கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பிக் பாஸ் சீசன் 5 நாள் - 6 - 09.10.21

siteadmin

Administrator
Staff member
பிக்பாஸ் – 5

நாள் – 6 (09.10.21)

எடுத்ததும் பிக்பாஸ் “நமிதா நம்மையெல்லாம் விட்டுட்டு வெளிய போயிட்டாங்க”ன்னாப்ல. தாமரையோட பர்ஸ்ட் மர்டர்...!

கோவில் சொவத்துல தேச்ச கலர்ல ஒரு கோட்டோடையும், சேர்ந்தாப்ல செய்வினை செய்யுற மாதிரி என்னத்தையோ கழுத்துல கட்டிக்கிட்டும் வந்தாரு ஆண்டவரு. “தடையெல்லாம் தாண்டி வாழ்க்கையில ஜெயிச்ச பொண்ணு வெளிய போயிருச்சு. மனநல விடுதில கூட 3 மாசம் இருந்துச்சு ஆனா மாக்கானுங்க உங்ககூட 3 நாள் முடியாம வெளிய போயிடுச்சுன்னா நீங்கள்ளாம் யாருன்னு பாத்துக்கோங்க”ன்னார். “இருந்தாலும் நமிதா எங்கிருந்தாலும் வாழ்க”ன்னு வாயார வாழ்த்துனார்.

“இந்த திருவாத்தானுங்க முகம் பாக்க அகம் போவோம் வாங்க”ன்னு அகம் – அகம் போனார்.

“அப்பிடியே ஆன்லைன் கிளாஸுக்கு அளவெடுத்து செஞ்ச மாதிரி இருக்கீங்கடா! பல பேரு ம்யூட்ல இருக்கானுங்க, சில பேரு காச்சு மூச்சுன்னு கத்திட்டு இருங்கானுங்க. சில பேரு ஆன் பண்ணிட்டு அசந்து தூங்கிடுறானுங்க. என்னவோ போங்க ! ஆனா தமிழ்நாட்டுல ஆன்லைன் கிளாஸ் மொத ஆரம்பிச்சது நாந்தான். ஆனா அது எனக்கே நான் எடுத்துகிட்ட கிளாஸ். என்ன புரியலயா? ஏண்டா பல வருஷமா நான் பேசுறது புரியாம பல பேரு பல்டியடிச்சு விழுந்திருக்கானுங்க. உங்களுக்கு மட்டும் உடனே புரிஞ்சுடனுமா? போகப் போக புரியும்”னார். இவனுங்க உடனே புரிஞ்ச மாதிரி கைதட்டுனானுங்க. இப்ப ஆண்டவருக்குதான் இவனுங்க ஏன் கைதட்டுனானுங்கன்னு புரியல.

“ஜிம் இல்லென்னு கவலைப்பட்டேன் ஆனா நிரூப் கும்முன்னு குளவிக்கல்ல தூக்கி எக்சர்சைஸ் பண்றான். காவாசி நாட்கள் போனப்பறம் கட்டில கைல தூக்கி செய்வான் போல”ன்னு கலாய்ச்சார். வருண பாத்து “யாரிவன் ?இவன நான் எங்கயோ பாத்த மாதிரி இருக்கே?”ன்னார். சிபியெல்லாம் வந்தன்னைக்கு டீ போட்டப்ப பாத்தது. இவனையெல்லாம் பாக்க தினமும் ஆண்டவரையே கூட்டியார முடியும்? ஒர்ஸ்டுடா ! ஆனாலும் “டீ போட்டவன் என்னாவேணாலும் ஆகலாம்”னு சர்க்காஸ சாம்பார் ஊத்துனார்.

“முதல் துப்பாக்கி சூட்டுக்கு காரணம் அபிஷேக்கு தூங்குனது. அதனால “தூங்காதே தம்பி தூங்காதே அப்பறம் துப்பாக்கி சூடு நடக்கும்போது ஏங்காதே”ன்னு பாட்டுப் பாடுனார். சொந்தக்குரல் சிங்காரியா பாவனி மாறுனது நல்லதுன்னார். குறட்டை சத்தமெல்லாம் ஜுஜுபி இன்னும் அரட்டை சத்தமெல்லாம் லைன்ல இருக்குன்னார் (யாரு ? இவனுங்க? அப்பிடியே அறுத்து தள்ளிரப்போறானுங்க.....சும்மா போங்க ஆண்டவரே. 6 நாளாகுது இன்னும் அசமந்தமாத்தான் திரியுறானுங்க.)

