EN-16
புயலில் ஒரு பட்டாம்பூச்சி
அத்தியாயம் 1
பில்டிங் செட்டை சின்ன சின்ன கட்டங்களாக பிரித்து அழகாக அடுக்கி ஒரு புதுமாதிரியான வடிவத்தில் அமைத்துக்கொண்டிருந்தான் உதய். ஒரு நிமிடம் அவன் பக்கம் திரும்பிய பார்த்திபன், தன் லேப்டாப்பை ஆஃப் செய்துவிட்டு அவனை தொடர்ந்து கவனிக்கலானான். உதயின் கற்பனை ஆற்றல் அவனுக்கு மிக ஆச்சரியமாக இருந்தது. மனைவி ராஜேஸ்வரியிடமோ, தன்னிடமோ இல்லாத கிரியேட்டிவிட்டி இவனுக்கு எப்படி வாய்க்கிறது என்பது எப்போதும் அவனுக்கு ஆச்சரியம்தான். இத்தனைக்கும் ஆறு வயதான அவனுக்கு தான் எதுவும் தனிப்பட்ட முறையில் சொல்லிக் கொடுத்ததேயில்லை என்பதும் அவனுக்கு ஞாபகம் வந்தது. உதய், இவன் கவனிப்பதை பொருட்படுத்தவேயில்லை. மிக சீரியஸாக, பெரியவர்கள் போல் முகத்தை வைத்துக்கொண்டு அவன் காரியத்தில் மும்முரமாக இருப்பதை தன் செல்லில் பதிவு செய்தான் பார்த்திபன். வெளியே கார் வரும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் உள்ளே நுழைந்தாள் ராஜேஸ்வரி.
“என்னபா... ரொம்ப படுத்திட்டானா?” என்றாள் ராஜேஸ்வரி.
அவளை உதய் கவனிக்கவேயில்லை. பார்த்திபன் தன் வாயில் விரலை வைத்து அமைதியாக அவனை கவனிக்கச்சொன்னான். ராஜேஸ்வரி திரும்பி பார்த்து, ஒரு நிமிடம் பிரமித்தவள், பார்த்திபனை பார்த்து தன் புருவ உயர்த்தல் மூலம் ஆச்சரியத்தை பகிர்ந்துகொண்டாள். அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.
“என்ன ராஜி... ரொம்ப டயர்டா...?” என்றான் பார்த்திபன்.
“கொஞ்சம்பா... ஒரு அவசர ஆபரேஷன். சிவியர் கேஸ்... வேலை வாங்கிடுச்சு... ஆனா திருப்தியா முடிச்சாச்சு...” என்றாள் ராஜேஸ்வரி. உள்ளிருந்து பத்மினியம்மா காஃபி கொண்டுவர அதை வாங்கிக்கொண்டு இருவரும் வெளி வாரந்தாவுக்கு வந்தார்கள். அங்கிருந்த மூங்கில் நாற்காலியில் அமர்ந்தார்கள்.
“ரொம்ப சிவியர் கேஸா...?”
“ஹார்ட் சர்ஜரிபா... பயந்துட்டாங்க. நான் தைரியமாதான் இருந்தேன். ஆனா அவங்க பயப்படறப்ப ஏதோ எனக்கும் சில சமயம் திக்குனு ஆகிடுது. பட்... சக்ஸஸ்.”
“அதானே.. டாக்டர் ராஜேஸ்வரிக்கிட்ட கொண்டுவந்திட்டா... எதைபத்தியும் கவலைப்பட வேண்டாம்னு அவங்ககிட்ட யாரும் சொல்லலியா... “ என்றவனை முறைத்தவள் , காஃபியை குடித்தவாறு பேசினாள்.
“இவனுக்கு எவ்வளவு டேலண்ட் பாரேன். அவங்க பாட்டி மாதிரி....”
“ஆமால்ல...அதை நான் மறந்தே போயிட்டேன். நான் வெறும் சிஸ்டம் மெஷின். நீயோ ஒரு அறுவை மன்னி.... அப்புறம் எப்படி இவன் இதுபோலனு யோசிச்சேன்... “என்றவன் மீது நாற்காலியில் இருந்த தலையணையை தூக்கி எறிந்தாள் ராஜேஸ்வரி. சிரித்தவாறு அதை பிடித்தவனிடம்,
“அலோ... ஒவ்வொருவருக்கும் ஒரு ஆர்வம்... எனக்கு சின்ன வயசில் இருந்தே டாக்டர் ஆகணும், மருத்துவம் பாக்கணும்னு ஆர்வம், படிச்சேன், நல்லா மார்க் வாங்கினேன்... நல்லவேளையா நீட்லாம் வரதுக்கு முன்னயே சீட் வாங்கியாச்சு... இப்ப நான் டாக்டர், எனக்கு பிடிச்ச வேலையை செய்யறதும் கலைதான்பா” என்றாள்.
