பிக்பாஸ் – 5
நாள் – 1 (04.10.21)
மன்னிக்கனும் மொத நாளே லேட்டு ! திடீர்னு ஆஃபீஸ்ல வேலை பாக்க சொல்லி பதட்டப்படுத்திட்டானுங்க. வாங்க சட்டுபுட்டுன்னு வீட்டுக்குள்ள போவோம்.
உள்ள வந்த நைட்டு அலுப்பும் சலிப்புமா பூரா பயல்களும் தூங்கப்போக அபினையும், நிரூப்பும் லான்ல லாந்திட்டு இருந்தானுங்க. என்ன நெனச்சானோ தெரியல திடீர்னு நிரூப் குடைய காத்துல வீசி அத கிழிச்சிப்புட்டான். சேந்தன்னைக்கே சேதாரம். கேமராவெல்லாம் ஆதாரம். “ரைட்டு நைட்டு பூரா உக்காந்து தச்சிற வேண்டியதுதான் குடைய”ன்னு குடை ரிப்பேர் பண்றவன் மாதிரி கைல தூக்கிட்டு ஓடுனான். “ஆத்தீ இவ்வளவு நேரம் இவன் கூடயா சகவாசம் வச்சுட்டு இருந்தோம்”ன்ற மாதிரி அபினய் மூஞ்சி முக்கோணமா மாறுச்சு.
இசைவாணிக்கு தண்ணிக்குழாயில பிரச்சனை. “என்னங்கடா இருக்குறது ரெண்டு குழாய் ஆனா எதத்திருவுனாலும் சுடுதண்ணி கொட்டுது”ன்னு கதற, அண்ணாச்சி வந்து “அது அப்பிடி இல்ல இங்குட்டு திருப்புனா சுடுதண்ணி, அங்குட்டு திருப்புனா பச்ச தண்ணி, மேல் பக்கமா திருப்புனா மஞ்சத்தண்ணி”ன்னு திருப்புற சுந்தரனா மேனுவல் படிச்சு காட்டிட்டு இருந்தாப்ல. ஆனாலும் சொன்ன பக்கம் திருப்பாம சொதப்புன வாணிய வந்த எரிச்சலுக்கு ரெண்டு திருப்பு திருப்பியிருப்பாப்ல அண்னாச்சி....அப்பறம் அவரே வந்து குழாய திருப்பி விட்டாப்ல.
லான்ல அபினய் – நிரூப்
அபினய் : என்ன நிரூப் சிரிக்கிற ?
நிரூப் : அதில்ல....இந்த கல்யாணம் பண்ணிக்கிறானுங்கள்ல அவனுங்கள நெனச்சு சிரிச்சேன்.....அப்பிடி அதுல என்ன இருக்குன்னு கல்யாணம் பண்றானுங்க? பொண்ணு கிடைக்குதேன்னா? கழுதைக்கும் கழுதைக்கும் கூடத்தான் கல்யாணம் நடக்குது ! ஆமா உங்களுக்கு கல்யாணமாகிடுச்சா ?
அபினய் : (ஒரு பார்வை பாத்தபடி) ஆச்சு ஆச்சு....15 வருஷம் ஆகப்போகுது. 23 வயசுலையே பண்ணிக்கிட்டேன்
நிரூப் : நான்லாம் 35 வயசுலதான் பண்ணிக்குவேன்....
அபினய் : அத ஏண்டா எங்கிட்ட சொல்ற?
நிரூப் : பின்ன அறிவிருக்குறவன் எவனாச்சும் கல்யாணம் பண்ணுவானா?
அபினய் : (மை.வா) இவன் விடவே மாட்டான் போலருக்கே....//
அப்பறம் அவனுங்க கூட அண்ணாச்சி வந்து உக்காந்தாரு. “ஷோ உப்புசப்பில்லாம போகுது காபில உப்பப் போட்டு பிராங்க் பண்ணலாமா?”ன்னு நிரூப் கேக்க “தப்பாப் போச்சுன்னா தகர டின்னு கட்டிருவானுங்கடா டேய்”னு அண்ணாச்சி ஜகா வாங்கிட்டார்.
