கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பொம்மலாட்டம்...அத்தியாயம் 24

Latha S

Administrator
Staff member
அத்தியாயம் 24

சத்யா தன் மாமாவின் வீட்டில் தங்க வந்து பத்து நாட்கள் கழிந்து விட்டது.. இங்கு வந்ததற்குப் பிறகு அவள் பெற்றோரின் வீட்டுப் பக்கம் கூடக் காலை வைக்கவில்லை.

அவள் வந்த இரண்டாவது நாளில் அவர்கள் வெளி நாடு பறந்த விஷயத்தை அறிந்திருந்தாலும் ஒப்புக்காகக் கூட அவர்களைக் கண்டு பேச பிரயத்தனம் செய்யவில்லை.

ரேவதிக்கும் தன் மகள் தன் அண்ணன் வீட்டில் இருப்பது அவர் மூலமாகவே தெரிந்திருந்தது.. ராஜ்குமாரோ அதைப் பற்றிக் கேட்க கூடப் பிடிக்காமல் தங்கள் பிரயாணத்திலேயே கவனத்தைச் செலுத்தினார்.

கிளம்பும் முன் அண்ணனிடமும், அண்ணியிடம் சொல்லிக் கொள்ளத் தன் கணவனுடன் வந்த ரேவதியின் குரல் தன்னறையில் இருந்த சத்யாவுக்குக் கேட்டாலும் அவள் கீழே இறங்கி வரவில்லை.. அதற்கேற்றாற் போல அவரும் தன் மகளைப் பற்றி விசாரிக்கவும் இல்லை.

தன் அண்ணி ருக்மணி மீது கொஞ்சம் மனத்தாங்கலுடன் தான் இருந்தார் ரேவதி.. ஆரம்பத்திலிருந்தே சத்யாவுக்கு இந்த விஷயத்தில் ஆதரவு கொடுப்பதில் கடுப்பாகவே இருந்தவர்.. இன்று அனைத்தையும் தெரிந்தும் அவளைத் தாங்கிக் கொண்டிருப்பது எரிச்சலாகவே அவருக்கு இருந்தது.. அதனாலேயே ஒப்புக்குச் சொல்லிவிட்டு விடை பெற்று சென்று விட்டனர்.

சத்யாவுக்கோ இதைப் பற்றியெல்லாம் எந்தவித கவலையும் இல்லை.. பெற்ற பெண்ணைப் புரிந்து கொள்ளாத பெற்றவர்களை நினைத்து இனி ஏங்குவதில் பயனில்லை என்று தன் வாழ்க்கையைப் பார்க்கத் தொடங்கி இருந்தாள்..

அத்தை ருக்மணியின் அக்கறையும், பிரகாஷின் ஆதரவும் இருக்கும் வரையில் அவள் எதற்குக் கவலைப் பட வேண்டும்.

நாட்கள் உருண்டு மாதங்களாக,

அன்று காலையில் அலுவலகம் செல்ல பரபரப்பாகத் தயாராகிக் கீழே வந்தவள், ஏற்கனவே அங்கே ராஜேந்திரனும், பிரகாஷும் காலை உணவில் மும்முரமாக இருந்தவர்களைக் கண்டு புன்னகைத்தவளுக்கு உள்ளுக்குள் சற்று ஏமாற்றமாகவே இருந்தது.

தன் பெற்றவர்களின் வீட்டில் காலை உணவை மூவரும் சேர்ந்தே உண்ண வேண்டும் என்று கண்டிப்பை காட்டுவார் ரேவதி.. மூவரும் ஒன்றாக அமர்ந்து அன்று என்ன செய்யப் போகிறார்கள் என்று பேசி, சிரித்தபடி தங்கள் பணிகளுக்குச் செல்லுபவர்கள் மீண்டும் இரவு உணவில் சேர்ந்தே அமருவார்கள்.

ரேவதி வீட்டில் இருக்கும் இல்லத்தரசி என்பதால் அவருக்குத் தன் மகளுடன் மற்றும் கணவனுடன் இந்த நேரத்தைச் செலவிடுவதில் அவருக்கு அதில் ஒருவித மகிழ்ச்சி. அந்தச் சந்தோஷத்தை மற்ற இருவரும் முடிந்தவரைக் கொடுத்து விடுவார்கள்.

சத்யா புகுந்த வீட்டுக்குப் போன பின்னாலும்.. அங்கேயும் கதிர், காலையோ இல்லை மாலையோ ஒரு உணவாவது அவளுடன் உண்ணும் வழக்கத்தை மேற் கொண்டிருந்தான்..

மற்ற நேரங்களில் அப்பத்தாவாது அவளுக்காகக் காத்து கொண்டிருப்பார்.. புதுப் பொண்ணு.. சங்கடப்படும்.. இல்லையென்றால் வெட்கப்பட்டுச் சாப்பிடாது என்ற விளக்கத்தையும் சொல்லுவார் அதுக்கு.

ஏனோ அவளுக்கு இன்று அந்த நினைவு தோன்ற.. அந்த நினைவு தந்த சுகத்தில் அவள் இதழ்கள் புன்னகைத்தாலும் அதில் ஒரு வித ஏமாற்றமே தொக்கி இருந்தது.

தன் சிந்தனையைச் சட்டெனக் கட்டுக்குள் கொண்டு வந்தவள்..

“ஹாய் மாமா.. ஹலோ பிரகாஷ்.. குட்மார்னிங்க்..” என்றாள் மென்மையாக.

“ஹாய் சத்தி.. வா.. பிரேக்ஃபாஸ்ட் ஜாயின் பண்ணிக்கோ.. வி ஆர் ஆல்மோஸ்ட் டன்..” எனச் சிரித்தான்.

“ம்…” எனத் தலையாட்டியபடிபே அங்கே மேஜையில் மூடி வைக்கப் பட்டிருந்த பாத்திரங்களைத் திறந்து பார்த்தவள் உதட்டைப் பிதுக்கினாள்.

