அன்றைக்கு அதற்குப் பிறகு யாரும் வேதாவை எதுவும் கேட்கவில்லை..
பிரகாஷ் வந்த பிறகு அவனிடம் யாரும் ஒன்றும் சொல்லவில்லை.. இரவு உணவின் போது மெல்ல ஆரம்பித்தார் ராஜேந்திரன்,
"டேய் பிரகாஷ் ..இது கொஞ்சம் கூடச் சரியில்லைடா.. இன்னிக்கு உன் பொண்டாட்டி தொலைந்து போயி எப்படியோ வீடு வந்து சேர்ந்திருக்கா.. உங்கம்மா ஒண்ணும் சொல்லலியா?"
மெல்ல சாப்பத்தியையும் குருமாவையும் ரசித்துச் சாப்பிட்டபடி இருந்தவன், "ம்ம்.. என்ன கேட்டிங்க.. சொல்லலையான்னுதானே?.. சொன்னாங்க சொன்னாங்க.. சோ நான் என்ன செய்ய முடியும் டாட் இதில்? இன் ஃபாக்ட் போனவள் அப்படியே போயிருந்தால் கூட எனக்கொரு ஆட்சேபணையும் கிடையாது..", என்று அசிரத்தையாய் திருப்பிக் கேட்டான்,
மகனும்? மருமகளும் இணக்கமாக இல்லை என்பது லேசு பாசாக ஏற்கனவே புரிந்திருந்தாலும்.. இப்படி யாருக்கோ வந்த விருந்து என்பது போல் எந்தவித அக்கறையுமின்றிப் பேசும் மகனை பார்க்கப் பார்க்க பற்றிக் கொண்டு வந்தது..
"சே.. இதென்ன அநாகரீகமான பேச்சு.. அவள் யாரோ இல்லை.. உன்னுடைய சொந்த அத்தை மகள்.. என் சகோதரி மகள்.. உன் மனைவி.. இப்படிச் சொல்ல உனக்கு வெட்கமாக இல்லை?", என்று மகனைக் கடிந்து கொண்டார்.
"என்னங்க.. இதென்ன அநியாயமாய் இருக்கு.. இவ எங்கயோ போவாளாம் வருவாளாம்.. மத்தபடி எதுவும் யாரையும் கேட்க மாட்டாள்.. ஆனா இவ தொலைஞ்சு போனா திட்டு வாங்குறது என் பையனா?.. இதென்ன கூத்து.. ஒரு வயசுப் பொண்ணுக்கு இந்த சாமர்த்தியம் கூட இல்லை.. இதென்ன அவளோட நாலேனாலு தெரு இருக்கிற பட்டிக்காட்டு கிராமம்னு நினைச்சாளா?..", என்ற ருக்மணியைப் பார்த்து,
"ருக்கு ஐ டிட் நாட் எக்ஸ்பெக்ட் திஸ் ஃபிரம் யூ.. நீ போய் இப்படி ஒரு சராசரி மாமியார் போலப் பேசுறே?..அவ யார் அன்னியமா.. என் தங்கை மகள்.. உன்னோட சொந்த நாத்தி மகள்.. நீ பார்த்து வளர்ந்த குழந்தை.. உன் பையனுக்கு முறைப் பெண்தான்.. அவன் தான் ஏதோ அவனுக்கு வேண்டாத பெண்ணை நான் கல்யாணம் செய்து வைத்தா மாதிரி அவ கிட்ட முகம் குடுத்து கூடப் பேசறது இல்லை..",
அதிர்ந்து நோக்கிய மகனைப் பார்த்தவர்..,
"என்னடா, எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு நினைச்சியா.. காலையிலே போனா ராத்திரி வரே.. இதுவரைக்கும் உங்க ரெண்டு பேர் கிட்டயும் ஒரு பேச்சு வார்த்தையைக் கூட நான் பார்க்கவில்லை.. நிச்சயமா உங்க தனி விஷயத்திலே தலையிட எனக்கு அசிங்கமாத் தான் இருக்கு.. ஆனாலும் கல்யாணம் முடிந்து உன்னையே நம்பி வந்திருக்கும் ஒருத்தியை நீ என்னமோ விரோதியைப் பார்க்கிற மாதிரி பார்க்கிறதும்.. பேசாமல் இருக்குறதும்.. சுத்தமா பிடிக்கலை.."
