EN-16
புயலில் ஒரு பட்டாம்பூச்சி
அத்தியாயம் 4
எவ்வளவு நேரம் இருளில் அப்படியே இருந்தானோ தெரியவில்லை. ஏதோ உறுத்தலாய் தோன்ற , திரும்பிப் பார்த்தான். அங்கே, கதவில் சாய்ந்தபடி கைகளை கட்டியவாறு வித்யா இவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்கள் கலங்கியிருந்தன.
********
புத்தகத்தை மூடி வைத்துவிட்டு திரும்பினான் பார்த்திபன். ராஜேஸ்வரி கண்கள் கலங்கியிருந்தன.
“அட... என்னபா ... நீயே இப்படி கலங்கற. “ என்றான் பார்த்திபன். ராஜி கலங்கி அவன் பார்த்ததேயில்லை.
“இல்லடா... இது நெனச்சுபாரு. இதுவரை இருந்த ஒரு வாழ்க்கை, நல்லபடியா இருக்கோம்ற நினைவு, ஒரு நொடியில் மாயமா மறைஞ்சு போற நிலைமை. என் எதிரிக்குகூட வரக்கூடாது.”
“ஆனா எப்படி உங்கப்பா எதுவும் சொல்லாமலே இருந்தாரு. உங்க அம்மாவுக்கு கொஞ்சமும் தோணலியா?”
“இல்லபா... எல்லாத்தையும் அவரே மனசில போட்டு உருட்டிக்கிட்டு இருந்திருக்கார். ஏதோ வேலையில் கஷ்டம். ஹெவி வொர்க்னு அம்மாவும் இருந்திருக்காங்க...”
“ஓ... மனசளவில் உங்க அப்பாதான் பாவம். இல்லியா...”
“அதுவும்தான். காதல் மனைவி, அழகான குழந்தை... எவ்வளவு கனவுகள். சின்ன வயசுதான். ஆனா அனுபவிக்க முடியலைன்ற ஆதங்கம் எல்லாம் போட்டு மறைச்சு.... எங்க அப்பாவை மறுபடி பாக்கணும் போல இருக்குடா...”
“சரி விடு... ரொம்ப போட்டு குழப்பிக்காத. எல்லாம் நல்லதுக்கே... “ என்ற அவனின் சமாதானத்தில் ராஜேஸ்வரியின் மனம் ஆறவில்லை என்று புரிந்தது. அவளை ஆறுதலாக தன் தோளில் சாய்த்துக் கொண்டான் பார்த்திபன். அவளின் விசும்பல் கேட்டது.
அப்படியே தூங்கிப்போனாள் ராஜேஸ்வரி. அவளை மெதுவாக படுக்கையில் படுக்க வைத்து அருகில் ஒரு தலையணையை வைத்தான். எழுந்து அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தபடி அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
இரும்பு பெண் அவள். அம்மாவுக்கு அம்மாவாய், அப்பாவாய் சிறு வயதில் இருந்தே துணை நின்றவள். அம்மாவின் கனவுகளுக்கு வழிகாட்டி. ஆசான் அவள். அவளின் கணவன் என்பதே பார்த்திபனுக்கு பெருமையாக இருந்தது. எழுந்து அவள் அருகில் சென்றான். மெதுவாக...
“ஐ லவ் யூ டியர்” என்றான்.
தூக்கம் வராது போல தோன்றியது. லேப்டாப்பை திறந்தான். அதில் அவள் சேமித்து வைத்திருந்த கோப்புகளை பார்வையிட்டான். சில அத்தியாங்களை அதில் சேர்க்காமல் இருந்தது தேடினான். அதை படிக்க நினைக்க, அதில் ராஜேஸ்வரியின் பக்கமாய் நிறைய எழுதியிருப்பதாக சொன்னது ஞாபகம் வர, அதை அவளுடன் சேர்ந்து படித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அதை மூடி வைத்துவிட்டு அந்த புத்தகத்தை மறுபடி எடுத்தான்.
