சில நாட்கள் கழித்து மதுவை இறக்கிவிட்டு இவள் மட்டும் கேபில் வந்து கொண்டிருக்க...டிரைவர் பரிட்சயமானவர் எனபதால் பேசிக்கொண்டே ஓட்டினார்..
"மித்ரா மா பேப்பர் பாத்தீங்களா..."
"இல்லயேணா என்ன..."
" ஒரு 5 வயசு பொண்ணு மா...கதற கதற அவள கற்பழிச்சு தூக்கி வீசிருக்காணுங்க...உடம்பு பூரா ரத்தத்தோட முள்ளுக்காட்டில கிடந்திருக்கு...பெத்த மனசு எப்படி பதறும் சொல்லுங்க...எனக்கு படிச்சதில இருந்தே மனசே சரியில்ல...அதான் உங்ககிட்ட சொன்னேன்...எப்படித்தான் இப்படிலாம்.மனசு வருதோ தெரியல...ஒரு சின்ன குழந்தை அதப்போய் சை மனுசங்களா இவனுங்களாம் நிக்க வச்சு சுடணும்... விட்டுட்டே ஜாமீன்ல வந்திறலாம்னு இருக்கப்போய் தான் தப்புக்கு மேல தப்பா பண்ணுதானுவோ..."
"அண்ணே கொஞ்சம் வண்டிய நிறுத்துங்க..."
" என்னாச்சு மா...நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா..."
"இல்லணா ஒண்ணுமில்ல வண்டியை அந்த காபிஷாப் பக்கம் ஓரங்கட்டுங்க..."
" ம்மா என்னாச்சு நீங்க இப்படிலாம் பண்ணமாட்டீங்களே..."
"அதெல்லாம் ஒண்ணுமில்ல ணா..."
"வெயிட் பண்ணட்டுங்களா..."
"இல்லங்கணா நீங்க போங்க...நான் பஸ் பிடிச்சு வந்திடுறேன்..."
"இல்லமா இருக்கேனே..."
"நான் பாத்துக்கிறேனு சொல்லிட்டேன்லணா விட்டுருங்க..."
"சரிம்மா பாத்து போங்க..."
"ஒரு கேப்பசீனோ..."
ஹார்ட் வடிவ பால் கலந்த சிக்கரியில் காபியின் சுவை அறிய கூட முடியாமல் சிக்கி தவித்த அவள் தொண்டைக்குழி ஏதோ வேண்டா வெறுப்பாய் பருகத்தொடங்கியது...
"சார்...நான் இன்னைக்குள்ள நீங்க கேட்ட பைல்ஸை அனுப்பிடுறேன்..."
"சரி இனியன் நம்ம பிஸினஸ் மேட்டர் நமக்குள்ளே இருக்கட்டும்...எதுவும் யாருக்கும் தெரியவேணாம் புரிஞ்சதா"
"கண்டிப்பா நீங்க கவலைபடாம போங்க நான் பாத்துக்கிறேன்..."
"இனியா வாங்களேன் நான் வேணா டிராப் பண்றேன்..."
"இல்ல சார் நீங்க போங்க நான் கொஞ்சம் நேரம் இங்க இருந்துட்டு வரேன்..."
"ஓகே என்ஜாய் யுவர்செல்ஃப்"
"சார் "
"ஹான் ஒன் கோல்ட் காஃபி"
"ஓகே சார்..."
ஸ்ட்ரா போட்டு வைக்கப்பட்ட காபியை கலக்கி விட்டு இதழ்களுக்குள் சுவையை இறக்கினான்...இறங்க இறங்க ஏனோ மனம் மெலிதாய் சிலாகித்தாலும் 'ஆனா என்னதான் சொல்லு ரோட்டோரம் சாப்பிடுற அந்த டீ க்கு இணையே இல்ல '
மனம் ஆமோதிக்க குடித்துக்கொண்டே விரல்களுக்கு வேலை கொடுத்து இரண்டு விரல்களுக்கு இடையில் மொபைலை வைத்து பெருவிரலால் நோண்டிக்கொண்டே நோட்டமிட தற்செயலா இல்லை தன்செயலா என அறியாவண்ணம் அங்கிருந்த மித்ராவை பார்த்து ஆச்சரியத்தில் விரிந்த கண்களை அந்த ஆச்சர்யத்தை கண்களுக்குள் மட்டும் பத்திரப்படுத்தி கிளம்ப நினைத்தவனை மனம் மட்டும் விடுவதாய் இல்லை...
'டேய் போய் பேசு டா...தனியா தான் இருக்கா'
' ஏண்டா நான் திட்டு வாங்குறதுக்குத்தானே பிளான் பண்ற நீ.... சும்மாவே அப்படி கத்துவா...இப்போ தனியா வேற இருக்கா அதுவும் க்ரொளடே இல்லாத இந்த ஷாப்பில சத்தம் வேற ஜாஸ்தியா கேட்கும்...அவமானப்பட சொல்றியா...'
