கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பொம்மலாட்டம்...அத்தியாயம் 37

Latha S

Administrator
Staff member
அத்தியாயம் 37



அதே சமயத்தில் அங்கே கதிரின் வீட்டிலோ..



அன்றைய நிகழ்வுக்குப் பின்னால் கதிருக்கும், சத்யாவிற்குள்ளும் ஒருவித தோழமை ஏற்பட்டிருந்தது.



இப்பொழுதெல்லாம் தினமும் காலையில் கல்லூரிக்கு.. ஒன்று கதிருடனோ இல்லை வெற்றியுடனோ சென்று கொண்டிருந்தாள் சத்யா..



கதிர் ஒரு சில தினங்களில் அவளுடன் தானும் கல்லூரிக்கு வருவான்.. அவனுக்கு அந்தக் கல்லூரியை விட அவனது மற்ற தொழில்களில் வேலை அதிகமாக இருந்ததால் பொறுப்பை வெற்றியிடமும், அவனுக்குத் துணையாகச் சத்யாவையையும் பார்த்துக் கொள்ள விட்டிருந்தான்.



சில தினங்களில் மாலை வேளையில் அங்கே செல்லும் கதிர் கல்லூரி கணக்கு வழக்குகளைப் பார்த்து விட்டு சத்யாவை அழைத்துக் கொண்டு வீட்டில் விட்டு விட்டுப் பிறகுதான் எங்கு போவதாக இருந்தாலும் கிளம்புவான்.



ஒரு வேளை அவனாலோ, இல்லை அவன் தம்பி வெற்றியாலோ வரமுடியவில்லை என்றாலும் தகுந்த பாதுகாப்புடன் தான் அவளைக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தான்.. அன்றைய நிகழ்வின் ஏதாவது எதிர்மறை தாக்கம் அவள் மீது வரக் கூடாது என்று அவளுக்குக் காவலாய் இருந்தான்.



கடந்த சில நாட்களாகக் கண்ணில் படாமல் அவன் அலுவலகப் பணியில் பிசியாக இருந்த கதிர் அன்று மாலை சத்யாவை அழைக்கத் தன் காரில் வந்திருந்தான்.



அவன் தனக்காகக் காத்திருப்பதைக் கண்ட சத்யா, தன் உடன் வந்த சக ஆண் ஆசிரியர் ஒருவரிடம் சிரித்துப் பேசிக் கொண்டு வந்து கொண்டிருந்தவள், அவசரவசரமாக விடை கொடுத்து விட்டு வேகவேகமாக அவனை நோக்கிச் சென்றாள்.



அவள் ஆவலுடன் விரைந்து வருவதைப் பார்த்து கதிருக்கும் மகிழ்ச்சியாக இருந்தாலும், அவள் யாருடனோ சிரித்துக் கொண்டிருப்பதைக் கண்டு முகம் சுருங்கினான்.. இவளுக்கு என்னைக் கண்டால் பேசி சிரிக்கத் தெரியாது.. முகம் கடுக்க.. காரை எடுத்தவன் வேகமாகச் செலுத்தினான்.



நான்கு நாட்களாக அவனைக் காணாமல் ஒருவித ஏமாற்றத்தில் இருந்த சத்யாவோ.. இன்று அவளைக் கண்டும் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அழுத்தமான முகத்துடன் ஒருவித இறுக்கமாக இருந்தவனைக் கண்டு எரிச்சலானவள்.. இவனுக்கு என்ன ஆனது என்று எண்ணி..



“கதிர்.. ஒரே வீட்டில் இருக்கோம்ன்னு பேரு.. ஆனால் உங்களை நாலு நாட்களாகக் கண்ணுலேயே காணலையே?.. என்னாச்சு?.. ரொம்பப் பிசியா?.. ஆபிஸ் வேலையா?..”



'ஓ.. இவள் என்னைத் தேடினாளா..' காரை ஓட்டியபடி அவளை ஆச்சர்யமாகத் திரும்பிப் பார்த்தவன்.. பின்னர் ஒன்றும் சொல்லாமல் தன் கவனத்தைக் காரில் செலுத்தினான்..



“என்னாச்சு கதிர்.. வீட்டில கூட உங்களைப் பார்க்க முடியலை..” மீண்டும் வெட்கத்தை விட்டுக் கேட்டாள் சத்யா.



நான்கு நாட்களாக அவனைப் பார்க்காமல் இருந்தது அவளுக்கு என்னவோ போல் இருந்தது.. யாரிடமும் அதைப் பத்தி கேட்கப் பிடிக்காமல் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.



எப்படி கேட்க முடியும்?.. 'இத்தனை நாட்களாக அவனைப் பிரிந்து தானே இருந்தே?.. இப்போ அவன் எங்கே போனால் உனக்கென்ன' என்று திருப்பிக் கேட்டு விட்டால்..



அவள் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்ள முடியும்?..



“என்னாச்சு கதிர்.. வெளியூருக்கு போனீங்களா?.. வீட்டிலையும் பார்க்கலை.. அப்படியே இருந்தாலும் உங்களை இந்த டயத்திற்குப் பார்க்க முடியாதே?.. அதான் சாயங்காலம் ஆறு மணிக்கு மேல நீங்க வீட்டிலேயே தங்க மாட்டீங்க?.. இன்னிக்கு ஏற்கனவே ஆறு மணி ஆயாச்சு.. எனக்குக் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஒர்க் இருந்தது.. காலையில வெற்றி கிட்ட சொல்லி இருந்தேன்.. உங்களை நான் எதிர்பார்க்கலை..” உண்மையை உரைத்தாள் சத்யா.