“ம்ப்ச்..” அவளையறியாமல் அவள் உதடுகள் உச்சரிக்க..

“வாம்மா சத்யா.. என்னாச்சு.. சுடச்சுட இட்லியும், மல்லி சட்னியும் இருக்கு பாரு..”

“ம்.. இல்லை மாமா.. ஒரே ஃபோர்.. இங்க டெய்லி டெய்லி காலைல பிரேக்ஃபாஸ்ட் இட்லிதானா?..” வெறுப்புடன் முகத்தைச் சுளித்தாள்.

“ஏம்மா.. இட்லிக்கு என்ன குறைச்சல்.. பிரகாஷ் கூட நாலு இட்லி சாப்பிட்டானே?.. ஒண்ணும் சொல்லலையே.. இது ஆரோக்கியமான உணவும்மா.. என்னை மாதிரி சக்கரை வியாதிக்காரனெல்லாம் இப்படி லைட்டாத்தான் சாப்பிடணும்.. எனக்கு இந்தச் சப்பாத்தி அயிட்டமெல்லாம் ஒத்துகொள்ளாதும்மா.. பாரு மணியை.. அவனும் தினமும் கலர்புல்லா சட்னியெல்லாம் வேற செய்யறான்..”

“உவ்வே.. இதைப் பார்த்தாலே எனக்கு வாந்தி வருது மாமா.. என்ன கலர்புல்.. வேஸ்ட் பெல்லோ.. நாலு நாளா இதே டிபன்.. என்ன ஒரு நாள் தக்காளி சட்னிங்கறான்.. இல்லை புதினா.. இல்லை வெள்ளையா தேங்காயை அரைச்சி வைச்சிடறான்.. எதையாவது சொன்னா.. ஒரு சாம்பார்ன்னுங்கற பேரில கழனி தண்ணியைக் கலக்கி வைச்சிட்டு.. ஏய் மணி.. மணி.. இங்க வா..” எனத் தன் குரலை உயர்த்தினாள் சத்யா.

சமையல் கட்டிலிருந்த மணியோ தன் பெயர் ஏலம் விடுவதைக் கண்டு பதறியடித்து ஓடி வந்தான்.

“அய்யா.. என்னங்கையா?.. கூப்பிட்டடீங்களா?.. அய்யாவுக்கும், தம்பிக்கும் காஃபி ரெடிங்கய்யா.. கொண்டாராட்டா?..” எனப் பதவியாகக் கேட்டவனை.. தொடர்ந்து..

“ஹாய்.. குட்மார்னிங்க் டியர்ஸ்..” என்ற ருக்மணியின் குரலும் கேட்டது.

காலையிலேயே முழு மேக்கப்புடன்.. மெல்லிய புடவை மேனியைச் சுற்றியிருக்க.. ருக்மணி வாய் நிறைய லிப்ஸ்டிக்குடன் அங்கே வந்தார்.

“மணி.. பிரேக்ஃபாஸ்ட் ரெடியா?..” என அதிகாரமாகக் கேட்க..

“ஆமாங்கம்மா.. உங்களுக்கு நீங்க கேட்டபடி ஓட்ஸ் கஞ்சி ரெடிங்கம்மா.. டேபிள்ல தயாரா வைச்சிட்டேன்.. அதே மாதிரி புருட் பவுலும் இருக்கும்மா..” என்ற மணிக்கு..

“தட்ஸ் குட்.. இங்க என்ன வேடிக்கை பார்த்திட்டு இருக்கே.. போ சாருக்கு காப்பி எடுத்து வைக்கலை..”

“இதோம்மா.. இங்க யாரோ கூப்பிட்டாங்களா..(கத்தினார்கள் என்று சொல்ல முடியுமா)?.. அதான் போட்டது போட்டபடி ஓடி வந்தேன்..” என்றவனோ மீண்டும் சமையலறைக்குள் நுழைந்து கொண்டான்.

“அத்தை.. நான் தான் அவனைக் கூப்பிட்டேன்.. என்ன அத்தை இது.. இந்த வீட்டில எப்பவும் இட்லி தானா.. வெரைட்டியா எதுவும் கிடையாதா?.. எங்கம்மா.. தினம் எதோ புதுசா செய்வாங்க..

அத்தோடு இது என்ன அத்தை.. நீங்க எல்லாரும் ஒண்ணா டிபன் சாப்பிட மாட்டீங்களா?..” குற்றம் சொன்னாள்.

ஒரு கணம் தலை நிமிர்ந்த ராஜேந்திரன் சத்யாவை ஆழ்ந்து பார்த்து விட்டு.. ருக்மணியைப் பார்த்தார்.. இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறாள் என்ற ஆவல் அவர் பார்வையில் இருந்தது.

“உ ம்.. உங்கம்மா வீட்டில உட்கார்ந்து இருக்கா.. அவளுக்கு இப்படி விதம் விதமா சமைச்சி புருஷன் வயத்தையும், பொண்ணு மனசையும் நிரப்பணும் ஆசை.. அதெல்லாம் என்னால முடியாது?..” என்றவள்..

“அத்தோடு.. எனக்கு இதுக்கெல்லாம் டயமும் இல்லை.. இன்ட்ரெஸ்ட்டும் இல்லை.. உங்க மாமா, உங்கம்மாவோடு அண்ணா.. இவங்கலெல்லாம் முன்னாடி அந்தப் பட்டிக்காட்டுல இருந்து வந்தவங்க.. இப்படி விதம் விதமா சமைச்சி திண்ணு பழக்கப் படுத்தி விட்டாங்க அவங்க வீட்டுல..

“என்னால அதெல்லாம் முடியாதடிம்மா.. நான் பார்ன் அண்ட் பிராட்டப் ஃப்ரம் சென்னை.. இதுக்கெல்லாம் எனக்கு நேரமில்லைன்னு தான் நான் சமையல்காரனை அப்பாயிண்ட் பண்ணி வைச்சிருக்கேன்..”