'அய்யோடா...மானம் ரோசம்லாம் பாத்தா காதலிக்க முடியுமா...இந்த ஈகோவைலாம் விட்டுட்டு போய் பேசு...அவங்க முகத்தை பாரேன்...'
'பாத்துட்டேன்...'
'ஏதோ கவலல இருக்காப்ல இல்ல'
'பாக்க அப்படித்தான் இருக்கு ஆனா அவ என்னைக்குத்தான் சிரிச்சிட்டே இருந்திருக்கா சொல்லு'
'அடேய் எந்த பக்கம் போனாலும் கவுண்டர் போடக்கூடாது உன் மனசு நான் சொல்றேன் போய் பேசு...'
' நீ என்னைய சாவடிக்கணும்னு ஒரு முடிவோட இருக்க அதானே'
'பராவாயில்ல லவ்க்குத்தானே செத்துப்போ'
'அடப்பாவி...'
'இங்க பாரு பேசி என் எனர்ஜியை வேஸ்ட் பண்ணாத அந்த கோல்ட் காபி இருக்குல அத முழுசா குடிச்சிட்டு போ...இன்னும் ஏன் வச்சிட்டே இருக்க...அப்படியே இந்த லவ்வர்ஸ் மாதிரி சாய்ந்திரம் வரைக்கும் குடிக்க நினைப்பா...வாய்பில்ல ராஜா...உனக்குலாம் இன்னும் பல வருசங்கள் ஆகும் அதனால ஒழுங்கா சமத்தா குடிச்சிட்டு போயி பேசுவியாம் சரியா...'
' நிசமாத்தா சொல்றியா...'.
'இங்க என்ன கோன் பனேகா குரோர்பதியா நடக்குது...கம்ப்யூட்டர் ஜி லாக் பண்ணவானு கேட்டுட்டு இருக்க...போடா என் டுபுக்கு'
' என்னடா மரியாதையில்லாம பேசுற...'
'நீ இப்போ போலாட்டி இன்னும் பேசுவேன் ஓடிப்போயிடு...இப்படி கவலையா இருக்கப்போ பேசினாத்தான் ஆறுதலாய் இருக்கும்...அப்போதான் அவளுக்கு ஒருத்தவங்க இருக்காங்கனு தோணும்டா...எல்லாம் நானே சொல்லவேண்டி இருக்கு...போ போ'
'என்னடா இன்னும் போலயா...நான் இம்புட்டு நேரம் தொண்டை தண்ணி வத்த பேசிருக்கேன் என் பேச்சுக்கு என்ன மருவாத அப்போ'
'அடேய் அதான் காபி குடிச்சேல கம்முனு இரு...'
'அது நான் பேசினதுலயே போயிட்டுடா...இன்னும் என்னதான் உனக்கு பிரச்சனை சொல்லு'
'இருடா அவ தானானு பாத்துட்டு போய்க்கிறேன்...'
'அடி வாங்காம ஒழுங்கா போயிடு...அவ்ளோதான் உனக்கு மரியாதை சொல்லிட்டேன்...'
ஏதோ தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவள் எதிர்பாரா விதமாய் அவள் முன் சென்று நின்றான்...அவனையும் சரி காபியையும் சரி எதுவுமே அவளுக்கு நினைவற்று எங்கோ மனதை திசை திருப்பிக்கொண்டிருந்தாள்...
"மித்ரா"
"ஹல்லோ மித்ரா...கேட்குதா"
"ஹான் சொல்லுங்க..." கொஞ்சம் அமைதியாய் திரும்பிய அவளது முகம் அவனை பார்த்ததும் சற்று கோவம் தெளிக்க முற்பட்டது...
" நீங்க மட்டுந்தான் வந்தீங்களா..."
'அதான் தனியா இருக்கானு தெரியுதுல அப்புறம் என்னடா கேள்வி...உனக்கு நான் என்னலாம் சொல்லி அனுப்பினேன் நீயெலாம் சைக்கியாட்ரியஸ்ட் மானத்தை வாங்குறீயேடா...'
மனதின் பேச்சை சட்டை செய்யாமல் பேசத்தொடங்கினான்...
" ஆமா இனியன் தனியா தான் வந்தேன்..."
'ஆஹா என்ன ஒரு டிவிஸ்ட் அவ கோவப்படலயா இது போதுமே...சாரிடா நீ நல்ல சைக்கியாட்ரிஸ்ட் தான் நீ பேசு நான் போறேன்...'
'முதல்ல அத பண்ணு...'
"எப்படி இருக்கீங்க மித்ரா"
" ம்ம்ம் இருக்கேன் நீங்க..."
