நீயே நினைவாய் - 18
மாளவிகா மட்டும் தனியே, மித்ரனின் வீட்டிற்கு சென்றாள். அவள் சென்ற நேரம் சுந்தரம் அங்கிருக்கவில்லை, வேலையாள் அவர் பத்து நிமிடத்தில் வந்துவிடுவார் என்று கூறியதால், அங்கேயே காத்திருந்தாள்.
சொன்னபடியே சுந்தரம், பத்து நிமிடத்தில் வீடு வந்து சேர்ந்தார். வந்தவுடன் மாளவிகா வரவேற்பறையில் அமர்ந்து இருந்ததை பார்த்து, ஒரு நொடி திகைத்து நின்றாலும் பிறகு சமாளித்துக் கொண்டார்.
"என்ன விஷயமா வந்திருக்க ஏதாவது புதுசா பேசணுமா?" என்று வந்ததும் நறுக்குத் தெரித்தார் போல் கேள்வி கேட்டு, அவளைத் துரத்த நினைத்தார்.
"ஆமாம் அங்கிள், மித்ரனை பற்றி தான் பேச வேண்டும். நீங்க ஏதோ ஒரு விஷயத்தை மறைக்கிறீங்கன்னு தெரியுது. உங்க சைட்ல பார்க்கும்போது, அதுக்கு நியாயம் இருந்தாலும், அந்த உண்மையை சொன்னால்தான், மித்திரனின் புதிய காதலும் காருண்யாவின் பழைய காதலும் துளிர்த்தெழும். நீங்க சொல்ல போற விஷயத்தை, நான் தேவையில்லாம அனாவசியமா வெளியில சொல்ல மாட்டேன். தயவு செய்து என்னை நம்பி சொல்லுங்க. இதுவும் நான் உங்க மகன் மித்திரனின், நல்லதுக்காகத்தான் சொல்றேன்" என்று மாளவிகா ஒருவாறு சுந்தரத்தின் மனதை கரைத்தாள்.
"என்னம்மா சொல்ற? நீ சொல்றது தலையும் புரியல, வாலும் புரியல. மித்திரனின் புது காதல்னு சொல்ற, காருண்யாவின் பழைய காதல்னு சொல்ற, எதுவா இருந்தாலும் தெளிவா முதல்ல சொல்லு! அதுக்கப்புறம் நான் உன்கிட்ட சில விஷயங்களை, சொல்வதா வேண்டாமான்னு யோசிக்கிறேன்" என்று குழப்பத்துடன் கேட்டார் சுந்தரம்.
மாளவிகாவும் சற்றும் தாமதிக்காமல், காருண்யா வந்தது முதல், அவள் ஆஸ்திரேலியாவில் நடந்ததாக கூறிய அனைத்து விஷயங்களையும் சுந்தரத்திற்கு தெரிவித்தாள்.
இதைக் கேட்டு சுந்தரம், சற்று மனம் கலங்கினாலும் அமைதியாகவே இருந்தார்.
"என்ன அங்கிள் நீங்க இன்னும் அமைதியாவே இருக்கீங்க, அங்க நடந்த விஷயம் எல்லாத்தையுமே உங்க கிட்ட சொல்லிட்டேன். இப்ப உங்க மகனோட காதல் மட்டும் இல்லாம, உங்கள் மகனுக்காக தேசம் விட்டு தேசம் வந்து இருக்கும் காருண்யாவின் காதலும், உங்கள் கையில்தான் இருக்கு. இப்பவாவது நடந்தது என்னன்னு சொல்லுங்க, எதை எங்க கிட்ட மறைக்கிறீங்க?"
"இல்லமா, இந்த விஷயத்தை நான் சொன்னா நிச்சயம் மித்ரனுக்கு எப்படியாவது தெரியவரும். அது தெரிந்தால் அவனால் தாங்கிக்கொள்ள முடியாது"
"அங்கிள்! நான் வேணும்னா சத்தியம் பண்றேன். நீங்க சொல்ல போற விஷயத்தை நிச்சயமா மித்ரனிடம் சொல்ல மாட்டேன். ப்ளீஸ் எனக்காக இல்லன்னாலும் காருண்யாவிற்காகவாது சொல்லுங்க?"
நீ இவ்வளவு கேக்கறதுனால, சொல்றேன் மா. எனக்கும் முழுசா நடந்த விஷயம் எதுவும் தெரியாது, நீ சொல்றத வைத்தும், நான் ஏற்கனவே கேள்விப்பட்டதை வைத்தும் சொல்கிறேன்" என்று கூறி நடந்ததை சொல்ல ஆரம்பித்தார் சுந்தரம்.
