கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பிழை 1

காடாயில் எண்ணையை ஊற்றி அது காய்ந்ததும் கடுகு போட அது வெடித்து சிதறியவுடன் அடுத்து தாளிப்பதற்கு தேவையான அனைத்தையும் போட்டு அதை வணக்கியப்படி இருந்தவளை பார்த்தவன்

'ஆத்தி.. சட்டியில பொரியறது இவ மூஞ்சில தெரிதே..கிட்டக்க போயி பேசலாமா வேண்டாமா...' என நினைத்தவன் மீண்டும்

'பேசி தான் பாப்போம்.. அப்படி என்ன தான் பண்ணுவான்னு பாக்கலாமே...' என நினைத்து சமையல் அறைக்குள் நுழைந்தான்.

"என்ன குள்ள.. ஒரே வாசனையா இருக்கு சாப்பாடு..அப்படி என்னத்த செய்யற..." என ஒரு பக்க சட்டைக் காலரை கெத்தாக தூக்கி விட்டப்படி வந்தவனை முறைத்தவள் மீண்டும் தன் சமையலை கவனிக்க

"இங்க பாரு டா.. ஒருத்தன் பேசிட்டு இருக்கேன்.. கண்டுக்காம உன் வேலையைப் பாத்துட்டு இருக்க.. இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டேன்..." என்றவனிடம் பதில் பேசாது அரிந்து வைத்திருந்த காயை காடாயில் போட்டு தண்ணீரை ஊற்றிட அவளின் அருகில் நெருங்கி நின்றவன்

"அடியே தர்பூசணி பதில் சொல்லு டி..." என கிசுகிசுக்க திரும்பி அவனை பார்த்தவள் கைகட்டி நின்றாள்.

"எப்படி டி.. இப்படி கும்னு இருக்க... முகம் முழுக்க வியர்வையா கொட்டிக் கிடக்கு.. ஆனாலு நீ ஜிவ்வுன்னு இருக்க டி.. " என்றவனை புருவம் உயர்த்தி பார்த்தவள் பின்னால் திரும்பி காடாயை மூடி வைக்க

'ஆத்தி.. நம்ம பேசனதை முழுசா கேட்டுட்டா போலயே. என்ன சொன்னாலும் முறைச்சுட்டே நிக்கறா.. சரி எவ்வளவோ பாத்துட்டோம் இதை சமாளிக்க முடியாத என்ன.. சமாளிப்போம்..' என நினைத்தவன்

"என்ன பார்வை டி இது... சமோசால சட்ணியை கலக்கி வைச்சா எப்படி அதோட வாசத்தால சுண்டி இழுக்குமோ, அப்படி என்னை சுண்டி இழுக்குது டி உன்னோட பார்வை..."எனக் கூறியவன் அவளின் மேல் சாய போகவும் அவள் தள்ளி நிற்கவும் சரியாக இருந்தது.. அடுப்பின் மீது விழுந்து விடாது தடுமாறி நின்றவன் திரும்பி தன்னவளை பாவமாக பார்க்க, அவளோ அங்கு ஒருவன் இருப்பதைப் போல் காட்டிக் கொள்ளாமல் அடுத்தடுத்து வேலைகளை கவனிக்க கடுப்பானவன்

'சில சமயம் உண்மையை சொன்னா, நம்ம மனசு, அதை ஏத்துக்க கஷ்டப்படுமாம். அதே மாதிரி நான் சொன்ன உண்மை இவளுக்கு கசக்குது...விடு டா..இவ கிடைக்கிறா நாமா நம்ம கீர்த்திக் கிட்ட போவோம்..' என மனதில் நினைப்பாதாக நினைத்து வெளியில் உளறிக் கொட்ட

நங்.... என்ற சத்தத்துடன் கைப்பிடி கரண்டி கீழே விழுந்தது

"ஹாவுச்..." எனத் தலையை தடவி கொண்டவன் தன்னவளை பாவமாக பார்க்க அவளோ முறைத்து கொண்டிருந்தாள்..

"ஆத்தி..மூஞ்சில அவ வைச்ச ஆசிட் ரசத்தை கொட்டறதுக்கு முன்னாடி வெளிய போயிடனும்.." என முனகியபடியே வெளிய செல்ல நினைத்தவன் மீண்டும் தன்னவளிடம் திரும்பி

"குள்ள..நிஜமாவே, நீ இன்னைக்கு கும்னு இருக்க டி...என்னை கொஞ்சம் வளர்ந்திருந்தா நின்னுட்டே கிஸ் கொடுக்க..."என ஏதோ சொல்ல வர மீண்டும் அவனின் மேல் ஏதோ வந்து விழ

"போட்டிங் தர்பூசணி.. உன்னையெல்லாம் சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்லை..." என்றவன்

"அம்மா.. அம்மா..." என கத்தியப்படியே சமையலறையிலிருந்து வெளி வந்தான்..

"எதுக்கு டா இப்படி கத்திட்டு வர...' என கேட்டப்படியே வந்தார் அவனின் தாய் லட்சுமி..