அவள் மனதறிந்து பேச தொடங்கினான்..."இருக்கேன் மித்ரா"
"ம்ம்ம்ம் " மீண்டும் பார்வை வேறெங்கோ திருப்பினாள்...
" நான் பஸ்ல தான் போறேன் நீங்களும் வர்றீங்கனா சேர்ந்து போலாமா..."
" இல்ல நான் வர லேட்டாகும் நீங்க வேணா கிளம்புங்க..."
"சரி நான் வெயிட் பண்றேங்க..."மறுப்பேதும் கூறாமல் அவள் அமைதியாய் இருந்தது அறிந்தாலும் ஒரு புறம் மகிழ்வும்,மற்றொருபுறம் வெடிக்கும் சோளப்பொறி அமைதியாய் நின்று வெடிக்குமோ என்ற பயத்தையும் சேர்த்து கொடுத்தது...
சிறிது நேரத்திலயே ஒரே கல்ப்பில் மிச்சம் வைத்திருந்த அனைத்தையும் குடித்து முடித்து பில் வந்ததும் பே பண்ணிவிட்டு அவன் அவளுக்கும் சேர்த்து கொடுக்க எத்தனித்தான்...
அவளின் ஒற்றை முறைப்பில் பேசினால் போதுமென்று அமைதியாய் இடத்தை விட்டு நகர்ந்தான்...
அவனுடன் அவள் வர ஒத்துக்கொண்டதே பெருங்கனவாய் சிலிர்த்து வந்தவனுக்கு முகமெங்கும் புன்னகை தெளித்தது...அதில் சிறிதேனும் அவள் முகத்தில் வரவழைத்திட மாட்டோமா என்ற எண்ணமே அவனுக்கு மேலோங்கி நின்றது...
அமைதியாய் இருவரும் சென்று கொண்டிருக்க பேச்சை அவனே ஆரம்பித்தான்...
" ஆபிஸ்லாம் இப்போ நல்லா போகுதா"
"ம்ம்ம் ஏதோ போகுது இனியன்..."
" மது நல்லா இருக்காங்களா"
" அவளுக்கென்ன ரொம்ப நல்லா இருக்கா"
" நீங்க இப்போ ஸ்ட்ரெய்டா ஹாஸ்டல் தான் போறீங்களா மித்ரா"
"ஏன் கேட்கிறீங்க..."
"இல்ல உங்களுக்கு டைம் இருந்தா பக்கத்தில தான் திருவான்மியூர் பீச் வேணா போயிட்டு வரலாமா..." தயங்கி தடுக்கி விழுந்த வார்த்தை பொறுக்கி பேசினான்...
" எனக்கு ஒரு மாதிரி இருக்கு...அதான் கொஞ்ச நேரம் தனியா இருக்க நினைச்சேன் இங்க வந்தேன்...மனசை மாத்திட மனிதர்களால முடியுமோ இல்லையோ இயற்கையால முடியும்னு நம்புறேன்...அதான் கொஞ்ச நேரம் பீச் போலாமேனு கூப்பிட்டேன் உங்கள எந்த டிஸ்டர்பும் பண்ணமாட்டேன்...பேச கூட மாட்டேங்க...ஜஸ்ட் உங்க கூட வரேன்...ஒரு சேப்டிக்கு கூட நினைச்சிக்கோங்களேன்...போலாமா..."
"ம்ம்ம்ம்ம்ம் போலாம்...."
"வாட் மித்ரா நீங்களா சொல்றீங்க...என்னால நம்பவே முடியலேயே...இருங்க கிள்ளி பாத்துக்கிறேன் அச்சோ வாவ் "
"இப்போ ஏன் இவ்ளோ குதிக்கிறீங்க..."
"என் கூட பைக்ல வரவே அவ்ளோ யோசிச்ச பொண்ணு இப்போ உடனே சரி சொல்லிட்டீங்களா அதான்..."
எந்த பதிலும் இல்லாமல் வார்த்தைகளற்று நிராயுதம் தரித்து நின்ற மனதிற்கு பதில் சொல்ல முடியாமல் அமைதியாய் நின்றாள்...
மாலை இரவை தொடும் நேரம் நீல வானம் கரு நீலமாய் மாற துவங்கியது இருவரும் ஒருவர் பின் ஒருவராக நடந்து சென்று கொண்டிருந்தனர்...
