"அம்மா.." என்று அலறிய ருக்மணிக்கு உடனே புரிந்து போனது கட்டாயம் தனக்கு எலும்பு முறிவுதான் என்று.. அப்படியே இடுப்பை பிடித்துக் கொண்டு பாத்ரூமின் தரையில் காலை நீட்டிக் கொண்டு அமர்ந்து விட்டார்..
வலி உயிர் போனது.. புசுபுசுவென்று வீங்கும் காலை பார்க்கப் பார்க்க பயம் வந்தது.. 'அய்யோ.. வேலைக்கார கழுதை.. பாத்ரூம் ஒரு வாரமா கழுவாமல் இருக்கேன்னு இந்த மனுஷன் சொன்னாரேன்னு குளிச்சிட்டு கழுவப் போனா.. இப்படி வழுக்கித் தொலைக்கணுமா?.. நல்லா லீவு போடறாளுங்க..'
மெல்ல டாய்லெட் கமோடை பிடித்துக் கொண்டு எழுந்து நின்றவருக்கோ வலியில் உயிரே போனது.. கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது..
அருகே ஸ்டாண்டில் இருந்த டவலை எடுத்து உடம்பைத் துடைக்க முயல.., முடியாமல் போனவர் அப்படியே மாட்டி வைத்திருந்த நைட்டியை மாட்டிக் கொண்டு காலை விந்தி விந்தி அறைக்குள் வந்து.., ஈர உடம்புடன் கட்டிலில் படுத்தவருக்கோ உயிர் போனது.. காலை நீட்டக் கூட முடியாத ரண வேதனை..
ருக்மணியின் அலறலில் என்னவோ ஏதோ எனப் பதறியபடி ஓடி வந்தாள் சத்யா..
அத்தனை நேரமாக அனுசுயாவிடம் கத்திக் கொண்டிருந்தவள்.. தட்டை விசிறி அடித்துத் தன் கோபத்தைக் காட்டி வாதாடிக் கொண்டிருந்த சத்யாவுக்கு அதெல்லாம் நொடியில் மறந்து போக.. அத்தை ருக்மணி எதற்கு இப்படி நம்ம பேரை சொல்லி கத்துகிறார் என அவர் அறைக்கு விரைந்தாள்.
"அத்தை.. என்னாச்சு.. எதுக்கு இப்படிக் கத்தினீங்க.. அங்க இந்த அனுசுயா என்னை ...."
"சத்யா.. அவளை விட்டுத் தொலை.. அவ எக்கேடு கெட்டு போகட்டும்.. முதல்ல உங்க மாமாவையோ இல்லை பிரகாஷ் இருக்கானான்னு பார்.. பாத்ரூம்ல வழுக்கி விழுந்தேன்.. கால் உடைஞ்சிப் போச்சா தெரியலை.. மயக்கமா வருதுடி.. யாரையாவது கூப்பிடேன்.." காலை பிடித்துக் கொண்டு அலறினாள் ருக்மணி.
"அய்யோ அத்தை.. பார்த்து குளிக்க மாட்டீங்களா?.. இதோ..ஒன் மினிட்..." என்றவள்...
மாடிப் படிகளில் தாவி ஏறியவள்... வேகமாகப் பிரகாஷின் அறையை அடைந்தவள்.. அங்கே ராஜேந்திரனும், பிரகாஷும் ஏற்கனவே அலுவலகத்திற்குச் சென்றிருக்க.. தன் தலையில் குட்டிக் கொண்டவள்.. அவர்களுக்காகக் காத்திருக்காமல் ருக்மணியிடம் மீண்டும் விரைந்தவள்..
அனுசுயாவை தேட.. அவளைக் காணாமல்.. திட்டிக் கொண்டே.., என்ன செய்வதென்று கையைப் பிசைந்து.. சட்டெனப் பின்னர்.. வாசலில் நின்று கொண்டிருந்த கார் டிரைவரின் உதவியுடன் ருக்மணியை ஏற்றிக் கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு விரைந்தாள்.
போகும் வழியிலேயே பிரகாஷுக்கும், மாமா ராஜேந்திரனுக்கும் விஷயத்தைச் சொல்லி விட்டு.. ருக்மணியை ஹாஸ்பிட்டலில் சேர்த்தவள் அப்படியே சோர்ந்து போய்த் தலையில் கைவைத்து உட்கார்ந்து விட்டாள்.
