அத்தியாயம்-7
சில வலிகள் மனசில் தொற்றிக்கொண்டு விடாமல் துரத்தும்....அப்படி துரத்தும் போது அதனிடமிருந்து ஓட மரகதம் ஏதாவது வேறு சிந்தனையில் தன்னை ஈடுபடுதிக் கொள்ளவாள். அவளுக்கு திருமணம் என்கிற பந்தம் போலியாகத் தெரிந்தது...அல்லது துன்புறுத்துமோ என்று பயமாக இருந்தது. மனம் ஆண்களிடம் ஒரு வெறுப்பை ஏற்படுத்தியது. “உனக்கு மாப்பிள்ளை பார்கலாம் என்று இருக்கேன்...நீ என்னம்மா சொல்றே?”என்று கேட்டார் ஜான். “உங்களை மாதிரி கோழையாக பார்த்து கட்டி வைப்பிங்க...நான் அம்மா மாதிரி அடிமையாக வாழணும்...இது தான் உங்க விருப்பமா?”
“என்ன இப்படி சொல்றே மரகதம்...அப்பா அப்படி நினைப்பேனா? உனக்கு ஒரு நல்ல துணை...”
“உங்க மதத்திலா? இல்ல அம்மா மதத்திலா? வேண்டாம் நான் கடவுளுடைய குழந்தை. என் மனசுக்கு எப்படி தோணுதோ அப்படி நான் என் வாழ்க்கையை அமச்சுக்குவேன்...உங்க கரிசனத்துக்கு நன்றி...” வெட்டி விடும் அவள் பேச்சு கேட்டு அவர் மனம் வலித்தது. திரை மறைவில் ஒரு மகள் என்பது அவளுக்கு எவ்வளவு வலியான விஷயம் என்றும் புரிந்தது. நிரந்தரமான வடு. அவருக்கு பேச என்ன வாய் இருக்கிறது?
“எனக்கு அம்மாவை பார்க்கணும்...ஒரு முறை...” என்று சொன்னாள் மரகதம். அப்பொழுது அவள் வங்கியில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவர் வாங்கிக் கொடுத்த வேலை தான். எடுத்த உடனேயே உயர் அதிகாரப் பதவி. “அது கஷ்டம்மா...உன்னாலே அவளுடைய வாழ்கை சிக்கலாகிவிடக் கூடாது. அதான் பார்க்கிறேன்.” மரகதம் விடவில்லை, “உங்களால் முடியுமா முடியாதா? என்னைப் பெற்று போட்டுவிட்டு ஜாலியாக ஒரு வாழ்கை வாழும் அவங்களிடம் ஒரே ஒரு கேள்வி கேக்கணும். அது கூட உங்களால் முடியாதா? எப்பவும் கோழை ஆகத்தான் இருப்பிங்களா?” ஜான் மிரண்டு போனார். என்ன ஒரு அதிரடியான கேள்வி? சமுதாயத்தின் விலங்குகள் பூட்டி வைத்திருக்கும் உறவை உடைக்க அவர் தயங்குவது ஒரு வகையில் கோழைத்தனம் தான்...பிறகு சாந்தாவின் நிலமை? அவரே அவளை இந்த இருபது வருடமாக பார்க்கவே இல்லை. அவள் வாழ்க்கையை சிக்கலாக்கும் நோக்கம் அவருக்கு இல்லை. தன் வாழ்க்கையும் சிக்கலாகிவிடும் என்கிற பட்சத்தில் இந்த சந்திப்பால் எந்த பிரயோஜனமும் இல்லை. இதயத்தை பூட்டி வைத்திருக்கிறார் என்று மகளிடம் சொல்ல முடியுமா? சமயங்களில் ஒரு மூன்றாம் மனிதன் மாதிரி சாந்தாவிடம் பேசியிருக்கிறார். அவளும் நல்லா இருக்கேன் என்ற எல்லை தாண்டி பேசியதில்லை.
“என்ன யோசனை? என்னை கழட்டி விட எண்ணமா? சொல்லிடுங்க...இந்த சந்திப்புகள் எனக்கு என் துரதிஷ்டத்தைத் தான் நியாபகப் படுத்துகிறது. அம்மாவை பார்க்கணும்னு நான் சொன்னதுக்கு காரணம்...பாசமில்லை. என்னை விட்டு ஓடின அந்த முகத்தைப் பார்க்கணும். அந்தக் கண்களை நேருக்கு நேர் பார்க்கணும்...இப்ப திருப்பதியா...நான் அனாதையா ஒரு நிழல் வாழ்க்கை வாழ்றது உங்களுக்கு சந்தோசம் தானேன்னு கேக்கணும்...கேக்கணும் ..கேக்கணும்... ..”
“சரி...அருந்ததியும் உன்னுடன் தானே வேலைப் பார்க்கிறாள்...அங்கு வங்கியில் பணம் எடுக்க உங்கம்மாவை வரச் சொல்றேன்..அங்கு தான் கணக்கு வைத்திருக்கிறாள்....வழக்கமா அவங்க வீட்டு மேனேஜர் தான் வருவார்....” சொன்னபடி செய்தார். புகைப்படத்தில் இருபது வயதுப் பெண்ணாகப் பார்த்த அம்மா, இப்பொழுதும் அதே அழகுடன் இருப்பதை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் மரகதம். ஜான் அவள் முன் மரகதத்துடன் போய் நின்ற போது சாந்தா உணர்வு பூர்வமாக குழைந்து நின்றாள். கண்களில் அருவி என ஒரு அன்பு பனி மழை போல் ஸ்படிகமாக தூய்மையான தாய்மையுடன் மிளிர்ந்தது. அந்த நிமிடம் சாந்தாவின் பிரளய நிமிடம்...ஆண்டுகளை புரட்டிப் போட்ட நிமிடம்...பிறந்த தன் குழந்தையை இத்தனை வருடங்கள் கழித்து நெகு நெகு என்று வளர்ந்த வாலைக் குமரியாகப் பார்க்கும் போது...அத்தனை வருடமாக தேக்கி வைத்திருந்த அன்பின் கசிவுகளை வெள்ளமாக வெளிப்படுத்த கண்களால் முடியாமல் போக...சாந்தா மயங்கி விழுந்தாள்.
“அம்மா..”.என்று அருந்ததி ஓடி வந்தாள். உடனே அம்மாவை அங்கிருந்து அழைத்துப் போய்விட்டாள். ஜானும் அவளும் அவள் காரில் ஏறிப் போவதை பார்த்த பின் கிளம்பினார்கள்.
“எங்கே நான் நாக்கை பிடுங்குவது போல் கேள்வி கேட்பேனோ என்று பயந்து, மயங்கி விட்டதாக பாவலா செய்து ஓடிவிட்டாங்க உங்க மனைவி...” என்று மரகதம் சொன்னதும் ஜான் கொதித்துப் போனார்.