" கிச்சு கீச் என்றது கிட்ட வா என்றது...சிட்டுக்குருவியொன்று ஒன்று வட்டப்பாறையின் மேல் பிரியமாய் நின்றது..."அவன் மனம் பாடலை முணகிக்கொண்டே இருக்க 'அடேய் கம்முனு இருடா ஏதோ பேசி சமாளிச்சி ஒரு அப்பாயிண்ட்மெண்ட் பிக்ஸ் பண்ணிருக்கேன் எதாச்சும் பாட்ட போட்டு சொதப்பி விடாத'
'ஹீக்கும் ஆமா அண்ணன் ரொம்ப நல்லவரு அட போ பா என்னமோ பண்ணு..ராஜா அந்த பிள்ளை ஏதோ மூட் அவுட்ல இருக்கப்போய் ஒத்துக்கிட்டு இதயே சாக்கா வச்சு நாளைக்கு போய் கேட்டுப்பாரு நாலு அடி தான் விழுகும்...பாத்து பா...'
'அதுவும் செரிதான்ல இவ மைண்ட் எப்போ மாறும்னே தெரியாதே...'
"மித்ரா வாங்க இங்க கொஞ்சம் நேரம் உட்கார்ந்துட்டு அலையை ரசிச்சிட்டு போலாமா"?
எதுவும் பேசாமல் அவனுக்கு சற்று தள்ளி அமர்ந்து கடற்கரை மணலை கையிலெடுத்து பிடித்து விட்டப்படியே அலையின் ஓசையை உட்கிரகிக்க முடியாது எங்கோ அவள் பார்வை சூழ்ந்திருப்பதை பார்த்துக்கொண்டே இருந்தான்...
" எதாச்சும் சாப்பிடுறீங்களா...வாங்கிட்டு வரட்டா..."
"இல்ல வேணா இனியன் நாம கொஞ்ச நேரம் இருந்துட்டு போயிரலாம்"
" ம்ம்ம்ம் சரி மித்ரா"
இருள் மெலிதாய் இன்னும் கவ்வ தொடங்கியதும் "வாங்க போலாம் இனியன்"
" சரிங்க வாங்க..."
மெல்ல நடந்து சென்று கொண்டிருக்கையில் காலணி தடுக்கி கீழே விழ எத்தனித்தவளை தாங்கி பிடிக்க ஆசைப்பட்டான் அவளே சமாளித்து நடக்கத்தொடங்கியதை அறிந்ததும் ஏமாற்றம் சூழ அவளை பார்க்க "என்னா" என பார்வையிலயே கேள்வியை அவள் மடக்க, "ஒண்ணுமில்லயே" என புருவம் மடித்து அவன் கூற இருவரும் மறுபடியும் நடக்க ஆரம்பித்தனர்...
இங்க இருந்து உங்க ஏரியாவுக்கு டேரக்ட் பஸ் உண்டு போயிடுவீங்களா..."
"காலேஜ்ல இருந்து எல்லாமே சென்னை தான் சோ ரூட்லாம் நல்லா தெரியும் மிஸ்டர்.இனியன்...உங்களுக்கு தேவைப்பட்டுச்சுனா சொல்லுங்க நான் வேணா சொல்றேன்..."
"ஓஹோ அப்படி...ரைட்டுங்க...பாத்து போங்க..."
" நாங்க பாத்துதான் போவோம்..."
அவர்கள் பேசிக்கொண்டே இருக்கவும் அடுத்த 10 நிமிடத்தில் அவளுக்கான பஸ் வந்ததும் அவளை ஏற்றிவிட்டு இவன் மெல்ல நடையை கட்டினான்...
தூரத்தில் அவன் நிறுத்தி வைத்திருந்த வண்டியை எடுத்துக்கொண்டு,
அவள் சென்ற பேருந்தை தூரத்தில் பார்த்தப்படியே, அவள் அறியா வண்ணம் வண்டியை அவள் சென்ற திசைக்கு எதிர் திசையில் திருப்பி வீட்டிற்கு பயணிக்கலானான்...
அவள் தன்னோடு செலவிட்ட அந்த 10 நிமிடங்களும் நினைவுகளாய் அவன் நெஞ்சில் நீள...பூச்சாரலாய் நெஞ்சை மென்மையாய் கீறி பதம் பார்த்தது சற்று இதயத்துடிப்பை அன்பால் எகிறவைத்து...
"என்னடா மச்சான் இமேஜினேஷனா..."
"அட நீ வேறடா...அவனுக்காச்சும் அந்த பிள்ளை செட்டவுறதாவது"
" டேய் சஞ்சய் வேணாம் ஏற்கெனவே நீ ரொம்ப கிண்டல் பண்ற போதும்...இப்போ நான் சொல்றத கேளு..."
"சரிப்பா டேய் சொல்லு...புதுசா என்ன சொல்றேனு நானும் பாக்கிறேன்..."
" அவ என்கூட இன்னைக்கு பீச்சுக்கு வந்தாடா..."
"அப்புறம்...கனவு கலைஞ்சி எந்திச்சிட்டியாக்கும்..."
