கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பிக்பாஸ் - 5 - நாள் 17 & 18 - 21.10.21

siteadmin

Administrator
Staff member
பிக்பாஸ் – 5

நாள் – 17 & 18 (21.10.21)

கட்டங்கட்டி கண்டாமேனிக்கு திட்டுனதால கவலையில இருந்த அகாய் டெக்கு அக்ஷராவ உள்ள கூப்டார் பிக்கி. அத உள்ள கூப்ட்டதுக்கு அபிஷேக்குக்குதான் அடிவயித்துல கலக்கல்.

அதாவது சீசனுக்கு ஒரு டிக்கெட்டு “ஐ ஆம் டன் ஹியர். இ வான்ட் டூ கோ ஹோம்”னு ஸ்கூல் புள்ள மாதிரி சொல்லும். இந்த தடவ அது நம்ம அகாய் டெக்குதான்.

பிக்கி : அக்ஷரா என்ன பிரச்சனை ?

அக்ஷரா : ஏன் உனக்கு தெரியாதா?

பிக்கி : உங்க வாயால சொல்லுங்க...

அக்ஷரா : நான் என்ன வாய் மணக்க திருப்புகழா சொல்ல வந்தேன்....? இந்த திருட்டுப்பயலுக ரோதனைய சொல்ல வந்தேன்

பிக்கி : அப்ப சொல்லுங்க....?

அக்ஷரா : என்னத்த சொல்றது....ஒண்ணும் சரியில்ல

பிக்கி : அப்ப சொல்லாத...

அக்ஷரா : யோவ் நீதானய்யா சொல்றதுக்கு வர சொன்ன?

பிக்கி : உன்னய கல்ல கொண்டி அடிக்க ரொம்ப நேரமாகாது...ஒழுங்கு மரியாதையா சொல்றதா இருந்தா சொல்லிட்டு ஓடு...இல்ல கால ஒடச்சுப்புடுவேன்

அக்ஷரா : (மை.வா: என்ன இவனும் கொலைக்குறான்) யப்பா இந்த வீட்ல ப்ரியாங்கா & அபிஷேக்கு தொல்லை தாங்கல. கவுந்து படுக்கப்போறேன்றத கூட கத்திதான் பேசுறானுங்க. வாழக்கையில கஷ்டத்தப் பாத்ததில்லேன்னு சொன்னா காண்டாகுறானுங்க. காயின் எங்கிட்ட மட்டும் இருக்கக்கூடாதுன்னு தீ மிதிக்குறானுங்க. இவனுங்களோட மல்லுக்கட்ட முடியல. வீட்டுக்கு மெசேஜ் அனுப்பி வர சொன்னா விடியுறப்ப வீட்ல இருப்பேன். செய்வியா ?

பிக்கி : எதுக்கு என்னய செய்யவா ? இங்க பாரு...இவனுங்க கூச்சல்ல எனக்கு கூடத்தான் காதுல வலி. ரெண்டு நாளா காது சரியா கேக்கல. வாழ்க்கைன்னா சில வலிகள் இருக்கத்தான் செய்யும். இதோ இப்பக் கூட வெளிய ஏழாவது கேமரா முன்னாடி நின்னுகிட்டு கோமுட்டி அபிஷேக்கு ஏழ்ரைய கூட்டிட்டு இருக்கான். எல்லாம் விதி. முடிஞ்சா அவன தூகிப்போட்டு மிதி. கேஸ நான் பாத்துக்குறேன். இப்ப சமத்தா சமந்தா மாதிரி சிங்கிளா போயி பெட்ல படுத்துக்க. நாய் கத்தாம நான் பாத்துக்குறேன்.

அக்ஷரா : என்னமோ சொல்ற....பாக்கலாம்

பிக்கி : எது பாவக்காவா ?

அக்ஷரா : உண்மையாவே இவனுக்கு காது போச்சு போல //
இங்க பீரோ புல்லிங்க் குரூப்....! அபி, ப்ரியாங்கா & மூடுமுனி

ப்ரியாங்கா : வாழக்கையில பெரிய ஆசையெல்லாம் இல்ல...எல்லாரும் நம்ம குரூப்புல வந்து சேந்துக்கனும்.

அபி : இவனுங்கள பிரிக்க எனக்கு 2 நிமிஷம் ஆகாது.....

மூடு : (மை.வா : இந்த கிறுக்கன் இருக்குற வரை அது நடக்காது ) அவனுங்க என்ன மைதா பொட்டனமா ? பிரிக்கவே முடியாத சாம்பார் பொட்டனமா இருக்கானுங்க...இவரு பிரிச்சு பிரியாணி கிண்டிருவாரு....வாயத்தொறந்தா பொய்யி....

