நீயே நினைவாய் - 16
அடுத்த நாள் காலையில், காருண்யாவை ரெஸ்ட் எடுக்க சொல்லிவிட்டு, சித்தார்த் மட்டும் வெளியே கிளம்பி சென்றான்.
வெளியே ஒரு காபி ஷாப்பில், மாளவிகா அவனுக்காக காத்து கொண்டிருந்தாள்.
"ஹாய் மாளு! அதிசயமா கரெக்டான டைம்க்கு வந்துட்டியே?"
"ம்ம்! அது என்னமோ உன்னை பார்க்க வெளியே கிளம்பும் போது, எப்படியாவது லேட் ஆயிடுது. இப்ப என் ஃப்ரெண்டுக்காக வந்துருக்கேன்ல, அதான் சீக்கிரம் வந்துட்டேன், சிம்பிள்" என்று கூறி சிரித்தாள் மாளவிகா.
"ஏன் உனக்கு என்னை சீண்டலன்னா தூக்கமே வராதா? ஃப்ரெண்ட்ஸா இருக்கும் போது தான் கலாய்ப்ப இப்பவுமா?"
"என்ன இப்பவுமா? நாம எப்போவுமே ப்ரெண்ட்ஸ் தான். என்னால உன்ன கலாக்காம இருக்க முடியாது சித்து"
"அடிப்பாவி நம்ம லவ்வர்ஸ்ங்கறது உனக்கு மறந்து போச்சா? எங்க லவ் பண்ண விட்டுச்சுங்க, இந்த பயபுள்ள ரெண்டும். அவங்க ரெண்டு பேரும் நல்லா வெச்சு செய்யறாங்க. அவங்களும் லவ் பண்ணல, என்னையும் லவ் பண்ணவிடவில்லை. ஹையோ! ஹையோ!" என வடிவேலு ஸ்டைலில், தலையிலடித்துக் கொண்டு புலம்பினான்.
இதை பார்த்த மாளவிகா, விழுந்து விழுந்து சிரித்தாள். அப்போது சித்தார்த்தின் அலைபேசி சிணுங்க,"ஷ் சத்தம் போடாத! மித்ரன் தான் கூப்பிடுறார்" என்று கூறிவிட்டு அழைப்பை ஏற்றான். "ஆங்! சொல்லுங்க மித்ரன், அப்படியா எனக்கும் ரொம்ப உடம்பு சரியில்ல காய்ச்சல், அதனால் நான் இன்னைக்கு ஃபுல்லா வீட்ல ரெஸ்ட் எடுக்கப் போறேன். நீங்க போய் உங்க வேலைய பாத்துட்டு வாங்க" என்று கூறி அழைப்பை துண்டித்தான்.
"என்னாச்சு சித்தார்த்? எதுக்கு மித்ரன் கால் பண்ணாரு?"
"அவர் எங்கேயோ வேலை விஷயமா காஞ்சிபுரம் போறாராம் என்னையும் வரியான்னு கேட்டார், இத விட்டா, நம்ம அவங்க அப்பாகிட்ட தனியா பேச சந்தர்ப்பம் கிடைக்காது. அதனால் அவர்கிட்ட உடம்பு சரியில்லை, அதனால நான் வரலைன்னு பொய் சொல்லிட்டேன். சீக்கிரம் ஏதாவது சாப்பிட்டுட்டு, அவர் வீட்டிற்கு போய் சுந்தரம் சாரை பார்ப்போம்" என்று மாளவிகாவை துரிதப்படுத்தி அழைத்து சென்றான் சித்தார்த்.
இவர்கள் இருவரும் போன நேரம், மித்ரன் வீட்டில் இல்லை. சுந்தரம் மட்டுமே இருந்தார். இவர்களை பார்த்த சுந்தரம், "அடடே இப்ப தானே கிளம்பி வெளியே போனான், ஒரு போன் பண்ணிட்டு வந்திருக்கக் கூடாதா?" என்றார்.
