கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பிக்பாஸ் – 5- நாள் – 24 (27.10.21)

siteadmin

Administrator
Staff member
பிக்பாஸ் – 5

நாள் – 24 (27.10.21)

உருப்புடாத இவனுங்களுக்கு “ஊரு விட்டு ஊரு வந்து” பாட்டு அலாரம். ஆனா கிரியேட்டிவ் டீம்கிட்ட இந்தப் பாட்டு எதுக்குன்னு பொசுக்குன்னு கேட்டா பதில் தெரியாது. ஆனா கிராமமா, நகரமா டாஸ்க்குக்காகன்னு சொல்லி சமாளிக்க வருவானுங்க. நம்பிராதீங்க !

கொல்லைக்கு போறதுக்கு வசதியா டீய கொதிக்க வச்சு குடிப்போம்னு கிச்சனுக்கு ராஜூவும், மூடுமுனியும் வந்தா.....”இசை வந்து காயின வைக்காம கடாயத் தூக்கி எவனும் அடுப்புல வைக்கக்கூடாது”ன்னு கறாரா சொல்லுச்சு மதுரக்குரல் மது. ஆனா இந்த விஷயம் இசைக்கே தெரியாது போல....

மது : இந்தா இசை.....அங்க டீ போடப்போறானுங்க சீக்கிரம் வா
இசை : ஆமா....டீ குடிக்காம மந்தமா இருக்கு...வா போயி குடிப்போம்
மது : இவ ஒருத்தி....! அடியே நீ வந்து காயின காமிச்சாதான் அடுப்ப பத்த வைக்கனும்னு சொல்லியிருக்கேன்....அதான் உன்ன கூப்ட வந்தேன்
இசை : எது ? காபிக்கு காசா ?
மது : அய்யோ எனக்கு தமிழ் கெட்ட வார்த்தை எதும் தெரிய மாட்டேங்குதே ! இந்தா நெருப்பு வாரத்துக்கு நீதான தல....அதநால உன்னய கேக்காம எவனும் எதுவும் செய்யக்கூடாதுன்னு சொல்றதுக்ககா இந்த காயின் மேட்டர சொல்லியிருக்கேன்.... போ போயி நாட்டாம பண்ணு...
இசை : இது நல்லதுக்கா கெட்டதுக்கான்னு தெரியலயே....? சரி செஞ்சு பாப்போம்...எதுக்கும் நீயும் கூட வா //

அப்பறம் இசை வந்து காயின வச்சதும் காபிய போட்டானுங்க.
பாவனியும், சுருதியும்.....
.
பாவனி : மானபங்க கேசுக்கு மங்களூர் ஜெயில்தானாமே ?
சுருதி : அப்டியெல்லாம் சொல்லாத.....! ஒரு காயின எடுக்கப்போயி கந்தரகோலமா போயிருச்சு.
பாவனி : அநாவசியமா ஆசப்பட்டுட்டீங்க சுருதி....நீங்க எலிவால பிடிச்சிட்டீங்க....அது உங்கள கொறிக்காம விடாது போல...
சுருதி : அடியே...என்ன சம்பந்தமில்லாத ஆள் மாதிரி பேசுற....? நீயுந்தான கூட சேர்ந்து களவாண்ட....
பாவனி : அது ஏதோ நீ ஆசப்பட்டயேன்னு வந்தேன்....நீ இப்பிடி பண்ணுவேன்னு யாரு நெனச்சா
சுருதி : எதே ?
பாவனி : ச்சீ ச்சீ....சும்மா உன் ஹேட்டர் மாதிரி பேசிப்பாத்தேன் ! நாம அவுட்டுதான்னு என் ஆறறை அரிவு சொல்லுது
சுருதி : யோவ் பிக்கி....எங்கள இப்பிடி பொலம்ப விட்டுட்டியே ? நீயாச்சும் எதாச்சும் சொல்லு....இல்ல கேமராவுல விழும் கல்லு ! //

இப்டியே வெட்டியா இவனுங்களுக்கு பொழுதுக்கும் சோறு போட்டு வளக்க இது என்ன புத்துணர்வு முகாமா ? அதனால திண்ணது செறிக்க ஒரு டாஸ்க் வச்சானுங்க....இதுல ஜெயிச்சா 3000 பிக்கி காசாம்.

மெழுகுவத்திய நோகாம கொளுத்தி வைக்கனுமாம். நெறையா கொழுத்துறவங்க காசு ஜெயிப்பாங்களாம். 4வது படிக்கிற பையன் கூட நல்லா யோசிப்பான் டாஸ்க்க.

