கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பிக்பாஸ் – 5 - நாள் – 20 & 21 (22 & 24.10.21)

siteadmin

Administrator
Staff member
பிக்பாஸ் – 5
நாள் – 20 & 21 (22 & 24.10.21)

தி வீக்கெண்ட் ஷோ !

அபிஷேக்கோட வீடியோவ எவனோ வாட்ஸாப்ல ஃபார்வர்ட் பண்ணி விட்டானுங்க போல. விக்ரம் ஷூட் முடிச்சுட்டு போற வழியில நாசூக்கா நாகி ரெட்டி ஆஃபீஸுக்கு போயி எங்க வீட்டுப் பிள்ளை படத்துல யூஸ் பண்ண சாட்டைய வாடகைக்கு வாங்கிட்டு வந்துட்டாரு செட்டுக்கு.

வந்ததும் வராததுமா “இங்க ஒருத்தன் இம்சைக்குன்னே இருப்பானே அவங்க எங்க?” அப்டின்னு ஆரம்பிச்சவருதான். அபிஷேக்கு ஷேக்கு ஷேக்குன்னு ஷேக்கிட்டாரு.
தொட்டுக்குறதுக்கு ப்ரியாங்கா. ஃபுல் மீல்ஸ் தான் இந்த வீக்கெண்ட்.

“சரி வெள்ளிக்கிழமை இவனுங்க பண்ண அழிச்சாட்டியத்தப் பாப்போம்”னு சொன்னார்.
தாமரை சமச்சது ஸ்பஷ்டமா இருந்துச்சுன்னு எல்லாரும் பாராட்ட....அண்ணாச்சி மட்டும் “இந்த உப்ப மட்டும் தப்பா தாராளமா போடாம இருந்தா நல்லது”ன்னு சொல்ல, பீரோ புல்லிங் குரூப்பு ஆரம்பிச்சுட்டானுங்க. “உப்பு விஷயத்த நீ தொட்டது தப்பு. சமைக்க வான்னு கூப்ட்டா வரமேட்டேன்னு சால்ஜாப்பு சொல்ற ஆனா சாப்ட்டதுக்கப்பறம் சால்ட் மேட்டர இழுத்து வம்பு பண்ற”ன்னு ஆரம்பிச்சானுங்க. “சர்தாண்டா தெரியாம சொல்லிட்டேன். உப்புன்னா இனிப்பா இருக்குமே அதான ?”ன்னு அண்ணாச்சி சர்காஸம் பண்ண, அபிஷேக்கு “ஆகா சர்காஸம்னாலே சார் இல்லமயா?”ன்னு உள்ள வந்து அண்ணாச்சிகிட்ட லவ்டா பேச....”யாருடா அது?”ன்னு உள்ள வந்த ராஜூ அண்ணாச்சிய அமைதிப்படுத்த “அவர நீ ஏத்திவிடாத....எரியுற நெருப்புல எண்ணைய ஊத்தி விடாத”ன்னு அபிஷேக்கு சொன்னதும், ராஜூ “நண்டுக்குக் கூட நாலறிவு இருக்கும்....உனக்கு ஒண்ணு கூட இல்ல போல....ஏண்டா அந்தாள பேசாதன்னு சொல்றேன். அத ஏத்திவிடுறதுன்னு சொல்ற. ஏத்திவிடுறதுன்னா என்னன்னு தெரியுமா? இந்தா பாவனி இந்த அபிநய் நேத்து உன்னயப் பத்தி....” அப்டின்னு ஆரம்பிக்க “தெரியும்டா தொங்கனா கொடக்கா அபி....நீ என்னப் பத்தி ஊர் பூரா தப்பா செப்தாவு, நான் உன்னய லெஃப்ட் கையால அப்புதாவு”ன்னு சரளமா சலம்ப, “இதான் ஏத்திவிடுறது....நீ என்னடான்னா எங்கிட்டயே எகத்தாளம் பேசுற?”ன்னு எதிர்த்துப் பேசுனதும் அபிஷேக்கு சைல்ன்ட் மோட்.

