கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பொம்மலாட்டம்...அத்தியாயம் 11

Latha S

Administrator
Staff member
அத்தியாயம் 11

வேலைக்குப் போகிறேன் என்று சொல்லி இரண்டு நாட்கள் மேலும் கழிந்தன..

கண்ணாத்தா அப்பத்தா, சத்யாவை அந்த வாரக் கடைசியில், மறுவீட்டுக்கு, பட்டிணத்துக்குப் போய் விட்டு வந்த பின்பு வேலைக்குப் போகும்படி கேட்டுக் கொண்டதை அடுத்து கதிரும் அதையே சொல்ல வேறு வழியின்றி ஒப்புக் கொள்ள நேர்ந்தது சத்யாவுக்கு.

அன்றும் பொழுது போகாமல் நேரத்தை கடத்திக் கொண்டிருந்தவள்.. முகனூலில் தன்னுடைய பழைய கல்லூரி தோழிகளுக்குத் தனக்குத் திடீர் திருமணமான விவரத்தை சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவர்கள் திட்டிய திட்டுக்களையும் வாங்கிக் கொண்டு அவர்கள் விருப்பத்துக்காக மறுவீட்டு விருந்துக்கு வரும் பொழுது கணவனுடன் அவர்களைச் சந்திப்பதாக வாக்களித்தவள் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தாள்.

கீழிறிந்து வந்த அப்பத்தாவின் சத்தமான அழைப்பில் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு தன் மடிக்கணினியை மூடி வைத்தாள்.

'இந்த அப்பத்தாவுக்கு நேரம் காலம் கிடையாது.. கொஞ்சம் நேரம் நிம்மதியா உட்கார விடுகிறார்களா..' மனதிற்குள் வைதபடியே கீழே இறங்கி வந்தவளுக்குக் குடலை புரட்டியது.

அப்படி ஒரு நாற்றம் வீடு முழுவதும்.. தன்னுடைய துப்பட்டாவினால் மூக்கை பொத்திக் கொண்டவள்.. 'எங்கிருந்து இந்த நாற்றம் வருகிறது..' எனச் சுற்றுமுற்றும் பார்த்தவளுக்கு அவர்கள் வீட்டு சமையலறையிலிருந்து இந்த நாற்றம் வருகிறதென்று தெரிந்து விட்டது.

அதற்குள் அப்பத்தாவே சமையலறையிலிருந்து வெளியே வந்தவர் சத்யாவை கண்டார்.

"சத்தியாம்மா.. கொஞ்சம் உள்ளார வாயேன்.. இன்னிக்கு நம்ம வூட்டுக்கு பட்டிணத்திலிருந்து வந்த பெரிய ஆபிசருங்க வர்றாங்களாம் மதிய சாப்பாட்டுக்கு.. கதிர் சொல்லிட்டுப் போனான்.. நீ கொஞ்சம் அவங்களுக்குத் தகுந்தா போலச் சாப்பாட்டு மேஜையில் அலங்காரமாக எடுத்து வைக்கிறீயா.. என்னதான் இருந்தாலும் படிச்ச புள்ளைப் பாரு.. உனக்கு அந்தப் பழக்கமெல்லாம் தெரியும்.."

"அப்பத்தா.. என்ன இந்த நாத்தம் நாறுது?.. அப்படி என்னத்தைச் சமைக்கிறா இந்த எழிலு.. குடலை பொறட்டுது.. வர்றவங்க மூக்கை பொத்திட்டு ஓடறதுக்கா.."

அப்பொழுதுதான் அப்பத்தா சத்யா மூக்கை பொத்திக் கொண்டு கீச்சுக் குரலில் பேசுவதைக் கண்டார்.

"ஏன் ஆத்தா.. உனக்கு மசாலா வாசனை பிடிக்காதா??.. ஆனா அன்னிக்கு இட்லிக்குத் தோதா கோழி குழம்பு இருக்குன்னு சாப்பிட்டியே?.. உனக்குப் பிடிக்காதோ?.. இன்னிக்கு ஆபிசருங்களுக்காக சிக்கன் பிரியாணி வைக்கச் சொன்னேன்.. அப்படியே கொஞ்சம் கம்மாங்கரையிலேர்ந்து எம் மவன் சக்தி மீன் பிடிச்சி வந்தான்.. நாலு துண்டம் பொறிச்சி வைச்சா, இன்னும் கொஞ்சம் நல்லா சாப்பிடுவாங்க இல்லை..

"என்ன ஆத்தா அப்படிப் பார்க்கிறதே.. ஓ.. அவ்வளவுதானான்னு நினைச்சியா?.. அது எப்படி விருந்துக்கு அழைச்சிட்டு வெறும் பிரியாணியை ஆக்கி வைக்குறது.. நீயே சொல்லு.. அதான் கொஞ்சம் முட்டை பொறியலும் செய்யச் சொன்னேன்.. அது என்னவோ சிக்கன் சிக்..சிட்டி ஃபையாம்.. எழிலு சொன்னா.. முழுசா கோழியைப் பொரிச்சி எடுப்பாங்கன்னா.. அதுவும் இருக்கு..

"அத்தோடு வெள்ளை சோத்துக்குத் தொட்டுக்க.. கொஞ்சம் கருவாட்டு கொளம்பும் ஆக்கி வைச்சிருக்கு.. எதுக்கும் நீ ஓருகா சமையல் கட்டுல போய்ப் பாரு புள்ள.. சொதப்பிட கூடாது இல்லையா?.."

தன் பாட்டுக்கு பேசிக் கொண்டிருந்த அப்பத்தாவின் மேல் எரிச்சலாக வந்தது சத்யாவுக்கு.

