அடுத்த நொடி ஒரு சூறாவளிதான் வந்து போனதோ என்று என்னும் அளவுக்கு வேகமாய்த் தன் வீட்டை விட்டு வெளியேறிய சத்யா நேராய் பிரகாஷ் வீட்டிற்குச் சென்றாள்..
அவளுக்கு நன்றாய்த் தெரியும் பிரகாஷ் ஆஃபிசுக்குப் போயிருப்பான் என்று.. ஆனாலும் அவள் அங்குப் போனதன் முக்கியக் காரணம், வேதாவை இன்று ஒரு வழி செய்யாமல் விடக்கூடாது என்பதற்காகத்தான்.
'திமிர் பிடித்தவள், அடிக்கவா அடிக்கிறாள்.. இருடி உன்னை.. என் காலில் விழ வைக்கலை..' என்று நினைத்தவாறு வேதாவின் வீட்டுக்குச் சென்றாள் சத்யா.
என்னதான் அக்கா முறை என்றாலும் கூடக் குமரேசன் மாமாவின் சிடு சிடு குணத்தால் யாரும் அளவுக்கு அதிகமாய்ச் சொந்தம் புழங்கியதில்லை.. அதனாலேயே சத்யா வீட்டில் அவள் பெரிய தாயின் வீட்டு உறவு அளவாகவே இருந்தது..
கல்யாணியும் ரேவதியும் பேசிக் கொள்வதோடு சரி.. மற்றபடி வேதாவோ சத்யாவோ, இல்லை பிரகாஷோ அதிகமாகப் பேசிப் பழகியது இல்லவே இல்லை எனலாம்..
அப்படியிருக்க வேதா அடித்தவுடன் சத்யாவிற்கு அந்த அவமானம் தாங்க முடியாததாகத் தான் இருந்தது..
பிரகாஷ் வீட்டில் புயலென நுழைந்தவள், அங்கே அவள் அத்தை ருக்கு யாரிடமோ ஃபோனில் பதட்டமாய்ப் பேசிக் கொண்டிருந்தது தென்பட்டது.
ஆனாலும் கூட அதைக் கண்டு கொள்ளாமல்,
"அத்தை அத்தை", என்று கூச்சலிட்டாள்.
அதற்குள் ஃபோனை தாங்கியில் வைத்த ருக்கு இன்னமும் கூடப் படபடப்புக் குறையாமல், 'கொஞ்சம் பொறு’ என்பது போல் சத்யாவிற்குச் சைகை செய்துவிட்டு, மெல்ல சோஃபாவின் அருகில் வந்தவள் பொத்தென்று அதில் அமர்ந்தாள்.
அருகிலிருந்த டிபாயில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மடமட வென்று வாயில் கொட்டிக் கொண்டபின் தான் கொஞ்சம் படபடப்பு அடங்கியது அவளுக்கு.
ஆசுவாசப்படுத்திக் கொண்டு இடுப்பில் கையை வைத்து முறைத்தபடி நிற்கும் சத்யாவை அப்போது தான் சரியாய் கவனித்தாள்..
'இதென்னடாயிது நம்ம வீட்டு குழப்பமே பெருசா இருக்கு.. இதில் இந்தப் பொண்ணு வேறு ஏதோ கோபமா பார்க்குது.. இது என்ன குண்டைத் தூக்கி போட போகுதோ', என்று நினைத்தபடி,
"என்ன சது குட்டி.. என்ன கோவம் உனக்கு.. ஏன் இப்படி மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க வந்து நிக்கிறே", என்று ஒரு கணம் தன் பிரச்சனையை மூட்டைக் கட்டிவிட்டு கோபமாய் நின்றிருந்த தன் அண்ணன் மகளைக் கவனித்தாள்.
"அத்தை எங்கே போனா உன்னோடு அழகு மருமகள்.. கூப்பிடுங்கள் அவளை.. இன்னிக்கு அவளை ஒரு வழி செய்யுறேன் பாருங்க.. திமிர் பிடிச்சவ.. அடிக்கவா அடிக்கிறா..", என்று மீண்டும் குரலெடுத்து கத்தினாள் சத்யா..
"என்ன..என்னடி சொல்லுறே.. வேதா யாரை அடிச்சா?.. பிரகாஷையா..", என்று பதறினாள்..
"ம்ம்.. இப்போ நல்லா கதை கேளு அத்தை.. உன் அருமை மருமக என்னைப் பளார்னு ஒரு அடி வச்சா பார்ட்டியிலே.. விட்டிருந்தா பிரகாஷ் அத்தானையும் ஒரு போடு போட்டிருப்பா அந்த ரூல்ஸ் ராமானுஜம்.. கேட்டா நல்லா சட்டம் பேசுறா.. இது தப்பு சரின்னு.. புருஷன்னு ஒரு மரியாதை வேணாம் ஒருத்திக்கு.. எங்கே அவ
இவ இப்படி இருக்கறதுனாலேதான் என் புருஷன் கதிர் இவளை என்னமோ தேவதை ரேஞ்சுலே பேசுறான்.. சுத்த கண்டிரீ ப்ரூட்..", என்ற கொந்தளித்தாள்.
