கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பிக்பாஸ் – 5 - நாள் – 22 (25.10.21)

siteadmin

Administrator
Staff member
பிக்பாஸ் – 5
நாள் – 22 (25.10.21)

“நெருப்பு கூத்தடிக்குது” பாட்டு அலாரம். அவுட்டேட்டட் பாட்ட எதுக்கு அன்வாண்டடா போடுறானுங்கன்னு பாத்தா இதுக்கான விளக்கம் பின்னாடி வந்துச்சு. என்னமோ இன்னைக்கு ராஜூ பாயெல்லாம் கூட ராவடியா அட்டிட்டு இருந்தான். அண்ணாச்சி கூட அம்பது லிட்டர் கிரைண்டர் கணக்கா மூவ் யுவர் பாடி பண்ணிட்டு இருந்தாரு. காயின் தரேன்னு கதறி அழுத ஆளுக முகத்துல கூட அபிஷேக்கு போன சோகமில்லாம சோலோ டான்ஸ் ஆடிட்டு இருந்துச்சுங்க. ஆனாலும் இந்த பாட்டுக்கும் “வந்த நாள் முதல் இந்த நாள் வரை” பாட்டுக்கு தர வேண்டிய எக்ஸ்பிரஷன் குடுத்த அபினய்க்குதான் இந்த வருட வடசட்டி விருது குடுக்கனும்.

பரண்ல இருக்குற எலி ஏன் பப்பி ஷேமா ஓடுதுன்னு இப்ப விளக்கம் குடுத்தானுங்க காலையில பாட்டுக்கு. இந்த வாரம் நெருப்பு ஆற்றல் வாரமாம். அதானாம். கிரேட்டுடா !
நெருப்பு காயினுக்கு பொறுப்பா இருக்குறது இசை. சோ இந்த வாரம் முழுக்க கிச்சனுக்கு அவங்கதான் ஆளுமையாம். என்ன சமைக்கனும், எத எத எவ்வளவு யூஸ் பண்ணனும், எப்பிடி சுத்தமா வச்சுக்கனும்னு ஒட்டு மொத்த கிச்சனும் இசை கண்டிரோல்ல இருக்குமாம். இசை கண்டிரோலா இருந்தாலே பெரிய விஷயம்.

அவ்வளவுதான் திண்னையில கிடந்தவனுக்கு திடுக்குன்னு தாதா சாகேப் பால்கே விருது கிடச்சாப்ல இசைக்கு அப்படி ஒரு ஆனந்தம். உடனே அதோட தளபதி சுருதிகிட்ட போயி (இசை + சுருதி குட் காம்பிநேஷன்) “தளபதியாரே அப்பப்ப உங்ககிட்ட வந்து ஆலோசனை கேப்பேன். நீங்க குடுக்கனும்”னு சொல்லிட்டு கிச்சன் வலம் போயிடுச்சு. இங்க ப்ரியாங்கா அண்ணாச்சிகிட்ட “அவ்வளவுதான் அண்ணாச்சி இனி அடிக்கொருதரம் கிச்சன்ல போயி முந்திரி, பிஸ்தால்லாம் அள்ளித்திங்க முடியாது”ன்னு பயமுறுத்த. அண்ணாச்சி “ஆகா இது ஆகாது போல”ன்னு எக்ஸ்பிரஷன் குடுத்தாரு.

இதுவரை வெறும் கானாவா இருந்த இசை ! மரண கானாவா மாறி கிச்சன்ல ரைடு பன்ணுச்சு. அங்க தாமரை கிட்ட....

இசை : தாமரை குழம்புல எண்ணைய பாத்தியா ?
தாமரை : இல்லயே செத்த முன்ன ரூமுலதான் உன்னய பாத்தேன்
இசை : தாமரை ! என்னய இல்ல எண்ணய ?
தாமரை : ஓ அப்பிடி சொல்லவா ! உன்னய இல்ல உண்ணையதான் ரூமுல பாத்தேன்
இசை : இந்தா....குழம்புல எண்ணய பாரு....!
தாமரை : எதுத்தாப்ல நீ இருக்கும்போது குழம்புல எதுக்கு உன்னய பாக்கனும்?
இசை : ஆத்தீ.....! இவனுங்க குடுத்த ஆளுமைய பூராம் நான் உங்கிட்டயே தீத்துருவேன் போலயே ! தாமரை குழம்புல ஏன் இவ்வளவு ஆயில்?
தாமரை : அதுவா....பிரான்ல நெறையா சத்து இருக்கு....அதநாலதான் அதப் போட்டு குழம்பு நெறையா ஆயுள்
இசை : ஞே.....//

பாவம் இசை ஒண்ணு நெனச்சு கேட்டா தாமரை தகறாரா பதில் சொல்லுது. கடைசி வரைக்கும் இசை கன்வே பண்ண நெனச்சத கரெக்டா கன்வே பண்ணாமயே போயிருச்சு. ஆனா போனப்ப “இனி என்னய கேக்காம எண்ணைய எடுங்க வச்சுக்குறேன் உங்கள”ன்னு போச்சு. “அவள கேக்காம அவள எப்பிடி எடுக்க முடியும்? இந்த பாப்பாவுக்கு அறிவே இல்ல”ன்னு தாமரை சொன்னது இசை காதுல விழல.