“வாய்க்கு வந்ததை பேசாதே மரகதம்...அவள் உயிர் ஊசலாடிகொண்டிருக்கிறது எனக்கு தான் தெரியும். யாரும் விரும்பி பெற்ற பிள்ளையை விட்டு ஓடமாட்டங்க. சாந்தா அப்படிப் பட்டவ இல்லை. நாக்கை அடக்கு புரியுதா?” ஜானின் கோபம் கண்டு மரகதம் ஒன்று புரிந்து கொண்டாள். இவரும் அம்மாவும் உளமாரத்தான் காதலித்திருக்கிறார்கள். அதனால் தான் இவர் தன்னை இத்தனை வருடங்களும் தாங்கி இருக்கிறார். அன்பின் விளைச்சலால் தான் முத்தாக பிறப்பெடுத்திருக்கிறாள். எல்லாம் சரிதான் அருந்ததி போல் அம்மா என்று ஓடிப் போய் சொந்தம் கொண்டாட முடியாத போது இந்த உறவில் தான் என்ன அர்த்தம் இருக்கிறது? நிழலை நினைத்து கடும் பாலைவனத்தில் இளைப்பாற முடியுமா? இது அவருக்கு எங்கே புரியப் போகிறது?” ஹாஸ்டல் அறையில் அவளை கொண்டு வந்து விட்ட போது அவர் சொன்னார். “ மகளே...உன் பிறப்பிணை கொண்டாட முடியாத துக்கம் எங்க இருவருக்கும் இருக்கு. இருபது வருடம் முந்திய தலைமுறை நாங்க. தாய் தந்தைக்கு கட்டுப்பட்டு வாழ்கையை தொலச்சிட்டோம். என் மனைவிக்கு தெரிந்தால் நான் காணாமல் போவேன். என் குடும்பம் சிதறிடும். அவள் அமெரிக்காவில் இருப்பதாலும், நான் அதிகமாக சம்பாதிப்பதாலும் உன்னை அடிக்கடி வந்து பார்க்க முடிகிறது. ஊரறிய நான் உனக்கு தந்தை என்றும் அவள் உன் தாய் என்றும் சொல்லிக் கொள்ள முடியாது. நீ இப்பொழுது வளர்ந்த பெண். எங்க நிலைமை புரியும் என்று எண்ணுகிறேன்...என் பெருமூச்சுகள், என் துக்கம், என் ஏக்கம் எல்லாம் என்னுள்ளே புதச்சிகிட்டு இருக்கேன்...” அவர் குரல் உடைந்தது. பேச முடியாமல் நிறுத்தினார். மரகதம் எல்லாம் புரிந்து கொண்டாள் தான், ஆனால் மன்னிக்க முடியவில்லை. மிகவும் பிரயாசைப்பட்டு அவள் சொன்னாள் எனக்கு எல்லாம் புரிகிறது, ஆனாலும் ஐ..ஹேட் யூ போத்.”
அவர் விரக்தியுடன் சிரித்தார். “பரவாயில்லை...லவ் ஹேட் எல்லாம் ரத்த பந்தம் உடையவர்கள் இடையே வருவது சகஜம் தான். ஒரு நாள் ஐ லவ் யு டாட் என்று சொல்வேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.”
“அது இந்த ஜன்மத்தில் இல்லை...” என்றாள். மரகதம் இவ்வாறு சொல்லி ஆண்டுகள் பல ஆகிவிட்டது. ஜானின் நம்பிக்கை இனிமேலும் பலிக்குமா என்று தெரியவில்லை.
மறுநாள், பெரிய கூச்சலும் குழப்பமும் மரகதம் காதை செவிடாக்கியது. என்ன பிரச்னை என்று மரகதம் யோசிக்கும் போதே, அங்கு ஈஸ்வரி வந்தாள். “என்ன சத்தம் ஈஸ்வரி?”
“அந்த குடிகாரன் கோபாலு, அதுதான் முத்துவின் புருஷன் வந்து வாய்க்கு வந்தபடி கத்திட்டிருக்கான்.”
“என்னவாம்?’
“முத்துவிடம் தகராறு பண்றான். குழந்தைகள் அவன் குழந்தைகளாம். அவனிடம் ஒப்படைத்துவிட வேண்டுமாம். அசிங்கமா பேசறான். நடத்தைக்கெட்டவள் கிட்ட அவன் பிள்ளைகள் வளர வேண்டாமாம்..”
மரகதம் விறு விறுவென்று களேபர இடத்திற்குப் போனாள். கோபாலு, கைலியை டிரௌசர் தெரிய உயர்த்திக் கட்டிக் கொண்டு நாராச வார்த்தைகளை சாராய நெடியுடன் உதிர்த்துக் கொண்டிருந்தான்.
“டேய்...நிறுத்து. இங்கிருந்து போய்விடு. நிற்கக் கூட முடியவில்லை தள்ளாடுறே, நீ பிள்ளைகளைப் பார்த்துக்கப் போறியா? அடி செருப்பாலே...ஓடிவிடு. போலீசைக் கூப்பிடணுமா?.” சரக்கு போட்ட தைரியத்தில் மார் தட்டிக் கொண்டு குஸ்தி போடுவது போல் குதித்தான். குழறிய குரலில் “என் பிள்ளைகளை அந்த தே...இடம் வளர நான் அனுமதிக்க மாட்டேன்...போலீசைக் கூப்பிடுங்க..” என்று சவால் விட்டான்.
“நீ இங்கே வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன். மீறி வந்திட்டே. அந்தப் பலனை அனுபவி..” மரகதம் போன் செய்ய, போலீஸ் வந்து அவனை அள்ளிக் கொண்டு போனது. “ராஸ்கல்...” என்று திட்டினாள். முத்து மடிந்து அமர்ந்து அழுதாள். “அழாதே முத்து. கூடிய சீக்கிரம் அவனிடமிருந்து நிரந்தரமாக ஒரு தீர்வு கிடைக்க ஏற்பாடு பண்றேன்.” முத்து கண்ணீர் தாரை தாரையாக வழிய “காப்பாத்துங்கம்மா...என் பிள்ளைகள் இப்ப தான் நிம்மதியாக இருக்காங்க. அவங்க எதிர்காலம் நல்லா இருக்கணும்னா, இவன் தொல்லை இல்லாமல் வளரணும்.” என்று கதறினாள். “புரியுது முத்து. தைரியமா இரு நான் இருக்கேன் உனக்கு. நிஜ அன்புக்கு என்றும் மரியாதை கிடைக்கும்.” முத்துவிற்கு ஆறுதல் சொல்லிவிட்டு தன் பணிக்கு கிளம்பினாள் மரகதம்.
மரகதம் வங்கிக்கு சென்றதும் “அருந்ததியை என் காபினுக்கு வரச் சொல்லு.” என்று பியூன் கந்தசாமியிடம் சொல்லி அனுப்பினாள். அருந்ததி உடனே வந்தாள். “என்ன விஷயம் மேடம்?”
“உன் கிட்ட நான் சொல்லப் போவதை நீ சரியாய் புரிந்து கொள்ளவேண்டும். உன் அண்ணன் சொக்கலிங்கம் என் இடத்துக்கு வந்து மிரட்டினார்.”
