நீயே நினைவாய் - 7
"ஒண்ணும் கவலப்படாதீங்க காருண்யா. நானும், சித்தார்த்தும் நிச்சயம் உங்களை சேர்த்து வைக்க ஹெல்ப் பண்ணுவோம்!" என்று ஆறுதல் கூறினாள் மாளவிகா.
"ஐயையோ! சேர்த்தெல்லாம் வைக்க வேண்டாம், நான் ஆசை தீர, அவர பார்த்து கொஞ்ச நேரம் பேசினால் போதும் மாளு. சரி அத விடுங்க, என் அண்ணனை பார்க்க தானே காலங்காத்தால பெரியம்மா வீட்டுக்கு வந்தீங்க?" என சட்டென்று பேச்சை மாற்றினாள் காருண்யா.
பேச்சை மாற்றினாலும், அவள் கண்களில் தேங்கியிருந்த கண்ணீரே, காருண்யாவின் மனநிலையை மாளவிகாவிற்கு எடுத்துரைத்தது. சரி பிறகு பார்த்து கொள்ளலாம் என்று விட்டு விட்டாள் மாளவிகா.
மாளவிகா, "சித்துவல்லாம் பாக்க வரல காரு! சும்மா அப்படியே உன்ன பாத்துட்டு போகலாம்னு தான் வந்தேன்" என்று கூறிவிட்டு, தான் கூறிய மொக்கை பொய்யை நினைத்து, நாக்கை கடித்து கொண்டாள் மாளு.
இப்போது காருண்யா, தன் சோகம் மறந்து கலகலவென சிரிக்க தொடங்கினாள்.
"எதுக்கு மாளவிகா எங்கிட்ட போய் பொய் சொல்றீங்க, சரி உங்க காதல எங்க அண்ணங்கிட்ட சீக்கிரம் சொல்லிடுங்க!" என்று கூறி சிரித்தாள்.
"அதெப்படி உடனே சொல்றது, கொஞ்சம் பிகு பண்ணி சொன்னா தானே, கிக்கா இருக்கும், இல்லன்னா சுவாரசியமே இருக்காது".
இவர்கள் இப்படி வெட்டி கதை அடித்து கொண்டிருக்கும் போதே, சித்தார்த்திடம் இருந்து மாளவிகாவிற்கு போன் வந்தது.
"ஹலோ மாளவிகா, சீக்கிரம் காருண்யாவை அழைத்து கொண்டு மித்ரன் சாரின் ஆபிஸுக்கு வா. அவரு ஏதோ முக்கியமான விஷயமா பெங்களூர் போறாராம். அதுக்குள்ள காருண்யாவை பார்த்து பேசி, அவளுக்கு ஓகேன்னா அப்பாயிண்டமெண்ட் ஆர்டர் கொடுக்கறேன்னு சொல்றார். ஸோ! உங்க ஷாப்பிங் எல்லாம் ஓரங்கட்டிவிட்டு, சீக்கிரம் வந்து சேருங்க!" என்று கூறி போனை வைத்தான் சித்தார்த்.
"காரு! சீக்கிரம் கிளம்பு, நம்ம உடனே மித்ரனை மீட் பண்ணனும்"
"என்ன மாளு! வந்து முழுசா மூணு மணிநேரம் கூட ஆகல, அதுக்குள்ள திரும்பி போகணுமா? மித்ரனை பிறகு பார்த்து கொள்ளலாம், நான் இங்க வேலை பாக்கவா வந்தேன். சும்மா டைம் பாஸுக்கு தானே வந்தேன். நான் வீட்டுக்கு வரல, நீ வேணும்னா போ!" என்று அலுத்துக்கொண்டே கூறினாள் காருண்யா.