பதறியடித்து ராஜேந்திரனும், பிரகாஷும் அடுத்து அரை மணியில் ஹாஸ்பிடலுக்கு வந்து சேர்ந்தனர்.... உடனடியாக ருக்மணிக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு காலில் பாண்டேஜ் சுத்தப்பட்டது..
காலில் லேசான எலும்பு முறிவுதான் என்றும், அறுவை சிகிச்சை எதுவும் தேவைப்படாது என்றவர்கள்.. இரண்டு மாதமாவது பெட் ரெஸ்ட்டில் இருக்கச் சொல்லிவிட்டு.. காலை அசைக்காமல் வைத்துக் கொள்ளச் சொல்லியவர்கள்.. அவளை டிஸ்சார்ஜ் செய்து அனுப்பி விட்டனர்..
வீட்டுக்கு வந்து ருக்மணியைக் கீழே இருந்த அவள் அறையிலேயே படுக்க வைத்தவர்கள்.. அவளுக்குக் காலை நீட்டி வைக்க எல்லாவிதமான வசதிகளையும் பின்னர் செய்து கொடுத்தனர்.
இப்படியாக அன்றைய பொழுது ஹாஸ்பிட்டலில் கழிய.. இரவும் வந்தது.. ருக்மணியோ மருந்தின் அசதியிலும், வலியின் காரணமுமாகக் கண்ணை மூடிக் கொண்டாள்..
மற்ற மூவருக்கும் அப்பொழுதுதான் சோர்வே தெரிந்தது.. காலையிலிருந்து உண்ணாமல் இருந்தது இப்பொழுது பசியை வேறு கிளப்ப..
"சத்யா.. சாப்பாடு ஏதாவது இருக்கான்னு பாரும்மா.. அந்த அனுசுயா பொண்ணு ஏதாவது செய்து வைச்சிட்டு போயிருப்பா.. நீ போய் உங்க அத்தைக்கும் எடுத்து வா.. அப்படியே நாமும் சாப்பிட்டு விடலாம்.." என்றவர் குளித்து விட்டு வருவதாகச் சொல்லிவிட்டு பாத்ரூமுக்குள் புகுந்து கொள்ள.. பிரகாஷும் ஹாஸ்பிட்டலில் இருந்து வந்ததால்.. தானும் தயாராகி வருவதாகச் சொல்லிவிட்டு தன்னறைக்குச் சென்றான்..
சத்யா உறங்கும் ருக்மணியைப் பார்த்தவள்.. சற்று அவர் படுத்திருக்கட்டும் என்று எண்ணி.. பசி வயிற்றைக் கிள்ளியதையும் பொருட்படுத்தாமல்.. தன்னறைக்குள் நுழைந்து அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் குளித்து முடித்துத் தயாராகி வேகமாகச் சமையலறைக்குள் நுழைந்தாள்.
அங்கே சாப்பாட்டு மேஜை பார்த்தவளுக்கு அங்கே எதுவும் உண்பதற்கு வைக்கப்படவில்லை என்று அப்பொழுதுதான் புரிந்தது..
"அனுசுயா.. யூ.. இடியட்.." எனத் திட்டியபடி சமையலறைக்குள் சென்றால் அங்கே சமைத்த சுவடே இல்லை.. காலையில் சமைத்த பாத்திரங்கள் எல்லாம் சிங்கில் காய்ந்து நாற்றமடிக்கத் துவங்கியிருக்க.... மதியம் சமைத்து வைத்திருப்பதாகச் சொன்னதோ பிரிட்ஜில் எடுத்து வைக்கப்படாமல் ஊசிப் போய் நாற்றம் குடலைப் பிடுங்கியதில் கடுப்பானாள் சத்யா.
அப்பொழுதுதான் காலையில் அனுசுயாவுடன் நடந்த தகராறும் அவளுக்கு ஞாபகம் வந்தது..
'அடிப்பாவி.. எங்கிட்ட சண்டையைப் போட்டுட்டுச் சமைச்சி வைக்காம போயிட்டாளா?.. இருக்கட்டும்.. நாளைக்கு வராமல் எங்கே போயிடுவா?.. நாளைக்கு இருக்கு அவளுக்கு.. என்ன பேச்சு பேசினா என்னை.. நல்லா வாயடிச்சா.. முதல்ல நாளைக்கு ஏஜென்சிக்கு போன் போடணும்.. இவ வாயை அடைக்கலேன்னா பாரு.. கொழுப்பெடுத்தவள்..'
அனுசுயாவை திட்டியவளுக்கு.. வயிறு சத்தமிட்டு எதையாவது எனக்கும் கொட்டேன் என உறுமியது..
