மகளதிகாரம் முடிவு…
தனது ஐந்தாவது வயதில் நடந்த அந்த நினைவு மட்டும் பாப்பாத்திக்கு அழிந்து போகவில்லை அவளுடைய அடி ஆழ் மனதிலும் பதிந்து விட்டது அதனால் அடிக்கடி இந்தக் கனவு அவளுக்கு வரும்
தனது தந்தை தன்னை காணாமல் சென்றது அவளுக்கு ஒரு ஏக்கமாகவே இருக்கிறது
பலமுறை அவர் இதே போல் தன்னையும் தனது தாயையும் பார்க்க அவர்களின் கிராமத்திற்கு அந்த குடிசை வீட்டிற்கு வந்து இருக்கிறார்
ஆனால் ஒரு முறை கூட இவள் அவள் தந்தையை கண்டதில்லை காரணம் அவரின் வேலை அப்படி பட்டினத்தில் மார்கெட்டில் முட்டை தூக்கும் வேலையாம்...அவளுடைய ஐந்தாவது வயதில் தான் அங்கிருந்த மார்க்கெட் வாசலில் சில காய்கறி மூட்டைகளை ஏலத்திற்கு எடுத்து அதை காய்கறி மொத்த வியாபாரிகளிடம் சிறிய அளவில் லாபம் வைத்து விற்க தொடங்கியிருக்கிறார்
அதனால் காலையில் வேலை முடித்து பட்டினத்தில் இருந்து பஸ்ஸில் புறப்பட்டால் நள்ளிரவு வந்து சேருவார்
தாயைப் பார்த்து விட்டு தூங்கும் தன்னையும் கொஞ்சி விட்டு மீண்டும் அதிகாலையிலேயே பட்டினம் செல்ல பஸ் ஏறி விடுவார் காசை மிச்சம் பிடிப்பதற்காக ஒவ்வொரு ஊராக மாறிமாறி வருவார் போல அதையே அவர் வழக்கமாகவும் வைத்திருக்கிறார்
பின்னாளில் தந்தை பட்ட கஷ்டங்களையை ஒரு முறை மட்டும் தனது தாய் கூறியிருக்கிறார் அப்பொழுது இவளுடைய சந்தேகத்தையும் கேட்டிருக்கிறாள்
எப்படி அம்மா நீயும் மிகப்பெரிய குடும்பத்தில் இருந்து வந்தவள் என்று கூறுகிறாய் அப்பாவும் அதேபோல் நல்ல செல்வ செழிப்பான இடத்தில் இருந்து வந்தவர்கள் என்று கூறுகிறாய் ஆனால் நாம் மட்டும் ஏன் அவ்வளவு ஏழ்மையை சந்தித்தோம் என்று
அப்பொழுது தான் தாய் அவர்களின் கடந்த கால கதையை கூறினார் அப்பொழுது அந்த நினைவுகளில் பாப்பாவும் இணைந்து கொண்டாள்
தாய் கதையை கூற பாப்பா வரும் இடங்களில் அவளின் நியாபமும் உடன் பயணித்தது...
தனது தாயை திருமணம் செய்தபின் தந்தை அவரை அழைத்துச் சென்றது என்னவோ சென்னைப் பட்டினத்திற்கு தான் அங்கேதான் பாப்பாத்தியும் பிறந்திருக்கிறாள்
ஏனோ பாப்பா எனும் அந்த பெயர் அவருடைய தந்தைக்கு மிகவும் பிடித்திருக்கிறது பெயர் வைக்காமல் பாப்பா பாப்பா என்று அழைக்க பின்னாளில் அதுவே பாப்பாத்தியாகி இருக்கிறது போல
அங்கு சற்று பெரிய அளவில் காய்கறி வியாபாரம் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ஓரளவுக்கு வருமானம் வீடு வாசல் என செல்வ செழிப்பாக இருக்க அப்பொழுதுதான் உதவி கேட்டு பாண்டியின் தம்பி முறையில் ஒருவன் அந்த வீட்டிற்கு வந்திருக்கிறான் அவனின் பெயர் செல்வம்...