"இப்படி வீடே நாத்தமா இருந்தா வர்றவங்க.. சிக்கன் சிக்ஸ்டி ஃபைவ் வைச்சா என்ன மீனை பொரிச்சா என்ன?.. நெடி தாங்கமா ஓடி போயிடுவாங்க.. நாத்தம் குடலை புரட்டுது அப்பத்தா.."

எங்கே வாந்தி எடுத்து வைப்போமோ என்று வாயை பொத்திக் கொண்டாள் சத்யா.

"ஏம்மா சின்னம்மா.. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனைம்பாங்க.. நல்ல மணமா சமைச்சிருக்கேன்.. இப்படி நாத்தம்முன்னு சொல்லுதே?.." அங்கே வந்த எழிலரசி சண்டைக்குத் தயாரானாள்.

"எடி எடுபட்ட சிறுக்கி.. என் பேரன் பொஞ்சாதியையா கழுதைன்னு சொல்லுறே.. உனக்கு வாய்க்கொழுப்பு ஜாஸ்திடி.. உன் நாக்கை அறுத்துடுவேன்.. எம் பேரன் காதுல விழுந்தா உன் சீட்டை கிழிச்சி இன்னிக்கே அனுப்பிடுவான்.. ஜாக்கிரதை.."

"அய்யோ பெரியாத்தா.. நான் எங்கே சின்னம்மாவ கழுதேன்னேன்.. ஏதோ பேச்சு வாக்குல ஒரு சொலவடை சொல்லப் போனா.. அதைப் போயி பெரிசா எடுத்திட்டு.. விடுவீங்களா.. சின்னயாவுக்குத் தெரிஞ்சா என் கதி அதோகதிதான்.." என்று பதறிய எழிலோ..

"சின்னம்மா.. நீ எதையும் மனசுல வைச்சுக்காதே தாயி.. நீ நாறுதுன்னு சொன்னியா.. அதுக்குச் சும்மா சோக்கு அடிச்சேன்.. அவ்வளவுதாம்மா.. என் வருமானத்தை நம்பி எங்குடும்பமே இருக்கு.. அதுக்கு உலை வைச்சிடுதாதேம்மா.."

"அந்தப் பயம் இருக்கிறவ பார்த்து பேசணுமில்லே.." அப்பத்தா கடுகடுக்க..

எழிலரசியோ கையைப் பிசைந்தவள் தலையைச் சொறிந்தாள்.

"விடுங்க அப்பத்தா.. பாவம் அவ.. எழில் நீ கவலைப்படாதே.. நான் ஒண்ணும் உங்க அய்யாகிட்ட சொல்லமாட்டேன்.." என்ற சத்யா..

"அதென்ன எழில்.. சொலவடை எழில்.. எங்கம்மா மசால் வடை பண்ணுவாங்க.. புதுசா வாழைப்பூ வடை, கேபேஜ் வடை இதெல்லாம் கூட ட்ரை பண்ணுயிருக்காங்க.. இந்தச் சொலவடை நான் கேள்வி பட்டதில்லையே?.. இரண்டு வடையை ப்ளேட்டுல எடுத்திட்டு வாங்க.. டேஸ்ட் பண்ணுவோம்.. எனக்கு வடைன்னா ரொம்பப் பிடிக்கும்.."

"அய்யோ சின்னம்மா.. அது...." விழுந்து விழுந்து சிரித்தாள் எழில்.. இணைந்து சிரித்தார் அப்பத்தா.

'என்னாச்சு.. இவங்க ரெண்டு பேருக்கும்.. ஆப்ட்டர் ஆல் ஒரு வடைக் கேட்டதுக்கா இந்தச் சிரிப்பு சிரிக்கிறாங்க..’ புரியாமல் விழித்த சத்யா அவர்களைப் பார்க்க..

"என்னாச்சு.. எழில்.. எதுக்குச் சிரிக்கிறே?.. வடை நல்லா செய்ய வர்றலியா?.. அதுக்கு எதுக்கு சிரிப்பு.. அப்பத்தாவும் சிரிக்கிறாங்க.."

முதலில் சிரிப்பை நிறுத்திய அப்பத்தா.. "அடியே எழிலு.. அடங்குடி.. கூறை பிச்சிட்டுப் போகப் போகுது.. எதோ சின்னப் பொண்ணு.. புரியாம கேட்டா விவரம் சொல்லாம.. அதுக்கு இப்படிச் சிரிச்சி வைப்பியா?.. வரட்டும் டி என் பேரன்.. உன் சீட்டை கிழிக்க வைச்சா தெரியும் சேதி.."

கப்பென்று வாயை மூடினாள் எழில்.

"அய்யோ..பட்டிணத்து சின்னம்மா.. என்னம்மா நீங்க.. என் வேலைக்கு உளை வைக்காம விட மாட்டீங்க போல.. சின்னம்மா அது சாப்பிடற வடை இல்லை.. எங்க பக்கத்து பழமொழி.. எங்க ஊர்ல இப்படிப் பழமொழிக்கு சொலவடைன்னு பேச்சு மொழியா சொல்லுவோம்.. நீங்க எதையோ தப்பா புரிஞ்சிடீங்கம்மா.. இதெல்லாம் அய்யா கிட்ட சொல்லிடாதங்கம்மா.. எனக்கு ஏற்கனவே நேரம் சரியில்லை.."

"ஓ.. பழமொழிக்கு.. யூ மின் ப்ராவெர்ப்.. சொலவடை.. நைஸ் வர்ட்.." எனச் சிலாய்கித்தாள் சத்யா.