‘அய்யோ அத்தைக்கு வேறு ஏதாவது டிபன் கொடுக்கணுமே.. மாமா வேறு ஏற்கனவே சொல்லிட்டு போயிருக்காரு.. மாத்திரை போடணுமே.. என்ன செய்யலாம்..'
சட்டென மாவை எடுத்தவள்.. இட்லி தட்டில் இட்லியை ஊற்றி வைத்தாள்., மடமடவென்று ஏற்கனவே டப்பாவில் துருவி வைத்திருந்த தேங்காயை எடுத்தவள் சட்னியை செய்து விட்டு.. ருக்மணிக்கு நாலு இட்லியை எடுத்துக் கொண்டு போனாள்.
"என்னம்மா சத்யா.. ஓ.. இட்லி செஞ்சி வைச்சிருந்தாளா?.. சரி நீ உன் அத்தைக்குக் கொடும்மா.. மாத்திரை கொடுக்கணும்.." என்ற ராஜேந்திரன் ருக்மணியை மெல்ல பிடித்துக் கட்டிலில் உட்கார வைத்து முதுகுக்குத் தலையணையை அண்டைக் கொடுத்தார்.
"வேண்டாம்டா சது குட்டி.. நானே சாப்பிடறேன்.." என்ற ருக்மணி ஸ்டையிலாக ஸ்பூனில் இட்லியை கட் பண்ணி சட்னியுடன் வாயில் வைத்தவர்.. முகத்தைச் சுளித்துத் தூ வெனப் பிளேட்டில் அப்படியே துப்பி வைத்தார்,
"த்.. தூ.. கண்ணராவி.. அனுசுயா கவனிக்கலையா.. மாவுல உப்பு போட மறந்திருக்கா.."
அப்பொழுதுதான் சத்யாவுக்கு உரைத்தது.. அவர்கள் வீட்டில் மாவு புளித்து விடாமல் இருக்கும் பொருட்டு உப்பு இல்லாமல் அரைத்து வைக்கும் வழக்கம் என்று.. தேவைக்கேற்ப உப்பைக் கலந்து கொள்வார்கள்.. அய்யோ உப்பு போட்டுக் கலக்காமல் மாவை ஊற்றி விட்டேனே?..'
"சாரி அத்தை.. அனுசுயா இட்லி செஞ்சு வைக்கலை.. நான் தான் அவசரத்துக்கு ஊத்தி வைச்சேன்.. உப்பு கலக்க மறந்து போயிட்டேன் போல.. வேணா திரும்பி இரண்டு தோசை ஊத்தி கொடுக்கவா?.."
"ஓ.. பரவாயில்லை விடும்மா.. சட்னியைத் தொட்டு முழுங்கினால் எதுவும் தெரியாது.." என்ற ருக்மணி.. மெல்ல இட்லியை தன் வாயில் அடைத்துக் கொண்டார்.
"அது சரி சது பேபி.. அனுசுயா எதுக்கு ராத்திரி டிபன் செய்யாமல் போனா?.. காலையில் எதுக்கும்மா அப்படிச் சத்தம் போட்டுக் கொண்டு இருந்தே.. திரும்பவும் அவளோடு ஏதாவது தகராறு பண்ணியா?.. உங்க கத்தல்லதான் நான் அவசராவரசமா ஓடி வந்தேன்.. பாத்ரூமில சோப் தேய்ச்சி கழுவினது பார்க்காமல் வழுக்கி விழுந்து வைச்சேன்.."
கஷ்டப்பட்டு இட்லியை முழுங்கிய அத்தையைப் பார்த்து சத்யாவுக்குப் பாவமாக இருந்தாலும்.. அதை அப்படியே ஒதுக்கி..
"அதை விடுங்க அத்தை.. அவளுக்கு ரொம்ப நீங்க இடம் கொடுக்கிறீங்க.. அந்தத் திமிர்தான்.. காலையில ஆபிசுக்கு கிளம்பினேனா?.. இம்பார்டென்ட் மீட்டிங்க் என்னோட வெள்ளை சட்டையில அப்படியே ஸ்பிரே அடிச்சா புகையிலையே கொதப்பிட்டு.. அதான் சத்தம் போட்டேன்.."
"அதுக்காகவா அப்படிக் கத்தினே.. என்னவோ உடையற சத்தம் கேட்டுச்சே?.. அனுசுயா எதையாவது பாத்திரத்தை உடைச்சாளா என்ன?.." விடாமல் தோண்டி துருவிய அத்தை ருக்மணி மேல் எரிச்சல் எரிச்சலாக வந்தது சத்யாவிற்கு.