இப்ப புது தலைவருக்கான போட்டி. நேம் கேம். இத கண்டுபிடிச்ச கணவான ஒலிம்பிக் கமிட்டில சேத்துவிட பரிந்துரைப்பது நலம்.

வட்டமா உக்காந்து மாத்தி மாத்தி பேர் சொல்லிக்கனும். சொன்ன பேர ரிப்பீட் அடிக்கக் கூடாது, அவுட்டானவங்க பேர சொல்லக்கூடாது....ஒரு வழியா இந்த விளையாட்டு புரிஞ்சு விளையாடுறப்போ மதுரக்குரல் மதுவும், ப்ரியாங்காவும் ஃபைனல்ல இருந்தாங்க.

மறுபடியும் கிச்சனுக்கு வந்து பாத்த இசை அங்க எவனோ புளிய கரைச்சு வச்சிருந்ததப் பாத்ததும் “யாருடா அது?”ன்னு சவுண்ட குடுத்ததும் “நாந்தான்”னு மூடுமுனி வந்து நிக்க, இப்ப இசைக்கு உண்மையாவே வயித்துல புளிய கரச்சது.

“ஏம்பா....இப்பிடி புளியகரச்சு வேஸ்ட் பண்ணலாமா?”ன்னு கேக்க, “வேஸ்ட் பண்ணல....குழம்பு வச்சு டேஸ்ட் பண்ணபோறேன்”னு சொல்லிட்டு அவம்பாட்டுக்குப் போயிட்டான்.

தலைவர் போட்டி ஃபைனல் ரவுண்டு ! ரெண்டு பேரும் வலைய வச்சுக்கிட்டு நிக்கனுமாம். எதிர்ல உள்ளவங்க போடுற பந்த கேச் பண்ணி கூடையில போட்டுக்கனுமாம்.

எண்ணிப்பாக்கும்போது யாருகிட்ட அதிகமா இருக்கோ அவங்க தலைவராம். பாக்குறப்போ ப்ரியாங்கா ஜெயிக்கும்ன்ற மாதிரிதான் இருந்துச்சு. எண்ணிப்பாத்தப்ப மதுவ விட கூடுதலா 3 பந்து வேற இருந்துச்சு. ஆனா கடைசி நேர கல்யாண சீன் மாதிரி “நிறுத்துங்க”ன்னு சொன்ன குரல் அக்ஷராவோடது. “தூக்கிப்போட்ட பந்துல 2 பந்து டைரக்டா ப்ரியாங்கா கூடையில விழுந்து போச்சு”ன்னு சொல்ல, பிக்கியும் ஆமா கணக்குல சேத்தியில்லன்னு சொல்லிட்டார். ப்ரியாங்காவுக்கு தன்னோட கைபாம் இல்லாத குறை தெரிஞ்சது. இல்லேன்னா இன்னேரம் மதுவொட கூடைய ப்ரியாங்கா கூடையில கவுத்திட்டு “பந்து உன்னோடதுதான் ஆனா ப்ரியாங்கா தலைவர்”னு டீல் பேச வந்திருப்பான். சோ ப்ரியாங்காவுக்கு வட போச்சு !

திண்டுக்கல் ஜீரக சம்பா பிரியாணி ஜெர்மன் மதுவுக்குதான் கிடைக்கனும்னு இருந்தா பிக்கியால கூட மாத்த முடியாது. இந்த மாக்கானுங்களுக்கு மதுரக்குரல் மதுதான் தலைவர். இப்ப காயின் வச்சிருக்கும் கிராக்குகள் யாரும் தலைவர் பதவிய தனக்கோ இல்ல தனக்கு பிடிச்சவங்களுக்கோ மாத்திக்கலாம்னு சொன்னதுக்கு யாரும் வேணாம்னு சொல்லிட்டானுங்க. மது தன்னோட மதுரக்குரலால வணக்கம் சொல்லிட்டு, “பகால்ல யாழும் தூங்காழீங்க...தூங்குதிணா வந்து குதிப்பன்.

