செக்கின் முடித்து விட்டு இருக்கை பார்த்து விமானத்தில் ஏறி அமர்ந்ததுமே வழக்கமாய் வேடிக்கை பார்க்கும் ஜன்னலோரம் இன்று இன்னும் ரம்மியமாய் புதுவிதமாய் அவனுள் குதூகலித்தது...
டேராடூன் விமான நிலையத்திற்கு 3 மணி நேர பயணத்திற்குப்பின் வந்து சேர்ந்தான்...
லக்கேஜ் எல்லாம் எடுத்துக்கொண்டு , ஒரு கால் டாக்ஸியை பிடித்தான்...
டாக்ஸி ஓட்டி வந்த பஞ்சாபி ஓட்டுனருடன் பேசிக்கொண்டே அருகில் உள்ள இடங்கள் , சீதோஷ்ண நிலை, பழக்கவழக்கங்கள் என ஓரளவுக்கு தகவல்களை தெரிந்துக்கொண்டான்...மிகவும் மரியாதையான நபராய் இருந்தது அவனுக்கு வசதியாய் இருந்தது...
'நல்லவேளை இந்தி ஏதோ கொஞ்சம் தெரிஞ்சது பேரமும் பேசியாச்சு...இல்லாட்டி நான் போய் இந்த கூகுள்ட்ட கேட்டு ஏதாச்சும் எசகுபிசகா சொல்லி என்னைய செருப்படி வாங்க வைச்சிருக்கும்....'
"சாப் LBSNAA...."
அவருக்கு இந்தியில் நன்றியை தெரிவித்துக்கொண்டு உள்ளே தன் ஆர்டரை காட்டி விட்டு அந்த ஹை செக்யூரிட்டி வளையத்துக்குள் நுழைந்தான்...
கண்கள் எங்கும் விரியும் சிறகுகளாய் புத்தம்புது பாதையில் பயணிக்க தயாராகும் ரயில் பயணி போல அவன் மனம் ஏனோ குளிரையும் தாண்டிய கதகதப்பை உணர்ந்தது...
நேரே சென்று தனது ஆணையை காட்டி சான்றிதழ்கள் சரிபார்த்து விட்டு பலத்த பாதுகாப்புக்குள் இருக்கும் அவ்வளாகத்தில் அவனுக்காய் ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்தான்..
ஜன்னலோரம் பார்த்த அந்த படுக்கையறையை ஒட்டிய மேசை நாற்காலியில் அமர்ந்து மிக மெலிதான அந்த காலை பொழுதை சிலாகித்துக் கொண்டிருந்தான்...
அறை தேடி வந்த தேநீரையும், காலை உணவையும் உண்டு முடித்து சாயந்திர வேளைக்கான அவனது வகுப்பிற்கு குறிப்புகள் எடுக்க துவங்கினான்...சிறிது நேரத்திலயே சஞ்சயிடமிருந்து மின்னியது அழைப்பு...
"டேய் என்னடா எப்போ ரீச் ஆன...சாப்பிட்டியா இல்லயா...இடம்லாம் எப்படி இருக்கு...
" வந்துட்டேண்டா ஒரு பஞ்சாபி சிங் வண்டியில வந்து சேர்ந்தேன்டா...மனுசன் கலாரசிகண்டா என்னமா பேசுறாருன்ற...அப்படியே இங்க வந்து சேர்ந்தேன் சாப்பிட்டேண்டா காலையில ஏதோ கிச்சடியும் ரொட்டியும் கொடுத்தாங்க...ரூம் நல்லா இருக்கு டா..."
"அங்க இருக்க வரைக்கும் சப்பாத்திதான் மச்சா...என்ஜாய்...கிளைமேட் அங்க ரொம்ப நல்லா இருக்கும்...ஜாலியா இரு மச்சான் எதுவும் யோசிக்காத பீரியா விடு பாத்துக்கலாம் "
" ம்ம்ம்ம்ம்...."
"என்னடா ம்ம்ம் தவிர எதுவும் வரல..."
"அவ நினைப்பும் வந்துட்டு வந்திட்டு போகுது எப்படி இருக்காளோ...கூட மதுவை தவிர யாருமில்ல...அவக்கிட்டயும் பெருசாலாம் எதுவும் ஷேர் பண்ணிக்கிட மாட்டா..."
"டேய் நீ திருந்தவே மாட்டியா..."
"கொலையாடா பண்ணேன் திருந்த...லவ் டா..."
"ஆமா இந்த டயலாக்குலாம் குறைச்சலில்ல...அவ நல்லாதான் இருப்பா...நீ கம்முனு இரு ஆமா கிளாஸ் எப்போ சொல்லிருக்காங்க..."
