கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பிக் பாஸ் சீசன் 5 - நாள் 3 - 06.10.21

siteadmin

Administrator
Staff member
பிக்பாஸ் – 5

நாள் – 3 (06.10.21)

பிக்பாஸ் : இது பிக்பாஸ் சீசன் 5 ! இங்க நாங்க உள்ள வந்து அடைக்கிற இம்சை பிடிச்சவனுங்களுக்கு ஏகப்பட்ட டாஸ்க் குடுத்தாலும் எகத்தாளமாத்தான் பண்றானுங்க. இங்க இப்ப நடந்துட்டு இருக்குற “ஒரு கத சொல்லப்போறோம்” அழுகாச்சி கதை டாஸ்க்க இப்ப “இதெல்லாம் ஒரு கண்டெண்டாடா?”ன்னு காண்டோட பாத்து அழுதுட்டு இருக்குற உங்களுக்கு குடுக்கலாம்னு இருக்கோம். பாக்குறது மட்டுமில்லாம பகுமானத்துக்கு எழுதுறேன்னு வேற வீம்பா திரியுற அருண்....நீங்க முன்னாடி வந்து உங்க கதைய சொல்லுங்க.
சிஸ்டர், சிஸ்டர் குழந்தைங்க, அப்பா, மனைவி, என் பசங்கன்னு வீட்ல எல்லாரும் உக்காந்திருக்க அவங்க முன்னாடி வந்து நின்னு
மீ : என் பேரு அருண். சின்ன வயசுல கஷ்டம் இருந்துச்சு. ஆனா இப்பத்தான் ஒரு 3 நாளா பெருங்கஷ்டம். பிக்பாஸ் சீசன் 5 பாக்குறதுதான். அதுவும் 3வது நாள்லாம் பாருங்க....கொடுமையோ கொடுமை பெருங்கொடுமை.
காலையில அலரமா “வாத்தி கமிங்” பாட்டு போட்டாங்க. ஆனா பாத்தா எங்களுக்கு வாந்திதான் கமிங். இவனுங்க கடைசி வரைக்கும் ஆடுனதா நெனச்சுக்கிட்டானுங்களே தவிர...ஆடெல்லாம் இல்ல.

(வீட்ல சிஸ்டர் கண்ணு கலங்குது....)

அப்பறம் அண்ணாச்சிய கூப்ட்டு கதை சொல்ல சொன்னீங்க. அவரும் கூட ஏதோ நல்லாத்தான் சொன்னாப்ல. ஆனா சொல்லி முடிச்சதும் ஒரு நாலு டிஸ்லைக் விழுந்து போச்சு. அதுக்கு அண்ணாச்சி காரணம் கேட்டதுக்கு ஹால்ஃப் இயர்லி எக்ஸாம்ல எக்கனாமிக்ஸ் கேள்விக்கு பதில் சொன்ன மாதிரி சொன்னானுங்க பாருங்க ஒரு பதில்.....அதுவும் அண்ணாச்சி சிரிக்கிற மாதிரி பேசுனதுக்கு நம்ம பெரிய பீரோ நிரூப் சிரிச்சிட்டான் போல.... அது கேக்குறதுக்கு டிஸ்டபர்ன்ஸ் ஆகிடுச்சுன்னு உஷ்னு சொல்லி உசுப்பேத்தி விட்டான் அபிஷேக்கு அவனுக்கும் சப்போர்ட் பண்றதுக்கு சிபி வந்து நிரூப் கிட்ட வாதாடுனதப் பாத்......ஃபூ சாரி பிக்பஸ் குரல் கம்முது....

(பையன் டவுசர்லயே உச்சா போயிட்டான்)

இதுல பாவம் டிஸ்லைக் குடுத்த நமிதாவும் , நாடியாவும் மதுரக்குரல் மதுவ மடியில உக்கார வச்சு மானாவாரியா விளக்க ஆரம்பிக்க....! ஒரு பிளாஷ்பேக் வேணும்னா போவோம்
நமிதா : மது...டிஸ்லைக் குடுக்கனும்னு குடுக்கல....ஆனா அதையும் குடுக்க சொல்லி குடுத்துருக்குறப்போ குடுத்துதான ஆகனும்

மது : ஆமாதிண்ணா

நாடியா : நான் எப்டின்னா....

நமிதா : எப்டின்னா நீயே பாரு எல்லா கதையும் எல்லாருகும் பிடிக்குமா என்ன?