சத்யாவை வேதா அடித்தாள் என்பது மட்டும் ருக்குவின் மூளைக்கு ஏறியது.. ஏன் எதற்கு என்று கேட்கத் தோன்றவில்லை அவளுக்கு,.. என்ன இருந்தாலும் வேதா நாத்தனார் பெண்தானே.. ஆனால் நம்ம சத்யா அப்படியா.. என் ரத்தமும் தானே.. என் அண்ணன் மகளாச்சே.. அவளெல்லாம் தப்புச் செய்ய மாட்டா.., என்று தான் தோன்றியது ருக்குவுக்கு..
"இல்லைடி சது... அந்தப் பிடாரி வீட்டை விட்டு எங்கேயோ ஓடிப்போயிடுச்சு.. இதோ பாரு லெட்டர் வேறு எழுதி வச்சிருக்கா..", என்று தன் கையிலிருந்த கடிதத்தைச் சத்யாவிடம் கொடுத்தாள் ருக்கு..
கடிதத்தைக் கையில் வாங்கியவாறு, "என்னது இவளும் ஓடிட்டாளா..", என்று வியப்பாய் கேட்டாள்.. மனதின் மூலையில் ஒரு சின்னப் பட்சி கூவியது சத்யாவுக்கு. ஒரு வேளை..,
"அதற்குள் ருக்கு, "இவளும்ன்னா?.. அப்போ வேற யார் ஓடினது.. புரியலையே..ம் எது எப்படியோ இந்த வேதா ஓடி போய் எங்க மூஞ்சியிலே கரியைப் பூசிட்டா.. வெளியே விஷயம் தெரிஞ்சா எவ்வளவு அசிங்கம் எங்களுக்கு.. எங்க கிளப்பில் அவ அவ ஏற்கனவே என்னை ஒரு மார்க்கமாகத்தான் பார்க்கிறாங்க..."
"அய்யோ அத்தை நேத்து ராத்திரி என் புருஷன் கதிரும் வீட்டை விட்டு போயாச்சு.. அதான் கேட்டேன்.. ஒரு வேளை இவங்க ரெண்டு பேரும் தான் பிளான் செஞ்சு ஓடியிருப்பாங்களோ..", என்று பேசியது தான் தாமதம் அடுத்த நொடி..
'ஞோய்' என்ற சத்தம் காதில் கேட்டுக் கண்களில் பூச்சி பறந்தது சத்யாவுக்கு..
"ஏய்" என்று கோபத்துடன் கன்னத்தைப் பிடித்தபடி தன்னை யார் அடித்தது என்று பார்த்தவளுக்கு அதிர்ச்சி..
அங்கே ராஜ்குமாரும் ரேவதியும் நின்றிருந்தார்கள்..
தன் செல்லத் தந்தை தன்னை அடித்த அதிர்ச்சியிலிருந்து மெல்ல மீண்ட சத்யா "அப்பா", என்று கண்களில் நீர் துளிர்க்க ஏறிட,
"இதோ பார் சத்யா இது தான் கடைசி முறையாய் நான் இதை மாதிரி அநாகரீகமான பேச்சை உன் வாயிலிருந்து கேட்பதாக இருக்க வேண்டும்.. இல்லாவிட்டால்..", என்று சொல்லி முடிக்காமல் நாக்கைக் கடித்து வேறு பக்கமாய்ப் பார்த்தார்.. பாவம் அவருக்குச் சொல்ல கூட வாய் வரவில்லை..
ஆனால் ரேவதியோ கொதி நிலையில் இருந்தாள், 'சே என் மகளா இவள்..இன்னொரு பெண்ணைப் போய் அதுவும் தன் அக்காவை இப்படிப் பேசிவிட்டாளே.. கட்டிய கணவனுடன் இணைத்து வைத்து' என்று வெந்து போனாள்..
"என்னங்க நீங்க இவ கிட்ட என்னமோ பாவம் பார்த்துட்டு நிக்கறீங்க.. பேசுற வாயிலேயே இன்னும் ரெண்டு போடாம பார்த்துட்டு..அண்ணி.. நீங்க செய்யறது கொஞ்சம் கூட நல்லா இல்லை..
“எப்ப கல்யாணம் ரெண்டு பேத்துக்கும் ஆயிடுச்சோ.. நீங்க கொஞ்சம் இவளை சப்போர்ட் செய்யுறதை நிறுத்துகிறது நல்லது.. இல்லாட்டி போனா நம் ரெண்டு குடும்பத்துக்கு நடுவே உறவே கசந்துடும் சொல்லிட்டேன்.. அப்புறம் என்னைச் சொல்லிக் குத்தமில்லை..", என்று படபடத்தாள்.
