நீயே நினைவாய் - 8
தன் மனதில் நின்றவன், தன் கண் முன்னே நின்றிருப்பதை பார்த்த காருண்யாவால், தான் காண்பது கனவா, இல்லை நினைவா என்று நம்ப முடியவில்லை.
சித்தார்த்துடனும், மாளவிகாவுடனும் பேசிக்கொண்டே நடந்து வந்த மித்ரன், காருண்யாவை கண்டதும், சடாரென்று ப்ரேக் அடித்து நின்றான். அவளுடைய கண்களை உற்று நோக்கியவன், ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து நின்றான்.
"என்னாச்சு மித்ரன்? எனி ப்ராப்ளம்?" என்று மாளவிகா அவன் தோளை உலுக்கினாள்.
அப்போது தான் சுயநினைவு வந்தவனாக, "நத்திங் மாளவிகா, இவங்க தான் சித்தார்த்தோட தங்கச்சியா?"
"ஆமாம் மித்ரன்".
"சரி வெளில நின்னு பேச வேண்டாம், உள்ள போய் பேசிக்கலாம்!" என்று கூறி விட்டு, தன் அலுவலக அறையின் உள்ளே சென்றான் மித்ரன்.
"என்ன இவன்? நான் இவனை மட்டுமே நினைச்சுகிட்டு இருக்கேன். ஆனால் இவனோ, இது தான் சித்தார்த்தோட தங்கச்சியான்னு கேட்கிறானே? சரி பொறுத்திருந்து பார்ப்போம்!" என்று நினைத்து கொண்டு, காருண்யாவும் அவர்களுடன் மித்ரன் அறைக்கு சென்றாள்.
உள்ளே சென்றதும், சித்தார்த் சம்பிரதாய முறையாக, காருண்யாவை மித்ரனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். மித்ரனும் காருண்யாவை வரவேற்றான்.
"வெல்கம் மிஸ் காருண்யா, உங்கள மாதிரி நிறைய எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிறவங்க தான், நான் புதுசா ஆரம்பிக்கப் போற விஷயத்துக்கு தேவை. நீங்க எங்க கம்பெனில ஜாயின் பண்ணி, ஹெல்ப் பண்றேன்னு சொன்னது மிகப் பெரிய விஷயம். அப்புறம் உங்க எல்லாருக்கும் ஒரு நல்ல செய்தி என்னன்னா, லீகல் கிளியரன்ஸ் எல்லாமே இன்னும் பத்து நாளுக்குள்ள கிடைக்க ஏற்பாடு செஞ்சாச்சு. நாம அடுத்து செய்ய வேண்டியது, எங்க அப்பாவின் பெயரில் இருக்கும் இடத்தை, முழுசா சுத்தம் செய்து அந்த இடத்தில் ஒரு மினி ஜூ நிறுவுவதற்கான வேலைகள் பார்க்கணும். காருண்யா நீங்கதான் எந்த அனிமல்ஸ் எந்த இடத்தில் இருக்கணும், அதுக்கு எந்த கிளைமேட் ஏத்துக்கும்னு எல்லாத்தையும் எங்களுக்கு கொஞ்சம் சொல்லணும். உங்க கூடவே சித்தார்த் மாளவிகாவும் இருப்பாங்க.
மத்தபடி, உங்களுக்கு எந்த கம்ப்ளைண்ட்னாலும் தயங்காம என்கிட்ட வந்து சொல்லுங்க, நான் அதை தீர்த்து வைக்கிறேன். ஆல் தி பெஸ்ட், வெல்கம்!"
சரி என்று கூறி, காருண்யா தலையாட்ட, "அப்புறம் காருண்யா, உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு, ஆனா எங்க பார்த்து இருக்கேன்னு தான் ஞாபகம் இல்லை" என்று கூறி குழம்பினான் மித்ரன்.
"நல்லா பாரு மித்ரன்! அப்படியே அவங்க அண்ணன் சித்தார்த்தின் ஜாடையில் தான் இருக்காங்க, அவங்க ரெண்டு பேரும் அவங்க அப்பா ஜாடையில் இருக்காங்க" என்று மிகப் பெரிய விஷயத்தை கண்டுபிடித்ததாக சிரித்தாள் மாளவிகா.
"இல்லை இவங்களை, இவங்க கண்ணை இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்த ஞாபகம், ஆனா எங்கேன்னு தான் எனக்கு தெரியல. சரி, நீங்க எல்லாம் போய் உங்க வேலைய பாருங்க. நம்ம இன்னும் இரண்டு மணி நேரம் கழித்து மீட் பண்ணலாம் அதுக்குள்ள நான் சில விஷயங்களை முடிச்சிட்டு வரேன்".