“ஒன் மோர் திங்க் சது குட்டி.. நான் உங்கம்மாவை தப்பா சொல்லறேன்னு நினைக்காதே.. பணம் இருந்தால் மட்டும் போதாது அதை அணுபவிக்கவும் தெரியணும்.. உங்கம்மா.. அதான் எங்க அண்ணி.. தானே செய்யறேன்னு எதையாவது இழுத்து விட்டுட்டு வீட்டிலேயே கிடப்பாள்.. அவளுக்கு லைஃபை ஜாலியா எஞ்சாய் பண்ணத் தெரியாது..” குத்தலாகச் சொன்னவர்..

“அத்தோடு இங்கெல்லாம்.. அவரவர் நேரம் அவரவர் விருப்பப்படி சது குட்டி.. உனக்கு இதெல்லாம் தெரியாததா என்ன?.. அந்தப் பொண்ணு வேதா இருந்தப்போ என்னவோ எல்லோரும் காலையில ஒண்ணா சாப்பிடலாம்ன்னு சொல்லி உங்க மாமாவை கையில போட்டுக்கப் பார்த்தா..” என்று எதையோ சொல்லப் போக..

“போதும் ருக்கு.. அந்தப் பொண்ணு என்னைக் கையில போட்டிட்டு.. ரொம்ப நல்லா வாழ்ந்துட்டா.. யாரை போட்டுக்கணுமோ அந்தச் சாமர்த்தியம் இருந்திருந்தா இன்னிக்கு எங்கையோ இருந்திருப்பா.. இப்போ தன் வாழ்க்கையை தொலைச்சிட்டு கண்காணாத இடத்தில இப்போ கஷடப்பட்டுட்டு..” ராஜேந்திரன் எரிச்சலாக..

“ஆரம்பிச்சாச்சா.. பொழுதன்னிக்கும் விட்டா உங்க மருமக புராணம் தான்.. இப்ப என்ன நடந்திடுச்சு.. அவளை யார் போகச் சொன்னா.. அவளா எதையாவது நினைச்சிட்டு வினையை இழுத்து விட்டா..”

“அம்மா.. லீவ் இட்.. சத்யா டிபன் முடிஞ்சா சொல்லு.. கிளம்பலாம்..” என்ற பிரகாஷோ..

“மணி.. வேர் இஸ் தெ காஃபி..” என்று உள்ளே பார்த்து குரல் கொடுத்தான்.

அதுதான் பிரகாஷ்.. தன் வேலை முடிந்ததா.. அவ்வளவுதான்.. ஏதோ பசிக்கு சாப்பிட வேண்டும்.. எதையும் மேம்போக்காய் எடுத்துக் கொள்ளும் மனப் போக்கு..

“தம்பி.. உங்க காஃப்பி..” என்றபடி அங்கே மீண்டும் வந்தான் மணி.

“ஏன் மணி.. தினம் எதுக்கு இட்லியை வைக்கிற?.. வேற ஏதாவது டிரை பண்ணக் கூடாதா?.. அப்படியே இட்லிதான் வைச்சாலும்.. அதுக்குத் தோதா நாட்டுகோழியடிச்சு குழம்பு, இல்லை ஏதாவது நான் வெஜ், மீன் அயிட்டம் வைச்சாக்கூட ஓ.கேதான்.. இந்தச் சட்னி வாயில வைக்க முடியலை.. வாந்தி வருது.. நல்லாவே சமைக்க மாட்டீங்களோ?..” எனச் சத்யா அவனிடம் மீண்டும் பாயத் தயாரானாள்.

ஏன் அன்று அப்படி வாயை விட்டாளோ சத்யா அவளுக்கே தெரியவில்லை.. ஒருவேளை அவளுக்கு அன்று அப்பத்தா எழிலுடன் சேர்ந்து இட்லிக்கு வைத்த பதார்த்தம் ஞாபகம் வந்ததோ..

“சத்யாம்மா.. எனக்கு இவ்வளவு தான் சமைக்கத் தெரியும்.. நான் இந்த வீட்டில் பத்து வருஷமா சமையற்காரரா வேலை செய்யறேன்.. இது வரை இப்படி யாரும் என்னைக் குறை சொன்னதில்லை..

“இன்னொன்னு உங்களுக்கு மறந்து போச்சா.. நீங்களும் இந்த வீட்டு பொண்ணுதானே?.. உங்க அத்தைக்கு நான்வெஜ்ஜெல்லாம் அவ்வளவா பிடிக்காது.. இப்போ இரண்டு வருஷமா வீட்டில வெறும் சைவ சமையல் தான்.. உங்க மாமாவுக்கும் சுகர், பி.பி.. கொலஸ்ட்ரால் எல்லாம் இருக்குன்னு அவங்க நான்வெஜ்சை கட் பண்ண சொல்லியாச்சு.. விருந்தாளிகள் வந்தா அதெல்லாம் செய்வோம்.”.

“அது சரி.. உங்களுக்கு வேதாம்மா மாதிரி சமையல் கட்டுப் பக்கம் வந்திருந்தா இல்லை தெரியும் சமையல்காரன் பாடு எவ்வளவு கஷ்டம்ன்னு.. ஒவ்வொருத்தருக்கு ஒண்ணு ஒண்ணு சமைக்க நான் என்ன பத்து கையா வைச்சிருக்கேன்..”

“சாருக்கு ஒண்ணு, மேடம்க்கு வேறு.. இதில தம்பிக்கு எப்பவும் சிம்ப்பிளா.. காரமில்லாத சாப்பாடு.. இந்த லட்சணத்தில் உங்களுக்கு வேறு நான் காலங்கார்த்தால நாட்டு கோழி குழம்பு வைக்கலைன்னு குறையைப் பட்டா?.. மீன் குழும்பு யார் செய்வது? இந்தப் பத்து வருஷத்தில பெரிய மேடம் கூட என் சாப்பாட்டைப் புகார் சொன்னதில்லை..” எனக் கழுத்தை நொடித்துக் கொண்டான்.

