கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பிக்பாஸ் – 5 - நாள் – 12 & 13 & 14 (16.10.21)

siteadmin

Administrator
Staff member
பிக்பாஸ் – 5

நாள் – 12 & 13 & 14 (16.10.21)

என்ன ப்ரோ வர வர 2 நாள் போஸ்ட்ட ஒன்ணா போடுறீங்க?
ப்ரோ ! நானாச்சும் பரவாயில்ல 2 நாள் கண்டென்ட ஒர் நாள்ல போடுறேன்....ஆனா அங்க பிக்பாஸ் டீமே 3 நாள் விஷயத்த எடிட் பண்ணி ஒரே எபிஸோடா போடுறானுங்க....! //
சீசன் ஆஃபர்ல வாங்குன ஸ்வெட்டரோட வந்தார் ஆண்டவர். வாழ்க்கை முழுக்க திண்டாட்டம் அதுல நமக்கு ஆறுதல்தான் இந்த கொண்டாட்டம். எதுக்கு கொண்டாடுறோம்னு முக்கியமில்ல அத எப்பிடி சந்தோஷமா கொண்டாடுறோம்ன்றதுதான் முக்கியம்னு சொன்னார்.

உள்ளயும் கொண்டாடுவானுங்க நெனச்சு அவனுங்கள நாடகம் போட சொன்னா சண்டைதான் போடுறானுங்க. வாங்க இந்த போக்கத்தவனுங்களப் போயி என்னன்னு கேப்போம் ஆனா அதுக்கு முன்னாடி வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை விஷயங்கள பாத்துட்டு வாங்கன்னு சொல்லிட்டுப் போனார்.
சின்னப்பொண்ணுக்கு மரியாதை தராத வெவகாரந்தான் வெடிச்சிட்டு இருந்துச்சு. ராஜூகிட்ட ப்ரியாங்காவும், ஆகாவலி அபிஷேக்கும் விளக்கம் குடுத்துட்டு இருந்தானுங்க. இதுல அபிஷேக்கு அவங்கள மொத பாட வைக்கனும்னு எங்கிட்ட யாரும் சொல்லலன்னு சொன்னான்.

ப்ரியாங்கா : ஏண்டா அந்தம்மாவ மொத பாட வைக்கனும்னு உங்கிட்ட சொன்னாங்களா?

அபிஷேக்கு : சொன்னாங்க...

ப்ரியாங்கா : என்னது சொன்னாங்களா? அப்ப ஏண்டா நீ எங்கிட்ட அத சொல்லல?

அபிஷேக்கு : உனக்கு பாட வைக்க தெரியுமா?

ப்ரியாங்கா : எனக்கு எப்பிடிடா தெரியும் ?

அபிஷேக்கு : பாத்தியா உனக்கு தெரியாதுன்னு நீயே சொல்ற! அப்பறம் எப்பிடி உங்கிட்ட அவங்கள பாட வைக்கனும்னு சொல்றது?

ப்ரியாங்கா : அடேய் எக்ஸ்ட்ரா சைஸ் எருமையே ! ஒளப்பாம ஒழுங்கு மரியாதையா உண்மைய சொல்லு

அபிஷேக்கு : அட அந்தம்மா பாடனும்னு சொல்லுச்சு ஆனா மொத பாடனும்னு சொல்லல....நான் முடிக்கும் போது ஜனகனமனகன பாட வைக்கலாம்னு இருந்தேன். அது என்னடான்னா நீராரும் கடலுடுத்த பாட நெனச்சிருக்கு.

ப்ரியாங்கா : சரி ஆனது ஆகிப்போச்சு....ஆகாதது அந்தப்பக்கமா போச்சு ! இதுக்குமேல போயி விளக்கம் குடுக்காத...நான் அங்குட்டு போனதும் நீ குறுக்கால போயி அந்தம்மாகிட்ட குனிஞ்சு என்னய நீ மன்னிச்சிரு ஆத்தான்னு அண்டர்ப்ளே பண்ணாத. புரியுதா ?

அபிஷேக்கு : அவ்வளவு மானங்கெட்டவன் இல்ல இந்த அபிஷேக்கு //

கட் பண்ணா கட்டில்ல உக்காந்திருந்த சின்னப்பொண்ணு காலடியில கெடந்தான் ஆகாவலி அபிஷேக்கு

அபிஷேக்கு : ஆத்தா உன் கோவிலிலே ! ஆத்தா நான் பாஸாகிட்டேன் ! ஆத்தாடி மாரியம்மா

சின்னப்பொண்ணு : என்னதாண்டா உனக்கு பிரச்சனை ?