அவளைத் திரும்பி ஒரு நிமிடம் கூர்ந்து பார்த்தவன்,



“ஏன் அவன் வரலைன்னு வருத்தமா?.. இல்லை நான் வந்திட்டனேன்னு ஏமாத்தமா?.. அதுவும் இல்லைன்னா உன் பேச்சுக்கு இடைஞ்சலா வந்திட்டேனேன்னு வெறுப்போ?..”



திகைத்துப் போனாள் சத்யா.. இவன் என்ன சொல்ல வருகிறான்.. அதன் அர்த்தம் புரிய..



“ச். சீ.. என்ன பேச்சு இதுன்னு பேசறீங்க.. வெற்றி உங்க தம்பி.. என்னோடு பெஸ்ட் ஃப்ரெண்ட்.. இது உங்களுக்கே அசிங்கமா இல்லை..” சத்யா கோபமாகக் கேட்க..



அவளை ஆழ்ந்து பார்த்தவன்.. பேசாமல் காரை செலுத்தினான்.. இவளுக்குத் தெரிந்திருக்கிறது.. ஆனால் வெற்றியை பற்றிப் பேசுபவள்.. அந்த ஆளோடு பேசியதை பற்றிக் கண்டு கொள்ளவில்லை..



“இங்க பாரு கதிர்.. எதுக்கு இப்படிப் பேசின?.. இந்த மாதிரி குத்தல் பேச்செல்லாம் எனக்குப் பிடிக்காது?..”



“ஷ்.. எதுக்கு இப்படிக் கத்தறே?.. முதல்ல மரியாதை கொடுத்து பேசிப் பழகு.. நான் என்ன அப்படி அசிங்கமா சொல்லிட்டேன்.. காமாலைக்காரனுக்குப் பார்த்ததெல்லாம் மஞ்சள் தானாம்.. நீயும் உன் புத்தியும்..”



“உனக்கு வெற்றியோடு பேசறதுக்கு ஆயிரம் விஷயம் இருக்கும்.. ரெண்டு பேரும் படிச்சவங்க.. என்ன மாதிரி படிக்காத தற்குறி கிட்ட எல்லாம் உனக்குப் பேசப் பிடிக்குமா?.. எனக்கு வெற்றியை தெரியும்.. அவன் என் உடன்பிறப்பு.. அதைத்தான் சொன்னேன்..” என்றான் அமைதியாக ஆனால் ஒருவித கர்வத்துடன்.



“சரி.. இப்போ நான் என்ன சொன்னேன்.. அவன் உங்கள் தம்பிதான்.. நானில்லைன்னு சொல்லலையே?.. அதுக்காக என்னைப் பத்தி நீங்க பேசினது எனக்குத் தப்பாதான் படுது.. உங்க மனசில எதையோ வைச்சிட்டு இப்படிப் பேசறீங்க.. நீங்க பழசை மறக்கலை..”



“நான் எதையும் என் மனசில வைச்சிக்கலை.. அப்படியே இருந்தாலும் அதில் தப்பில்லை.. குத்தமுள்ள நெஞ்சு உனக்குக் குறுகுறுக்கிறது.. சரி நேராவே விஷயத்துக்கு வரேன்..”



“நான் உன்னோடு வந்தானே அவனோடு நீ பேசினதைப் பத்தி சொன்னேன்.. அப்படி என்ன பேசி, சிரிச்சிட்டு.. முதல்ல பார்த்து நட.. வெளியிடத்தில இப்படி ரெண்டு பேர் சிரிச்சிட்டு வந்தா தப்பா நினைக்கத் தோணும்.. இது சின்ன ஊர்.. பட்டிணம் இல்லை.. பார்த்து பழகணும்..”



“இந்தப் பேச்சை இத்தோடு விடு.. நான் ஏற்கனவே களைப்பா இருக்கேன்.. உன் கிட்ட இதுக்குப் பதில் சொல்ல எனக்குப் பொறுமை இல்லை.. தெம்பும் இல்லை..” என்று எரிச்சலுடன் சொன்னவன் இன்னும் வேகமாகக் காரை செலுத்த அவனையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சத்யா..



நான்கு நாட்களாக அவளைப் பார்க்காமல் இருந்து விட்டு, நடந்து போனதை ஒதுக்கி விட்டு, இன்று அவளைப் பார்க்க ஓடி வந்தால் இவள் என்னாடாவென்றால் அவனுடன் இளித்துக் கொண்டு.. கடுப்பானவன் அவளைக் கடிந்து கொண்டான்.



‘உண்மையில் களைப்பாகத்தான் தெரிகிறான்.. உடம்பு கூட இளைத்தாற் போல இருக்கிறதே.. இவனுக்கு என்னவாயிற்று?......’



‘ஏய் இவன் என்ன சொல்ல வருகிறான்?.. அப்போ நான் அந்த ஆண் லெக்ச்சர்ரோடு பேசினதை நோட் பண்ணியிருக்கான்.. ஓ.. அய்யாவுக்குப் பொறாமை.. அதான் கோபமோ?..’



