னா இதுக்கு உக்காந்து அழுதுட்டு இருக்க? யுவன் என்ன வேற ஒரு உலகத்திலா இருக்கான். இந்தியால தான இருக்கான். நீயும் போய் எப்படியாவது கண்டுபிடி. அதான் உன்னுடைய பெரியப்பா தமிழ்நாட்டில் இருக்காரு இல்ல, ஏதாவது காரணம் சொல்லி, அங்க போய் அங்கிருந்து நீ தேடு!" என்று அவளுடைய பலவீனமான இதயத்திற்கு, அவள் மூளை தக்க சமயத்தில் யோசனை கொடுத்தது.
மூளை சொன்ன யோசனையின் படியே, முகநூலில் தேட, அவளுடைய அண்ணனாகிய சித்தார்த் கிடைத்தான். அவனிடம் பேசிப் பழகி, இப்போது இந்தியா வந்து மாளவிகாவின் முன் நின்று கொண்டிருக்கிறாள் காருண்யா.
"வாவ் காருண்யா! என்னால் நம்பவே முடியல, நீ ஒவ்வொரு நிமிஷமும் மித்ரனையே நினைச்சுக்கிட்டு இருக்க, இன்னும் சொல்லப்போனா உன் நினைப்பு முழுசாவே அவர் தான், சே இனிமே அவனுக்கு என்ன மரியாதை. ஆனால் அவன் உன் நினைவு துளியும் இல்லாம, எப்படி அசால்ட்டா திரியுறான். இரு அவனை பார்த்து நாக்கை பிடிங்குக்கறா மாதிரி நாலு கேள்வி கேட்டாத்தான், எனக்கு திருப்தியா இருக்கும்" என்று சீறினாள் மாளவிகா.
"பொறு மாளவிகா! நம்மளாவே எதையும் முடிவெடுத்து அவசரப்படக்கூடாது. ஒருவேளை அவர் இந்தியா வந்த பிறகு, என்னை விட நல்ல பெண்ணை பார்த்து இருக்கலாம், அவளை விரும்பி இருக்கலாம். அதனால் என்னை அடையாளம் தெரியாத மாதிரி நடந்து கொள்ளலாம், இல்லைன்னா அவருக்கு வேறு ஏதோ பெரிய பிரச்சனை இருக்கு, அதனால் அவருக்கு அனைத்தும் மறந்து விட்டது. இந்த ரெண்டில் எது வேணும்னாலும் இருக்கலாம். அதனால நாம அவசரப்படாமல பொறுமையா தான் கையாள வேண்டும்".
"நீ வேணும்னா எருமை மாதிரி பொறுமையா இரு. என்னால் அப்படி எல்லாம் இருக்க முடியாது. நாளைக்கு காலையில, நிச்சயமா நான் இதைப் பத்தி மறைமுகமாகவாவது அவர்கிட்ட கேட்டே தீருவேன்" என்று தீர்க்கமாக முடிவெடுத்து உறங்க சென்றாள் மாளவிகா.
"அய்யோ! ஏன்டா உண்மையை சொல்லி, இவளிடம் மாட்டிக்கொண்டோம்" என்று திக்கித் திணறினான் காருண்யா. எனினும், அவளது உள்ளம் அடுத்த நாள் காலையில் மித்ரன் கூறப்போகும் பதிலுக்காக ஆவலாய் காத்திருந்தது. அவன் கூறும் பதிலிலேயே, அவள் இங்கே இருப்பதா அல்லது ஆஸ்திரேலியா போவதா என முடிவெடுக்கலாம் என்றிருந்தாள்.