"ஓ.கே அப்பத்தா.. உங்க மெனுவெல்லாம் ஓ.கேதான்.. கொஞ்சம் தாளிச்சி தயிர் சாதமும் பண்ணிட சொல்லுங்க.. அத்தோடு ப்ரூட்ஸ்.. பழங்கள் இருந்தா சொல்லுங்க.. நான் பழங்கள் வைச்சி ப்ரூட்ஸ் சாலட் பண்ணுகிறேன்.. அவங்க சாப்பிட்டு முடிச்ச பின்னால கொஞ்சம் டேஸ்ட் பண்ணா நல்லா இருக்கும்.. ஜஸ்ட் டெஸர்ட் மாதிரி.."

புரியாமல் பார்த்தவர்களுக்குச் சாப்பிட்டப்பின் இனிப்பு சாப்பிடுவது போல.. என விளக்கினாள் சத்யா.

சொன்னதோடு நிற்காமல் தானே வீட்டிலிருந்த மாம்பழம், வாழைப்பழம்.. கமலா ஆரஞ்சு எல்லாவற்றையும் வைத்து அழகாக ப்ரூட்ஸ் சாலட் தயாரித்தவள் மேலே அதை அலங்கரிக்க மாதுளம்பழங்களோடு பேரிச்சம் பழத்தையும் தூவினாள்.

தாளித்த தயிர் சாதத்திலும் வெள்ளரிக்காய், மாங்காய், பச்சை திராட்சை எல்லாவற்றையும் போட்டு அழகாகத் தயாரித்து வைத்தாள்.

அதற்கே அப்பத்தா மகிழ்ந்து போய் விட்டார்.. ஆஹா பட்டிணத்துப் பொண்ணுன்னா சும்மாவா.. எப்படிப் பார்த்து பார்த்து அலங்காரமா தயாரிக்குது.. இந்தப் பக்குவமெல்லாம் எங்களுக்குத் தெரியாதே..' என மாய்ந்து போனவர் எழிலையும் எல்லாவற்றையும் இனி சின்னம்மாவை கேட்டு செய்யப் பழக வேண்டும் என்று கண்டிஷனும் போட்டு வைத்தார்.

சத்யா தனக்குத் தெரிந்த அந்த இரண்டு அயிட்டங்களைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை.. அப்பத்தாவின் வேண்டுகோளுக்காக சாப்பாட்டு மேசையில் அழகாகத் தட்டுக்களை அடுக்கி வைத்தாள்.

பீங்கான் தட்டுக்கள் இல்லாதது அவளுக்கு மனக்குறையே.. அடுத்த முறை யாரையாவது விருந்துக்கு அழைத்தால் அவற்றை வாங்கி முன்பே வைத்து விடலாம் என அப்பத்தா அவளுக்கு ஆறுதல் அளிக்கத் தலையாட்டிக் கொண்டாள் சத்யா.

"இதெல்லாம் ஓ.கே அப்பத்தா.. ஆனா வீடு மட்டும் இப்படி நாத்தமா இருக்கு.. வர்றவங்க எப்படி இந்த ஸ்மெல்ல சகிச்சிட்டு சாப்பிட முடியும்?.."

"ஏன் ஆத்தா.. காலையிலேயே வீட்டைக் கூட்டி துடைச்சிட்டு போனாளே பொன்னாத்தா..”

அவள் முகத்தைப் பார்த்தவர்..

“ஓ.. அதில்லையா.. என்ன அந்த மசாலா வாசனை கொஞ்சம் தூக்கலா இருக்கு.. அதைத்தானே சொல்ல வந்தே.. பின்னே கோழி பிரியாணி வைச்சா அதுக்குத் தோதா மசாலா கூட்டினா தானே நல்லா வாயிக்கு ருசியா இருக்கும்.. இதுக்குப் போய் அலட்டிக்கலாமா?.."

"ஏன் அப்பத்தா.. அதுக்குன்னு இப்படியா?.. எங்க வீட்டுல கூடத்தான் எங்கம்மா நல்லா நான்வெஜ் சமைப்பாங்க.. ஆனா கொஞ்சம் கூட இப்படி ஸ்மெல் வராது..?.. ஒருவேளை நீங்க வாங்கினது கோழி சீக்கு கோழியோ?.. இல்லை அழுகின மீனோ.. கெட்டு போச்சா என்ன?.."

"அடியே சீமை சித்ராங்கி.. என்ன வார்த்தை சொல்லிப்புட்டே.. இந்தக் கண்ணாத்தா பரம்பரையிலேயே அப்படிக் கிடையாது.. விருந்துக்கு அழைச்சிட்டு சீக்கு கோழியையும், கெட்டு போன மீனையுமாடி சமைச்சி வைப்போம். நம்ம வூட்டுல தோட்டத்துல போயி பாரு.. எத்தனை கோழி ஓடுதுன்னு தெரியும்.. அதுல ஒண்ணைப் புடிச்சி அடிச்சி வைச்சா.. என்ன பேச்சு பேசறே.. அழுகி போன மீனாடி.. நம்ம கம்மா கரையில காலையில பிடிச்ச மீனை என் மவன் சக்தி அள்ளிட்டு வந்தா.. என்னா சொல்லு சொல்லறே..

"இதுதான் பட்டணத்துக் குசும்புங்கறது.. உங்க வீடாமே உங்க வீடு.. அது என்ன உன் வீடு.. எப்போ எம்பேரனை கட்டிட்டு இந்த வீட்டுக்குள்ள அடியெடுத்து வைச்சியோ அப்பவே இதாண்டி உன்வீடு.. உங்க அம்மா வீடெல்லாம் அப்போ..

“இப்போ நீ இங்கன இந்தக் கண்ணாத்தா பராம்பரை, கதிர்வேலு பேரன், அதாண்டி என் புருஷனோட பேரைத்தான் உம் புருஷனுக்கு வைச்சிருக்கு.. என் சக்திவேலு மவன்.. என் பேரன் கதிர்வேலோடு பொண்டாட்டிடி நீ.. கட்டையில ஏறுற வரை இதாண்டி உன் வீடு.. இந்தக் குடும்பம்தேன் உன் பேரு. அதை மனசுல வைச்சிட்டு இனி உன் பொழப்பை நடத்து.."

