கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நீயே நினைவாய் - 4

Poornima Karthic

Moderator
Staff member
நீயே நினைவாய் -4

மித்ரன் சடாரென்று கிளம்பி சென்றதும் மாளவிகாவும், சித்தார்த்தும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு முழித்தனர்.

"ஏன்டா சித்து, இந்த மித்ரன் எதையோ யோசிச்சு குழம்புறார்னு தோணுது. அவர் மனசுக்குள்ள ஏதோ ஒரு ரகசியம் இருக்கு டா. பட்! என்ன தான் அவர் குழப்பமாய் இருந்தாலும், பயங்கர ஹான்ட்சம்மா இருக்காருல்ல !" என்று சித்தார்த்தை வேண்டுமென்றே வெறுப்பேற்றினாள் மாளவிகா.

"ஆமாம் நீ பாத்த! பேசாம வருவியா. நானே காருண்யாக்கு இந்த வேலை கிடைக்கணுமேன்னு கவலப்பட்டுட்டு இருக்கேன். நீ வேற ஹான்ட்சம் லெக்சம்னு, சும்மா இரு!" என தன் பொஸஸிவ்னெஸ்ஸை கோபத்தில் காட்டினான் சித்தார்த்.

சித்தார்த், தன் மேல் உள்ள பொஸஸிவ்னெஸ்ஸால் கோபப்படுவதை, மனதுக்குள் ரசித்து சிரித்தாலும், வெளியே மிக சாதாரணமாய் காட்டி கொண்டாள் மாளவிகா.

" ஆமாம் டா மங்குனி,அவ்ளோ பெரிய ஜூவில் வேலை பார்த்த பொண்ணு, அதுவும் ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்த பொண்ணு, எதுக்குடா இங்க வரா ? உங்க குடும்பத்தோட அவ பெத்தவங்களை சேர்த்து வைக்க வராளா?"

"அதல்லாம் இல்லை மாளு! எல்லாம் இந்த பாழா போன காதலால் தான் வரா".

"அப்படியா இன்ட்ரெஸ்டிங்! மேல சொல்லு! ஒரு காதல் கண்டம் விட்டு கண்டம் தாண்ட வெச்சிருக்குன்னா, அது நிச்சயமா சம்திங் ஸ்பெஷலா இருக்கணும். சொல்லு சொல்லு"

" எனக்கே அவ்வளவு தான் தெரியும். மீதி கதை வேணும்னா நாளைக்கு அவ இந்தியா வரா, அவகிட்டயே கேட்டுக்கோ!" என்று சத்தமாக கூறிவிட்டு, "அடுத்தவன் காதலை பத்தி தெரிஞ்சுக்கறதுல மட்டும் எம்புட்டு ஆர்வம், ஹ்ம்ம்! ஆனா நம்ம காதல புரிஞ்சுக்காம இருக்கே, இந்த குட்டி சாத்தான்" என சிறிது உயரம் குறைவாக, ஐந்து அடி பார்பி பொம்மை போல் நின்று கொண்டிருந்த மாளவிகாவை மனதிற்குள் திட்டினான் சித்தார்த்.

"சரி சித்து! அப்போ நாளைக்கு நீ அவங்களை ஏர்போர்ட்ல ரிசீவ் பண்ணும் போது நானும் வரேன். இப்ப எனக்கு வேற ஒரு அவுட்டிங் ப்ளான் இருக்கு பாய்".

" நில்லு நில்லு! நீ பாட்டுக்கு ஆர்வக்கோளாறுல அவ வந்ததும் வராததுமா லவ், கிவ்னு ஏதாவது கேட்டு உளறி வைக்காத. அவளா சொல்ற வரைக்கும் கொஞ்சம் பொறுத்திருப்போம்".

" தோடா! பாசமலர் அண்ணனுக்கு தங்கச்சி மேல எவ்ளோ அக்கறை. எல்லாம் எங்களுக்கு தெரியும். நான் பார்த்துக்கிறேன்" என்று கூறிவிட்டு கிளம்பினாள் மாளவிகா.

அதே நேரத்தில், ஆஸ்திரேலியாவில் காருண்யா, இந்தியா வருவதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தாள். "எப்படி என் யுவனால் என்னை மறக்கமுடிந்தது. அவனை தவிர வேறு எதுவும் நினைவில்லாமல் நான் இங்கே தனியாய் தவிக்கிறேன். அவன் மட்டும், எப்படி என்னை நினைக்க மறந்து, நிம்மதியாக இருக்கிறான்" என நினைக்க அவளையும் மீறி அடக்கி வைத்திருந்த கண்ணீர் சுரந்தது.

அவளின் அறை திறக்கப்படும் ஓசை கேட்டதும், அவசர அவசரமாக வழிந்திருந்த கண்ணீரை துடைத்தாள் காருண்யா.

"என்ன டார்லிங்! இந்தியா கிளம்ப தயாராயாச்சா? என்னோட சொந்த ஊர்டா இந்தியா. நான் அங்க போய் இருபத்தி நாலு வருஷம் ஆச்சு. நீ ஆராய்ச்சி பண்ற நேரம் போக, மத்த நேரம் இந்தியாவை சுத்தி பாரு. குறிப்பா, நான் பிறந்து வளர்ந்த சென்னை தியாகராய நகரை சுத்தி பாரு" என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறினார் காருண்யாவின் தந்தை 'தயாளன்'.

அடுத்த இரண்டொரு நிமிடங்களில் அந்த அறைக்குள் வந்தார் அவள் அன்னை 'சூசன்'. "ஓ மை டார்லிங் நீ கண்டிப்பா போய் தான் ஆகணுமா? ஐ வில் மிஸ் யூ, கம் பேக் சூன்!" என கண்ணீர் வடித்தார்.