விடிஞ்சது. இவனுங்க சீக்கிரம் எந்திரிச்சுட்டானுங்களா இல்ல பிக்பாஸ் தூங்கிட்டாப்லயான்னு தெரியல அலாரம் அடிக்கிறதுக்கு அரை மணிநேரத்துக்கு முன்னாலயே எந்திரிச்சு கலெக்டர் ஆபீஸுக்கு போயி கையெழுத்து போட போறவனுங்க மாதிரி ரெடியானுங்க.
“குறட்டையில கோல்டு மெடல் வாங்குன விஷயத்த சொல்லவே இல்லையே?”ன்னு தாமரை செல்வி சின்னபொண்ணுகிட்ட கேட்டுட்டு இருந்தாங்க.
நாடியாவப் பாத்து அண்ணாச்சி
அண்னாச்சி : ஆமா எதுக்கு உன்னய இங்க கூப்ட்டானுங்க?
நாடியா : (குழப்பமா) அதான் நானும் கேக்குறேன் என்னய எதுக்கு கூப்ட்டானுங்க? ஆமா ஏங்க இப்பிடி கேக்குறீங்க?
அண்ணாச்சி : இல்ல ஒவ்வொரு துறையில இருந்து கூப்டுவானுங்க, அதான் நீ என்ன துறை ?
நாடியா : ம்ம்ம் கால்நடைத்துறை ஓகேவா ? ஏங்க நான் யூ ட்யூபர்
அண்ணாச்சி : ஓ...யூட்யூபா...நான் பாத்ததில்ல
நாடியா : ரெண்டு மூணு வெப் சீரிஸ் பண்ணியிருக்கேன்
அண்ணாச்சி : ஓ...வெப் சீரிஸா...நான் பாத்ததில்ல
நாடியா : சோஷியல் மீடியால பெரியாளுங்க...
அண்ணாச்சி : ஓ சோஷியல் மீடியாவா...எனக்கு தெரியாது
நாடியா : யோவ் என்னயா நீ ? உனக்கு என்னதான் தெரியும்?
அண்ணாச்சி : பக்கத்து வீட்ல இருக்கு, எதிர் வீட்ல இருக்கு...ஏ உங்க வீட்ல இருக்கா...டேபிள் மேட் ?
நாடியா : ஞே...... //
பிரியங்கா பள்ளி எழுச்சி முடிஞ்சதும் அலாரப்பாட்டு போட்டானுங்க. பேர் வச்சாலும் பாட்டு. பொண்ணுங்க எல்லாம் ஆடுச்சுங்க. அபிஷேக் கூட சின்னப்பொண்ணு கூட இடுப்ப ஷேக்கி ஆடிட்டு இருந்தாப்ல.
அபினய் பிடி வாத்தி கணக்கா
“அவன் இடிக்காம ஆடு, லைன தாண்டாத, முன்னாடி ரெண்டு ஸ்டெப் விட்டு ஆடு”ன்னு மேச்சுட்டு இருந்தாப்ல. இந்த நிரூப் பய மட்டும் மேலு வளையாம, மத்தவங்க ஆடுறதப் பாத்து ரசிச்சிட்டு இருந்தான். பையனோட நடவடிக்கைகளெல்லாம் பில்டர் பாலாஜிய நினைவுப்படுத்துது.
அப்றம் பெருசா சொல்றதுக்கு எதுவுமில்ல. ரெண்டு ரெண்டு பேரா வீட்ட அளந்துகிட்டு இருந்தானுங்க. பிக்பாஸ் எல்லாரையும் லிவிங் ஏரியாவுக்கு கூப்ட்டாப்ல.
“டீம் பிரிக்கனும், அதுக்கு கேப்டன் வேணும். மொதல்ல கேப்ட்டன சூஸ் பண்ணுவோம்”னு சொல்லி, “எவனுக்கெல்லாம் தகுதி இருக்குன்னு நெனைக்கிறீங்களோ அவங்க வாங்க”ன்னாப்ல ராஜு, நமீதா, சின்னப்பொண்ணு, நிரூப், பாவனி. இவங்கதான் டீம் கேப்டன்ஸாம். (அப்போ வீட்டுக் கேப்டன்? ) “எந்த டீம் யாருக்குன்னு சொல்லி , அப்பிடியே டீம் எடுங்க”ன்னு சொன்னாப்ல.