“ஒ...அப்படியா?” என்று மென்று விழுங்கினாள் அருந்ததி. “நகைகள் பத்தி தானே?”
“ஆமாம் ...உனக்கு எப்படி தெரியும்?”
“என்கிட்டவும் நகைகளை நான் எடுத்தேனா என்று கேட்டார்.”
“உனக்கும் திருட்டுப் பட்டம் கிடைத்ததா?”
“மேடம்...எனக்கும் அண்ணாவிற்கும் என்றும் டெர்ம்ஸ் சரி கிடையாது. என்னை அம்மா விரட்டின அன்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். நடந்தது நடந்து விட்டது அஸ்வின் கிருஸ்துவ மதத்தினர் என்பதற்காக புறக்கணிக்க வேண்டாம் என்று சமாதானப் படுத்துவார் என்று நினைத்தேன்....சரி எதற்கு பழசெல்லாம். நான் அது பற்றியும் என் கதை பற்றியும் உங்களிடம் அந்த காலத்திலேயே சொல்லி இருக்கேன்..” மரகதம் நிதானமாக சொன்னாள். “தெரியும் அரு...நாம அப்ப நல்ல ஃப்ரெண்ட்ஸ்... எல்லாம் சொல்லி இருக்கே. அப்புறம் வேற நீ ஜெர்மனிக்கு போயிட்டே.. நீ உன் அம்மா இறந்தபோதும் இங்கு இல்லை. அவங்க என் பணி வீட்டில் சேர்ந்தபோதும் நீ இல்லை. இப்ப மறுபடியும் இங்கு வந்திருக்கே. அதனாலே நிறைய விஷயம் உனக்குத் தெரியாது. அரு..சொல்லு எதற்கு என்னிடம் வந்து நகைகளைக் கேட்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. சாந்தாம்மாவை கவனித்தேன்...அவங்க விருப்பப்படி கொள்ளி போட்டேன். அவ்வளவுதான். அதற்கு ஒரு காரணத்தை கற்பிக்கிறார். நான் நகைகளை வாங்கி கொண்டு தான் அவங்களை கவனித்தேனாம். கூலி வாங்கிக் கொண்டேனாம்...ரொம்ப கஷ்டமா போச்சு...இப்படியெல்லாம் பேச்சு கேட்க வேண்டியிருக்கு...’
“வருத்தப்படதேங்க மேடம். அந்த நகைகள் என்னிடம் தான் இருக்கு.”
“என்ன சொல்றே அரு...உன்னிடம் இருக்கா? சொக்கலிங்கத்திடம் சொல்லிவிட்டாயா? என் மேல் உள்ள திருட்டுப் பட்டமாவது போகும்.”
“மேடம் சொல்ல பயமா இருக்கு...அப்பா அந்த நகைகளை என்னிடம் வந்து கொடுத்தார். சாந்தா உன்னை இப்படி விரட்டி விடுவாள் என்று நான் எதிர்பார்கவே இல்லை. உனக்கு நல்ல புருஷன் கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. கல்யாணம் தான் சீரும் சிறப்புமாக பண்ணமுடியவில்லை, அட்லீஸ்ட் நகைகளையாவது எங்க சீரா வச்சுக்கோ என்று கொடுத்து விட்டுப் போனார். மறுக்காதே...இது என் கடமை. மேலும் நீ என் மகள். சாந்தா உன் அம்மாவா இருந்து கொண்டு இப்படி மத வேறுபாடுகளை பெருசுப் படுத்தி உன்னை விரட்டி விட்டது ரொம்ப அநியாயம். என்ன செய்வது...மத வெறி என்பது எப்போது மாறுமோ தெரியவில்லை...வேண்டாம்னு சொல்லிடாதேன்னு கொடுத்திட்டுப் போனார்...அப்பவே சொல்லி இருக்கணும்...இப்ப சொன்னா பொய் சொல்வதாக நினைப்பார் அண்ணா. என் கணவர் சொல்லிவிடுனு சொல்லி இருக்கார். நம்புவதும் நம்பாததும் பற்றி நாம் கவலைப் படவேண்டியதில்லை என்கிறார். எனக்கும் திருட்டுப் பட்டம் தான் கிடைக்கும். சொல்லிடறேன் மேடம் உங்களை போய் திருடின்னு பட்டம் கட்டிட்டாரே...அந்த பழியை துடைப்பதற்க்காகவாவது நான் சொல்லியே ஆகணும். நான் வரேன் மேடம்...ஒரு மகிழ்ச்சியான விஷயம்...நான் கன்சீவ் ஆகியிருக்கேன்...”
“வாழ்த்துக்கள் அரு...ரொம்ப சந்தோஷம். எங்க இல்லத்திலே கமலாப் பாட்டியின் பேத்தி குழந்தையைப் பெற்று விட்டு இறந்து விட்டாள். குழந்தையின் அப்பா அவளை முன்பே டிவோர்ஸ் பண்ணிவிட்டார். வேறு கல்யாணமும் பண்ணிக்கிட்டார். குழந்தை அதன் பாட்டி தாத்தாவிடம் இருக்கு. வயசான அவங்களாலே பார்த்துக்க முடியலை...அதனாலே நல்ல தம்பதிகளிடம் அக் குழந்தையை தத்துக் கொடுக்கச் சொன்னார்கள். எனக்கு உன் நியாபகம் தான் வந்தது...இனி உனக்கு தேவைப்படாது...”
“மேடம்...அம்மாவின் அன்பு இல்லாமல் பச்சைக் குழந்தை வளர்வது கொடுமை. நானே தத்து எடுத்துக்கறேன் மேடம். அம்மா இருந்தும் இல்லாமல் வளர்ந்த எனக்கு தான் தெரியும் அதன் வலி.”
“தேங்க்ஸ் அரு...” அருந்ததி போனவுடன் மரகதம் நினைத்தாள். அம்மா இருந்தும் இல்லாமல் வளர்ந்தது நீ மட்டும் இல்லை அரு நானும் தான். நாம் இருவரும் ஒரே தாய் வயிற்றுப் பிள்ளைகள் தான். உனக்கு ஒரு அக்கா நான் இருக்கேன்னு தெரியாமலே நீ இருக்கே. அது தான் விதி. நான் முறை தவறி பிறந்த குழந்தை, நீ முறையாக பிறந்த குழந்தை. ஆனால் இருவருக்கும் ஒரே கதி தான். சாந்தாம்மா இருவரையும் புறக்கணித்துவிட்டாள். நீ என்னை மேடம்ன்னு கூப்பிடும் போது இல்லை அக்கான்னு கூப்பிடுன்னு கத்தத் தோன்றும்...ஆனால் சமுதாய கோட்பாடுகள் என் வாயை கட்டிப் போடும்...” விரக்தியுடன் நினைத்தாள் மரகதம். சாந்தா, என்ன அம்மா நீ?....நீ யார் யாரிடமோ அன்பை பொழிந்தாயாமே. யார் வந்து உன்னை கவனித்தது நான் தானே!...சமுதாயம் தெரிந்து கொள்ளாத உறவாய் நான் வளர்ந்தும் கடைசியில் என்னிடம் தானே உரிமை கொண்டாடி கொள்ளி வைக்க சொன்னே....