'இப்போ ரொம்ப முக்கியம் இந்த அத்தைக்கு.. என்னமோ விசாரணை கமிஷன் வைச்சிட்டு.. அவஅவளுக்கு இங்க பசி உசிரு போகுது.. வாயை மூடிட்டு கொடுத்ததைத் திங்காமல் தொணதொணக்குது..’ நினைத்ததை.. வெளியே சொல்ல முடியுமா..’
"ஆமாம் எனக்குக் கோவம் வந்தது.. தட்டுல பிசுக்கு போகாம தேய்ச்சி வைச்சிருக்கா.. அதான் ரெண்டு சத்தம் போட்டேன்.. எப்படி அழுக்கு பிளேட்டுல சாப்பிட முடியும்ன்னு.. அதுக்கு என்னை என்னமோ என்னை வாழாவெட்டியென்று எத்தையோ சொன்னா.. ஏஜென்சில கம்ப்ளைண்ட் பண்ணரேன்னு சொன்னேனா?..
"அடிப்பாவி.. குடியை கெடுத்தியே.. நான் தலையா அடிச்சிட்டேனே?.. அவகிட்ட வாயை கொடுக்காதேன்னு.. நமக்குத்தானே இப்போ நஷ்டம்.. ஏற்கனவே ஏஜென்சில நம்ம வீட்டு மேல ஏற்கனவே நல்ல பேர் இல்லை.. அய்யயோ.. இப்போ ஆப்பு வைச்சிட்டியே.. சமையல்காரியும் நின்னு தொலைச்சிட்டாளே?.. இப்ப என்ன பண்ணரது?.. தமிழரசி இருந்தாலாவது சமாளிக்கலாம்..” புலம்பத் தொடங்கிய ருக்மணி தலையைப் பிடித்துக் கொண்டாள்.
"ஷ்.. அம்மா.. என்னம்மா ஸ்டாப் திஸ் டிராமா.. வரவர இந்த வீடு என்னமோ சேரி மாதிரி ஆகிட்டு வருது.. அவள் போனா போகட்டுமே?.. வேற ஒருத்தியை அனுப்ப சொல்லுங்க.. இதுக்கு எதுக்கு ஓவரா ரியாக்ட் பண்ணுறீங்க..”
“முதல்ல சாப்பிட்டு முடிச்சிட்டு மாத்திரையைப் போட்டுட்டு படுக்கிற வழியைப் பாருங்க.. தேவையில்லாமல் வேலைக்காரிக்காகப் பார்த்து ஓடி வந்து இப்படிக் காலை உடைச்சி.. உங்களுக்குத் தேவையா இது.. ஐயாம் சிக் ஆஃப் திஸ் ஹவுஸ்.." சத்தம் போட்டான் பிரகாஷ் மிகுந்த எரிச்சலுடன்.
காலையிலேயே அவசர மீட்டிங்க் என்று சென்றிருந்தவன்.. இப்படி அவனது அன்னை கீழே விழுந்து விட்டார் என்று கேள்விப்பட்டு அனைத்து வேலைகளையும் ரத்துச் செய்து விட்டு ஹாஸ்பிடலுக்கு ஓடி வந்தவனுக்கு.. இப்பொழுதுதான் மூச்சு விட நேரம் கிடைத்தது..
இன்னும் அவனது உதவியாளனைக் கூப்பிட்டு அலுவலக நடப்புக்களை விசாரிக்காமல் இருந்தவனுக்கு இப்படி வேலைக்காரியைப் பற்றிய பேச்சுக்கள் வெறுப்பாய் இருந்தது.
சத்யாவுக்கும் எரிச்சலாகத்தான் இருந்தது.. ஏற்கனவே பசியின் காரணமும், அன்றைய அலுப்பும் சேர்ந்து சோர்வாக இருந்தவளுக்கு.. இப்பொழுது ருக்மணியின் பேச்சில் எரிச்சல் வந்ததில் எந்தவித தப்பும் இல்லை..
‘எப்பொழுதும் தன்னைச் சது குட்டி, பேபி என்றெல்லாம் நேரத்திற்கேற்ப ஆசையாக அழைப்பவர்.. இப்பொழுது அடிப்பாவி என்று அவர் வாயில் வரவும்.. என்ன இவர் ஓவர் ரியாக்ட் செய்கிறாரோ’ என்றே நினைக்கத் தோன்றியது.