'ஆஹா.. நல்லா மனசிலாயி.." என அப்பத்தாவை நக்கலடிக்க நினைத்த சத்யா வாயை கொடுத்து மேலும் வம்பை வளர்க்க விரும்பவில்லை.. பின்னே ஒத்தை வார்த்தை அம்மா வீட்டை இழுத்ததுக்கு இத்தனை விளக்கமா!!

பாவம் அவள் எனர்ஜி எல்லாம் ஏற்கனவே அத்தனை நேரமாகச் சமைத்த தயிர் சாதத்திலும், புரூட் சாலட்டிலும் சுவாகாவாகி போயிருந்தது.

"அய்யோ அப்பத்தா.. நான் அந்த அர்த்தத்துல சொல்லை.. அம்மா வீட்டுல இவ்வளவு வாடை வராதேன்னு கேட்டேன்.. ஆனா அம்மா இப்படியெல்லாம் கோழியெல்லாம் வளர்க்கலை.. கடைக்குப் போய் வாங்கிட்டு வருவாங்க.. எல்லாம் ரெடி டு ஈட் அயிட்டம்ஸ்..

“பதப்படுத்தி இருப்பாங்க.. அப்படியே பிரிட்ஜுல வைச்சிருப்பாங்க.. எடுத்து சமைக்க வேண்டியதுதான்.. மசாலா கூட இப்படி அரைக்க மாட்டாங்க.. எல்லாம் ரெடிமேட்தான்.. வேலையும் ஈசியா இருக்கும்.. அதுல எந்த ஸ்மெல்லும் பெரிசா வராது.. அதான் கேட்டேன் அப்பத்தா.. வேற ஒண்ணுமில்லை.." என்றவளோ.

சமாதானக் கொடியை பறக்க விட்டாள்.

"பெரியாத்தா.. எனக்குப் புரிஞ்சி போச்சு.. அவங்க கடையில விக்கிற ரெடிமேட்டு கோழியை வாங்குவாங்களா இருக்கும்.. எல்லாத்தையும் தயார் படித்தி குளிரு பொட்டியில வைச்சி விப்பாங்களாம்.. எம் புருஷன் சென்னை பட்டிணத்துக்குச் சமைக்கப் போனப்ப அவங்க வூட்டுல கூட இப்படித்தானாம்.. எனக்குச் சொல்லி இருக்காரு.. பாரு.. நீங்க புரியாம புள்ளைய திட்டி பூட்டியே.."

தன்னைத் திட்டிய கண்ணாத்தாவை சமயம் பார்த்து தன் பொது அறிவை காட்டி காலை வாறினாள் எழிலரசி.

"ஏய் நானும் எம் பேத்தியும் என்னமோ பேசிப்போம்.. நிரடிச்சி நீர் விலகுமா என்ன?.. அது ஒண்ணும் என்னைய தப்பா எடுத்துக்காது..”

“இந்தக் கிழவிக்கு இந்த விவரத்தை எடுத்து சொன்னா நான் புரிஞ்சிட்டு போறேன்.. நீ எதுக்குடி இப்படி நடுவுல சிந்து பாடறே.. போய் வாய் பார்க்காம வேலையைக் கவனிடி கூறு கெட்ட குப்பி.. இல்லே.. எம் பேரன் வரட்டும்.." என்று அவளை விரட்டிய கண்ணாத்தாவுக்கு மறு பேச்சு பேசுபவளா எழில்.

"சத்தியாம்மா.. இதுல இம்பூட்டு விவரம் இருக்கா தாயி. எனக்கு விவரம் பத்தலை.. நீ எதையும் மனசுல வைச்சுக்காதே..

"ஆனாலும் இப்படி ஐஸ் பெட்டியில வைச்சா.. அது ருசி எப்படி இருக்கும்?.. நாம புதுசா, பக்குவப்படுத்தி.. கூட்டி அரைச்சி ஆக்கினா.. அது ருசியே தனி இல்லையா?.. எப்படி மணக்கும் தெரியுமா?.. அடுத்த முறை ரேவதி பொண்ணு வந்தா இந்தப் பக்குவமெல்லாம் சொல்லித் தரணும்..

“இப்போ பாரு நீ இப்படி ஐஸ் பொட்டியில வைச்ச பழையதெல்லாம் திண்ணு திண்ணு எப்படி மெலிஞ்சி கிடைக்கே.. உங்கம்மாவுக்கு விவரம் பத்தலை.."

கடைசியில் ஆட்டை கடித்து மாட்டைக் கடித்து சத்யாவின் தாயின் மீது பழியைப் போட்ட கண்ணாத்தாவிடம் பேசத் தெரியாமல் முழித்தாள் சத்யா.

ஆனாலும் பேத்தியின் கூற்றை ஏற்றவர், கொஞ்சம் கற்பூரத்தை கொளுத்தி விட்டை கொஞ்சம் மணமாக்கினார்.. அத்தோடு விடாமல் சத்யாவின் ஆலோசனையில் பன்னீரைத் தெளித்து வீட்டை வாசனை மயமாக்கினார்.

பின்னே சத்யா அந்த வீட்டில் ரூம் ஸ்ப்ரேயருக்கு எங்கே போக முடியும்?.. இருப்பதைக் கொண்டு வீட்டை நறுமணமாக்கினாள்.. அதற்கும் கண்ணாத்தா மருமவளை மெச்சி கொள்ள..

கதிரும், வெற்றியும் இரண்டு அரசாங்க அலுவலர்களுடன் வீட்டுக்கு மதிய உணவுக்கு வந்தனர்.