“குழலினிது யாழ்ப்பாண தமிழினிது என்பர் மதுரக்குரல் மதுவின் தமிழை கேளாதோர். அப்டின்னு இங்க நாங்க வள்ளுவர்கிட்ட சொல்லி குறள திருத்திட்டோம். அதநால நீ உன் மதுரக்குரலால மகாபாரதம் கூட சொல்லலாம் இங்க நாங்க ஃபேன்ஸ் இருக்கோம்”னார். “இந்தாளு நம்மள உண்மையாவே உசத்தி பேசுறாரா இல்ல கலாய்க்குறாரா?”ன்னு பாவம் ஷோ முழுக்க திகிலாவே இருந்துச்சு பொண்ணு.

ஆண்டவர் : நாடியா, சவுக்கியமா ?
நாடியா : ஆமா சார் !
ஆண்டவர் : வீட்ல வசதியெல்லாம் ஓகேவா?
மலேஷியால இருந்து வந்த ஜெட்லாக்லாம் சரியாப்போச்சா?
நாடியா : சர்தான் சார்
!
ஆண்டவர் : அப்பறம் சோத்துல கருவேப்பிலை, கொத்தமல்லியெல்லாம் இருக்கா?
நாடியா : பொங்கல்ல மட்டும் கொஞ்சம் நெறையா கருவேப்பிலை இருந்துச்சு சார்...மத்தபடி சரிதான் சார்
ஆண்டவர் : சரி....விளையாடுற ஐடியா எதுவும் இருக்கா? இல்ல இப்பிடியே பொங்கல தின்னுட்டு 10வது நாள் வெளிய போயிரலாம்னு பாக்குறியா? நாடியா, கொஞ்சம் முன்னாடி ஓடியா !
நாடியா : பண்ணிடுறேன் சார் ! அப்பிடியே பொங்கல்ல கருவேப்பிலைய குறைக்க சொல்லி நீங்களும் ஒரு வார்த்தை சொல்லிடுங்க சார்....! தெரிமா கசி! (மலாய்ல நன்றி) //
இசைவாணி மாதிரி தடைய உடைங்கன்னார். “எல்லா கதையிலயும் திரைக்கதை தேடுற உன் கதை எப்பிடி இருக்கும்?”னார். “கிளைமாக்ஸ் ஒர்க் பண்ணிட்டு இருக்கேன்”னு சொன்னவங்கிட்ட “எல்லாரும் அதுக்குதாம்பா ஒர்க் பண்றோம்”னு அடிச்ச டைமிங் அக்மார்க் ஆண்டவர்த்தனம். க்ளாஸ் !

“சரி கதை சொல்லாம காத்துட்டு இருக்குற ஆட்கள் எப்பிடி கதை சொல்ல்ப்போறீங்க?”ன்னு கேட்டார்.

அபினய் : சோகம் சந்தோஷம், கவலை, சிரிப்புன்னு பிரிச்சு பிரிச்சு சொல்லப்போறேன் சார்

ஆண்டவர் : அத கொஞ்சம் சிரிச்சு சிரிச்சு சொல்லப்பாருப்பா சாமி

மூடு முனி : அப்டியே எனக்கு தோணுறத, அப்டியே சொல்லி எல்லாருக்கும் கதை என்னன்னு புரியுற மாதிரி சின்னதா அவங்களுக்கும் பிடிச்சு அழாம, சிரிக்காம நானும் சொல்லி (சத்தியமா இப்பிடித்தான் பேசுனான்)

ஆண்டவர் : அழுகைக்கதை சொல்லமாட்டேன்னு சொல்ல வரியா?

மூடு முனி : அதான் சார் !

ஆண்டவர் : (மை.வா) இவன் எனக்கே டஃப்பு குடுப்பான் போல

அக்ஷரா : கதை சொல்லுவேன் ஆனா அத கதையா சொல்லுவேனான்னு தெரியாது

ஆண்டவர் : அதையாச்சும் ஒழுங்கா சொல்லிடு

வருண் : கேட்ட கதை , கேள்விப்பட்ட கதை, பாட்டி வடை சுட்ட கதை, கவுதம் மேனன் படத்துல நான் வில்லன சுட்ட கதை

ஆண்டவர் : டேய் நான் உன் வாழ்க்கை கதைய சொல்ல சொன்னேன்

வருண் : அதுவா....அதுலதான் கதையே இல்லையே....தின்னு தூங்குனதெல்லாம் கதை கணக்குலையா வரும்? சரி அதயே ஒரு ஃப்ளோவுல சொல்லிடுறேன்.

