கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பிக்பாஸ் சீசன் – 5- நாள் – 15 (17.10.21)

siteadmin

Administrator
Staff member
பிக்பாஸ் – 5

நாள் – 15 (17.10.21)

ஆண்டவர் ஞாயித்துக்கிழமை வந்து வியாக்யானம் பேசுவோம்னு சொல்லிட்டுப் போனதும் மூடு முனி, ப்ரியாங்கா அப்பறம் அபி 3 பேரும் தம்மடிக்குற ரூமு பக்கமா காமா வந்து நின்னு இசைய பத்தி பொறணி பேசுனாங்க்ய !

ப்ரியாங்கா : நாம என்னைக்கு யாரையும் நம்மகிட்ட பேச வேணாம்னு சொன்னோம் ?

அபி : என்னையத்தான் இந்த ஊரு உலகமே பேசாதன்னு சொல்லுது...நான் கேக்குறேனா?

மூ.மு : (மை.வா : நீ எங்க கேக்குற...நீ பேசுறத எங்களாலதான் கேக்க முடியல...) தள்ளி நில்லுடா மொத

அபி : நம்ம குரூப்பு அப்டியே அட்டி மாதிரி யாரு வேணும்னாலும் வரலாம் போலாம்...

மூ.மு : (மை.வா : அப்பிடி தொறந்து போட்டுதாண்டா நீ நுழைஞ்ச...! ஒழுங்கா நானும் ப்ரியாங்காவும் மட்டும் இருந்தோம்....எந்த கேப்புல உள்ள வந்தன்னே தெரியல. வந்ததுல இருந்து நீ எங்க கூட இருக்குறதாலயே எங்க மேலையும் சேத்து சந்தேகக் கேஸ எழுதுறானுங்க...) நீ இருந்தா யாரு வருவா ? தள்ளி நில்லுடா மொத

அபி : ப்ரியாங்கா நீ மத்தவங்களப் பத்தி கவலப்படாத....

மூ.மு : (மை.வா : அதான நாங்க கவலப்பட வேண்டியது உன்ன நெனச்சுதான்) தள்ளி நில்லுடா மொத //

ஆண்டவர் வந்தார். பாசிபிடிச்ச கோட்டு போட்டுருந்தார். “இந்த சீசன் எப்பிடிப் போகுது?”ன்னு கேட்டாங்களாம் “மத்த சீசன விட நல்லா மங்களகரமா போகுது”ன்னு சொன்னாராம்.

பொழப்பத்த பார்பர் பூனைக்கு ஹேர்கட் பண்ண கதையா ஒரு சீசன். இது மத்த சீசன விட நல்லா போகுதாம்....! இது சீசன் 5 இல்ல “ச்சீ”சன் 5 !

ஆண்டவரே வாங்குன காசுக்கு எதையோ எக்குத்தப்பா அடிச்சு விடுறீங்க. இப்பிடி பச்சையா பொய் சொல்றதுக்குதான் பச்சைகலர் கோட்டு போல. “வாங்க அகம் – அகம் போயி இந்த அகம் பிடிச்ச பிக்காளிகளப் பாக்கலாம்”னு சொல்லிட்டு உள்ள போனார்.

“அடேய்களா இந்த சீசன் ரேட்டிங்க்ல நல்லா இருக்காம். அதனால நல்லா விளையாட வேண்டிய பொறுப்பு உங்க கிட்ட இருக்குடா பொழப்பத்தவனுங்களா”ன்னு சொல்லிட்டு “சரி யாரு யாரு இங்க வரதுக்கு முன்ன இந்த ஷோவ பாத்துட்டு வந்தீங்க?”ன்னு கேட்டார். எவனும் வாயசையக்கல அதனால “யாரு பாத்ததில்ல?”ன்னு கேட்டார். தாமரை, அண்ணாச்சி பாத்ததில்லன்னு சொன்னாங்க. மீதி பேர் அப்பப்ப பாத்தாங்களாம். வருண் எல்லா சீசனும் ரெகுலரா பாப்பானாம். (அடப்பாவி அப்ப அத வச்சு ரிவ்யூ பண்ணியிருந்தா கூட வெளிய தெரிஞ்சிருக்கலாமேடா ! பொழைக்கத்தெரியாத வேல்ஸ் குடும்பத்து ஆளு.)

இப்ப அபிஷேக் வாண்டடா வந்து

அபி : சார் நான் பாத்ததில்ல....

ஆண்டவர் : சரி...ஓகே

அபி : நீங்க ஏன்னு கேக்கனும் ?

ஆண்டவர் : கேக்க மாட்டேன்....நீ எனக்கு மேல பேசுவ

அபி : இல்ல இல்ல சும்மா ஒருதடவ கேளுங்க

ஆண்டவர் : சொல்லித்தொல...

அபி : நீங்க பண்ணதால பாக்கல....உங்கள நான் சினிமால மட்டுந்தான் பாப்பேன்

ஆண்டவர் : இப்ப நீ எங்க இருக்க? நான் என்ன பண்ணிட்டு இருக்கேன்?

