கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பூங்கதவே தாழ்திறவாயோ பகுதி 7❤

பூங்கதவே தாழ்திறவாயோ பகுதி 7





"இந்தாருங்க தம்பி நீங்க லவ்வர்ஸ் தானே, முகச்சாயலை பாத்தாலே நல்லா தெரியுது...உங்களுக்கு ஒரு விசயம் சொல்லவா...இந்த கடைல வாங்கி குடிக்கிற லவ் பண்றவகளுக்கு பூரா, கல்யாணம் ஆயிடும் உடனே..."



"என்ன அப்படி பாக்கீக அதெப்படி தெரியும்னா"



"அதொண்ணுமில்ல...ஒரு நா இப்படி வந்து குடிச்ச ஒரு ஜோடி மறுபடியும் இங்க டிரிப் வந்தப்போ நம்ம கடைக்குத்தான் வந்தாக...அத எதேச்சயா இல்ல எப்படினு தெரியல அப்போதான் போன வாரம் தான் உங்க கடைல வந்து குடிச்சிட்டு போனோம் இப்போ பாரு ஒரு வாரத்துக்குள்ள கல்யாணம் முடிவு பண்ணிட்டாங்க... ரொம்ப ராசிக்கார ஆளுங்க நீங்க உடனே ஓகே சொல்லிட்டாங்கனு சொன்னாவோ...அப்போல இருந்து கடை பேரவே மாத்திப்புட்டேனா பாருங்க..."



"லவ்வர்ஸ் இளநீர் கடை" நேம் போர்டை இருவரும் ஒரு சேர திரும்பி பார்க்க அவளோ அவனை முறைத்துக்கொண்டு நின்றிருந்தாள்...



"ஏங்க நீங்க ரெண்டு இளநீரே கொடுங்க "



"அட என்ன தம்பி இப்படி சொல்லிட்டீய...ஒண்ணா சேர்ந்து குடிக்கதுலதானேவே கிக்கே..."



"அய்யா நாங்க லவ்வர்ஸ்லாம் இல்ல...புரிஞ்சிக்கோங்க..."



அரை மனதோடு இன்னொரு இளநீரை எடுத்து வந்து விருட்டென்று நீட்டினார்...



"தெரியும் நீங்க என்ன யோசிப்பீங்கனு...நான் வேணும்லாம் நிப்பாட்டல மித்து...எல்லாம் அதுவா தான் நடக்குது..."



"ஒஹோ சார்க்கு அப்படி வேற நினைப்பு இருக்கா சரிங்க..."



"ஹேய் பிளீஸ் குடிங்க மித்ரா...நா வேணா சாரி கேட்டுக்கிறேன்"



ம்ம்ம்ம்ம் ஸ்ட்ராவிற்கும் வலிக்குமோ என அவள் அதரம் பட்டு உள்ளிழுக்கும் இளநீரை ஓரக்கண்ணால் பார்த்தப்படியே திரும்பினான்...



குடித்து முடித்து செல்லும் வழியிலயே சிறிது சிறிதாய் மழைத்துளி எட்டிப்பார்க்க துவங்கியது...



முதலில் ரசித்துக்கொண்டே சென்றவர்களுக்கு நேரஞ்செல்ல செல்ல மழையின் வடிவம் பெரிதை எட்டியது...



வண்டியை ஓரமாய் ஓரிடம் நிறுத்திவிட்டு மழையின் வருகை தடங்கள் மட்டும் நிலைப்பெறும் வரை இருவரும் காத்திருந்தனர்...



தூரக்கீச்சிடும் பெருமழையின் சிறு துளியாய், அவள் தேகம் தொட்டு சென்ற மழையைப் பார்த்து சற்று பொறாமை கொண்ட இனியனின் முகம் நிமிடத்தில் இவள் பார்த்ததும் புன்னகையாய் மாறியது...



மழை நின்றும் தூவானம் நிற்கவில்லையே என்பது போல மெலிதான சாரலில் நனைந்தப்படியே வண்டியை எடுக்க முற்ப்பட்டனர்...தலையில் துப்பட்டாவை விரித்தப்படி காற்றில் பறந்த முடியை நடுவிரலால் எடுத்து விட்டபடியே பயணித்தாள்...



அவளை அவள் ஹாஸ்டலுக்கு அருகில் இறக்கிவிட்டு கிளம்பிய இனியனை நோக்கி சிரித்துக்கொண்டே தேங்க்யூ என கண்கள் சுருங்க கூறியவளை விட்டு அவன் கண் விலக மறுத்து நிற்க அவள் சென்றதும் அவளோடு பின் சென்ற நிழலை தொடர்ந்தவன்..