சக்திவேல் அவர்கள் முன்பாகவே வந்து அவர்களுக்காகத் தயாராகக் காத்துக் கொண்டிருந்தார்.

கதிர் வந்தவர்களுக்குத் தன் மனைவி சத்யாவை அறிமுகப்படுத்த.. சத்யாவும் மென்மையாகப் புன்னகைத்து அவர்களுடன் சரிசமமாகப் பேசத் தொடங்கினாள்.

பீங்கான் தட்டுக்கள் இல்லாததால்.. எவர்சிலவர் தட்டுக்களை எடுத்து வைத்த சத்யாவுக்குத் தலையாட்டி மறுத்தான் கதிர்.

"சத்யா.. இந்த ப்ளேட்ஸ் வேண்டாமே.."

"ஓ.. அப்போ இங்க பீங்கான் ப்ளேட்ஸ் எல்லாம் இல்லையே.. அதான் இதை எடுத்து வைச்சேன்.."

"இட்ஸ் ஆல்ரையிட்... அப்பத்தா.. வாழையில அறுத்திட்டு வரச் சொல்லுங்க.. நம்ம கொல்லையிலேயே இருக்கே.."

அதற்குள்ளாகவே சக்திவேல் வாழையிலைகளோடு வந்துவிட,

"தேங்க்ஸ்ப்பா.." என்ற கதிருக்கு தலையாட்டிய சக்திவேலோ மருமகளின் முகவாட்டத்தைக் கண்டு கொண்டார்.

"சத்யாம்மா.. நீ தப்பா எடுத்துக்காதே.. நம்ம பாரம்பரியமான வாழை இலையில் பந்தி பரிமாறுவது நம்ம ஊரு வழக்கம்.. இங்கெல்லாம் விருந்துக்கு வாழையிலதான் போடுவாங்க.. வாழை இலையில சாப்பிட்டா ருசியா சோறு மணக்கறதோடு.. நல்ல ஜீரணும் ஆகும்மா.. இலையோட சேர்ந்த மணத்துல இன்னும் ரெண்டு பிடி அள்ளி திண்ணத் தோணும்.. அதான் நாங்க இங்கெல்லாம் வாழையில விருந்து சாப்பாட்டை விரும்பி சாப்பிடுவோம்.."

எனத் தன்மையாகக் கூறிவரை தலையாட்டிப் புன்னகைத்தாள் சத்யா.

அவர்கள் வீட்டிலும் அவர் தந்தை வாழையிலையில் பரிமாறினால் ரசித்து உண்பதை அறிந்திருந்தவள்தான் சத்யா.. காலத்துக்குகேற்ப அவர்கள் பீங்கான் பிளேட்டுகளில் உண்டாலும், பண்டிகை தினங்களின் அவள் தாய் அந்தப் பராம்பரியத்தைப் பின்பற்றுபவரே.. ஆனால் அப்பொழுதும் சத்யா அதை ஒதுக்கி தன் ப்ளேட்டை எடுத்துக் கொள்வது வேறு விஷயம்.

சத்யாவையும் உடன் உண்ண கதிர் அழைக்க.. சத்யாவும் உட்காரலாம் எனப் போக.. கண்ணாத்தா நாசூக்கா அவளைத் தடுத்து 'விருந்தாளிகள் சாப்பிட்ட பிறகு வீட்டுப் பெண்கள் சாப்பிட்டுக் கொள்வோம்' என அவள் எண்ணத்தில் மண்ணை வாரி போட்டார்.

வேறு வழியில்லாமல் கண்ணாத்தா சொல்ல சொல்ல ஒவ்வொரு அயிட்டங்களாக எடுத்து பரிமாறினாள் சத்யா.. கூடவே எடுத்து கொடுத்து அவளுக்கு உதவினார் கண்ணாத்தா..

"பெரியாத்தா.. வீட்டுக்குள்ள நுழைஞ்சவுடனே நான்வெஜ் வாசனை வரலையா.. நான் நினைச்சேன்.. இன்னிக்கு ஏதாவது விரத நாளோ என்னவோ?.. நம்ம பெரியாத்தா வீட்டுக் கோழி பிரியாணி நமக்கு வாய்க்கலைன்னு.. வாசனை ஆளை மயக்குமே.. என்னடா இன்னிக்கு பன்னீரும், ஊதுவத்தியுமா மணக்குதுன்னு..

"பரவாயில்லை ஆத்தா.. எங்களை ஏமாத்தலை.. எங்களுக்கு விருப்பமான சாப்பாட்டை ஆக்கி வைச்சதுக்கு நன்றி ஆத்தா.. ஒரு கட்டு கட்டிட மாட்டோம்.."

“அதானே பார்த்தேன்.. அப்பத்தா எப்படி வெஜ் சமைச்சிருக்கும் விருந்தாளிகளுக்குன்னு.. எல்லாமே எனக்குப் பிடிச்ச அயிட்டங்கள்.. சூப்பர்..” என வெற்றியும் சிலாய்கிக்க..

ஒரு நொடி சத்யாவை பார்த்த கண்ணாத்தா.. 'பார்த்தியா.. உனக்கு நாத்தம்மா?..'

"அதுவா அப்பூ.. அது வேற ஒண்ணுமில்ல.. நம்ம மருமவ பொண்ணுக்குக் கொஞ்சம் இந்தக் கவுச்சி வாசனை குமட்டும்.. பட்டிணத்து பொண்ணில்லையா?.. அதான் கொஞ்சம் வீடு மணக்கப் பத்தியை கொளுத்தி பன்னீரை தெளிச்சி விட்டேன்..