"அண்ணி.. இப்ப என்ன நடந்து போச்சுன்னு குதிக்கறே.. என்னமோ.. தனக்கு மனசிலே பட்டதைச் சொல்லிட்டா குழந்தை.. இதுக்குப் போய் இப்படிப் பேயாட்டம் ஆடுறே.. ஆமாமாம் நானும் இப்போ கேட்கிறேன்.. உன் மாப்பிள்ளையையும் காணோம்.. இவளையும் காணோம் சந்தேகம் வருமா வராதா சொல்லு?..", என்று சொல்லி முடிக்குமுன்..
ராஜ்குமார், “இதோ பாரு ருக்கு.. அவளுக்குச் சொன்னது தான் உனக்கும்.. அவளை அடிச்சேன்.. உன்னை.. முடியலை... உனக்கு வேணா உன்னோட மருமகளின் அருமை தெரியாம போயிருக்கலாம்.. ஆனா என்னோட மருமகனோட நல்ல குணமும் நடத்தையைப் பற்றிய விவரமும் எனக்கு நல்லாவே தெரியும்..”
“நல்லா பிள்ளையை வளர்த்திருக்கே நீ,. இப்படி இன்னொருத்தன் பெண்டாட்டி தன் வாழ்வை நாசம் செய்யுறதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாத முட்டாளையில்லை பெத்திருக்கே.. பழி ஒர் இடம் பாவம் ஒரு இடம் இது தான் போலும்.." என்று தங்கையைக் கடிந்து கொண்டார்..
"அண்ணா.. போதும் நிறுத்துங்க.. உங்களுக்கு வேணா நல்ல மருமகன் அமைஞ்சிருந்திருக்கலாம்.. ஆனா என்னால அப்படிச் சொல்ல முடியலையே.. அந்தக் கல்யாணத்துலே நீங்களும் என் வீட்டுக்காரரும் அடிச்ச கூத்திலே தான் நம்ம பசங்க தன்னோட வாழ்க்கையைத் தொலைச்சிட்டு நிக்கிறாங்க..”
“நீங்க என்னடான்னா வளர்த்தது சரியில்லை வெங்காயம் சரியில்லைனு வியாக்கியாணம் பேசிட்டு வந்துட்டிங்க.. என் பையன் என்ன தப்பு செஞ்சான்.. அவனா உங்க பெண்ணைக் கட்ட மாட்டேன்னு சொன்னான்..", என்று தன் பங்கிற்குத் தானும் குரலெடுத்துக் கத்தினாள் ருக்கு..
அத்தனை நாள் ஆத்திரமும் அந்த நொடி கரையை உடைத்துக் கொண்டு பொங்கி வந்தது அவளுக்கு..,
பட்பட் என்று யாரோ கையைத் தட்டும் ஓசை கேட்கவும் திரும்பியது அனைவரின் கவனமும்..
ராஜேந்திரன் தான், பற்களைக் கடித்தபடி, சிவந்த விழிகளோடு, கையைத் தட்டியபடி நின்றிருந்தார்..
அவ்வளவுதான் ருக்குவுக்கு அஸ்தியில் கிலி கண்டது..
"ம்ம்.. பேசு ருக்கு பேசு.. ஏன் நிறுத்திட்டே.. அதான்.. பாயிண்டு பாயிண்டா.. பேசுறியே.. நல்லா.. ஏன் நிறுத்திட்டே.. இப்படி ஒரு கேடுகெட்ட பையனை பெத்துட்டு..கூடவே ஒரு..ஒரு..” என்று நிறுத்தி அருவருப்புடன் சத்யாவை பார்த்துவிட்டு,
"இதோ இந்தப் புத்தி சரியில்லாதவளுக்குச் சப்போர்ட் செஞ்சிட்டு இதுலே.. குரலை உயர்த்தி உன் அண்ணனைக் கேள்வி கேக்கறியா..முதலில் உன் பையனை இல்லைடி நீ பிடிச்சிருக்கனும்.. வாழ வந்த மருமகளை ஏன் விரட்டினான்னு..", என்று எகிறினார்..
ருக்மணிக்குப் பயம் கவ்வி பிடித்தாலும், வரவழைத்துக் கொண்ட தைரியத்துடன், "இதோ பாருங்க ராஜ்.. சும்மா என் பையனை குறை சொன்னீங்க நான் சும்மா இருக்க மாட்டேன்..அவனை மட்டும் குறை சொல்லி என்ன பயன்.. உங்க தங்கை புருஷனுக்கு மட்டும் தன்மகளுக்கு நல்ல படிச்ச வசதியான மாப்பிள்ளை வேணும்.. அவரோட எதிர்பார்ப்பும் நியாயம் தான்.. ஒரு பெத்தவரா தன் பொண்ணுக்கு எது சிறந்ததுன்னு யோசிச்சார்.. ஆனா நீங்க என்ன செஞ்சிங்க?"
"என்னடி நான் செய்யலை.. நல்ல பெண்ணா பார்த்துக் கல்யாணம் செஞ்சு வச்சேனே.. குணவதிடி அவ.. வேதா வரதுக்கு முன்னே இந்த வீடு இருந்த அழகு என்ன. இப்ப எப்படி இருக்கு பார்த்தாயில்லை.. எல்லாம் சிஸ்டமாடிகா நடக்குது..”