அவ்வளவுதான் வந்ததே கோபம் பிரகாஷுக்கு..
"அப்பா.. இப்பவாவது நீங்க கேட்டீங்களே..இதே மாதிரி தானே நானும் சித்திரவதைப் பட்டேன்.. படறேன்.. நீங்க பாட்டுக்கு தாலியைக் கட்டுடான்னு வாக்கு கொடுக்கறீங்க.. யாரைக் கேட்டுக் கொடுத்தீங்க.. உங்களுக்குத் தெரியாதா என் மனசு.. சின்ன வயசிலேந்து இவதான் பெண்டாட்டின்னு சொல்லிச் சொல்லி வளர்த்தீங்க..
"ஆனா, ஒரே நிமிஷத்திலே எல்லாம் போச்சு.. என்னதான் வேதாவும் என் அத்தை பொண்ணுன்னா கூட அவளை மனசளவுளே கூட நான் அப்படி நினைக்கலையே.. ஏன்?.. நான் அவளை ஒரு தங்கை மாதிரி நினைச்சி வச்சிருந்தேன்னா?.. இதெல்லாம் யோசிக்காம.. எடுத்தோம் கவுத்தோம்னு நீங்க செஞ்சீங்களே.. அப்ப தோணலையா இந்த அநாகரீகம் வெட்கம் அசிங்கமெல்லாம்?..", என்று சூடாகக் கேட்டான் பிரகாஷ்..
அருகிலேயே நின்றிருந்த வேதாவுக்குத் தன் வாழ்க்கையை இப்படிப் பகடையாக்கி உருட்டிய தந்தை மேல் சொல்ல முடியா வெறுப்பு தோன்றியது.. அதே சமயம்.. திருமணம் முடிந்த பின்னும் இப்படித் தன் ஏமாற்றத்தை எண்ணி எண்ணி அனைவரையும் வதைக்கும் பிரகாஷை நினைத்து பாவமாகவும் இருந்தது.. கண்களில் தானாய் நீர் சுரக்க மெல்லிய உதடுகளைப் பற்களால் கடித்தபடி சும்மாயிருந்தாள்.
"இப்போ சொல்லுங்களேன்.. யாரையாவது எதாவது கேட்கணும்னு தோணிச்சா உங்களுக்கு.. நீங்க பாட்டுக்குத் தங்கச்சி தங்கச்சின்னு உங்க ரத்தம், தான் பெத்த பிள்ளையின் ஆசையை இப்படிக் குழி தோண்டி புதைச்சிட்டு இப்போ அவனையே குத்தம் சொல்லுறீங்க.. என் பையன் மட்டும் கஷ்டப்படணுமா?", என்று மெல்லக் குரல் உயர்த்தினாள் ருக்கு..
"ருக்கு போதும் நிறுத்து.. எல்லோருக்கும் எல்லாம் தான் ஆசை இருக்கும்.. ஏன் எனக்குக் கூடக் காஞ்சனா மேல் பிரியம் இருந்தது.. ஆனா நான் உன்னைத் தானே கல்யாணம் செய்தேன்.. ஒண்ணும் கெட்டுப் போகலையே.. நல்லாத்தானே சந்தோஷமா இருக்கேன்.. இன்னும் சொல்லப்போனா அவளோட இந்த அளவுக்கு நான் சந்தோஷமா இருந்திருப்பேனான்னு கூடத் தெரியாது..
அந்தளவுக்கு உன் கிட்டே எனக்குக் கிடைத்த நட்பும் காதலும் பாசமும் அன்பும் என்னைக் கட்டி போட்டது.. இப்ப சொல்லு.. நமக்கு ஒண்ணு கிடைக்கலேன்னா அதை நினைச்சு நினைச்சு ஏங்கித் தவித்து நம்ம நிம்மதியை கெடுத்துக்கறதுக்குப் பேர் தான் உங்கள் பாஷையிலே தெய்வீகக் காதல்னா.. அதை எனக்குப் பிடிக்கலே.. வாழ்க்கையை நமக்குச் சாதகமாக்கிக் கொண்டு சந்தோஷம் காணப் பார்க்கணும்.. இல்லாட்டி நரகம் தான்..