"ஈவினிங் 3 மணிக்குடா"
"சரிடா பாத்துக்கோ நான் அப்புறம் கூப்டுறேன்..."
" செழியா..."
"சொல்லுங்க சார்..."
"நம்ம இனியன் நியாபகம் இருக்கா..."
'மறக்ககூடிய முகமா அது' அஷ்டக்கோணலாய் வைத்துக்கொண்டே"ம்ம்ம்ம் நல்லா நியாபகம் இருக்கே அவருக்கு என்ன"
"அவருக்கு ஒண்ணுமில்ல...லாப்ஸ்னா தெரியும்ல..."
"வொய் நாட்...ரொம்ப நல்லா தெரியும் சார்..."
"அங்கதான் வேலை கிடைச்சு கிளாஸ் எடுக்க போயிருக்காப்டி..."
புருவத்தை வியப்பாய் உணர்த்தியபடியே "ஹ்ம்ம்ம் சூப்பர்ப்"
"அவன் திறமைக்கு அவன்லாம் எங்கயோ போகவேண்டிய பையன்...ம்ம்ம் நல்லா இருக்கணும்...சரி செழியா நம்ம போன வாரம் புது பிராஜெக்ட் ஸ்டார்ட் பண்ணோமே எந்த லெவல்ல இருக்கு"
"ம்ம்ம் அது பிரச்சனையில்ல சார்...வழக்கம் போல மித்ரா தான் இன்சார்ஜ்...சோ கவலைப்பட தேவையில்ல சார் கரெக்டான டெட்லைன்னுக்குள்ள வந்திடும்..."
"Such a Brilliant girl she is..."
'ஆனா கோவம் வந்தா சொர்ணா தோத்துடுவா'
"என்ன செழியா..."
"ஒண்ணுமில்லயே சார்..."
"ம்ம்ம்ம் சரி நான் லஞ்ச் முடிச்சிட்டு மும்பை போறேன் செழியா நீங்க பாத்துக்கோங்க..." அவன் தோள் தட்டிக்கொடுத்து அவர் கிளம்பினார்...
"ஷப்பாடி நமக்குனு இருந்த ஒரே தொல்லையும் போச்சு...இனிமே நிம்மதியா இருக்கலாம்...அடேய் இனியா இப்போதாண்டா ஒரு உருப்படியான வேலை பண்ணிருக்க..."
கொஞ்ச நேரத்தில் மித்ரா அவனின் கேபினை தட்ட..
சந்தோசத்தை காட்டிக்கொள்ளாதவாறு அவன் "வாங்க மித்ரா"
"சார் பிராஜெக்ட் பத்தின ரிப்போர்ட் சொல்லத்தான் வந்தேன்..."
"ம்ம்ம் சொல்லுங்க மித்ரா"
"சரி சீக்கிரமே முடிக்க பாருங்க..."
"சரிங்க சார்..."
"மித்ரா ஒரு நிமிசம்..."
"சொல்லுங்க சார்..."
"இனியன் இருக்காருல..."
கையில் இருந்த மொபைலை பிடி இறுகுமட்டும் கெட்டியாய் பிடித்து நின்றாள்..."ம்ம்ம்ம்" தவிர வேறில்லை...
அதன்பின் எம்டி கூறிய பாராட்டு தவிர அத்துனையும் அவளிடம் ஒப்புவித்தான்...ஏதோ குற்ற உணர்ச்சி அவளின் நெக்குறுக்க "அப்படியா நல்லது சார்..."
"உனக்குத்தான் அவனை பிடிக்காதுல நீயும் என்னய மாதிரி சந்தோசப்படுவேனு தான் சொன்னேன்... ஆனா அமைதியா இருக்க...ஒருவேளை அவன் ஊருக்கு போனது உனக்கும் கஷ்டமா இருக்கா என்ன"
"சொல்லிட்டீங்க அதோட விடுங்க...என்னோட ஒப்பீனியன் என்னனு நீங்களே ஜட்ஜ் பண்ணிக்க வேணாம்...தாட்ஸ் மை பர்சனல்...டோண்ட் டிரை டூ கிராஸ் யுவர் லிமிட்ஸ்..."
'பொண்ணா இது...இவக்கிட்ட போய் சொன்னேன் பாரு என்னய சொல்லணும்...என்ன செய்ய என் கிரஷா போயிட்டாளே...'
"சரிங்க மேடம் நீங்க கிளம்புங்க..."
"அத நீங்க சொல்ல வேணாம் எனக்கு போகத்தெரியும்"
கைகள் ஏனோ படபடத்து தவிக்க...தன் அறைக்கு சென்று மடக்மடக்கென்று ஒரு பாட்டில் தண்ணீரை விட்டடைத்தாள்...