"ஏன் டா சொல்ல மாட்டே.. உனக்கென்ன.. வேளா வேளைக்கு டேபிள்ல சோறு வந்தா போதும்.. அதுக்குப் பின்னாடி எத்தனை உழைப்புன்னு எனக்குத் தானே தெரியும்.. எதைப் பத்தியாவது அக்கறை இருக்கா.. இப்போ நானும் காலை உடைச்சிட்டு படுத்தாச்சு.. இதில குக்குமில்ல.. செர்வன்டும் இல்லைன்னா.. யார் எல்லாத்தையும் செய்யறதாம்.. பார்த்தே இல்ல.. பத்து நாளா வீடு எவ்வளவு நாறுதுன்னு.. உனக்கென்னடா தெரியும்..” என்று பிரகாஷை இரண்டு வசவுகளைச் சொல்லிவிட்டு.. சத்யாவிடம் திரும்பியவர்..
"சத்யா.. ஆனாலும் நான் சொல்லறேன்னு தப்பா எடுத்துக்காதேம்மா.. உனக்குக் கொஞ்சம் கூடப் பொறுமையில்லம்மா.. இப்படியா எடுத்தெறிஞ்சி பேசுவே.. நான் ஏற்கனவே படிச்சி படிச்சி சொன்னேனே.. ஏம்மா அவகிட்ட வம்புக்குப் போனே?.. இப்பப் பாரு அவ பாட்டுக்கு கிளம்பி போயிட்டா.. யாரால எல்லாத்தையும் பார்க்க முடியும் சொல்லு.. இதோ.. இட்லி கொண்டு வந்து கொடுத்தே.. அதுல உப்பு இருக்கான்னு கூடப் பார்க்கலை..”
"உன்னை அத்தை குத்தம் சொல்லறேன்னு நினைக்காதே.. உனக்கு நேரமில்லையேன்னுதான் நானும் சொல்லறேன்.. இன்னும் கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கனும்மா.. இப்பத்தான் புரியுது ஏன் ரேவதி உன்னைத் திட்டறான்னு.. இப்படிச் சின்னபுள்ளைத்தனமா எல்லாத்தையும் எடுத்தேன், கவிழ்த்தேன்னு இருந்தா எப்படி..”
“இப்போ யாரு அவதி படறது.. எதையாவது சொன்னா உனக்குக் கோபம் வந்து முழம் நீளத்துக்கு முகத்தைத் தூக்கி வைச்சிக்கறே?.. இன்னும் நீ வளரணும்.. இப்படியே போனா நாளைக்கே..”
எதையோ சொல்லிக் கொண்டே போன ருக்மணியை..
சத்யாவின் முகம் போன போக்கைப் பார்த்து, "விடு ருக்மணி.. போதும்.. நடந்தது நடந்து போச்சு.. இனி ஒருத்தரை ஒருத்தர் பேசி என்ன பிரயோஜனம்?.. இனி ஆக வேண்டியதைப் பார்ப்போம்..” என்று ருக்மணியின் வாயை அப்போதைக்கு அடைத்த ராஜேந்திரன்..
“ஹாங்க்.. ருக்கு.. நாளைக்கு அந்த ஏஜென்சிக்கே திரும்பவும் போனை போடு.. அதிகமா கேட்டாலும் பரவாயில்லை.. ஆளை ஏற்பாடு பண்ணச் சொல்லு.. இது என்ன புது வழக்கமா?.. இப்போ இதுக்லெல்லாம் சங்கம்ன்னு புதுசா ஒரு பிரச்சனையைப் பண்ணிட்டு..”
“அப்போ சத்யா.. ஒண்ணு செய்.. நீ பேசாமல் கொஞ்சம் நாள் லீவ் போட்டுட்டுக் கொஞ்சம் அம்மாவை பார்த்துக்கோ.. கொஞ்சம் கஷ்டம்தான்.. வேற வழியில்லையே?.. ஹெல்ப்பர்ஸ் கிடைக்கிறவரை அட்ஜஸ்ட் பண்ணிக்கோ..” என்ற பிரகாஷுக்கு வேறு வழியில்லாமல் தலையாட்டி வைத்தாள் சத்யா.
சத்யாவிற்கு சோதனை காலம் போலும்..
அடுத்து வந்த நாட்கள் சத்யாவிற்கு நரக வேதனையாக இருந்தது..