"அம்மா தாயே! இப்ப கொஞ்ச நேரம் முன்னால வீட்டுக்கு போகலாம்னு சொல்லிட்டு இப்ப மறுபடியும் முதலேர்ந்தா,நீ முதல்ல கிளம்பு. உன் காதலன் உனக்கு கிடைக்கணும்னு கடவுள் முடிவு பண்ணிட்டார்னா, அத யாராலயும் மாத்த முடியாது. அவரே உன் ஆள, உன் கண்ணு முன்னாடி நிறுத்துவார். ஏற்கனவே எனக்கும், சித்துவுக்கும் முட்டிக்கிட்டு இருக்கு, இதுல நீ வேற அதிகப்படுத்தணுமா? உனக்கு விலங்குகள்னா உயிர் தானே, அதுக்காகவாது வாயேன்!" என தரதரவென காருண்யாவை இழுக்காத குறையாய் அழைத்து சென்றாள்.
காருண்யா, அந்த பெரிய அங்காடிகளையே திரும்ப திரும்ப பார்த்து கொண்டு நடந்தாள். எங்கேயாவது யுவன் தென்பட்டு விடமாட்டானா, என்ற நப்பாசை அவள் நெஞ்சை அரித்தது.
எப்படியோ காருண்யாவை, மித்ரனின் அலுவலகம் நோக்கி இழுத்து சென்று விட்டாள் மாளவிகா. இவர்கள் போகும் போது, மிகவும் கோபமுடன் வாசலிலேயே நின்று கொண்டிருந்தான் சித்தார்த்.
"ஏன் மாளவிகா நான் எத்தன தடவ படிச்சு படிச்சு சொன்னேன், சீக்கிரமா வாங்கன்னு, ஏன் இவ்வளவு நேரம் நான் சொன்னதுக்கு அப்புறமும் ஷாப்பிங் தான் பண்ணிட்டு இருந்தீங்களா?"
"வந்ததும், வராததுமா சும்மா கடுப்பேத்தாத சித்து. நாங்க எவ்ளோ தூரம் இருந்தோம், அங்கேர்ந்து இங்க வர வேண்டாமா? ஏன் வந்தததும் வராததுமாய் தையா தக்கான்னு குதிக்கிற?"
"ம்ம், நீங்க இரண்டு பேரும் அன்ன நடை போட்டு வரதுகுள்ள, மித்ரன் சார் கிளம்பி போய்ட்டார். அவர் பெங்களூர் போயிட்டு, இன்னும் ஒரு வாரம் கழிச்சு தான் வருவார். உங்க ரெண்டு பேருக்காக ஒரு மணிநேரம் காத்துகிட்டிருந்தார்".
"சாரி சித்தார்த் அண்ணா, என்னால தான் லேட்டாயிடுச்சு, நீங்க தேவையில்லாம மாளவிகாவ திட்டாதீங்க" என்று பாவமாக கூறினாள் காருண்யா.
தன்னை அண்ணா என்று அவள் அழைத்தவுடன், இவனுக்கு இருந்த கோபம், இருந்த இடம் தெரியாமல் பறந்து போனது. "சரிம்மா! மித்ரன் சார் இல்லன்னா என்ன, அவங்க அப்பா சுந்தரம், உனக்காக வெயிட் பண்றார். வா போகலாம்!" என இருவரையும் அழைத்து சென்றான் சித்தார்த்.
போகும் போது காருண்யாவிற்கு தெரியாமல், சித்தார்த்தின் தலையில் நச்சென்று குட்டி, அவன் கையிலும் நறுக்கென்று கிள்ளி வைத்தாள் மாளவிகா.
"எதுக்குடி என்ன இப்ப கிள்ளின?" என கிசுகிசுப்பான குரலில் கேட்டான் சித்தார்த்.
"ஓ! சத்தமா கேட்டா தங்கச்சியிடம் உன் மானம் போகுமோ? அது என்னடா, நான் அவ்ளோ சொல்றேன், அத கேக்காம அவ தான் லேட்டானதுக்கு காரணம்னு தெரிஞ்சவுடனே கூல் ஆயிட்ட. நீ வர வர சரியில்ல டா!"