ஆண்டவர் வந்தார். மாத்தி மாத்தி பேசுறவனுங்கள பூராம் சாத்து சாத்துன்னு சாத்தி வெளிய அனுப்புவோம் வாங்கன்னு உள்ள போனார்.

“என்னமோ இந்த வீட்ல வினயமா யாரோ விதிமீறல் பண்றதா ப்ரியாங்கா சொன்னாங்களே ? என்ன ப்ரியாங்கா ? யாரு அது ?”ந்னு கேட்டார். “இதோ இந்த அகாய் டெக்கு தான் சார். காகிதத்துல எழுதி கவுண்டர் குடுக்குறா. விக்ஸ் தடவுற மாதிரி விதிமீறல வெடுக்கு வெடுக்குன்னு பண்றா சார்.

இதுக்கெல்லாம் நியாயமா தூக்குல போடனும். நீங்க வேணும்னா பாவம் பாத்து வெளிய அனுப்பிருங்க”ன்னு சொல்ல. “அப்போ கூட நீயும் வரணுமே?”ந்னு டிவிஸ்ட் வச்சார் ஆண்டவர். “நீ மட்டும் கையில எழுதி காட்டலாம். ஆனா இவ காகிதத்துல எழுதி காட்டுறது மட்டும் தப்பு அப்டியா ?”ந்னு கேக்க ப்ரியாங்கா மூஞ்சி ப்ரியாணி இலை கலருக்கு மாறுச்சு.

“ஆத்தீ ஸ்கெட்சு நமக்குதான் போல”ன்னு புரிஞ்சுடுச்சு. அப்போவே மூடுமுனி கொஞ்சம் தள்ளி உக்காந்துகிட்டான்.

அடுத்து அபிகிட்ட வந்தார் “ ஏன்பா நீ பிக்பாஸ் பாத்ததே இல்லையான்னு கேட்டார். சார் நான் எங்க பாஸையே பாத்தது இல்ல. இதுல பிக்பாஸ எப்பிடி? அதெல்லாம் மனுஷன் பாப்பானா சார். அப்டின்னு சொல்ல, ஏண்டா ஸ்மெல் பண்ற டாக்கிய ஃபேஸ் பாத்தா தெரியாதா? நீ தமிழ் மட்டும் இல்லாம ஏறத்தாழ பிக்பாஸ் நடக்குற எல்லா மொழியிலையும் பாத்திட்டு வந்து விளையாண்டுகிட்டு இருக்க”ன்னு சொன்னதும் எல்லாரும் சிரிச்சுட்டானுங்க.

“ஏங்க நீங்க வர எபிசோட் மட்டும் பாப்பேங்க”ன்னு சொல்ல, “அப்ப வீக்கென்ட் ஷோ பாத்திருக்க ?”ந்னு ஆண்டவர் கேக்க, “ ஓ நீங்க வரதுதான் வீக்கெண்ட் ஷோவா?”ன்னு அப்பாவியா கேட்டு மாட்டிக்கிட்டான். “தம்பி ஒருத்தன் பொய் பேசலாம் ஆனா பிக்பாஸ் செட்டளவுக்கு பேசக் கூடாது. பாத்தது கூட தப்பில்ல ஆனா அப்பிடி பாத்தும் தப்பா விளையாடிட்டு இருக்க பாரு அதாண்டா பிரச்சனை”ன்னு சொன்னாரு. “அது சரி இவன் கொளுத்திப்போடுற ஆளுன்னு அண்ணாச்சி சொன்னாரே அது என்னாச்சி?”ன்னு கேக்க, “ஏங்க இவன் முழுநேரமுமே அதத்தாங்க மூச்சுமுட்ட பண்றான்”னு பதட்டமா சொல்ல, ராஜூவும் அத “ஆமா சார்”னு மொழிவழிஞ்சான்.