"மச்சான் அல்டிமேட்டுடா..." விக்கி அவனை நோக்கி ஹைபை அடித்து சிரிக்கவும்,
"உங்களுக்கு என்னய பாத்தா எப்படிடா தெரியுது..."
"அப்புறம் என்னடா அது பேசவே மாட்டேக்குதுனு புலம்பின...இப்போ இன்னைக்கு இப்படினா யாரு நம்புவா சொல்லு..."
"டேய் நம்புடா ...அவ ஏதோ மூடவுட்ல இருந்தா அதான் என்ன நினைப்பில இருந்தாளோ வந்துட்டா. "
"அதானே பாத்தேன் எப்படிடா வேதாளம் முருங்கைமரம் ஏறாம இருக்காதேனு நினைச்சேன்..."
" சரி மேல சொல்லு..."
"நான் என்ன இங்க கதையாடா சொல்றேன்"
"டேய் விக்கி கேட்டுக்கிட்டியா கதையில்லயாமா"
" மச்சான் சஞ்சய் ஒழுங்கா இப்போ நீ கேக்கிற" ...
" சரி சொல்லு..."
நடந்தது அத்துனையும் அவன் விவரித்து கூறியதும்...
"ஹேய் வெயிட் இந்த சிட்சுவேஷனுக்கு உனக்கு ஒரு கவிதை தோணிருக்கணுமே..."
"அதெப்படிடா மச்சான் இப்படி அடிக்கிற..."
"ஹல்லோ நாங்களும் லவ் பண்ணி வந்தவங்க தான் சொல்லுங்க என்ன தோணுச்சு...அப்படியே உடம்பெல்லாம் சிலிர்த்திருக்குமே...ஒண்ணா அப்படியே கை பட்டும் படாம படுறப்போ அதுக்காகவே நெருக்கி நடக்க தோணிருக்குமே...சம்பந்தமே இல்லாம சிரிக்க தோணிருக்குமே...உன்னயே அறியாம சந்தோசமா இருந்திருப்பீயே...அவள் கைகோர்த்து நடந்திர மாட்டோமானு ஏங்கிருப்பியே...என்ன எல்லாம் சரியா..."
"டேய் சஞ்சய் ஹாண்ட்ஸ் டவுண்டா...வாட்ட ரிசர்ச்..."
"என்னது ரிசர்சா...அடேய் எல்லாம் அனுபவம் பேசுதுடா...ரிசர்ச்சம்ல"
"சரி அடுத்து..."
"கருநீலவானின் சஞ்சாரத்தின் முழுமதியை விட பேரொளி மின்னுகிறது உன் முகத்தில், ஓராயிரம் வார்த்தைகள் செய்யாத மாயத்தை இயற்கையென்னும் அருமருந்து அனாயசமாய் செய்துவிட்டு செல்கிறது..."
"ரைட்டுடா நீ என்னவோ நடத்து...பாரு பயபுள்ள கதைய கேட்டு தூங்கியே போச்சு...டேய் விக்கி எழுந்திருடா...சாப்பிட்டு படு .."
" சரிண்ணே..."கண்ணை கசக்கிக் கொண்டே முழித்தான்...
"எவ்ளோ போல்டான ஆளா இருந்தாலும் காதல்னு வந்துட்டா அசைச்சு பாத்திருதுல...எப்படி பம்பரமா சுத்திட்டு திரிஞ்ச...ம்ம்ம் இதுக்குமேலயும் அவ தான் வேணும்னு சொல்லிட்டு இருக்காதடா எவ்ளோ தான் அவமானபடுவ...உனக்கு இதெல்லாம் தேவையா சொல்லு...வாழ்க்கையில நீயே ஆசைப்பட்ட எல்லாமே எல்லாருக்கும் கிடைச்சிடுறதில்லடா...அவ உனக்குனு இல்ல போல அதான் இப்படிலாம்...இதுக்குமேலயும் நீ அவக்கிட்ட போய் அசிங்கப்பட்டு நிக்கிறத என்னால பாத்துட்டே இருக்க முடியாது...