காலையில் ஆறு மணிக்கு எழுந்தால் காலை காப்பியிலிருந்து ஆரம்பித்து டிபனுக்கு ரெடி செய்வது.. பின்னர் மீண்டும் காப்பி.. மதிய லஞ்ச் தனக்கும், ருக்மணிக்கும்.. அதைத் தொடர்ந்து மாலை டீ.. ஏதாவது ஸ்நாக்ஸ்.. மீண்டும் மறுபடியும் இரவு டிபன் இப்படி..
பிரகாஷும், ராஜேந்திரனும் மதிய உணவை அலுவலகத்தில் உண்பதால் கொஞ்சம் பிரச்சனை தீர்ந்தது.
காலை உடைத்துக் கொண்ட மறு நாளே ருக்மணி ஏஜென்சிக்கு அழைத்து விட்டார்.
“ஹலோ.. நான் ருக்மணி ராஜேந்திரன் பேசறேன்..” எனத் தொடங்கியவர் சமையல்காரி அனுசுயா நின்று விட்டதாகவும்.. அவசரமாகத் தங்களுக்கு ஒரு சமையலாள் தேவை என்று சொன்னார்.
அவ்வளவுதான் அங்கே யார் எடுத்தார்களோ.. அவளை வாங்குவாங்கென்று வாங்கி விட்டார்கள்..
“ஹலோ ருக்மணி மேடம்.. உங்க மனசுல நீங்க என்ன நினைச்சிருக்கீங்க மேடம்.. உங்க வீட்டுக்கு ஏற்கனவே மூணு குக்ஸ் அனுப்பி வைச்சோம்.. ஒருத்தரையாவது சரியா ஹாண்டில் பண்ணிணீங்களா?..”
“என்னதான் நாங்க அனுப்புற ஆளுங்கள் நம்பிக்கையானவங்கன்னாலும், அவர்களை டெம்ப்ட் பண்ணுவதும் நீங்கள் தானே?.. வீட்டில் மீயூசியம் மாதிரி விலை மதிப்பான சாமன்களை வைத்தால் அவங்களுக்கு அது மேல ஆசை வருது.. இல்லாதவங்கள் முன்னாடி இப்படி நீங்களும் ஷோ காட்டி டெம்ப்ட் பண்ணாமல் விலையுர்ந்த பொருள்கள் எல்லாம் நீங்கதானே பாதுகாப்பா வைக்கணும்.. உங்க பக்கம் தப்பை வச்சிட்டு காணாமல் போச்சுன்னு அப்புறம் குத்தம் சொல்லி என்ன பயன் சொல்லுங்க மேடம்?..” என்று பதிலுக்கு ருக்மணியையே அதட்டத் தொடங்கியவள்..
“இப்போ பாருங்க.. எங்ககிட்டேயே நீங்க இப்படிக் குத்துவது மாதிரி பேசறீங்க.. சரியாதான் அவங்கெல்லாம் சொல்லி இருக்காங்க.. நீங்க பேசி பேசியே டார்ச்சர் கொடுக்கறீங்கன்னு.. இனி மேல் சரிபடாது மேடம்.. நாங்க உங்களோடு மெம்பர்ஷிப்பை கேன்சல் பண்ணலாம்ன்னு டிசைட் பண்ணிட்டோம்..” என்று அடுத்தக் குண்டை தூக்கிப் போட்டாள்.
‘அடப் பாவிகளா.. கடைசில் எல்லாத் தப்பும் நம்ம மேலேன்னு பேசுது இந்தம்மா.. இருக்கட்டும் இவர்களுக்கெல்லாம் கூடிய சீக்கிரமே வைக்கறேன்.. இப்போதைக்கு அடங்கிப் போவதை தவிர வழியில்லையே..’
“அய்யோ.. ப்ளீஸ் அப்படியெல்லாம் பண்ணிடாதேம்மா.. அது சின்னப் பொண்ணு.. ஏதோ கோபத்தில அப்படிப் பேசிடுச்சு.. அவளுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்மா.. எப்படியாவது அனுசுயாவையோ இல்லை யாராய் இருந்தாலும் பரவாயில்லை.. கொஞ்சம் அனுப்பி வையுங்க.. அப்படியே வீட்டு வேலைக்கு யாரையாவது அனுப்பினா நல்லா இருக்கும்.. எனக்கும் கால் உடைஞ்சி படுத்திருக்கேன்..” என ருக்மணி வேறு வழியில்லாமல் கெஞ்சத் தொடங்கினாள்.