இதோம் பார் பிரகாஷ் இது வரை எப்படியோ இனிமேலாவது வேதாவை புரிஞ்சிகிட்டு இருக்கப் பார்.. நீ அன்பை கொடுத்தா பதிலுக்குக் கண்ணாடி போல அவளும் ரெண்டு மடங்கு அன்பைத் தருவாள்.. இல்லாட்டி பிற்காலத்தில் நீ இதையெல்லாம் எண்ணி வருத்தப்படுவாய் சொல்லிட்டேன்..", என்றார் கறாராக.
"போதும்ப்பா.. யார் கொடுத்த சாபமோ என் வாழ்க்கை இப்படி ஆகிப் போச்சு.. இப்போ நீங்க வேற டார்ச்சர் கொடுக்காதீங்க.. ஒருத்தர் மேல் ஆசையோ பாசமோ அதிகாரத்தால் கொண்டு வர முடியாது.. ஒத்துக்கறேன்.. அரேஞ்ச்ட் மேரேஜிலே மனசு ஒத்து தான் போகுதுன்னு.. அப்படிப் பார்த்தா கூட என்னோடது அரேஞ்சுடு மேரேஜும் இல்லை காதல் கல்யாணமும் இல்லை..
அப்புறம் இந்தக் கட்டாயக் கல்யாணத்தை எதில் சேர்க்க?.. இவ மேல் இதுவரை ஒரு கஸின்கிற அளவுதான் பாசமோ உறவோ இருக்கு.. அதை மீறி வேற எந்த விதமும் இல்லை.. புதுசா இவளை என் மனசிலே ஏத்துக்கற அளவுக்கு நான் பெரிய தியாகியோ இல்லை யதார்த்தவாதியோ இல்லை..
நானும் ஒரு மனுஷன் தான் எனக்கும் ஃபீலிங்சும் இருக்கு.. இதென்ன சட்டையா இது சரியில்லைன்ன அதுன்னு எடுத்து மாட்டிக்க.. எனக்கு இவ மேல நம்பிக்கை வரணும்.. இவ என்னோட சரி சமமா என்னோட பெட்டர் ஹாஃபா இருக்கத் தகுதியா இருக்கிறாளான்னு தெரியணும்..”
"எப்படி இருந்தாலும் பரவாயில்லை நான் அட்ஜஸ்ட் பண்ணிப்பேன்ங்கிற வாழ்க்கை எனக்குத் தேவை இல்லை.. முடிஞ்சா இப்பவும் சத்யா நிறைஞ்சிருக்கிற என் மனசுலே அவளை ஒதுக்கி வைத்து இவளை ஏத்துக்கிற அளவுக்கு இவ தன் தகுதியை வளர்த்துக்கட்டும் அதுக்கப்புறம் நான் யோசிக்கிறேன்..”
ராஜேந்திரனுக்கு பற்றிக் கொண்டு வந்தது.. இப்படியெல்லாமா மனிதர்கள் இருப்பார்கள் என்று
"டேய் சீ... பாவி.. ஒரு பொண்ணை வாழ வைக்கத் துப்பில்லை.. கண்டிஷன் போடறே.. நீ என்னடா அப்படிப் பெரிய கொம்பன்.. என் தங்கச்சி பொண்ணுக்கு அப்பிடி என்ன தகுதி இல்லை உன்னோட வாழ.?. மனிதாபிமானம் இருக்கிற எந்த மனுஷனும் இப்படித் தான் செஞ்சிருப்பான் அன்னிக்கு.. ஒருத்தரை சாக விட்டுட்டு
வேடிக்கை பார்க்க முடியுமா?.. அவ்வளவு குரூரமா என்னை எங்க வீட்டில் வளர்க்கலை.. நான் தான் உன்னைத் தப்பா வளர்த்து விட்டேன் போலே.."
இது வரை பயந்து போய் நின்றிருந்த வேதாவை எரிச்சலுடன் பார்த்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்த ருக்மணி,
"பார்த்தியா.. நீ முட்டாள்த்தனமா செஞ்ச காரியத்தாலே அப்பாவும் பிள்ளையும் எப்படிச் சண்டை போட்டுக்கறாங்க.. தெரியலைன்னா சும்மா இருக்கணும் இல்லாட்டி யாராவது விவரம் தெரிஞ்சவங்களைக் கேட்டுக்கணும்.. இப்படி நீ தான்தோன்றியா இருப்பேன்னு தெரிஞ்சுதான் உன் கல்யாணம் நின்னுது போலே.. நல்ல நேரத்திலே உனக்குக் கல்யாணம் செய்ய ஜாதகம் எடுத்தாங்க போ..", என்று தன் முகத்தைத் தோள் பட்டையில் இடித்துக் கொண்டாள்..