உன் வாழ்க்கையில எல்லா நிலையிலயும் கூட இருந்திருக்கேன்...நீ அவள ஏன் இப்படி சுத்தி சுத்தி லவ் பண்றனு எனக்கு தெரியாதுடா...ஆனா ஒண்ணு அவ உன்னைய மிஸ் பண்ணிட்டா...இவ்ளோ கோவம் வரக்கூடாதுடா...இதான் அன்னைக்கே சொன்னேன் அவ உன்கூட காபிஷாப் வந்துட்டானு உடனே லவ்வ அக்செப்ட் பண்ணிப்பானு ஆடாதேடானு கேட்டீயா...போய் பிரோபஸ் பண்ணி இதெல்லாம் தேவையா இனியா...இங்க பாரு இத யோசிச்சு யோசிச்சு உன்னோட கேரியரை வேஸ்ட் பண்ணாத...வெறும் காதல் மட்டுமே வாழ்க்கை இல்ல...நீ எப்படி ஆசைப்பட்டு இந்த படிப்பை படிச்சனு நியாபகம் இருக்கா..."மனுசங்களோட மனச படிக்கிறது ஒரு கலைடா...அந்த கலையை களங்கம் இல்லாம நான் படிச்சு மனசால பாதிக்கப்பட்ட எத்தனையோ பேருக்கு காது கொடுத்து அவங்க பிரச்சனையை கேட்டு, என்னால அவங்களுக்கு ஒரு தீர்வு சொல்ல முடிஞ்சு அவங்க அதனால சரியானங்கனா அது போதும்...அந்த சின்ன சந்தோசமே என்னய அடுத்த நிலைக்கு போக வைக்கும்னு சொன்ன..."
இன்னைக்கும் நிறைய பேரு உன்க்கிட்ட கைகுலுக்கி வாழ்த்து சொல்லிட்டு போறத நானே கூட இருந்து பாத்திருக்கேன்...ஆனா நீ அவ ஒருத்திக்காக இந்த சந்தோசத்தை இழந்துறாத...10 நாளாச்சு இன்னும் நீ நார்மல் ஆகல...
ஊருக்குள்ள ஒரு பழமொழி சொல்லுவாங்க "ஊருக்குத்தான் உபதேசம் தனக்கில்லனு" அது சரிதான் போல...எல்லாருக்கும் சொல்ற உன்னால உனக்குனு வரப்போ எதுவுமே பண்ண முடியாம உடைஞ்சிடுற...இங்க பாருடா இதோட லைப் முடிஞ்சிட போறதில்ல...இப்போ என்ன அவ இல்லாட்டி விடு...வாழ்க்கை அப்படியே நின்ற போகுதா இல்லயே...அதுவும் ஓடிட்டே இருக்கும் நாமளும் போய்ட்டே இருக்கவேண்டியது...வெறுமை இல்லாம இந்த காலத்தில வண்டியை ஓட்டிறவங்க கம்மிதான் டா...ஆனாலும் வேற வழியில்ல வாழணும் பின்னாடி திரும்பி பாக்கிறப்போ உன்னய நேசிக்கிற சிலருக்காவது வாழணும் ஏதாச்சும் பண்ணி அவங்கள சிரிக்க வைக்கணும்னு தோணும்...
ஆனா நம்ம வாழ்க்கய பாரு மத்தவங்க பிரச்சனையை அறியுற மனசுக்கு நம்ம பிரச்சனைக்கு ஒரு வழி சொல்ல தெரியாம இருக்கு...ஒரு வேளை எல்லா மனசையும் படிக்கிறப்போ நம்ம மனசும் இவ்ளோதான் ஒரு பிம்பத்தோட நின்னுக்கிடுது போல அதான் அடுத்த ஸ்டெப் கூட எடுத்துவைக்க முடியாம அப்படியே இருக்கு...உனக்கு நான் சொல்றது ஒண்ணு தான் , இங்கயே இருந்துட்டே இருந்து அவள எப்போயாச்சும் பார்ப்ப , அப்புறம் பேசணும்னு தோணும் , அவ பேசி காயப்படுத்துவா...மறுபடியும் இப்படித்தான் இடி விழுந்தது போல இருப்ப,இதெல்லாம் எதுக்கு, வேணா இனியா...கொஞ்ச நாளைக்கு வேற எங்கயாச்சும் போய் இரு...மனசு கொஞ்சம் லேசானதும் இங்க வா...அந்த ஏகாந்தத்திலயும் அவ தான் உன் மனசுக்கு வந்தானா அப்புறம் போய் பேசிக்கலாம்...இல்ல அந்த டைம் பீரியட் ஒருவேளை உன் மனச மாத்துச்சுனா அதுவும் சந்தோசம் தானே...தனியா இருக்கப்போ மனசு நிறைய பேசும்டா...இப்போ நீ கொழம்பி போய் கிடக்க...நீ தான் சொல்லுவீயே நிறைய டிராவல் பண்ணனும் அப்போ அந்த இயற்கை சொல்லவரதுலாம் கூட கேட்கும்னு அந்த தெளிவான இனியன் எனக்கும் வேணும் என் மனசு அதான் சொல்லுது...கையை நீட்டுடா" அத்துனை கணம் அவன் பேசுவதை அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்த அந்த இறுகிய விழிகள் திரும்பி அவனை ஏதோ ஏக்கம் குழப்பமும் சொருகிய பார்வையாய் கேள்வியை வைத்துக்கொண்டு வினவியது...