பரிதாபப்பட்டு அவனுக்கு பாண்டி வேலை கொடுக்க சில நாட்களிலேயே அவன் மனைவி மற்றும் மனைவியின் குடும்பத்தினர் சிலரையும் அழைத்து வந்திருக்கிறான் அதன்பிறகு அந்தக் கடையில் செல்வத்தின் ஆதிக்கமும் அவன் குடும்பத்தாரின் ஆதிக்கமும் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது
இதை ஆரம்பத்தில் கண்டுகொள்ளாத பாண்டி முற்றிலும் விட்டுவிட்டார் இப்பொழுது கடை முற்றிலும் அவர்கள் வசம் போயாகி விட்டது
நஷ்டம் மேல் நஷ்டம் கடன் மேல் கடன்
கடன் காரர்கள் அனைவரும் பாண்டியை சூழும் போது தான் அவருக்குப் புரிகிறது தனது தம்பியின் சூது
என்ன என்று விசாரிக்கும் பொழுது கடை பல நாட்களாக நஷ்டத்தில் தான் நடந்து கொண்டிருக்கிறது கடனை எல்லாம் நான் கொடுத்து கொள்கிறேன் வேண்டுமானால் இந்த கடையை எனக்குக் கொடுத்து விடு என்று கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் கேட்டிருக்கிறான் செல்வம்
இவர் தந்தையும் கடனுக்கு பயந்து மற்றவர்கள் சொல்லுக்கு அஞ்சியும் யோசிக்காமல் கடையை அவன் வசம் கொடுத்து விட்டு அவன் கொடுத்த சொற்ப பணத்தை வைத்துக்கொண்டு பாப்பா மற்றும் கனியை அழைத்து சொந்த ஊருக்கு வந்து விட்டார் அப்பொழுது கனிக்கு வயது நான்கு…தந்தைக்கு காய்கறி தொழில் என்பதால் தந்தை அதிகாலையிலேயே மார்க்கெட் சென்று விடுவார்… நள்ளிரவு போல தான் திரும்பி வருவார் அதனால் அவளுக்கு விவரம் தெரியும் வரை தனது தந்தையை புகைப்படத்தில் மட்டும்தான் பார்த்திருக்கிறாள்.
ஒருநாள் நள்ளிரவில் சென்னை பட்டினத்தில் இருந்து இங்கு கிராமத்திற்கு வருவதற்காக பஸ் ஏறும் பொழுது தனது தந்தையின் மடியில் உறங்கியதாக அவளுக்கு ஞாபகம் விடிந்து பார்க்கும் பொழுது தனது தாயுடன் அவள் இங்கே கிராமத்தில் இருந்தாள்
இங்கே வந்த பிறகு தந்தை அதிகாலையிலேயே விவசாயத்திற்கு கிளம்பி விட அதன் பிறகும் பாப்பா தனது தந்தையை காண முடிவதில்லை தந்தை இருக்கிறார் என்பது தெரியும் தந்தையின் பாசத்தையும் அவளால் உணர முடிகிறது ஆனால் அவரின் முகம் எப்படி இருக்கும் தனது தந்தை எப்படி இருப்பார் கம்பீரமான மனிதர் என்று தெரிகிறது அவருடைய முகவெட்டி எப்படி இருக்கும் அதை தெரிந்து கொள்ள அவளுக்கு மிகவும் ஆர்வம்
வந்த கொஞ்ச நாட்களில் இங்கு தந்தையின் உறவினர்கள் மூலம் மீண்டும் பிரச்சினை கிராமத்தில் இருக்கும் சொத்துக்களுக்குகாக தான் பாண்டி திட்டம் தீட்டி கிராமத்தில் வந்து இருக்கிறான் என நினைத்துக் கொண்டு அவனின் அங்காளி , பங்காளி, உடன் பிறந்த அண்ணனின் குடும்பம், தங்கையின் குடும்பம் அனைவரும் நித்தம் நித்தம் சண்டை போட
வெறுத்துப்போன பாண்டி தனது தந்தை வழிச் சொத்தும் வேண்டாம் தாய் வழிச் சொத்தும் வேண்டாம் எல்லாவற்றையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட அந்த கிராமத்தின் சிறிய அளவிலான இடத்தில் அவரும் அவருடைய மனைவியும் சேர்ந்து களிமண்ணை குழைத்து செங்கல் அறுத்து அங்கே மூன்றடி அளவிற்கு சுவர் அமைத்து அதன் பிறகு பனை ஓலையால் குடிசை வீட்டைக் கட்டினர்.