"ஏய் லூசு! சும்மா இருக்கு. அந்த பொண்ணே கண்டம் விட்டு கண்டம் தாண்டி வந்திருக்கு, அதுவே ரொம்ப கஷ்டத்துல இருக்கும் போது நம்மளும் சேர்ந்து திட்ட கூடாது" என்று சமாதானம் கூறினான் சித்தார்த்.
இவர்கள் இருவரும் தனியாக பேசட்டும் என்று, காருண்யா தூரம் சென்று அமர்ந்திருந்தாள்.
"ஆமாம் எங்க அந்த சோகத்தை கேட்க விட்ட? அவ அவளோட மனசுல இருக்கறத சொல்றதுக்கு முன்னாடி போன் பண்ணி சொதப்பிட்ட!"
"சரி விடு, முதல்ல நம்ம போய் சுந்தரம் சாரை பார்க்கலாம்" என இருவரையும் அழைத்து கொண்டு உள்ளே சென்றான் சித்தார்த்.
"ஹலோ அங்கிள் ஹௌ ஆர் யூ? இவ தான் என் ப்ரெண்ட் காருண்யா, ஆஸ்திரேலியாவிலேயே மிகவும் ஃபேமஸ் ஜூ கீப்பர்" என சித்தார்த்தை முந்தி கொண்டு கூறினாள் மாளவிகா.
"நல்லா இருக்கேன் மாளவிகா. இப்படி மூணு பேரும் உக்காருங்க!" என்று தன் எதிரில் இருந்த, நாற்காலிகளை சுட்டிக் காட்டினார் சுந்தரம்.
"ஏம்மா! மித்ரன் போகும்போது சித்தார்த்தோட தங்கச்சி தான், இன்னிக்கு வருவாங்கன்னு சொல்லி இருந்தானே. நீ இப்ப என்னடா உன்னோட ஃப்ரெண்டுனு கூட்டிட்டு வந்திருக்க!"
"இதுதான் அங்கிள் சித்தார்த் ஓட தங்கச்சி. அவ தான் எனக்கு இப்ப ரீசன்டா ரெண்டு நாளா பெஸ்ட் பிரெண்ட்டா மாறிட்டா" என்று கூறி சிரித்தாள் மாளவிகா.
"ஓ அப்படியா!" என்று சுந்தரமும் தலையசைத்து வைக்க சித்தார்த் உம்மென்று மூஞ்சியை தூக்கி வைத்து கொண்டான்.
"சொல்லும்மா, உன் பேர் என்ன? உன்ன பத்தி கொஞ்சம் சொல்லு தெரிஞ்சுக்கிறேன். புதுசாக ஆரம்பிக்கப் போற, அந்த தனியார் விலங்கு காட்சிக்கு உதவியா இருக்கும்" என்று காருண்யாவை பார்த்து கேட்டார் சுந்தரம்.
"வணக்கம் சார்! என் பெயர் காருண்யா, நான் ஆஸ்திரேலியாவில் உள்ள 'நியூ வேர்ல்டு பில்லபாங் ஜூவில்' தான் வேலை செஞ்சுகிட்டு இருக்கேன். இப்போ ஒரு ஆராய்ச்சி விஷயமா, நான் இங்க வந்து இருக்கேன். இப்ப தான் இங்கே ஒரு புதிய தனியார் விலங்கியல் ஜூ வரப்போவதாக என் அண்ணன் சொன்னார். சரி என்னால் முடிந்த உதவியை செய்யலாம்னு வந்தேன்" என்றாள் காருண்யா.
"ரொம்ப நல்லதா போச்சு. என் பையனும் இதுக்கு முன்னாடி பல பிசினஸ் செய்து உடனே உடனே அதை இழுத்து மூடிட்டான். இந்த ஒரு விஷயமாவது நல்லபடியா அமையணும்னு, நான் வேண்டாத கடவுள் இல்லை. எப்படியாவது, நீதான் பொறுப்பா இருந்து, இந்த ஜூவை ஆரம்பித்து கொடுக்கணும். குறைந்தது ஒரு ஆறு மாசமாவது அவன் கூடவே இருந்து, இந்த பிஸினஸை நேர் செய்யணும்".