"மித்ரா" வார்த்தைகள் சற்று உடைந்து விழ



"சொல்லுங்க இனியன்" விழிகளை கூர்மையாக்கி கவனிக்க தொடங்கினாள்



" நாளையோட எங்க கவுன்சிலிங் உங்க ஆபிஸில முடியுது...கிளம்பிடுவோம் அடுத்து எங்க ஏதுனு எதுவுமே தெரியாது...ஆனா வாழ்க்கை ஏதோ ஒரு தேடலை தேடி ஓடிட்டே இருக்கும்...அது நிஜம்...கைகளை வாட்ச்சின் மீது வைத்துக்கொண்டு கண்கள் நிரம்ப நம்பிக்கையை வைத்து பேச்சை தொடர்ந்தான்...



ஆனா ஒண்ணு மட்டும் சொல்ல ஆசைப்படுறேன் மித்ரா மனசுக்குள்ள வலியை வச்சிட்டு சிரிக்கிற வித்தை எல்லாருக்குமே வராது...எத்தனையோ கஷ்டத்தை நானும் பாத்திருக்கேன் சாப்பாடு இல்லாம கூட இருந்திருக்கேன் ஆனா என்னால கூட இருக்கவங்க வருத்தப்பட கூடாதுன்றதுல கவனமா இருப்பேன் இப்போ அதே குணத்தை உங்க கிட்ட பாக்கிறப்போ சமயங்களில என்னையவே பாக்கிற ஒரு ஃபீல் கொடுக்குது..."



"ஹல்லோ இனியன் இப்போ நான் பிரச்சனைல இருக்கேன் ஆனா சிரிச்சி சமாளிக்கிறேனு சொன்னேனா உங்க கிட்ட...நீங்களே வர்றீங்க...நீங்களா ஒரு ஜட்ஜ்மெண்டல் வச்சிக்கிறீங்க...உங்க எல்லா எண்ணத்துக்கும் என்னால பதில் சொல்ல முடியாது அது எனக்கான வேலையும் இல்ல பர்ஸ்ட் அத புரிஞ்சிக்கிடுங்க..."



" மித்து நான் சொல்ல வரத கேட்கவே மாட்டீங்களா சண்டை போட நான் இப்போ பேசல"



"மித்துனு சொல்ற வேலைலாம் வேணாம் எம்டி சொன்னாருன்ற ஒரே காரணத்துக்காக மட்டுந்தான் பைக்ல வந்தேன் அதுக்காக அட்வாண்டேஜ் எடுத்துட்டு பேச ட்ரை பண்ணாதீங்க..."



" ஹேய் ஏன் இவ்ளோ கோவம்...சரிங்க சாரி நான் போயிடுறேன்...ஆனா லாஸ்டா ஒண்ணு சொல்லிக்கிறேன்...ஏதாச்சும் ஒரு தருணத்தில பார்க்க நேர்ந்தா சிரிக்க ஒரு புன்னகையாச்சும் மிச்சம் வச்சிக்கோங்க இவ்ளோ கோவத்தை கொட்டி வெறுப்ப ஏன் காட்டணும்...நான் உங்களை காயப்படுத்திட்டேன் போல ரொம்ப மன்னிச்சிடுங்க மிஸ். மித்ரா.."



எதற்க்குமே அசையாதவளாய் விருட்டென்று தன் கைப்பையை சரியாய் மாட்டிக்கொண்டு தன் விடுதிக்கு நகர்ந்தாள்...



பேரிரைச்சலோடு ததும்பும் அருவியோடு விழுந்த தேள் போல கொட்டிய வார்த்தைகளில் தெளித்த கோவத்தில், முள்ளாய் குத்தி கிழித்த இதயத்தினினும் அவளுக்காய் ஒரு புறம் சிரித்துக்கொண்டே அதை ஏற்று நின்றது இனியனின் மனம்...



சிறிதும் அசராத மனதோடு அறையில் நுழைந்து அசந்து தூங்க சென்றவளை வழக்கமாய் அலாரம் வைத்ததுபோல எழுப்பும் நடு நிசியை தாண்டிய இரவு விழித்துக்கொண்டது எழுந்துக்கொண்டு இளையராஜாவின் பாடல்களை துணைக்கு அழைத்து உறங்க எத்தனித்தாள்.



தூக்கம் மட்டும் அவளுக்கு எட்டாக்கனியாகவே நித்தமும் எப்போதும்

போல மிருவின் முகத்தை பார்த்தே கவலை மறந்து சற்று நித்திராதேவியை அணைத்துக்கொண்டாள்.