வேகமாய் மதுவின் நம்பருக்கு அழைப்பை விடுக்க முற்ப்பட்டவளை மூளை தடுக்க மனசு வென்று "மது"
"ம்ம்ம் சொல்லு மித்ரா"
"கொஞ்சம் என்னோட ரூமுக்கு வர்றியா..."
" சொல்லு மித்ரா என்ன திடீர்னு கூப்பிட்ட்டிருக்க என்னாச்சு..."
"இல்ல ஒரு மாதிரியா இருக்கு...அதான் ஆபிஸ் விடுற டைம் ஆச்சுல கொஞ்சம் வர்றியா எங்கயாச்சும் போலாம்..."
'இப்படிலாம் கேட்கமாட்டேலே என்னாச்சு...'
"சரி வா பீச்சுக்கு போலாமா"
"ம்ம்ம்ம் போலாமே..."
மெரினா பீச்சின் பரபரப்புக்குள் தங்களை நுழைத்துக்கொண்டு தூரச்சென்று ஓரிடத்தில் அமர்ந்துக்கொண்டனர் இருவரும்...
"என்ன ஆச்சு மித்ரா...அதிசயமா வெளிய போலாம்லாம் கூப்பிட்ட... "
" இல்ல சும்மா தோணுச்சு கொஞ்சம் வெளிய போனா நல்லா இருக்குமேனு அதான்..."
"உண்மை தான் மித்ரா... இயற்கையை விட சிறந்த ஸ்ட்ரெஸ் பர்ஸடர் எதுவுமே இல்ல..."
ஒரு நிமிடம் திடுக்கிட்டு "என்னடி அவர் சொன்ன டயலாக்க நீயும் சொல்ற..."
"என்ன சொன்ன மித்ரா ஏதோ சொன்னமாதிரியே இருந்துச்சு அதான்..."
"இல்லல டா ஒண்ணும் சொல்லலயே...ஆமா உண்மைதானு சொன்னேன் அவ்ளோதாம்"
"அவ்ளோதானா"
"ஆமாடி அவ்ளோதான்..."
"மது..."
"சொல்லு மித்ரா...ஏதோ கேட்க வர்ற அப்புறம் அமைதியாகிடுற என்னதாண்டி ஆச்சு..."
தயக்கம் உடைத்து "இனியன் என்ன செய்றாரு..."
"அவன் இப்போ இங்க இல்லடி...IAS இன்ஸ்ட்டிட்டூட்ல சைக்கலாஜிக்கல் அட்வைசரா போய்ட்டாரு...எப்போ ரிட்டர்ன்...இல்ல அங்கேயே செட்டில்டா எதுவும் தெரியல...போயி கொஞ்ச நாள்தாண்டா ஆச்சு... ஆமா என்ன திடீர்னு அவன கேட்கிற..."
"இல்லல்ல ஜஸ்ட் கேட்டேன் அவ்ளோதான்...அப்போ அவரு இங்க வரமாட்டாரா மது..."
"தெரியலடி...ஆனா உனக்குத்தான் அவர பிடிக்கலயே பின்னாடியே சுத்தின பையங்களை பொண்ணுங்களுக்கு தான் பிடிக்காதே...அப்படி ஒரு ஜெம் அவருலாம்...ஒரு பொண்ணையாச்சும் ஏறெடுத்து பார்த்திருப்பானா...ஆனா இந்த பசங்களும் இப்படிதான் தன்னை தேடி வர்ற பொண்ணைலாம் கண்டுக்க மாட்டாங்க...வேணாம்னு சொல்றவங்க பின்னாடி லோ லோனு போறாங்க...ஹீக்கும் எனக்குலாம் அப்படி ஒருத்தன் கிடைச்சா லக்கியஸ்ட்டுனு நினைச்சுட்டு சந்தோசமா இருப்பேன்...சரி விடு கொடுத்து வச்சது அவ்ளோதான்..."
எதுவுமே பேசாமல் வழக்கம்போல மண்ணை அள்ளி விளையாடிக்கொண்டிருந்தாள்...அன்று அவனுடன் கடற்கரையில் உடனிருந்த நினைவுகள், மெல்ல மீட்டிசைத்தது...
"மித்ரா... கடற்கரையில உட்கார்ந்து சூடா மிளகா பஜ்ஜி சாப்பிடுறது வேற லெவல்ல..."
"ஆமா இனியன் இதுவும் ஒரு பீல் தான்"
"சரி போலாமா..."
"ஆமா ரொம்ப இருட்டிட்டா கஷ்டம் வாங்க..."
ஒன்றாக நடந்து வந்துக்கொண்டே இருக்கையில் பின்னால் வந்துக்கொண்டிருந்த ஒருவன் அவள் மேல் இடித்துவிட்டு சென்றான்...