பகுதி மூன்று
“ சத்தியமா ஒண்ணும் இல்லடி... “ என்று மன்றாடினான் செல்வா.
“ பேசாதடா ... படுபாவி.... உன்னைதாண்டா மலையா நம்பியிருந்தோம்... “
தரையில் படுத்து விசும்பினாள் வித்யா. அவள் குரல் மெதுவாக இருந்தாலும்,அதில் தெறித்த வீரியம் அவனை நிலைகுலையச்செய்தது. சிறிது தூண்டிவிட்டாலும் வெடித்துவிடும் நிலையில் இருந்தாள் அவள். லேப்டாப்பில் கணக்குகளை அவள் பார்த்திருந்தது தெரிந்தது.
“ என்னென்ன கனவு... எல்லாம் போச்சு... என் வீட்ல பெருமையா சொல்லிட்டிருந்தேனே... என் அப்பா காறி துப்புவானே.... போச்சு... பொழச்ச பொழப்பே போச்சு.... “
“ அப்படிலாம் இல்லடீ..... இதபாரு.... “
“ மனுஷனா நீ.... இவ்வளவு வாங்கி என்னடா பண்ணின... என் நகையெல்லாம் தந்தேனே... மெதுவா போலாமேன்னு சொன்னேனே.... ஒரு பொண்ணு பெத்து வச்சிருக்கமே.... மனசில இதெல்லாம் இருந்தா தைரியம் வருமா.... “
“ வசூல் வரணும் பா... சமாளிக்கறேன்... சொன்னா வருத்தப்படுவியேன்னு... “
எழுந்து உட்கார்ந்தாள். அவிழ்ந்த தலையை அள்ளி முடிந்துகொண்டாள்.
“ இதோ பாரு... செல்வா... எனக்கு ஏதும் வேண்டாம். என் குழந்தை போதும். காலைல கிளம்பறேன். திட்டினாலும் கால்வயிறு கஞ்சி ஊத்துவார் எங்கப்பா... நீ எல்லாம் சரிபண்ணி என்னை கூப்பிட்டாலும் சரி, அப்படியே தலை முழுகிட்டாலும் சரி... மறைச்சு வாழற வாழ்க்கை இனி எனக்கு தேவையில்ல... “ என்று எழுந்து வேகமாக பீரோவைத் திறந்து துணிகளை அள்ளி ஒரு பேக்கில் திணிக்க ஆரம்பித்தாள் வித்யா.
விரக்தியும், சுயஇரக்கமும் உந்தித்தள்ள, வேகமாக எழுந்தவன்.. படாரென்று அவள் கையில் இருந்த பேகை பிடுங்கி தூக்கியெறிந்தான். துணிகள் வீடெங்கும் சிதற... வேகமாய் பீரோவை அறைந்து சாத்தினான். அந்த சத்தத்தில் எழுந்த ராஜி, நடந்தது ஏதும் புரியாமல் , வெலவெலத்து, வித்யாவின் கால்களை இறுகபற்றிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.
“ எல்லாம் நான்தாண்டி... நானேதான்... அவசரம்... அவசரம்... மேல வரணும்... பெரிய ஆளாவணும்.... உன்னை தங்கத்தால தாங்கணும்... பாப்பாவை பெரிய ஆளாக்கணும்.... அவசரம்... நானேதான் குழில விழுந்துட்டேன்...விழுந்துட்டேன்...”
தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தான் செல்வகுமார். கால்களை நீட்டி... தாரைதாரையாக கண்ணீர் ஊற்ற பெருங்குரலெடுத்து, அழ ஆரம்பித்தான்.
அடக்கி வைத்த உணர்வுகள் பீரிட்டெழ, இனி மறைக்க ஒன்றுமில்லை என்ற வெறுமை தாக்க கண்களை மூடி அழ ஆரம்பித்தான்.