“ஏய் மணி.. என்ன ரொம்ப வாய் நீளுது.. ஆப்டர் ஆல் நீ இங்க ஜஸ்ட் சமையல் தான் செய்யறே?.. என்னவோ பெரிசா விருந்து ஆக்கிப் போட்டா போல இப்படி அலுத்துக்கறே.. விருந்து செய்யணும்ன்னாலும் செய்யறதுக்குத்தானே நீ இருக்கே.. அதுக்குத்தானே உன்னை இங்க வேலைக்கு வைச்சிருக்கு.. பின்னே சும்மாவா காசு கொடுக்கறாங்க?..” என்று மணியைக் கோபமாகத் திட்டத் தொடங்கிய சத்யா..

“அத்தை என்ன இது.. இந்த மணி இப்படிப் பேசறான்?.. கொஞ்சம் கூட மரியாதையே தெரியலை.. நான் நார்மலா கேட்டதுக்கு இந்த எகிறு எகிறினா?..”

“மணி.. என்ன கொஞ்சம் கூட மரியாதை இல்லாம இப்படிப் பேசறே?.. என்னாச்சு.. எனக்குப் பிடிக்கலைன்னா சரி.. சத்யாவுக்குப் பிடிச்சா சமைக்க வேண்டியதுதானே.. சின்னப் பொண்ணு.. வாய்க்கு ருசியா சமைக்கலைன்னா எப்படி?..

“இதில எதுக்குத் தேவையில்லாமல் அந்த வேதாவை இழுக்கறே.. கொஞ்சம் வாயை அடக்கிக்கோப்பா.. அவளுக்கு என்ன வேண்டுமோ சமைச்சு கொடு.. அதிகப்படி வேலைன்னா சம்பளத்தை ஏத்த சொல்லறேன்.. வேணுமின்னா இன்னொருத்தியை ஹெல்ப்புக்கு வைச்சுக்கோ.. நீயே ஏன் கஷ்டப்படறே?.. ஏதோ ஒண்ணு பார்த்துக்கோ..” என்று ருக்மணி முடித்து விட்டார்.

அதென்னவோ ருக்மணிக்கு சற்று வேலை ஆட்களிடம் தன்மையாகவே பழகுவார்.. அவருக்குத் தெரியும்.. தன்னால் இது எல்லாவற்றையும் செய்ய முடியாது என்று.. அதனாலேயே அவர்கள் செய்வதைப் பொருத்துக் கொண்டு போய் விடுவார்.

தாங்க முடியாது சமயங்களில் அவர்களைத் திட்ட வேண்டி வந்தாலும், அவர்களுக்குச் சட்டென்று சம்பள உயர்வைக் கொடுத்து அவர்களைப் பிடித்து வைப்பதில் கை தேர்ந்தவர்.

“அய்யா.. அம்மா எனக்கு எவ்வளவு சம்பளம் ஏத்திக் கொடுத்தாலும்.. இல்லை இன்னொருத்தரை உதவிக்கு வைச்சாலும் நான் இன்னும் பத்து நாள்ல இங்கிருந்து கிளம்புறேன்..”

“ஹேய் மணி என்னப்பா.. என்ன இப்படிக் குண்டை தூக்கி போடறே.. சத்யா சொன்னதுக்கா வேலையை விடறே.. ஏய் அவ சின்னப் பொண்ணுப்பா.. ஏதோ சாப்பாட்டு ஆசையில ரெண்டு வார்த்தையை விட்டுட்டா.. எடுத்துச் சொன்னா புரிஞ்சிக்கப் போறா?.. அதுக்கெல்லாம் கோச்சிட்டு வேலையை விட்டா எப்படி..” என்ற ருக்மணி..

“ராஜ்.. என்ன இது.. நீங்க மணிக்கு எடுத்து சொல்லுங்க?..” என்றாள் பதற்றத்துடன்..

இந்த அத்தை ஒரு சமையல்காரன் வேலையை விட்டு நிக்கிறேன்னு சொன்னதுக்கு எதுக்கு இப்படிப் பதட்டப்படணும்..ஆப்ட்டரால்.. ஜஸ்ட் குக்.. இவன் இல்லைன்னா வேறு..

ராஜேந்திரனுக்கு ருக்மணியைப் பற்றி நன்கு அறிந்திருந்தவர்.. ருக்மணிக்கு எடுத்ததற்கெல்லாம் அடுத்தவர் உதவியை நாடியே வாழ்பவர்.. மணி இப்படிச் சொன்னதும் தன் மனைவியை நினைத்துச் சிரித்துக் கொண்டார்.

“என்ன மணி.. அப்போ நீ தீர்மானிச்சாச்சா.. எப்ப ஊருக்கு கிளம்பணும்?..” என்று சாவதானமாகக் கேட்க..

“ஆமாங்கய்யா.. நான் ஏற்கனவே உங்ககிட்ட சொன்னேனுங்களே?.. நீங்க அம்மாகிட்ட சொல்லலையாங்க?.. அம்மா.. என்னோடு மகன் என்னை எங்க ஊருக்கே கூப்பிடறான்ம்மா.. அங்கே சின்னதா ஹைவேஸ்ஸில ஒரு ஹோட்டல் ஆரம்பிக்கிறான்..

“சின்னக் கடைதான்.. என்னையும் உதவிக்குக் கூப்பிடறான்மா.. நான் உழைச்சது போதும்.. ஆளுங்களை மேற்பார்வை பார்த்திட்டா போதுமாம்.. நாந்தான் முதலாளியா கல்லாவிலே உட்காரணும்ன்னு சொல்லிட்டான்.. அதான் ஊருக்கே திரும்பி போகலாம்ன்னு..”

தலையைச் சொறிந்த மணியைக் கண்ட ருக்மணிக்கோ அவன் தலையைத் திருகலாமா என்ற ஆத்திரம் வந்தது.

இப்படி அவகாசம் கொடுக்காமல் ஓடினால் யார் சமையல் பொறுப்பை எடுத்துக் கொள்வதாம்?..