"பெரிய ஆபீசருங்க வரும் பொழுது வாய்க்கு ருசியா சமைச்சி போடலைன்னா.. எங்க பரம்பரைக்கே இழுக்கு வந்திடாதா?.. அத்தோடு எனக்கு உங்களோட ருசி தெரியாதா என்ன அப்பு?.. ஆறு மாசம் முன்னாடி வந்த போது என் கைருசியை விரும்பி சாப்பிட்டங்களே அதை மறக்க முடியுமா?..

"காலையிலேயே நம்ம கதிரு சொல்லிட்டுத்தான் போனான்.. நல்ல மணமா, ருசியா ஆக்கி வைக்கணும்னு.. நல்ல திருப்தியா சாப்பிடணும் அப்பூ.. வாயும் வயிறும் நிறைஞ்சி மனசார வாழ்த்தணும்.. அம்புட்டுத்தான் எங்களுக்கு வேண்டியது.."

"அதுக்கென்ன ஆத்தா.. நீங்க சொல்லைன்னாலும் நாங்க விட மாட்டோம் இல்ல.. ஆத்தா வீட்டு விருந்துன்னா சும்மாவா.. சும்மா பூந்து விளையாடிட மாட்டோம்.."

அடுத்த அரை மணி அங்கே கையுக்கும் வாய்க்கும் போட்டி நடந்து கொண்டிருந்தன.. அவர்கள் உண்ணும் வேகத்துக்கு சத்யா பரிமாறி சலித்துப் போனாள்.

கோழி பிரியாணியும்.. சிக்கன் சிக்ஸ்டி ஃபைவ்வும் போட்டி போட்டன.. முட்டைப் பிரியாணி வெள்ளை சோற்றுடன் கருவாட்டுக் குழம்புடன் அவர்கள் கையில் அள்ள அள்ள.. மீன் பொறியலோ அவர்கள் வாயில் கரைந்தது.

போதா குறைக்கு.. "பேத்தி.. அங்கே பாரு உன் புருஷன் இலை காலியாகி போச்சு.. இன்னும் கொஞ்சம் பிரியாணியை வைய்யி.. அப்படியே ரெண்டு மீன் துண்டை போடு தாயி.. ஏலேய் கதிரு.. உம் பொண்டாட்டி முகத்தை அப்புறம் பார்த்து ரசிக்கலாம்.. இலையைப் பார்த்து சாப்பிடு ராஜா..

"என்ன நீ.. இம்மாத்தூண்டு தின்னா.. எந்த மூளைக்கு.. உழைக்கறவன் நல்லா நொறுங்க திண்ணாதானே?..

ஏலே வெற்றி.. எதுக்குடா இலையை அளையறே?.. முட்டை பொரியலை வைச்சிட்டுக் கொஞ்சம் வெள்ளை சோத்தை வைச்சுக்க.. பேத்தி வேற தயிர்சோத்தை தாளிச்சி வைச்சிருக்கு.. வாயில அள்ளி போடுவியா.."

"என்னமோ இந்தக் காலத்துப் புள்ளைகள் ரொம்பவும் தான் நாசூக்கு பாக்குது.."

வெறுத்துப் போனாள் சத்யா.. 'யாரு.. இவன் நாசூக்கு பாக்கிறானாமா?.. இன்னும் கொஞ்சம் போடுன்னு எம் முகத்தைப் பார்க்கிறான் பக்கி.. இதுல இந்தக் கிழவிக்கு லொள்ளு வேறு.. என்னவோ இவன் என்னைக் காதலா பார்க்கிறான்னு..

‘ஆளும் மூஞ்சியும்.. இப்படி மூக்குபிடிக்க முக்காபடி தின்னா.. ஏன் இப்படிக் குண்டோதரனா இருக்க மாட்டேன்.. இவன் இப்படின்னா.. இந்த அரிசிமூட்டை வெற்றி.. ராமனுக்கேத்த லட்சுமணன்.. அப்பத்தா.. உன்னை.. இப்படி ஊட்டி ஊட்டி வளர்த்து உன் பேரங்களை ஊட்டி உருளைக்கிழங்கு.. இல்லை.. இல்லையில்லை.. ஊட்டி.. பூசணிக்கா.. பூசணிக்கா ஊட்டியில் அது பேமஸ் இல்லையே.. முட்டைக்கோஸ்..'

"சே.. இந்தச் சோத்து பட்டாளங்களோடு சேர்ந்தா நம்ம புத்தியும் இப்படித்தான் யோசிக்கத் தோணுமோ?..’

"சத்யா.. கொஞ்சமா ஒரு இரண்டு கரண்டி தயிர் சோறு போடு.. வயிறு ரொம்பி போச்சு.." கதிர் சொல்ல..

'இரண்டு கரண்டி உனக்குக் கொஞ்சமாடா..", எடுத்து வைத்த சத்யா முறைக்க..

"என்ன சத்யா.. நீ செஞ்சியா.. நல்லா இருக்கு.. மிச்சமிருந்தா எடுத்து வைய்யி.. இராத்திரிக்கு சாப்பிடறேன்..", எனச் சினேகிதமாகச் சொன்னவனை என்ன செய்வது என்று புரியவில்லை சத்யாவிற்கு.. அப்படியே அவன் தலையில் சோற்று பானையைக் கவிழ்க்கலாமா என்று தோன்றியது.

"பெரியாத்தா.. ரொம்ப நல்லா இருந்தது சாப்பாடு.. வயிறும், மனசும் நெறைஞ்சி போச்சு.. எங்கம்மா கையால ஆக்கி சாப்பிட்ட திருப்தி..", என ஏப்பமிட்டனர் வந்த ஆபீசர்கள்.

"ரொம்பச் சந்தோஷம் அப்பூ.. நம்ம மருமவ ஏதோ ஸ்பெஷலா பழங்களைப் போட்டு என்னவோ செய்து வைச்சிருக்கு.. அதையும் சாபிடுடுட்டு வாழ்த்தணும்.."

