கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பிரவீணா தங்கராஜ்

siteadmin

Administrator
Staff member
என் பெயர் பிரவீணா தங்கராஜ். சென்னையில் பிறந்து வளர்ந்தவள். தந்தையின் பூர்வீக ஊர் பாரதியின் எட்டையபுரம் பக்கம் கீழ்யிரால் என்ற ஊர்.
அப்பா(பிரபாகரன்) சிறுவயது முதலே பாடல் பாடுவதிலும், புத்தக வாசிப்பில் ஆர்வமும் கொண்டவர்.
அதே ஆர்வம் எனக்குள் உருவானது. சிறுவயதில் சிறுர்மலர், தங்கமலர், கல்கண்டு இதழ் எல்லாம் தவறாமல் வாங்கி தர, தந்தை பொழுதுபோக்கை வாசிப்பில் தொடர, கல்லூரி காலத்தில் கவிதை இயற்றினேன்.

எனது தந்தையின் பெரிய அக்கா(முத்துலட்சுமி மோகன்தாஸ்) கவிதை, கட்டுரை, வாழ்வியல் அனுபவம் இது போன்றவையை எழுதி மங்கையர் மலர் மற்றும் குமுதம் சிநேகிதிக்கு அனுப்ப அவரின் எழுத்துக்கு அங்கே பிரசுரமாகியது.
என்னையும் எழுது என்ற உந்துதல் அளித்தது அவர்களே.
கவிதையை இயற்றினேன் அவை பத்து மாதம் கழித்து பிரசுரமானது. அளவில்லா மகிழ்ச்சியடைந்தேன். அது போல பத்து பதினைந்து கவிதை மங்கையர் மலர், ராணிமுத்து மற்றும் கட்டுரை ஒன்றும் குமுதம் சிநேகியில் வெளியானது.

திருமணம் ஆனப்பின் கவிதை எழுதுவது குறைந்துவிட்டது. அதன் பின் நீண்ட இடைவெளிக்கு பின் இரண்டாவது மகள் வயிற்றில் உதித்த நேரம் நாவல் வாசித்தேன்.
நாவல் வாசிக்க ஆரம்பித்த அனுபவமே சுவாரசியமானது. எனக்குள் எழுதும் ஆற்றலை அன்று கண்டறிந்துவிட்டேன். விளையாட்டாக எழுத ஆரம்பித்து wattpad, Pratilipi என்ற ஆன்லைன் வாசகரின் மனதை கொள்ளையடித்தேன். அதில் சிறிதளவு என் பெயர் தெரிய வர, முகநூலில் சங்கமம் சைட்டில் எழுத ஆரம்பித்து *அனுவும் டினுவும்* என்ற சிறுகதைக்காக 1000 பரிசுபெற்றேன். பின்னர் தற்போது எனது நாவலை அச்சு புத்தகம் வெளிவரும் பாக்கியம் அமைந்தது.
அதன் தொடர்ச்சி எனது விடாமுயற்சியில் ராணிமுத்து இதழிலும் *பிரம்மனின் கிறுக்கல்கள்* நாவல் ஒன்று வெளியானது.
இதுவரை எழுதிய கதைகள் 65 நெருங்குகிறது.
காதல் கதை, மறுமணம் கதை, சிங்கில் மதர் கதை, விவாசயம் கதை, போலீஸ் கதை, ஆணவபடுகொலை கதை, டைம்டிராவல் கதை, சமூக விழிப்புணர்வு கதை, டெம்பிளேட் கதை, நட்பை முன்னிருத்தும் கதை, க்ரைம், த்ரில்லர், மர்மம், பேய்கதை, தன்னம்பிக்கை கொண்ட கதை, பேண்டஸி கதை, ஆன்டிஹீரோ(மாஸ்ஹீரோ) கதை, முன்ஜென்ம கதை, பாடகி கதை, சினிமா நட்சத்திரத்தை மையமாக கொண்டகதை, பெண்களுக்கு முன்னுரிமை தரப்படும் கதைகள் என பல்வேறு பிரிவில் எழுதிக்கொண்டு இருக்க இதன் பயணம் என் மூச்சு நிற்கும் வரை தொடருமென முடிவோடு எழுதுகின்றேன்.

எனக்கு இருமகள்கள் இருக்கின்றனர். கணவரின் பெயரை என் பெயரோடு இணைத்து பிரவீணா தங்கராஜ் என்று எனது பெயரிலேயே எழுதுவது எனக்கான அடையாளத்தை தேடி விரிவாக்குவதில், சிறு வெற்றியை ஈட்டுகின்ற தேனீ நான்.
 

gomathy

Active member
Ungal yezuththu pani thodra yen mana marntha vazhthukkal, yeppo puthu kathai yodu varuveerkal waiting eagerly, Stay blessed always ma, love you sis.
 
Top