பிக்பாஸ் – 5
நாள் – 4 (07.10.21)
“டூ டுட்டு டூ டுட்டு” பாட்டு அலாரம். பங்கமா குடிச்சுட்டு பங்கர மாதிரி ஆளுக்கொரு பக்கமா பங்க்ஷன்ல ஆடுற மாதிரி ஆடிட்டு இருந்தானுங்க. ஒரு ஒழுங்கும் இல்ல. நாடியாவும், நமிதாவும் மட்டும் ஒரு மாதிரி நீட்டா ஆடுனாங்க. ராஜூ, அண்ணாச்சி எல்லாம் ஏதோ முயற்சி பண்ணாலும் அது நசநசன்னுதான் இருக்கு.
மொத இந்த சீசன்ல வீடே தீபாவளி சமயத்து தேஜஸ் எக்ஸ்பிரஸ் கணக்கா தான் இருக்கு. பிக்கியே அப்பப்ப வரும்போது டீ, காபி விக்குறவன் மாதிரிதான் பேசிட்டுப் போறாப்ல. பாதி பேத்துக்குமேல எவன் எந்தத் திக்குல தெள்ளவாரித்தனம் பண்ணிட்டுத் திரியுறான், எந்த மூலையில மொள்ளமாரித்தனம் பண்றான்னு ஒண்ணும் புரியல. இந்த வருண்ணு ஒருத்தன உள்ள வரப்போ பாத்தது அதுக்கப்பறம் அன்னைக்கு நைட்டு பொம்மை சட்டையும், பொம்மை டவுசரும் போட்டப்ப பாத்தது. இப்ப அவன் வீட்ல எங்க இருக்கான்னு தெரியல. கூட்டத்துல தெரியாதுன்னு கடும் உளைச்சல்ல அவன நம்ம “மூடு வந்த முனி” நிரூப் கொண்ணு கிண்ணு திண்ணுட்டானான்னு தெரியல. இன்னைக்கு அவன் பல எடத்துல தலய ஒரு வெட்டு வெட்டி மூக்கு உறிஞ்சுறத பாக்க முடிஞ்சது இதெல்லாம் சைக்கோதனத்தோட சாயல். பாத்து இருந்துக்கோங்கடா எல்லாரும்.
சின்னப் பொண்ணோட குறட்டை சத்தம் தமரைக்கு தலைவலி உண்டு பண்ண, அது தலகாணிய அமுக்கி கொல்ல பிளான் பண்ணதா ஒரு பிராது. “இதெல்லாம் அட்டெம்ப்ட்டு கேஸுலதான வரும்? இது கொலைகார கூட்டமா இருக்கும் போல”னு பிரியங்கா சட்ட ஆலோசனை நடத்திட்டு இருந்துச்சு.
நைட்டிய போடக்கூடாதுன்னு சொல்டானுங்க போல “ அப்பறம் எப்பிடி நான் என்னைய ஒரு பெண்ணா உணருறது?”ன்னு சின்னப்பொண்னு சினுங்கிக்கிட்டு இருந்துச்சு. “என்னய வேற டவுசர் போட்டு சுத்த வேணம்னு சொல்லிதான் பிரண்ட்ஸ் எல்லாம் உள்ள அனுப்புனானுங்க”ன்னு அக்ஷராவுக்கு வேற அங்கலாய்ப்பு. அவனுங்கள்லாம் அய்க்கிய என்ன சொல்லுவானுங்க ? இன்னைக்கெல்லாம் அம்மணி ஒரு தலவாணி உறையத்தான் போட்டிருந்துச்சு. அதுவும் சின்ன தலவாணி.
என்னடா புதுசா ஒரு 3 சைனீஸ் பட பேர சொல்லுது ஆக்ஷன் மார்ஷியல் ஆர்ட்ஸ் படமா இருக்கும்போல டெலிகிராம்ல தேடி பாத்துறலாம்னு கூர்ந்து கவனிச்சா அது நம்ம “நாலடியார்” நாடியாவோட பசங்க பேராம். சாங்க் சூயி, சாங் சிங், சாம்சங்னு என்னமோ சொல்லுது. அம்மணி 4 வார்த்தைக்கு மேல பேச மாட்டேங்குது, பேசுனாலும் நமிதா உள்ள புகுந்து வாங்கிக்குது அதனால “நாலடியார்”ன்ற நாமகரணம் நாடியாவுக்கு சூட்டப்படுது. மத்தபடி அம்மணி “தென்றல் வந்து என்னைத் தொடும்” ஜெய ஸ்ரீ சாயல்ல இருக்காங்க. அடடே ஆச்சர்யக்குறி !
