அத்தியாயம்- 10
மரகதம் ரொம்ப நாட்களுக்குப் பிறகு சந்தோஷமாக இருந்தாள். இது பிரபு கொடுத்த கொடை. தனக்கே தனக்கென்று அன்பு செலுத்த ஒரு மனிதன் வந்ததும், நீருக்குள் அமிழ்ந்திருக்கும் போது தென்படும் பொருள்கள் தெளிவற்று தெரிவது போல் தெரிந்த விஷயங்கள் இன்று---நீருக்கு மேல் வந்ததும் எப்படி தெளிவாகத் தெரியுமோ அப்படி தெரிந்தது. அப்பாவைப் போல் பயந்து பயந்து நண்பனின் மகள் என்ற போர்வையில் நிஜத்தை புதைத்துக்கொண்டு மறைந்து மறைந்து அன்பு செலுத்தும் கஷ்டம் பிரபுவின் உறவில் இல்லை. இவர் என் கணவர் ஆகப்போகிறவர் என்று பகிரங்கமாக அறிவித்து கம்பீரமாக காதலிக்கிற அழகு அவளுக்குக் கிடைத்திருக்கும் வரம். இது கொடுத்த தெம்பில் அவள் நேர்பட சிந்திக்கத் தொடங்கினாள். இப்பொழுதெல்லாம் அம்மாவைப் பற்றி அதிகம் யோசித்தாள். முன்பு கோபத்துடன் யோசித்ததால் அம்மாவின் மேல், அப்பாவின் மேல். உலகத்தின் மேல் ஒரு எதிர்மறை அப்பிப்பிராயம் அவளுள் இருந்தது.
“மரகதம்...உங்க அம்மாவின் சூழ்நிலை எவ்வளவு கடுமையாக இருந்திருந்தால் இப்படி உன்னையும் உன் தங்கையையும் அவங்க பார்க்காம இருந்திருப்பாங்க? உனக்கு தெரியாத, உனக்குப் புரியாத முட்டுக் கட்டைகள் இருந்திருக்கலாம்....எதையும் லெட் கோ பண்ண கத்துக்கோ...புரியுதா?” என்றான் பிரபு. ஒரு அன்பான மனதிலிருந்து வருகிற இந்த யோசனை அவள் மனதுள் இறங்கியது. முதல் முறையாக அவள் அம்மாவை மன்னித்தாள். அம்மா உடம்பு சரியில்லாமால் படுத்திருந்த அறைக்குப் போனாள். அம்மா பயன்படுத்தியப் பொருள்களை வாஞ்சையுடன் தொட்டுப் பார்த்தாள். எல்லாமே அம்மா இருந்தபோது எப்படி இருந்ததோ அப்படியே வைத்திருந்தாள். கடைசியாக அம்மா அணிந்த பழைய நீல பார்டர் உள்ள கறுப்புப் புடவை அம்மாவின் வாசனையோடு கொடியில் கிடந்தது. அதை மார்போடு அணைத்தாள். சுகமாக இருந்தது. அவள் கண்களில் கண்ணிர் சத்தமின்றி வழிந்தது. மதர்ஸ் டே என்ற நாள் வரும்போதெல்லாம் கோபப்பட்டிருக்கிறாள். அந்த நாள் பூராவாக அமைதி இன்றி இருப்பாள். டி.வி யில் பிரபலப் பெண்மணிகள் அம்மாவின் கரை கடந்த அன்பு பற்றிப் பேசுவார்கள். எனக்கு அப்படி ஒரு அம்மா இல்லையே...தூக்கி எறிந்த அம்மா தானே கிடைத்தாள்...மதர்ஸ் டே எப்படி கொண்டாடுவேன்? புழுங்கி இருக்கிறாள். இன்று அவள் மனதில் அந்தக் கரை அழிந்தது. அம்மாவின் அந்தரங்கம் புனிதமானதாகத் தான் இருக்கும். அவளுடன் ஆறு மாதம் இருக்க ஆண்டவன் கொடுத்த வாய்ப்பை அதன் மதிப்பு தெரியாமல் எப்படி வீணடித்து விட்டாள்! இப்பொழுது உரைத்தது. அப்பொழுது...எப்படியெல்லாம் அம்மாவை கேள்விகளால் துன்புறுத்தினாள். அந்த பாவத்திற்கு என்ன பரிகாரம் செய்யப் போகிறாள்....பெருமூச்சுடன் அம்மாவின் கைகடிகாரம், அவள் பயன்படுத்திய சீப்பு...அவள் சாப்பிட்டத் தட்டு என்று ஒவ்வொரு பொருளாக எடுத்து முத்தமிட்டாள். “அம்மா நீ ஏன் என்னையும் தங்கை அருந்ததியையும் புறக்கணித்தாய் என்று தெரியாது...ஆனால் அதற்கு ஒரு வலுவான காரணம் இருக்கும் என்று எண்ணுகிறேன். இனிமேல் பதில் தேடும் கேள்விகள் கேட்க மாட்டேன்...உன்னை ஆராதிக்கக் கற்றுக் கொண்டேன். மதர்ஸ் டே உன் நினைவுகளோடு கொண்டாடுவேன்.”