"இல்ல அங்கிள், நாங்க மித்ரனை பார்க்க வரலை, உங்கள தான் பார்க்க வந்திருக்கோம். உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்றாள் மாளவிகா.
"என்னாச்சும்மா? மித்ரன் ஏதேனும் சொன்னானா? இல்ல இந்த ஜூ ஆரம்பிக்கிறதுல ஏதாவது பிரச்சனையா? இன்னொருமுறை மித்ரனை, எந்த திட்டத்தையும் கைவிட வேண்டாம் என்று சொல்லுங்கள்" என்று பதட்டத்தோடு கூறினார் சுந்தரம்.
மாளவிகா, "சே சே அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்லை அங்கிள். எல்லாம் சூப்பரா போய்கிட்டு இருக்கு".
"அப்ப்பாடா! இப்ப தான் நிம்மதியா இருக்கு, சரி நீங்க இரண்டு பேரும் எதுக்கு என்னை பாக்க வந்திருக்கீங்க, உங்க ரெண்டு பேர் கல்யாணத்தை பத்தி பேசி, உங்க வீட்டுல சம்மதம் வாங்கணுமா?" என்று மாளவிகாவை பார்த்து கேட்டு கண்ணடித்தார் சுந்தரம்.
"அய்யோ! அங்கிள் பயங்கர உஷார் பார்ட்டியா இருக்காரே" என்று மாளவிகாவின் காதில் கிசுகிசுத்த சித்தார்த். "அதெல்லாம் இல்ல அங்கிள் இது வேற விஷயம்" என்று கூறி அமைதியானான் சித்தார்த்.
"என்னன்னு சொன்னா தானேப்பா தெரியும்? நீயாவது சொல்லேம்மா!" என்று மாளவிகாவை பார்த்து கேட்டார் சுந்தரம்.
"அது வந்து அங்கிள், மித்ரன் ஆஸ்திரேலியாவில் படிச்சாரான்னு தெரியணும்?"
"இல்லையேம்மா அவன் இந்தியாவை விட்டு எங்கேயும் போனதில்லை" என்றார் சுந்தரம்.
"சரி அங்கிள், மித்ரனுக்கு கவின்னு யாராவது ஃப்ரெண்ட் இருக்காங்களா?" என்று சித்தார்த் கேட்டான்.
"இல்லை" என்றார் சுந்தரம்.
"இல்லையே அங்கிள், ஏற்கனவே மித்ரன், கவின் பத்தி எங்ககிட்ட சொல்லிருக்கார்" என்றாள் மாளவிகா.
"அதான் தெரியுதுல்ல அப்புறம் ஏன் வந்து என்ன கேக்கறீங்க?" என்று சற்று காட்டமாக சொன்னார் சுந்தரம்.
"இல்ல அங்கிள் அது வந்து" என்று மாளவிகா இழுக்க, "ஏன் என் பையன் நிம்மதியா இருக்கறது உங்களுக்கு புடிக்கலையா? தயவு செய்து எதுவும் கேட்டு, என்னை குழப்பாதீங்க? அவனே இப்ப தான், நல்ல தொழில் மற்றும் நல்ல துணையை தேடிக் கொண்டிருக்கிறான். எதையாவது கேட்டு தொல்லை பண்ணாதீங்க!" என்று கூறிவிட்டு கோபமாக உள்ளே எழுந்து சென்றார் சுந்தரம்.
மாளவிகாவும், சித்தார்த்தும் வேறு வழியில்லாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். "சித்து எனக்கு என்னமோ, மித்ரனோட அப்பாவுக்கு, எல்லா விஷயமும் தெரிந்திருக்கும்னு தோணுது. கொஞ்சம் விட்டு பிடிப்போம்" என்றாள் மாளவிகா.
"அதெல்லாம் சரி தான், ஆனா இப்ப ஏதோ புது கதையா மித்ரனுக்கு, நல்ல துணை கிடைச்சிருக்குன்னு சொல்றாரு. அதான் குழப்பமா இருக்கு, ஒரு வேளை வேற பொண்ண பிடிச்சதால தான், காருண்யாவை தெரிந்தும் தெரியாதது போல் காட்டி கொள்கிறாரா மித்ரன்".
