பிக்பாஸ் – 5
நாள் – 7 (10.10.21)
“துப்பட்டா போடுங்க தோழர்”னு சொன்னாப்ல துப்பட்டா போட்ட சுடிதாருக்கு மேல கோட்டு போட்டுட்டு வந்தாரு ஆண்டவர். சின்ன கவுண்டர் படத்துல செந்தில பாத்து கவுண்டமனி “இப்பிடியெல்லாம் செய்ய சொல்லி உனக்கு யாரு சொல்லிக்குடுக்குறா?”ன்னு கேக்குற மாதிரிதான் இருக்கு ஆண்டவரோட ட்ரெஸ்ஸிங் சென்ஸ்.
ஸ்தோத்திரம். எப்பவும் கடைசியா அறிமுகப்படுத்துற புத்தகத்த ஆரம்பத்துலையே செஞ்சார் மனநல வாரமா இருக்குறதால – வில்லியனூர் ராமச்சந்திரன் எழுதுன “The Emerging Mind” தான் அந்தப் புத்தகம்.
அதாவது இந்த ஒரு வாரமா கடுகளவு கூட கண்டென்ட் இல்லேன்றது காலகேயர்களுக்கே கண்கூடா தெரிஞ்ச உண்மை. அந்த ஃபீலிங் ஆண்டவருக்கே இருந்த மாதிரி “இப்ப இவனுங்ககிட்ட என்ன பேசுறது?”ன்னு தினறிட்டாப்ல. அதுவும் இருந்த கொஞ்ச நஞ்சத்தையும் சனிக்கிழமையே சட்டிய சொறண்டியாச்சு. பெறகு இன்னைக்கு என்னத்த பண்றது ? சரி அவனுங்களையே பேச வச்சிருவோம்னு சொல்லி சரி, ஒவ்வொரு டீமோட செயல்பாடுகள பத்தி பேசிடலாம்னு சொல்லி பொழுத ஓட்ட ஆரம்பிச்சாரு.
எந்த டீம் மேலையும் பிராது இல்ல. அபிஷேக்க மட்டும் ராஜு “இவன கக்கூஸ் கழுவுற டீம்ல போட்டா...இவன் போயிட்டு வரப்ப கழுவுறதையே இவன் டீம் வேலையா நெனைக்கிறான்”னு சொல்லி கலாய்ச்சான்.
இதுலையும் கண்டென்ட் இல்லையா? சரி ஒழிங்க ! யோவ் அண்ணாச்சி இங்க உள்ளவங்கள பத்தி என்னத்தையாச்சும் சொல்லுயா. அத வச்சாவது எதாச்சும் தேறுதான்னு பாப்போம்”ன்னு சொன்னதும் அவரும் பழையசோத்துக்கு பாப்பின்ஸ தொட்டு சாப்ட்ட மாதிரி நசநசன்னு ஏதோ சொன்னாரு. அதுவும் வேலைக்காகல.
சரின்னு அபிஷேக்க பேச சொன்னதுக்கு பய சட்டுன்னு அவன் ரிவ்யூ போடுக்கு போயிட்டான். வின்டேஜ் அபிஷேக் இஸ் பேக். இஷ்டத்துக்கு எடுத்து விட்டுட்டு இருந்தான். ஆனா பையன் பயங்கர தெளிவு. சும்மா நாட்கள்ல பிரியங்கா அவன ஒரு மாதிரி போர்ட்ரெயிட் பண்ணி கலாய்ச்சத ஆண்டவர் முன்னாடி சரிச்சு வுட்டான். பிரியங்காவ அவங்க அக்கா மாதிரின்னு சொல்லி ஒரு அன்லிமிட்டெட் எமோஷன் சீன கிரியேட் பண்ணி அழுதுருகி ஸ்கோர் பண்ணிட்டான். ஆனாலும் ஆண்டவருக்கு சீரா தெரியல.
சரி இருங்கடா இன்னோரு ஐட்டத்த இறக்குவோம்னு சொல்லி ஆளுக்கொருத்தன் எந்திரிச்சு ஒரு லைக், ஒரு டிஸ்லைக் குடுங்கன்னு சொன்னாரு. எல்லாரும் மாறி மாறி ஒரு வழியா எல்லாருக்கும் குடுத்து முடிச்சப்பறம் பாத்தா யாரும் எதிர்பாக்காத அளவுக்கு அக்ஷராவுக்கு அதிக டிஸ்லைக். காரணம் கேட்டா “அந்த பொண்ணு சரியா பேச மாட்டேங்குது. அன்பா பேசப் போனா அந்தப் பக்கமா திரும்பிக்குது”ன்னு பிராது. அங்க ஒண்ணும் இங்க ஒண்ணுமா சிலருக்கு லைக்கு, டிஸ்லைக்குன்னு விழுந்தாலும் இசை, வருண், சுருதி, சின்னப்பொண்ணுக்கு ஒண்ணுமே இல்ல. “அடேய் சேர், டேபிள் படத்த போட்டுருந்தா கூட அதுக்கும் எதாச்சும் விழுந்திருக்கும். ஆனா உங்கள ஒருத்தனும் மதிக்கல. டிஸ்லைக்குக்கு கூட நீங்க லைக் இல்லாத ஆளுகளா போயிட்டீங்களேடா டேய்”னு ஆண்டவர் அங்காலாய்ச்சார்.
“சரி இது ஒரு ரிகர்ஸல் மாதிரி. ஏன்னா நாளைக்கு நாமிநேஷன் இருக்கு. அப்பயாச்சும் அடிச்சுகுவீங்களான்னு பாப்போம்”னு சொல்லிட்டு போனார்.
அப்பறம் தாமரைக்கு இந்த வைபவத்துல டிஸ்லைக் 3 விழுந்தாலும் அதோட இன்னசென்ஸ் மேல டவுட் வந்ததா சொன்ன காரணம் ஒரளவு உண்மைதான். அது ஆடியன்ஸ் சைடும் ஃபீல் பண்ணப்பட்டா தாமரைக்கு டெப்பாசிட் காலி உறுதி.
ஆனா இதுக்கு கன்சல்டிங்க்கு அது போன இடம் பிரியங்காகிட்ட. பிரியங்கா விஜய் டீவி செட் ப்ராப்பர்டி. சும்மாவே ஒண்ணுமில்லாத விஷயத்த வெவகாரமாக்கி விளையாடும். இப்ப தாமரை வாண்டடா வந்து வண்டியேறுனா சும்மா விடுமா? தாமரைய நல்லா பயமுறுத்தி விட்டிருக்கு.
சரி அவ்வளவுதான் அப்டின்னு நெனச்சா அக்ஷரா தனியா லான்ல உக்காந்து ஃபீல் பண்னிட்டு இருந்தத காமிச்சானுங்க. சரி யாரோ வந்து பேசுவான் போலன்னு பாத்தா 5 நிமிஷத்துக்கு அந்த பொண்ண மட்டுமே காட்டிட்டு முடிச்சிட்டானுங்க. நான் வேற டிவில சவுண்டு பிரச்சனையான்னு வேற பாத்தேன். கண்டெண்ட் வறட்சிய இவ்வளவு வெளிப்படையாவா சொல்லுவீங்க? ரைட்டு நாமிநேஷன் இன்னைக்கு அதுக்கப்பறமாச்சும் எதாச்சும் இருக்குமான்னு பாப்போம்.