ரெண்டு டீம் சார்பாவும் வந்தது. மூடுமுனியும், அழுமூஞ்சி அபினையும் கேண்டிலுக்கு சுளுக்கெடுத்துட்டு இருந்தானுங்க...! இதெல்லாம் ஒரு டாஸ்க்கான்னு பாத்தா....இதுலையும் அபினய் தோத்துட்டான்.

சி.பொண்ணு பாட அக்ஷ்ரா, தாமரை & அய்க்கி ஆட்டம் போட....கிராமத்து ஏரியாவே கலகலத்துச்சு. இங்குட்டு நகரத்து ஆட்கள் மராமத்து வேலைக்கு வந்தவனுங்க மதியம் தூக்கம் போடுற மாதிரி பொரண்டுகிட்டு இருந்தானுங்க.
இரண்டாம் கட்ட ஆலோசனை....!

பாவனி, சுருதி & இசை.....

சுருதி : காயின தொலச்சவலெல்லாம் சந்தோஷமா இருக்கா.....ஆனா கெத்தா எடுத்தவ நான் இங்க உக்காந்து எழவ கொட்டிக்கிட்டு இருக்கேன்
இசை : காயினால என்ன யூஸ்.....எவனும் மதிக்கமாட்டான்
பாவனி : துண்ட வச்சு மறைச்சது ஒண்ணும் பெரிய குத்தமா இருக்காதுன்னு நெனைக்கிறேன்
சுருதி : பின்ன ? ஞான பீட விருதிக்கு தகுத்திக்குரியதா ? பேசாம இரு....
இசை : காயினால என்ன யூஸ்.....எவனும் மதிக்கமாட்டான்
பாவனி : இல்ல...என்ன இருந்தாலும் A1 நீதான ?
சுருதி : அப்ப நீ பாரீஸ் ஜெயராஜா ? யம்மா நாம ஒரு டீம்....வாழ்வோ சாவோ நாமதான் பாக்கனும்
இசை : காயினால என்ன யூஸ்.....எவனும் மதிக்கமாட்டான்
சுருதி : அடியே கருப்பாயி ! இங்க என்ன பிரச்சனை போயிட்டிருக்கு...மதிக்கமாட்டான்....குதிக்கமாட்டான்னு ! அங்க பாரு யாரோ குழம்பு சட்டிய கவுக்குறானுங்க
இசை : டேய்....அத வைங்கடா....! அதாண்டா நாளைக்கும் ! //

நகரத்து ஆட்கள் நூடுல்ஸ், பாஸ்தான்னு செஞ்சு சாப்ட்டு கிராமத்து ஆட்கள வெறுப்பேத்த....வெறிபிடிச்ச அக்ஷராவும், அய்க்கியும் அவனுங்க பிரெட் பாக்கெட்ட எடுத்து ஒளிச்சுவைக்க, அத இவனுங்க கண்டுபிடிச்சு கிராமத்து ஆட்களோட பொருட்களா எடுத்து திங்க...ஒரே விளையாட்டுதான். ஆனா இங்கயும் வந்து இசை “சொல்றத கேளுங்க சொல்றத கேளுங்க”ன்னு கத்தியும் காதுல வாங்கல எவனும். சரி அப்பிடி என்னதான் எமர்ஜென்சின்னு பாத்தா “பொருட்கள வீணாக்கி விளையாடுறது விவகாரத்துல முடியும். சோத்துக்கில்லாம கஷ்டப்படுறவங்க எத்தனையோ பேரு இந்த உலகத்துல இருக்க....சோறு அப்டின்றது எவ்வளவு.....”அப்டின்னு லெக்சர் அடிக்க ஆரம்பிச்சதுமே இவனுங்க கைதட்டி நகந்துட்டானுங்க.

அடுத்ததா ஒரு டாஸ்க். அதுல ராஜூ வின்னு.

மூன்றாவது கட்ட கலந்தாலோசனை.....
பாவனி, சுருதி, இசை, மது
சுருதி : இந்த காயின் கருமத்த ஏன் எடுத்தோம்னு இருக்கு...
பாவனி : என்னடி சைடு வாங்குற ? அப்ப நான் ?
இசை : நானும் காயின ஏன் எடுத்தேன்னு இருக்கு....
மது : காயின எடுத்ததுல என்ன இருக்கு ?
பாவனி : காயினக் காணோம்னு தாமரை கதறியிருந்தா சரி.... ஆனா மானத்த காணோம்னு கதறுது..... மானாவாரியா தூத்தப்போறானுங்க.....
சுருதி : காயின குடுதுரலாம்னா அது வாங்காது
இசை : நான் குடுத்தாலும் பிக்கி வாங்கமாட்டான்
பாவனி : நான் பாட்டுக்கு அபினய் கிட்ட எதாச்சும் சொன்னோமா....அத அவன் யாருகிட்டயாச்சும் மாத்தி சொன்னா அவன் மேல கேஸ் போட்டோமான்னு ஜாலியா இருந்தேன்....பொழுது பொகலேன்னா பொல பொலன்னு கண்ணீர் விட்டு கரைவேன் ! இவ கூட சேந்து இப்ப இங்கிலாந்து சிறைக்கே போயிடுவேன் போல.....
இசை : நானும் ஒழுங்கா பண்ணலேன்னா ஜெயிலுக்கு தான்....
சுருதி : யார்ரா இவ....இருக்குற சோகம் பத்தாதுன்னு சொமந்துட்டு வந்து கொட்டுறா....இசை வாணி...அங்குட்டு போ நீ ! //