“ஒரு நாளைக்கு அரை மணிநேரமாவது யார்கிட்டையாவது அசிங்கப்பட்டாதான் அவனுக்கு நைட்டு கணவுல நயந்தாரா வருதாம்பா”ன்னு சொல்ற அளவுக்கு, அபிஷேக்கு அசிங்கப்படாத நாளே கிடையாது. இன்னைக்கு இருந்திருந்தாப்ல பாவனிய பாத்து “உன்ன பாத்தா வாஆஆஆஆர்ம் ஃபீல் வருது. உங்கிட்ட எப்ப வேணும்னாலும் வந்து பேசிக்கலாம்” அப்டின்னு சொல்லிட்டு கேமராவப் பாத்து “யாராச்சும் தப்பா நெனச்சீங்கன்னா கொண்ணுருவேன்”னு நம்மள பாத்து சொன்னதுமில்லாம, பாவனிக்கு வயசு 34ன்னு சொல்லிட்டான். “அந்த ஈர வெங்காயமெல்லாம் இருக்கட்டும் நீ மொத அந்தப் பொண்ணு மேலருந்து கைய எடுடா”ன்னு நம்ம சொன்னது அவனுக்கு கேட்டிருக்காது. பாவனியோ “அட பாவி வரப்பான், உன்ன இப்ப என் வயச சொல்லி விளையாட சொன்னானுங்களா?ன்னு கேக்க, “போச்சு அப்ப நீ வெளிய போனா ஸ்கூல் பசங்க வந்து லவ் லெட்டர் குடுத்தா என்ன பண்ணுவ?”ன்னு காவிய காமெடி பண்ண அதுவோ “தேங்க்ஸ்னு சொல்லி வாங்கிக்குவேன்”னு சொன்னதுக்கப்பறம் அபிஷேக்கு அவன் மூக்க மதியம் வரைக்கும் தேடிட்டு இருந்தான்.
அப்பறம் போயி அதுகிட்டயே அதோட கதைய கேட்டு இவன் அழுக “இன்னைக்கு உனக்கு நாந்தானாடா?”ன்ற மாதிரி பயந்து பாத்துச்சு. “மன உளைச்சல்ல இருந்து வேலைதான் காப்பாத்துச்சு”ன்னு அபிஷேக்கு சொன்னான். இவன் கிட்ட இருந்து பாவனிய யாராச்சும் காப்பாத்துங்கப்பா.
ஆனாலும் விடமாட்றானே....பாவனி மடியில படுத்துகிட்டு அத பேன் பாக்க சொல்லிட்டு இருந்தான். ராஜூ வந்து “ஆரம்பிச்சுட்டியா உன் 5ம் அதிகாரத்த?”ன்னு கேட்டதுக்கு “நாங்க அக்கா தம்பி”ன்னு சொன்னான். “ஏன் “நாங்களும் தம்பிதான இன்னொரு கால எனக்கு குடு”ன்னான் ராஜு. பையன் காமெடில காமநெடி கொஞ்சம் தூக்கலா இருக்கு...கூடவே கக்கூஸ் காமெடி வேற....இவன் தேற மாட்டான் போல.
அண்ணாச்சி ஒரு 5 பேர வச்சுகிட்டு படம் எடுப்போம்னு காமெடி பண்ணிட்டு இருந்தாரு. அதுல ஒரு சீன் பண்ணலாம்னு “கடல்ல விழுந்த அக்ஷராவப் பாத்து கரையில நின்னு கத்து”ன்னு தாமரைய சொன்னதும், அதக்கேட்ட இசைவாணி இன்ஸ்டண்டா கண்ணீர் விட, “என்னாச்சு?”ன்னு கேட்ட நாலடியார் நாடியாகிட்ட “இப்பிடிதான் என் பிரண்டு ஒன்னு மர்கயா....திடீர்னு அந்த நெனப்பு ஆகயா”ன்னு அழுதுச்சு. “இந்த செட்டுல எல்லா வார்த்தைக்கும் எல்லார்கிட்டயும் ஒரு கதை இருக்கும் போல...எவங்கிட்ட எதப் பேசுனாலும் நொழுவுறானுங்க.
தாமரையக்கா வேற இன்னசென்ட் எபிசோட ரிலீஸ் பண்ணமானியமா இருக்கு. இதுக்கு மேல இது இப்பிடியே பண்ணா பிக்பாஸ் வீட்டுல பெருக்கி கூட்ட விட்டுருவானுங்க. இன்னைக்குக் கூட மேக்கப் சம்பந்தமா பிரியங்காகிட்ட கேக்க அது மூஞ்சி குடுத்தே பேசல.
மதுரக்குரல் மது கதை
எண்ட பேரு மதுனான்....ஜெர்மனில இருந்து வந்தனான்...அப்றம் ஆஸ்திரேலியாவுக்கு போனனான். அக்காக் கூட இருந்தனான்....தந்தன தந்தன தானனனா...... தந்தன தந்தன தானனனா...... தந்தன தந்தன தானனனா...... தந்தன தந்தன தானனனா...... தந்தன தந்தன தானனனா......தந்தன தந்தன தானனனா...... தந்தன தந்தன தானனனா...... தந்தன தந்தன தானனனா...... தந்தன தந்தன தானனனா...... தந்தன தந்தன தானனனா...... தந்தன தந்தன தானனனா......