சத்யாவுக்குச் சிரிப்பு வந்தது.. அதை அடக்கிக் கொண்டு புன்னகை புரிந்தவள், ‘இருக்கட்டும்.. கதிர்.. நீ எங்கே போயிடுவே.. உன்னை விடுவதில்லை..’



தன் எண்ணம் போகும் போக்கைக் கண்டு அவளுக்குச் சிரிப்பாக வந்தது.



அதற்குள் வீடு வந்திருக்க.., சரி பிறகு அதைக் கவனித்துக் கொள்ளலாம் எனத் தீர்மானித்துக் கொண்டாள் சத்யா.



“வாம்மா சத்யா.. நல்லபடியா இன்னிக்கு வேலை போச்சா.. இன்னிக்கு என்னென்ன பண்ணே சொல்லு..” என்று பேசியபடியே கண்ணாத்தா உள்ளே எழிலியிடம் இருவருக்கும் மாலை சிற்றுண்டியும், காப்பியும் எடுத்து வருமாறு பணிந்தார்.



அன்று சக்திவேல் மருமகளிடம் அவளுக்கு இஷ்டமில்லையென்றால் சமையலறைக்குள் எல்லாம் போக வேண்டாம் என்று சொன்னதிலிருந்தே சத்யா அந்தப் பக்கம் கூட எட்டிப்பார்க்கவில்லை..



அவளுக்குக் கல்லூரி வேலைகள் பிடித்திருக்க அதை மட்டும் மட்டும் விருப்பத்துடன் செய்து வந்தாள்.



“கதிர்.. காப்பி எடுத்துக்கங்க..” எனப் பணிவுடன் நீட்டியவளை முறைத்தான் கதிர்.



‘ஆமாமாம்.. புருஷன் களைச்சி வரான்.. இவ அப்படியே தன் கையால காப்பிக் கலக்கி எடுத்து வந்து நீட்டிட்ட மாதிரி.. என்னவோ பில்டப் குடுக்கிறதை பாரு..’



“எனக்கு வேண்டாம்.. ஏற்கனவே சாயங்காலம் காப்பி டிபனெல்லாம் ஆச்சு..” என்றவன்..



“அப்பத்தா.. நைட் எனக்கு லைட்டா போதும்.. முடிஞ்சா எனக்கு ஜஸ்ட் ஒரு தயிர்சாதம் கலந்து வைச்சிடுங்க.. நாலு நாளா வெளியே சாப்பிட்டது வயித்துக்கு என்னமோ மாதிரி இருக்கு..”



‘என்னடா இருக்காது?.. என்னைப் பார்த்தாலே இப்போதெல்லாம் வயித்தை கலக்குதோ..’ என்று அவனை மனதுக்குள் வைதபடி..



‘ம்.. நானே இந்தத் தயிர் சோத்தை பண்ணி வைப்பேன்.. ஆனால்.. இவன் என்ன சொல்லுவானோ?..’



அதே சமயத்தில் அங்கே தயிர் சாதம் என்றாலே முகத்தைச் சுளிக்கும் ருக்மணி நினைவுக்கு வந்து அதன் தொடர்பான எண்ணங்களில் முகம் கலங்க.. அதை மறைக்க எழுந்து கொண்டாள்.



“அதனாலென்ன பேராண்டி.. செஞ்சிட்டா போச்சு.. நம்ம சத்யா சூப்பரா ஒரு வாட்டி தயிர்சாதம் கலந்து வைச்சிதே.. அழகா தாளிச்சி.. பழமெல்லாம் கலந்து.. இன்னிக்குச் செய்யச் சொல்லிடறேன்..” எனக் கண்ணாத்தா சொல்லிவிட்டு சத்யாவை பார்க்க..



அவளோ எதுவும் பேசாமல் தலையாட்டிவிட்டு சென்று விட்டாள்.. கதிரை பார்க்கவில்லையென்றாலும் அவள் முகம் இப்பொழுது மலர்ந்திருந்தது..



தான் என்றோ செய்த அந்தத் தயிர்சாதத்தையே பாராட்டும் அப்பத்தா எங்கே.. என்னைக் குற்றம் கண்டு பிடிக்கும் அவர்கள் எங்கே என்ற யோசனையில் இருந்தவள் கதிரை கவனிக்கத் தவறினாள்.



அவள் எதுவும் பேசால் சென்றதை கண்ட கதிருக்கோ.. ‘ம்.. இவளுக்கு எனக்காக ஏதாவது செய்யணும் என்று நினைச்சாலே பேச்சு கூட வராதே.. எப்படியோ போகட்டும்.. என் தலையெழுத்து.. இப்படி ஒரு மனைவி வாய்க்க நான் கொடுத்து வைச்சிருக்கணும்..’ என முகத்தைத் திருப்பிக் கொண்டு வேகமாகத் தன்னறைக்குச் சென்றான்.



கண்ணாத்தாவோ ‘இவர்கள் இரண்டு பேருக்கும் என்னவாயிற்று.. இப்படியே இரண்டும் இரண்டு திசையைப் பார்த்தா எப்படி?.. ம்.. இதற்கு முதலில் ஒரு வழி செய்ய வேண்டும்.. என்ன செய்யலாம்..’ என யோசிக்கத் தொடங்கினார்.