அபி : அப்பிடி இல்லடா....அவங்களுக்கு நம்மள விட்டா வழியில்ல....நம்ம கூடதான் சேந்தாகனும்....

மூடு : (மை.வா: இந்த வீட்ல இவன் கூட சேந்துதான் நான் வாழ்ந்தாகனுமா?) டேய் செத்த சும்மாத்தான் இரேண்டா....//
அழுமூஞ்சி அபினய் மூஞ்சி வேற பாவனி போர்வைய பொத்தி அடிச்சதுல மழையில நனஞ்ச அட்டபாக்ஸ் மாதிரி இருந்துச்சு...பக்கத்துல அக்ஷரா வேற

அக்ஷரா : இந்த ப்ரியாங்காவும், அபிஷேக்கும் மன்ணு மேட்டையெல்லாம் மவுண்ட் எவரெஸ்ட் அளவுக்கு பெருசாக்கி பேன் பாக்குறானுங்க

அழுமூஞ்சி : இந்த பாவனி வேற என்னய....


அக்ஷரா : ஏன் எங்கிட்ட காயினே இருக்கக்கூடாதா? எங்க வீட்ல எவ்வளவு இருக்கு தெரியுமா?

அழுமூஞ்சி : பாவனிய தப்பா பேசுறான்னு

அக்ஷரா : அது என்ன எப்பப் பாத்தாலும் என் கதையில சோகமில்ல, சொரக்காயில காரமில்லன்னு

அழுமூஞ்சி : பாவனி சோகத்த நான் சொமந்து

அக்ஷரா : டேய் இவன் வேற....பாவனி...பச்சகலர் தாவணின்னு அப்பப்பிடிச்சு தாயக்கட்டைய உருட்டிகிட்டு...! என்னதாண்டா பாவனிக்கு ?

அழுமூஞ்சி : பாவனி கதை தெரியாதா ? சொல்றேன் கேளு....அது மொத மொத ஆடிஷனுக்கு போனப்ப....

அக்ஷரா : அடங்கப்பா.....இவன் ரோதனை பெரிய ரோதனையா இருக்கே ! இதுக்கு தனியா உக்காந்தே அழுதிருப்பேன்.....//

18வது நாள்

“ஆலுமா டோலுமா” பாட்டுக்கு “வரேம்மா வந்துட்டேம்மா”ன்னு வந்து ஆடுனானுங்க. சல்பேட்டா சங்கராபரணம் ஆடுன மண்ணுடா இது. இவனுங்க என்னடான்னா தடுக்கி விழுகுறதையெல்லாம் தில்லானான்னு சொல்லிட்டு திரியுறானுங்க.

பாவனி சைஸா சிபிய கூப்ட்டுச்சு. “ஆகா இவ கேஸெழுத ஆளு சேக்குறா போலயே”ன்னு கவனமாவே போனான் சிபி.

பாவனி : ஏம்பா சிபி...காயின யாரு யாருக்கோ குடுக்குற....ஆனா இந்த பாவப்பட்ட பாவனிக்கு குடுக்கனும்னு உனக்கு தோணலையே நான் பாவம் இல்லையா?

சிபி : எனக்கு கூடத்தான் காயின் வேணும் ஆனாலும் நான் இசைக்கு குடுத்தேன்

பாவனி : சரி எனக்கு ஏன் குடுக்கல ?

சிபி : அது உனக்கு தேவப்படாதுன்னு நெனச்சேன்....

பாவனி : எனக்கு வேணுமே....நான் நாமிநேஷன்ல இருக்கேன்

சிபி : சரி உனக்கு குடுத்துருந்தா தப்பிச்சுக்குவியா ?

பாவனி : இல்ல நான் வேற ஆளுக்கு குடுத்துருவேன்

சிபி : அடியே பெவிகால் குடிச்ச பெங்குவினே...! உனக்கு குடுத்தா நீ மட்டும் வேற ஆளுக்கு குடுப்ப...ஆனா நான் மட்டும் வேற ஆளுக்கு குடுக்கக் கூடாதா? இப்ப உனக்கு கேஸ் போட ஆள் வேணும் அவ்வளவுதான ? இரு லான்ல லாந்திட்டு இருக்குற அபினய வர சொல்றேன்...இன்னைக்கு ஒரு ஈவ் டீசிங்க் கேஸப்போடு //

இங்க டைனிங்க் ஹால்ல அண்ணாச்சியும், ராஜூவும் ப்ரியாங்காகிட்ட தக் லைஃப் பண்ணிட்டு இருந்தத பெட் ரூமுல
இருந்து பாத்த அபிஷேக்கு

அபி : டேய் நிரூப்பு....அண்ணாச்சி படுத்துற பாட்ல ப்ரியாங்கா பொங்கப்போறா....சமச்சத எல்லாம் அவளே உக்காந்து திங்கப்போறா ! இத தடுக்கனும்

மூடு : எத அவ திங்குறதையா ?