அம்மாவை சும்மா இருக்கும்படி கையை உயர்த்தி, "அம்மா நீங்க சும்மா இருங்க அனாவசியமா ஏன் பேசறீங்க.. இதோ பார் வேதா.. உன் மேல எனக்குத் தனிப்பட்ட கருத்து எதுவுமில்லை.. உன்னைப் பிடிக்காது அப்படி இப்படின்னெல்லாம் எனக்குச் சொல்ல தெரியலை.. ஆனால் நிச்சயமாய் எனக்கு நீ பொருத்தம் இல்லை..”
“என் லைஃப் ஸ்டைல் வேற உன்னோடது வேற.. எங்க செட்டிலே உன்னாலே எப்பவும் சேர முடியாது.. உன்னால் சேர்ந்தா போல் நாலு வார்த்தை கூட இங்கிலீஷ் பேசுவியான்னு தெரியாது.. எல்லாம் இங்கே வேற தான்..", என்று சொல்லிவிட்டு நேரடியாய் வேதாவைப் பார்த்தான்..
முதலிரவுக்கு அடுத்த நாள் காலையில் பேசியதற்குப் பிறகு இன்று தான் பேசுகிறான்.. இவனெல்லாம் என்று நினைத்தபடி..
"சொல்லுங்க மாமா உங்க பிரச்சனை தான் என்ன.. அதான் எனக்குத் தெளிவா சொல்லிட்டீங்களே.. நான் உங்களுக்குத் தகுந்தவ இல்லைன்னு..பரவாயில்லை.. இந்தத் தகுதிகளெல்லாம் வரதுக்கு ஒண்ணும் பெரிய பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியது இல்லை.. எல்லாம் பழக்கம் தான்..”
“என்னை இந்த வீட்டிலே வாழுவதற்காக அனுப்பிச்சிருக்காங்க.. நான் நிச்சயம் என் கடமையாய் ஒரு மருமகளா செய்வேன்.. உங்களுக்குப் பிடிச்சாலும் சரி பிடிக்காட்டாலும் நான் தான் உங்க பெண்டாட்டி.. இதை எந்தக் கொம்பனாலும் இல்லையில்லை கொம்பியாலும் மாத்தமுடியாது..”
“ஒரு நாள் நீங்களும் மாறலாம் உங்க அதீத ஆசைகளும் மறைஞ்சு போகலாம்.. அப்போ பார்த்துக்கலாம் நாம வாழுவோமா இல்லையான்னு.. அது வரை இது எனக்கு ஹாஸ்டல் தான்.. என் மாமாவின் வீடு.. எனக்குப் போடுற சாப்பாட்டுக்கு நான் நிச்சயம் என் உழைப்பை இந்த வீட்டுக்குக் கொடுப்பேன்.. “
"என்னம்மா சூப்பரா கஞ்சியெல்லாம் தடபுடல் படுது.. எனக்காக ஸ்பெஷலா செஞ்சியா.. எதுக்கும்மா க்ஷ்டப்படணும்.. ஆனாலும் ரொம்பத் தாங்க்ஸ்மா..", என்ற மாமாவிடம்,
"அய்யோ மாமா அங்கே நம்ம வீடுகள்ள காலையிலே காஃபி குடிக்கும் பழக்கம் தான்.. ஆனா இப்ப பாருங்க.. சத்தா சாப்பிட்டா தானே நமக்குத் தெம்பு.. அதான் கேழ்வரகு, கஞ்சி எடுத்து வந்தேன்.. இதுவும் நல்லாத்தான் இருக்கு.. உங்களுக்குக் கம்பனி கொடுக்கிறதுக்குத் தான் நானும் ஆரம்பிச்சேன்.."