இரவு உணவு வேளையில் கதிர் மிகக் குறைவாகவே உண்ணுவதைக் கண்ட சத்யாவுக்கோ முகம் சுணங்கியது.. ஒருவேளை தான் சமைத்ததால் சாப்பிட பிடிக்கவில்லையோ? என எண்ணியவளுக்குத் தான் முன்பு நடந்து கொண்ட விதம் நினைவில் வந்து வருத்தமாக இருந்தது.



அவன் உணவருந்துவதைக் கண்டு எத்தனை முறை எள்ளி நகையாடி இருக்கிறாள்.. இதே உணவை அன்று கூடச் சாப்பிடும் பொழுது காணாததைக் கண்டது போலத் திங்கிறானே என ஏளனமாகப் பார்த்தது நினைவில் வந்தது அவளை வருத்தியது.



அதற்கேற்றாற் போல அப்பத்தாவும்.. இப்பொழுதெல்லாம் அவன் சரியாகவே உண்பதில்லை எனக் கடிந்து கொள்ள.. கதிரோ எல்லாம் அவனுக்குத் தேவையானதை சாப்பிடுவதாகவே சொன்னவன்.. காணாததைக் கண்டது போலச் சாப்பிடக் கூடாது.. எதற்குமே அளவிருக்கிறது என்றும் சொல்லிவிட்டுக் கை கழுவச் சென்று விட்டான்.



அப்பாத்தா எதுவும் சொல்லவில்லை என்றாலும்.. சத்யாவிற்குத்தான் யாரோ முகத்தில் அடித்தாற் போல இருந்தது.. தன் உணர்வுகளை வெளிக்காட்டாமல் இருக்கப் படாதபடுபட்டுத் தன்னை அடக்கிக் கொண்டவள்..



வேகமாக உணவை முடித்து விட்டு மற்றவர்களிடம் சொல்லிவிட்டு தன்னறைக்குள் செல்லக் கதிரின் அறைக்குள் நுழைந்தாள்.



அவளை அங்கே கண்டவனோ கண்டு கொள்ளாமல் தன் மடி கணினியைத் திறந்து வைத்துக் கொண்டிருந்தான்.



சத்யாவுக்குக் கோபம் தலைக்கேறி இருந்தது.. மாலையில் இருந்து இவனுடைய நடவடிக்கைகள் சரியாகவே இல்லை.. எதற்கு இப்படி ஒரு அலட்சியம் என்று எண்ணியவள் நேராக அவனெதிரில் அமர்ந்தாள்.



“கதிர்.. உங்களுக்கு என்னாச்சு.. நானும் பார்க்கிறேன்.. மாலையிலிருந்து உங்க பிஹேவியர் என்னவோ மாதிரி இருக்கு.. உங்களுக்கு என்னைப் பிடிக்கலைன்னா டைரக்ட்டா சொல்லிடணும்..”



“நான் சமைக்கறேன்னு சொல்லலை.. அப்பத்தாதான் சொன்னாங்க.. உங்களுக்குச் சமைக்கச் சொல்லி.. எதுக்கு நான் சமைச்சத்தைச் சாப்பிடலை.. வேணும்ன்னுதானே பண்ணீங்க.. ஏன் நான் ஏதாவது பேதி மருந்தை கலக்கிட்டனோன்னு பயம் வந்திருச்சா?..” எனக் கோபமாகக் கேட்ட சத்யாவை கூர்ந்து பார்த்து கதிர் லாப் டாப்பை பக்கத்தில் வைத்து விட்டு, அதற்கு மேல் அடக்க மாட்டாமல் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான்.



‘ஆ.. வென வாயை பிளந்தாள் சத்யா.. இந்த லூசுக்கு என்ன ஆச்சு.. சாயங்காலத்திலிருந்து முசுடு மாதிரி மூஞ்சியை வைச்சிருந்தவன் இப்பொழுது இப்படி வயித்தை பிடிச்சிட்டு சிரிக்கிறான்..’ சத்யா அவனை வெறித்து வாயைப் பிளந்து பார்க்க..



சிரித்துக் கொண்டிருந்த கதிரின் பார்வை மாறியது.. சட்டென அவளைப் பிடித்து இழுத்தவன்.. தன் மேல் விழுந்த அந்தப் பஞ்சு பொதியின் இதழை மூடினான்.



இதழுடன் இதழ் இணைந்த அந்த நேரம் முடியவே முடியாது என்றிருக்க.. கதிரோ அவள் இதழ் தேனை பருகி அதில் திளைத்திருக்க.. இனி ஒரு நொடி கூட அவளை விட்டு விலக முடியாது என்ற பேரார்வம் அவனுக்குள் கிளர்ந்து எழ., அவள் முகமெல்லாம் முத்த மழையால் அர்ச்சிக்கத் தொடங்கியிருந்தவன்.. மீண்டும் அவள் இதழில் இளைப்பாறத் தொடங்கினான்.



சத்யாவோ தன்னை மறந்து அவனுடன் இசைந்து மயக்கத்தில் சென்று கொண்டிருந்தாள்.. சூடான அந்த இதழின் அணைப்பில் அவள் மனமும் ஆனந்தத்தில் திளைத்திருந்தது.. தன்னையறியாமல் அவனுக்குப் பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள்



எத்தனை நேரம் தங்களை மறந்து அந்தச் சுகத்தில் திளைத்திருந்தனரோ, எங்கிருந்தோ வந்த செல்போன் ஒலியில் மெல்ல அவள் இதழ்களை விடுவித்தவன்.. அவளை விடாமல் இன்னும் தன் மடியில் இறுக்கிக் கொண்டிருந்தான்.