"ஏம்மா அவ எங்க வேற ஒரு ப்ளானட்டுக்கா போறா, இந்தியா தானே போறா? மூணு மாசத்துல வந்துடுவா! அப்படித்தானே காருண்யா! "

"ஆமாம் மம்மி. ச்சியர் அப்!" என்று சொல்லி தன் அன்னையை கட்டிப்பிடித்து, தன் கண்ணில் துளிர்த்திருந்த கண்ணீர் துளிகளை யாருமறியாமல் தட்டி விட்டு கொண்டாள்.

" இங்க பாருடா, நீ எங்கள ஏர்போர்ட்டுக்கு வழி அனுப்ப வர வேண்டாம்னு சொன்னதால நாங்க வரல, பட் நிச்சயமா உன்ன ரிசீவ் பண்ண நாங்க வருவோம். அப்போ உனக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கு" என்று கூறி சிரித்தார் தயாளன்.

"ஆமாம் பொல்லாத சர்ப்ரைஸ், அவருடைய பிஸினஸ் பார்ட்னரின் மகனை கூட அழைத்து வந்து, அவனை கல்யாணம் பண்ணிக்கோ!" என்று சொல்லி இம்சை பண்ணுவார் என மனதிற்குள் நினைத்துக் கொண்டு, வெற்று சிரிப்பொன்று சிரித்தாள் காருண்யா.

தனியே கிளம்பி விமான நிலையம் சென்றவள், அங்கே சம்பர்தாய விஷயங்களை எல்லாம் முடித்து கொண்டு, தன்னுடைய விமானத்திற்குள் சென்று, தனக்கென ஒதுக்கப்பட்ட ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தாள்.

தன்னந்தனியே ஒருமுகப்படுத்தப்பட்ட மனதோடு, சில விஷயங்களை செய்தால் தான், அவளுக்கு வெற்றி கிட்டும் என்பது அவளின் அசாத்திய நம்பிக்கை. எனவே தனியே, தன் தொலைந்த காதலை தேடி வேறொரு தேசம் பயணிக்க தொடங்கினாள். ஜன்னலின் வெளியே ஏகாந்தமாக தெரிந்த நீல வானத்தை பார்த்தவளுக்கு யுவனின் கேலியும், குறும்பும் வந்து நெஞ்சை அழுத்தியது. கடவுளின் மேல் நம்பிக்கை இல்லாதவளாய் இருந்தாலும், ஏதோ ஒரு பிரபஞ்ச சக்தி நம்மை ஆட்டி வைப்பதாக உணர்ந்திருந்தாள் காருண்யா.

இப்போது அந்த உலகை ஆளும் சக்தியிடம், தன்னையும் தன் காதலையும் ஒப்படைத்து விட்டு, "உண்மை காதல் ஒரு நாளும் தோற்றதில்லை,தேசம் கடந்தாலும் என் காதலை நான் வாழ வைப்பேன். அதற்கு உன் துணை எனக்கு எப்போதும் இருக்கும்னு நம்புகிறேன் " என சபதம் எடுத்து கொண்டு விண்ணில் பறந்தாள்.

சுமார் பதினைந்து மணி நேர பயணத்திற்கு பிறகு தன் தந்தையின் தாய் மண்ணும், தன் உயிரானவனின் தாய் மண்ணுமான இந்தியாவில் காலடி எடுத்து வைத்தாள் காருண்யா.

அவளிற்காக பெயர் பலகையை தாங்கி கொண்டு, சித்தார்த் மற்றும் மாளவிகா நின்று கொண்டிருந்தனர்.

"டேய்! குடு டா இப்படி, நான் அத பிடிச்சுக்குறேன், நீ போய் எனக்கு ஒரு பொக்கே வாங்கிட்டு வா, பிங்க் கலர் ரோஜா பூவா பார்த்து வாங்கிட்டு வா!" என கூறி சித்தார்த்திடம் இருந்து பெயர் பலகையை பிடிங்கி, தன் கையில் வைத்து கொண்டாள் மாளவிகா.

காருண்யா விமான நிலையத்தில் இருந்து இறங்கி வந்து, சித்தார்த்தை தேட, அங்கே தன் பெயர் பலகையை வைத்து கொண்டு நின்ற பெண்ணை பார்த்து குழம்பினாள்.

வேறெங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மாளவிகாவின் சிந்தனையை கலைப்பது போல், "எக்ஸ்க்யூஸ் மீ! ஐ ஆம் காருண்யா, யூ ஆர்?" என்று கூறி கேள்விக்கணையோடு நிறுத்தினாள் காருண்யா.

காருண்யாவிற்கு, ஏதோ ஒரு வெளிநாட்டு பெண்ணின் உருவத்தை கற்பனை செய்திருந்த மாளவிகா, ஒரு நொடி தன் எதிரில் இருப்பவளை பார்த்து ஸ்தம்பித்து விட்டாள். களையான இந்திய முகம், ஆஸ்திரேலிய நிறம், கார் போன்ற இருண்ட கூந்தல், அளவான உயரம் அதற்கேற்ற எடை, ஆளை அசத்தும் பூனை நிற கண்கள் என மாளவிகாவின் முன் நின்றிருந்தாள் காருண்யா.

அவளை இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தாள் மாளவிகா.
 

Latha S

Administrator
Staff member
யுவ மித்ரனா அவன். பூனைக் கன்னி வந்தாச்சு
 

Chitra Balaji

Well-known member
Appo மித்ரன் கனவுல வர பூனை கண்ணு காருண்ய odatha.... Yuvan yaaru.... Chennai வந்துட்டா... Super Super maa... Semma episode
 
Top