அவன் கைகளில் ஆர்டரை திணித்த சஞ்சயை உற்று நோக்கிய இனியன்...புரியாமல் விழிக்க,
" பிரிச்சிப்பாருடா.."
"LBSNAA -Lal Baghadur Shastri National Academy of Administration Welcomes u"
" டேய்....என்னடா இது..."விழிகள் ஒரு பக்கம் கலங்கி நின்றாலும் ஆச்சர்யம் மிகுந்து நின்றது...
"என்னடா பாக்கிற...நீ ஆசைப்பட்ட ஒரு கனவு அது...நாம எல்லாரும் தானே அப்ளை பண்ணோம் ஆனா உனக்குதான் interview வந்துச்சு இப்போ அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்திருக்கு...அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை நீ அங்க இருக்கணும்...மத்தவங்கள முதல்ல பேச விட்டு அப்புறம் பேசிட்டே இருக்க தொழில் தான் நம்மளோடது ஆனா நீ இன்னைக்கு இப்படி பேசாம அமைதியா இருக்கது ஒரு மாதிரியா இருக்கு நீ அங்க போ டா...சரியாயிடுவ...எனக்கு எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா சொல்ல வார்த்தையேயில்ல...உன்னோட திறமைக்கு கிடைச்ச பரிசுடா அது..."அவனை அணைத்துக்கொண்டு ஆனந்த கண்ணீர் வடித்தவனை திடுக்கிட்டு எழுப்பியது அவன் வார்த்தைகள்...
" மச்சான் நான் போலடா..."அவன் தோள்களிலிருந்து விருட்டென்று கையை எடுத்து பளாரென்று அறைவிட்டு கன்னத்தை பதம் பார்த்தப்படியே பேசத்தொடங்கினான் சஞ்சய்...
"டேய் என்ன பேச்சு பேசுற...உனக்கு கிறுக்கு எதுவும் பிடிச்சிருக்கா...அது எவ்ளோ பெரிய வாய்ப்பு தெரியுமா...நாட்டோட மிகப்பெரிய அங்கமா இருக்க கூடிய IAS ஆபிசர்ஸ்களுக்கே நீ சைக்கலாஜி கிளாஸ் எடுக்கபோற இதவிட வேறென்ன பெரிய சந்தோசம் இருக்க முடியும்... சும்மா எதுவும் பேசிட்டு இருக்காத ...அவன் அவன் இங்க வாய்ப்பு கிடைக்காம அலைஞ்சிட்டு இருக்கான் எங்கயாச்சிம் கிடைச்சிராதா நான் என்னய நிரூபிச்சு காட்டிற மாட்டேனா...என்னய பேசுனவங்களுக்கு முன்னாடி ஜெயிச்சிட மாட்டேனானு ஏங்கி தவிக்கிறான் உனக்கு கிடைச்சும் அவ்ளோ ஈஸியா போச்சுல...எல்லாமே கிடைக்கிற வரைக்கும்தான் அதோட மதிப்பு அதுக்கப்புறம் இல்லயா...?
உனக்குள்ள எவ்ளோ திறமை இருக்குனு கூட இருக்க எனக்குத்தெரியும் சரியா...மூடிட்டு அமைதியா போய் சேருற வழிய பாரு , என்னய எதுவும் திட்ட வைக்காத...காதலுக்காக ஏண்டா கேரியரை வேஸ்ட் பண்றீங்க...சை என்னமோ போ" இவனிடம் பேசி வெறுத்துப்போய் இடத்தை விட்டு சஞ்சய் நகர,
அவன் சென்றப்பின்னரும் அந்த ஆர்டரையே பார்த்துக்கொண்டு இருந்தவனின் கண்களில் ஒற்றைத்துளியு அவன் கைகளில் பட்டு மீள... பட்டம் பறக்கும் LBSNAA வின் லோகோவை விரலால் தொட்டு தடவிக்கொண்டிருந்தான்...
நாட்கள் அசுர வேகத்தில் நகர வியாழக்கிழமை காலை வேளையில் இனியன் கிளம்ப எத்தனித்தான்...
" விக்கி போயிட்டு வரேண்டா..."
"அண்ணா பாத்து போ ணா..."
"5 மாசம் கழிச்சி தானேணா வருவ..."
"ஆமாடா..." அங்கிருக்கும் மூவரில் இளையவனான 21வயதேயான விக்கியின் கேள்விக்கு பதில் கூறிவிட்டு அவன் தலயை தடவி கொடுத்துவிட்டு சஞ்சயிடம் சென்றான்...
அத்துனை கணம் முழித்துக்கொண்டிருந்தவன் இவன் அருகில் வந்ததும் தூங்குவது போல நடிக்க தொடங்கினான்...