"ஆஹா.. சந்தோஷம்.. கொண்டாம்மா.. சத்யா.." என ப்ரூட் சாலட்டையும் ஒரு பிடி பிடித்துவிட்டு, குறைந்த மீதிக்கு வெற்றிலையும் அதக்கிக் கொண்டு விடை பெற்றனர்.

கதிர் அவர்களுடனேயே சென்று விட, வெற்றியும் தன் வேலை விஷயமாக வெளியே செல்ல..

அப்பத்தாவுடன் உணவு உண்ண உட்கார்ந்த சத்யாவிற்கு இரண்டு பிடி உணவுக்கு மேல் நெஞ்சில் இறங்கவில்லை.. எல்லாம் வெறுப்பாக இருந்தது.

இது என்ன மாதிரியான குடும்பம்.. இருக்க வேண்டியதுதான்.. வந்தவர்களுக்கு விருந்தோம்பல் செய்யலாம்.. அதற்காக.. இப்படித் தின்று அழித்தால்..

கதிரை நினைக்க நினைக்க ஆத்திரமாக வந்தது.. யானை மாதிரி தோற்றத்தை கொண்டிருப்பவனுடன் எப்படி வாழ்க்கையைத் தொடங்க முடியும்.. மனசுக்குக் கொஞ்சம் கூட ஒப்பவில்லையே..

இந்தக் கூட்டத்தை எப்படி மாற்றுவது.. ஒருவரை மாற்றலாம்.. ஆனால் மொத்த குடும்பமும் அல்லவா இப்படி இருக்கிறார்கள்?.. படித்த வெற்றி கூட இங்கே வேறு விதமாக அல்லவா இருக்கிறான்..

கதிரை நினைத்து நினைத்துக் கோபம் வந்தது சத்யாவிற்கு.. சரி படிக்காதவன் என்று ஒதுக்கித் தள்ளினலும், ஆளும் இப்படி இருந்தால்.. எதுவும் ரசிக்கவில்லை அவளுக்கு.. பிடிக்கவில்லை என்று அப்பத்தாவிடம் சொல்லிவிட்டு லைட்டாகத் தயிர் சோற்றை உண்டவள்.. தலை வலிக்கிறது என்று சொல்லிவிட்டு.. பழக்கலவையை எடுத்துக் கொண்டு தன்னறைக்குள் அடைந்து கொண்டாள்.

தன் வாழ்க்கையை நினைத்து முதல் முறையாகக் கலக்கமாக இருந்தது அவளுக்கு.. தன்னை இந்த நிலைக்குத் தள்ளிய தந்தை மீது கோபமாக வந்தது.. தாயாவது தடுத்திருக்கலாமே?.. தந்தையின் ஒற்றைப் பார்வையில் அடங்கி அவருக்கு ஒத்து ஊதி தன்னை இப்படிப் பாழும் கிணற்றில் தள்ளி விட்டனரே?..

இதுவரை எதற்கும் அழாத சத்யா.. முதல் முறையாகத் தன்னுடைய வாழ்க்கையை எண்ணிக் கலங்கினாள்.. கண்ணீர் வழிந்தது.. பிரகாஷை நினைத்துக் கொண்டாள்.

‘கல்யாணம் ஆன இந்த இருபது நாட்களில் மாமா வீட்டிலிருந்து யாரும் அவளைக் கேட்டு போன் பண்ணவில்லை.. பிரகாஷ் கூடத் தன்னை மறந்து விட்டான்.. புதுப் பெண்டாட்டியுடன் ஜாலியாக இருப்பான்.. இனி என்னைப் பற்றிய எண்ணம் எதற்கு?..’

கண்ணீர் வழியப்படுத்தவள் தன்னையறியாமல் உறங்கினாள்.

இரவு கதிர் வந்து அவளைக் காணாமல் அவளைத் தேடி வந்து பார்த்ததோ, கண்ணீர் தடயம் காய, ஒடுங்கிப் படுத்திருந்த மனைவியைக் கண்டு வருத்ததுடன் போர்வை போர்த்தியதோ எதுவும் அவள் அறியவில்லை.. நித்திரையின் பிடியில் தன்னைத் தொலைத்திருந்தாள்.

அடுத்தச் சில நாட்கள் வேகமாகக் கழிந்தன.

சத்யா தன் தாய் வீட்டுக்குக் கிளம்பும் நாளும் வந்தது..

அதற்கு முதல் நாள் அத்தனை நாளாக அங்கே வராத அவளது பெரியம்மா வேதாவின் தாயார் கல்யாணி தயங்கி தயங்கி கதிரின் வீட்டிற்கு வந்தார்.

அவளை வரவேற்ற கண்ணாத்தா ஆச்சர்யமாகப் பார்க்க..

தன் கணவனுக்கு அவர் தங்கை குடும்பத்தில் மீது இருந்த பகையை நன்கு அறிந்திருந்த கல்யாணி அதிசியமாக அவர்கள் வீட்டைத் தேடி வந்ததில் மகிழ்ச்சி அடைந்தவர் அவளை இரு கை நீட்டி வரவேற்றார்.

"வா ஆத்தா.. நம்ம வீடு தேடி வர்ற வழி தெரிஞ்சிதா?.. ம்.. என்னத்தைச் சொல்லறது.. என்னத்தை விடறது.. எல்லாம் சரியா இருந்திருந்தா நாம ஒண்ணுக்குள்ள ஒண்ணா இல்லை இருந்திருப்போம்.."