“அதுக்கு முன்னாடி இங்கே எதுவும் நடக்கலையான்னு கேக்காதே.. உனக்கு எங்கே நேரம்.. கிளப்பு பார்ட்டின்னு சுத்த தான் சரியா இருந்துச்சு.. வேதா வந்ததுக்கு அப்புறம் தான் எனக்கு நேரத்துக்கு வீட்டுக்கு வரணும்னு தோண ஆரம்பிச்சுது.. அந்தளவுக்கு எல்லாத்தையும் திறமையா செஞ்சா.. உனக்குத் தான் மனசு இல்லை அவளை நல்ல விதமா ஏத்துக்க.. இந்த அழகுலே நீ என்னைக் கேள்வி கேக்குறே..", என்று பலமாய்க் கத்தத் தொடங்கினார் ராஜேந்திரன்..
தன் நண்பனின் கோபத்தை அறிந்திருந்த ராஜ்குமார், "ராஜு இருப்பா.. கொஞ்சம் பொறுமையா பேசலாம்.. இரு.. நிச்சயம் இதில் வேறு ஏதோ நடந்திருக்கு நிச்சயமாய்..சத்யா.. இப்போது உண்மையைச் சொல்லப் போகிறாயா இல்லையா.. நீ தானே ருக்கு விடம் சொன்னாய்.. வேதா உன்னை அடித்தாள் என்று.. இப்போ சொல்லு என்ன நடந்தது நேற்று?", என்று தன் மகளைப் பார்த்து உறுதியான குரலில் கறாராய் கேட்டார்.
"என்னப்பா என்ன கதை கேட்கிறீர்களா.. அதான்.. வேதா என்னை நேற்று பார்டியில் அடித்துவிட்டாள்.. கதிர் அவளுக்குச் சப்போர்ட்.. ஏன் எனக்குக் கோபம் வராது?.. அடித்தது தப்பில்லையாம்.. ஆனா நான் அதைத் தட்டிக் கேட்டா தப்பாம்.. மன்னிப்புக் கேட்கமாட்டாளாம் அந்த மஹாராணி..”
“அவ்வளவு கெஸ்ட் எதிரில் எனக்கு அவமானமாய்ப் போய்விட்டது.. ஆஃபிசில் என் பொசிஷன் என்ன.. என் திறமை என்ன,, எங்கள் க்ளையண்ட் வேறு வந்திருந்தார்.. இப்போ சொல்லுங்க அந்தப் பட்டிக்காடு அப்படிச் செஞ்சது தப்பு தானே?..", என்று கர்வமாய்க் கேட்டவளை நிதானமாய்ப் பார்த்த ராஜ்குமார்..
"அதுக்கு முன்னாடி நீ என்னம்மா செய்தாய்?.. அவளை அந்தளவுக்குக் கோபப் படுத்த?"
"நான் ஒன்றும் செய்யவில்லை டாட்.. என் திறமையைப் பாராட்டி எனக்குச் சான்றிதழும் பரிசும் கிடைத்தது.. பிரகாஷுக்கு சின்னதாய் கட்டிப்பிடித்துக் கன்னத்தில் முத்தம் வைத்து தாங்க் செய்தேன்.. இதுக்குப் போய் அவள் தாம் தூமென்று குதித்துச் சண்டை போட்டாள்..
“கார்பரேட் கல்சரில் இதெல்லாம் ஒன்றுமே இல்லை.. நாங்கள் ஃப்ரெண்ட்ஸே அவ்வப்போது லேசாக ஹக் செய்வோம் ஹைஃபை கொடுப்போம்..முத்தம் கொடுத்து எங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொள்வோம்.. இதெல்லாம் புரிய அவளுக்கு முதலில் இந்தக் கலாசாரம் தெரிய வேண்டுமில்லையா..அதை விட்டு அடிக்கிறாள்..", என்று சொல்லி முடித்தாள்..
அடுத்த நொடி அங்கே நிசப்தம் நிலவியது..
ராஜேந்திரன் தான் முதலில் சுதாரித்தார்.. ஆஹா.. இரண்டும் இரண்டும் நாலு என்று சரியாய் கணக்குப் போட்டார்.. ருக்குவுக்குக் கூட என்ன பிரச்சனை என்று தெரியாததால் இத்தனை நேரம் சத்யாவுக்குச் சப்போர்ட் செய்தவர், இப்போது ஒரு கணம் மனம் ஆடித்தான் போனது..
'எந்தப் பெண்தான் சகிப்பாள் தன் கணவனை இன்னொருத்தி கட்டி அணைப்பதை..
தொண்டையைக் கனைத்த ராஜேந்திரன், "இப்போ புரிஞ்சுது ஏன் அவ போனான்னு.. இவன் அவளை ஏதாவது குத்தம் சொல்லி விரட்டியிருப்பான்.. வேறு வழியில்லாமல் என் மருமக போயிட்டா.. பாவம் இதில் கதிர் மாப்பிள்ளையை வேறு சம்பந்தப் படுத்தி..”