ராஜூவோட நேர்மைய பாராட்டுனாரு. இது பீரோ புல்லிங் குரூப்புக்கு இன்னும் இன்ஸ்டன்டா ஸ்டொமக் பார்னிங் உண்டு பண்ணுச்சு. அப்டியே தாவி இந்தப் பக்கமா வந்தாரு. “என்ன அக்ஷரா அழுகுறதுல ஓவர் டைம்லாம் பாக்குற போலன்னு ஆரம்பிச்சாரு. சார் எல்லாம் இந்த பாவனியாலதான் சார். நாலாவது தெருவுல ஏழாவது வீட்ல எவனாச்சும் பேசுனாலும் அவன் அதப் பத்திதான் தப்பா பேசுறான்னு பொலம்பிட்டு திரியுது. நான் எழுதி குடுத்தது வேற மேட்டர். ஆனா இத நாமினேட் பண்ண சொல்லி எழுதிக்குடுத்தேன்னு எப்.ஐ.ஆர் போடுது”ன்னு சொல்ல, பாவனி எந்திரிச்சு “இந்தா இந்த அழுமூஞ்சி அபிநய்தாங்க அப்பிடி சொன்னான்”னு சொல்ல, அபிநய் “ஆகா அப்பிடி இப்பிடின்னு கடைசில ஆண்டவருக்கு முன்னாலயே ஆம்லேட்ட போட்டாளுக”ன்னு மூஞ்சிய மாத்துனான். “அதாவது அவ அப்பிடி செய்யல ஆனா அப்பிடி செஞ்சிருந்தா எப்டி இருக்கும்னு ஒரு சின்ன கற்பனையதான் அவளுக்கு சொன்னேன்”னு மழுப்புனான்.

திரும்பவும் ப்ரியாங்காகிட்ட தடித்த வார்த்தைகள யூஸ் பண்றதப் பத்தி நீ என்ன நெனைக்கிறன்னு கேக்க, “ம்ம்க்கும், நான் எவனியஒன்னு நெனச்சு எதையாச்சும் சொல்ல, கடைசில நாந்தான் அதுன்னு வருவீங்க. நாந்தான் தடித்த வார்த்தைகள பேசுறேன் போதுமா? இனி பேசாம பாத்துக்குறேன்” அப்டின்னு சொல்லுச்சு.

“ஆமா விளையாடுறதுக்குன்னு 18 பேத்த கூட்டியாந்தா மொத்த பேர் விளையாட்டையும் ஒத்த ஆளா விளையாடுறது வினயம் இல்லையா ? என்ன அபிஷேக்கு?”ன்னு கேக்க, “ஏது இன்னைக்கு முழுசாவே நாந்தான் போல?”ன்ற மாதிரி பாத்தான். கொஞ்சம் ஆவலா விளையாண்டது தப்பாப் போச்சுன்னு தலையக்குனிய, ஆவலா இல்ல தணி ஆளா விளையாட நெனச்சதுதான் தப்பு. இன்னும் அவனுங்க சோத்த மட்டுந்தான் நீ சேத்து சாப்டல”ன்னு சொன்னார். எங்கங்க கேக்குறான்.....எதையாச்சும் சொன்னோம்னா தலைய தலைய ஆட்டிட்டு மறுபடியும் அவன் சேட்டையத்தாங்க செய்யுறான். இதுல கூட சுத்துற பாவத்துக்கு எங்க மேல வேற பிராதாகுதுன்னு மூடு முனி பொலம்புனான்.
சரின்னு பேருக்கு 4 பேர காப்பாத்திட்டு போனாரு.