வாழ்க்கையில் எந்த கணத்துக்காக இவ்வளவு ஆவலுடன் காத்திருந்தாளோ, அந்த கணம் அவள் வாழ்வில் வந்தும் விட்டது, ஆனால் அவள் நினைத்தது போல் அது மகிழ்ச்சியை தராமல் மேலும் துக்கத்தை அதிகப்படுத்தி அவளை அழ வைத்து பார்க்க நினைத்தது. "எங்கேயோ பார்த்திருக்கிறானாமே? ஒரு நாளா, இரண்டு நாளா முழுதாக இரண்டு வருஷம் பார்த்து, பேசி, பழகிய என்னை எப்படி நினைவில்லாமல் இருக்கும். என்னை நினைவில்லாமல், என்னை கண்ணை மட்டும் நினைவிருக்கோ? இருக்கட்டும் அப்புறம் அவனை தனியே சந்திக்கும் போது பேசிக்கலாம்" என முடிவெடுத்தாள் காருண்யா.
"என்ன காரு நின்னுகிட்டே கனவு காண்ற? வா போகலாம். இங்க சும்மா உக்காந்திருக்க ஒரே போரா இருக்கு, நம்ம வெளியே போய் ஏதாவது சாப்பிட்டுட்டு, ஒரு இரண்டு மணி நேரத்தில் வரலாம் வா" என்று வெளியே அழைத்தாள் மாளவிகா.
"ச்சு, இல்ல மாளு நான் வரல, நீ வேணும்னா போய்ட்டு வா' என்றாள் காருண்யா.
"ஏய் மாளு! வா நானும் இன்னும் சாப்பிடல, வா நம்ம இரண்டு பேரும் போய் சாப்பிட்டுவிட்டு வந்துடுவோம். காருண்யாவிற்கு வர இஷ்டம் இல்லேன்னா, இங்கேயே இருக்கட்டும். நாம வேணா, வரும் போது அவளுக்கு ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வருவோம். இங்க தான் அவளுக்கு துணைக்கு மித்ரன் இருக்காரே" என்று கூறி மாளவிகாவை அழைத்து சென்றான் சித்தார்த்.
சித்தார்த் பேசியது எதுவும், காருண்யாவிற்கு ஒழுங்காக காதில் விழவில்லை என்றாலும், மித்ரன் அவளுக்கு துணை இருப்பான், என சித்தார்த் கூறியது மட்டும் தெளிவாக கேட்டது."இப்ப துணை இருக்கான், காலம் முழுதும், என் வாழ்க்கைக்கு துணையா வருவானா?" என நினைக்க அவள் மனதில் யாரோ அமிலம் ஊற்றியது போல் கலங்கினாள் காருண்யா.
"இந்த மித்ரனுக்கு உண்மையிலையே நம்மள யாருன்னு தெரியலையா? இல்ல சித்து மாளவிகா இருந்ததால நம்மள தெரிஞ்ச மாதிரி காட்டிக்கலையா?" என யோசித்து குழம்பினாள் காருண்யா.
"சரி, இப்ப மித்ரன் தனியா தான் இருக்கான், நம்ம போய் பேசி பார்க்கலாம்" என காதல் கொண்ட அவள் நெஞ்சு அவளை அரித்து எடுத்தது. தன் மனதிற்கு கட்டுப்பட்டு அவனின் அறை சென்று,"மே ஐ கம் இன்" என்று கூறி கதவை தட்டினாள் காருண்யா.
"எஸ் கம் இன்" என்று கூறி நிமிர்ந்தவன், காருண்யாவை கண்டதும் முகம் மலர்ந்தான். "ஓ காருண்யா வாங்க வாங்க உட்காருங்க! என்ன விஷயம்?" என்று மறுபடியும் அவளை மூன்றாம் மனுஷியாக தூர நிறுத்தி பேசினான்.
"இல்ல சார் ஒண்ணுமில்லை நம்ம ஜூவிற்கு சாரி உங்க ஜூவிற்கு என்ன பெயர் வைக்க போறீங்க?"
"நம்ம ஜூ தான் காருண்யா, பிரிச்சு பார்க்க வேண்டாம் ப்ளீஸ். ஆக்சுவலி, நான் 'காருண்யா விலங்குகள் காப்பகம்' அப்படின்னு தான் யோசிச்சு வெச்சிருந்தேன். அப்போ எனக்கு உங்கள பத்தி தெரியாது, சாரி உங்க பேருன்னு தெரியாது. இப்பயும் நீங்க ஓகேன்னா அதே பெயரே வெச்சிடலாம். காருண்யா அப்படின்னா கருணைன்னு தானே அர்த்தம் அதான் யோசிச்சேன். நீங்க என்ன சொல்றீங்க?"
"என்னடா இது, இவனுக்கு நம்மள தெரியுதா? தெரியலையா? ரொம்ப குழப்பறானே?" என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் காருண்யா.