மருமகளை அன்புடன் பார்த்தவர். "உனக்கு எதுக்கும்மா இந்த வீண் வேலை.. நீ நல்லா சாப்பிட்டு தெம்பா இருக்கற வழியைப் பாரு.. ஏதோ எனக்குச் சர்க்கரை வியாதிங்கிறதாலே இதெல்லாம் ஓ. கே.. உனக்கு எதுக்கு இதெல்லாம்?.., என்று கேட்டார் ராஜேந்திரன்.
"அய்யோ மாமா.. என் அப்பத்தா வரும்முன் காப்போம்னு எப்பவும் சொல்லிட்டே இருக்கும்.. அதான்..அத்தோட இயற்கை முறை உணவு எப்பவுமே நல்லது தானே.. எனக்கும் இதெல்லாம் ரொம்பப் பிடிக்கும்.. அதுவும் அப்பத்தா கேப்பை கூழ் கிண்டி பச்சை மிளகாயும் வெங்காயமும் அரிஞ்சு போட்டு மோர் ஊத்தி தரும் பாருங்க.. சூப்பரா இருக்கும்..", என்று கண் மூடி மெய்மறந்தாள்..
"ஓய்.. உன் அப்பன் வீட்டு பெருமையை எனக்கே சொல்லுறியா?.. நான் பார்க்காத உங்க ஊரா.. உங்க வீடே கதின்னு இல்ல இருப்பேன்.. குமாரு அம்மா அதான் என் தங்கை மாமியாரு எனக்கு வகை வகையா செஞ்சு போட்டு அசத்துவாங்க அப்பவே..”
“அதுவும் என் தங்கையைக் கட்டி கொடுத்ததுக்கு அப்புறம் கேக்கவே வேண்டாம்.. இப்போ இந்தப் பட்டணத்து மோகத்துலே ருக்குவும் சிக்கிட்டா.. நாங்க கிராமம் போறதே இப்பவோ அப்பவோன்னு ஆகி போச்சு..", என்று பழைய நாட்களை நினைவு கூர்ந்தபடி சிறிது நேரம் பேசியவர்கள் மெல்ல வீடு திரும்பினர்..
அதற்குள் தனது வியர்வையைத் துடைத்தபடியே வாக் போய்விட்டு சல்வார் கமீசில் வந்த ருக்மணி இருவரையும் பார்த்தாள்.. தன் கணவன் கையிலிருந்த சிறு மண் குவளையைப் பார்த்தவள்,
"ஹான்.. என்ன சொன்னீங்க.. புதுசா என்னென்னமோ செய்யறீங்க.. பார்த்து.. வயத்துக்குச் சேராம போயிடப் போகுது..", என்று அட்வைசை அள்ளி வீசினாள்.
முகம் சுளித்த மாமியாரை அதிகம் கண்டு கொள்ளாமல் "இல்லத்தை.. ஒண்ணும் ஆகாது.. வீட்டுலே அப்பத்தா எப்பவும் செய்யறது தான்.. நீங்களும் சாப்பிட்டுப் பாருங்க.. நல்லாயிருக்கும்..", என்றாள் தன்மையாகவே
"அய்யோ வேண்டாம்பா.. எனக்கு இதெல்லாம் பிடிக்காது.. எனக்கு இட்டிலி தோசை..தான் ஓ.கே..", என்றவளைப் பார்த்த ராஜேந்திரன்,
"ருக்கு உன் கிட்ட ஒன்னு சொல்ணும்னு நினைச்சேன்.. உனக்கோ வேலைப் பளு அதிகம் கிளப்பில்..அதோடு வீட்டுப் பொறுப்பும்.. நீ ஏன் அதையெல்லாம் இப்போ நம்ம வேதாவிடம் விட்டுவிடக் கூடாது..நீ பாட்டுக்கு ஜாலியா உன்னுடைய வெளி வேலைகளைக் கவலையில்லாமல் செய்யலாமில்லை..", என்று கேட்டார்..
ஒரு கணம் ருக்குவினால் நம்ப முடியவில்லை.. ஆத்திரம் பொங்க.. "ஏன் கொத்து சாவியைக் கேட்கிறாளோ உங்க தங்கை மக.. நல்லா இருக்கு போங்க.. வாழவந்த வீட்டின் முகவரியைக் கூடத் தெரிஞ்சிக்கவோ இல்லை நியாபகம் வைக்கவோ அவளால் முடியலை.. இதில் குடும்பப் பொறுப்பை எப்படிச் சுமப்பாளாம்.. ஏன் உங்க மருமக கேக்க சொன்னாளா?.. காமெடி செய்யாதீங்க..", என்று எரிந்து விழுந்தாள்.