"இல்ல சித்து! இதுல ஏதோ இடிக்குது. நீ சொல்ற லாஜிக் ஒத்து வரலை. காருண்யாவை உதாசீனப்படுத்துவதென்றால் நிச்சயம் அவளை வேலைக்கு எடுத்திருக்க மாட்டார். அவளுக்கு அடி பட்ட போது, மித்ரன் எவ்வளவு ஃபீல் பண்ணார் என்பது அவர் கண்களிலேயே தெரிந்தது. இதையெல்லாம் மீறி வேற எவளாவது வந்தான்னா, அவளை ஓட ஓட விரட்டறது என் பொறுப்பு" என்று தெளிவாக கூறினாள் மாளவிகா.
இரண்டு மூன்று நாட்களில், காருண்யா குணமானதும், அனைவருக்கும் ஜூ அமையப்போகும் இடத்தில், தற்காலிகமாக ஆபிஸ் அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அனைவரும் அங்கே வந்து அமர்ந்த நேரம், வேலைகள் மிக துரிதமாக நடைபெற்றது. காதல், கல்யாணம் அதைப்பற்றி எல்லாம் யோசிக்க நால்வருக்குமே நேரம் இருக்கவில்லை. நால்வரும் அவரவர் வேலைகளில் மிகவும் பிஸியாக இருந்தனர். இவர்களோடு சேர்த்து ஐந்தாவது ஆளாக, ஒரு சிறிய பெண் தென்றலும் ஆபிஸ் ப்யூனாக இருந்தாள்.
காலையில், ஒரு சிறிய ஐந்து நிமிட சந்திப்பு மற்றும் அன்றைய நாளில் என்னவெல்லாம் வேலை செய்ய வேண்டுமென்று பேசிவிட்டு, மறுபடியும் மாலையில் ஒரு பத்து நிமிடம் சந்தித்து, என்ன வேலை எல்லாம் முடிந்தது என்று பேசி விட்டு கிளம்பி சென்றனர்.
அந்தப் புதிய ஆபீஸ் ஆரம்பித்த நாளிலிருந்து மாளவிகாவின் மேஜையிலும், காருண்யாவின் மேஜையிலும் அழகழகான பூக்கள் அலங்கரித்து இருந்தன. இதையெல்லாம் செய்தது மித்ரன் தான்.
ஒரு நாள் காலை சந்திப்பில், "ஏன் மித்ரன் நானும் ரொம்ப நாளா கேட்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன், எதுக்காக தினமும் என் டேபிளிலும், மாளு டேபிளிலும் பூக்களை வைக்க சொல்லி ப்யூனிடம் சொல்றீங்க?" என்று காருண்யா கேட்டாள்.
"என்ன காருண்யா இப்படி கேட்டுட்டீங்க பூக்கள் பிடிக்காத பெண்கள் யாராவது இருப்பாங்களா? காலையில் வந்த உடனே, நீங்க இந்த ப்ரஷ்ஷான பூக்களை பார்த்தீங்கன்னா, உங்களுக்கு அந்த நாள் முழுக்க புத்துணர்ச்சியாக இருக்கும்னு தான் இந்த ஏற்பாடு செய்தேன்".
"ஆமாம் மித்ரன்! எனக்கு இதெல்லாம் ரொம்ப பிடிக்கும். சூப்பர் ஐடியா" என்று மாளவிகா மகிழ்ந்து கூறினாள்.
"சாரி இதுல உங்க கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. பூக்கள் பிடிக்கும் தான், ஆனால் அது செடியோடு சேர்ந்து இருந்தால் தான் அழகு மற்றும் இயற்கை. நம்ம சுயநலத்துக்காக, அதை நாம் பறித்து வைத்து அழகு பார்க்க வேண்டாமே, செடியிலேயே பாத்துட்டு வரலாமே. அதனால ப்ளீஸ், இனிமே இந்த மாதிரி பூக்களை கட் பண்ணி என் டேபிளில் வைக்காதீங்க. அப்படி ஆபீஸை அலங்கரிக்கணும்னா, சின்ன சின்ன போன்சாய் செடிகளை வாங்கி அழகுபடுத்தலாம்.அதனால் செடிக்கும் நல்லது, பூவுக்கும் நல்லது, நமக்கும் நல்ல ஆக்சிஜன் கிடைக்கும்" என்றாள் காருண்யா.