"அம்மா"
" ஹேய் என்னாச்சு மித்ரா..."
"ஒண்ணுமில்ல இனியன் தெரியாம இடிச்சிருக்கலாம்..."
"ஹேய் ஆர் யூ ஓகே...அதெப்படி தெரியாம இடிப்பான் இருங்க நான் பாக்கிறேன்..."
"ஹேய் இனியா வேணாம் விடுங்க..."
"மித்ரா நீங்க சும்மா இருங்க..."
வேகமாய் சென்று அவன் சட்டையை பிடித்து திருப்பியதும் தான் அறிந்தான் அவன் ஒரு மன நலம் பாதிக்கப்பட்டவன் என...
"சாரிங்க..." அவர் சட்டையை சரி செய்துவிட்டு அனுப்பிவைத்தப்படி அவளை நோக்க,
" நான் தான் சொல்றேன்ல இனியா வேணாம்னு..."
உள்ளுக்குள் ஏதோ ஒரு உணர்வு அவளை தீண்டிச்சென்றாலும் , தனக்காக ஒரு ஆண் இருக்கிறான் என்ற உணர்வை பதியவைத்த அந்த நிகழ்வை எண்ணி சிலாகித்தவளுக்கு அவளையும் மீறி எட்டிபார்த்த ரிசார்ட் நிகழ்வுகளும் அவளின் கசப்பான பால்ய கால அனுபவங்களும் நிமிடத்தில் அந்த சிரிப்பை மாற்றி வெறுமையை திணித்தது...
"மித்ரா"
"எவ்ளோ நேரமா கூப்பிட்டு இருக்கேன் தெரியுமா... அப்படி என்னதான் யோசனை சொல்லு..."
"ஒண்ணுமில்ல மது வா போலாம்..."
"அப்பபோ இப்படி ஆகிடுற என்னன்னு கேட்டா சொல்லமாட்ட...அதானே நான் எதுவும் சொல்லல வா "
ஏற்கெனவே அவள் தங்கிருந்த விடுதியை காலி செய்துவிட்டு மிருணாவிற்கும் பிரிய மனமில்லாமல் விடைப்பெற்றுக்கொண்டு மதுவின் அழைப்பை ஏற்று அவளுடன் அவள் தங்கிருந்த தனி அறைக்கு விடுதிக்கு வந்து சேர்ந்திருந்ததால் இருவரும் ஒன்றாக அறைக்கு சென்றனர்...
இராப்பொழுது உறக்கம் வராமல் சில்லிட வைத்த குளிரில் அந்த வளாகத்தின் மரங்களூடே நடந்து சென்றுக்கொண்டிருந்தான் இனியன்...எங்கு சென்றாலும் இளையராஜாவின் இசையை விடுவதாய் இல்லை என்று சொல்லிக்கொண்டே ஹெட்செட்டை காதில் மாட்டிக்கொண்டே, 80களின் மெல்லிசையை தட்டி விட்டான்...
அங்கிருந்த மரப்பெஞ்சில் அமர்ந்துக்கொண்டு அந்த நிசப்தமான இரவிலும் ஆங்காங்கே சில அறைகளில் படிப்பாளிகள் படித்துக்கொண்டிருக்க வெளிச்சமாயிருப்பது அறிந்து உள்ளுக்குள் சிரித்தப்படி "நம்ம வேலைய பாப்போம் நிலாவ பார்த்தாலே உன்னோட நியாபகம் தான் மித்ரா...உன்கூட உட்கார்ந்து அந்த நிலாவை ரசிச்சது...ம்ம்ம்ம்ம் இப்போதான் அப்புறம் ரசிக்கிறேன் என்னதான் சொல்லு அழகிதான்ல..."
அவன் மனதில் தோன்றிய வரிகளெல்லாம் சட்டென்று போன் நோட்பேடில் தட்ட துவங்கினான்
எழுதிக்கொண்டே இருக்கையில் விழியெங்கும் நீர் கன்னம் நிரப்ப அவனையே அறியாமல் உறங்கிச்சென்றான்...
அதிகாலை மெல்ல சூரியன் எட்டிப்பார்க்கவும் பரேடின் அணிவகுப்பு சத்தம் கேட்கவும் கண்களை கசக்கிக்கொண்டு விழித்தான்...மாதங்கள் கடந்தாலும் கொண்ட காதல் மட்டும் விடுவதாய் இல்லை என அறிந்துக்கொண்டே போனை நோக்கினான்...
"நானா எழுதினேன் சரிதான்" சிரித்துக்கொண்டே அறைக்குள் நுழைந்தான்.
தொடரும் ...