“பேசுற பொரணிய புரியுற மாதிரி பேசுங்கம்மா”ன்னு பிக்கி வேற ஆங்கிலம் பேசுன இந்த குரூப்ப திட்டிப்புட்டார்.
மது எல்லாரையும் கூப்ட்டு ஒண்ணு சொல்லனும்னு சொல்ல. எல்லாரும் வந்தா மது சொல்ல வேண்டியத ப்ரியாங்கா சொல்லி முடிச்சிட்டு “இப்ப நீ சொல்லு”னு சொன்னதும்
மது : அழ்தாவது....நான் சொன்னா எல்லாம் கேக்கயில்ல...! சிபி சொன்னா கேக்குறாங்க....இசைக்கு பிரச்சனை இருக்கு...ப்ரியாங்கா நான் சொல்றத சொன்னத சொன்னாங்க, சி.பொண்ணு அக்கா காயின காணோம், நிரூப் பெருசா மாடு மாதிரி தானே, கிச்சன்ல அடுப்பு என்ன வேலை, டாஸ்க்குல பண்னா லக்ஸுரி பட்ஜெட் வரும், அபிஷேக் போனான் ஏன் அபிநய் போல, பாவனி காயின எடுக்கல குடுக்கல, இதான் சொல்ல வந்தனான்

எல்லாரும் அது இப்பிடி பேசி முடிச்சதும் “என்னமோ சொல்லனும்னு சொன்னியே அத எப்ப சொல்லுவ”ன்னு பாத்தானுங்க. சைடு பிட்டா இசையும் சேந்துகிட்டு
இசை : காயின வச்சாதான் சமைக்கனும்னு இல்ல....இருந்தாலும் காயின வச்சதுமே சமைங்க ! நான் சொல்றத கேக்கனும்னு நான் சொல்லல....ஆனாலும் நான் சொல்றத கேளூங்க ! நான் கிச்சனுக்கு தலைவின்னு சொல்லல....ஆனா நாந்தான் தலைவி !
சொல்லி முடிச்சு நிமிந்து பாத்தா யாரும் இல்ல !

இப்ப அடுத்ததா இன்னொரு டாஸ்க். இதுல யாரும் வின் இல்ல. ஆனா நெறையா திங்க கிடச்சது.

இப்ப பிக்கி இசைய கூப்ட்டு கன்ஃபெஷன்ரூமுல அசிங்க அசிங்கமா கேட்டாரு. “உன்னால ஒரு ப்ரொமோக்கு ப்ரயொஜனம் உண்டா ? கிச்சனையே உனக்கு குடுத்து ஆள சொன்னா....ஆளப் பாத்த சிக்கன் மாதிரி இப்பிடி பம்மி சாகுறியே ! போ ஒழுங்காப் போயி அவனுங்கள ரைடு எடு”ன்னு பத்தி விட்டார்.

வெளிய வந்து இத எல்லார்கிட்டயும் சொன்னதுக்கு “சரி மூடு இருந்தா செய்யுறோம்”னு போயிட்டானுங்க.
இப்ப சம்பாதிச்ச காசக் குடுத்து அடுத்த டீம் ஆளுக பொருட்கள வாங்கி அவனுங்கள இம்சை பண்ணலாம். அத கொஞ்ச நேரம் செஞ்சானுங்க.


இப்ப பிக்கி மூடு & அக்ஷராவா கூப்ட்டு அவங்க அவங்க டீம்ல யாரு ஒழுங்கா இந்த டாஸ்க்க வெளையாடலன்னு கேட்டதுக்கு அக்ஷரா மதுவையும், மூடு பாவனியையும் சொன்னான். ரெண்டு பேரும் நைட்டு முழுக்க விறக எரிச்சு அது அணையாம பாத்துக்கனுமாம். அவன் பாத்துக்குறத இசை கூட இருந்து பாத்துக்கனுமாம். இது எல்லாத்தையும் நாம உக்காந்து பாக்கனுமாம்.
 
Top