அன்று பாப்பாவிற்கு கடுமையான காய்ச்சல் அணத்திக் கொண்டே இருக்கிறாள் அந்த குடிசையின் நடுக்கூடத்தில் அவளை உறங்க வைத்தபின் தாயும் தந்தையும் அந்த குடிசையை கட்டுகின்றனர்
படுத்தபடியே தனது தந்தையை பார்க்க தனது தந்தையோ கூரை மேல் அமர்ந்தபடி ஓலையால் குடிசை கட்டிக் கொண்டிருக்கிறார் இன்றும் அவளால் தனது தந்தையின் முகத்தை பார்க்க முடியவில்லை எப்படியாவது தந்தை முகத்தை பார்க்கலாம் என்று பார்த்தால் பாழாய்ப்போன இந்த காய்ச்சல் அவளை ஒரு வாரம் வரை எழும்ப விடவே இல்லை அந்த ஒரு வார முடிவில் சென்னைப் பட்டணத்தில் இருந்த மற்றொரு உறவினர் எதேச்சையாக கிராமம் வர
இங்கு இவரின் நிலை கண்டு கலங்கி போனவர் நீ என்னுடன் பட்டினமே வந்துவிடு அங்கு ஏதாவது ஒரு வேலை செய்து சம்பாதித்துக் கொள்ளலாம் என கையோடு அழைத்து சென்றுவிட்டார். சென்றவர் மார்க்கெட்டில் வேலைக்குச் சேர்த்துவிட ஏற்கனவே காய்கறி தொழிலில் மூலம் ஆட்கள் பழக்கம் இருந்ததால் பாண்டிக்கு வித்தியாசம் தெரிவதில்லை அங்கேயே இருந்து கொண்டார் அன்று முதல் பாண்டி அங்கே மூட்டை தூக்குகிறார் ,இரவு நேரத்தில் அங்கேயே ஒரு கடை வாசலில் உறக்கம் காலையில் அங்கிருக்கும் கட்டண குளியலறையில் குளியல்.
இப்பொழுதுதான் சிறிது சிறிதாக தனது உழைப்பின் மூலம் அந்த வருமானத்தைக் கொண்டு அதையே முதலீடாக வைத்து சில காய்கறி மூட்டைகளை மொத்தமாக வாங்கி அதை சற்று லாபம் சேர்த்து கை மாற்றிவிடுகிறார்
இப்போது உடல் உழைப்பும் கொஞ்சம் குறைவாக இருக்கிறது கையில் பணமும் வர ஆரம்பிக்கிறது இனிமேல் தான் பாண்டி சென்னைப் பட்டணத்தில் வீடு பார்த்து அவனது ஆசை மனைவியையும் அன்பு குழந்தையையும் அங்கே அழைத்துச் செல்ல வேண்டும்
அதன் பிறகு சில நாட்களிலேயே அவளுடைய தந்தை வந்து அவர்களை அழைத்துச் சென்று பட்டினத்தில் அழகான ஒரு வீட்டில் குடியமர்த்தினார் அதுமட்டுமின்றி பாப்பாவை தனியார் பள்ளியிலும் படிக்க வைத்தார்.