பிரியங்கா : சார் இங்க்லீஸுல ஒண்ணு சொல்லுவானுங்க அத தமிழ்ல சொல்லனும்னா...டெயிலி வேலை செஞ்சா, செஞ்சா டெய்லி வேலை, வேலை செஞ்சா டெயிலி, செஞ்சா டெயிலி வேலை

ஆண்டவர் : எனக்கு நெறைய வேலை இருக்கு....எப்ப முடிப்ப?
பிரியங்கா : எல்லாருக்கும் நன்றி சொல்ற மாதிரி ஒரு கதை சார்

ஆண்டவர் : ஆனாலும் கதை சொல்றதால மக்கள் உங்கள காப்பாத்தமாட்டனுங்க. கவுரமா நடந்துக்கப் பாருங்க

பாவனி விஷயத்தையும் மதுரக்குரல் மது விஷயத்தையும் கோர்த்து தற்கொலை எண்ணம் தவறு. “புன்னகை மன்னன்லயே நான் திருந்திட்டேன். ரேகாவ சாவடிச்சதுக்கு வருந்திட்டேன். நீங்களும் தற்கொலை எண்ணத்த வளாத்துக்காதீங்க”ன்னு சொன்னார்.

அப்பறம் சுருதி கதைய எடுத்துகிட்டு “பால்ய விவாகம் தவறு. அது குழந்தைகள் உரிமைய தடுக்குற சொவரு”ன்னு சொல்லிட்டே வந்தவரு “ஆனாலும் அவங்க தாத்தாவும் என்ன பண்ணுவாரு பாவம்”னு சூடான சாம்பார் கதையெல்லாம் சொல்லி பாதை மாறுனாரு. அது சரி உங்க வாய் உங்க உருட்டுன்னு போக வேண்டியதாப் போச்சு.

“இன்னும் டைம் இருக்கு போல”ன்னு சொல்லி, சின்னப்பொண்ண திரும்ப கதை சொல்ல சொல்லி...அது சொல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லி முடிச்சப்பறம் “இப்பயாச்சும் லைக்கப் போடு”ன்னு ராஜுகிட்ட சொன்னாரு. சொல்லிட்டு உள்ள பிரேக்குக்கு போனதும் தாமரை வந்து ராஜூ கிட்ட “யாருக்கு போட்டலும் சரி ஆனா கலைஞர்களுக்கு டிஸ்லைக் போடாத”ன்னு சொல்ல “அப்ப நாங்கனாப்ல யாரு?”ன்னு ராஜு கேக்க, “உனக்கு அவன் லைக்குதான் போடனும்னு நீ முடிவு பண்ணுவியா?”ன்னு நாலடியார் நாடியா கேக்க தமரைக்கு தட்டிருச்சு. கூடிய சீக்கிரம் கும்மியடிச்சுருவானுங்க இதுக்கு.

அய்க்கிய பாராட்டுறேன்னு ஆரம்பிச்சு தஞ்சாவூர் கோவில் கதையில வந்து முடிச்சாரு. எல்லா சீசன் மாதிரியே இந்த சீசனும். தற்கொலைய பத்தி பேசும்போது நானும் அப்பிடி நெனச்சேன், பால்ய விவாகம் பேசும்போது எங்க அம்மாக்கு அப்பிடித்தான், கலைத்துறைக்கு போனா வைவானுங்கன்னு சொன்னப்ப ஆமா என்னையும் எங்க அக்கா வீட்டுக்காரரு அப்பிடித்தான் சொன்னாருன்னு எல்லாத்துலையும் தன்ன முடிச்சுப் போட்டுக்கிட்டார். அதே போல அந்த ஜோக்கு சொல்லி முடிச்சதும் அப்பறம்னு கேக்குற விஷயத்த மறக்காம இந்த சீசன்லையும் சொல்லிட்டாரு. எம்மை ரட்சியும் ஆண்டவரே...போதும் !


சரி பாப்போம்னு சைலண்டா ஷோவ முடிச்சிட்டுப் போயிட்டாரு. உள்ள காட்டுனா. பிரியங்கா அபிஷேக்க வச்சு செஞ்சுட்டு இருந்துச்சு. அநேகமா அவங்கிட்ட இருந்து கண்டென்ட் எடுக்கப் பாக்குதுன்னு நெனைக்கிறேன். ஆனா அதுக்காக இவ்வளவு டைரக்டா அடிக்கத் தேவையில்ல. சும்மா இருந்தா அவனே மணிக்கு 450 கண்டென்ட் குடுப்பான். தொழில்ல பொறுமைதான் அவசியம். வரட்டும்....ஆண்டவர் இன்னைக்கு என்ன சொல்றாருன்னு பாப்போம்.
 
Top