அத்தியாயம்—13 நீரோட்டம்
அன்று இரவு மரகத மேரி தூங்க வெகு நேரமாகிவிட்டது. துக்கத்திலும் தூக்கம் வராது. சந்தோஷத்திலும் தூக்கம் வராது. கை நிறைய பொம்மைகள் கிடைத்த சிறு குழந்தை போல் மனம் நிறைய கிடைத்த உறவுகளின் சந்தோஷத்தை வைத்து ஒரு உலகத்தையே படைத்து விடலாம் போல் பட்டது. மறு நாள் அவள் அருந்ததியை சந்திக்கச் சென்றாள். அங்கு ஜானும் உட்கார்ந்திருந்தார்.
“அப்பா...நீங்க எப்ப வந்தீங்க?” என்று கூவினாள். அவள் முகம் பூரா பரந்திருந்த சந்தோஷத்தை போல் அவர் முகமும் பூரித்து விட்டது. சார் சார் என்று அழைத்து தன்னைக் கொன்ற மகள் இன்று வாய் நிறைய மனம் நிறைய அப்பா என்று அழைத்ததை அவர் அனுபவித்து கனிந்தார். “ வந்து அரை மணி ஆச்சு...”
“அருந்ததிகிட்ட ப்ளேட் போட ஆரம்பிச்சாச்சா?”
“அக்கா....உன் அறுப்பை விட தேவலை. எல்லாம் குழந்தை வளர்ப்பு...பாதுகாப்பு பத்தி தான். எல்லாம் தெரிஞ்ச மாதிரி...பலாப்பழம் சாப்டாதே....குழந்தைக்கு ஆகாது...அது இதுன்னு உன்னை மாதிரி தான் பக்கா ப்ளேட்...” என்று சந்தோஷ அலுப்புடன் சொன்னாள் அருந்ததி. அவள் முகம் தாய்மை களையுடன் அற்புதமாக இருந்தது. நிலவின் குளுமையும் சூரியனின் பிரகாசமும் ஒன்றாக அவளிடம் அடைக்கலம் ஆகி இருந்த விந்தையைப் பார்த்தாள் மரகதம். “வாங்க வாங்க...” என்று வரவேற்ற அஸ்வின் “டிபன் சாப்பிடுங்க...” என்றார் .
“இல்ல பாங்கிற்கு கிளம்பணும்....காபி மட்டும் போதும்.” என்றபடி உட்கார்ந்தாள்.
“உங்க தங்கச்சியை கொஞ்சம் கருணை காட்டச் சொல்லுங்க. மாங்கா...மாங்கான்னு உயிரை எடுக்கிறா. தோட்டத்திலே எல்லா மரமும் இருக்கு...மாமரம் வைக்காமே போனதுக்கு நல்ல தண்டனை...மார்க்கெட் போயே என் ஆயுள் முடிந்துவிடும் போலிருக்கு...” என்று சீண்டினார். எல்லோர் மனமும் உல்லாசமாக இருந்தது. வசந்தி மேம் இவர்களிடமும் பேசி இருக்கிறார் என்று தெரிந்து கொண்டாள். அஸ்வினும் ஜானும் விடை பெற்று சென்ற பின், மரகதமும் கிளம்பினாள். “அக்கா...கொஞ்சம் லேட்டா போனா என்ன? இருக்கா உன் கூட பேசணும்...” என்று கெஞ்சினாள் அருந்ததி. சரி என்று அறை மணி ஒதுக்கினாள் மரகதம். “அக்கா வாயேன் சர்ச்சுக்குப் போகலாம். என் கனவு நிறைவேறினா மேரி மாதாவிடம் நன்றி சொல்லணும்னு வேண்டிக்கிட்டேன். அதே போல் இஷ்ட தெய்வமான முருகனிடமும் சன்னதிக்கு வந்து பாலபிஷேகம் செய்றதா வேண்டிக்கிட்டேன்.” அவர்கள் அருகில் இருந்த தேவாலயத்திற்கு சென்று வணங்கி விட்டு வந்தனர்.
“முருகக் கடவுளிடம் நீ வேண்டியது சரிதான்...அங்கு பாலபிஷேகம் செய்வதற்கு பதில் எங்க இல்லத்திற்கு அந்தப் பாலை தானமா கொடுத்தா உனக்கு அதை விட பெரிய புண்ணியம் கிட்டும். வயதானவர்களை கவனிப்பது எவ்வளவு பெரிய புண்ணியம் தெரியுமா?” அருந்ததி அப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டாள்.