ஆனால் தந்தையை மட்டும் பாப்பாவால் பார்க்க முடியாது ஏனென்றால் இப்பொழுது தந்தை மொத்தமாக காய்கறிகளை வாங்கி வியாபாரம் செய்ய தொடங்கிவிட்டார் அதனால் அதிகாலையிலேயே சென்று விடுவார் நள்ளிரவுக்கு மேல் தான் வருவார் அவரின் உறக்கம் ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ தான் அந்த நேரத்தில் இவள் விழித்து இருக்கலாம் என்று பார்த்தால் பாலாய் போன தூக்கம் வந்துவிடும் இப்படியாக அவளும் பெரிய பெண்ணாக வளர்ந்து நிக்க அவர்களின் வீடும் வசதி வாய்ப்பில் செல்வச் செழிப்பில் பணம் கொட்ட தொடங்கியது பாப்பாவை தவிர வேறு குழந்தைகள் வேண்டாம் என பெற்றோர்கள் இருவருமே முடிவு எடுத்ததால் பாப்பா அந்த வீட்டின் இளவரசியாக வலம் வரத்தொடங்கினாள்.
தந்தையின் அன்பை நன்கு அனுபவிக்கிறாள் அவரின் உழைப்பின் மூலம் வரும் வருமானத்தில் நன்றாக வாழ்கிறாள் ஆனால் தந்தையை மட்டும் அவளால் பார்க்க முடியவில்லை எப்பொழுதாவது பார்க்கிறாள் ஆனால் அவரை பார்க்கும் பொழுது அவரின் முகத்தைப் பார்த்து பேச ஒரு பயம்
தனது தந்தை கம்பீரமாக வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் நடந்து வருவதே அவளுக்கு மிகப்பெரிய கவுரவம் இப்படியாக திருமண வயது வர அவளுக்கு ராஜாவைப் பார்த்து மணமும் முடிக்கின்றனர்
அவளின் திருமணத்தன்று தான் தனது தந்தையை நன்றாக பார்க்கிறாள் ஆனாலும் தந்தையின் இள வயது முகத்தை காண அவ்வளவு ஆசை
இன்று ஏனோ தந்தையின் முகம் ஏதோ ஒரு கவலையை சொல்கிறது ஒரு வேளை மகளை பிரிய வேண்டிய அந்த கவலையோ என்னவோ
பாப்பா பிறந்தது முதல் இன்று வரை தாயின் புடவையை பிடித்தபடியே சுற்றுகிறாள் அதனால் திருமணத்தன்று இவளுக்கு தாயை விட்டுப் பிரிகிறோம் என்ற கவலையும் இருக்கிறது
ஆனால் தந்தையின் பாசத்தை ஒருநாள்கூட அருகிலிருந்து அனுபவிக்கவே இல்லையே தந்தையின் கைகளை பிடித்தபடி கடற்கரையில் நடக்க வேண்டும் தந்தை தனக்கு இரு சக்கர வாகனம் ஒட்ட கற்று தர வேண்டும் தந்தையின் மடியில் அமர்ந்து அவரின் கையால் சாதம் வாங்கி உண்ண வேண்டும் இப்படி பல கனவுகள் கனவாகவே போக மனதில் பாரத்துடன் கணவன் வீடு செல்கிறாள்
அவளுக்கு கொடுத்த வரதட்சிணை நகை நட்டுகள் பார்த்த மாமியார் மட்டும் கணவரின் குடும்பம் இவளை ஒர் ஆண்டுகள் வரை தலையில் தூக்கிவைத்து ஆடுகின்றனர்
அதுமட்டுமின்றி தாய் வீட்டுக்குச் செல்லக் கூடாது அப்படி இப்படி என்று அவளுக்கு பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன
ஒரே ஊரில் தான் அவளைக் கட்டிக் கொடுத்தது ஆனால் பக்கத்தில் இருக்கும் தந்தையை பார்க்க அவளால் முடியவில்லை தாய் மட்டும் வாரம் ஒருமுறை எப்படியாவது வந்துவிடுகிறார் தந்தையின் வீட்டில் தொலைபேசி இருந்ததால் கணவர் வீட்டிலும் தொலைபேசி இருந்ததால் தாயிடம் மணிக்கணக்காக பேசி அவளின் ஆதங்கத்தை தீர்த்து கொள்கிறாள் பாப்பா ஆனால் அதற்கான கட்டணத்தை தனது தந்தை தான் கட்டிக் கொண்டிருக்கிறார்
அவள் சென்ற இரு ஆண்டுகளில் அடுத்தடுத்து குழந்தைகளுக்கு தாய் ஆனாள் பாப்பாத்தி