அபி : வாழ்க்கையே சினிமாதான அதனால இப்பக் கூட நான் உங்கள சினிமாலதான் பாக்குறேன்....

ஆண்டவர் : (மை.வா : இவன் எகத்தாளத்த பாத்தியா? பெரிய ஷேக்ஸ்பியர் சகளை மருமகன் இவரு...பிலாஸபி பேசுறான். பேசாம மூடுமுனிகிட்ட சொல்லி அடிச்சு தின்னுற சொல்லிருவோமா?) பாரு பாரு ! நீ இன்னும் என்னல்லாம் பண்றன்னு நானும் பாக்குறேன் //

உள்ள குரூப் இருக்கான்னு கேட்டதுக்கு பாவனி எந்திரிச்சு அதெல்லாம் இருக்கத்தான் செய்யுது. இந்தா ப்ரியாங்கா, மூடு அப்பறம் அபி இவங்க குரூப்பாதான் இருக்கானுங்க. அதுல அபியும், முனியும் ஸ்டார்டஜி பண்றானுங்க. ப்ரியாங்கா பாவம் அப்பிடி இல்லன்னு சொல்லுச்சு. அடப்பாவமே !

நாடியாகிட்ட “உன் புருஷன் சாங்க ஊர் தெரியுற ஜாக்கி சாங்கா மாத்திட்ட”ன்னு பாராட்டுனாரு.

அப்பறம் கதை சொன்ன மீதிப் பேர பத்தி சொன்னார். “சரி இதுல யாரு கதை யாருக்கு பிடிச்சது? யாரு கதை பிடிக்கலந்னு பாயின்ட் அவுட் பண்ணுங்க பாப்போம்?ன்னு சொன்னார்.
ஏறக்குறைய பல பேர் நமிதா கதைய சொன்னானுங்க. நாடியா, மது கதை கூட சில பேருக்கு பிடிச்சிருந்துச்சு

அபி : சார் எனக்கு நாடியா கதை பிடிச்சிருந்துச்சு....ஏன்னா அந்த மாதிரி நான் இருக்கனும் சாங் மாதிரி பெண்களுக்கு காவலா இருக்க ஆவலா இருக்கேன். ஆனா இது உனக்கு கனெக்ட் ஆகலன்னு நெனப்பீங்க ஆனா எனக்கு கனெக்ட் ஆச்சு...! ஏன்னா நம்ம சிந்தனை அப்பிடி ! ஆனா மது கதை பிடிக்கல ஏன்னா அவ கதையும் எங்க அப்பா கதையும் ஒண்ணு அப்ப எனக்கு கனெக்ட் ஆகும்னு நெனப்பீங்க ! ஆனா எனக்கு கனெக்ட் ஆகல...! ஏன்னா நம்ம சிந்தனை அப்பிடி ! எப்பிடி ?

ஆண்டவர் : (மை.வா : அவன பொடனியிலயே அடி ! ஹே ராமா...என்ன ஏன் இந்த மாதிரி கழிசடையோட கூட்டு சேர வைக்குற ) சூப்பருப்பா ! இப்பிடியே பேசிட்டு இரு நீ ! //

“இப்ப ஜொலிப்பவர் யாரு ? தொலைஞ்சவர் யாரு?”ன்னு குழுகிட்ட கேட்டார். அண்ணாச்சி – ஜொலிப்பவர். தொலைஞ்சது – நாடியா & சின்னப் பொண்ணுந்னு அபிஷேக் சொன்னதும் இது குழு எடுத்தத முடிவா இல்ல இந்த குழப்பம் பிடிச்சவன் எடுத்த முடிவான்னு கேட்டதுக்கு அக்ஷரா ஒரு மாதிரி கலந்து பதில் சொல்லுச்சு. ஆனா இதான் ஆண்டவர் டக்கா ? அபி பண்ணது இன்ஃப்ளூயன்ஸ். அத இவரு கேக்காம கேக்றான் மேக்றான் கதை கேட்டுட்டு இருக்காரு. கொடுமை !

சின்னப்பொன்ணு அம்மாவுக்கு இதுல வருத்தம். அப்பறம் சேவ்னு சொன்னதுக்கு ஓவ் னு அழுதுச்சு

பிரேக்ல எந்திரிச்சு பிரேக் பிடிக்காத வண்டி மாதிரி ராஜூவ நோக்கி ஓடுனான் அபிஷேக்கு.

அபி : உன்ன நாந்தான் ஜொலிப்பவரா செலெக்ட் பண்ணல

ராஜூ : அதான் தெரியுமே....அண்ணாச்சியதான செலெக்ட் பண்ண

அபி : அதுக்கு காரணம் இருக்கு ! அன்னைக்கு ஸ்க்ரிப்ட் நீ எழுதுனதால, சின்னப் பொண்ணு அம்மாவ பாடக் கூப்டலன்னு கோச்சுக்கிட்டதால, அத நீ சமாதானப்படுத்தி மன்னிப்பு கேக்காம நான் போயி மன்னிப்பு கேட்டு அசிங்கப்பட்டதால, இப்ப அண்ணாச்சிய ஜொலிப்பவரா செலெக்ட் பண்ணிட்டேன்பா...!