லேசாக மழை தூர ஆரம்பித்து விட்டது. “அக்னி காடு மாதிரி எரிந்து கொண்டிருந்த மனசு இப்ப இந்த மழை மாதிரி குளிர்ச்சியாகி விட்டது. உனக்கு தெரியுமா அக்கா...அண்ணா வந்து பிரசவத்திற்கு என்னை தன் வீட்டிற்கு அழைத்திருக்கிறார். எவ்வளவு சந்தோஷமாக இருக்கு தெரியுமா? அலமேலுவின் தூண்டுதலால் எங்களுக்குள் ஏற்பட்ட கசப்பு மறைந்து விட்டது. எல்லாம் வசந்தி அம்மாவால் தான்.” என்று நெகிழ்ந்தாள்.
“நானே உன்னை பிரசவத்திற்கு என் வீட்டுக்கு அழைக்கலாம் என்று இருந்தேன்...நல்லது உனக்கு உரிமை இருக்கும் இடத்தில் போய் சேருவது பெஸ்ட்.”
“நான் எங்கும் போக முடியாது. என் மாமியார் உதவிக்கு வருவதாக சொல்லி இருக்காங்க. அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம்...இத்தனை வருடம் கழித்து நான் மறுபடியும் உண்டாகி இருப்பதில் ஏகப்பட்ட பெருமை...எனக்கு இப்ப தான் வாழ்க்கை பூமழை பொழிகிறது. அதற்கு காரணம் வசந்தி ஆன்ட்டி தான். போன் பண்ணி நன்றி சொன்னதுக்கு அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா? உதிரிப் பூக்களாய் இருந்த உங்களை நாராக இருந்து கட்டி வச்சேன். எல்லாம் கடவுள் செயல். இந்த நாரும் பூவோடு சேர்ந்து மணக்கிறது. ரொம்ப சந்தோஷம்மா...ஷாந்தா இருக்கும் போது என்னால் முடியாதது இப்பவாவது முடிந்ததேன்னு மகிழ்ச்சியா இருக்கு. என் ஆசீர்வாதமும் கடவுளின் ஆசீர்வாதமும் உங்களுக்கு என்றும் உண்டு....அப்படின்னு சொன்னாங்க. எவ்வளவு பெருந்தன்மை இல்லையா?”
“உண்மைதான்...சேர்த்து வைக்க ஒரு மனசு வேணும் அருந்ததி....அது அவங்க கிட்ட இருக்கு. உன் பிரசவத்திற்கு முன் என் கல்யாணம் நடக்கணும். பிரபு ஒரு மாசம் இருப்பார்...பிறகு கடல் வழி கிளம்பி விடுவார். அவங்க அப்பா அம்மா ஒரு தேதி குறிச்சு சொல்றதா இருக்காங்க...நீயும் அஸ்வினும் கண்டிப்பா ஒரு வாரம் முந்தியே வந்திடணும்...சரியா?”
“கண்டிப்பா...” ஒருவரை ஒருவர் அணைத்து விடை பெற்றனர்.
முத்து மரகதத்தின் கல்யாணப் பத்திரிகையைப் பார்த்து பூரித்துப் போனாள். “பத்திரிக்கையை கிராண்ட
அடிக்கணும்னு மரகத அம்மாவோட பாங்க் நண்பர்கள் சொன்னாங்களாம். அம்மாதான் வேண்டாம்முன்னு சொல்லிட்டாங்க. சம்பிரதாயப்படி ரோஸ் மஞ்சள் கலரில் இருந்தாப் போதுமுன்னு சொல்லிட்டாங்க.” என்றாள் தங்கப்பனிடம். தங்கப்பன் மெச்சினான். “எந்த ஆடம்பரமும் இல்லாமல் கல்யாணத்தை எளிமையா பனி வீட்டிலேயே செய்யப் போறாங்க போலிருக்கு. நல்ல விஷயம் தான்.”
“ஆமா மாமா...அதன் பின்னர் சர்ச்சுக்கும் கோவிலுக்கும் போவாங்க போல. மதம் ஒரு வேற்றுமையை உண்டு பண்ணாமல் பார்த்துக்றாங்க பிரபு ஐயா...எனக்கு அழகான பட்டுப் புடவை எடுத்திருக்காங்க. நான் பட்டுப் புடவையே கட்டியதில்லை....முதல் முதல் கட்டப் போறேன்...”
“காட்டன் புடவை கூட உனக்கு அழகு தான்....ஆமா நீ குழந்தை உண்டாகி இருப்பதை அம்மாவிடம் சொன்னியா?”