ஷெல்ப்யை குடைந்த போது ஒரு நோட்டுப்புத்தகம் கிடைத்தது. அதன் அட்டையிலேயே “என் கண்மணிகளுக்கு” என்று அம்மா எழுதியிருந்ததைப் பார்த்தாள். இது எப்படி அவள் கண்ணில் படாமல் தப்பிற்று? அவள் தான் எல்லாவற்றையும் வெறுப்புடன் பார்த்தாளே..பிறகு எப்படி இதை மதித்திருப்பாள்.? அம்மாவின் கையெழுத்து கோணல் மாணலாக இருந்தது. இங்கு வந்த பிறகு தான் அவள் இதை எழுதி இருக்கவேண்டும். நோயோடு போராடிய போது அவள் கஷ்டப்பட்டு இதை எழுதி இருக்கிறாள் என்றால்...அதன் அவசியம் கருதி அவள் எழுதி இருக்கவேண்டும். அம்மா உன் எண்ணங்கள், உன் உணர்வுகள் புரிந்து கொள்ள நீ மறைந்தும் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கியே. மரகதம் ஆவலுடன் நோட்டைப் பிரித்து படிக்கச் ஆரம்பித்தாள். படிக்கப் படிக்க அவள் கண்களில் அருவி போல் நீர் வழிந்தது.
அன்பு கண்மணிகளா
அம்மா என்றால் அன்பு என்று சொல்வார்கள். அம்மா என்றால் வம்பு என்று தான் உங்களுக்கு நான் அறிமுகம் ஆகிறேன். காலம் ஓடிப் போய் விட்டது. மூப்பு என்கிற விளிம்பை தொடும் முன் நான் பிரிகிறேன். நல்லது தான். என்னால் உங்களுக்கு என்ன பயன்? உங்கள் பிறப்பிற்கு நான் காரணம் என்பதைத் தவிர...என் இறுதிச் சுற்று வாழ்க்கைப் பயணம் சில மாதங்களோ சில வாரங்காளோ...சில நாட்களோ...யார் கண்டது? ஆனால் இறுதி நேரம் நெருங்கிவிட்டது. அந்தி நேர வெளிச்சம் போல் இந்த நேரம் தான் நான் நானாக இருக்கிறேன். அதனால் சந்தோஷமாக இருக்கிறது. என் கதை சொல்கிற நேரமிது. என் பிடிவாதம்...பயம்..ஏமாற்றம்...சுயநலம்...எல்லாம் உங்களையும் பாதித்திருக்கும். என்னை மன்னியுங்கள் கண்மணிகளா...