"மித்ரனுக்கு, சிறுவயதிலிருந்தே சாகசங்கள் செய்ய நிறைய ஆர்வம் இருந்தது. சென்னையிலேயே நிறைய சாதனைகளில் கலந்து கொண்டு, பரிசு வாங்கி இருக்கான். இந்த மோகம் ஆஸ்திரேலியா போயும் அவன விடல, அவன் ஆஸ்திரேலியாவில் இருக்கும் பெரிய ஃபாரெஸ்ட்க்கு அனுமதி வாங்கி அவனும், கவினும் போனாங்க, அந்த காடு ரொம்ப வித்தியாசமானது. சமதளத்தில் இருந்து கீழே போக வேண்டும். நடந்து மட்டுமே போக முடியும், திரும்பி வரும் போது மேலே ஏறி சமதளத்தை அடைய வேண்டும். அங்கே போய், ஒரு நாள் முழுவதும் தங்கி காட்டு விலங்குகளின் வாழ்க்கையை வீடியோ எடுத்திருக்கிறார்கள் மித்ரனும், கவினும். அதுக்கு அப்புறம் திரும்பி வர வழியிலே, மேலே ஏறி வந்ததால, ரெண்டு பேரும் ரொம்ப களைச்சு போயிட்டாங்க, அதனால மறுபடியும் காலேஜ்க்கு காரில் வரும் போது கார் ஓட்டிகிட்டிருந்த மித்ரன் தூங்கிட்டான். அவ்வளவு தான் அங்கேயே கார் தடம் புரண்டு, இரண்டு பேரோட வாழ்ககையும் தடம் புரண்டுடுச்சு.
"ஐயோ என்ன அங்கிள் ஆச்சு ரெண்டு பேருக்கும்?" என்று மாளவிகா கேட்டாள்.
"ஒருத்தன் ஒரேயடியா விட்டுட்டு போயிட்டான், இன்னொருத்தன் கொஞ்சம் கொஞ்சமா என்னை விட்டு போய்கிட்டு இருந்தான்" என்று கூறி குலுங்கி குலுங்கி அழத் தொடங்கினார் சுந்தரம்.
"ஐயோ அங்கிள்! நீங்க அழுது நான் பார்த்ததே இல்லை. ஏன் அழறீங்க? அதான் மித்ரனுக்கு ஒன்னும் ஆகலல்ல, இருங்க!" என்று கூறி விட்டு உள்ளே ஓடிச் சென்று, ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்து வந்து சுந்தரத்திடம் கொடுத்தாள் மாளவிகா.
சுந்தரமும் மறுபேச்சு பேசாமல், அந்த தண்ணீரை வாங்கிக் குடித்துவிட்டு சிறிது சாந்தம் அடைந்தார்.
"இல்லம்மா கவினும், என் பையன் மாதிரிதான் அம்மா அப்பா இல்லாத அவனை, முதல்முறையா சந்திச்ச போதே, அவனையும் என் பையனா தான் நான் பார்த்தேன். அவன் பாட்டி வீட்ல வளர்ந்தாலும், அவனுக்கு இதுதான் வீடு. அன்னைக்கு நடந்த ஆக்சிடெண்ட்ல மித்ரனோட கண்ணு முன்னாடியே, கவின் தலை நசுங்கி உயிர் இழந்துவிட்டான். இதை கண்ணால பார்த்த மித்ரன், ஒரேடியா உடைஞ்சு போயிட்டான். மித்ரனுக்கும் உடம்பெல்லாம் காயம், கால் எலும்பு முறிவு இதெல்லாம் இருந்தது. ஆனால் அதையும் மீறி, விபத்துக்கு பின் வரும் மன உளைச்சல் வியாதி என்னும் 'போஸ்ட் ட்ரமேடிக் டிஸ்ஆர்டர்' என்னும் வியாதியால் அவதி பட்டான்".