அறையில் படரும் வெம்மை தாளாமல், அரண்டு நின்றிருந்த வித்யா... ஓடிவந்து அவனை நெஞ்சோடு அணைத்து, கேவி அழுதாள்.
“ செல்லமில்ல... அழாத... அழாதடா... குழந்தையா நீ.... தங்கம்... எங்கிட்ட சொல்லலாமில்லனுதான் கோவிச்சுட்டேன்... இங்க பாரு... “
நிமிர்ந்தான் செல்வா.
“ என்னடா இது கோலம்.. நீயாடா இது... கம்பீரமா இருப்பியேடா... என்னதாண்டா ஆச்சு... இப்பவாவது சொல்லு....”
கேவல் அடங்கவில்லை செல்வாவுக்கு. கண்கள் சிவந்து வீங்கியிருந்தது.
“ இப்ப என்ன... எவ்வளவு பணம் தேவை... சொல்லு .. அம்மாட்ட சொல்லி... வீட்டுமேல வாங்கி தர சொல்றேன்... பத்து லட்சம் போதுமா... “
“ இல்லபா... அதெல்லாம் நடக்காது... ஆறுதல் பட்டுக்கலாம். கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன். தலைக்குமேல போயிடுச்சி... “
“ சமாளிக்க முடியாதா செல்வா.... “
“ அசந்துட்டேன்பா... நான் ஓடிஓடி அசந்துட்டேன். மானமா வாழ நினைச்சு மாட்டிக்கிட்டேன்... “
“ தூக்கியெறி அவனுங்களை... நாமளே வாழலன்னா... அந்த ஏமாத்துக்காரனுங்க எப்படி வாழலாம். வா... இதோ எலிமருந்து வீட்ல இருக்கு. ஒரு லெட்டர் எழுது. எவனெவன் ஏமாத்தினானோ... எழுது... வச்சிட்டு சாவோம். இந்த பிள்ளையை விட்டுட்டு போனா சிதைச்சிடுவானுங்க. மூணுபேரும் சாவோம்... இரு வரேன்.. “
என்று எழுந்து உள்ளே சென்றாள் வித்யா.
“அப்பா....”
குரல் கேட்டு நிமிர்ந்தான் செல்வா. ராஜி மூலையில் ஒடுங்கி உட்கார்ந்திருந்தாள். அவள் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.
“ வாடா குட்டி.... “
“ நான் வரலை போ.... “
“ ஏண்டா.... வா...... “
“ நாளான்னிக்கி என் பர்த்டே வருது இல்ல... அது வராமயே செத்துபோறமா... “
“ தங்கமே.... “
என்று எழுந்து ஓடி... அவளை அள்ளி அணைத்தான். இறுக்கி தலையில் முத்தமிட்டான்.
“ சும்மாடா... ஒரு கோபத்தில பேசறது... சும்மா... “
“ பயமா இருக்குபா... நான் பக்கத்து வீட்டு அக்கா போல பெரிய ஸ்கூல் போறப்போ, உன்னைபோல பைக் வாங்கி தரேன்னு சொன்ன... நான் ஒரு நாள் அது போல போறேன்பா... அதுக்கப்புறம் செத்துப்போலாம்பா.... “
துக்கம் தாளாமல் வெடித்து அழதொடங்கினான் செல்வா. அவர்கள் இருவரையும் அணைத்தபடி அமர்ந்தாள் வித்யா. எவ்வளவு நேரமோ... வித்யாவின் மடியில் அப்படியே படுத்து செல்வாவும் ராஜியும் தூங்கிப்போயினர். இருவரும் கனவிடையே தேம்ப... அவர்களை தடவிகொடுத்தபடியே, கண்ணீரை துடைத்தபடி உட்கார்ந்திருந்தாள் வித்யா.
தொடரும்....
Word count: 706