அதுமட்டுமின்றி ஒவ்வொரு முறையும் அதை செய்ய வேண்டும் இதை செய்ய வேண்டும் என்று நைசாக பாப்பாவிடம் புகுந்த வீட்டினர் கேட்க பாப்பாவோ அதை தாயிடம் எதார்த்தமாக கூற
முதலில் மகளுக்கு மனைவிக்கு மட்டும் உழைத்துக் கொண்டிருந்த பாண்டி இப்பொழுது மகளின் குடும்பத்திற்காகவும் சேர்த்து உழைக்க தொடங்கி விட்டார் அவரின் கடைசி சொட்டு ரத்தம் வரை மகளின் குடும்பத்தாரால் உரியப்பட்டு கொண்டிருக்கிறது
இது பாப்பாவிற்குமே தெரியவில்லை ஏதோ தந்தைக்கு சும்மா காசு வருது போல என்று நினைத்தபடி ஒவ்வொரு முறையும் அவளும் அசால்டாக பெரிய பெரிய தொகைகளை அவள் தாயிடம் கேட்க தாயோ மகளுக்கு தானே செய்கிறோம் என்று அவள் தந்தையிடம் கூற
பாண்டியோ கடன் பட்டாவது அந்த பணத்தை கொண்டு வந்து சேர்க்கிறார் இதன்மூலம் ராஜாவும் பாப்பாவும் மிக மிக ஆடம்பரமாக வாழ தொடங்கிவிட்டனர் ஆனால் இங்கு எந்த ஒரு உதவியும் இல்லாமல் தனி ஒரு மனிதனாக பாண்டி மட்டுமே உழைத்து தன்னையும் தன் மனைவியும் பார்த்துக்கொண்டு மகளையும் பார்த்துக்கொண்டு அவரால் தற்சமயம் கொடுக்க முடியவில்லை
இப்பொழுது பாப்பா பெரிய தொகையைக் கேட்டாள் பத்தில் ஒரு பங்காக கொடுக்க இங்கு ராஜாவின் சுய உருவம் பாப்பாவிற்கு புரியத் தொடங்குகிறது
தந்தை வீட்டில் இருந்து பணம் வருவது போல் இருந்தால் மட்டுமே பாப்பாவையும் பிள்ளைகளையும் தந்தை வீட்டுக்கு அனுப்பி வைப்பது அப்படி இல்லை என்றால் மிகவும் கடினமாக நடந்து கொள்வது பாப்பாவின் பிள்ளைகள் இப்பொழுது மிகப்பெரிய பள்ளியில் படிக்கின்றனர்
அவர்களுடைய எல்லா படிப்புச் செலவுமே அவளின் தாய் வீட்டில் இருந்து வருவதுதான் எங்காவது ஒரு காலி மனையை பார்த்தால் கூட அந்த இடத்தை வாங்குவதற்காக சிறு அளவு தொகையை மட்டுமே ராஜா கொடுப்பது மீதி எல்லாவற்றையும் பாண்டி தான் பாப்பாவிற்க்காக கொடுத்தாக வேண்டும்
இப்படியாக ராஜாவின் ஆடம்பரம் எல்லை விரிய ஆரம்பித்தது பிள்ளைகளின் கல்லூரிப் படிப்பு முடிந்து விட்டது மகளை உள் ஊரிலே மிகப்பெரிய பணக்கார குடும்பத்து பையனுக்கு மணம் முடித்து கொடுத்தாகிவிட்டது மகன் வெளிநாட்டில் வேலைக்கு சென்று அங்கேயே ஒரு பெண்ணை திருமணம் செய்து அங்கேயே செட்டிலாகி விட
ராஜாவோ அரசியல் கட்டப்பஞ்சாயத்து என்று தீவிரமாக இறங்கி விட
இப்பொழுது பாப்பாவிற்கு ஆதரவு அவளின் தாயும் தந்தையும் மட்டுமே
முதலில் என்றாவது ஒரு நாள் இல்லையென்றால் தேவை என்றால் மட்டுமே சென்று வந்த பாப்பா இப்பொழுதெல்லாம் அடிக்கடி தனது தாயின் வீட்டிற்கும் தந்தையை காணச் செல்கிறாள்
ஆனால் தந்தையின் கம்பீரம் இப்பொழுது இல்லை மிகவும் நலிந்து காணப்படுகிறார் அவரை அப்படி காணவே அவளுக்கு பிடிக்கவில்லை
இவளுக்கும் ஆயிற்று வயது நாற்பத்தி எட்டு ஆனால் இன்றுவரை தந்தையிடம் அருகே அமர்ந்து கூட ஒரு வார்த்தை பேசியது கிடையாது
மனம் கனக்க வாழ்க்கை போய்க் கொண்டிருக்க திடீரென ஒரு நாள் தாய் மாரடைப்பால் உயிரிழக்க தந்தை ஒரே நாளில் யாரும் இல்லாதவர் ஆகிவிட்டார்.