“இது ஒரு தொல்லை” என வேண்டாத அழைப்பு என்று கண்டு அதை அணைத்தவன் அப்பொழுதுதான் தாங்கள் இருக்கும் நிலையை உணர்ந்தான்.



சத்யா அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டு கண்கள் மூடிய பரவச நிலையில் இருந்தாள்.. அவள் நிலை அவனுக்குப் புரிந்துதான் இருந்தது.



பாவம்.. அவனும் தான் என்ன செய்வான்.. அவளிடம் இருந்து ஒதுங்கிப் போக நினைத்தாலும் அவனை நெருங்கும் இந்தச் சத்யா அவனுக்குப் புதியவளே..



அன்று அவளை முதல் முறையாக முத்தம் கொடுத்து வாயை அடக்கியதற்குப் பிறகு.. மீண்டும் அவனை அலைக்கழிக்கவென இப்படி ஒரு நிகழ்வு..



அன்றைய நிகழ்வுகளின் தாக்கத்தில் அவன் மனம் அவனையறியாமல் அவளிடம் சரணடைந்திருந்தது.. ஏற்கனவே அவள் மேல் பித்தாய் இருந்தவனுக்கு, இப்பொழுது அவளது நெருக்கம் வேண்டி இருக்க.. அதைத் தடுக்க வழி தெரியாமல் அவளிடம் ஒதுக்கி போய்க் கொண்டிருந்தான்.



அதற்கேற்றாற் போல நான்கு நாட்கள் கழித்து ஊருக்குத் திரும்பி இருந்தவனுக்கு, அவளைக் கண்டதும் அந்தச் சிரிக்கும் இதழ்களைச் சிறையெடுக்கத் தோன்ற.., அதற்கு வழியில்லாமல் அந்த இயலாமையை அவளிடத்தில் கோபமாகக் காண்பிக்க விழைந்தான்.



அப்படியே அவள் மேல் அன்று போல அதிரடி தாக்குதல் நடத்தினாலும் அவள் கேட்க முடியுமா என்ன?.. ஆனால் அவனுக்குத்தான் அது பிடிக்கவில்லை.. அவளது விருப்பமில்லாமல் அவளிடம் அப்படி நடக்கப் பிடிக்கவில்லை.



ஆனால் இப்பொழுது இருக்கும் நிலையில் அவளை முழுமையாக அவன் எடுத்துக் கொண்டாலும் அவள் தடுக்கப் போவதில்லை.. அவள் மன நிலை புரிந்து தான் இருந்தது.



கதிருக்கு மனம் கேட்கவில்லை.. அவன் அவளை எந்த நிலையிலும் காதலிக்கிறான் தான்.. அதில் எள்ளளவும் சந்தேகமில்லை.. என்று அவளைத் தன் மனைவியாகக் கைப்பிடித்தானோ அன்றே அவளைக் காதலிக்கத் தொடங்கியவன் தானே..



அவள் மீது இருந்த அளவுக்கு அதிகமான காதலினால் தானே அவள் சந்தோஷமாக வாழ ஒதுங்கிப் போனான்.



இப்பொழுதும் அவளுக்குத் தன்னைப் பிடிக்குமா, தன்னைக் காதலிக்கிறாளா?.. இல்லை இது ஆண் பெண் தனித்திருக்கும் போது அவர்கள் இடையில் உண்டாகும் இனக் கவர்ச்சியா..



இப்பொழுது அவன் அவளை எடுத்துக் கொண்டாலும் அவள் தடுக்க மாட்டாள் என அவனுக்கு நிச்சயமாகப் புரிந்த்து.. ஆனால் அவள் மனம் சரியாகப் புரியாமல் அவளை எடுத்துக் கொள்ளத் தயங்கினான்.



ஒரு பெருமூச்சை விட்டவன், இதற்கும் மேல் தாங்காது என்று நினைத்து.. அவள் தலையில் மென்மையாக முத்தமிட்டு அவளை விடுவித்தான் கதிர்.



“கதிர்.. என்னாச்சு.. ப்ளீஸ்..” என வெட்கத்தை விட்டு அவன் கைகளைப் பற்றி இழுத்தாள் சத்யா.



“சத்யா.. எழுந்து போ.. உன் அறைக்குள் போய்ப் படு..” எனச் சட்டெனக் கடுமையாகச் சொன்னவன் அவளைக் கைகளை வேகமாக விலக்கி விட்டு.. சட்டெனக் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான்.



அவனது இந்தத் திடீர் ஒதுக்கம் சத்யாவுக்குள் என்னவோ மாதிரி இருக்க.. அத்தனை நேரமாக அவனுடன் உணர்வுகளின் பிடிப்பில் திளைத்திருந்தவள் அவளைப் பிடித்துத் தள்ளி விடாத குறையாகச் சென்றவனைக் கண்டு ஏமாற்றம் பரவ..



அதற்கு மேல் அங்கே நிற்கப் பிடிக்காமல் தன்நறைக்குள் புகுந்து கட்டிலில் படுத்தவள் கண்களில் கண்ணீர் பெருகியது.



தானா இப்படி நடந்து கொண்டேன் என்று கழிவிரக்கம் வேறு அவளைக் கண்ணீர் விட வைத்தது.