“சொல்லலை....நீங்களே சொல்லுங்க. எனக்கு வெக்கமா இருக்கு ...”
“அய்யே...வெட்கத்தைப் பாரு...வா வா கோவிலுக்குப் போலாம்...எல்லாம் நல்ல படியா நடக்க கடவுள் அனுக்கிரகம் வேணுமே...” குடும்பத்துடன் கோவிலுக்குப் புறப்பட்டுப் போனார்கள். அங்கு சந்தானமும் விமலாவும் வந்திருந்தனர். “வணக்கம் அம்மா அய்யா...எப்படி இருக்கீங்க?”
“மரகதம்மா கல்யாணத்துக்கு நீங்க வருவீங்க தானே?”
“பருப்பில்லா கல்யாணமா....மரகதம், சொக்கலிங்கம் அவன் மனைவி குழந்தைகள்...அப்புறம் அருந்ததியும் அவள் கணவரும் வந்து நேரிலே அழைச்சிட்டுப் போய் இருக்காங்களே. வராம இருப்போமா? எல்லாரும் மனசு உவந்து ஒன்று சேர்ந்து நடத்தற விசேஷம்...நல்லா இருக்கட்டும். கண்டிப்பா வருவோம்.”
முத்து முகம் மலர்ந்தது.....எப்படி எல்லாம் பிரச்சனைகள் தலை விரித்து ஆடியது. எல்லோரையும் சந்தித்து வசந்தி அம்மா பேசி ஒரு நல்ல சூழ் நிலையை உருவாக்கியது ஒரு கொடுப்பினை. நிறைவுடன் வீடு திரும்பினர்.
பனி வீடு விழாக் கோலம் பூண்டிருந்தது. முத்து வாசலில், ராமனும் சீதையும் ஒன்றாக இருப்பது போல் கோலம் போட்டிருந்தாள். ஈஸ்வரி மணமேடையை அலங்கரித்து இருந்தாள். சுற்றிலும் மல்லிகைப் பூக்கள் சரம் சரமாக தொங்க விடப் பட்டிருந்தது. பாட்டிகள் புதுப் புடவை உடுத்தி புதிய உற்சாகத்துடன் தங்கள் பேத்திக்கே திருமணம் என்பது போல் சிரித்து அளவளாவினர். கோமதிப் பாட்டி தன் பின் கொசவ சேலை தடுக்க மனமேடை முன் நாற்காலியில் முதல் ஆளாக உட்கார்ந்து கொண்டாள். ஷாந்தாவின் நினைவு அவள் நெஞ்சு குழியை அடைத்தது. ராணி போல் வாழ வேண்டியவளை, மதத்தின் பேரில் ஒரு சிறைக்குள் தள்ளி விட்ட வலி அவள் மூச்சை நிறுத்திவிடும் போல் இருந்தது. குற்ற உணர்வு அவள் மனதை கத்தி போல் வெட்டியது. சென்ற தலைமுறை அழுக்குகள் இந்த தலை முறையில் துடைக்கப்பட்டு மதங்கள் ஒன்று கூடியது அவளுக்கு மன அமைதியை கொடுத்தது. இந்த புத்தி தனக்கு முன்பு இருந்திருந்தால் என் மகள் சாந்தாவும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்திருப்பாள். ஜான் அருகே வந்து அவள் கையைப் பிடித்து ஆதரவாக தடவினார். “எதையும் மனசிலே நினைக்காதீங்க...இது நீங்க சந்தோசப் பட வேண்டிய நேரம் பெரியம்மா. தவறுகள் நடந்ததுக்கு இந்த சமுதாயமும் ஒரு காரணம்...இப்போ மெல்ல மெல்ல விழிப்புணர்வு வருகிறது. மனதைப் போட்டு கசக்காதீங்க...உங்களை நீங்களே மன்னிக்கணும்...சரியா? அப்ப தான் உங்க பேத்தி கல்யாணம் சிறப்பா இருக்கும்.”
“மகனை போல பரிவு காட்டும் உன்னைப் போய்....” கண்ணீர் துளிர் விட்டது. துடைத்து விட்டார் ஜான்.
“இப்ப எதுக்கு பழசெல்லாம்...நிம்மதியா இருங்க..”
“தம்பி நான் மரகத மேரி கிட்ட மன்னிப்பு கேக்கணும். அவளுக்கு நான் தான் அவள் பாட்டின்னு தெரியணும்.”