அன்றுவரை உழைத்துக் களைத்தவர் தாயின் மரணத்திற்குப் பிறகு ஒன்றுமே இல்லாமல் ஆகி விட்டார்
அதன்பிறகு அவரை அவ்வப்போது சந்தித்து வந்த பாப்பா ஒருநாள் அவருக்கு முடியாமல் செல்ல தனது கணவரிடம் பேசி அவரை தனது வீட்டுக்கு அழைத்து வந்து விட்டாள்
ராஜாவின் ஒரே ஒரு கோரிக்கை தந்தையின் தொழிலையும் அவரின் வீடு மற்றும் சேமிப்புக் கணக்கு எல்லாவற்றையும் தன்னிடம் கொடுத்துவிடவேண்டும் என்று தந்தையிடம் இவள் மெதுவாக கூறும் முன்னே அவர் எல்லாவற்றையும் எடுத்து முன் வைத்து விட்டார்
சொத்துக்கள் அனைத்தும் இவளுக்கு தான் என்று முன்பே தெரிந்த படியால் ராஜா அதைப்பற்றி பெரிதாக கண்டு கொள்ளவில்லை
ஆனால் அவரின் சேமிப்பு பணம் மொத்தத்தையும் வாங்கி அவன் வைத்துக்கொண்டான்
அப்பாவிற்கும் அந்த பணம் தேவையில்லை தனக்கும் அந்த பணம் தேவையில்லை
பிள்ளைகள் செட்டிலாகி விட்டார்கள் வீடு நிறைய பணம் இருக்கிறது இப்பொழுது அவளுக்கு நிம்மதி தான் வேண்டும் இனியாவது தனது தந்தையுடன் அவளின் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம் என்று நினைத்தாள்
சிறு வயதில் அவளுக்கு கிடைக்காமல் போன தந்தை பாசத்தை இனி பெற்றுக் கொள்ளலாம் என்று கனவுகளுடன் தந்தையை அழைத்து வந்தால் இங்கு நடந்ததோ வேறு
வந்த மூன்று மாதம் மட்டுமே கணவன் ராஜா மாமனாரிடம் எதையும் காட்டிக்கொள்ளவில்லை அவரின் மொத்த சொத்துக்கள் பணத்தையும் பெற்றுக் கொண்டபின் பாண்டி அவனுக்கு செல்லாக்காசாகி விட்டார்.
மாமனார் ராஜாவிற்கு சுமையாகிப் போக அவரைப் பார்க்கும் போதெல்லாம் ஏதாவது ஒன்று சொல்வது இல்லையென்றால் கடினமாக நடந்து கொள்வது வேண்டுமென்றே அவரின் முன்பு பாப்பாவிடம் சண்டையிடுவது இப்படி எல்லாம் இருக்க தனது மகள் தனது கண்முன்னே கஷ்டப்படுவதைப் பார்த்து பாண்டி தன்னுடைய கூட்டை மிகவும் சுருக்கிக் கொண்டார்
ராஜா இருக்கும் பொழுதே அறையைவிட்டு வெளியில் வருவதே இல்லை அப்படியே வந்தாலும் பாண்டியை ராஜா ஏதாவது கிண்டல் செய்வது போல் பேசுவது இல்லை என்றால் நக்கல் செய்வது நையாண்டி செய்வது இதை எதையும் பொறுத்துக் கொள்ள முடியாத பாண்டி அவரின் அறையிலேயே முடங்கிக் கொண்டார்.