தன்னைப் பற்றி ஆராய்திருந்தால் புரிந்திருக்கும் கதிரை அவள் நேசிப்பது.. அந்த நேசிப்பே அவனிடம் அப்படி நடக்க வைத்தது என்றும்.. அதே நேசிப்பே அவன் ஒதுக்கியதும் ஏமாற்றத்தை விளைவித்தது என்றும்..



அடுத்த இரண்டு நாட்கள் எப்பொழுதும் போலக் கடந்த நிலை.. கதிரை மீண்டும் அவளால் காண முடியவில்லை..



காலையில் அவளுக்கு முன்பே வெளியே செல்பவன், இரவு எப்பொழுது வருகிறான் என்பது அவளுக்குப் புரியாத புதிராகவே இருந்தது.



அந்த நிகழ்வுக்குப் பின் அவள் கண்ணில் படாமல் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தான் கதிர்.



இவனை இப்படியே விடக் கூடாது என்று சத்யா மீண்டும் தீர்மானித்து நல்ல சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கத் தொடங்கினாள்.



அதற்கு ஏற்றவாறு ஒரு நாள் இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்தது.. வெற்றி அன்று மதியமே வேறு வேலை விஷயமாகச் சென்றிருக்க.. அவளை அழைத்துச் செல்ல அன்று கதிரே வந்திருந்தான்.



அவளுக்காகக் காத்திருந்தவனின் காரில் ஏறிக் கொண்டவளுக்கு உள்ளுக்குள் கொண்டாட்டமாகவே இருந்தது.. இன்று எப்படியாவது அவனிடம் பேசிவிட நினைத்தாள்.



அவனிடம் கேட்க நிறைய விஷயங்கள் அவளுக்கு இருந்தது..



எப்பொழுதும் போல அரதப் பழைய பாடலை ஓடவிட்டவன் அவளிடம் எதுவும் பேசாமல் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.



‘இவனிடம் இது ஒன்று.. எப்பொழுதும் பழைய பாடல்களை மட்டுமே விரும்பிக் கேட்பான்.. அவள் இந்தக் காலத்துப் பாடல்களைப் போட்டால் பட்டென அணைத்து விடுவான்.. இல்லையென்றால் அவளை முறைத்துப் பார்ப்பான்..’



“கதிர்..” என மெல்லத் தொடங்கினாள் சத்யா.



அவளைத் திரும்பிப் பார்த்தவன் மீண்டும் ரோடை பார்க்க..



“கதிர்.. உங்களைத்தானே..”



“இப்ப உனக்கு என்ன வேணும்..சும்மா சும்மா கதிர் கதிர்ன்னு.. நான் ரோடை பார்த்து காரை ஓட்டுவேனா இல்லை உன்னைப் பார்ப்பேனா?.. என்ன விஷயம்.. சொல்லு..” என்றவன் எரிச்சலுடன்..



சட்டெனக் காரை ஓரம் கட்டினான்.



“ஏய்.. ஒருவேளை அந்த ஆள் ஏதாவது வம்புக்கு இழுத்தானா?.. அப்படி ஏதாவது செஞ்சா தொலைஞ்சான்..” என்றான் திடீரென்று கதிர் கோபமாக.



“அய்யோ.. அதெல்லாம் இல்லை.. அன்னிக்கு நீங்க கொடுத்த அடிக்கு பின்னால எவனாவது வாலை ஆட்டுவானா என்ன?.. அதில்லை.. இது வேறு..”



புரியாமல் பார்த்தவன், அவளே சொல்லட்டும் என்று அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.



‘எவ்வளவு அழகா இருக்கா.. வெண்பளிங்கு முகம்.. அதில் பிறை நெற்றி, வளைந்த வில் போன்ற புருவங்கள் அதன் மத்தியில் சிறிய ஒட்டு போட்டு.. நீண்ட இமைகள் குடை விரிக்கப் பாலில் விழுந்த திராட்சை கண்கள் அவனைக் கண்டு மிரண்டு ஓட.. சின்ன மூக்கு, கொழுகொழு கன்னங்கள், ஆரஞ்சு சுளை உதடுகள்.. மேல் உதட்டில் மேல் இருந்த அந்த அழகு மச்சம்..



சந்தர்ப்பம் தெரியாமல் அவனை முத்தமிட அழைக்க..



‘அய்யோ.. இதுக்குப் பயந்து தானே நான் ஒதுங்கிப் போகிறேன்.. இன்றைக்கு மறுபடியும் இவளிடம் மாட்டிக் கொண்டேனா?..’



“கதிர்.. நீங்க தினமும் அப்படி எங்கே தான் போகிறீங்க.. வரவர வீட்டில இருக்கறது இல்லை..இதைத்தான் கேட்க வந்தேன்..” என்றாள் சத்யா.



‘ரொம்ப முக்கியம்.. எதோ பெரிசா சொல்லப் போறாள்ன்னு நினைச்சா.. வெட்கம் கெட்ட மனசு ஒருவேளை என்னைக் காதலிக்கிறேனென்று சொல்லுவாளா என்று வேறு எதிர்பார்ப்பில் இருந்தவன் வெறுத்துப் போனான்.



‘சட்..’ காரை எடுத்தவன் வேகமாக அதைச் செலுத்தினான்.



“கதிர்..”