அபிஷேக்கு : நான் உன்னய பாட வைக்கிறேன்னு சொல்லுவேன்....நீ அதுக்கு சந்தோஷப்படுறதுக்கு உரிமை இருக்கு ! ஏன்னா நீ எனக்கு ஆத்தா....! அடுத்த நாள் உன்னய பாடவிடமாம பண்ணுவேன் அதுக்கு உனக்கு கோவப்படுறதுக்கு உரிமை இருக்கு....! ஏன்னா நீ எனக்கு ஆத்தா....! நான் இப்பிடித்தான் வந்து உங்கிட்ட பேசுவேன்....அத நீ கேக்கனும் ! ஏன்னா நீ எனக்கு ஆத்தா....!

அக்ஷரா : அடேய்.....அன்லிமிட்டடா பண்ணாதடா ! போதும்

அய்க்கி : (ராப்) ஏய் தமிழா.... பேட்மேனோட அம்மா
மார்த்தா.....இந்தா உக்காந்திருக்கு உன் ஆத்தா...!

அபிஷேக்கு : ஏய் என்னங்கடி ! எங்க ஆத்தாகிட்ட பேசுறத தடுக்கப் பாக்குறீங்களா? எங்க அம்மா புள்ள உறவ கெடுக்கப் பாக்குறீங்களா?

அக்ஷரா : நாங்க என்னத்த பாத்தோம் ! நீதான் ரொம்ப நேரமா கேமராவப் பாத்து பேசிட்டிருக்க....

அபிஷேக்கு : ஓ...அப்பிடி வறீங்களா ? ஏய் அகாய் டெக்கு

அக்ஷரா...! ஆங்கில FM அய்க்கி ! இருங்க உங்கள பாத்துக்குறேன்.....

அக்ஷரா : இதையும் கேமராவப் பாத்துதான் சொல்றான் கேடி //

அபிஷேக்குக்கு இந்த பஞ்சாயத்து ஒரு குடச்சல குடுத்திருக்கு. இதுல இருந்து ஒரு கண்டென்ட் எடுத்து கபடி ஆடிறலாம்னு பாக்குறான். அதுக்கு அபிஷேக்கு சூஸ் பன்ணது அகாய் டெக்கு அக்ஷராதான்.

மூடு முனி, ப்ரியாங்கா கூட உக்காந்திருக்கும் போது

அபிஷேக் : நானும் வேணாம் வேணாம்னு பாத்தேன் இனி முடியாது போல

ப்ரியாங்கா : போறதா இருந்தா போயிட்டு வந்துருடா....அண்ணாச்சி இப்பத்தான் வந்தாரு கக்கூஸ் காலியாத்தான் இருக்கு

அபிஷேக்கு : அட நான் என் ஆட்டத்த சொன்னேன்
ப்ரியாங்கா : எது காலையில கைய கால தூக்கி பண்ணுவியே அதுவா?

அபிஷேக்கு : நான் என்னோட கேம சொல்றேன்....இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும், ஆட்டம் ஆரம்பம், ஆட்டமா தேரோட்டமா, காரா ஆட்டக்காரா , ஆட்ட நாயகன், கேம் ஸ்டார்ட்ஸ் நவ்...

நிரூப் : எல்லாம் சினிமா பஞ்ச், சினிமா பாட்டா இருக்கே ! என்ன திடீர்னு

அபிஷேக்கு : டேய் நான் வெளையாட முடிவு பண்ணிட்டேன்....

நிரூப் : என்னய கூப்டாதா எனக்கு டயர்டா இருக்கு

அபிஷேக்கு : (மை.வா : இவனுங்க நம்மள ஓட்டுறானுங்க...இதோ அழுமூஞ்சி அபி வரான் அவன ஓரங்கட்டுவோம்...) அபி பெரிய சம்பவம் ஒண்ணு பண்ணப்போறேன். நீ பயப்படாத உனக்கு ஒண்ணும் ஆகாது. சும்மா உன்ன திட்டுற மாதிரி நடிப்பேன். ஆனா வேற மாரி சம்பவம் பண்ணப் போறேன்...! இந்த சம்பவத்தால என்ன வேணும்னாலும் நடக்கலாம். அத உனக்கு எப்பிடி புரிய வைக்குறதுன்னு தெரியல

அழுமூஞ்சி அபி : சரி சரி ! ஐ காட் இட் ! ஆனா இந்த சம்பவம் சம்பவம்னு சொன்னியே....அது என்ன ?

அபிஷேக்கு : (மை.வா : இவனும் இவனுங்க கூட சேந்துட்டான். நாம ராஜூ பாய்கிட்ட போவோம்) ராஜூ பெரிய சம்பவம் ஒண்ணு பண்ணப்போறேன்...அதுல எனக்கு எதுவும் ஆகாம என்னய பாத்துக்கோ ப்ளீஸ்...
.
ராஜூ : நீ குளிச்சிட்டியா?