“அதோட சேவையும் கூட இல்லியா....?”.
“ரொம்ப புனிதப்படுத்தாத... விருப்பமான வேலைனா எல்லாருக்கும் அமையாது. இப்ப டாக்டர் ஆகணும்னு வரவங்க எல்லாம் நிஜமான ஆர்வத்தில வராங்கனா நினைக்கிற?... அதெல்லாமில்ல... பணம் இருக்கறவங்களுக்கு அது ஒரு ஸ்டேட்டஸ்... உண்மையா ஆர்வம் இருக்கறவங்க, சீட் கிடைக்காம வீணா போயிடுறாங்க.... பிடிச்சதை செய்றதில் என்ன சேவைனு சொல்லிக்க வேண்டியிருக்கு... “.
“நீ ஃபீஸ்கூட அதிகம் வாங்கறதில்லயேபா... அது சொல்லலாமில்ல...”.
“எனக்கு நெறய பேரை சந்திக்கணும்... நெறய ட்ரீட்மெண்ட் தரணும்... அதான் கம்மியா வாங்கறேன். சில நேரம் என் பணத்திலயும் சிலருக்கு இலவசமா மருத்துவம், மருந்துகள்னு உதவறேன். பணம் சேர்த்து என்ன பண்ணப்போற?... ஆனா பாரு... போட்டு தீட்றவங்களை விட எனக்கு வருமானம் அதிகம்தான் இல்லியா... அப்படி பாத்தாலும் எனக்கு லாபம்தானே...”
“சரிவிடு... உன்னை பேசி ஜெயிக்கமுடியாது.. உங்க அம்மா பேசினாங்களா...?”
“ம்... மதியம் பேசினாங்க... நாளை ப்ரொக்ராமுக்கு டெல்லி போறாங்களாம். நேத்து அவங்களுக்கு காபி வந்ததாம். புக் கூரியர் வச்சதா சொன்னாங்க... நல்லா வந்திருக்காம்... நீ போய் வாங்கிட்டு வந்திடுறியா...?”
“காலைலயே கூரியர் ஆஃபிஸ்ல இருந்து கூப்பிட்டாங்க... வாங்கி வந்துட்டேன்”
“அடப்பாவி...இவ்ளோ நேரம் ஏன் சொல்லலை.... எங்க அது...” என்று ஆர்வமாக எழுந்தாள் ராஜேஸ்வரி.
“ அட என்னபா... நான் இன்னும் அதை படிக்கலை. நான் ஆர்வமா இருந்தாலும் சரி... ஆனா உங்க அம்மா வெறும் ஹிண்ட்ஸ் குடுக்க, நீதானே அதை கதை போல அழகா எழுதின... உனக்கு என்ன இப்படி ஒரு ஆர்வம்.?” என்றான் பார்த்திபன்.
“அது சிஸ்டத்தில அடிச்சது. அதை பேப்பர் புக்கா பார்க்க ஆர்வம் இருக்காதா... எப்படி வந்திருக்கு என்னான்னு....”என்றவளுடன் எழுந்து உள்ளே சென்றான் பார்த்திபன். உதய் அப்படியே சோஃபாவில் படுத்து தூங்கிப்போயிருந்தான். பார்த்திபன் டேபிள்மேல் இருந்த அந்த பார்சலை எடுக்க, அதை தாவி பறித்து பிரிக்க ஆரம்பித்தாள் ராஜேஸ்வரி. அவளின் ஆர்வமும், வேகமும் பார்த்திபனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அம்மா பாசம் என்பதை மனதில் இருத்தி அனுபவித்தான்.