“ஏய்.. என்ன ரொம்பத்தான் கதிர் கதிர்ன்னு.. நான் எங்கே போனா உனக்கு என்ன?..” எறிந்து விழுந்தான்.



“கதிர்.. எதுக்கு இப்ப உங்களுக்குக் கோபம்.. நான் ஜஸ்ட் ஒரு க்யூரியாசிடிலைதான் கேட்டேன்.. ஏன் நான் கேட்கக் கூடாதா?..அப்பத்தா தான் சொன்னாங்க புருஷன் எங்கே போறான்னு ஒரு பொண்டாட்டிக்கு தெரிஞ்சி இருக்கணும்னு..”



‘அடிப்பாவி.. இப்போதான் நான் இவளோடு புருஷன்னு தெரிஞ்சிதாமா?.. இதெல்லாம் அன்னிக்குக் கல்யாணம் ஆன புதுசில் கேட்டிருந்தா என் மேல எவ்வளவு அக்கறைன்னு மகிழ்ந்திருப்பேன்.. இத்தனை நாளா பிரிஞ்சி போயிட்டு நான் இருக்கேனான்னு கூடத் தெரியாமல் இருந்தா.. இப்ப என்னடான்னா..’



மீண்டும் காரை ஓரம் கட்டினான்.. இன்றைக்கு இதுக்கு ஒரு முடிவு வரணும்..



“ம்.. புருஷன் எங்கப் போறான்னு உனக்குத் தெரியணும்.. அவ்வளவுதானே.. சொல்லறேன் கேட்டுக்கோ..”



“என் பெண்டாட்டிக்கு நான் எங்கே போறேன்னு அவசியம் தெரியணுமா?.. ம்.. என் பெண்டாட்டி மெத்த படித்த மேதாவி.. பட்டிணத்து நாகரீகத்தில் புரண்டு வளர்ந்தவா.. நுனி நாக்கு இங்கிலீஷ்ல பீட்டர் விடறவ.. மாடல் அழகி..



“அவளுக்குக் கல்யாணம் நடந்திச்சு திடீர்ன்னு அவ விருப்பமில்லாமல்.. ஒரு பட்டிக்காடோட.. அவன் படிக்காதவன்.. குண்டோதரன்.. யானை மாதிரி இருக்கும் ஒரு காட்டான்.. கலர் வேறு காக்கா.. ஆளும் அழகில்லை.. அவளுக்கும் பொருத்தமில்லை..”



“கதிர்..” அதிர்ந்த சத்யா வாயைத் திறக்க..



“ஷ்.. பேசாதே..” எனக் கத்தியவனோ..



“என்ன கேட்டே.. நான் தினமும் எங்கே போனேன்னா.. என்ன பண்ணறது என் பெண்டாட்டிக்கு ஏத்த புருஷனா நான் இருக்கணும் இல்ல.. நான் படிக்காதவன் அவளோடு பழக லாயிக்கி இல்லாதவன்னு சொல்லி என்னை விட்டுட்டு போனாள்..”



“என்ன பண்ணறது.. அந்தப் பைத்தியக்காரன் அவளைக் காதலிச்சி தொலைச்சிட்டானே.. அவள் வேண்டாம்னு விட்டுவிட்டு போனாலும் அவளுக்கு ஏத்தாமாதிரி ஏன் மாறக் கூடாதுன்னு அவனுக்குத் தோணிச்சாம்.”



“கதிர்..ப்ளீஸ்.. இப்ப எதுக்கு நடந்ததெல்லாம்.. பழசை விடுங்களேன்..”சத்யா தலை குனிந்தவள் அவனிடம் மன்றாட..



“ஷ்.. பேசாதடி.. எதை விடச் சொல்லறே?.. உன்னையா?.. அதான் அன்னிக்கே உன் சந்தோஷம் முக்கியம்னு விட்டுத்தானே கொடுத்தேன்.. இன்னும் ஏண்டி எதையாவது பேசி என்னை இன்னும் நோக அடிக்கறே?..”



“ஆண்மைன்னா என்னான்னு நினைச்சே நீயி..எந்த பெண்ணுக்கும் தன் செய்கையாலோ சொல்லாலோ வேதனை வரக் கூடாதுன்னு நினைக்கிறது தாண்டி ஆண்மை.. இந்த வெளி தோற்றமோ அழகோ இல்லை..பட்டமோ பகட்டோ இல்லை.. அதெல்லாம் மனசிலேந்து வரணும்”,



“அப்பத்தா சொல்லறாங்க.. ஏன்டா.. பெண்டாட்டிதான் எப்பவும் புருஷனுக்கு ஏத்தா மாதிரி மாறனுமா?.. நீங்க ஆம்பளைங்க மாறக் கூடாதான்னு என்னைத் திட்ட.. அதான் என் பெண்டாட்டி என்னை ஏத்துக்கலைன்னாலும் அவளுக்காக நான் ஏன் மாறக் கூடாதுன்னு நினைச்சேன்..”



“என்னால என் கலரை மாத்த முடியாது.. என் அழகையும் மாத்த முடியாது.. அது இரண்டுமே என்னைப் படைச்சவன் கொடுத்தது.. ஆனால் என் தோற்றத்தை மாற்ற முடியுமே?.. அதான் இப்பொழுது என் உடல் எடையைக் குறைத்திருக்கிறேன்.. உணவில் கட்டுபாடு.. முறையான உடற்பயிற்சி.. அதுதான் இப்பொழுது உயரத்திற்கு ஏற்ற உடம்பு..”