அருந்ததி கணவனிடம் நகைகள் விவகாரம் பற்றி சொன்னாள். “அரு...முதல்லே அந்த நகைகளை கொண்டு உன் அண்ணனிடம் ஒப்படைத்து விட்டு வா. நமக்கு இல்லாத பணமா? இதை விட இரண்டு மடங்கு வாங்கித் தரேன். வீணா மரகதம் மேடம் மேல் பழி விழ வேண்டாம். அதற்கு நாம் ஒரு காரணமா இருக்க வேண்டாம்.” என்று திட்ட வட்டமாக சொன்னான் அஸ்வின். அருந்ததி சொன்னாள். “அப்பா ஆசையுடன் வந்து எனக்கு சீதனமாக கொடுத்தார். அதனால் தான் இது நாள் வரை அதை ஏற்றுக்கொண்டு அனுபவித்தேன். என்னதான் நீங்க எனக்கு வாங்கித் தருவீர்கள் என்றாலும் அது என் பொறந்த வீட்டு சீதனம். அதான்...”
“சரி..சரி...அந்த செண்டிமெண்ட் எல்லாம் வேண்டாம். நம்மால் இன்னொருவருக்கு திருட்டுப் பட்டம் கிடைக்க வேண்டாம்.” அருந்ததி அதற்கு ஒத்துக் கொண்டாள். நகைகளை அன்றே திருப்பிக் கொடுக்கச் சென்றாள். வீடு பூட்டி இருந்தது. அவளின் பிறந்த வீடு அது. அப்பா இறந்த போது வந்து ஈமைக் காரியங்கள் முடிந்த போது வந்தது தான். பிறகு அங்கு அவள் காலடி எடுத்து வைக்கவில்லை. வீட்டை ஒரு முறை அண்ணாந்து பார்த்தாள். பவள மல்லி மரத்தில் சிவப்புக் காம்புடன் பூக்கள் வெளேர் என்று பூத்திருந்தது. இந்த வீட்டில் இருந்த வரை அவள் தான் அப்பாவிற்கு பூஜைக்கு பூ பறித்து நூலால் தொடுத்துக் கொடுப்பாள். செம்பருத்திப் பூவும் சாமந்தியும் கூட குலுங்கிப் பூத்திருக்கும். அதையும் விளக்கு பூஜைக்கும் சாமி படத்துக்கும் அவளே குளித்து முழுகி மடியுடன் பறித்து பூஜை அறையில் வைப்பாள். அந்த நாட்கள் எவ்வளவு அழகானவை.! மனம் ஆரோக்கியமாக கோவில் மணியின் புனிதம் போல் நிறைந்த அமைதியுடன் இருக்கும். அஸ்வினைக் காதலிப்பதை சொன்னதும் அம்மா அதிர்ச்சி அடைந்தாள். பேசவே மறுத்து விட்டாள். எவ்வளவோ வாதாடிப் பார்த்தாள். இயேசு சிவன் எல்லாம் ஒருவரே. இரண்டு மதக் காரர்களுக்கும் ஒரே சிவப்பு ரத்தம் எல்லா மதத்தினருக்கும் உருவம் ஒரே மாதிரி தானே இருக்கு. இரண்டு கை, இரண்டு கால், இரண்டு கண்கள்...அப்புறம் என்னம்மா? அவர் ரொம்ப நல்லவர்மா...சொல்ல சொல்ல அம்மா தலைகுனிந்து கொண்டாள். ஆனால் கையை வாசல் பக்கம் காட்டினாள். எதுவும் பேசவில்லை. ரெஜிஸ்டர் ஆபிசில் திருமணம் பண்ணிக் கொண்டு வந்த அந்த நாள் அவளுக்கு நியாபகம் வந்தது. அண்ணா அப்பா எல்லாரும் நின்றிருந்தனர். அண்ணா சொக்கலிங்கம் சிங்கப்பூரிலிருந்து வந்திருந்தான். படிப்பு முடிந்ததும் அவன் அங்கு வேலை தேடிக் கொண்டு போய்விட்டான். வீட்டில் ஒட்டுதல் இல்லை. அப்பாவிடம் மட்டும் பேசுவான். அவளிடம் ஒரு சிறு புன்னகை தலை அசைப்பு மட்டும் தான். சாந்தாம்மாவிடம் அதுவும் இல்லை. இப்படிப்பட்ட சூழல் பாதகமாக இருந்த போதும் அருந்ததி அம்மாவை நம்பியே திருமணம் பண்ணிக் கொண்டு வந்தாள். அம்மா அன்று பேசிய பேச்சு அவளுக்கு அதிர்வையும் அழுகையையும் வரவழைத்தது.
“மானம் ரோஷம் இருந்தால் நீ இந்த வாசப்படி மிதிக்காதே. நான் விரும்பவில்லை என்று தெரிந்தும் நீ இப்படி வந்து கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்து நிக்றியே உனக்கு வெட்கமாக இல்லை? உன் வாழ்க்கையை நீயே தீர்மானித்துவிட்டாய். அதன் பின்விளைவுகள் பற்றி நீ புரிந்து கொள்ளவில்லை. என் வாழ்க்கையை மேலும் சிக்கலாகிவிட்டாய். திருப்திதானே. நான் செத்தாலும் நீ இங்கு வரவேண்டாம். என் முகத்திலேயே விழிக்காதே. நான் இதை விளையாட்டுக்காக சொல்லவில்லை. கெட் அவுட்.” அம்மாவின் ரௌத்ரம் கொப்பளித்த முகம் அவள் சொல்வது நிஜம் என்று நிருபித்தது. அப்பாவும் அண்ணனும் எதுவும் சொல்லாமல் வேடிக்கை பார்த்தது அவளுக்கு நெஞ்சில் தீயை அள்ளிக் கொட்டியது போல் இருந்தது. அஸ்வின் சொன்னார் “வா அருந்ததி, இங்கு இருக்கிறவர்களுக்கு மதம் தான் முக்கியம் உறவுகள் அல்ல. அசிங்கப் பட்டது போதும். நான் உனக்கு அம்மாவா அப்பாவா அண்ணனா இருப்பேன். நம்பி வந்த உன்னைக் கைவிட மாட்டேன்.” வீட்டிற்கு வந்து வெகு நேரம் அழுது கொண்டிருந்தாள் அருந்ததி. காலம் செல்லச் செல்ல அவள் அந்த வலியை கணவனின் அதித அன்பால் மறந்தாள். அருந்ததி இப்பொழுது பூட்டிய வீட்டை பார்த்துக் கொண்டு நின்றாள். பூட்டி இருப்பது வீடு மட்டும் தானா? அதில் உள்ள மனிதர்களின் மனமும் தான். அதை திறக்கும் சாவி தன்னிடம் இல்லை என்று மட்டும் புரிந்தது. என்ன செய்வது என்று அவள் யோசித்தபோது, நாராயணன் வந்தார். “என்னம்மா...