“கல்யாணம் முடியட்டும் நானே அவளை உன் கிட்ட வந்து பேசச் சொல்றேன்..இப்ப கல்யாணத்தை ரசிங்க.’
கோமதி பாட்டி முகத்தில் தெளிவு ஏற்பட்டது. ஜனங்கள் கூடி விட்டார்கள்...ஒரே சிரிப்பும் கலகலப்பும் அந்த இடத்தை சொர்கமாக்கி விட்டது. முதலில் ஹிந்து முறைப்படி பிரபுவின் அப்பாவும் அம்மாவும் தாரை வார்த்துக் கொடுக்க...மரகதத்தின் சார்பில் சொக்கலிங்கமும் அவன் மனைவி சீதாவும் அதை வாங்கிக் கொண்டார்கள். விருந்தும் சடங்குகளும் சம்பிரதாயப்படி நடந்தது. பிறகு சர்ச்சுக்கு சென்று பிரபுவும் மரகத மேரியும் மோதிரம் மாற்றிக் கொண்டார்கள். கல்யாணம் முடிந்த தருவாயில் எல்லோரும் பூரித்து நின்றனர்.
“பிரபு உன் அனுமதி வேண்டும்...” என்று கேட்டார் ஜான். நான் தான் மரகதத்திற்கு தந்தை என்று அனைவருக்கும் தெரியப் படுத்தணும்.”
“உன்மையை சொல்ல என் அனுமதி எதுக்கு? தாராளமா சொல்லுங்க...கோ அஹெட் அங்கிள்...”
ஜான் உற்சாகத்துடன் சொன்னார். “உங்க எல்லாருக்கும் நான் நன்றி சொல்கிறேன்....என் மகள் மரகத மேரியின் கல்யாணத்திற்கு வந்ததுக்கு... இவள் நான் பெற்ற மகள்...இவளின் அம்மா ஷாந்தா தான். மதம் எங்களை பிரித்தது...அதே மதம் இப்பொழுது குறுக்கே வராமல் இவர்களை இணைத்து வைத்திருப்பதற்காக நான் பிரபுவின் தாய் தந்தைக்கும் இந்த சமுதாயத்துக்கும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன். மரகதம் வா...மகளே என் கண்மணியே...” ஜானின் மனைவி ஜெசிந்தாவை பயத்துடன் பார்த்தபடி அப்பாவை நெருங்கி வந்தாள் மரகத மேரி. ஜெசிந்தா அவள் பக்கத்தில் வந்து..”உன் அப்பாவிற்கு இப்பவாவது தைரியம் வந்ததே உண்மையை ஒப்புக் கொள்ள...கலங்காதே மை சைல்ட்...நீயம் என் மகள் தான்...” மரகதத்தை அணைத்துக் கொண்டாள். அந்து நிமிடம் அழகானது. போடோக்கள் கிளுக்கினே...கை தட்டலும் வாழ்த்துக்களும் அதிர்ந்தது. சந்தோஷத்தில் மரகதம் பேசற்று நின்றாள். இதெல்லாம் உண்மையா? அப்பா அவளுக்கு தந்த பெரிய கிபிட் இதுதான்...சிறந்த கல்யாணப் பரிசு. வானில் நடப்பது போல்...நிலவில் கால் வைத்தது போல் உணர்ந்தாள். சென்ற தலை முறையின் சிக்கல்கள் இந்த தலை முறையில் பனி போல் நீங்கி விட்டதில் அந்த பனி வீடே குளிர்ந்தது. விருந்தும் கும்மாளமும் தொடர்ந்தது. முத்து கண்ணில் நீர் நிறைந்தது. அம்மாவின் ஆசை நிறைவேறிவிட்டது... இனி அவர்கள் அனாதை இல்லை...அவர்களுக்கு அப்பா இருக்கார் அங்கீகரிக்க...அம்மா தெய்வமாக வந்து ஆசீர்வதித்து செல்கிறாள்...வேறு என்ன வேண்டும்? அருந்ததியும் சொக்கலிங்கமும் சேர்ந்து மரகதத்தின் இரு பக்கமும் நின்று கம்பீரம் சேர்த்தார்கள்.
மரகதம் கல்யாண களைப்புடன் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது ஜான் வந்தார்.
“கடைசியாக எனக்கு ஒரு கடமை இருக்கு மரகதம்...என் கூட வா...’” கோமதி பாட்டியிடம் அழைத்துச் செற்றார்.