அவனை நிமிர்ந்து பார்த்து சத்யாவுக்கோ..’இவன் உடம்பை குறைச்சா மாதிரி தெரியலை.. பட் இப்போ மேன்லியா இருக்கான்..சிக்ஸ் பேக்கோ..’



கதிரோ தொடர்ந்து கொண்டிருந்தான்.



“அது மட்டும் போதாது இல்லையா?.. உனக்கு ஏத்தா மாதிரி படிக்கணும் இல்லையா?.. நீயோ இஞ்சினியரிங்க் படிச்சிருக்கே.. இந்த வயசுக்கு மேல என்னால அதெல்லாம் முடியாது.. சோ என் தொழிலுக்கு ஏத்தா மாதிரி பிசினஸ் சம்மந்தமா டிகிரி கரெஸ்ல படிக்கத் தொடங்கி விட்டேன்.”



“ரெகுலர் காலேஜ்ஜுக்கு எனக்கு டயம் இல்லை.. தொழிலையும் பார்க்கணும்.. இல்லைனா சாப்பாட்டுக்கு.. அது என்னோடு ஆதாரம்.. இதுதான் எனக்கு வசதி பட்டது..சாயங்காலம் அதுக்காக ஸ்பெஷல் கிளாசுக்குப் போகிறேன்..



“போதுமா.. இப்போ உனக்கு விஷயம் தெரிஞ்சாச்சா?.. இனி நான் எங்கே போறேன் என்ன பண்ணறேன்னு பொண்டாட்டியா உரிமை எடுத்து கேக்கற வேலையெல்லாம் வேண்டாம்..” என்ற கதிர் அத்தனை நாட்களாகப் பேச எண்ணியிருந்ததைக் கொட்டி விட்ட திருப்தியுடன் காரை எடுத்தான்.



அவன் பேச்சில் அவன் மன உணர்வுகளைப் புரிந்து கொண்ட சத்யாவோ வெட்கி தலை குனிந்தாள்.. அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் அவள் நெஞ்சை அறுத்தன.. தானா அப்படியெல்லாம் பேசியது என்று எண்ணியவள் தன்னையே நிந்தித்துக் கொண்டாள்.



ஆனாலும் அந்தச் சமயத்திலும் அவள் மனம் பிரகாஷை நினைக்காமல் இருக்க முடியவில்லை.. தனக்குப் பொருத்தமில்லை என்று வேதாவை ஒதுக்கி வைத்தவன், இன்று வரை அவளுக்காக மாறினானா என்று தெரியவில்லை.



ஆனால் கதிரோ தான் திருமண முதலில் சொன்ன பேச்சை பிடித்துக் கொண்டு இதோ எனக்காக மாறத் தொடங்கி இருக்கிறானே?.. இவனெல்லவா முழு ஆண்மகன்.



ஆண் என்பவன் கம்பீரமாக இருந்தால் மட்டும் போதாது. எப்பொழுது ஒரு பெண்ணின் மனதைப் புரிந்து கொள்கிறானோ அவனே முழு ஆண்மகனாகிறான்.



‘இவன் தான் ஆண்.. எனக்கானவன்’ என்று மனம் குக்குரலிட்டது.



தான் புரியாமல் அன்று பேசியது தப்பென்றாலும், தனக்காக அவன் மாறுவது என்பது நினைத்துப் பார்க்க முடியாது ஒன்றாக இருந்தது. அவளது பைத்தியக்காரத்தனமான பேச்சுக்களுக்கு மதிப்புக் கொடுப்பது என்றால்.. அவன் காதல் அவளைப் புல்லரிக்க வைத்தது.. கர்வமாக இருந்தது.



இத்தகைய ஆண்மகன் தனக்குக் கணவனாகக் கிடைத்ததில் அவளுக்குப் பெருமையாக இருந்தது.



ஆனால்.. இவன் எப்பொழுது படித்து.. எப்பொழுது எனக்கு ஈடாகி.. எப்பொழுது தன்னைப் புரிந்து கொண்டு.. எப்பொழுது வாழ்க்கையைத் தொடங்குவதாம்..



அய்யோ கடவுளே.. என்னைக் காப்பாற்றேன்..



இல்லை இவனை இப்படியே விட முடியாது.. இருக்கட்டும்.. இவனா நானா என்று பார்த்து விடலாம்….



“கதிர்.. ஐயாம் சாரி..” என்றவளுக்குப் பதிலே சொல்லவில்லை கதிர்.



வீட்டை அடைந்த கதிரோ அங்கே இருந்த குடும்பத்தவர்களைக் கண்டு கொள்ளாமல் வேகமாகத் தன்னறைக்குச் சென்று மறைந்தான்.



சத்யாவோ எதுவும் பேசாமல் தீவிரமாக யோசித்தபடி அவனைத் தொடர்ந்தாள்.



‘என்னாச்சு இவங்க ரெண்டு பேருக்கும்.. ரெண்டும் சிரிச்சி பேசி வருதா பாரு.. முகத்தைத் திருப்பிட்டு.. இருக்கட்டும் இனி இந்த அப்பத்தா யார்ன்னு காட்டுறேன்..’



அவர்களைக் கண்ட கண்ணாத்தா சூளுரைத்தார்.





*********************************************************************




 
Top