சாப்டும்போது ஒண்ணா சாப்ழுவோம்...அப்றம் நன்றி வணக்கம்”னு ஆங்க்லோ இண்டியன் ஆயா மாதிரி பேசிமுடிச்சிச்சு. லக்ஸுரி பட்ஜெட்ல ப்ரியாங்காவுக்கு பொற வாங்கிக் குடுக்கனும்னு முடிவு பண்ணானுங்க.
அபிஷேக்கு இல்லாத நிறை இன்னைக்குதான் தெரிஞ்சுச்சு. ஒட்டு மொத்தமா ஒரே இடத்துல எல்லாரும் உக்காந்து ரெஸ்ட்லிங்க் போட்டு சிரிச்சு விளையாடிட்டு இருந்தானுங்க. இதுவே நம்ம ஆளு இருந்திருந்தா இன்நேரம் இந்த கூட்டத்துல இருந்த மூடு முனியையும், ப்ரியாங்காவையும் இழுத்துட்டு லான்ல உக்கார வச்சு லாவகமா நியூட்டன்ஸ் லா சொல்லி குடுத்துட்டு இருந்திருப்பான். ஆனா அவன் இல்லாததால மூடும், ப்ரியாங்காவும் எல்லாரோட சேர்ந்து விளையாடிட்டு இருந்தாங்க.

கட் பண்ணி கக்கூஸ்ல பாத்தா அக்ஷரா
சின்னப்பொண்ணுகிட்ட காயின களவாடப் போற கிரிமினல் ப்ளான சொல்லிட்டு இருந்துச்சு. வாண்டடா வந்து இப்ப சின்னப்பொண்ணுகிட்ட ஏன் இத சொல்லனும் ? சற்றே சிந்திக்க வேண்டிய விஷயமிது.

இசைக்கு பொறுப்பு குடுத்து நல்லா இருந்த பொண்ண பொலம்ப விட்டுட்டானுங்க. கிச்சனுக்குள்ல எவன் போனாலும் கிட்னாப் பையன பாக்குற மாதிரியே பாக்குது. எதுவும் வேஸ்டாகக் கூடாதுன்னு சொல்லி சொல்லி அரைகிலோ அரிசியக் குடுத்து அஞ்சுவகை சாதம் பண்ண சொல்லி வாங்கிக் கட்டிக்கபோகுது. இதப்போயி பாவனிகிட்டயும், சுருதிகிட்டயுமா பொலம்புறது ? ரெண்டும் ஏணி போட்டு இசைய ஏத்திவிடுதுங்க.
இப்ப நாமிநேஷன். நாமிநேஷன் பண்றவங்க ஃபோட்டோவ நெருப்புல போடனும். ஏன்னா இது நெருப்பு வாரம்.

ராஜூ, மது, தாமரை, மூடுமுனி, சிபி, அய்க்கி இவங்களத் தவிர மீதி 9 பேரும் நாமிநேஷன். இப்பவும் காயின் வச்சிருக்குறவங்க அவங்க பெனிஃபிட்ட யூஸ் பண்ணிக்கலாம்னு சொன்னப்ப எல்லாரும் வேணாம்னு சொல்லிட்டாங்க. இங்க இசைக்கும், அண்ணாச்சிக்கும் ஒரு மாதிரியான புகைச்சல் போயிட்டு இருக்கு. அது அப்பாட்டமா தெரிஞ்சது.

பாவப்பட்ட பாவனி டிடக்டிவ் ராகினியா மாறி “என்னய நாமினேட் பண்ணது ராஜூதான். இதான் நான் கண்டுபிடிச்சது”ன்னு மூடுகிட்ட சொன்னதோட மட்டுமில்லாம உன்ன நாந்தான் நாமினேட் பண்ணேன்”னு சொல்லி அத ஒரு அரவேக்காடுன்னு அவன நம்ப வச்சுட்டு இருந்துச்சு.
இசை பாவம் சுருதி கிட்ட மறுபடியும் வந்து

இசை : அண்ணாச்சிய கிச்சனுக்கு போக சொன்னா குறுக்கு சந்துல கம்பி நீட்டுறாப்ல
சுருதி : சும்மா பொலம்பாத....அவரு கிச்சனுக்கு போயிட்டாரு
இசை : அப்ப இந்தா அய்க்கி கூட உக்காந்திருக்குறது யாரு ?
சுருதி : (மை.வா : ஆத்தீ....இவன் இன்னும் கிச்சனுக்கு போலயா ?) அது உன் பிரமை....எங்க பாத்தாலும் அவரு இருக்குற மாதிரியே தெரியுது
இசை : இந்தா இப்ப எந்திரிச்சு நிக்குறாரு பாரு..
.
சுருதி : இப்ப அப்பிடியே கக்கூஸுக்கு போவாப்லயே ?
இசை : ஆமா...ஆமா உனக்கும் தெரியுதா ?

சுருதி : நல்லா தெரியுது ! நான் சொன்னேன்ல....உனக்கு மனப்பிராந்தின்னு...போ போயி ரெஸ்ட் எடு... (மை.வா : இப்டியே மெயிண்டெயின் பண்ணிக்கடி சுருதி....)
 
Top