“பாட்டி உன்னிடம் பேசணுமாம்...” அவளை அங்கு விட்டு விட்டு அறையிலிருந்து சென்று விட்டார்.
“என்ன பாட்டி? உங்க உடம்புக்கு ஒண்ணும்மில்லையே.?”
“உடம்புக்கு ஒண்ணும் இல்லம்மா...மனசு தான். மனசாட்சி உறுத்துது.”
“என்ன பாட்டி...சந்தோஷம்மா இருக்க வேண்டிய வேளையில் வருத்தப் பட்டுக்கிட்டு.”
“அம்மா மரகதம்...என்னை மன்னிப்பியா?”
“என்ன பாட்டி...என் கிட்டப் போய் மன்னிப்பு கேட்டுக்கிட்டு.”
“அவ்வளவு பெரிய பாவம் பண்ணி இருக்கேன்மா..’
“பாட்டி நீங்க தெய்வம் மாதிரி...உங்களாலே எந்த பாவமும் செய்ய முடியாது.”
“நான்...நான் ..நான் தான் உன் அம்மா சாந்தாவின் அம்மா...அவள் வாழ்க்கையை கெடுத்தவள்...உன்னை அநாதை ஆக்கியவள்...” பாட்டி குலுங்கி குலுங்கி அழுதாள். மரகதம் அதிர்ந்தாள். இத்தனை நாள் சொந்தப் பாட்டியையா யாருமில்லாத அநாதை என்று இங்கு வைத்திருந்தேன்...
“பாட்டி...நீங்க முன்பே சொல்லி இருக்கக் கூடாதா?...நான் தான் பாவம் பண்ணி இருக்கேன். அம்மாவைதான் அருகில் இருந்தும் இழந்தேன்...உங்களையும் அருகில் இருந்தே இழந்தேன். பேசி தீர்த்திருக்கலாமே பாட்டி
தப்பு பண்ணிட்டீங்க...” பாட்டியின் தலையை தன் மடியில் வைத்துக் கொண்டாள்.
“தங்கமே...உன் மனசு, பேருக்கு ஏத்தாப் போல் மரகதம் தான்...நான் இனி நிம்மதியாக சாவேன். என்னை மன்னிக்க மாட்டாயோ அப்படின்னு பயந்து தான் சொல்லலை...மன்னிச்சுடு கண்ணு...”
“இப்பவாவது சொன்னீங்களே...இனி உங்களை உள்ளங்கையில் வச்சு பார்த்துப்பேன்...”
அந்த அன்பான ஆதரவான வார்த்தைக்காக காத்திருந்தது போல் கோமதி கண் மூடினாள் .அவள் உயிர் பூப் போல் பிரிந்தது. அவள் ஆத்மா சாந்தி அடையும். மரகதம் மன்னித்து விட்டாளே!
பாட்டியின் படத்தை பெருது பண்ணி போட்டு கும்பிட்டாள் மரகதம்.
“அம்மா இறக்கும் போது தான் அவளுடன் இருந்தேன்...பாட்டி இறக்கும் போது தான் அவள் என் பாட்டி என்று தெரிந்து கொண்டேன்...எனக்கு இவ்வளவு தான் அதிர்ஷ்டமா?” என்று அழுதாள் மரகதம். அப்பொழுது அருந்ததியின் கணவர் போன் பண்ணினார்.
“அருந்ததிக்கு இரட்டை குழந்தை பிறந்திருக்கிறது. இரண்டும் பெண் குழந்தைகள். தாயும் குழந்தைகளும் நலம்.”
இனிப்பான செய்து கேட்டதும் மரகதம் மகிழ்ந்தாள்.
“பார்...சாந்தாவும் கோமதியும் மறு பிறவி எடுத்திட்டாங்க...சந்தோஷமா.”
பிரபு சொன்னதைக் கேட்டு மரகதம் கண்ணிருடன் சிரித்தாள்.
சிக்கலாகிப் போய் அடைத்துக் கொண்டிருந்த ஆறு இப்பொழுது நீரோட்டம் போல் தெளிவுடன் ஓட ஆரம்பித்து விட்டது. சிணுங்கிய குழந்தைகள் சாந்தாவையும் கோமதியையும் அணைத்து “அம்மா...அம்மம்மா வந்து பிறந்தாச்சு...கண்ணுங்களா...” என்று கொஞ்சினாள் அருந்ததி.
முத்துவிற்கு குழந்தை பிறந்த போது அதற்கு மரகதம் என்று பெயர் வைத்தாள்.
நிறைந்தது
சங்கரி அப்பன்