கக்கூஸ் கிளீனிங் டீம் : ராஜு – கேப்டன் = அபிஷேக், தாமரை, வருண், அண்ணாச்சி
வெஷல் வாஷிங்க் டீம் : நமீதா – கேப்டன் = மது, நிரூப், ஷ்ருதி
குக்கிங் டீம் : சின்னப்பொண்ணு – கேப்டன் = பிரியங்கா, ஆக்ஷரா, சிபி
ஹவுஸ் கீப்பிங் டீம் : பாவனி – கேப்டன் = இசை, நாடியா, ஐக்கி, அபினய்
இதான் இப்போதைக்கு டீம். "சரி உங்க அன்றாட வேலைகளப் பாருங்க"ன்னு பிக்கி சொன்னதும் பூரா பேருக்கும் குழப்பம்
"அப்பிடி என்ன அன்றாட வேலைகள்?"னு அப்பறமா "ஓ...!" அப்டின்னு புரிஞ்சா மாதிரி குரூப் குரூப்பா ஒவ்வொரு மூலையிளையும் உக்காந்து பேச ஆரம்பிச்சானுங்க.
இன்னும் பெருசா இந்த வீட்ல குரூப் சேரல. இபோதைக்கு நம்ம ஐக்கியும், மதுவும் தான் அங்க அங்க ட்ரெயின் விட்டுட்டு இருக்குதுங்க.
ராஜு : ஐக்கி யார மாதிரி இருக்கு தெரியுமா ?
இசைவாணி : சாமிநாதனே வா வா பாட்டுப்பாடி ஆடுன ஷகீரா மாதிரி இருக்கு
ராஜூ : உனக்கு தலையில ஏதாச்சும் இருக்கா? அது அச்சு அசலா ஜமீன் கோட்டை பேய்க்கிழவி மாதிரிதான்
இருக்கு.....நைட்டானா தலைய 360 டிகிரி சுத்தும் போல
அபிஷேக் : ஐக்கி அவ்வையார் மாதிரி
அபினய் : ஜமீன் கோட்டை நான் சின்ன வயசுல பாத்தது...
அபிஷேக் : ஐக்கி அவ்வையார் மாதிரி
ராஜு : ஜமீன் கோட்டை நான் பெரிய வயசுல பாத்தது
ஆபிஷேக் : ஐக்கி அவ்வையார் மாதிரி
இசைவாணி : நான் ஜமீன் கோட்டை நான் கே டிவில பாத்தது
ராஜு : ஆமா அபிஷேக்கு நீ எதுவோ இடையில சொன்னியே என்ன அது ?
அபிஷேக் : ஜமீன் கோட்டை நான் சீமராஜால பாத்தது (கடைசி வரை நான் சொன்னத இவனுங்க கேக்கவே இல்லல்ல) //
எனக்கென்னமோ ஐக்கியப் பாக்குறப்ப கேம் ஆஃப் த்ரோன்ஸ்ல வர “டிராகன் தாய்” அன்னை டேனிரிஸ் டார்கரியன் மாதிரிதான் தோணுது. பொண்ணு ராப் பாடிக்காட்டுச்சு.
யாராச்சும் பேசிட்டு இருக்குறப்போ கண்ணாடி கிளாஸ்ல கல்ல வச்சு தேய்க்கிறாப்ல ஒரு குரல் கேக்கும் அது வேற யாருமில்ல நம்ம ஜெர்மனி மதுவின் மதுரக்குரல் தான் அது.
இருந்திருந்தாப்ல சிபிகிட்ட “நீங்க உருப்பட செஞ்சீங்களா?’ன்னு கேக்க அவன் “எதே உருப்பட செஞ்சியாவா?”ன்னு அதிர்ச்சியாக, பொண்ணு “ஒரு படம் செஞ்சீங்களா?”ன்னு கேட்டிருக்கு. ரொம்ப எதாச்சும் அழுத்திக் கேட்டா “நமக்கு அதெல்லாம் தெரியாதிண்னா”ன்னு போயிடுது. இதுக்கு யூட்யூப்ல வர “ அந்த ஸ்ரீ லங்கா பொண்ண கூட்டிட்டு வந்திருக்கலாம். அது பாட்டுக்கு “ மா...லகம தெவத்தினா....சுகுமாரி....மணல் லாரி”ன்னு பாடிட்டு இருந்திருக்கும். ஐடியா இல்லாத பிக்பாஸு. இந்த நாடியாவெல்லாம் பெரிய டிக்டாக்கர்னு சொன்னானுங்க....அது எப்பப்பாத்தாலும் கைல தட்டுமா, தட்டுல சோறுமா திரியுது.