“சீ... சத்யா...உனக்கே இது அசிங்கமாயில்லை.. நீ கட்டியவனையும் நம்பவில்லை உன் அக்காவையும் நம்பலை.. வேறு என்ன செய்வா அவ.. இப்படித்தானோடிப் போவா.. ஐயோ ஆண்டவனே இப்போ குமாரு வந்து பொண்ணு எங்கேன்னு கேட்டா என்ன பதில் சொல்ல முடியும் நான்..", என்று தலையில் கையை வைத்தபடி உட்கார்ந்து விட்டார்..
ரேவதியோ ஒரு படி மேலே போய், “அண்ணா நீங்க ஏன் கலங்கறீங்க.. நம்ம வேதா ரொம்ப நல்லப் பொண்ணு.. கடவுள் எந்தக் குறையும் அவளுக்கு வைக்க மாட்டார்.. எப்படியாவது கண்டு பிடிச்சிடலாம்.. வருத்தப்படாதீங்க.. நீங்க எங்களைத் தான் முதலில் மன்னிக்கனும்.. இப்படி ஒரு அடங்காபிடாரிய பொண்ணா பெத்ததுக்கு..", என்று அவரருகில் அமர்ந்து ஆறுதல் சொல்லத் தொடங்கினார்.
"ஆமாம் ராஜா.. இவளைப் பொண்ணா பெத்ததுக்கு நான் அசிங்கப் பட்டுப் போய் நிக்கிறேன்.. இதில் எல்லாத் தப்பையும் இவள் தன் மேல் வைத்துக் கொண்டு.. இவளைக் கூட்டிப் போக வந்த மாப்பிள்ளையிடம் சண்டை பிடித்துத் துரத்தி விட்டிருக்கிறாள்..”
“பாவம் கதிர் மாப்பிள்ளை ராவோடு ராவாக ஊர் போயிருக்கிறார்.. இங்கே வரும் முன் ஃபோன் செய்து பேசிவிட்டுத்தான் வந்தேன்.. அவர்.. இப்போதும் இதைத்தான் சொல்லுகிறார்.. உங்க பொண்ணுக்கு என்ன செய்யணுமோ செய்ய விடுங்க.. அவள் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்.. என்னை எதுவும் கேட்காதீங்க.. நாங்க நிம்மதியா இருக்கணும்னா.. அது அவ கையிலே தான் இருக்கு.. இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாதுங்கிற ரேஞ்சிலே தான் பேசினார்.. பாவம்..", தன் மச்சானிடம் தன் தலைவிதியை நொந்து கொண்டார் ராஜ்குமார்.
"தப்பு நம்ம பேரிலும் தான் இருக்கு அண்ணா அதை மறந்துட்டிங்களே.. நீங்களும் சரி இவரும் சரி.. அந்தத் தருணத்தில் கல்யாணி அண்ணியைத்தான் நினைத்தீர்கள்.. அவர்கள் வாழனும்கிறதுக்காக, நம்ம பசங்களை உயிரோடு பலி கொடுத்திடீங்களே.. அது உங்க ரெண்டு பேத்துக்கும் தப்பாத் தோணலையா.. இதை நான் சொன்னா என் கிட்டே தான் சண்டைக்கு நீங்க வருவீங்க..", என்று அங்கலாய்த்துக் கொண்டாள் ருக்கு.
ஒரு வித ஆயாசமும் எரிச்சலும் ராஜேந்திரனை கவ்விக் கொண்டது..'சே என்ன இது.. நாம் ஏதோ நல்லது செய்யப் போய் இப்படி ஆகிப் போனதே.. சும்மா இந்த ருக்கு வேற ஏத்தி ஏத்திக் கொடுக்கிறா.. கல்யாணியும் என் தங்கை தானே.. என்னவோ அவளை விரோதியை பார்க்கிறா மாதிரி இருக்கு இவளோடு செயலும் பேச்சும்.. இப்போ இதெல்லாமா முக்கியம் எங்கே போயிருப்பா வேதா?", என்று யோசித்தபடி,
"ராஜு முதல் வேலை வேதா எங்கே போனாளென்று கண்டுபிடிக்கிறதுதான் நமக்கு", என்றார்..
"எங்கே போயிருக்கப் போறா.. கழுதை கெட்டா குட்டிசுவர்.. அவ அப்பா வீட்டுக்கு போயிருப்பா.. எப்படியும் பொண்ணு ஓடிப் போச்சுன்னு சொல்லத்தானே வேணும் குமார் அண்ணங்கிட்ட.. அதை ஃபோன் செஞ்சு இப்பவே கேட்டுடுங்க அங்க வந்தாளான்னு?", என்று ஏதோ பெரிய ஐடியா சொல்லுகிற தோரணையில் ருக்கு சொல்லவும்.
"அடிப்பாவி..உனக்குக் கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா.. அவளும் உன்னோட நாத்தனார் மக தானே.. உன் பொண்ணுமாதிரி இல்லையா.. எப்படிடி.. நீ இவ்வளவு ஈசியா பேசுறே.. குமார் போலீஸ் கிட்ட போனா நம்ம கதி அதோ கதிதான்.. இது கூடவா புரியலை உனக்கு..”