வீடு பூட்டி இருக்கேன்னு பார்க்றையா...உன் அண்ணன் குடம்பத்தோட திருப்பதி போயிருக்கார். என் கிட்ட சாவி இருக்கு. உள்ள வா...” அருந்ததி நினைத்தாள்--அந்த வீட்டு சாவி யார் யாரிடமோ இருக்கு என்னிடம் மட்டும் இல்லை. வீட்டை மேற்ப்பார்வை இடுபவன் கூட அவளை விட உரிமை உடையவனாய் இருந்தான். உறவுகளின் விரிசல் மற்றவர்களுக்கு கொண்டாட்டம் தான். அப்புறம் வரலாமா என்று யோசித்தாள். வேண்டாம் இன்னொரு முறை தைரியம் வரும் என்று தோன்றவில்லை. இப்பவே முடித்துக் கொண்டு போய்விடுவது நல்லது. வீட்டின் உள்ளே நுழைந்தாள். நாராயாணன், அண்ணாவின் நம்பகத்திற்குரிய நபர். “சொல்லும்மா...எப்படி இருக்கே? என்ன விஷயமா வந்தே?” அருந்ததி தன் கைப் பையில் இருந்த பேனாவை எடுத்தாள். எழுதினாள். அன்புள்ள அண்ணா. வணக்கம். உங்கள் அம்மாவிற்கு சொந்தமான நகைகளை திருப்பிக் கொடுக்கிறேன். இதை என் கல்யானத்திற்க்கு சீராக வைத்துக் கொள்ளச் சொல்லி அப்பாதான் கொண்டு வந்து கொடுத்தார். உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைத்தேன். மரகதம் மேடமிடம் இருப்பதாக நீங்க சந்தேகப்பட்டது தெரிந்தது. என்னிடம் தான் உள்ளது. நாராயணன் அங்கிளிடம் கொடுக்கிறேன். பெற்றுக் கொள்ளவும். அண்ணி மற்றும் குழந்தைகளைக் கேட்டதாக சொல்லவும் .அன்புடன் அருந்ததி. நகைப் பெட்டியில் இந்தக் கடிதத்தை வைத்து மூடினாள்.
“அங்கிள் இதை அண்ணா வந்தவுடன் கொடுத்து விடுங்கள்.” கொடுத்துவிட்டு ஏதோ பாரம் குறைந்தது [போல் உணர்ந்து தெருவில் நிம்மதியாக நடந்தாள் அருந்ததி.
மரகதத்தைப் பார்க்க ஒரு இளைஞன் வந்திருந்தான். பெயர் சக்திவேலன் என்றான்.
“சொல்லுப்பா...என்ன வேணும்? யாரையாவது சேர்க்கணுமா?”
“இல்ல மேடம். நான் கமலாப் பாட்டியின் பேத்தியின் கணவன்.”
“ஒ...நீ தானா அது? உன் குழந்தை தாயில்லாமல் தவிக்குது. உன் மனைவியை டிவோர்ஸ் செய்திட்டே. அவளும் பிரசவத்தில் இறந்து விட்டாள். அப்ப உன் குழந்தையின் கதி? வயதான உன் மாமியார் மாமனார்...ஸாரி முன்னாள் மாமியார் மாமனார் எப்படி பார்த்துக்க முடியும்? இருவருக்கும் உடல் நிலை சரியில்லை. இந்த லட்சணத்தில் எப்படி ஒரு பச்சைக் குழந்தையை பராமரிக்க முடியும்? அதான் தத்துக் கொடுக்க ஏற்பாடு பண்ணி இருக்கேன்.பாட்டி கேட்டபடி.. நீ என்ன சொல்றே? அதுதான் உன்னை வரச் சொன்னேன்...சொல்லுப்பா...உனக்கு சம்மதமா?”
“இல்லை மேடம்..தத்துக் கொடுக்க வேண்டாம். நானே வளர்க்கிறேன். அது என் குழந்தை. சொல்லிவிட்டுப் போகத்தான் வந்தேன்.” மரகதம் அவனை நிமிர்ந்து பார்த்தாள். இவன் நிஜமாகத்தான் சொல்கிறானா?
“ம்ம்....உனக்கு வேறு கல்யாணம் ஆகிவிட்டது இல்லையா? உன் பிள்ளையை வளர்க்க அந்தப் பெண்ணின் சம்மதம் கேட்டியா?”
“மேடம்...அவ தான் என்னை அனுப்பி வைத்தது. அந்தக் குழந்தை தாயும் இல்லாமல் தந்தையும் இல்லாமல் கஷ்டப்பட வேண்டாம். குழந்தைக்கு நானே அம்மாவா இருந்து வளர்க்கிறேன் என்றாள்...அதான்...”
“சந்தோசம்...அப்பனுக்கு இல்லாத அக்கறை யாரோ ஒரு பெண்ணுக்கு இருக்கிறதே...தாய்மை இன்னும் வற்றிவிடவில்லை. சரிப்பா..உரிய இடத்தில் குழந்தை சேர்ந்தால் அதை விட மகிழ்ச்சியான விஷயம் வேறு என்னவாக இருக்க முடியும்? உடனே போய் குழந்தையை அதன் தாத்தா பாட்டியிடமிருந்து வாங்கி கொள்.”
“சரிங்க மேடம்...நான் அப்படியே செய்கிறேன்.”
அவன் போனதும் மரகதம் யோசித்தாள். சாந்தாம்மா ஏன் இப்படி பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள முடியாமல் பெற்ற இரு குழந்தைகளுக்குமே தாய்ப் பாசத்தைக் காட்டாமல் இருந்தாள்.? அதற்கு ஏதாவது காரணம் இருக்குமோ? சாந்தாம்மா இறக்கும் தருவாயில் கூட ஒன்றும் அது பற்றி எந்த விளக்கமும் தரவில்லையே. “நீ எல்லாம் ஒரு அம்மாவா? என்னைதான் பட்டினி போட்டாய்? அருந்ததி என்ன பாவம் செய்தாள்? அவளுக்கு எதற்கு அவ்வளவு பெரிய தண்டனை கொடுத்தாய்? நான் தான் இல்லீகல் சைல்ட்...அவ முறைப்படி கல்யாணத்தில் பிறந்தவள் தானே? நீ இரக்கமற்றவளா? அரக்கியா? நீ மனுஷி தானா?..”
“என்னை எதுவும் கேட்காதே. என் மனசை நோகடிக்காதே. எதுவும் சொல்லும் நிலைமையில் நான் இல்லை.” என்று சொன்னபோது “ரொம்ப சாமர்த்தியமா தப்பிக்கப் பார்கிறே இல்லை? மதம் உன்னிடம் மதம் பிடித்து ஆடுகிறது. உனக்கு பாசத்தை விட ஜாதி மதம் தான் பெருசாப் போயிடுச்சில்ல..” மரகதம் குற்றம் சாட்டினாள்.
