கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பிக் பாஸ் சீசன் 5 - நாள் 5 - 08.10.21

siteadmin

Administrator
Staff member
பிக்பாஸ் – 5

நாள் – 5 (08.10.21)

4ம் நாள் நைட்டு தாமரைக்கு நடக்க சொல்லிக்குடுக்குறேன்னு தகறார ஸ்டார்ட் பண்ணானுங்க. ஆமா இந்த சீசனோட மொத பஞ்சாயத்து ! அதாவது பகல்ல பக்கம் பாத்து பேசு ராத்திரியில அதுவும் பேசாதன்னு சொல்லுவானுங்க. ஆனா பாத்தீங்கன்னா இந்த சீசன்ல பக்கம் பக்கமா பேசுறவனுங்கள எறக்கி விட்டுருக்கானுங்க.

சும்மா இருந்த தாமரைக்கு ராம்ப் வாக் சொல்லிக்குடுக்குறேன்னு சொல்லி அத நடக்க வுட....அது ரொம்ப ஆர்வமாகி நடையோ நடன்னு நடக்க பின்னாடி இருந்து லேடியோ லேடியோன்னு ரேடியோ மாதிரி கதறிட்டு இருந்துச்சு அய்க்கி. தாமரை ரொம்ப கேசுவலா நமிதாகிட்ட “ஆள மயக்குற அமுதப் பார்வை வீசுவியே அதுல ஒரு அஞ்சு ஐட்டத்த அக்காக்கு சொல்லிக்குடு”ன்னு கேக்க. நமீதா அப்பவே “இந்தா ஆள மயக்குறேன் அண்டாவ குவுக்குறேன்னல்லாம் பொத்தாம் பொதுவா சொல்லாம, கோவமா பாக்குறதா இல்ல கொஞ்சி பாக்குறதான்னு தெளிவா சொல்லு”ன்னு சொல்லிடுச்சு.

அப்பறமா பெட்ரூமுல மூடு முனி மூளை சுறுசுறுப்பா வேலை செஞ்சதால “வாங்க எல்லாரும் மாஃபியா வெளையாடலாம்”னு கூப்ட்டான். ஓசியா கெடச்ச காஃபியா நெனச்சு மாஃபியா வெளையாண்டானுங்க. புதுசா ஒண்ணுமில்ல நம்ம ஊரு ராஜா, ராணி, திருடன், போலீஸ் விளையாட்டுதான் அத என்னமோ மவுண்ட்பேட்டன் கண்டுபிடிச்ச விளையாட்டு மாதிரி மாஃபியான்னு பேர மாத்தி விளையாண்டானுங்க.

எந்த பஸ் வந்தாலும் ஏறிப் போற மாதிரி என்ன விளையாட்டுன்னே சரியாதெரியாம தாமரையும் சேந்துகிச்சு. யரோ திருடன்னு நெனச்சு பிரியங்காகிட்டயே அத சொல்லி கடைசில பாத்தா பிரியங்காதான் திருடின்னு தெரிஞ்சதும் நமித பல்பு வாங்குச்சு. இத நெனச்சு நெனச்சு கக்கூஸ்ல உக்காந்து எல்லாருமே சிரிக்க, தாமரை கொஞ்சம் அதிகமா சிரிச்சு வச்சுருச்சு....! இதுல “நீ 40 புள்ளைய என்ன 400 பிள்ளைய குடுத்தாலும்”னு ஒரு அன்வான்ட்டட் அறிக்கைய விட்டுச்சு. ஒரு கட்டத்துல பிரியங்கா சுதாரிச்சு தாமரை...நீ வீணா சிரிச்சு வெறுப்பேத்துற மாதிரி இருக்கு....வம்புல மாட்டாத ஆமான்னு சொல்லிப்பாத்துச்சு.

அப்பவே நமிதா “நாளைக்கு இருக்கு சண்ட,
உடையப்போகுது உன் மண்ட”ன்னு சொல்லிட்டு வெளிய போச்சு. சரின்னு பெட் ரூமுக்கு வந்தா அங்கயும் விழுந்து விழுந்து சிரிச்சிட்டு இருந்துச்சு தாமரை