அபி : இல்ல பொங்குறத...

மூடு : இங்க பாரு...! உனக்கு பொழுது போகலேன்னு அவள போயி பொங்கப்போறா முங்கப்போறான்னு ஏத்தி விடுற வேலைய விடு. பேசாம போயி படு ! உன்ன நம்பி அவ இறங்கி அப்பறம் அவள புழுதில போட்டு பொறட்டுனானுங்கன்னா உன்னய போட்டு பொளந்துருவேன் நானு பாத்துக்கோ

அபி : சரி....ஓகே ! இந்த வருண எங்க ? டேய் வருணு ஆக்சுவலா இந்த வீட்ல......//

காயின் வச்சுருருக்குறவனுங்க வந்து காமிங்கன்னு சொன்னாப்ல பிக்கி.

வருண் – நீர், பாவனி – ஆகாயம், தாமரை – காத்து, இசை – நெருப்பு, மூடு – நிலம்

ப்ரியாங்கா குரூப்பு சின்னப்பொண்ண ஏமாத்திட்டானுங்க.

“எங்க அவன ஆத்தா, தாத்தான்னு கூப்ட்டவன”ன்னு சின்ன்ப்பொண்ணு தேடுச்சு.

இப்ப அவங்க அவங்க காயினுக்கு ஏத்த மாதிரி வீட்டப் பிரிச்சு குடுப்போம். அதுக்கு காயின் ஓனர் அந்த ஏரியாக்கு சொந்தக்காரன். இடையில யாராச்சும் காயின திருடுனா ஓனர் கை மாறிடும்னு சொன்னாரு.

வருண் – கக்கூஸ், இசை – கிச்சன், மூடு – பெட்ரூம், பாவனி – லிவிங் ஏரியா, தாமரை – லான்.

இந்த டாஸ்க் ஆரம்பிச்சு முடியுற வரை பாட்ஷா பட அழகு அழகு பாட்டுல வர ரஜினி மாதிரி எல்லா பக்கமும், எல்லார் கூடவும் அபி பேசிட்டு இருந்தான். கூர்ந்து கவனிச்சதுல ஒரே நேரத்துல லான்ல தாமரை கூடவும், பெட் ரூமுல மூடு கூடவும் கூட பேசிடிருந்தான்.

யாரு எங்க போகனும்? யாரு யார உள்ள விடக்கூடாது? நைட்டுக்கு என்ன சமைக்கனும?, கக்கூஸ் போறப்ப கேஸ் விடலாமா? கர்நாடகாவுல காவிரிய தொறந்து விடலாமான்னு எல்லா முடிவுகளையும் அவந்தான் எடுத்துட்டு இருந்தான். அய்யோ இன்னும் 10 நிமிஷத்துல தமிழ்நாட்டோட முதலமைச்சராகிடுவானோன்னு ஒரே படப்பிடிப்பாகிடுச்சு. நீ டாப் 5ல வரணும்னுதான் இந்தப் போராட்டாம்னு 16 பேர்கிட்டையும் சொன்னான்.

இருந்திருந்தாப்ல இசையோட காயின பேசிட்டு இருக்கும்போதே எடுத்துட்டு

அபி : இசை அண்ணன் காயின எடுத்துகிட்டேன்...ஆனா ஓனர் நீதான்

இசை : காயின குடுங்க.....

சுருதி : இப்ப எதுக்குடா பேசிட்டு இருக்கும்போதே காயின எடுத்த ?

அபி : என்ன என்னயவே கேள்வி கேக்குற ? நீ டாப் 5ல வர வேணாமா?

இசை : காயின குடுங்க.....

சுருதி : வேணாம். இப்பிடித்தான் சின்னப்பொண்ண சின்னப்பொண்ணு மாதிரி ஏமாத்துனீங்க....! இப்ப இவளா ?


அபி : எனக்கு கிச்சன் வேணாம். எனக்கு லான் வேணும்

இசை : காயின குடுங்க.....

சுருதி : அப்போ அந்த காயின போயி எடுடா லூசுப்பயலே....