பிசினஸ் என்று சொன்னவுடன், காருண்யாவின் முகம் போன போக்கை பார்த்து, சட்டென்று தன் தவறை உணர்ந்து கொண்டார் சுந்தரம். "சாரி இது பிஸினஸ்னு சொல்ல முடியாது, இதனால் நிறைய அரிய வகை விலங்குகளின் மதிப்பு மக்களுக்கு தெரிவதோடு, அதை பாதுகாக்கணுங்கிற எண்ணம் வரும்" என்று தன் கூற்றை திருத்தி கூறினார்.
"ஓகே சார்! அத நான் பாத்துக்குறேன் எப்போ என் வேலையை, ஸ்டார்ட் பண்ணலாம்னு சொல்லுங்க?"
"ஏம்மா இதுக்கு நேரம் காலம் எல்லாம் கிடையாது. இன்னிக்கே நல்ல நாள்தான், இப்பவே நல்ல நேரம்தான். அதனால் நீ இப்போதே ஜூ கீப்பராய் சேர்ந்துவிடு".
பெரியவங்க சொல்ல தட்டக் கூடாது என அவள் தந்தை கூறியிருப்பதால், அவள் அப்போதே பதவி ஏற்றுக் கொண்டாள்.
"ரொம்ப நன்றி மா, நீ மித்ரன் வரவரைக்கும் நம்ம ஜூவை ஆரம்பிக்க, என்னவெல்லாம் டாக்குமென்ட்ஸ் தேவைப்படும்னும், அந்த விலங்குகளை எப்படி எல்லாம் பார்த்துக்கணும் அப்படிங்கிற விஷயங்களை எல்லாம் எடுத்து பைல்ஸ் ரெடி பண்ணு. இந்த ரெண்டு டாக்டரும் உனக்கு ஹெல்ப் பண்ணுவாங்க" என்று கூறிவிட்டு அவளை வழியனுப்பி வைத்தார் சுந்தரம்.
வேலையில் சேர்ந்த அடுத்த நொடி முதல், யுவனின் எண்ணத்தை தள்ளி வைத்து, முழுக்க முழுக்க புதிதாக ஆரம்பிக்கும் தனியார் விலங்கு காப்பகத்திற்கான, அனைத்து முன்னேற்பாடுகளையும் யோசித்து செய்ய தொடங்கினாள் காருண்யா.
மாளவிகாவும், சித்தார்த்தும் விலங்குகளுக்கு தடுப்பூசி அட்டவணை, அதன் பேறுகாலங்கள், அதன் உணவு பழக்கங்கள் மற்றும் அதனுடைய குணாதிசயங்கள் எல்லாம் பட்டியலிட்டு வைத்திருந்தார்கள். விரைவிலேயே ஒரு வாரம் ஓடிவிட்டது. மித்ரன் வரும் நாளும் வந்தது.
"நம்மள மாதிரியே விலங்குகள் மேல இவ்ளோ பாசம் வெச்சிருக்கானே? அது யாரா இருக்கும்" என்று தெரிந்து கொள்ளும் ஆவல், காருண்யாவிற்கு மிக அதிகமாகவே இருந்தது.
மித்ரனின் அலுவலகத்திற்கு காலையிலேயே வந்து அவனேக்காக மூன்று பேரும் காத்திருக்க, தூரத்தில் அவன் வருவது மூன்று பேருக்கும் தெரிந்தது. உடனே மாளவிகாவும், சித்தார்த்தும் ஓடி சென்று அவனை வரவேற்க ஓடினர். ஆனால் இருந்த இடத்திலேயே, ஆடாமல் அசையாமல் நின்றிருந்தாள் காருண்யா.
தன் காலின் கீழ் உள்ள நிலம், நழுவி விழுவது போன்றதொரு பிரமை தோன்றி மறைந்தது.
தன் ஆருயிர் யுவனை ஊரெங்கும் தேடி அலைந்த, அவள் கண் முன்னே, 'யுவமித்ரன்' நின்று கொண்டிருந்தான்.