"ஏன் மாமா இப்படிக் கேட்டீங்க.. நான் உங்க கிட்ட கேக்க சொன்னேனா.. அத்தை நான் ஒண்ணும் சொல்லலை அத்தை.. நீங்க என்ன சொல்லறீங்களோ அதைச் செய்ய்றேன்.. நீங்க கவலைப்படாதீங்க..", என்றாள் நயமாகவே.
"எனக்கு என்னடியம்மா கவலை இங்கே.. அதெல்லாம் செய்ய ஆள் இருக்கு இங்கே.. மேற்பார்வைக்கும் தான்.. வேணுமின்னா மணிக்கு உதவி செய் இல்லை தமிழுக்கு உதவி செய்..", என்று 'நீ ஒரு வேலைக்காரி தான்' என்கிற வகையில் பூடகமாய் விஷத்தைக் கக்கினாள் ருக்கு.
"ருக்கு..", என்று கோபமாய் ஆரம்பித்த மாமாவை 'கெஞ்சுதலாய் 'எதுவும் பேசாதீர்கள்', என்ற தோரணையில் பார்த்துவிட்டு
"இல்லை மாமா அத்தை சொல்லுற மாதிரியே நான் செய்யறேன்.. எனக்கொரு பிரச்சனையும் இல்லை.. நான் போறேன்..", என்று சொல்லிவிட்டுக் காலிக் குவளையை வாங்கிக் கொண்டு உள்ளே போய்விட்டாள்.
அதற்குபின் நேரம் ரெக்கை கட்டிப் பறந்தது..
மதியம் அன்றைக்குச் சாப்பிட வீட்டுக்கு வந்திருந்தார்கள் ராஜ்குமாரும் ரேவதியும்.. திருமணத்திற்குப் பின் அவர்களும் அதிகம் இங்கு வரவில்லை..
ரேவதி இயற்கையிலேயே கொஞ்சம் நல்ல சுபாவம் உள்ளவள் ராஜேந்திரன் கல்யாணியைப் போல்.. அதனால் வேதாவும் அக்கா மகளானால் என்ன தன் மகள் தானே என்ற எண்ணத்தை உடையவள்.. ராஜ்குமாரும் நல்லவர்தான்..
என்ன, கொஞ்சம் ரேவதிக்கு பட்டணத்து ஆரவாரமும் வசதியும் பிடிக்கும்.. கொஞ்சம் பந்தா செய்வாள் ருக்குவைப் போல்.. அதிலும் ருக்குவிற்கு நாத்தனார் மற்றும் அண்ணி முறையாகிப் போனதால் கொஞ்சம் ரேவதியிடம் ருக்கு அடக்கியே வாசிப்பாள்..
அதிலும் தன் அண்ணன் மகளாயிற்றே சத்யா!. அதுவும் சத்யா மேல் தனக்குப் பிறகு தன் பிறந்த வீட்டுப் பெண் என்கிற பாசம் உண்டு.. அது வேதாவிடம் கிடையாது.. ருக்மணிக்கு..
சாப்பாட்டு மேஜையில் குழுமியிருந்தனர்..
வகை வகையாய்ச் சமைத்திருந்தார் மணி.. ஆனால் ராஜேந்திரனுக்காகத் தனியாய் கொஞ்சமாய்க் கொள்ளு ரசம், வரகு சோறு, கீரை பிரட்டல், நாட்டு கோழி குழம்பு, பிரண்டைத் துவையல் என்று சமைத்திருந்தாள் வேதா..
அனைவரும் ஒன்றை உண்ண தன் அண்ணன் வேறு எதையோ உண்பதைப் பார்த்த ரேவதி, "அண்ணா என்ன உங்களுக்குன்னு ஸ்பெஷலா செஞ்சிருக்கு.. நல்லா மணக்குதே", என்று வாசம் பிடித்தாள்..
"ம்ம்..ரேவு எல்லாம் உன் மக என் மருமக வேதா செஞ்சது தான்.. சாப்பிட்டுப் பார் .. தெரியும்..", என்று அவள் புறம் பதார்த்தங்களை நகர்த்தினார்..