அபி : சரி நீ சொல்லு வருண எப்பிடி வீக் ஆக்குறது ?

இசை : காயின குடுங்க.....

சுருதி : அவன் ஏற்கனவே நாலு நாள் சாப்டாதவன் மாதிரிபடு வீக்காத்தான் இருக்கான். அவன நான் ஏன் வீக் பண்ணனும். காயின நீ எடுத்துட்டேன்னு வேணும்னா லீக் பண்றேன்.

அபி : என் கேம புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்க ! வருண வீக் பண்ணிட்டா நான் லான எடுத்து தமாரைய லிவிங் ரூமுக்கு அனுப்பி பாவனிய கக்கூஸ கைப்பத்த சொல்லி, கிச்சன பெட்ரூமா மாத்தி உன்னய டாப் 5ல கொண்டாந்துருவேன்

இசை : காயின குடுங்க.....

சுருதி : தம்பி இந்தக் காஞ்சூரிங்க் பட கதையெல்லாம் வேணாம். நீ காயின குடுத்துட்டு கெளம்பு. உன் பருப்பயெல்லாம் நிரூப்புகிட்ட விக்கிறதோட நிறுத்திக்கோ....! இனி யாரயாச்சும் இன்ஃப்ளூயன்ஸ் பண்றதப் பாத்தேன் இஞ்சிய இடிச்சி விட்டிருவேன்....! போ !

அபி : இந்தாங்கம்மா உங்க காயினு.....! (மை.வா: ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே) //
இதுல ப்ரியாங்கா தூங்குனதுக்கு நாய கொலைக்க விட்டுட்டு பின்னாடியே பிக்கி கொலைச்சாப்ல “ வீட்ல ஒருத்தனும் ரூல்ஸ பாலோ பண்றதில்ல. இது உங்களுக்கு நல்லதில்ல. கூட்டத்த செமிச்சு விட்டுருவேன்”னு வார்னிங் குடுத்தாப்ல.
டாஸ்க் முடிஞ்சது.

அபி மூடுகிட்ட வந்து

அபி : அடேய் பூராம் உஷாராகிட்டானுங்க. காண்டாமிருகம் கத்துனாகூட சத்தம்போடாம கத்துற ஆளுக இசையும், வருணும்....ஆனா இன்னைக்கு என்னய எத்துற அளவுக்கு வந்துட்டானுங்க. சுருதியெல்லாம் என் இஞ்சிய இடிச்சிருவேன்றா...இனி இந்த இன்ஃப்ளுயன்ஸ் பண்ற வேலைய விட்டுரனும்

மூடு : இதத்தான் நான் வந்ததுல இருந்து வாயக்கட்டுடான்னு சொன்னேன் கேட்டியா ? சரி இனி ஒழுங்கா இரு ! ஆமா இஞ்சிய இடிச்சிருவேன்னா என்னது ?

அபி : ஆக உன் நெனப்பு பூராம் இஞ்சிலதான் இருக்கு....! நான் ப்ரியாங்காகிட்டயே போறேன் //

பஞ்சபூதங்கள்ல நீங்கள்ளாம் எந்த பூதம்னு பாசிட்டிவா சொல்லிட்டு அப்டியே குறையா தெரியுறவன் ஒருத்தனையும் அவன் எந்த பூதம்னு நெகட்டிவா சொல்லி முடிங்கன்னார்.
இதுல பெருசா சுவாரஸ்யம் இல்லேன்னாலும். ப்ரியாங்காவுக்கு ராஜூ குடுத்த செப்பல் ஷாட் தோணியோட ஹெலிகாப்டர் ஷாட்டுக்கு சமம். அன்ணாச்சி வேற அபிஷேக்க கொளுத்தி போடுற நெருப்புன்னு சொல்லிட்டார். அதுல பீரோ புல்லிங் குரூப்புக்கு கொஞ்சம் மனவருத்தம். அப்பறம் நைட்டு அவன கூப்ட்டு ஆறுதல் சொல்றேன்ற பேருல அண்ணாச்சி அவன் பண்ற தெள்ளவாரித்தனம் எல்லாத்தையும் பல பேருக்கு முன்னாடி சொல்லிட்டாரு.


சரின்னு சோகமா இதப்பத்தி பேசி யாரையும் இன்ஃப்ளூயன்ஸ் பண்ண முடியுமான்னு அபி சுத்தி முத்தி பாத்தா அங்க சுருதி நின்னு அவனையே பாத்தா. அவ என்ன சொல்லியிருப்பான்னு உங்களுக்கே தெரியும்.
 
Top