வயதுமுதிர்வின் காரணமாக உணவை கொட்டினாலோ தண்ணீரை கொட்டினாலோ
தனது கணவன் ஏதாவது சொல்வதுக்கு முன் பாப்பாவே தனது தந்தையைக் கடிந்து கொள்வாள் தந்தை கணவரின் முன்பு அவமான படுவதை அவள் விரும்பவில்லை
ஆனால் பாண்டியின் என்னமோ வேறாக இருந்தது தனது மகள் தன்னை வெறுத்து விட்டாள் அதனால் தான் தனது மாப்பிள்ளையின் முன்பு தன்னை அவமானப்படுத்துகிறாள் என்று எண்ணிக்கொண்டார்
தனது மனைவி இருந்தவரை அவரின் வீட்டில் அவர்தான் ராஜா ஆனால் இன்றோ ஒருபிடி சாப்பாட்டிற்காக தனது மகளிடம் தஞ்சம் புகுந்துள்ளார் தான் இங்கு இருப்பது தனது மகளுக்கும் மருமகனுக்கும் பாரம் என நினைத்துக் கொண்டவர் அவரின் ஆகாரத்தை குறைத்துக் கொள்கிறார்... ராஜாவோ அனைவரிடத்திலும் அவருக்கு உடல்நிலை சரியில்லை என ஒரு மாயையை ஏற்படுத்துகிறார் அதை பாண்டியையும் நம்ப வைக்கிறார் பாண்டியும் இப்பொழுது தனக்கு மிகவும் உடல்நலம் சரியில்லை என்பதுபோல் என்ன தொடங்குகிறார்
அதுவரை தனது தந்தையைப் பற்றி பெரியதாக கவனம் கொள்ளாத பாப்பா தனது தந்தையின் ஆகாரம் குறையத் தொடங்கவும் தான் உற்று நோக்கத் தொடங்கினாள்
இதோ கடந்த பத்து நாட்களுக்கு மேலாக தனது தந்தைக்கு பிடித்த உணவுகளையெல்லாம் மாறி மாறி சமைத்து அவரின் அருகில் சென்று வைக்கிறாள் தந்தையோ தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டு வாழ்ந்து கொண்டு இருப்பது போல் தோன்றுகிறது
எதையுமே தொட்டு கூட பார்ப்பதில்லை இரவு மட்டும் பால் குடித்துக் கொள்கிறார் மற்றபடி அவர் எதையும் தொடுவதில்லை
சில சமயம் இவள் சென்று பார்க்கும் பொழுதெல்லாம் தந்தையின் விழியோரத்தில் துளி கண்ணீர் இருக்க இவள் நெஞ்சில் ரத்தம் சுரக்க ஆரம்பிக்கிறது தந்தையிடம் எவ்வளவோ மன்றாடிப் பார்க்கிறாள் அறையை விட்டு வெளியே வாருங்கள் வெளியில் வந்து சற்று அமருங்கள் என்றெல்லாம் ஆனால் அவரோ இவள் இல்லாத நேரம் கூட எழுந்து அமர்கிறார் வாசல்வரை வருகிறார் ஆனால் இவளை பார்த்து விட்டால் உடனடியாக அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொள்கிறார் அவரின் மகளும் மருமகனும் தன்னை வெறுக்கத் தொடங்கி விட்டனர் மேலும் ஏதாவது சொல்லி விடுவார்களோ என்று பயப்படுகிறார் என்று பாப்பாவிற்கு புரியத் தொடங்குகிறது
தந்தையுடன் ஒவ்வொரு நாளும் மன்றாடி பார்க்க தந்தையும் கடந்த பத்து நாட்களாக ஒரு பருக்கை சோறு கூட வாயில் வைக்க வில்லை இதனால் மிகவும் மனமுடைந்த பாப்பா இப்பொழுது பால்கனியில் வந்து அமர்ந்தபடி பழைய கதைகளை தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள்