பிரியங்கா : ஆமா இப்ப நீ எதுக்கு சிரிச்சுட்டு இருக்க?
தாமரை : அப்பத்தான நீ எங்கிட்ட எதுக்கு சிரிப்பன்னு கேப்ப.....ஹா ஹா ஹா ஹா
பிரியங்கா : சரி கேட்டுட்டேன்....சொல்லு எதுக்கு சிரிக்கிற?
தாமரை : சிரிப்பு வந்துச்சு அதுனால சிரிக்கிறேன் ஹா ஹா ஹா ஹா
பிரியங்கா : (மை.வா : எங்ககிட்டயேவா...ரைட்டு) நீ இப்பிடி சிரிச்சு நமிதாவ நல்லா வெறுப்பேத்துற
நமிதா : எதே...என்னய வெறுப்பேத்துதா?
பிரியங்கா : அதுக்காக நீ அப்பிடி எடுத்துக்க வேணாம்....அது சும்மா வெள்ளந்தியா கூட சிரிக்கலாம்.....ஆனா தாமரை சிரிச்சு வெறுப்பேத்தாத
நமிதா : யாரச்சும் இனி சிரிச்சா அசிங்க அசிங்கமா கேப்பேன்
பிரியங்கா : நீ இப்பிடி கோவப்பட வேண்டிய அவசியமில்ல...சும்மா ஜாலிதான் ! தாமரை நீ சிரிச்சு வெறுப்பேத்துனது போதும்
நமிதா : ரைட்டு....இதுக்கு மேல சும்மா இருக்க முடியாது. தாமரைக்கு தாயக்கட்டைய உருட்ட வேண்டியதுதான்
பிரியங்கா : தாமரை இவளோ நடக்குது இன்னும் சிரிச்சு வெறுப்பேத்துற....
தாமரை : நான் சிரிப்ப நிப்பாட்டி ரொம்ப நேரமாகிப்போச்சே !
பிரியங்கா : ஆனாலும் அவ கோவப்பட்டுட்டா நீ எதுக்கும் மன்னிப்பு கேட்டுரு.
தாமரை : எதுக்கு மன்னிப்பு ? நான் எதுவும் தப்பா...
பிரியங்கா : உதட்டுல இன்னும் சிரிப்பு இருக்கே...?
தாமரை : ஆத்தீ....யம்மா நமிதா என்னய மன்னிச்சிரும்மா...
பிரியங்கா : அப்பாடி தின்னது இப்பத்தான் செரிச்சுச்சு ! //

இப்படியாக பிரியங்கா சண்டைய நிறுத்துச்சா , ஆரம்பிச்சுச்சான்னு இப்பவரை சரியா தெரியல. ஆனா நமிதாவுக்கு அது பிள்ளை வளர்ப்பு விஷயத்தையும், மயக்கும் பார்வைய சொல்லிக்குடுன்னு சொன்னதுல சுள்ளுனு ஆகிடுச்சு போல. இந்தப் பஞ்சாயத்த இழுவையா இழுத்துட்டு இருந்தானுங்க.

தாமரை : எப்பா அபினய்...பேசி சிரிச்சதுல சின்னதா சிக்னல் வீக்காகிடுச்சு என்ன பண்ணலாம்?
அபினய் : ரெண்டு சட்னி வச்சு பஜ்ஜி பண்ணலாமா? நல்லா தூங்கிட்டு இருந்தவனுங்கள நடுராத்திரியில எழுப்பி விட்டுட்டு இப்ப என்ன பண்ணலாம்னு எங்கிட்ட கேக்குற? என்ன பண்ணி தொலச்ச?
தாமரை : அத பாத்து சிரிச்சேன்.....
அபினய் : அது என்ன வடிவேலு காமெடியா அதப் பாத்து சிரிக்க! சரி உனக்கு போயி பேசனும்னா பேசு இல்லன்னா மன்னிப்பு கேளு
தாமரை : சரி நான் போயி மன்னிப்பு கேக்குறேன்
அபினய் : ஆனா தப்பு பண்ணாம சாரி கேக்காத ! நீ தப்பு பண்ணியா ?
தாமரை : தப்பெல்லாம் பண்ணல... சிரிச்சேன் ! அப்ப நான் தப்பு பண்ணிட்டேனா?
அபினய் : இல்ல நாந்தான் உங்கூட பேசி தப்பு பண்ணிட்டேன்....நான் போயி தூக்கத்தயே கண்டிநியூ பண்றேன் //

சரின்னு வெளிய இதப்பத்தி பேசிட்டு இருந்த கூட்டத்துல நமிதாகிட்ட மன்னிப்பு கேக்க வந்த தாமரைய தட்டிக்கழிச்சுட்டாங்க நமிதா. தாமரைக்கு வாய்ல வாஸ்து சரியில்ல. வெள்ளந்தித்தனம்ன்ற பேருல வீணா வாயக்குடுத்து வாங்கிக்கட்டிக்குது. ஒரு கட்டத்துல தாமரை அழுக ஆரம்பிச்சுடுச்சு....! “அழுது வெறுப்பேத்தாதன்னு இப்ப ஆரம்பிச்சா அப்டியே பஞ்சாயத்த கண்டிநியூ பண்ணலாம்”னு மைண்ட்ல நெனச்ச பிரியங்கா பொழுது விடியப்போகுதுன்னு விட்டுருச்சு.