“டொமஸ்டிக் வயலன்ஸ் கேஸ்லே முதல்லே உன் பையனையும் அப்புறம் நம்மையும் உள்ளே தள்ள முடியும் இது கூடவா உன் புத்திக்கு உரைக்கலே.. இன்னிக்கு நான் நிச்சயம் வருத்தப்படறேன் இப்படி ஒருத்தியை நான் கல்யாணம் செஞ்சதுக்காக..", என்று ருக்குவின் முகத்தில் காறி உமிழாத குறையாய் வார்த்தைகளைத் துப்பினார் ராஜேந்திரன்..
"அய்யோ போலீசா..என்னங்க.. இப்போ என்ன செய்யறது.. என் பையன் பாவம்ங்க அவனுக்கு ஒண்ணும் தெரியாது..", என்று உண்மை உறைக்கப் பதட்டம் ஆட்கொண்டது ருக்குவையும்.
பொறுமையிழந்தபடி, "இதோ பார் ருக்கு.ராஜு.. நீங்க சண்டை போடுறதை முதல்ல நிறுத்துங்க.. நிச்சயம் நாம் இந்த விஷயத்தைக் குமார் மச்சானுக்குச் சொல்லத்தான் வேணும்.. ராஜு..", என்று ராஜேந்திரனுக்கு நிலமையை எடுத்து உரைக்கத் தொடங்கினார் ராஜ்குமார்..
ஒரு வழியாய் ஒரு தீர்மானத்திற்கு வந்தார்கள்.. எப்படியும் உண்மையை அதிக நாள் மறைக்க முடியாதாகையால் முதலிலேயே சொல்லிவிடுவது நல்லது என்று நினைத்து ராஜேந்திரன் குமரேசனை அழைத்து முதலில் வேதா அங்கு வந்தாளா என்று விசாரித்தார்..
பதட்டத்துடன் ஏன் எதற்கு என்னவாயிற்று என்று விசாரித்த குமரேசனை உடனே கிளம்பி வரச் சொன்னார்.. நேரில் விஷயத்தைத் தெளிவு படுத்துவதாகக் கூறி ஃபோனை வைத்தார்..
இரவு வந்த பிரகாஷும் எதுவும் கண்டு கொள்ளாமல் “எனக்கென்ன வந்தது.. இது நீங்களா வர வழைத்துக் கொண்டது.. நான் தான் சொன்னேனே அவ இங்கே செட் ஆக மாட்டான்னு.. அதான் முதல் சான்ஸ் கிடைத்ததுமே ஓடிட்டா.. என்னை எதுவும் நீங்க இனி கேட்கத் தேவையில்லை..” என்று கறாராய் சொல்லிவிட்டு தன் அறைக் கதவை அடித்துச் சாத்தி மூடிக் கொண்டான்,
வேறு வழியின்றி அனைவரும் கனத்த இதயத்துடன் கலைந்தனர்..
அடுத்த நாள் அதிகாலையில் வந்து சேர்ந்துவிட்டனர் குமரேசனும் கல்யாணியும்.
வந்தவர்களுக்குக் காஃபி சிற்றுண்டியை எடுத்து வைக்குமாறு ருக்குவிடம் ராஜேந்திரன் சொல்ல,
"இத பாரு ராஜு,, நான் ஒன்னும் விருந்தாட வரலை.. நீ வான்னதும் என்னவோ ஏதோன்னு பதறிகிட்டு வந்திருக்கோம்.. எங்கே மச்சான் என் பொண்ணு.. பாவம் அது வாயில்லாப் பூச்சி.. என் புள்ளைய என்ன செஞ்சிங்க சொல்லிடு மருவாதையா.. இல்லாட்டி நடக்குற கதையே வேற, ", என்று தன் மைத்துனனிடம் நயமாய் மிரட்டினார் குமரேசன்.
கலங்கிய கண்களுடன் தன் அண்ணியைப் பார்த்த கல்யாணி, "அண்ணி என்னாச்சு என் பொண்ணுக்கு.. அவ வருத்தபடற மாதிரி இங்கே ஏதாவது நடந்துச்சா.. மாப்பிள்ளை எங்கே காணோம்..", என்று சுற்றும் முற்றும் பிரகாஷைத் தேடினாள்.
"ஏய் கல்யாணி நீ சும்மா இரு.. ராஜு சொல்லு என்னத்தான் நடந்துச்சு.. எங்கே போனா என் பொண்ணு..", என்று மீண்டும் கேட்டவரிடம் அந்தக் கடிதத்தை நீட்டினார் ராஜேந்திரன்..
கடிதத்தைப் படிக்கப் படிக்க முகம் கருத்தது கோபத்தில் விழிகள் சிவக்க அந்தக் கடிதத்தை விட்டெறிந்தார்....அதைப் பொறுக்கிய கல்யாணியும் அதைப் படித்து முடித்தாள்..