அடுத்த நாள் முதல் அவர்கள் நால்வரின் மேஜையிலுமே ஒவ்வொரு போன்சாய் செடிகள் அலங்கரித்து இருந்தன.எத்தனை நாள் தான், மனதுக்குள் உள்ள காதலை பூட்டி வைப்பது. காருண்யா இந்தியா வந்து நூறு நாட்கள் முழுதாய் முடிந்து விட்டன.
இன்னும் இரண்டரை மாதத்தில் அவள் ஆஸ்திரேலியா போய்விடுவாள். அதனால் இன்றேனும் நம் காதலை சொல்ல வேண்டும் என்று மித்ரன் முடிவெடுத்தான்.
உடனே காருண்யாவை அலைபேசியில் அழைத்து, "காரு உங்கிட்ட கொஞ்சம் பேசணும், ஒரு பத்து நிமிஷம் என்னோடு அருகில் இருக்கும் பார்க்குக்கு வரமுடியுமா?"
"ஆபிஸில் பேச முடியாமல் வெளியே கூப்பிடறீங்கன்னா, நிச்சயம் ஏதோ ஒரு காரணம் இருக்கும். அதனால வரேன்!" என்று கூறி காருண்யாவும் வந்தாள்.
அந்த பார்க்கை நோட்டம் விட்டு கொண்டே, "சொல்லுங்க மித்ரன், என்ன விஷயம்?"
"அது ஒண்ணுமில்லை, நீங்க தேடி வந்த காதலன் கிடைச்சுட்டாரா?"
"என்ன சொல்றீங்க? இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?" என்று தட்டு தடுமாறி கேட்டாள் காருண்யா.
"சித்தார்த் தான் சொன்னான். அவன் சொல்லி ரெண்டு மாசத்திற்கு மேல் இருக்கும், தப்பா நினைக்காதீங்க, தெரிஞ்சுக்கலாம்னு உங்க மேல உள்ள அக்கறையில் கேட்டேன்" என்றான் மித்ரன் தயங்கியபடி, "காதலன் கிடைச்சுட்டார், ஆனால் காதல் இன்னும் கிடைக்கவில்லை" என்று நா தழுதழுக்க சொன்னாள் காருண்யா.
"எத்தனை நாள் தான் காத்திருப்பது, நீங்க கிடைக்க அவர் கொடுத்து வைக்கவில்லை, அவரை மறந்துடுங்க காருண்யா" என்று இவன் பேசிக் கொண்டேயிருக்க அவள் கண்களில் இருந்து கண்ணீர் வர, தன் பேச்சை நிறுத்தி கொண்டான்.
"ஐ அம் சாரி காருண்யா! நான் ஏதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சுடுங்க".
"நீ தப்பா எதுவும் பேசலை மித்ரன். எல்லாத்தையுமே தப்பு தப்பா தான் புரிஞ்சு வச்சிருக்கீங்க, நான் இத பத்தி முன்னாடியே உங்க கிட்ட பேசணும்னு நினைச்சிருந்தேன். இப்பதான் அதற்கான சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. நீங்க, உங்க அம்மாவ பத்தி நினைச்சு இருக்கிறது, மொத்தமும் தப்பு மித்ரன். அவங்க ஏன் இறந்தாங்கன்னு தெரிஞ்சா உங்க மனம் தாங்காது!"
"எங்க அம்மாவை பத்தி எனக்கு தெரியாதது, உங்களுக்கு எப்படி தெரியும் காருண்யா? சரி சொல்லுங்க, நான் அப்படி என்ன தப்பா புரிஞ்சு வெச்சிருக்கேன்னு பார்க்கலாம்".