ராஜூ : இந்தா இருக்குல்ல தாடி இருக்குற தாடை....அத லைட்டா தட்டுனேன்னா தரையப் பாக்கா 10 நாளாகும் உனக்கு.
உருப்படியா எதையாச்சும் சொல்லு

அபி : அதாவது நீ கோவப்பட மாட்டேங்குற. உனக்கு விளையாட தெரியல. இது நான் உனக்கு தர டிப்ஸ். இது எனக்கு பாதகந்தான். ஆனாலும் கவலையில்ல. ஏன்னா நம்ம சிந்தனை அப்பிடி! எப்பிடி ?

ராஜூ : செருப்படி....அதான் கிடைக்கும் ! போ போயி மூடு முனியவே மோந்து பாரு...//

ஆண்டவர் அறிமுகப்படுத்துன புத்தகம் வானமாமலை எழுதுன “தமிழர் நாட்டுப் பாடல்கள்” நாட்டுப்பாடல்கள் தான் அவருக்கு நெறைய கண்டென்ட் குடுத்துச்சாம். மருதநாயகமே அப்பிடி உருவானதுதானாம்.

இருந்திருந்தாப்ல நாடியாவ தூக்கிட்டானுங்க. பெருசா சீன் இல்லாம வெளிய போயிடுச்சு. ஆண்டவரும் அத மாதிரியே நாலடியில பேசி அனுப்பிட்டாரு. ஆண்டவரும் பை சொல்லிட்டுப் போயிட்டார்.

அடுத்து உள்ள. மதுரக்குரல் மதுகிட்ட வந்து அக்ஷரா அபி இன்ஃப்ளூயன்ஸ் பண்ணிட்டான்னு சொல்லுச்சாம். இதுக்கு அது மேல ஏற்கனவே காண்டுல இருந்து பாவனி மதுகிட்ட வந்து இத சொன்னது தப்புன்னு பதனி வித்துச்சு. அதான உங்கிட்ட அவ பேசவே கூடாதுன்னு அபி வேற வந்து வம்படியா வறுத்துட்டு இருந்தான். மதுரக்குரலோ “டேய் ! அவதிண்னா எங்கிட்ட வந்து பேசினம். நான் உங்ககிட்ட சொல்ல வந்ததிணா. ஆனா இந்த அபிஷேக்கு மடையன் என்னய திட்டுதினா. என்ன கருமாந்திரதிணா...” அப்டின்னு என்னமோ சொல்லிட்டு ஓடிடுச்சு.

ப்ரியாங்கா , முனியையும் அபிஷேக்கையும் கூப்ட்டு. “இங்க பாருங்கடா இலுமினாட்டியாட்டம் சைலண்டா இருந்த நம்மளா மணியாட்டி காட்டிக் குடுத்துட்டீங்க. இப்ப இவனுங்க கக்கூஸ்ல தண்ணி வரலன்றதுல ஆரம்பிச்சு கை வலிக்கிற கேஸ் வரைக்கும் குரூப்பு மேல எழுதப்பாக்குறானுங்க. முனி கூட பராவாயில்ல சனி உன்னய தாண்டா என்ன பண்றதுன்னு தெரியல. செத்த சும்மாதான் இரேண்டான்”னு அபிய கெஞ்சுச்சு.
தூக்கம் வரவரைக்கும் என்ன பண்றதுன்னு தெரியாம அபிஷேக்கு அக்ஷரா பஞ்சாயத்த மதுகிட்டையும்,
பாவனிகிட்டையும் ஆரம்பிக்க...அழுமூஞ்சி அபிநையும் அங்க இருந்தான். என்ன கருமம் பாடி லேங்குவேஜோ....அவன் லேங்குவேஜ விட கன்றாவியா இருக்கு அபிஷேக்குக்கு. அவன் அக்ஷராவ வார்ன் பண்ரேன்ற பேருல பாவனி கிட்ட சலம்ப...அந்த பொண்ணு “இந்தா சைலண்டா பேசுறதா இருந்தா பேசு....இல்ல சைடுகேப்புல போயிடு”ன்னு சீரியசா சொன்னதும். என்னத்தையோ உளறிக்கிட்டே போயிட்டான்.

அப்பறம் பாவனி அபிநய்கிட்ட “இனி அக்கா சொக்கான்னு பக்கத்துல வரட்டும் பருப்பு மத்த கொண்டி சாத்துறேன். அவ கிட்ட சொல்ல வேண்டியத எங்கிட்ட எதுக்கு சொல்றான்? பாக்கத்தான் நான் சைலண்டு....லிமிட்டு தண்டுனா வயலண்ட்டு. அவங்கிட்ட சொல்லி வை”ன்னு சொன்னதோட முடிஞ்சது.
 
Top