"சொல்லு மச்சான்.. இப்போ என்ன செய்யுறதா உத்தேசம்.. என் பொண்ணு வாழ்க்கையைக் கெடுத்து அவளை விரட்டியாச்சுது.. இனி என்ன அடுத்து உன்னோட மகனுக்குக் கல்யாணம் செய்யப் போறீயா.. அதையும் சொல்லிப்போடு.. கேட்டுக்கறேன்.. நான் கேணைய்யன்னு நினைச்சு தானே இதெல்லாம் செஞ்சீங்க..”
“இந்த மாதிரி கையைப் பிசையுறதை அன்னிக்கே செஞ்சி வாயை மூடிட்டு இருந்திருந்தா என்னோட பொண்ணு வாழ்வு பொழைச்சிருக்குமே..எங்கே போனாளோ என்ன ஆனாளோ.. பாவம்.. கையிலே காசு இல்லாம என்ன செய்யுதோ என்னோட புள்ளை..", என்று ரௌத்திரமாய்க் கத்தி கூச்சலிட்டார் குமரேசன்..
"இல்லை குமாரு.. தங்கச்சி மகளாச்சே எனக்கும்.. நான் போய் அப்படிச் செய்வேனா.. நல்லா இருக்கணுங்கிற எண்ணத்திலே தான் கல்யாணம் செஞ்சு வச்சேன்.. ஆனா என் பையன் இப்படிக் காலை வாரிவிடுவான்னு நினைக்கலைப்பா..”
“இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை.. எனக்குக் கமிஷனரை நல்லாத் தெரியும் நான் அவர் கிட்ட சொல்லி தேடுகிறதுக்கு ஏற்பாடு செய்ய்றேன்..", என்று சமாதானம் பேசினார்..
"இதுக்கு மேலே போலீசு வேற இங்கன வரணுமா உன் குடும்பத்து யோக்கியதையை ஊருக்கு எடுத்து சொல்ல.. வேலைகாரியாமில்லே வேலைக்காரி.. என் புள்ளைய அப்ப என்ன கொடுமை செஞ்சிருந்த இந்த மாதிரி மனசு விட்டு எழுதியிருக்கும்.. கூப்பிடுவே உன் மவனை.. இன்னிக்கு அவனை வகுந்துடறேன்.. படிச்சுப் பட்டம் வாங்கிட்டா அவன் என்ன பெரிய ஆளா.. பொண்டாட்டியை வச்சி வாழத் துப்பில்லை.. இவனெல்லாம் படிச்சு என்னத்தைக் கிழிச்சுப்புட்டான்..”
அனைத்தையும் கேட்டபடியே மாடியிருந்து இறங்கிய பிரகாஷ், தன் லேப்டாப் மற்றும் பிற உபகரணங்களை எடுத்துக் கொண்டு எதைப் பற்றியும் லட்சியம் செய்யாமல் வெளியே போகக் கிளம்பினான்..
"டேய் பிரகாஷு.. என்னடா செஞ்ச என் பொண்ணைப் படுபாவி.." என்று அவனை நோக்கி பாயப் போன குமரேசனை, கையைப் பிடித்துக் கட்டுப்படுத்தினர் கல்யாணியும் ராஜேந்திரனும்..
"என்னங்க.. கொஞ்சம் வாயை மூடுங்க.. நீங்க இப்ப எதுக்கு மாப்பிள்ளையை வம்புக்கு இழுக்கறீங்க..", என்று நயமாய் ஆரம்பித்தாள் கல்யாணி..
"ஏய் சும்மா இருடி.. இவனை.. மொதல்லே வெட்டணும்.. தெரியாம போச்சு.. இல்லாட்டி சீவிருப்பேன் இவனை..", என்று பற்களைக் கடித்தவரை அலட்சியமாய்ப் பார்த்த பிரகாஷ்,
"மாமா இப்ப எதுக்குக் கூச்சல் போடுறீங்க.. முதலும் கடைசியுமா சொல்லுறேன் கேட்டுக்கோங்க.. எனக்கு வேதா மேல் எந்த விதமான விருப்போ வெறுப்போ இல்லை..அவ எனக்குச் சரி வர மாட்டா.. அவளோட வாழ்க்கை முறை வேறு என்னோடது வேறு..”
“இதைத்தான் நான் கல்யாணத்தன்னிக்கே தலைப்பாடா அடிச்சிகிட்டேன்.. அப்போ யாராவது கேட்டிங்களா?.. இப்ப அவ வேண்டாம்னு போனவுடனே இங்கே வந்து ஏன் கத்தி கூப்பாடு போடறீங்க?..நடந்த விஷயத்துக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.. எதாவது நியாயம் கேட்கணும்னா உங்க மச்சானோட சட்டையைப் பிடிங்க..", என்று சொல்லிவிட்டுக் கார் சாவியை எடுத்துக் கொண்டு போய்விட்டான்..
"டேய் ராஜு.. உன் பையன் பேசுறது சரியில்லைடா..", என்று ஆரம்பித்தவரை மேலே பேசவிடாமல் அழுத்தியது ஒங்கியொலித்த கல்யாணியின் குரல்.