"எத்தன தடவ தற்கொலைக்கு முயற்சித்து இருக்கான் தெரியுமா? என் பிரிண்ட்டை நானே கொன்னுட்டேன் என்று அழுது புலம்பி சாப்பிடாமல், தூங்காமல் இருந்தான். இதெல்லாம் பாத்த ஆஸ்திரேலியா டாக்டர், இதே மாதிரி மித்ரன் தொடர்ந்து இருந்தால், சீக்கிரமே மனச்சிதைவு நோய்க்கு ஆட்பட்டு, முழு பைத்தியமாக ஆகிடுவான்னு சொல்லிட்டாங்க. ஒண்ணு இந்த வியாதி தானா சரி ஆகணும், அப்படி இல்லன்னா புதுசா ஒரு டெக்னிக் வந்திருக்கு அதை உபயோகப்படுத்தணும், அதுக்கு சில பக்கவிளைவுகளும் இருக்குன்னு சொன்னாங்க. இவனுக்கு தானா சரியாகும்னு எனக்கு தோணலை, சின்ன வயசுலேயே அம்மாவ இழந்தவன், எனக்கு அப்புறம் கவினை தான் எல்லாமுமாக நினைச்சிருந்தான். அதனால நான் தான் அந்த புது ட்ரீட்மெண்ட் கொடுக்க சொன்னேன். ஆனால் அதுல இவ்வளவு விபரீதம் வரும்னு அப்போ எனக்கு புரியல மா"
"அப்படி என்ன ட்ரீட்மெண்ட் அங்கிள்?"
"அதுக்கு பெயர் 'சினாப்டிக் ப்ரூணிங்' மா, அதாவது எந்த ஞாபகங்கள் தேவையில்லையோ, அதை நம் மூளையில் உள்ள நியூரான்களில் இருந்து அழிப்பது. பொதுவாக, இப்படி ஒரு சில ஞாபகங்கள் அழிக்கும் போது, அதனுடன் தொடர்புள்ள சில பல ஞாபகங்களும் சேர்ந்து அழிந்து விடும். அதுபோல்தான் டாக்டரின் ஆலோசனைப்படி, மித்ரனை அமெரிக்கா கூட்டி சென்று, அங்கே மித்ரனின் ஆஸ்திரேலியா ஞாபகங்களை அழித்து விட்டோம்".
"ஓ அதனால தான், கவின் எங்கேயோ சொல்லாமல் கொள்ளாமல் போனதாக நினைத்து கொண்டு இருக்கிறாரா மித்ரன்? இதுக்கு நடுவுல காருண்யாவின் ஞாபகமும் அழிந்து விட்டது போல தெரிகிறது அங்கிள்".
"இல்லம்மா! எனக்கு தெரிஞ்ச வரை மித்ரனுக்கு, காருண்யாவின் ஞாபகம் இன்னும் ஆழ்மனதில் பதிஞ்சிருக்கு. காருண்யாவை முதல் நாள் சந்திச்ச போதே, அவள் கண்களை ஏற்கனவே பார்த்தது போல இருப்பதாக அவன் சத்தமாக புலம்பி கொண்டிருந்ததை நான் கேட்டேன். அது மட்டுமில்லாமல், அவள் ஞாபகம் நெஞ்சில் புரையோடி போனதால் தான், மறுபடியும் அவள் மேல் காதல் வந்திருக்கிறது" என்று உறுதிபட கூறினார் சுந்தரம்.
"இதெல்லாம் கேக்கும் போது மருத்துவ துறையில இருக்கற எனக்கே ஆச்சர்யமா இருக்கு அங்கிள்".
"ஆனா மாளவிகா, பழைய ஞாபகத்தை நினைவுபடுத்தும் விஷயங்கள் மித்ரனை தூண்டினால், அதன் பக்க விளைவுகள் பயங்கரமாக இருக்கும்னு ஏற்கனவே டாக்டர்ஸ் சொல்லியிருக்காங்க, இந்த விஷயத்தை எல்லாம் தயவு செய்து, யாருக்கும் தெரியாம பாத்துக்கோ. அன்னிக்கு உன்னோட வந்த பையன் சித்தார்த்தின் முழியே சரியில்ல, அதனால தான் அன்னிக்கு நான் கத்தும் படி ஆச்சு. மத்தபடி மித்ரனுக்கு, நல்லது நடந்தா அத நான் தடுக்க மாட்டேன்" என்றார் சுந்தரம்.
"அப்போ காருண்யாவை உங்க மருமகளா ஏத்துக்க சம்மதமா அங்கிள்?".
"அங்க தாம்மா பிரச்சனை. மித்ரன் காருண்யாவை கல்யாணம் செஞ்சுகிட்டா அந்த பொண்ணோட வீடான, ஆஸ்திரேலியாவுக்கு போக வேண்டிவரும். அங்க போய் மித்ரனுக்கு பழசெல்லாம் நினைவுக்கு வந்துடுச்சுன்னா, ரொம்ப கஷ்டமாயிடும்மா!"