மது : பிடிக்காதிண்ணா

நாடியா : ரிலேட் ஆகாம நாம

நமிதா : ஆகாத வேலையெல்லாம் பாக்கக் கூடாது. எனக்கு பிடிக்கலென்னா பிடிக்கலதான்...புரியுதா

மது : புரியுதிண்ணா

நாடியா : இப்ப....(மை.வா : அய்யய்யோ சொல்ல வந்த எல்லாத்தையும் உள்ள புகுந்து கெடுத்துட்டா இப்ப பேச வந்த டாபிக்கே மறந்துபோச்சு)

மது : என்னாதிண்ணா?

நாடியா : நாசமாப்போச்சுதிண்ணா....! //

பாவம் நாடியா பத்த வைக்காத பீடியா போச்சு...
அப்பறம் ஷ்ருதி வந்துச்சு....கதை சொல்ல !
துலாபாரம் படத்துக்கப்பறம் துயரம் நிறஞ்ச ஒரே கதை நம்ம ஷ்ருதியோடதுதான். அப்பாவுக்கும், தாத்தாவுக்கும் ஒரே வயசுன்னா இத எங்க போய் சொல்றது? பிக்பாஸ்லதான் சொல்ல முடியும். ஆனாலும் இதையும் கூட பொறுத்துக்கிட்டாச்சு.

ஆனா.... ஆனா....ஃபுட்டேஜ்ஜே எதுவும் கிடைக்காம அபிஷேக் ஃபுட்டேஜ்ஜ எடுத்து போட்டீங்க பாருங்க......

(வீட்ல இருக்குற நண்டு சிண்டுல இருந்து எல்லாரும் ஓன்னு அழ ஆரம்பிக்க)

எந்திரிச்சு வெளிய ஓட முடியாதுன்ற ஓரே காரணத்துக்காக அவன் பேசுற பேச்செல்லாம் இருக்கே. உங்களுக்கே அடுக்குமா சொல்லுங்க. தம்பி பேசுற ஒவ்வொரு விஷயத்துக்கும் நமக்கு நரம்பெல்லாம் பொடைக்குது. ஷட்டவுனே ஆகாத சவுண்ட் பாரா இருக்கான். கோவம் வர மாதிரி காமெடி பண்றதுல கோவா பெஸ்டிவல்ல கோல்டு மெடல் வாங்குனான் போல. சரி அதான் அப்பிடின்னா சிரிப்பு வர மாதிரி செண்டிமென்ட் பேசுறான்.

ஆனாலும் பிரியங்காகிட்ட கூடிய சீக்கிரம் மாட்டி சின்னாபின்னமாவன்னு எதிர்பாக்கலாம். பட் அதுவரைக்கும் அவன் உள்ள இருந்தா என்ன பண்றதுன்னு நெனச்சுப் பாத்தாலே பேய் பயம் வருது.....

(அப்பா வேகமா எந்திரிச்சு திருநீறு பாக்கெட்ட எடுத்துட்டு வந்து வீடு பூராம் யூரியா மாதிரி தூவி விட்டாரு....)

ஆனாலும் வாழ்க்கையில வசந்தம் மாதிரி பிரியங்கா அட்ராசிட்டி ஃபுட்டேஜ் காப்பாத்துச்சு. தண்ணியப் போட்டு பேப்பர் போட்ட பழைய ஆபீஸ்ல பாஸ்கிட்ட சலம்புற மாதிரி பிரியங்கா வேற லெவெல் பர்பார்மென்ஸ்.

சின்னப்பொண்ணோட நைட்டிய களவாண்ட கேஸ பிக்கி மேல எழுதுனது, பிக்கிய சவுடாலா சண்டைக்கு கூட்டதுன்னு எல்லாம் நலம். பிரியங்கா கூட செட்டு சேருறவன் பொழைப்பான்னு தோணுது. அவ்வளவுதான். ஷோ முடிஞ்சது. என் கதையும் முடிஞ்சது. இந்த கதை உங்களுக்கு பிடிச்சிருந்தா லைக், இல்லேன்னா டிஸ்லைக், ரொம்ப பிடிச்சிருந்தா ஹார்ட் சிம்பல குத்துங்க.

மறுபடியும் சோஃபால வந்து உக்காந்த என்னய எல்லாரும் அழுதுகிட்டே வந்து கட்டிப்பிடிக்க....

இருங்க மறந்துட்டேன்


இந்த கஷ்டத்த பாட்டா சொல்லனும்னா “சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.....டெய்லியுமே இப்டித்தான்னா தாங்காது பூமி”
 
Top