கண்ணீர் தான் பதிலாகக் கிடைத்தது. நீலிக் கண்ணீர் என்று கோபப்பட்டாள் அப்பொழுது. இப்பொழுது யோசிக்கிறாள் ஏதாவது சொல்ல முடியாத காரணமாக இருந்திருக்குமோ? சாந்தாம்மாவிடம் கடுமையாக நடந்து கொண்டோமோ என்று மனம் பரிதவித்தது மரகதத்திற்கு.
ஜான் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கிருந்து போன் செய்தார்.
“மரகதம்...உன் வாழ்வில் ஒரு புதிய கேரக்டர் வரப் போகிறார். பெயர் பிரபு. வயது- உன்னை விட இரண்டு வயது அதிகம். கப்பலில் உயர் அதிகாரி. ரொம்ப ஹான்ட்சம். ஸ்மார்ட்...நல்ல சம்பளம்...”மரகதம் வியப்பு மேலிட கூறினாள். “சார்...இதை ஏன் என் கிட்ட சொல்றீங்க? யாராவது பொண்ணு வீட்டுக்காரங்க கிட்ட போய் சொல்லுங்க. “ ஜான் சிரித்தார். “என்னை அப்பான்னு தான் கூப்பிட மாட்டேன்னு பிடிவாதமா இருக்கே. குறைந்த பட்சம் உன் வெல்விஷர்னு ஏத்துக்கமாட்டியா?”
“எனக்கு யாரும் வெல்விஷரா இருக்க வேண்டாம். சின்னவயதிலேயே நான் புரிந்து கொண்டது எனக்கு நானே தான் வெல்விஷர். யாரையும் நான் சார்ந்து வாழப் போறதில்லை. லீவ் மீ அலோன்.”
“மனிச்சுக்கோ மரகதம். இனி நான் தலையிடாம இருக்க முடியாது. உனக்கு முப்பத்திரண்டு வயது ஆகிவிட்டது. நீ டீன் ஏஜ் பெண் இல்லை. நான் இதற்கு முன் எத்தனையோ மாப்பிள்ளைகளைப் பார்த்து அனுப்பினேன். நிர்தாட்சண்யமா மறுத்திட்டே. முயற்சி கூட பண்ணலை. இனி அப்படி முடியாது மகளே. ப்ளீஸ்...பிரபு நல்லவன். அவன் என் கிளையன்ட். அவனை பத்து வருஷமாத் தெரியும். உனக்கு ஏற்ற ஜோடி....” மரகதம் பதில் சொல்லாமல் யோசித்தாள். பெற்ற குழந்தையை அம்போ என்று விட்டு விட்டு வேறு கல்யாணம் பண்ணிக் கொன்ட சக்தி வேலன் அக் குழந்தையின் தாய் இறந்து தன் குழந்தை அநாதை ஆகிவிட்ட போதும் தன் குழந்தையை ஏற்றுக் கொள்கிறேன் என்று வரவில்லை. புது மனைவி சொன்ன பின் தான் ஏற்றுக்கொள்கிறேன் என்று வந்தான். ஆனால் ஜான் சமூகத்தாலும் பெற்றவர்களின் கட்டாயத்தாலும் ஷாந்தாம்மாவையும் குழந்தையாகிய என்னையும் பிரிய நேரிட்டாலும் இந்த நிமிடம் வரை அவளை, அவள் உணர்வுகளை மதித்து உள்ளங்கையில் தாங்கி வைத்திருக்கார். அதற்கு அவளிடமிருந்து அவர் பெற்றது ஏச்சும் பேச்சும் தான். முதல் முறையாக அவள் நெகிழ்ந்தாள். “சரி வரச் சொல்லுங்கள்...ஆனால் நான் மறுத்தால் வற்புறுத்தக் கூடாது.” ஜான் மெதுவாக விசில் அடித்தார். “வாவ்...ரொம்ப சந்தோசமா இருக்கு. தேங்க்ஸ் மரகதம். ஒரு முறை அப்பான்னு கூப்பிடேன்...” கெஞ்சினார்.
‘பாவமேன்னு ஒத்துக்கிட்டேன். அதற்காக நான் உங்களை மன்னித்து விட்டதாக எண்ண வேண்டாம். பகிரங்கமாக உங்கள் மகள் என்று ஒப்புக்கொள்ளவேண்டும். ரகசிய உறவுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை.” மரகதம் தொடர்பை துண்டித்தாள். முத்து அறையில் நுழைந்தாள். “அம்மா உங்களுக்கு ஒண்ணு கொண்டு வந்திருக்கேன்” என்றாள். ஈஸ்வரியும் உடன் சிரித்தபடி நின்றாள். மரகதம் உதட்டில் சிரிப்பு விளையாடியது.
“அப்படியா...என்ன அது? திரட்டுப் பாலா? இல்லை நம் தோட்டத்தில் விளைந்த மாதுளம் பழமா? கொய்யாவா? இளநீரா?” என்று மரகதம் தலையை சாய்த்தபடி குறும்புடன் கேட்டாள். இல்லை என்று இருவரும் தலை அசைத்தனர். “உங்களால் யூகிக்கவே முடியாது.”
“சவாலா? கண்டுபிடிக்கிறேன். அப்ப என்ன தருவீங்க?”
“ஒரு மாலை வாங்கி வருவோம்.” புதிர் போடுகிறார்களே. “நீங்களே சொல்லுங்கள்...” என்று பின் வாங்கினாள் மரகதம். “இன்று மதர்ஸ் டே...எங்கம்மாவுக்கு ஏத்த பரிசோட வந்திருக்கோம்.” என்று ஈஸ்வரி கை தட்டினாள்.
“அய்யோ...போதும் சஸ்பென்ஸ். என்ன கிப்ட்?”
“இதோ...காலத்துக்கும் உங்களுக்கு எல்லாவற்றையும் அள்ளித் தரப் போகும் அற்புத பரிசு....வாங்க சார்...” இருவரும் குதிக்காத குறையாக யாரை வரவேற்கிறார்கள் என்று மரகதம் வியப்புடன் பார்த்தாள். உள்ளே நுழைந்த பிரபு அட்டகாசமான சிரிப்புடன் “வணக்கம் பனிவீடு தலைவி அவர்களே..” என்று கைகூப்பியபடி வந்தான். ஒரு நிமிஷம் தடுமாறிப் போனாள் மரகதம். “அம்மா பிடிச்சிருருக்கா கிப்ஃட்?” கல்யாண மாலை வாங்கி வாரோம்..” என்று கெக் கெக் என்று சிரித்தபடி வெளியே ஓடினர். மரகதம் பேச்சற்று நின்றாள். இப்பதானே ஜான் போன் பண்ணினார்...அதற்குள் எதிரே வந்து நிற்கிறான்...அவள் செல் சிணுங்கிற்று. எடுத்தாள்.
‘நான் தான் வெல்விஷர் பேசறேன்...”
“என்ன இது யோசிக்க அவகாசம் வேண்டாமா? இப்படி திடுதிப்பென்று வந்து குதித்தால்...என்ன நினைப்பது?”