இதான் நம்ம மதுரக்குரல் மது சொன்ன கதை....எனக்கு இப்பிடித்தான் கேட்டுச்சு. ஆனா கொஞ்சம் ஊண்டிக் கேட்டதுல பொண்ணுக்கு பாவம் ஒரு பிரேக்கப்பால சூசைட் தாட் பிரச்சனை இருந்திருக்கு. நைட்டான நடந்து போயி ஜன்னல் கதவ தொறந்து குதிக்கப் பாக்குமாம். அப்பிடியே இன்னைக்கு நைட்டு மட்டும் பொண்ணுக்கு மர்டர் தாட் வந்து கையோட அபிஷேக்க இழுத்துட்டுப் போயி தள்ளிவிட்டா நல்லாயிருக்கும். அப்பறம் கொஞ்ச நாள் கழிச்சு பழைய பிரசிடண்ட் ஒபாமா....எப்பவும் முக்கியம் அப்பாம்மான்னு தோணி அந்த வேலையெல்லாம் இப்பப் பண்றது இல்லையாம்.
இதப் பத்தி வெளிய பேசிட்டு இருந்தப்ப வாய வச்சுகிட்டு சும்மா இல்லாம அண்ணாச்சிய ஒரண்டை இழுத்து ஓங்கி வாங்கிக் கட்டிக்கிட்டான் அபிஷேக்கு. மறுபடியும் மூக்க தேடுனான்.
ரைட்.....பிக்பாஸ் வரலாற்றுலையே முதன் முறையா இந்த தடவதான் உருப்படியா ஒரு விஷயம் பண்னானுங்க அது நமிதாவ உள்ள கொண்டாந்தது. இந்த பிளாட்பார்ம வந்த 4வது நாளே சரியா பயன்படுத்துன மொத & ஒரே ஆள் நமிதாதான். சாதரணமா ஒரு திருநங்கையோட கதைதானன்னு அசால்ட்டா கேக்க ஆரம்பிச்ச எல்லாருக்கும் முதுகுத்தண்டுல மின்னல் வெட்டியிருக்கும். ரண கொடூரமான அனுபவங்கள். கதை சொல்லி முடிச்சப்பறம் அவங்க மக்கள பாத்து சொன்னதும், கேட்டுக்கிட்டதும் தரமான விஷயங்கள். இது அவங்க உள்ள வந்தப்பயே முடிவு பண்ண விஷயம்னாலும் இப்ப இங்க சொல்லிக்கிறேன். அவங்கள எப்பவும் ஒரு பொண்ணா ட்ரீட் பண்ணிதான் எழுதுவேன். ஏன்னா அதான அவங்க. எனக்கே இவ்வளவு ஈசியா புரிஞ்ச ஒரு விஷயத்த ஆண்டவர் அன்னைக்கு இவங்கள ஏன் பால் கடந்தோர், காபி மறந்தோர், டீ வெறுப்போர்னு சுத்துனாருன்னு தெரியல? 10 வருஷம் கழிச்சு நமக்கு புரியலாம். காத்திருப்போம். நமிதா எல்லார் இதையத்தையும் ஜெயிச்சாங்க.
பாவனி பாவப்பட்ட கதைய வெளிய சொல்லாதன்னு அபினய் சொல்டான் போல “அத ஏன் அப்பிடி சொன்னான்?”னு மதுகிட்ட கேட்டு அழுதுட்டு இருந்துச்சு. ஊருக்குள்ள எவனுக்கு கஷ்டம்னாலும் மதுதான் மடியில போட்டு தாலாட்டுது...“அத அவருகிட்டதாணா கேட்டுதானா பாக்கலாந்தானா தானானா னானான்”னு மதுரக்குரல் பதில் சொல்லிச்சு. இத அபினய்கிட்ட கேட்டதுக்கு “அதுவா....அன்னைக்கு பேச ஆள் கிடைக்காம பல்லு குத்திகிட்டு பொளந்துட்டு படுத்திருந்தேன். அந்த பக்கமா அபிஷேக்கு வேற வந்தானா...அதான் வாகா நீ இருக்கவும் ஆகான்னு கூப்ட்டு உக்கார வச்சுகிட்டேன். மத்தபடி நீ உன் கதைய அமேஸான், நெட் பிளிக்ஸ்ஸுக்கு கூட குடு. ஊருல நிலம் கிலம் இருந்தா அதையும் குடு....உன்ன லேபரா ப்ரமோட் பண்றேன்”னு ஆஃபர் குடுத்து அனுப்பிட்டான். ஆட்டம் சூடு பிடிக்கிறாப்ல இருக்கு. பாக்கலாம்.