"டேய் போர்வையை கூட சரியா மூடி தூங்கத்தெரியல, நடிக்காத எந்திரு என்னய கொண்டு போயி ஏர்போர்ட்ல விடு..."
" டேய் விக்கி நீ கொண்டு போய் விட்டுட்டு வா டா..."
"விக்கி நீ சும்மா இரு அவனே வரட்டும்..."
" டேய் போனு சொன்னா கேட்கமாட்டியா சும்மா சும்மா..."
" அண்ணே அவரு நீங்க தான் வரணும்னு சொல்றாரு..."
"எனக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கு யாரையும் பிக்கப் டிராப் பண்றது வேலையில்ல..."
"டேய் ஓவரா பண்ணாம வந்திடு..."
"அண்ணே அவருதான் ரொம்ப பண்றாரு நீ வேணா வா ணே நான் கொண்டு போய் விடுறேன்..."
"டேய் நீ அமைதியா தூங்குற வேலையை மட்டும் பாரு..."
"ரைட்டு...உங்களுக்கிடைல வந்தேன் பாருங்க என்னய சொல்லணும்...என்னமோ போங்க டிஸ்டர்ப் பண்ணாம தள்ளி நின்னு சண்டை போடுங்க..."
"அடிங்க்க்க்க்"
இவர்களின் போருக்கு மத்தியில் இழுத்து போர்த்தி படுத்துக்கொண்டான் விக்கி...
"டேய் சஞ்சய் இப்போ நீ தான் வர்ற வெளியில நிக்கிற வந்து சேரு...டாட்..."
அவன் சென்றதும் "டேய்.... டேய் விக்கி"
"என்னணே..."
"அங்க ரொம்ப குளிரும்...எல்லா டிரெஸ்லாம் கரெக்டா எடுத்து வச்சுட்டானா கேட்டியா..."
"ஒஹோ அக்கறை....ம்ம்ம்ம்ம் இருக்கட்டும்..இவுக இவ்ளோ நேரம் சண்டை போடுவாங்களாம் அப்புறம் கேட்கவும் செய்வாங்களலாம்...முடியல சாமி நீயே போய் கேளுண்ணா...எனக்கு தூக்கம் வருது...டாட்டா..."
"எருமைமாடு " ஒரே எத்தாய் அவனை தள்ளிவிட்டுட்டு சட்டையை மாற்றிக்கொண்டு பைக்கை எடுத்தான்…
"என்ன மச்சான் சட்டை புதுசா இருக்கு…"
"ஒஹோ சமாதானம் டிரை பண்றீயாக்கும்.செரிதேன்… முறைத்துக்கொண்டே வண்டியில ஏறு…"என்றான்
போகும் வழியெங்கும் ஏதும் பேசாது வந்துக்கொண்டே இருந்தனர் இருவரும்...
" டேய் சஞ்சய்"அவன் தோள்களில் கைவைத்துக்கொண்டு "5 மாசம் உன்னய பிரிஞ்சு எப்படி இருக்கப்போறேனோ தெரியலடா..."
" யாரு என்னய பிரிஞ்சு இத நான் நம்பணும்...ஏண்டா டேய் போறப்போ ஏதும் பேசக்கூடாதேனு பாக்கேன்...கம்முனு வந்திடு..."
" நிசமாவே தான்டா சொல்றேன்..."
"இப்போதான் அவ வேலை பாக்கிற ஆபிஸ் நேம் போர்டை அப்படியே நீ பாத்துட்டே வந்ததை கண்ணாடியில பாத்தேன் அப்போயே புரிஞ்சிட்டுடா என்னய நீ எவ்ளோ மிஸ் பண்ணுவேனு..."
'பாத்துட்டியா...'
"மைண்ட் வாய்ஸ் கேட்டுருச்சி மச்சான் "
" ரைட்டு விடு...திட்டமாட்டேனு சொல்லு ஒண்ணு சொல்லணும்..."
"அவள இப்போ பாக்கணும் போல இருக்கு அதானேடா"
"எப்படிடா மச்சான் "
" முசப்பிடிக்கிற நாயை மூஞ்சியப்பாத்தா தெரியாது...ஏர்ப்போட் வந்துட்டு இறங்கு...ஹீக்கும் இந்த முறைப்புக்கு ஒண்ணும் குறைச்சயில்ல..."
"எல்லாம்.எடுத்து வச்சிட்டேல நல்ல செக் பண்ணிட்டியா..."
"பண்ணிட்டேன் மச்சான்..."
"பாத்துப்போய் தொல...போயிட்டு சொல்லு சரியா..."
அவனிடம் விடைப்பெற்று போக நின்றவளை "என்னடா இது கட்டிப்பிடிக்கிற...மித்ரா நியாபகமோ..."
"டேய்...சும்மா சொல்லி பாத்தேன் சரி விடு..."
தொடரும்...