"உங்கம்மா ருக்மணி, வேணும்னே உங்களை தனியா தவிக்கவிட்டு சாகல. உங்களுக்கு ஞாபகம் இருக்கான்னு தெரியல, நீங்க ஒரு ஆறு, ஏழு வயசு இருக்கும்போது பயங்கர வாலா இருந்திருக்கீங்க, அப்போ வீட்டுக்கு வெளியே, கண்டபடி ரோட்டில் விளையாடிட்டு இருக்கும்போது, ஒரு ஆட்டோ உங்களை இடிக்க வந்துச்சு, இதை பார்த்த உங்கம்மா வீட்டுக்குள்ளிருந்து ஓடிவந்து, உங்களை காப்பாத்திட்டு அவங்க அடிபட்டுக்கிட்டாங்க, அதனால அவங்களுக்கு உயிருக்கு பெரிசா ஆபத்து வரலை, ஆனால் பலத்த ரத்த சேதம் இருந்தது. ரத்த சேதம் அதிகமாய் ஆனதால் ஹாஸ்பிடல்ல போய் ரத்தம் ஏத்தினாங்க.
அதுக்கப்புறம், ஒரு வருஷம் வாழ்க்கையில எந்த கஷ்டமும் இல்லாம, நீங்க உங்க அப்பா உங்க அம்மா எல்லாரும் சந்தோஷமா தான் இருக்கீங்க. அப்புறம் ஒரு நாள், திடீர்னு உங்க அம்மாக்கு உடம்பு சரியில்லாம போச்சு, தொடர்ந்து ஏதாவது உடம்புக்கு வந்துட்டே இருந்தது, ஹாஸ்பிடல் போய் செக் பண்ணாங்க. அங்க தான் தெரிஞ்சது அவங்களுக்கு எய்ட்ஸ் நோய் ஆரம்ப கட்டத்தில் இருக்குன்னு, இது தெரிந்தவுடன் எல்லாரும் அம்மாவோட கேரக்டர தப்பா பேசுனாங்க. ஆனா அவங்களுக்கு ஏத்தின ரத்தத்தில்தான் பிரச்சனைன்னு, உங்க அப்பாவுக்கும் இன்னும் சிலருக்கு மட்டுமே தெரியும். எங்க அவங்ககிட்ட இருந்து, உங்களுக்கும் உங்க அப்பாவுக்கும் அந்த நோய் வந்துவிடுமோன்னு பயந்துதான், அவங்க தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. மத்தபடி நீங்க நினைக்கிற மாதிரி, உங்கள மறந்துட்டு, அம்போன்னு விட்டுட்டு எல்லாம் அவங்க சாகலை. உங்களையும், உங்க அப்பாவையும் முக்கியம்னு நெனச்சதுனால தான், அவங்க தன்னையே வருத்தி இப்படி ஒரு முடிவு எடுத்துடாங்க. எந்த தப்புமே பண்ணாம, பெரிய தண்டனையை தனக்கு கொடுத்துட்டாங்க. இனிமேலாவது கொஞ்சம் நிதானித்து, அடுத்தவங்களை புரிஞ்சுக்கோங்க!" என்று கூறிவிட்டு அந்த பார்க்கை விட்டு, விடுவிடுவென்று எழுந்து சென்று விட்டாள். காருண்யா.
இதை கேட்ட நொடியே, மித்ரனுக்கு உலகமே நின்றுவிட்டது போல் தோன்றியது. இவளுக்கு எப்படி இந்த விஷயம் தெரிந்தது, என்று அவன் மூளை யோசித்தாலும், காருண்யா தன் அம்மாவுக்காக இவ்வளவு யோசித்திருக்கிறாளே, என்று நினைக்கையில் அவன் இதயம் கனிந்தது.
"ஆண்டவா! இவள் என் வாழ்க்கையில் வந்தால் என் வாழ்வே இனிக்கும் அல்லவா" என்று நினைத்து காத்திருந்தான்.