சிறு வயதில் இருந்தே அம்மா, அப்பா சொந்தம் என்றால் என்னவென்று தெரியாமல் பாட்டியின் அரவணைப்பிலயே வளர்ந்தவன் அவன். இட்லி கடை வைத்துதான் அவனை வளர்த்தார் அவனது பாட்டி. கல்லூரி சமயத்தில் அவன் பார்ட் டைம் வேலைக்கு சென்று செலவுகளுக்கு சம்பாதிக்க பழகியிருந்தான். பாட்டியும் தவறிவிட, தனி மனிதனாக படித்து, கம்யூட்டர் சயின்ஸ் முடித்தான். உள்ளூரில் இருந்த கம்யூட்டர் சென்டரில் பகுதி நேர ஆசிரியராக இருந்தான். அங்கே காரில் வந்து இறங்குவாள் ராஜேஸ்வரி. டாக்டருக்கு படித்துக் கொண்டிருந்தாள். கம்யூட்டர் கற்றுக்கொள்ள அங்கே சேர்ந்தாள். நல்ல வசதி. ஆனால் அவளது எளிமையும், அடுத்தவரை மதிக்கும் பாங்கும் இவனை மிகவும் கவர்ந்துவிட்டது. மனதில் தோன்றிய ஆசையை, தன் தகுதி நினைத்து அப்படியே மறைத்துக் கொண்டான்.
பின்னர் அவனுக்கு ஒரு வெளிநாட்டு கம்பெனியின் கிளையில் புரோக்ராமராக வேலை கிடைத்தது. எப்போதாவது ராஜேஸ்வரியின் முகம் வந்துபோகும். ஒரு நாள் திடீரென்று ராஜேஸ்வரியும் அவள் அம்மாவும் அவன் முகவரியை தேடி வர முதலில் பதட்டமாகவும், பின் மகிழ்ச்சியாகவும் இருந்தது. படித்து முடித்து , கிளினிக் வைக்க போவதாகவும், திறப்புவிழாவுக்கு கூப்பிட வந்ததாகவும் சொன்னார்கள். அங்கே சென்ற போதுதான், சிலர் ராஜேஸ்வரியை பெண்கேட்க, அவளின் அம்மா இவனை அறிமுகப்படுத்தி,,
“இதோ இவர்தான் மாப்பிள்ளை, நாங்க ஏற்கனவே பாத்து வச்சுட்டோம்”
என்று சொல்ல பார்த்திபனுக்கு இன்ப அதிர்ச்சியாகவும், நம்பமுடியாததாகவும் இருந்தது. இவனின் பார்வையை ஏற்கனவே படித்து விட்டதாகவும், நாள் வரட்டும் என்று காத்திருந்ததாகவும் ராஜேஸ்வரி பிறிதொரு நாள் சொன்னாள்.
அந்த கவரை பிரித்தவள், அப்படியே கண்குளிர அந்த புத்தகத்தை தடவினாள். மெல்ல முகர்ந்து பார்த்தாள். புதிய தாளின் வாசனை. இவனுக்கும் பிடிக்கும். ராஜேஸ்வரியின் கண்கள் லேசாக கலங்கியிருப்பதாய் தோன்றியது பார்த்திபனுக்கு. அவளிடம் அந்த புத்தகத்தை வாங்கினான். நல்ல கெட்டி அட்டை. தரமான பேப்பர். ஒரு ஐம்பது பக்கம்தான் இருக்கும். உண்மையில் அவள் அம்மாவின் ஜெயித்த கதையை கட்டுரையாக எழுதக்கேட்டிருந்தார்கள். ராஜேஸ்வரிதான் அவள் அம்மா கொடுத்த குறிப்புகளின் உதவியுடன் அதை எழுத ஆரம்பித்தாள். ஆனால் பாதி எழுதும்போதே ஒரு குறுங்கதை போல் அது வருவது கண்டு அப்படியே தொடர்ந்து எழுதி முடித்தாள். மிகச்சிறப்பாக வந்திருப்பதாக சொன்னாள். படிக்க கேட்டபோது, ‘புத்தகமாய் வரட்டும், அப்போது படித்துக்கொள்’ என்று சொல்லிவிட்டாள்.
ராஜேஸ்வரி அங்கிருந்து நகர, சோஃபாவில் வசதியாக அமர்ந்து அந்த புத்தகத்தை பிரித்தான் பார்த்திபன்.
“வண்ணத்துப்பூச்சியின் நினைவுகளில் இருந்து...”
-வித்யாசெல்வகுமார்-
புரட்டினான்.
_______
பகுதி ஒன்று
அணைத்து வைத்திருந்த செல்லுலார் ஃபோனையே பயமாய் பார்த்துக்கொண்டிருந்தான் செல்வகுமார். ஒரு சிறிய செவ்வக வடிவ கரும்பிசாசாய் அது அவனைப்பார்த்து முறைப்பதாய் தோன்றியது. வித்யா புதிதாக அதை பரிசளித்தபோது எவ்வளவு மகிழ்வாய் இருந்தது என்பதெல்லாம் ஞாபகம் வந்துபோனது.
தொடரும்....
Word count: 740