அபிஷேக்கு : இல்ல...குளிச்சா நல்லா சம்பவம் பண்ண மூடு வருமா?

ராஜூ : இல்ல ! குளிச்சா இப்பிடி உளறுறது நின்னுரும் //

கட்டக்கடைசியா அபிஷேக்கு ஒரு ஓரமா லான்ல நின்னு யார்கிட்டயோ பேசிட்டிருந்தான்

அபிஷேக்கு : நான் பண்ணப்போற சம்பவத்தால உனக்கு என்ன வேணும்னாலும் நடக்கலாம். ஆனா என்ன நடந்தாலும் நீ கவலைப்படாம இருக்கனும். உன் வாழ்க்கைய சிறப்பா அமைச்சுக்கனும். எனக்காக கவலப்பட வேண்டிய அவசியமில்ல. இந்த புனித சம்பவம்....இன்னுமொரு தரித்திரம் !
ஆவன் யாருகிட்ட பேசிட்டிருக்கான்னு பாத்தா....அங்க இருந்தது கண்ணாடி !

பாவப்பட்டே பழக்கப்பட்ட நம்ம பாவனிக்கு ஒரு வித்யாசமான ப்ரச்சனை. அது என்னன்னா அதுக்கு என்ன பிரச்சனைன்னே தெரியாததுதான் பிரச்சனை. ஹவ் நைஸ் ! இது எப்பப்பாத்தாலும் வாயில பெவிக்கால ஊத்திக்கிட்டுதான் பேசுது. ஒவ்வொரு வார்த்தையையும் அது வாயில இருந்து பிச்சிகிட்டுதான் வருது. இதெல்லாம் திருக்குறள் சொல்ல ஆரம்பிச்சா திருவள்ளுவராண்டே முடிஞ்சிரும் போல.

பாவனி : அழுமூஞ்சி அபிநய் என் பிரதர் மாதிரி

மது : அண்ணாதினா !

பாவனி : ஆனா அவர் மேல வேற மாதிரி ஃபீலிங்க்ஸ் வருது...
மது : அண்ணா இல்லையாதிணா ?

பாவனி : ஆனா அவன கூப்ட்டு கேட்டா இல்லேன்றான்

மது : அப்போ அண்ணாதினா ?

பாவனி : இப்ப நான் எப்பிடி எடுத்துக்குறதுன்னு தெரியல....நீ என்ன நெனைக்கிற ?

மது : அடிங்கொக்கா மக்காதிணா ! ஏண்டி தமிழ் தெரியாத என்னய போட்டு ஏன் இந்த பாடு படுத்துற. அந்தா அங்க நின்னு உன்னய பாவமா பாத்துட்டு இருக்கான் பாரு அவனையே கூட்டு கேளுதிணா //

சரின்னு அது அழுமூஞ்சிய கூப்ட்டு

பாவனி : என்ன பாத்தா எப்பிடியிருக்கு?

அபினய் : பாவமா இருக்கு ....

பாவனி : நீ படையப்பா படத்தையே பாசமலர் பாக்குற மாதிரி பாவமாத்தான் பாப்ப....! நான் அந்த பாக்குறத கேக்கல....என்ன பாத்தா என்ன ஃபீலிங்க்ஸ் வருது ?

அபினய் : ஒரு ஃபீலிங்க்ஸும் வரலயே

பாவனி : அன்னைக்கு வருதுன்னு சொன்ன ?

அபினய் : அன்னைக்கு வந்ததும் போயிட்டேனே...

பாவனி : இப்பவும் எந்திரிச்சு போயிரு...போ அந்த ஓரமா போயி பாவமா நில்லு //

சோகத்துல இருக்குற ஆளுகிட்ட என்ன சொன்னாலும் கேப்பானுங்கன்னு கேக்கிழார் புராணத்துல சொல்லியிருக்குற மாதிரி பாவப்பட்ட பாவனிகிட்ட போயி அபிஷேக்கு

அபிஷேக்கு : நம்ம ஆட்டத்த பாத்ததில்லையே நீ ? வார்ம் அப்ல இருக்கேன். டாப் அப் பன்ணி டாப் கியர்ல விளையாட ஆரம்பிச்சா எல்லாரையும் வீட்டுக்கனுப்பிருவேன் தெ
ரியுமா?

பாவனி : தெரியாதே .....

அபிஷேக்கு : தெரியும்....தெரிய வைக்குறேன் ! நீயும் தெரிஞ்சுக்குவ ! ரெண்டு நாளா பிக்பாஸ் பேசவே இல்ல கவனிச்சியா ? அவர வீட்டுக்கனுப்பிட்டேன்...எல்லாம் என் ஆட்டந்தான்


ராஜு : என்னது ?