“அவன் அங்கு வந்த பின் தான் நானே போன் செய்தேன் மரகதம். ஈஸ்வரி முத்து இருவருக்கும் முதலிலேயே தகவல் சொல்லிட்டேன்...எப்படி?”
“இதில் பெருமை வேறேயா? கார்னர் பண்றீங்க.?”
“உன் பாடு அவன் பாடு...எப்படி வேணா சமாளிச்சிக்கோ..” ஜான் போனை வைத்துவிட்டார். மரகதம் திரு திரு என்று விழித்தாள். சதி பண்ணிவிட்டாரே...என்று சபித்தபடி மெல்ல உக்காருங்கள்...என்றாள்.
“என்ன மனசுக்குள்ளே திட்டிட்டு இருக்கேங்களா? ஒப்பனா திட்டுங்க.” யார் இவன்? சீதை முன் தொப்பென்று வந்து குதித்த அனுமார் மாதிரி...உரிமையுடன் பேசறான்...சுத்த கிராக் போலிருக்கு.
“மிஸ்டர்....ஜான் சாரை அவமதிக்கக் கூடாதுன்னு தான் சம்மதித்தேன்...இப்படி...’”
“அனுமார் மாதிரி வந்து குதிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லையா?” அட அவள் அப்படி நினைத்தது அவனுக்கு எப்படி தெரிந்ததோ? “ப்ளீஸ்..தப்பா நினைக்காதேங்க. எனக்கு கல்யாணத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை. எனக்கு என் இல்லம் முக்கியம். இதை விட்டு நான் வர மாட்டேன். என்னோடு வாழ்வது கஷ்டம். மடியில் பூனையை கட்டிக் கொண்டது மாதிரி நியூசன்ஸாய் இருக்கும். உங்க பர்சனாலிட்டிக்கு கியூவில் நிற்கும் பெண்கள் இருப்பார்கள். அவர்களில் ஒருத்தியை செலக்ட் பண்ணிக்கோங்க. என்னை விட்ருங்க.”
“மிஸ் மரகதம்...முப்பத்தெட்டு வயது அரைக் கிழவனை கட்டிக்க யார் வருவா? என் வாழ்க்கை கப்பலோடு போயிட்டிருக்கு நாடாறு மாசம் காடாறு மாசம் என்கிற கதையாக கப்பல் பிரயாணம்...தரை வாழ்க்கை என்று மாறி மாறி இருக்க வேண்டிய சூழ்நிலை. என்னைக் கல்யாணம் பண்ணும் மனைவி தரை மேல் நின்று வழி மேல் விழி வைத்து “சிட்டுக்குருவி சிட்டுக்குருவி செய்தி தெரியுமா? என்னை விட்டுப் பிரிந்து போன கணவன் வீடு திரும்பலை.” என்று டவுன் பஸ் கதாநாயகி மாதிரி பாடிட்டா இருக்கமுடியும்? “வழிய வழிய பார்த்து பார்த்து கண்ணு நோவுது.” என்று பாடுவாளா என்ன? மறு வருஷமே டிவோர்ஸ் நோட்டிஸ் தேடி வரும்..” மரகதம் அவன் சொன்ன விதத்தைப் பார்த்து சிரிப்பை அடக்கமுடியாமல் வாய் விட்டு சத்தமாக சிரித்தாள். அவள் இப்படி சிரித்ததே இல்லை. மனசெல்லாம் விரிந்து பூ பூத்தது போல் குலுங்கிற்று.
“என் வாழ்க்கை உங்களுக்கு சிரிப்பா இருக்காக்கும். நீங்க சிரிக்கும் போது சின்னப் பெண் மாதிரி இருக்கீங்க.”
“ஸாரி...என்னையும் அறியாமே சிரிச்சிட்டேன். உங்க ஜோடிய இவ்வளவு நாள் தேடாம இருந்தீங்களா?”
முத்து தட்டில் பதிர் பேணியும் பக்கோடாவும் கொண்டு வந்து வைத்தாள். “அம்மா இவ்வளவு சந்தோஷமா சிரித்து இப்ப தான்யா பார்க்கறேன். அம்மாவை விட்ராதேங்க..” என்று விட்டு ஓடிவிட்டாள். ஈஸ்வரி சூடான காப்பியோடு வந்து “அம்மா...உங்களை தூக்கிட்டு போயிடப் போறார்...எங்களுக்கும் நீங்க வேணும்.”
“எங்கே.. உங்க அம்மாவை தூக்கிட்டுப் போறது? ரொம்ப வெய்யிட்டான பார்ட்டி...நான் தான் இங்கு செட்டில் ஆகணும்...ஒ.கேயான்னு கேட்டிட்டிருக்கேன்.” என்று பிரபு பரிகாசம் செய்ய, ஈஸ்வரி “ரொம்ப சந்தோசம்யா”
என்று மகிழ்ச்சியுடன் கூறிவிட்டுச் சென்றாள். “மிஸ் மரகதம்...நான் வரேன். நீங்க யோசித்துப்பாருங்கள்.” என்ற படி எழுந்தான். ஸ்வீட் தட்டும் ,பகோடா தட்டும் காலியாகி இருந்தன. “என்ன யோசிக்கணும்?” பிரபு சிரித்தான். “என் ப்ரோபோசல் பற்றி .”
“நீங்க எங்கே ப்ரோபோஸ் பண்ணீங்க?”
“ஒ.கே ப்ரோபோஸ் பண்றேன்.” அவன் ஒற்றைக் காலை மடக்கி மண்டியிட்டு “மரகதம் வில் யு மேரி மீ .”
என்று கேட்டதும்....மரகதம் வெட்கப்பட்டாள். வெட்கம் அவளுக்கு புது உணர்வு. முகம் ரோஸ் நிறத்தில் புது ரோஜாவை நினைவுபடுத்திற்று. “ஐயோ..விளையாட்டுக்குச் சொன்னேன்...” என்று கைகளால் வாய் பொத்தி மேலும் வெட்கப்பட்டாள். அவன் எழுந்தான். “அவசரமில்லை...நிதானமாக சிந்தியுங்கள். நான் உங்களுக்கு ஏற்றவனா ? உங்க முத்து, ஈஸ்வரி என்று யார் யாரிடம் கேட்கணுமோ கேளுங்கள். குறிப்பா உங்க மனசை நேர்மையா கேட்டுப் பாருங்கள் .” என்று சொல்லி விடை பெற்றான்.