மாளவிகா, "இல்ல அங்கிள் அப்படி எதுவும் ஆகாமல் நான் பாத்துக்குறேன். உங்களுக்கு காருண்யாவை பிடிச்சிருக்கா அத மட்டும் சொல்லுங்க?"
"மித்ரனோட இஷ்டம் தான் என்னோட இஷ்டம். அவனுக்கு பிடிச்சிருந்தா போதும். பிரச்சனை எதுவும் வராம இருந்தா சரிதான். ஆனா நீ எதை செய்யறத்துக்கு முன்னாடியும், என்கிட்ட ஒரு தடவை கேட்டு செய்" என்று சிறிது கலக்கத்தோடு சொன்னார் சுந்தரம்.
"சரி அங்கிள்! என்ன நம்பி என்கிட்ட ஒரு மிகப்பெரிய ரகசியத்தை சொன்னதுக்கு ரொம்ப நன்றி. நிச்சயம் எதுவா இருந்தாலும், நான் உங்க கிட்ட கேட்டுட்டு தான் முடிவெடுப்பேன்" என்று கூறி விடை பெற்றாள் மாளவிகா.
தான் மிகப்பெரிய சாதனை புரிந்து விட்டதாக, மாளவிகா மனதிற்குள் நினைத்து மகிழ்ந்து கொண்டாள். உடனே சித்தார்த் மற்றும் காருண்யாவிடம் இந்த விஷயத்தை சொல்ல, அவள் மனம் பரபரத்தது. ஆனால் அவர்கள் இருவரும் மித்ரனுடன் இருப்பதால், சிறிது நேரம் தன் ஆவலை கட்டிப்போட்டு அடக்கி வைத்தாள் மாளவிகா.
அங்கே மூன் லைட் டின்னர் நடைபெற்று கொண்டிருந்தது.
சித்தார்த், "என்ன மித்ரன்! மூன் லைட் டின்னர்னு சொன்ன உடனே, நான் ஏதோ ஃபைவ் ஸ்டார் ஹோட்டலோட ரூஃப் டாப்பிற்கு கூட்டீட்டு போகப் போறேன்னு நினைச்சீங்களா?"
மித்ரன் ஆமாம் என்று தலையசைக்க, "நானும் அப்படி தான் நினைச்சேன்" என்றாள் காருண்யா. "பட் இத கம்ப்பேர் பண்ணும்போது, ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் எல்லாம் ஒண்ணுமே இல்ல. என்ன ஒரு அழகான கிராமத்து வீடு, அதோட நிலாமுற்றம். அங்கிருந்து பார்த்தால், அழகான பவுர்ணமி நிலா. இதுக்கும் மேல இந்த வீட்டுக்கு சொந்தக்காரங்களான தாத்தா பாட்டி. அவங்க வரவங்க கிட்ட எல்லாம், எப்போதுமே அன்பா இருக்காங்க இதுக்கு ஈடு இணை ஏது சித்தார்த்! ரொம்ப தேங்க்ஸ்" என்றாள் காருண்யா.
இவர்களுக்கு முற்றத்திலே அமர, ஒரு பெரிய பத்தமடை பாய் கொடுக்கப்பட்டிருந்தது. அனைவரும் அழகாக சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தனர். அவர்களுடனே தாத்தா ஆனந்தனும் அமர்ந்திருந்தார்.
"செல்லம் சீக்கிரம் கொண்டு வா, பசங்க எவ்ளோ நேரம் காத்துகிட்டு இருப்பாங்க!" என சமயலறை நோக்கி குரல் கொடுத்தார் தாத்தா.
"இதோ வந்துட்டேங்க" என்று கூறி கையில் ஒரு பெரிய கிண்ணத்தோடு வந்தமர்ந்தாள் பாட்டி செல்லம்மாள்.
"என்ன பாட்டி இது, இவ்ளோ தான் சாப்பாடா? எப்படி எங்க எல்லாருக்கும் இது பத்தும்?" என்று அப்பாவியாக கேட்டான் மித்ரன்.
"முதல்ல இந்த கிண்ணத்துல இருக்கறதையே, உங்களால் சாப்பிட முடியுதான்னு பார்க்கலாம்?" என்று கூறி சிரித்தார் தாத்தா.