படிப்பதை நிறுத்திவிட்டு மரகதம் ஏனோ ஏங்கி ஏங்கி அழுதாள். அம்மாவிற்கு அவள் தோள் கொடுக்கவில்லை. சாய்ந்து கொள்ள மடி தரவில்லை. “என்னை ஏன் பெற்றாய்? உன் சிறிது நேர இன்பத்துக்கா?” என்று இரக்கமின்றி கேட்டாளே. அம்மாவிற்கு எவ்வளவு வலித்திருக்கும்! தொடர்ந்து படித்தாள்.
“உங்கள் குற்றச்சாட்டுகள் எனக்கு வலிக்கவில்லை...எனக்கு இது தேவை தான். பெற்ற பிள்ளைகளை புறக்கணித்த தாயிற்கு இரக்கம் காட்டத் வேண்டியதில்லை. என் தவறா என்று தெரியவில்லை...நான் ஜானைக் காதலித்தது. அதிலிருந்து தான் ஆரம்பமாயிற்று என் இருண்ட பயணம். மத வேறுபாடுகள் மனிதனை விழுங்கும் மலைப்பாம்பாய் குடும்ப கோவிலை நொறுக்கிவிட்டது. ஜானைப் பிரிந்தேன்...என் உயிர் அன்றே போய்விட்டது....”
இந்த வரிகளின் வேதனை இன்று நன்றாகப் புரிந்தது மரகதத்திற்கு. பிரபுவை பிரிய நேர்ந்தால்...அவள் அவள் அவள்...பழைய மரகதம் ஆகிவிடுவாள், குற்றுயிரும் குலையுயிருமாக...ஒரு பிண்டமாக...வெளியே சிரித்து உள்ளே வெந்து....அம்மா எவ்வளவு பாவம்!....மேலே படித்தாள்....
“மரகத மேரி என்று உனக்கு ஆசையாக நான் பெயர் சூட்டினேன். மேரி மாதாவாகவும் மரகதவல்லி தாயாராகவும் நீ எனக்கு தெய்வக் குழந்தையாகத் தெரிந்தாய். உனக்கு தெரியுமா கண்மணி...உன் முகத்தைப் பார்க்கக் கூட என் அம்மாவும் அண்ணனும் விடவில்லை....மரகதப் பதுமையை ஜானிடம் ஒரு அழுக்கு மூட்டையைப் போல் ஒப்புவித்து விட்டார்கள். அழுதேன் அழுதேன்....கண்ணிர் வற்றி விட்டது...அதற்குப் பிறகு நான் வடித்தக் கண்ணீர் எல்லாம் ரத்தமாக என் இதயத்திலேயே விழுந்தது. பங்கிட்டுக் கொள்ள முடியாத துயரம்...ஆற்றிக் கொள்ள முடியாத சோகம். மதம் என்ற பெயரில் நடந்த கொடுமை எப்படி என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விட்டது தெரியுமா? என்னை அவசர அவசரமாக வைதீஸ்வரனுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள். அவருக்கு ஆறு வயதில் சொக்கலிங்கம் என்ற குழந்தை இருந்தது. மனைவி இறந்து விட்டாள் என்பதால் அவர் அதிகம் தோண்டித் துருவாமல் எண்ணக் கல்யாணம் செய்து கொண்டார் அது நான் செய்த புண்ணியம் என்று என் அம்மா சொன்னார்கள். “உன்னை மாதிரி கெட்டுப் போனவளுக்கு இந்த வரன் தான் லாயக்கு. பேசாமல் ஒழுங்கு மரியாதையாக எங்க மானத்தை காப்பாத்தி குடும்பம் நடத்து. உனக்கு குழந்தையே பிறக்கவில்லை என்று நினைத்துக் கொள்.” என்று அம்மாவும் அண்ணனும் மிரட்டி புக்ககம் அனுப்பிவிட்டார்கள். இருபத்திரண்டு வயதில்...உடைந்த மனதுடன்....வைதீஸ்வரன் முகத்தைப் பார்க்கக் கூட பிடிக்காமல்..