அன்றிரவு மரகதம் புது மரகதமாக படுக்கப் போனாள். அவளை அவளுக்கே புரியவில்லை. இத்தகைய மென்மையான உணர்வுகள் தன்னுள் எழும் என்று அவள் நினைத்துக் கூட பார்த்ததில்லை. காதல் வயப்படும் ஆரம்ப நிலையில் ஒவ்வொரு பெண்ணின் உள்ளத்திலும் எழும் மலர்ச்சி தான் அவளுக்கும் ஏற்பட்டது. எல்லாம் புதுமையாகத் தெரிந்தது. புதிதான காற்று...புதிதான நிலா...புதுப் பொலிவுடன் மலர்கள்...என்ன ஆச்சு உனக்கு மரகதம்? சோர்வும் ஒரு மூலலையில் படர்ந்தது. இது நியாயமா? நீ எப்படி இவ்வளவு பெரிய சுயநல வாதியாக மாறினாய்? உன்னை நம்பி ஐம்பது பேர் இருப்பதை மறந்து போனாயா? இந்த சின்ன உணர்வின் வெளுச்சத்துக்காக பலரின் வாழ்வை இருளாக்கப் போறியா? இல்லை இல்லை...எனக்கு பிரபு வேண்டாம். சரிபட்டு வராது...யார் சொன்னது? அவர் புரிந்து கொள்ளும் மனிதராகத் தானே தோன்றுகிறது. இது நாள் வரை வீசி எறியப்பட்ட உறவாகத்தானே மக்கி இருந்தாய். செம்புலப் பெயல் நீர் போல் ஆதரவாக விழும் நீர் துளிகளை ஏன் வேண்டாம் என்று மறுக்கிறாய்? பெண்ணின் மனம் மலர்கிற போது அது பூரணத்துவம் அடைகிறது. வானம் வெறுமனே கிடக்கிறது....ஆனால் அதை அலங்கரிக்க நட்சத்திரங்கள்...சூரியன் சந்திரன், ஊர்தி போன்ற மேகங்கள்...வானவில்...அழகான இருட்டு...ஒளி மிகுந்த பகல் என்று வருகிறது. வானத்திற்கு போதி மர அந்தஸ்த்தைக் பெற்றுக் கொடுக்கிறது. மனமும் அப்படித்தான். வெறுமனே கிடக்கிறது. பலவித உணர்வுகள் வந்து மோதும் போது தான் அது உயிர்ப்படைகிறது. இல்லாவிட்டால் மனிதன் எலும்பு தோல் போர்த்திய ஜடம்தான். தன் மனதுக்கு இது வரை அவள் வானவில் அலங்காரத்தை கொடுக்கவில்லை. இன்று அந்த மனம் அவளைக் கேளாமலேயே வானவில்லை இறக்கி விட்டுப் போய்விட்டது. இந்த புதிய மலர்ச்சியை வைத்துக் கொண்டு அவள் லேசாவாளா? இல்லை பாரமாக உணர்வாளா?...மரகதம் தூங்கிய போது வானில் வெள்ளி முளைத்திருந்தது. பூபாளம் பாடியது...தூங்காத சோர்வும் கூட அழகாய் இருந்தது. அவள் மதர் தெரேசா இல்லை என்று உணர்ந்தாள். அவளுக்கு காதல் தேவையாக இருந்திருக்கிறது. அதே சமயம் அவள் ஒரு பண்பட்ட சேவை மனதையும் கொண்டிருக்கிறாள். அதை அவள் தொலைக்க விரும்பவில்லை. விடிந்ததும் அவள் ஓடிப்போய் கண்ணாடி பார்த்தாள். இன்னும் நரை தொடாத கேசம். இளமை வீச்சு குறையாத சருமம்...ஒடிசலான தேகம்...அம்மா சாந்தா கொடுத்த நிறம். புற அழகு பெரிய பொருட்டில்லை தான். ஆனால் இன்று தான், தான் அழகாய் இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. சிலருக்கு காதல் அழகு தரும்...அவளுக்கு தந்தது. ஒரு சிலமணி நேரம் பார்த்த ஒருவனிடம் இத்தனை ஈர்ப்பு என்பதன் அதிசயம் தான் வாழ்க்கை.. சடாரென்று அவளுக்கு அம்மாவின் காதலும் அது மறுக்கப்பட்டதன் வலியும் புரிந்தது. புது உறவுடன் வாழவும் முடியாமல் பிரியவும் முடியாமல்...எவ்வளவு போராட்டமான வாழ்க்கையாக அது இருந்திருக்கும். அவளை புரிந்து கொள்ள தவறி விட்டது உரைத்தது. மனம் கசந்து போனதால் அவளால் பிற உறவுகளில் கலந்து மலர முடியாமல் போய்விட்டிருக்குமோ! ஸாரி அம்மா உன்னை நான் கடைசி காலத்தில் பார்த்துக் கொண்டது என் பெருந்தன்மை என்று பீற்றிக் கொண்டேன். உன் அழுகை தெரியாமல் உன்னை மேலும் நோகடித்துவிட்டேன். எனக்கு என் பெருந்துன்பமே பெரிய கோடாகத் தெரிந்தது. உன் வலி சிறிய கோடாக போயிற்று. ஜான் சாரிடம் அம்மா பற்றி கேட்கவேண்டும், என்று தீர்மானித்துக் கொண்டாள்.
அருந்ததி நாளுக்கு நாள் தாய்மைப் பூரிப்புடன் விகசித்தாள். மேடிட்ட வயிறு....தளர்ந்த நடை...புளிப்புச் சுவை வேண்டும் நாக்கு...எந்த நேரமும் ஒரு குழந்தையை உருவாக்கி மனக்கண்ணால் ரசிக்கும் மனசு...மொத்தத்தில் அவள் பூரணமாக வாழ்ந்து கொண்டிருந்தாள். மரகதத்திற்க்கு போன் செய்தாள்.
“எப்படி இருக்கே அரு? என்ன சொல்றான் பையன்? “
“நல்லா இருக்கேன் மேடம்...வந்து அந்தக் குழந்தை பற்றி...தத்துக் கொடுக்க அந்த தாத்தா பாட்டி சம்மதிச்சிட்டாங்களா? நான் வந்து...”
“வெய்ட்...வெய்ட்....நானே சொல்லனும்னு நினைத்தேன்...குழந்தையோட அப்பா நல்ல புத்தி வந்து பிள்ளையை எடுத்துக் கொண்டு போய்விட்டார். இப்போ குழந்தைக்கு ஒரு அம்மாவும் கிடைச்சாச்சு...”
அருந்ததி பக்கென்று உணர்ந்தாள்...தன் குழந்தை முதலில் பிறந்தது போல் இறந்துவிடுமோ என்ற பயம் அவள் ஆழ்மனதில் பதிந்து போயிருந்ததால்...அந்த ஏமாற்றம் தாக்காமல் இருக்க இந்தக் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தாள்....இப்படி ஆகிவிட்டதே....
“என்ன அருந்ததி...பேச்சைக் காணும்..”
“சந்தோசம் மேடம். அந்தக் குழந்தையாவது அதிர்ஷ்டம் செய்திருக்கிறதே! என் போல் அநாதை ஆகாமல் பாதுகாப்பாக போய் சேர்ந்ததே..வச்சிடறேன் மேடம்..” பட்டென்று போன் வைக்கப் பட்டது புரிந்தது. சாந்தாம்மா மேல், வடிந்திருந்த கோபம் இப்பொழுது மீண்டும் துளிர்த்தது மரகதத்திற்கு.
நதி ஓடும்

நதி ஓடும்...