"ஏன்? அந்த அளவு என் சாப்பாடு மோசமா இருக்குன்னு சொல்றீங்களா?" என்று பாட்டி தாத்தாவை வம்புக்கு இழுத்தாள்.
"ஐயோ செல்லம்! உன் சாப்பாடு அமிர்தம் அத போய் மோசம்னு சொல்வேனா? இந்தக் கிண்ணமே ரொம்ப பெருசு, அதுல நாலஞ்சு பேர் சாப்பிடலாம் என்று சொல்ல வந்தேன்" என்று போலியாக பயப்படுவது போல் சொன்னார் தாத்தா.
"என்ன சித்து ரெடியா?" என பாட்டி கேட்க, "இருங்க பாட்டி ஒரு நிமிஷம்!" என சித்தார்த் ஓடிப்போய் கை கழுவி விட்டு வந்தான். "மித்ரன், காரு ரெண்டு பேரும் சீக்கிரம் கை கழுவிட்டு வாங்க" என்றும் கட்டளையிட்டான்.
அனைவரும் கை கழுவிவிட்டு வர, செல்லம்மாள் பாட்டி, நெய் இட்ட சாம்பார் சாதத்தை உருண்டை உருட்டி, அனைவரின் கைகளிலும் வைத்தார். உடனே தாத்தா, அந்த சாதத்தின் மேல் ஒரு சிறு துண்டு கருணை கிழங்கு வறுவலை வைத்தார். "எங்க எல்லாரும் கடவுளுக்கு நன்றி சொல்லிட்டு சாப்பிட ஆரம்பிங்க பார்ப்போம்!" என்றும் கூறினார்.
அவர் சொல்லியபடியே அனைவரும் செய்தனர்.
"பாட்டி எப்போதும் போல உங்க சாப்பாடு பிரமாதம்" என்று கூறினான் சித்தார்த்.
காருண்யா, "சித்து அண்ணா நீ ஏற்கனவே இங்க வந்திருக்கியா?"
"என்னம்மா இப்படி கேட்டுட்ட! சித்து மாச மாசம் பவுர்ணமிக்கு, கரெக்டா இந்த பாட்டியை தேடி வந்துவிடுவான். இங்க தான் சாப்பாடு, போன ரெண்டு மாசமா தான் வரவே இல்லை" என்றால் பாட்டி செல்லம்மாள்.
பாட்டிக்கும், தாத்தாவுக்கும் குழந்தைகள் எதுவும் இல்லாததால், தாங்கள் வாழ்வாதாரத்தை தக்கவைத்துக்கொள்ள, இதுபோல் வீட்டிலேயே தெரிந்தவர்களுக்கு சமைத்து பரிமாறுவார்கள். வீதியெங்கும் பைவ் ஸ்டார் ஹோட்டல் உணவகங்களும், அயல்நாட்டு உணவுகளும் மலிந்திருக்க, தாத்தா பாட்டியின் இந்த சாப்பாட்டிற்கு, பலரும் ஏங்கித் தவித்தனர். அதனால் பாட்டி தாத்தாவின் வீட்டிற்கு, தினமும் குறைந்தது இரண்டு வாடிக்கையாளராக வந்து போவார்கள். ஆனால் அவர்களை வாடிக்கையாளர்களாய் பார்க்காமல், தங்கள் குழந்தையாய் பார்த்து, அவர்களின் வயிறோடு சேர்த்து மனதையும் திருப்திப்படுத்தி, அவர்கள் என்ன பணம் கொடுக்கிறார்களோ, அதை மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக் கொள்வார்கள்.
மித்ரனிற்கும், காருண்யாவிற்கும் இது ஒரு புதிய அனுபவமாக இருந்தாலும், பாட்டி தாத்தாவின் நேரத்தை செலவழிப்பது இருவருக்குமே மிகவும் பிடித்திருந்தது.
"சித்து அண்ணா நம்ம இன்னைக்கு ஒரு நாள் இங்கேயே தங்கிட்டு, நாளைக்கு காலையில போலாமா?" என்று காருண்யா கேட்டாள்.
இந்தியா வந்ததிலிருந்து உம்மென்று இருந்த காருண்யா, முதல்முறையாக ஆசைப்பட்டு கேட்டிருக்கிறாள் என்பதனால் சித்தார்த்தும் அதற்கு சம்மதித்தான். மித்ரனும் அந்த முடிவை மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டான்.
அன்று இரவு மித்ரன் மற்றும் காருண்யாவின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் வரும் என்பதை இருவருமே உணர்ந்திருக்கவில்லை.