“யெஸ் டாட்.. இன் எ வே ஹி இஸ் ரையிட்.. லெட் ஹிம் கோ.. அவருக்கும் வயசாச்சு இல்லையா?.. முதலாளியா எஞ்சாய் பண்ணட்டும்.. ஓ.கே.. மணி.. குட்.. இந்த மாசம் முடிஞ்சவுடன் நீங்க கிளம்புங்க.. என் சார்பா நான் ஒரு ஒன் லாக் கொடுக்கிறேன்.. உங்க கடைக்கு இன்வெஸ்ட் பண்ணிக்கங்க..” என்ற பிரகாஷ்.. அத்துடன் பேச்சு முடிந்தது என்ற பாவனையில் எழுந்தவன்..

“சத்யா.. கிளம்பலாமா?.. ஏற்கனவே லேட்டாச்சு..” என்ற பிரகாஷ் வாசலை நோக்கி நடக்க.. சத்யா அவசரம் அவசரமாக டிபனை ஒதுக்கி வைத்து விட்டு.. தன் கையைக் கழுவி விட்டு அவனைப் பின் தொடர்ந்தாள்.

மணியும் நன்றி சொல்லிவிட்டு உள்ளே சென்று விட ருக்மணியோ தன் கணவனை நோக்கினாள்.

“என்ன ருக்கு.. இன்னிக்கு கிளப்புக்கு கிளம்பலை.. என்னாச்சு.. அப்படியே இடிஞ்சி போய் உட்கார்ந்திருக்க.. ஓ.. மணி போகப் போறான்னா?.. பாவம் எத்தனை நாள் தான் அவனும் உழைச்சி கொட்டுவான் நம்ம குடும்பத்துக்கு.. நல்ல ஆப்பர்சுனிட்டி.. போகட்டுமே.. உன் சகோதரன் மாதிரி நல்ல மனசோடு வாழ்த்தி அனுப்பு..” என்றபடி அவரும் எழுந்து கொண்டார்.

“ம்.. உங்களுக்கென்ன.. சமையல்காரன் கிடைக்கறது என்ன அவ்வளவு ஈசியா?.. நான் இவங்களெயெல்லாம் செலெக்ட் பண்ணி.. இப்போதான் கொஞ்சம் வருஷமா.. நம்ம வீட்டுக்கு ஏத்தா மாதிரி டிரையின் பண்ணி வைச்சிருக்கேன்.. அகெய்ன்.. இன்னொருத்தன்.. இந்தச சத்யா பொண்ணு சொன்னதில ஒருவேளை கோவிச்சிக்கிட்டு..” என்று இழுத்த ருக்மணியைக் கண்டு சிரிப்புதான் வந்தது ராஜேந்திரனுக்கு..

“ருக்கு.. ஈஸி.. அந்தப் பொண்ணுக்காக நீ இவ்வளவு சம்பளம் கொடுக்கறதை விட்டுட்டு போவானா?.. நாட் அட் ஆல்.. நிஜமாவே அவன் ஊருக்குத்தான் போறான்.. ரெண்டு மாசம் முன்னால வேதா இருக்கும் போதே எனக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டான்..

“நம்ம வேதாதான் நான் இருக்கேன் மாமா.. நான் பார்த்துக்கறேன்.. ஜஸ்ட் ஹெல்ப்புக்கு தமிழரசி போதும்.. வள்ளியும் இருக்கா.. அத்தைக்குச் சொல்லி டென்ஷன் ஆக்க வேண்டாம் என்றாள்.. நான் தான் அவள் போன பின்னால் சொல்ல மறந்து விட்டேன்..”

“ஓ.. அப்போ.. மாமனும்.. மருமகளும் கூட்டா..இடியட்.. எனக்குச் சொல்லணும் கொஞ்சம் கூடத் தோணலையா அவளுக்கு.. ஸ்டுபிட் கேர்ள்.. என் கிட்ட இன்ஃபார்ம் பண்ணி இருந்தா இத்தனை நாளுல நான் எங்க லேடீஸ் கிளப் மூலமா ஏதாவது ஏற்பாடு பண்ணி வைச்சிருப்பேன்..”

“இப்படி லாஸ்ட் மினிட் டென்ஷன்ல நான் சமையல்காரனுக்கு எங்க போறது?.. அந்த மகாராணி வந்து சமைச்சி போடுவாளாமா?.. கொஞ்சம் கூடப் புத்தியில்ல.. இந்த அழகுல இந்தப் பிரகாஷ் வேறு அந்த மணிக்கு ஒன் லாக் கேஷாம்.. என்ன கிப்ட்டா?.. இவனை..”

“ச்சீ.. புலம்பாதே.. இதிலெல்லாம் அவனுக்கு நல்ல மனசுதான்.. தொழிலாளிகளை எப்படி வளைக்கணும்ன்னு அவனுக்குத் தெரியும்.. அவங்களுக்கு நல்லதுதான் செய்வான்.. அதைப் போய்..”

“அது சரி.. உனக்குத் தெரியாத ஆளுங்களா?.. ஒரு சமையல்காரரை பிடிக்க முடியாதா?.. அப்படி இல்லைன்னா என்ன?.. இந்த வீட்டில ரெண்டு பெண்கள் இருக்கீங்க.. ஒரு நாலு நாளைக்குச் சமைக்க முடியாதா என்ன?..” எனத் தோளை குலுக்கியவர்.. அவளைக் கண்டு கொள்ளாமல் அங்கிருந்து அகன்றார்.

“சமைக்கிறதா.. நானா..அய்யோ..” தலையில் கையை வைத்துக் கொண்ட ருக்மணி.. தன் செல்போன் ஒலியில் திடுக்கிட்டு அதை எடுத்தவர்.. கிளப்பிலிருந்து அழைப்பு என்றவுடன் அதை எடுத்தவர்..

“யெஸ் ருக்மணி ராஜேந்திரன் ஹியர்.. இதோ ஹாஃபனவரில் அங்கே இருப்பேன் மிஸர்ஸ்.. மங்களம்..” என்றபடி தன் போனை எடுத்தவர்.. தன் காரை நோக்கி விரைந்தார்.