"பெரியாத்தா.. எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும்.. எல்லாம் எம் புருஷனை சொல்லணும்.. கடைசி வரை பகையை மனசுல வைச்சிட்டு கழுத்தை அறுத்துட்டாரு.. இனி பேசி என்ன புண்ணியம்.. எப்படியோ எம் மவளுக்கும் நல்லா வாழ்க்கை அமைஞ்சி போச்சு.. என் தங்கச்சி பொண்ணு நம்ம கதிருக்கும் அமைஞ்சி போச்சு.."

"ஆமா தாயி.. வேதா எம் பேரனை கட்டணும்ன்னு எவ்வளவோ ஆசையா இருந்தேன்.. ஆனா நாம நினைச்சது எங்கே நடக்குது?.. இப்போ ஒண்ணும் குறையில்ல.. அவ தங்கச்சி தானே இங்கே வந்திருக்கா.. அதுவும் நல்ல புள்ளைதான்.."

அதற்குள் அங்கே சத்யா வர, கல்யாணி தன் தங்கை மகளைக் கண்டு மகிழ்ந்தார்.

"சத்யா.. நல்லா இருக்கியா.. இந்தாம்மா?.." எனப் பூவும், பழங்களும், பட்டு புடவையும், அதற்குத் தகுந்த நகை நட்டுக்களையும் வைத்துக் கொடுத்தார்.

"ம் நல்லாத்தான் இருக்கேன் பெரியம்மா.. ஆமாம் இதெல்லாம் எதுக்கு.. எனக்கு வேண்டாம்.." நாசூக்காக மறுத்தாள் சத்யா.

அவள் வரும் பொழுது அவர்கள் பேசியதை கேட்டு விட்ட சத்யா சரியாகத் தவறாகப் புரிந்து கொண்டாள்.

'என்னவோ இவர் மகனை நான் ஆசைப்பட்டுக் கட்டிக் கொண்டது போல இந்தக் கிழவி பேசுது.. யார் தடுத்தாங்களாம் இவங்க அந்த நாட்டுப்புற வேதாவை கட்ட வேண்டாம்ன்னு.. எல்லாம் இந்தப் பெரியம்மாவை சொல்லணும்.. இவங்க பொண்ணுக்கு நல்ல படிச்ச பட்டிணத்து மாப்பிள்ளை வேணும்.. நான் இந்த நாட்டுப்புரத்தானைக் கட்டணும்.. எல்லாரும் நல்லா ப்ளான் பண்ணி கழுத்தருத்துட்டாங்க.. இந்த லட்சணத்துல இவங்க சீர் கொடுக்கலைன்னு நான் அழுதேன் பாரு..'

"வாங்கிக்கோம்மா.. முத முறையா கல்யாணி வந்திருக்கு.. ஆசையா தங்கச்சி மவளுக்குச் சீர் வைக்குது.. மறுக்கக் கூடாது.." அப்பத்தா கட்டளையிட..

"தாங்க்ஸ்.." என வேண்டா வெறுப்பாக வாங்கிக் கொண்டாள் சத்யா.

அடுத்து அரைமணி நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தவர்கள்.. அவள் கோபத்தை அறிந்திருந்த கல்யாணி மனதிற்குள் இதற்கெல்லாம் காரணமான தன் கணவனைத் திட்டித் தீர்த்தார்.. இப்படிச் சின்னவர்கள் வாழ்க்கையைக் கெடுத்து விட்டாரே என்று.

பாவம் அவர் என்ன செய்ய முடியும்.. கணவனை மீறாத பெண்மணி அவர்.

சற்று நேரம் பேசி விட்டு.. நாளை மறு வீட்டுக்குச் செல்லும் சத்யாவிடம் தன் மகள் புகுந்த வீட்டிற்கும், தன் தங்கை வீட்டிற்கும் சில பொருள்களைக் கொடுக்கச் சொல்லி கேட்க, கடுப்பானாள் சத்யா.

"ஏன் வேதா இங்க அம்மா வீட்டுக்கு சீராட வரலையோ?.." துடுக்காகக் கேட்ட சத்யாவுக்கு.. கல்யாணியோ பிரகாஷுக்கு ஆபீஸ் வேலை நிறைய இருப்பதால் பிறகு அனுப்புவதாக அண்ணன் சொன்னதாக.. சத்யாவை தப்பாக எடுத்துக் கொள்ளாமல் அமைதியாகச் சொன்னார் கல்யாணி.

"அடுத்து.. இவங்க பொண்ணுக்கு நான் மூட்டை தூக்கணமோ.."

அப்பத்தாவோ அவள் அடுக்கி வைத்த டப்பாக்களை எழிலிடம் சொல்லி எடுத்து வைக்கச் சொன்னார்.. இதுக்கே ரெண்டு லாரி வேணும் போல என மனதிற்குள் வைதபடி சத்யா பொரும.. அவள் மனனிலையை நன்கு அறிந்திருந்த கல்யாணி அதற்கு மேலே அங்கே நிற்காமல் தன் விதியை நொந்தபடி அங்கிருந்து அகன்றார்.

அடுத்த நாள் பொழுதும் விடிந்தது.. கதிரும், சத்யாவும் பட்டிணத்துக்குப் புறப்பட்டனர்.

கதிர் அவன் தந்தையின் சொல்லுக்கிணங்கி அவர்கள் வீட்டு பெரிய காரான ஸ்கார்ப்பியோவை எடுத்தான்.. மனைவி அருகில் அமர்ந்திருந்த உல்லாசத்தில் சீட்டி அடித்தபடி வண்டியைக் கிளப்பினான்.

அவன் உல்லாசம் நிலைக்குமா?.. இல்லை ஆட்டம் காணுமா?..

பட்டிண பிரவேசம் அவர்களுக்கு என்ன வைத்திருக்கிறதோ........

********************************************************************************************************
 
Last edited by a moderator:

Mohanapriya M

Well-known member

👌🏻👌🏻👌🏻
 
Top