அடுத்த நாள் அவரு வந்ததே அபிஷேக்கு எலிமினெஷனுக்காத்தான் அப்டின்ற மாதிரி வந்தது நல்லாவே தெரிஞ்சது. இருந்தாலும் அத கடைசியா செய்வோம்னு சொல்லிட்டு பாவனிய பதனி காச்சுனாரு. “ஏம்மா எவனையும் கிச்சன் பக்கம் வரவும் விடமாட்டேங்குற. அப்பறம் எவனும் அந்தப்பக்கம் வராம என்னய வேலை வாங்குறானுங்கன்னு விழியில கண்ணீர வடிக்குற என்னதான் உன் கதை?”ன்னு கேக்க, “நமக்கு நம்ம செய்யுறப்ப நாலு பேரு கைவச்சா ஆகாது”ன்னு சொல்ல, “ஏன் கிரெடிட் போயிடும்னா? பாக்க செல்லக் கிறுக்கியாட்டம் இருந்தாலும் கிருத்துவம் புடிச்ச வேலையெல்லாம் நல்லாத்தான் பாக்குற”ன்னு சொன்னாரு.
பிரேக்ல “என்னங்கடா என்னையெல்லாம் எடுத்தெறிஞ்சு பேசுறானுங்க ? நன் பாவம் இல்லையா?”ன்னு பரிதவிப்பா திரிஞ்சுச்சு பாவனி.

காயின வச்சிருக்குறவனுங்க கதை எனக்கு தெரியும். இப்ப கடைசியா இருக்குறது அய்க்கி, சி.பொண்ணு & அபி. இதுல அய்க்கிய காப்பாத்திட்டாங்க மக்கள். மீதி இருக்குற 2 பேருல ஒருத்தர காக்கனும், ஒருத்தர தூக்கனும். காயின் வேற இருக்கு என்ன எப்பிடின்னு வந்து பாக்கலாம்னு போனாரு.

ப்ரியாங்கா காயின மூடு முனி வச்சிருக்கான். ஆனா அத அவன் அவனுக்கு வச்சுக்கப்போறதாதான் ப்ளான் போல. இதுல ப்ரியாங்காவுக்கும், அவனுக்கும் ஒரு கருத்து மோதல். மூடு கண்டிப்பா குடுக்க முடியாத முடிவுல தான் இருந்தான். அவன பொறுத்தவரை அபிஷேக் போறதுதான் அவனுக்கு நல்லது. அதநால அவனுக்கு அபிஷேக்குக்கு குடுக்க மனசே இல்ல. அகேயின் வந்த ஆண்டவர் ரொம்ப சுத்தி வளைக்காம அபி அவுட்டுன்னார். நமக்கு அதிர்ச்சியே இல்ல.

உள்ள சில பேரு அவனுக்கு காயின் குடுக்க முன் வந்தப்ப இவன் வேணாம்னு மறுக்க, கொஞ்சம் கொஞ்சமா அவன கன்வீன்ஸ் பண்ன்ணிட்டு இருந்தப்பயே “ஏண்டா அத முடிவு பண்ண வேண்டியது நாண்டா.....நான் சொல்றப்போதான் காயின் வெளையாட்டு. இப்போதைக்கு அவன வெளிய தள்ளி கதவ சாத்து”ன்னு சொல்லிட்டாரு.


அபி இத எதிர்பாக்கல போல. பட்டுன்னு ப்ரியாங்கா பெட் பேஷண்ட் மாதிரி மாற...அத கைத்தாங்கலா கூட்டிட்டு திரிஞ்சானுங்க. கதவுமே கபால்னு திறந்துடுச்சு. வழக்கம் போல ஆண்டவர்கிட்ட வந்து அபிநயம் பிடிக்க பாத்தான். ஆண்டவர் அவர் சொல்ல வேண்டியத மட்டும் சொல்லிட்டு. போயிட்டு வாப்பா பொட்டுகடலைன்னு சொல்லி அனுப்பிட்டாப்ல. இனி மத்தவனுங்க விளையாட்ட பாக்க வாய்ப்பிருக்குன்னு நம்பலாம்.
 
Top