இவள் பேசிய வார்த்தைகள் அவனை ஈட்டியாய் குத்தி கிழித்தாலும் வீடு செல்லாமல் நண்பனிடம் காரை வாங்கிக்கொண்டு பைக்கை அவனிடம் விட்டுவிட்டு, மெரினாவின் வாசத்தில் சற்று வண்டியை நிறுத்தி மனதை இரவின் மடியில் கிடத்தி நட்சத்திரத்தை துணைக்கொண்டு சற்று கண் அசந்தான் லவ் குருவின் வார்த்தைகளை கேட்டபடியே...எப்போது அசந்தான் என்றே தெரியாத அளவுக்கான தூக்கம் காலை வேளையில் மெல்லிய தூரல் ஏனோ மனதை எழுப்பி விட்டது...வைப்பரை ஆன் செய்து துடைத்தப்படியே சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்தான்...



தொப்பையை குறைக்க ஓடும் கூட்டம் ஒரு புறம் சற்று மழையில் ஆங்காங்கே நின்றிருந்தது...வழக்கமாய் வாக்கிங்கில் மட்டுமே பேசிக்கொள்ளும் முதியவர்களின் கூட்டமும் அங்கமர்ந்து கதைத்து கொண்டிருக்க...இளஞ்சிட்டுக்கள் ஜாகிங் என்ற பெயரில் வளையம் வந்துகொண்டிருந்தனர்...



மெலிதாய் கண்ணடித்தப்படியே மேகத்திரையை விலக்கி மஞ்சள் வானமாய் பூக்கத்தொடங்கிய கதிரவனை பார்த்ததும் இனம் புரியா மகிழ்வில் ஏனோ சற்று தன்னை மறந்து வேடிக்கை பார்த்தான்...அவனை மீறி சிரித்து படர்ந்த அதரங்களை ரசித்துகொண்டே இருந்தான் உள்ளுக்குள்...



நல்ல அழகான நிகழ்வுகளை மட்டும் விழியில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து கியரெடுத்து வண்டியை விரட்டினான்...நேராய் அவன் தங்கியிருக்கும் இடத்திற்கு விரைந்தான்...



"டேய் என்னடா இனியா நைட் பூரா எங்க போன கண்ணு ஏன் இப்படி செவந்திருக்கு...தூங்கினியா இல்லயா நீ..."



"டேய் அதெல்லாம் தூங்கினேண்டா நீ வழிய விடு...வந்ததுமே கட்டய போடுற..."



"ஒஹோ...ஷப்பா டேய் ஒண்ணும் பேசல சாமி நீ உள்ளபோ..."



" என்னாச்சுடா இவன் ஏன் குடிபோதையில வர்றவன் மாதிரியே தள்ளாடிட்டு வரான்"



"விக்கி அவன்ட்ட எதுவும் கேட்காதடா...எப்படியோ போட்டும்...நமக்கெதுக்கு சொன்ன உடனே சரினு கேட்டுறபோறானா...தூக்கத்தை கெடுத்து அவளையே நினைச்சு எதுக்கு இப்படி பண்றானே தெரியல..."



"டேய் சஞ்சய் அமைதியா இரு எதுவும் சொல்லிட போறேன்"



" என்னடா சொல்லபோற இல்ல கேட்கிறேன்...15 வருஷமா நம்ம ஒண்ணாதான் சுத்துறோம்...எனக்குத்தெரியாம நீ எதுவுமே பண்ணமாட்ட...ஆனா இப்போலாம் என்ன ஆச்சுனே தெரியல சரியா பேசுறது கூட இல்ல...எனக்கும் வலிக்கும்டா...அந்தபொண்ணுக்காக தானே எல்லாம் சொல்லு இல்லனு சொல்ல சொல்லுடா விக்கி"



"ஹேய் நீ அவளுக்காக தான் எல்லாம் பண்றேனு பாத்தியா...சும்மா எதுவும் பேசிட்டு இருக்காதடா"



" அப்போ அது இல்ல அதானே .. டேய் இந்த கதையெல்லாம் எவனாச்சும் ரோட்ல சிங்சாங் அடிச்சிட்டு இருப்பான் அவன் கிட்ட போய் சொல்லு...கூடவே சுத்துற என்கிட்ட சொல்லாத சரியா... மூணு வருஷமாச்சு இன்னும் நீ சரியாகல...அவக்கிட்ட வேணா நானே பேசட்டுமா டா...அப்போயாச்சும் சரியாகிடுவியா நீ..."