அதற்குள் ராஜ் குமாரும், "ராஜு மச்சான் எனக்கும் இப்படித் தள்ளுறது.. தங்கைக்குன்னா ஸ்பெஷலோ?..", என்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டார்..
சுவையும் மணமும் அசத்த ஒரு கை பார்த்தனர் மூவரும்.
முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கக் கடு கடு வென்று அமர்ந்திருந்தாள் ருக்கு..
போதாதற்கு ராஜ்குமார் வேறு, "சூப்பர்.. அப்படியே நம்ம கிராமத்துப் பக்கம் போயிட்டா மாதிரி இருக்கு.. ராஜூ நம்ம குமாரு அம்மா சமைச்சா பிரமாதமா இருக்கும் அவங்க வீட்டு சாப்பாடு, இப்போ கைப்பக்குவம் அப்படியே பேத்திக்கு வந்திருக்கு..", என்று சிலாகித்தார்.
"பின்னே என் அக்கா பொண்ணு, என் மகள்னா சும்மாவா..", என்று தன் பெருமையைப் பேசிக் கொண்டாள் ரேவதி.. அவளுக்கு நிஜமாகவே பெருமையாய் தான் இருந்தது.. தங்கள் குடும்பத்துப் பெண் இப்படிப் பொறுப்பாய் நல்ல பெயர் வாங்கவதை குறித்து. தன் பெண்ணும் இப்படி புகுந்த இடத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டுமே என்று அவள் மனம் அலை பாய்ந்தது.
எதையும் கண்டு கொள்ளாமல் சாப்பிட்ட பிரகாஷைப் பார்த்த ரேவதி, "பிரகாஷ் நீயும் கொஞ்சம் சாப்பிட்டு பாருப்பா.. என்னமா சமைச்சிருக்கா நம்ம வேதா..", என்று பரிந்துரைக்க,
"அத்தை சும்மாயிருங்க.. இதிலெல்லாம் எனக்கு இண்டெரெஸ்ட் இல்லை.. நாட்டுப்புறத்திலிருந்து வந்தவளுக்கு இதெல்லாம் சமைப்பது பெரிய விஷயமா.. தினமும் இதைத் தானே தின்னு வளர்ந்திருக்கா.. அதான்..
“எங்கே இவளை நம்ம சத்யா ஒரு நாள் பேக்ட் பீன்ஸ் செய்தாளே அந்த மாதிரி வெரைட்டியா சமைக்கச் சொல்லுங்க பார்ப்போம்.. இதெல்லாம் வீட்டுப் பறவை.. வெரைட்டி தெரியாது... எண்டர்ப்ரைசிங்கா இருக்கத் தெரியாது..”
“எவனாவது பொறம்போக்கு பட்டிக்காட்டான் சொல்லியிருப்பான் புருஷன் மனசுலே இடம்பிடிக்க அவன் வயத்தைக் கவனிச்சா போதுமின்னு.. அதை அப்படியே ஃபாலோ பண்ணுறா போலே.. எப்படி இருந்தா என்ன என் அப்பாவுக்கு வேளைக்குச் சரியா சாப்பாடு செஞ்சி போட்டுக் கவனிக்கக் காசில்லாம ஒரு ஆள் ரெடி..", என்று சொல்லிவிட்டு பாதி உணவில் எழுந்து போய் விட்டான்.
அனைவரும் அதன் பிறகு பேசவில்லை..
வேதாவுக்கு அப்படியே பூமி பிளந்து தான் உள்ளே போய் விட்டால் நன்றாய் இருக்கும் போலானது அவமானத்தில்..ஆனாலும் சமாளித்துக் கொண்டு முகத்தை இயல்பாய் வைத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றாள்.
ரேவதிக்கு மட்டும் மனதுள் ஏதோ உறுத்தியது.. 'இன்னமுமா இவன் சத்யாவை நினைத்துக் கொண்டு இருக்கிறான்.. இது சரியில்லையே பெற்றவர் எதிரிலேயே இந்த ஆட்டம் போடுறான், நல்ல வேளை வேதா நல்ல பொண்ணு இல்லாட்டி சத்யாவை என்ன நினைச்சிருப்பா, பாவம் இவ வாழ்க்கை சரியாகவேண்டும்..' என்று நினைத்தபடி உட்கார்ந்து விட்டாள்.