"என்ன காருண்யா? பதிலே சொல்லாம, யோசிச்சுட்டு இருக்கீங்க? உங்களுக்கு பிடிக்கலைன்னா பெயரை மாத்திடலாம்!".
"ஆங், உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே!" என்று மறைமுகமாக தன் மனதில் உள்ளதை அவனுக்கு தெரிவித்தாள்.
"ஓ அப்படியா! அப்ப சரி எதுக்கும் சித்தார்த்கிட்டயும், மாளுகிட்டயும் கேட்டுக்கலாம். மாளு கரெக்டா சொல்லுவா!" என புகழ்ந்தான் மித்ரன்.
தன்னவன் வாயால், இன்னொருத்தி புகழ் பாட கேட்டவள், மிகவும் கடுப்பாகி, "சரி யுவன் சார், நான் அப்புறம் வரேன்!" என திரும்பி நடந்தாள்.
"ஒரு நிமிஷம் நில்லுங்க காருண்யா! என் முழு பெயரான யுவமித்ரன் உங்களுக்கு எப்படி தெரியும்? என் உயிர் நண்பன் கவின் தான் யுவன்னு என்னை கூப்பிடுவான். அவன் என்னை விட்டு போன பின்னாடி அந்த பெயரை விட்டுட்டு மித்ரன்ற பெயரத்தான் நான் யூஸ் பண்றேன்".
"அது வந்து, ஆங் உங்க அப்பாகிட்ட அன்னிக்கு பேசிக்கிட்டு இருந்தப்ப அவர் தான், உங்க பெயர் யுவமித்ரன்னு சொன்னார். எங்க ஊர்லல்லாம், முதல் பாதி பெயரை சொல்லித்தான் கூப்பிடுவோம். சாரி இனிமே மித்ரன்னே கூப்பிடறேன். இஃப் யூ டோண்ட் மைண்ட் உங்க ஃப்ரெண்ட் கவினுக்கு என்னாச்சுன்னு தெரிஞ்சுக்கலாமா?"
"தெரியலைங்க, இரண்டு வருஷமா அவன் எங்க போனான்னே தெரியல, நானும் என்னால முடிஞ்ச வரைக்கும் தேடி பாத்துட்டேன்" என கண்கலங்கி கூறினான்.
"சாரி மித்ரன்" என கூறிவிட்டு சடாரென்று வெளியே வந்தவள் ஒன்றும் புரியாமல் திணறினாள். மித்ரனுக்கு, தான் முக்கியமில்லை. ஆனால் கவினின் மூலம் அவன் மனநிலையை புரிந்து கொள்ளலாம் என்றால், இப்போது அதற்கும் வழியில்லை. எல்லாவற்றையும் பாதியில் விட்டுவிட்டு, ஆஸ்திரேலியா போக முடியாது. என்ன செய்வது என புரியாத குழப்பத்தில் ஆழ்ந்திருந்தாள். அவளுக்கு இருந்த மன குழப்பத்தில் ஐயோவென்று சத்தமாக கத்த வேண்டும் போல் இருந்தது ஆனால் எப்போதும் போல் பெரிய பூகம்பத்தை மனதிற்குள்ளேயே முழுங்கி விட்டு, பூஞ்சிரிப்பு ஒன்றை உதிர்த்த படி அமர்ந்திருந்தாள்.
சித்தார்த் மற்றும் மாளவிகா வந்தவுடன் மித்ரன் அனைவரையும் அவசர கூட்டத்திற்கு அழைத்தான்.
"க்கைஸ், நம்ம எல்லோரும் இப்ப முக்கியமான விஷயமா, இரண்டு நாள் பெங்களூர் போக வேண்டி இருக்கு, எல்லாம் நம்ம வேலை விஷயமாத்தான். சோ பீ ரெடி, இன்னிக்கு நைட் நமக்கு ஃப்ளைட்" என்று தெரிவித்தான் மித்ரன்.
"வாவ் சூப்பர், வேலையோட சேர்ந்து சுத்தியும் பார்க்கலாம், நான் ரெடி" என்றாள் குதூகலமாக சொன்னாள் மாளவிகா.
மனதிற்கு இனியவனோடு, நெடுநாட்களுக்கு பிறகு ஒன்றாக பயணிப்பதில் மகிழ்ச்சி இருந்தாலும், அவனின் எண்ண ஓட்டத்தை அறிந்து கொள்ள முடியாமல் திணறினாள் காருண்யா.
"என்ன மிஸ்.காருண்யா ரெடியா?" என கண் சிமிட்டி சிரித்தான் மித்ரன்.
அந்த கண் சிமிட்டலில், மறுபடி அவனிடம் காதலில் விழுந்தாள் காருண்யா.