“ம்.. சரி சரி.. போகட்டும்.. நடந்தது நடந்து போச்சு.. மேடம் எனக்குப் புரியுது உங்க கஷ்டம்.. ஆனாலும் நீங்களும் பேசறதுக்கு முன்னால கொஞ்சம் யோசிச்சு பேசணும்.. இப்போ பாருங்க.. யாரைக் கேட்டாலும்.. அய்யோ அந்த வீடா.. ரொம்ப வாயடிப்பாங்க.. எங்களால முடியாதுன்னு சொல்லி வைக்கிறாளுங்க..”
“உங்க வீட்டுக்குத்தான் நாங்களும் வீட்டு வேலைக்கு ஆட்கள் பார்த்திட்டுத்தான் இருந்தோம்.. இப்போ தான் உங்க நம்பர் வரிசையில முதல் இடத்தில இருக்கு.. ஆனா பாருங்க.. அதுக்குள்ள அனுசுயா இப்படிக் கம்ப்ளைன்ட் பண்ணப் போக.. இப்போ அவங்க யாருமே தயாராக இல்லை..
“எங்களை என்ன பண்ண சொல்லறீங்க.. எங்களுக்கு செர்வன்ட்ஸ்ஸோடு சேஃப்ட்டி முக்கியம் இல்லையா?.. அவங்க எல்லாரும் கூட இங்க மெம்பர்ஸ்தான்.. அவங்களையும் நாங்க பார்க்கணுமே?.. முதல் சாய்ஸ் நாங்க அவங்க டிமான்ட்சை மீட் பண்ணணும்.. அப்புறம் பார்க்கலாம் மேடம்..” என்று நாசூக்காகச் சொன்னவளோ போனை வைக்கப் போக..
“அய்யோ.. லைனை கட் பண்ணாதேம்மா.. எப்படியாவது தயவு பண்ணும்மா.. அனுசுயாவையே கொஞ்சம் வரச் சொல்லும்மா.. டபிள் பேமென்ட் வேணா கொடுத்திடறோம்.. ப்ளீஸ்.. கால் உடைஞ்சி கிடக்கிற பெரியவ கேட்கிறேன்… யோசிம்மா.. ஹாங்க்.. அப்படியே எனக்கு ஒரு ஹெல்ப்பர் வேணும்மா.. இன்னும் ரெண்டு மாசம் நடக்க முடியாதுன்னு சொல்லிட்டாரு டாக்ட்டரு.. முடிஞ்சா நர்ஸ் கிடைச்சாலும் சொல்ல முடியுமா?..
ருக்மணிக்கு இவ்வளவு பவ்யமும், பதவிசும் பேச்சில் எப்படி வந்ததோ..
“சரி மேடம்.. ஏதாவது பண்ண முடியுமான்னு பார்க்கிறேன்.. எங்க சங்கத்து மெம்பர்ஸ் கிடைக்கலைன்னா.. வேற பிராஞ்சிலிருந்து முடியுமான்னு டிரை பண்ணுறோம்.. ஆனா இப்பவே சொல்லிட்டேன் அதுக்கு நீங்க இன்னும் கொஞ்சம் ஜாஸ்தி அமௌண்ட் பே பண்ண வேண்டி வரலாம்.. எதுக்கும் தயாராக இருங்க.. எங்க ஹெட்கிட்டே பேசிட்டு உங்களுக்குச் சொல்லுகிறோம்..” என்றவர் பொட்டெனப் போனை கட் பண்ணினாள்.
‘இதுகளுக்கு வந்த நேரத்தைப் பாரு.. இவங்கெல்லாம் சங்கம் ஒண்ணு போட்டுட்டு கிடந்து ஆடுதுங்க.. இருக்கட்டும்.. இதைப் பத்தி முதல்ல நெக்ஸ்ட் லேடீஸ் மீட்டுல பேசணும்..’ என்ற போர்க்கால முடிவை எடுத்தார் ருக்மணி.
அடுத்த வந்த நாட்களில் காலம் போனதே தெரியவில்லை.. ஆனாலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை அவர்கள் வீட்டில்.
சத்யாவுக்குத்தான் வேலை நெட்டி முறித்தது.. மொத்த பொறுப்பையும் தனியாக எடுக்க வேண்டியதாக இருந்தது.. சமையல் வேலை.. அதைத் தொடர்ந்த மற்ற வேலைகள்.. போதாதற்கு இப்பொழுது ருக்மணியை வேறு கவனிக்க வேண்டியதாக இருந்தது.
அனுசயாவோ மீண்டும் அங்கே சமையலுக்கு வருவதாக ஒப்புக் கொண்டாலும் ஊர் திருவிழாவுக்குப் போவதால் அடுத்த மாதத்தில் தான் வர முடியும் என்று சொல்லி விட்டதாக ஏஜென்சி சொல்லிவிட்டனர்..