மணி அவர்கள் வீட்டுச் சமையல் பணியில் இருந்து விலகி பத்து நாளானது.. ருக்மணிக்கு சரியான சமையலாள் கிடைக்காமல் எரிச்சலாக இருந்தது..

இரண்டு நாட்களாக அவர்கள் லேடீஸ் கிளப்பிலும் வேலைகள் அதிகரித்து இருந்தன.. தேர்தல் சமயம் வேறு அங்கே.. இந்த முறையும் பிரிசிடென்ட் போஸ்ட்டுக்கு ருக்மணியை நிறுத்தி வைத்திருந்தனர்.. அதன் தொடர்பாக வேலைகள் கூடியிருக்க.. இங்கே வீட்டிலேயோ வேலை அவளுக்கு நெட்டி முறித்தது.

மேல் வேலை செய்யும் தமிழரசியைச் சமைக்கச் சொல்லலாம் என்றாலும் காலையில் அவள் நேரத்திற்கு வர மாட்டாள்.. அவள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, பெயின்ட்டராக இருக்கும் கணவனையும் அனுப்பி விட்டு ஒன்பது மணிக்கு முன்பு வருவதற்கு மறுத்து விட்டாள்.

வேண்டுமானால் மதிய உணவை சமைத்துத் தருவதாகச் சொல்லியவள்.. இரவு உணவுக்கோ முடியவே முடியாது என்று ஒரேடியாக மறுத்து விட்டாள். மணி இருந்தபொழுதும் அவள் தான் பாத்திரங்கள் துலக்கி.. அவருக்குக் கடைகளில் காய்கறிகள், மளிகை சாமான்கள் வாங்கித் தருபவள்.. கடந்த ஒரு வருடமாகக் காய்கறிகளையும் வெட்டி கொடுத்துச் சமையலில் உதவிக் கொண்டிருந்தாள்.

இப்பொழுதும் தமிழரசி சமையலுக்கு வேண்டி காய்கறிகளை வெட்டி எடுத்துப் பிரிட்ஜில் வைத்தாலும்.. ருக்மணியால் அரைத்துக் கரைத்து சமையல் செய்பதற்குள் ஓய்ந்து போய்த் திணறிக் கொண்டிருந்தார்.

அன்றும் அரக்கப் பரக்க எதையோ கொட்டி கிளறிக் கொண்டிருந்த ருக்மணி சத்யா தயாராகிக் கீழே வருவதைக் கண்டவர்..

“சது குட்டி.. இங்கே வாம்மா..” எனச் சமையலறையில் இருந்து அழைத்தார்.

“என்ன அத்தை..” என்றபடி வந்த சத்யாவை..

“சதும்மா.. கொஞ்சம் இந்தப் பிரட்டை டோஸ்ட் பண்ணிடேன்.. அப்படியே கொஞ்சம் சாலட் நறுக்கி வைச்சிடும்மா.. எனக்கு ஓட்ஸ் போட்டாச்சு.. உங்க மூணு பேருக்கும் பிரட் டோஸ்ட்தான்.. காப்பியை ஏற்கனவே கலந்து ப்ளாஸ்க்கில் ஊத்தி வைச்சாச்சு..”என்றவர்..

“நான் போய் டென் மினிட்ஸ்ல ரெடியாயிட்டு வரேன்டா.. கிளப்புக்குச் சீக்கிரமா கிளம்பணும்..”

“ஓ.. மை காட்.. அத்தை பத்து நாளா இதே காஞ்சி போன ரொட்டியா?.. லீவ் இட் அத்தை.. நானும், பிரகாஷும் ஆபிஸ்ல சாப்பிட்டுகிறோமே?..”

“உங்க இஷ்டம்.. சரி.. மாமாவுக்கு ரெடி பண்ணிடு..”

“ஏன் அத்தை இட்லி மாவு இருந்தா நாலு ஊத்தி வைச்சிடுவேனே..”

“அது இருந்தா.. நானே செய்ய மாட்டேன்னா?.. அந்தத் தமிழரசிகிட்ட சொல்லி சொல்லி என் தாவு தீருது.. கழுதை.. மாவு அரைக்க டயமில்லையாம்.. கடையில வாங்கி வைக்கலாம்ன்னா.. அது கட்டை இட்லி மாதிரி இருக்குன்னு உங்க மாமா வேறு..” என்று சலித்தபடி தன்னறைக்குள் ஒட..

அதற்குள் ராஜேந்திரனும், பிரகாஷும் வந்துவிட.. அவர்களுக்கு வேறு வழியில்லாமல் பிரட்டை வாட்டிக் கொடுத்தாள் சத்யா.

“என்ன சத்யா.. ஒரே தீஞ்ச வாடை வருது.. ரொம்ப டோஸ்ட் பண்ணிட்டியா?..”

“இருக்கலாம்.. சாப்பிடுங்க.. நோ அதர் வே..” எனக் கூலாகச் சத்யா சொல்ல.. ருக்மணியும் வந்து அவர்களுடன் கலந்து கொண்டார்.

“ருக்கு.. சமையலுக்கு ஆள் கிடைக்கலையா?.. தமிழரசி கிட்ட சொல்லி வைக்கறதுதானே.. அந்த வள்ளி பொண்ணு கிட்டேயும் கேட்டு பாரு..’

‘ம்.. அந்தக் கொடுமையை ஏன் கேட்கறீங்க.. எல்லாம் கேட்டு பார்த்தாச்சு.. மதியம் வேணா சமைப்பாளாம்.. காலையில டயம் கிடையாதாம்.. ராத்திரிக்கு முடியாதாம்.. வேணுமின்னா மதிய சாப்பாட்டையே திங்க சொல்லறா?.. கொழுப்பெடுத்தவ.. மத்தியான சோத்தை தின்னா வெயிட் போடாதா?.. அத்தோடு நம்ம வீட்டில் நைட் டிபன்தானே ராஜ்..”