அபிஷேக்கு : இங்க பேசிட்டிருக்கேண்டா....

ராஜூ : மை வா : இப்பிடி பொய்யா பேசிட்டு திரி //

இப்ப கமிட்டி ஆளுங்க யாரு ஜொலிப்பவர், யாரு தொலஞ்சதுன்னு கருத்து அடிப்படையில முடிவெடுத்துட்டு இருந்தானுங்க. அபிஷேக்கு பச்சையா மத்த ரெண்டு பேரையும் இன்ஃப்ளூயன்ஸ் பண்ணான். பாப்போம் ஆண்டவர் கேக்குறாரான்னு.

ஆண்டவர் வந்தார். அகம் – அகம்

தாமரை தலமை எப்பிடின்னு கேட்டார். ஒத்த ஓட்டா இல்லாம ஒட்டு மொத்த ஓட்டும் நல்லாதாவே விழுந்துச்சு. தமிழ்நாட்டுல தாமரை நல்ல பேரு வாங்குற ஒரே ஷோ பிக்பாஸ்தான்.

சின்னப்பொண்ணு பலூன் உடஞ்ச கதைய பேச ஆரம்பிச்சார். ஆக்சுவலா ப்ரியாங்காதான் அந்த நாட்டுப்புற பாட்டா இல்ல நாடகமான்னு ஆரம்பிச்சுச்சு அத வாங்கி யூஸ் பண்ணதுதான் தாமரை. ஆனா கூட்டத்துல அந்த இட்லி குண்டான விட்டானுங்க. ஆண்டவர்கிட்ட இத சின்ன்ப்பொண்ணு சொன்னப்ப அண்ணாச்சி இத பாயிண்ட் பன்ணார். ஆனா தாமரை குறுக்க பேசி ட்விஸ்ட் பன்ணி விட்டுருச்சு.

அந்த 3 இடியட்ஸ் அழுமூஞ்சி அபி குரூப்பு டாஸ்க்குல பண்ண தெள்ளவாரித்தனத்த கண்டிச்சார். அய்க்கியோட சமயோஜித புத்திய பாராட்டுனார்.

அவங்கவங்க கதைகள பத்தி பேச ஆரம்பிச்சார். இதுல ப்ரியாங்காவ நீ மத்தவங்க முடிவுல முருங்கக்காய் சாம்பார் வைக்குற மாதிரி தெரியுதேன்னு சொன்னார். இல்ல இல்ல நான் அவள வெறியேத்துனேன். அவள வெறியேத்த ராஜூவ சரிகட்டுனேன்னு சரிகமபா பாடுச்சு. பங்கு மாட்டிக்கிட்ட பங்கு ! ராஜூவும் சைடா ப்ரியாங்காவதான் கோத்து விட்டான்.

ஆனாலும் கதை முக்கியமில்ல அதுல இருக்குற உண்மைதான் முக்கியம்னு ஆண்டவர் சொன்னப்போ அபிஷேக்கு மூஞ்சிய காமிச்சதுக்கு கங்குறாஜுலேஷன்.

இந்த மூடுமுனி ஏன் எப்பப் பாத்தலும் வாயில கூழாங்கல் போட்டு பேசுற மாதிரியே பேசுறான்னு புரியல. இன்னைக்கு சட்டைக்கு மேல சால் எதுக்கு போட்டுட்டு வந்தான்னு தெரியல. சடை முடியோட எதுக்கு திரியுறான்னு தெரியல. ஒர்ஸ்ட்டுடா மூடுமுனி !

சரியா மூடாத சிங்க் குழாய் மாதிரி பாவனி பொழுதுக்கும் கண்ணுல தண்ணி விடுது. என்னன்னு கேட்டா “போன வருஷம் என்னய ஒருத்தன் எச்.ராஜான்னு திட்டிட்டான்”னு சொல்லுது. சோகப்படலாம் ஆனா சோகமே சோகப்படுற அளவுக்கு படக்கூடாது. அக்ஷரா முந்தா நேத்து ஏதோ சொன்னதுக்கு இப்ப ஒக்காந்து ஒப்பாரி வைக்குது. ஆண்டவருக்கே அலுத்துப் போச்சு.

இசை தான் ஒதுக்கப்படுறதா ஃபீல் பண்றேன்னு சொல்லுச்சு. அத அப்பிடி ஃபீல் பண்ண வைக்காதீங்கடா பீடைகளான்னு சொன்னாரு.


சேவ் பண்ணப்பட்ட ஆளுங்க பேர சொல்லிட்டு. நாமினேஷன்ல இருக்குறவங்கள வெயிட் பண்ணுங்கன்னு சொல்லிட்டுப் போயிட்டார்.
 
Top