வேறு யாரும் சமையலுக்குக் கிடைக்கவில்லை என்றும், அவள் வரும் வரையில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும் சொல்லி விட்டனர்.. அதோடு நிற்காமல் ஊர்பட்ட கண்டிஷன்களையும் அவள் சார்பாகச் சொல்லி இருந்தனர்.
ருக்மணியைப் பார்த்துக் கொள்ள என்று டெம்ப்ரரியாகத் தோட்டக்காரனின் மனைவி காலை முதல் மாலை ஆறு மணி வரை என்று கவனிக்கத் தொடங்கி இருந்தாள்.
அவளே பாத்திரங்களைக் கழுவுவதுடன்.. வாரம் இரண்டு நாட்கள் வீட்டைக் கூட்டி பெருக்குவதாக ஒப்புக் கொண்டாள்.. அது கூட ருக்மணியின் நிலமையைப் பார்த்துவிட்டுப் பாவம் என்று சம்மதித்து இருந்தாள்.
அதில் கொஞ்சம் நிம்மதியான சத்யா இப்பொழுது சமையல் வேலையை மட்டும் செய்து கொண்டிருந்தாள்.
நான்கு நாட்கள் தொடர்ந்து சமைத்த சத்யாவோ.. அடுத்து வந்த நாட்களில் போர் அடித்துப் போய்ப் பாதி நாட்கள் வெளியிலிருந்து வரழைத்து அனைவருக்கும் உண்ணக் கொடுக்கத் தொடங்கினாள்.
ஹோட்டல் உணவு செரிக்காமல் ருக்மணிக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட.. தோட்டக்காரனின் மனைவி இல்லாத நேரத்தில் அவளுக்குப் பெட் பேன் வேலையும் சேர்ந்து கொள்ள மெல்ல முணுமுணுக்கத் தொடங்கினாள் சத்யா.
ருக்மணியே வெளி சாப்பாடு வேண்டாம் என்று சொல்லி.. தானே மெல்ல உட்கார்ந்தபடி காய்கறிகளை வெட்டித் தருவதாகவும், சத்யா வெறும் அடுப்பில் ஏற்றி இறக்கினால் போதும் எனத் தன் மருமகளைத் தாஜா செய்து அவளையே மீண்டும் சமைக்க வைத்தார்.
ருக்மணி கால் உடைந்த பதினைந்து நாட்களுக்குப் பிறகு, அன்று மீண்டும் அவர்களுக்கு ஏஜென்சியில் இருந்து அழைப்பு வந்திருந்தது.
ருக்மணியைக் கவனித்துக் கொள்ள ஒரு பெண்ணை அனுப்பி வைப்பதாகச் சொன்னவர்கள்..
வீட்டிலேயே இருபத்தி நான்கு மணி நேரமும் இருக்க வேண்டுமானால் அந்தப் பெண்ணுக்கு மூன்று வேளை உணவையும், மாச சம்பளமாக இருபத்தி ஐந்து ஆயிரமும், வெளியே செல்ல கன்வேயன்ஸ் அலவன்ஸும் கொடுக்கப் பட வேண்டும் என்று சொன்னவர்கள்..
பேஷண்டை கவனித்துக் கொள்வதைத் தவிர வேறு வித வேலைகளுக்கு அவர்களைக் கட்டாயம் பயன்படுத்தக் கூடாது எனக் கன்டிஷனாகச் சொன்னார்கள்.. வாரத்தில் ஒரு நாள் அவர்களுக்குக் கட்டாய ஓய்வும் கொடுக்க வேண்டும் என்று சொல்லி..
இதற்கெல்லாம் ஒத்துக் கொண்டால் நாளையே ஆளை அனுப்பி வைப்பதாகச் சொல்ல..
சந்தோஷமாக ஒத்துக் கொண்டாள் ருக்மணி.
அடுத்து வாரத்தில் இருந்து மீண்டும் அனுசுயாவை அனுப்புவதாகச் சொல்லி ருக்மணியின் நெஞ்சில் பாலை வார்த்தார்கள் அந்த ஏஜென்சிகாரர்கள்.
‘அப்பாடி.. இனிமேல் சத்யாவின் சமையலிருந்து விடுதலை’ என அந்தச் சமயத்தில் எண்ணாமல் இருக்க முடியவில்லை ருக்மணியால்.
காலையில் எழுந்ததிலிருந்து பரபரப்புடன் அமர்ந்திருந்தாள் ருக்மணி.