“வள்ளியையும் கேட்டு பார்த்தாச்சு.. அவளுக்குப் பெருக்கி, துடைக்கவே பொழுது சரியா இருக்காம்.. யாரையாவது பார்த்து சொல்கிறேன்னு சொன்னா..” என அலுத்துக் கொண்டே தன் கஞ்சியை வாயில் ஊற்றிக் கொண்டு சாலட்டை கொறித்தார்.

“அப்ப நீயே வேறு ஆளைப் பாரேன்மா..” என்ற பிரகாஷிற்கு..

“நான் என்ன பார்க்கலைன்னா நினைச்சே.. தமிழரசி கிட்ட சொல்லியாச்சு.. தோட்டக்காரன், இஸ்திரிக்காரன், வீட்டை கீளினிங்க் பன்ணரவங்க, நம்ம டிரைவர் எல்லாருக்கும் தகவல் சொல்லி இருக்கு.. நம்ம வாட்மேன் பொண்டாட்டியைக் கூடக் கேட்டாச்சு.. ஒரு பிரயோஜனமுமில்ல.. ஆளாளுக்கு ஒரு காரணத்தை ரெடியா வைச்சிருக்காங்க..”

அப்பொழுது வேகவேகமாக அங்கே ஓடி வந்தாள் தமிழரசி

“அய்யோ.. சாப்பிட ஆரம்பிச்சிட்டீங்களா?.. இன்னிக்குச் சீக்கிரம் வந்து உங்களுக்கு ஒரு உப்புமாவாது கிண்டிக் கொடுக்கலாம்ன்னு ஒடி வந்தேன்..”

“உப்புமாவா?..” அங்கே மூன்று ஜீவன்கள் அலறினர்.. எப்பொழுதும் போலப் பிரகாஷ் வாயைத் திறக்கவில்லை.

“அத்தை அதுக்கு உங்க காஞ்ச ரொட்டியே மேல்..” சத்யாவோ முகத்தைப் பாவமாக வைத்துக் கொள்ள.. இப்பொழுது பிரகாஷ் உள்பட அனைவரும் சிரித்தனர்.

கடந்து போன நாட்களில் அந்த வீட்டில் சிரிப்பை கண்டிராத தமிழரசிக்கும் இப்பொழுது சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.

“பாப்பாக்கு உப்புமா பிடிக்காதா?.. நல்லா இருக்கும்மா.. அது கூடச் செய்யறே விதத்தில செஞ்சா நல்லாத்தான் இருக்கும்..” எனத் தமிழரசி வாயைத் திறந்தாள்.

தமிழரசி சொல்லுவது சரிதான்..சத்யாவுக்கு உப்புமாவைக் கூட ருசியாக விதவிதமாகச் செய்து கொடுத்த தன் அன்னை ரேவதி நினைவில் வர.. அவள் நாக்கு அதற்கு ஏங்கத் தொடங்கியது..

ருக்மணியோ, “சது.. டூ பாட்.. என்னையேவா?..” எனச் சிரித்து விட்டு..

“ஹேய் நாளையிலிருந்து உங்களுக்கு என் சாப்பாட்டிலிருந்து விடுதலை.. இன்னும் பத்து நாளைக்கு உங்களுக்கெல்லாம் நம்ம வீட்டு பக்கத்தில ஏதோ மெஸ் இருக்குன்னு எங்க கிளப்பில சொன்னாங்க.. அங்க ஏற்பாடு பண்ணியிருக்கேன்..” என்றவரை..

நிம்மதியுடன் பார்த்தனர் மற்றவர்கள்.

“அம்மா.. இன்னிக்கு எங்கூட வந்தீங்கன்னா.. நம்ம அசோசியேஷன்ல ரிஜிஸ்ட்டர் பண்ணிடலாம்.. இல்லைன்னா.. நானே ஃபார்ம் வாங்கிட்டு வர்றேன்.. துட்டு கட்டி ரெஜிட்டர் பண்ணிட்டா.. அவங்க ஆளுங்களை அனுப்புவாங்களாம்..”

“ஹேய்.. தமிழ்.. என்ன இது புதுசா அசோசியேஷனா?..” சத்யா கேட்க..

“ஆமாங்கம்மா.. அம்மா கிட்ட அன்னிக்கே சமையலுக்கு ஆளு வேணுமின்னு சொன்னாங்களா.. அப்போ சொல்லியிருக்கேன்.. இப்ப எல்லாம் இந்த மாதிரி வீட்டு வேலை, இப்படி மத்த வேலைகளுக்குன்னு “ஹோம் செர்வீசஸ்’ந்னு ஒரு சங்கம் ஆரம்பிச்சி இருக்காங்க..

“இது ஆரம்பிச்சி கொஞ்சம் வருஷமாவே இருக்கும்மா.. நம்ம ஏரியாவுக்குன்னு ஒரு கிளை இருக்கு.. இதுல நம்ம வீட்டில் இன்னும் ரெஜிஸ்ட்டர் பண்ணலை.. நாங்கெல்லாம் இந்த வீட்டில ரொம்ப நாளா இருக்கோம் இல்லையா?.. நாங்க கூட அதில உறுப்பினர்கள்தான்.. எந்த வீட்டில வேலை செய்யறோம்.. என்ன வேலைன்னு சொல்லி கார்ட் வாங்கி இருக்கோம்..”

“எங்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா எங்களைச் சங்கம் பார்த்துக்கும்.. வேற வீட்டுக்கு வேலைக்குப் போகணும்ன்னாலும் நாங்க அங்க சொல்லி வைச்சா அவுங்க ஏற்பாடு பண்ணுவாங்க.. இனிமே புதுசா யாராவது வேலைக்கு எடுத்தா அவங்ககிட்ட சொல்லிட்டு முறைப்படி எடுக்கணுமாம்..” என்று விளக்கிய தமிழரசியை ஆச்சர்யமாகப் பார்த்தாள் சத்யா.

“இதென்ன புதுசா இருக்கு.. அத்தை உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா?.. இத்தனை நாளா இல்லாமல் புது வழக்கம்..”