அந்தப்பக்கமா ஐக்கியும், ஷ்ருதியும் சோடி போட்டுட்டு வர. கைல எதையோ எடுத்து காமிக்க...
ராஜு : என்ன ரெண்டு பேரும் ஜோடியா சுத்துறீங்க?
அபிஷேக் : ஆமால்ல....ரெட்டைக்கதிரே....இதோ
ஐக்கி : (ராப் ஸ்டைல்ல) ஹேய் தமிழா...சுத்துனா ஜோடி....மூடுனா மூடி
ராஜு : ஆமா இது என்ன?
அபிஷேக் : இது செருப்புல சொருகுறது....செருப்பலங்காரம்....
ஐக்கி : (ராப்) தமிழா...இது என்ன என்று நீ கேட்டுப்பாரு.....நாங்க ரொம்ப தறுமாறு
ராஜு : தெரியாம கூப்ட்டுட்டேன் போங்கம்மா ! ஆமா அபிஷேக்கு இடையில இடையில என்னமோ சொல்லிட்டு இருந்தியே...என்ன அது?
அபிஷேக் : என் செருப்பு நம்பர் 8ன்னு சொன்னேன் (கடைசி வரை நான் சொன்னத இவனுங்க கேக்கவே இல்லல்ல) //
அப்பறமா அந்தப் பக்கமா மதுரக்குரல் மதுவோட சுத்தி வந்த ஐக்கி அபிஷேக், ராஜு, அபினய் உக்காந்திருந்ததப் பாத்துட்டு அவனுங்க கூட உக்காந்துச்சு.
மது : இதுல யாரு யாருக்கு கல்யாணம் ஆகிடுச்சுதிண்னா?
ஐக்கி : (ராப்) ஏய் தமிழா.....பிரைவேட் லிமிட்டட்.....நானோ கமிட்டெட்
அபிஷேக் : எல்லாத்துக்கும் கல்யாணமாகிடுச்சு....எனக்கு டைவர்ஸ் ஆகிடுச்சு
ராஜு : ஆமா எங்களுக்கு கல்யாணமாகிடுச்சு...
மது : பேபில்லாம் இருக்குதிண்னா ?
ஐக்கி : ஏய் தமிழா...
ராஜு : தாயே போதும்....தமிழர்கள் இதுக்கு மேல தாங்க மாட்டாங்க.
அபினய் : ம்ம்ம் எனக்கு 2 பேபி...
அபிஷேக் : எனக்கு நானே பேபி....
ராஜு : அப்பறம் உனக்கு எப்ப கல்யாணம் பேபி....
மது : கல்யாணத்துக்கு மாப்ள வேணும்திண்ணா
ராஜு : ஆமா அபிஷேக்கு இடையில இடையில என்னமோ சொல்லிட்டு இருந்தியே...என்ன அது?
அபிஷேக் : ஓ பேபி பேபின்னு பாட்டுப் பாடுனேன் (கடைசி வரை நான் சொன்னத இவனுங்க கேக்கவே இல்லல்ல) //
“ஆமா எல்லாரும் எத்தனை நாள் இருக்கலாம்னு வந்திருக்கீங்க?”ன்னு எல்லார்கிட்டையும் நிரூப் கேக்க,
“இதென்ன கல்யாண மண்டபமா வந்து தங்கிட்டு கிளம்ப, பிக்பாஸ் வீடுடா....பக்கி”ன்னு எல்லாரும் பதறிட்டானுங்க.
அப்பறம் இந்த மொக்கை ராஜு தாமரைக்கு பேய் கதை சொல்றேன்னு நமக்கு பேதிதான் வரவச்சான். ஆச்சா...! மொத நாளே நம்மளா முக்க வுட்டானுங்க. இன்னும் எப்பிடிப் போகுதுன்னு பாக்கலாம்.