"நிறுத்துங்க.. போதும்.. நாம ஊருக்குக் கிளம்பலாம்.. போதும்.. இதுக்கு மேலே என்னால் இதையெல்லாம் தாங்கிக்க முடியாது.. இன்னிக்கு உங்க பொண்ணோட வாழ்க்கை சீரழிஞ்சு போச்சுன்னா அதுக்கு முக்கியக் காரணம்.. நீங்க தான்..", என்று கத்தினாள்.
ஒரு கணம் ஒன்றும் புரியாமல் விழித்தவர், "ஏய் என்னடி உளருரே..?", என்று மிரட்டினார் குமரேசன்..
ஆனால் அசராமல் அழுத்தம் திருத்தமாய், "ஆமாம், நீங்க தான் காரணம்.. உங்க பேராசைத் தான் காரணம்.. அவ கேட்டாளா.. இப்படிப் படிச்ச பட்டணத்து மாப்பிள்ளை வேணுமின்னு.. இல்லையே.. கதிர் தம்பியை கல்யாணம் செய்யத் தயாராதானே இருந்தா..”
“நீங்க தான் வீம்புக்காக யார்கிட்டயோ போட்ட பந்தயத்துலே ஜெயிக்க ஒரு வெளினாட்டானை கொண்டு வந்திங்க.. அவன் முகத்தில் கரியை பூசிட்டு ஓடிட்டான்.. அப்புறம் என் அண்ணன் பாவப்பட்டுத் தன் மகனின் விருப்பம் இல்லாம அவனை அவளுக்குக் கட்டி வச்சார்.. என்ன செய்ய.. இப்போ எல்லோரும் அனுபவிக்கிறோம்".., என்று சொல்லிவிட்டு தன் அண்ணியைப் பார்த்து,
"அண்ணி.. உங்களுக்கும் உங்க மகன் நல்லா வாழணுமின்னு நிச்சயம் ஆசை இருக்கும்.. அதே மாதிரி தான் எல்லாப் பொண்ணைப் பெத்தவங்களுக்கும் இருக்கும்.. இங்கே என்ன நடந்துது ஏது நடந்துதுன்னு நான் கேட்கமாட்டேன்.. எனக்கு என் அண்ணன் மேல் நிச்சயம் நூறு சதவிகிதம் நம்பிக்கை இருக்கு..”
“ஆனா அவ இங்கே பொருந்தி வாழ நீங்களோ பிரகாஷோ எந்தளவுக்கு ஒத்துழைச்சீங்கன்னும் என்னால கேட்கமுடியலை... என் பொண்ணு நிச்சயம் நல்லவ.. அவளைக் கடவுள் காப்பாற்றுவார்.. அவ நிச்சயம் தப்பான முடிவுக்குப் போயிருக்க மாட்டான்னு என் மனசு சொல்லுது.. அதோ காரணமா அவ போயிருக்கா.. அவளா வருவா.. அதுவரை.. அவளை எதுவும் யாரும் சொல்லாதீங்க.. போலீஸ் கீலீஸ் எதுவும் வேணாம்..", என்று கையைக் குவித்தாள் கல்யாணி.
பதறினார் ராஜேந்திரன்.. தன் தங்கை..பாவம்.. இவள் இன்னமும் எவ்வளவு கஷ்டப் படுவாள் என்று நினைத்து,
"கல்யாணி.. வேணாம்மா..மொதல்லே நான் வேதாவை கண்டுபிடிக்க ஏற்பாடு செய்யுறேன்", என்றவரைத் தடுத்த கல்யாணி..
"அண்ணா.. வேணாம்.. அவ ஏதோ ஒரு வைராக்கியத்தோட தான் போயிருக்கான்னு தோணுது.. பொருத்து பார்ப்போம்.. பெத்தவ எனக்கு நிச்சயம் தெரியும் என் பொண்ணோட மனசு..நீங்க கவலைப்படாம இருங்க....", என்று சொல்லிவிட்டு,
குமரேசன் பக்கம் திரும்பி, "என்னங்க கிளம்புங்க நாம போவலாம்..", என்று சொல்லிவிட்டு வாசல் பக்கம் போனாள்..
வேறு வழியில்லாமல் முதல் முறையாய் குமரேசனும் மனைவியைப் பின் தொடர்ந்தார்.. அவருக்கும் மனசு இடிக்கத் தொடங்கிவிட்டது.. தானே தன் மகளைப் பாழுங்கிணற்றில் தள்ளி விட்டோமோ என்று..
இவற்கள் யாரும் அறியா ஒரு விஷயத்தைக் கல்யாணி அங்கு வருமுன் செய்திருந்தாள்.. தன் தங்கையிடம் பேசி என்ன விஷயம் என்று முன் கூட்டியே அறிந்திருந்தாள்..
அதனாலேயே தன் கணவனின் கோபத்தை மேலும் மேலும் தூண்டாமல் விஷயத்தைப் பெரிதாக்காமல் எப்படிச் சுமுகமாய் முடிப்பது என்பதிலேயே அவள் உள்ளம் உழன்றபடி இருந்தது..