“தெரியும்மா சத்யா.. நான் கூட, ஏன் உங்கம்மாவும் அதில் ரெஜிஸ்ட்டர் பண்ணியிருக்கோம்.. இது ஜஸ்ட் ஒரு பார்மாலிட்டியா அப்போ இருந்தது.. நம்ம ஏரியா போலீஸ் ஸ்டேஷன்ல அவங்க பேர் எல்லாம் தகவலா சொல்லி இருந்தோம்.. அப்போ எல்லாம் இது ஒரு பாதுகாப்புக்குன்னு செஞ்சோம்.”.

“இப்போ அந்த அசோசியேஷன் ரூல்ஸ் மாறி இப்போ செர்வன்ட்ஸ்க்கு அவர்கள் இப்படி வேலைக் கொடுத்து.. இப்படியெல்லாம் செய்யராங்களாம்.. நாம் எந்த வேலைக்குன்னு கேட்டாலும் ஆளை உடனே நமக்கு ஏற்றவாறு அனுப்புவாங்களாம்.. நான் திரும்பி கார்ட் ரெனியூ செய்யலையா.. அதான் எனக்கும் தெரியலை..” என்ற ருக்மணி..

“தமிழ்.. இன்னிக்குப் பணத்தைத் தரேன்.. அப்படியே லெட்டர் ஒண்ணு எழுதி தரேன்.. நீயே கார்ட்டை புதுப்பிச்சிட்டு சமையலுக்கு ஆள் வேணும்ன்னு சொல்லிடு..” என்று சொன்னவர்.. அத்தனை நாட்களாகச் சமையலறையில் சீந்துவாரின்றிக் கிடந்த கார்ட்டையும், ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்தார் ருக்மணி.

அடுத்து வந்த நாட்களில் அந்த ஹோம் செர்வீசஸில் இருந்து இரண்டு ஆட்கள் அவர்கள் வீட்டை வந்து பார்த்து விட்டு.. இல்லாத கேள்விகளையெல்லாம் ருக்மணியிடம் கேட்டுவிட்டு.. பத்து நாட்களுக்கு இன்னும் அலைக் கழிக்க விட்டுவிட்டு ஒருவாறாக.. சமையலுக்கு அச்சம்மா என்ற பெண்ணொருத்தியை அனுப்பி வைத்தனர்.

முதல் நான்கு நாட்கள் வாய்க்கு ருசியாகவே சமைத்தாள் அச்சம்மா.. ஆனாலும் ஏனோ ருக்மணிக்கு அவளைப் பிடிக்கவில்லை.. அது என்னவோ அந்த அலை பாயும் கண்களைக் கண்டவருக்கு அவளை நம்புவதற்குத் தோன்றவில்லை..

ஏஜென்சியில் இருந்து அனுப்பி இருக்கிறவர்கள் நம்பிக்கையானவர்களாகத்தான் இருப்பார்கள் என்று பொறுப்பை ஒப்படைத்து விட்டு தன் கிளப்பின் பணியில் சுற்றிக் கொண்டிருந்தவர் எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போட்டாள் அச்சம்மா.

ஆம்.. அச்சம்மா.. அப்ஸ்கான்ட் ஆகிப் போனாள்.. போனவள் சும்மா போகாமல்.. வீட்டின் பூஜையறையில் இருந்த வெள்ளிப் பாத்திரங்களையும், சமையலறையில் இருந்த வீட்டுச் செலவுகளுக்கு வைத்திருந்த பணத்தையும் திருடிக் கொண்டு ஓடி இருந்தாள்.

தமிழரசி கடைக்குப் போயிருக்கும் நேரத்தில் காவலாள் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு அவள் திருடியது அவர்களுக்கு அதிர்ச்சி என்றாலும்.. ருக்மணி மாலையில் வந்தவர் விஷயமறிந்து உடனே அந்தச் சங்கத்தில் புகார் கொடுத்து விட்டு வேறு நம்பகமான ஆளை அனுப்பி வைக்கச் சொல்லியவர்.. போலீஸ்க்கும் தகவல் கொடுத்து விட்டார்.

இப்பொழுது அடுத்து வந்த காந்தம்மாவோ இரண்டு நாட்களுக்கு மேல் அங்கே நிற்கவில்லை.. அவள் சமையல் வாயில் வைக்க வழங்கவில்லையென்றாலும்.. அவளே தன்னால் இப்படித் தனித்தனி சீக்காளிகளுக்குச் சமையல் எல்லாம் செய்ய முடியாது என்று சொல்லி நின்று விட்டாள்.

வெறுத்துப் போன ருக்மணி, மறுபடியும் சத்யாவின் உதவியோடு மீண்டும் காய்ந்து போன ரொட்டியை வைத்துச் சமாளிக்க.. இந்தமுறை சத்யாவை கூட வைத்துக் கொண்டு தன் பொறுப்பில் சமையலை எடுத்துக் கொண்டு தொடங்க.. ஆனால் இரண்டே நாளில் படுக்கையில் படுத்து விட்டாள்..

மீண்டும் ருக்மணி சங்கத்தை விடாது படையெடுத்து அனுசுயா என்பவளைப் பிடித்து வந்தார்.

இந்த முறை அனுசுயா கொஞ்சம் நாட்கள் தாக்குப் பிடித்தார்.. அவள் சமையல் நளபாகமாக இருந்தாலும்.. அவளிடம் ஒரு சின்னக் குறை இருந்தது..

அங்கே தான் பிரச்சனையும் ஆரம்பித்தது..

*********************************************************************************

Kothaisuresh

Well-known member
நாலு நாள் பட்டினி கிடந்தாதான் புத்தி வரும்.
 
Jothiramar

Moderator
Staff member
நல்லா வேணும் ஆஃப்ட்ரால் சமையல்காரின்னு தானே சொன்னாங்க வேதாவை
 
Mohanapriya M

Ipudiye nalu nal patini potta tan puthi varum intha family ku 😂
 
Top