"டேய்" விருட்டென்று வந்து அவன் சட்டையை பிடித்தவன் பின் ஏதோ நினைவுக்கு வந்தவனாய் தன் கையை விடுத்து "மச்சான் அதுக்காகவா டா இவ்ளோ கஷ்டப்பட்டேன்...சாரிடா மச்சான்"



"உன் சாரிய நீயே வச்சுக்கோடாப்பா...எனக்கு வேணா...பெருசா வந்துட்டான் சாரி சொல்ல...போடா டேய்..."



மெலிதாய் இதழ் விரித்தப்படியே நகர்ந்தான்...



அன்று மித்துவின் அலுவலகத்தில் அவனின் கடைசி கவுன்சிலிங் நாள் என்பதை நினைவுக்கு கொண்டு வரவே விடாமல் தவித்தாலும் மறதி அன்று ஏனோ அவனோடு மல்லுக்கு நின்று முதல் ஆளாய் மனதில் வந்து நின்றது...



எம்டி சதாசிவம் ஏற்பாடு செய்திருந்த மீட்டிங்கில் அனைவரும் கலந்துக்கொள்ள மித்துவை மட்டும் தேடி அவன் கண்கள் அலைமோதியது...



தூரத்தில் மினுங்கும் ஒளியாய் அவன் கண் கூசி நிற்கும் அளவிற்கு அன்று ஏனோ பேரழகியாய் மினுங்கினாள்...



அவள் சென்று பேச நினைத்து தருணம் பார்த்து காத்திருந்தான்...



சடாரென எம்டியின் அழைப்பை ஏற்று மேடையில் பேசத்தொடங்கினான்...



" நான் இங்க வந்தப்போ இருந்ததை விட இப்போ நிறைய மாறிருக்கு...சில மாற்றங்கள் மனசால ஏத்துகிடுறது...சிலது நம்மளோட செய்கைகளால உணர்த்துறது...இங்க ரெண்டுமே எனக்கு.இப்போ பாக்க முடியுது...சந்தோசம் தான்...உங்களால எப்படி அந்த டிரிப்பை மறக்க முடியாதோ அதே போல என்னாலயும் மறக்கவே முடியாது என் வாழ்க்கையில பல காரணங்கள் அதுக்கு இருக்கு ...பேசியவாறே பார்வை அவளருகில் திரும்பி நின்றது மறுபடியும் யாரும் பார்க்காத வேளையில் திரும்பினான் அனைவரின் பக்கமும்...



"உங்க எல்லாரோடவும் நேரம் செலவிட்டதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி...இன்னும் நிறைய மாற்றங்களை உங்ககிட்ட எதிர்ப்பாக்கிறேன்...அது உங்க மனசை பற்றிய தேடலா இருக்கட்டும்... தாங்யூ ஆல்"



பேசி முடித்து மேடை இறங்கி அவரவர் சாப்பிட சென்றதும்...நேரம் பார்த்து அவளிடம் பேச நினைத்தான்...



"மது நான் பேசணும் ஏதாச்சும் பண்ணு"



"வேணாம் இனியா...அவளே கொலவெறில இருக்கா என்ன ஆச்சுனு தெரியல நீ சும்மா இரு போறப்போ அவக்கிட்ட எதுக்கு திட்டு வாங்குற...நிம்மதியா போ...பாத்துக்கலாம்...எங்க போயிட போறா..."



" இல்ல மது ஒரு வாட்டி பேசி பாத்துகிடுறேன் அட்லீஸ்ட் தேங்க்ஸ் நோட்டாச்சும்..."



"சரி இப்போ நீ சொன்ன உடனே உருகி பரவாயில்லங்க அதெல்லாம் பிரச்சனையில்லனு சொல்லிட்டு நல்லா பேசுவானு நினைக்கிறியா...அவ இப்போ இருக்க மூடுக்கு கண்டிப்பா கோவப்பட்டு கத்துவா...இல்ல கண்டுக்காம போவா இதான் நடக்கும்...இதுக்குமேலயும் பேசுவேன் அப்படினா நான் தடுக்கல நீ போய் பேசு"



"இல்ல மது நான் பேசல நீ சொல்றது சரிதான் நான் போறப்போயும் அவங்கள காயப்படுத்த வேணாம்..."



" ஒஹோ சார் இப்போ கூட மேடம் காயப்படுத்துறதுலாம் யோசிக்கல...வாவ் சரிங்க"



" ஹேய் மது..."



"என்ன .. ஆமா அவ என் பிரெண்ட்தான் அதுக்காக அவ காட்டுற அளவுக்கதிகமான கோவத்தலாம் தாங்கிக்கணும்னு இல்ல..."



"சரி விடு மது...நான் கிளம்புறேன் அப்புறம் பாக்கலாம்...கீப் இன் டச் டா"



"கண்டிப்பா இனியா...டேக் கேர்"


தொடரும்....
 
Top