5ம் நாள் காலை “எட்டணா இருந்தா” பாட்டு போட்டானுங்க. வெயில் நேர தார் ரோட்ல செருப்பில்லாத ஆளுங்க மாதிரி ஆளுக்கொரு பக்கமா தவ்விட்டு இருந்தானுங்க.
அண்ணாச்சி நமிதா – தாமரை பஞ்சாயத்த தீத்து வைக்க எடுத்த முயற்சி தோல்வி. நமிதா நாட் இன்ரெஸ்டட்னு போயிடுச்சு.

அபிஷேக்குக்கு பாவனி, நாடியா அக்காவாம், இசை & நமிதா தங்கச்சியாம், ஷ்ருதி க்ளாஸ்மெட்டாம், பிரியங்கா கசினாம்....! இதக்கேட்டதும் “ம்ம்ம்ம்....என்னென்ன கதை சொல்றான் பாருங்க, கம்பி கட்டுற கதையெல்லாம் இழுத்துப்போட்டு”ன்ற மாதிரி பிரியங்கா மூஞ்சி போச்சு. தம்பி ஒரு மனுஷன் எரிச்சல் வர மாதிரி பேசலாம் ஆனா எச் ராஜா அளவுக்கு பேசக்கூடாது.
அப்பறம் அண்ணாச்சி பிரியங்கா, அக்ஷரா, ராஜு மாதிரி நடிச்சு காட்டுனாப்ல. சிறப்பு. பிரியங்காவும் கொசு கடிச்ச கதைய சிறப்பா கொண்டு போச்சு.

இப்ப அய்க்கி கதை !

இப்பவரைக்கும் அத தஞ்சாவூர் பொண்ணாவே ஏத்துக்க முடியல. அதனால அது சொன்னது பூராமே நார்வேல நடந்த ஏதோ ஒரு சம்பவம் மாதிரியே ஃபீல் ஆச்சு. அவங்க அப்பா அம்மா இந்த பொண்ண அம்போன்னு விட்டுட்டாங்களாம். இத சொல்லி அழுது “ஏய் தமிழா, அம்போன்னு விட்டாலும் வம்பா நான் பாடுவேன் ராப்” அடின்னு ஒரு பிட்டு ராப் பாடிட்டு, திரும்பவும் தமிழ் ராப்பர்கள மதிக்கல, ஆனா நான் ஜெயிச்சேன்னு சொல்லிட்டு “ஏய் தமிழா, தமிழ் ஒரு மூத்த குடி....தம்பரம் போக பஸ்ஸ பிடி"ன்னு இன்னொரு பிட்டு ராப்ப பாடி முடிச்சாங்க.

பேசி முடிச்சிட்டு வந்தும் விக்கல் மாதிரி நிக்காம அழுகை வந்துட்டே இருந்துச்சு அய்க்கிக்கு. உள்ள பாவனி தமரைக்கு மேக்கப் போட்டு விட்டுட்டு இருந்துச்சு.

இப்ப பாவனி கதை !

உண்மையாலுமே பாவப்பட்ட கத ! பொண்ணு இன்னைக்கு ரொம்ப அழகா இருந்துச்சு. அது கதைய கேட்டதும் இன்னும் அழகா தெரிஞ்சுது.

என்னதான் தாமரை தகாறாரா இன்னைக்கு பேசிட்டாலும், வீட்ல உள்ள முக்காவாசி ஆளுங்க தாமரைக்கு ஆறுதலா நின்னானுங்க. இது நமிதாவுக்கு லைட்டா சித்தெறும்பு சீண்டுனாப்ல இருந்திருக்கும் போல “என்னது தமிழ்நாட்டுல தாமரைக்கு ஆதரவா? முடியட்டும் விடியட்டும்"னு சொல்லி அதுவே நைட்டு எல்லாரும் மல்லாந்ததுக்கப்பறமா தாமரைய எழுப்பி "உன் மன்னிப்ப நான் ஏத்துக்கிட்டேன். உன்னய அக்காவா நான் சேத்துக்கிட்டேன்"னு சொல்லி ஃப்ளையிங்க் கிஸ் குடுத்து சமாதானமாகிட்டுப் போயிடுச்சு.


குறிப்பு : கடும் வேலைப்பளு அதான் டைமுக்கு போஸ்ட் வரதில்ல. நாளைக்கும் லேட்டாகலாம். ஆனா திங்கள்ல இருந்து டிங் டாங்னு காலையில வந்துரும். நன்றி ஹை !
 
Top