"என்னமா பொண்ணு பாத்து கட்டி வைச்சுருக்க எனக்கு..என்னை மோசம் பண்ணிட்டம்மா நீ.. நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வைப்பன்னு நினைச்சு உன்கிட்ட எல்லா பொறுப்பையும் விட்டேன் பாரு என்னை சொல்லணும்... அவ என்னை அடிக்கறா மம்மி.. எனக்கு வலிக்குது.." என ஆதங்கத்தில் ஆரம்பித்து அழுகை போல் சொல்ல அவனைப் பார்த்து சிரித்த லட்சுமியோ

"நான் என்ன பண்ணுவேன் டா.. உன் போன்ல தான் என் மருமகளோட போட்டோவை பாத்தேன். உடனே எனக்கு பிடிச்சுருச்சு, கட்டி வைச்சுட்டேன்..." என சாதாரணமாக தோளை குலுக்கி சொல்லவும் கடுப்பானவன்


"அங்க தான் மா, நீ தப்பு பண்ணிட்ட.." என சத்தமாக கூற அவனைப் பார்த்து சிரித்தவர் அங்கிருந்து நகர பார்க்க அவரைப் பிடித்துக் கொண்டவன் ஏதோ யோசிப்பது போல் பாவனை செய்து மீண்டும்

"ஏம்மா, நீ இந்த சீரியல்ல வர மாமியார் மாதிரி சிடுசிடுன்னு இருந்தா நல்லா இருக்கும்னு நான் நினைக்கிற..நீ என்ன நினைக்கற.." என கேட்டவனிடம்

"ஏன் டா நானும் சீரியல்ல வர மாமியார் மாதிரி தானே டா இருக்கேன்.." என பாவமாக கூற

"ஏம்மா.. நீ இந்த கோலங்கள், மஞ்சள் மகிமை..அப்பறம் என்னவோ இன்னொரு சீரியல் இருக்குமே ஹான் மெட்டியொலி அதுல எல்லா வருவாங்களே அது மாதிரி இருந்து பாரேன்.. அதுல தான் மாமியார் எப்படியெல்லாம் கொடுமை பண்ணலாம்னு தெளிவா சொல்லிருப்பாங்க..." என கூறியவனின் கன்னத்தில் மெதுவாக தட்டியவர்

"அதெல்லாம் தேவயானியோட பழைய சீரியல் தம்பி.. இப்ப புது சீரியல் ஒன்னு வந்திருக்கு, நீ பாத்தது இல்லையே... அதை பாரு மாமியார் எப்படி மருமகளை பாத்துக்கறாங்கன்னு புரியும்..." என கூற

"ச்சை சீரியல் தான் காலத்துக்கு ஏத்த மாதிரி அப்டேட் ஆகுதுன்னு பாத்தா.. நீயும் காலத்துக்கு ஏத்த மாதிரி அப்டேட் ஆயிருப்பன்னு நான் நினைக்கவே இல்லை மம்மி.." என சோகமாக கூறியவனின் தலையில் தட்டியவர்

"ஒழுங்கா போயி, என் மருமகளை சமாதானம் செய்யற வழியைப் பாரு போ.." எனக் கூற

"எம்மோய்... நான் அவகிட்ட அடி வாங்குவன்னு தெரிஞ்சே என்னை போ போன்னு சொல்ற பாத்தியா அங்க இருக்க மா நீ..." என அழாத குறையா சொல்ல

"அது வந்து தம்பி..ஒரு வயசுக்கு மேல ஆம்பள பசங்க வளந்துட்டா அவங்களை அடிக்க கூடாதுன்னு சொல்லுவாங்க ஏன்னு தெரியுமா..." என சம்மந்தமில்லாமல் கேள்வி கேட்டாலும் அதற்கு பதில் சொன்னான் அவரின் செல்ல மகன்

"அது எங்களுக்கு கல்யாண வயசாயிருச்சின்னு அடிக்க கூடாதுன்னு சொல்லுவாங்க..." என அசட்டையாக கூறியவனை சிரிப்போடு பார்த்தவர்

"தலைக்கு மேலே வளந்த புள்ளையை அம்மா, அப்பா அடிக்க கூடாதுங்கறதுக்காக தான் அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சு, பொண்டாட்டி கையில அடி வாங்குன்னு விடறது..இப்போ புரிதா, அம்மா ஏன் உள்ள போன்னு சொல்றன்னு.. போ டா செல்லம் போ..." எனக் கூறியவறை முறைப்புடன் பார்த்தவன்

"கடைசி வரைக்கும் ஆம்பளைங்க வீட்டுக்குள்ள துவரம் பருப்பா தான் இருக்கணும்னு சொல்ற... இதெல்லாம் எனக்கு செட்டே ஆகாது..நான் சந்நியாசம் போற..." என்றவனிடம்

"எங்கயோ போ.. முதல்ல என் மருமகளை சமாதானம் பண்ணிட்டு போ.. இல்லைன்னா சாப்பாடு நல்லா செய்ய மாட்டா.. அப்பறம் உன்கூட சேர்ந்து நானும் சாப்பாட்டு தண்டனையை அனுபவிக்க வேண்டியதா இருக்கும்...' எனக் கூறியபடியே நடக்க

"உனக்கு உன் பிரச்சினை.. எல்லாம் என் நேரம்..." என முனகியபடியே தன்னவளை காண மீண்டும் சமையல் அறைக்குள் நுழைந்தான்..

***

என்ன பிரச்சனை இரண்டு பேருக்கும்

ஹீரோ அண்ட் ஹீரோயின் நேம் என்ன..??
 
Top