அதை வெளிக்காட்டவும் முடியாமல் ஒரு ஆறு வயது பாலகனுக்கு அம்மாவாக அமர்த்தப்பட்டேன். தாய்மையை தொலைத்து விட்டவளுக்கு தாயாக பரிவு காட்ட பிரம்மபிரயத்தனம்மாக இருந்தது. காதல் தோல்வி, தாய்மை தோல்வி...உறவுகளின் நெருக்கடி...என் மனம் மலர முடியாமல் தவித்தது. எப்படியோ அந்தப் பிஞ்சுக் குழந்தையின் தாயற்ற பரிதவிப்பு என்னை சற்று உயிர்பித்தது. அவனுக்காக வாழ்வோம் என்று சமாதானம் தோன்றியது. விந்தி விந்தி என் மண வாழ்க்கை போனதில் அருந்ததி பிறந்தாள். அவள் முகம் பார்க்கப் பார்க்க, முகம் கூடப் பாராமல் விட்டு விட்ட குழந்தையின் நியாபகம் வந்து உறுத்திற்று. எப்படியோ முட்டி மோதி மனதை சேகரம் பண்ணிக் கொண்டு நான் வாழந்து கொண்டிருந்த போது தான் எனக்கு ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. வைதீஸ்வரனின் முதல் மனைவி கல்யாணி இறந்து விட்டதாகச் சொல்லித்தானே என்னைக் கல்யாணம் பண்ணிக் கொண்டார்...கல்யாணி சாகவில்லை. உயிருடன் இருக்கிறாள். சற்று நோய் வாய்ப்பட்டு பலகினமாய் தாம்பத்தியத்திற்கு லாயக்கில்லாமல்...ஆக நான் ஆறு வயது பாலகனுக்குத் தாயாக இருப்பதற்காக மனம் செய்து கொடுக்கப்படவில்லை.....வைதீஸ்வரனின் ஆசை நாயகியாக மனைவி என்ற பெயரில்......அவர் அன்பெல்லாம் கல்யாணியிடம்...படுக்கை மட்டுமே என்னிடம். எப்படி இருக்கும் எனக்கு? ஜானிடம் ஓடிவிடவேண்டும் போல் மனம் ஓலமிட்டது...அவரின் காதலில் தழைத்து என் புண்களை ஆற்றிக் கொள்ள மனம் அவசரப்பட்டது....நோ என்று என் திருமாங்கல்யம் தடை போட்டது. குழந்தை மரகத மேரி பற்றி அவ்வப்போது ஜான் போன் பண்ணி விவரம் சொல்வார். அவர் குரலை கேட்டதாலேயே நான் பைத்தியம் பிடிக்காமல் தப்பித்தேன். அந்த தடியனோடு என்ன பேச்சு என்று அம்மா நிஷ்டூரமாக குத்திக் காட்டுவாள்...அதனாலேயே ஜானிடம் எப்பொழுதும் கடுமையாகப் பேசுவேன்...பிறகு நான் ஒரு முட்டாள்தனம் பண்ணினேன்...அது என் வாழ்க்கைப் பாதையில் மேலும் முட்களைப் பரப்பி ரணமாக்கிற்றி. அது என்ன முட்டாள் தனம் தெரியுமா?....”
இந்த இடத்தில் படிப்பதை நிறுத்தினாள் மரகதம். மனம் கனமாயிற்று. கையில் பிடித்திருந்த நோட்டுப் புத்தகம் நழுவி விழுந்தது. துன்பவியல் நாடகம் போல்...அம்மாவின் வாழ்வில் ஏன் இப்படி சோதனைகள்? வைதீஸ்வரன் இவ்வளவு பெரிய ஏமாற்றுப் பேர்வழியா? கோபத்தில் அவள் கண்கள் சிவந்தது...அம்மா அம்மா..உன்னை நான் என்னென்ன கேள்விகள் கேட்டு துன்புறுத்தி விட்டேன்....இதயமே வெடித்து விடும் போல் அழுதாள்....அம்மா செய்த முட்டாள்தனம் பற்றி அவள் கவலைப் படவில்லை. அவளாக இருந்திருந்தால் வைதீஸ்வரன் மண்டையைப் பிளந்து விட்டிருப்பாள்....
நதி ஓடும்...