எத்தனையோ நாட்களில் இரவு நேரத்தில் பிடித்த பலகாரங்களை வாங்கி கொண்டு வந்து தூக்கத்திலேயே தனக்கு ஊட்டியவர் தன்னைப் ஒருநாளும் பசியில் வாட விடவில்லை பசி அறியாமல் வளர்த்தவர்
இன்று பட்டினி கிடக்கிறார் அவருக்குத்தான் என்ன செய்வது என்று கண்டதையும் போட்டு குழப்பிக் கொண்டவள் மீண்டும் தனது தந்தையை காண அவரின் அறைக்கு செல்கிறாள்
அவர் விழித்து தான் இருக்கிறார் இரவு அவர் உண்ண வைத்த உணவுகள் மற்றும் வாழைப்பழம் அப்படியே இருக்கிறது அவ்வளவு ஏன் பாலை கூட இன்று தொடவில்லை ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு தந்தையும் பார்க்க தந்தையோ ஏனோ இன்று இவளை நன்றாக பார்க்கிறார்
அந்த கண்களில் என்ன இருக்கிறது பல வருடங்களுக்குப் பிறகு தனது தந்தையின் கண்களை சந்திக்கிறாள்
அந்த முகம் அவளுக்கு ஏதோ சொல்லத் துடிக்கிறது அவரின் கைகளின் மீது தனது கைகளில் மென்மையாக வைக்க அந்த கைகளோ உணர்ச்சிவசத்தால் ஆடத்தொடங்கியது
நடுக்கத்தை போக்கும் விதமாக தனது இன்னொரு கையையும் அதன் மீது வைத்தவள் அவரின் அருகில் அமர்கிறாள் பிறகு
தனது தந்தையுடன் மெதுவாக பேசத் தொடங்குகிறார்.
ஏனப்பா இப்படி சாப்பிடாம என்ன கஷ்டப்படுத்தறீங்க என்னதான் பிரச்சினை எதுவா இருந்தாலும் வெளிப்படையா சொல்லுங்கப்பா உங்க மாப்பிள்ளை பத்தி உங்களுக்கு தெரியாதா அவர் எப்பவுமே இப்படி தானே கிண்டலும் கேலியும் பேசுவார்
எல்லாத்துக்கும் கத்துவார்
இதெல்லாம் தெரிஞ்சு தானே என்னை திருமணம் செஞ்சு வச்சிங்க
அவர் சொல்றதுக்காக உங்களை நீங்க வருத்திக்காதிங்கப்பா நானும் ஏதாவது உங்களை சொல்லி இருந்தா என்னை மன்னிச்சிடுங்க அப்பா
இப்படி நீங்க சாப்பிடாமலேயே இருந்தா உடம்புக்கு ஏதாவது ஆச்சுன்னா என்னால அது எப்படி தாங்கிக்க முடியும் என்று கூற
அவரோ பதில் ஏதும் சொல்லாமல் மகளின் கைகளிலிருந்து தனது கைகளை உருவி கொண்டவர்
மெதுவான குரலில் அழுத்தமாக போகட்டும் போ என்று ஒன்றை வார்த்தையில் கூற
இவளுக்கு நெஞ்சில் பாரம் ஏறிக் கொள்கிறது.
போகட்டும் போனா என்ன அர்த்தம்
உங்கள் உயிர் போன போகட்டும்னு சொல்ல வரீங்க இல்ல ரொம்ப சுலபமா சொல்லிட்டீங்க
உங்களுக்கு வேணும்னா உங்க உயிர் முக்கியம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் எனக்கு ரொம்ப முக்கியம் அப்பா
ஐம்பது வருஷமா உங்களோட பாசத்துக்காக ஏங்கிட்டு இருக்கேன் பா உங்கள கண்ணுக்குள்ள வெச்சு தாங்கனும்னு தானே இங்க என் வீட்டுல என்னோட கூட்டிட்டு வந்து வச்சிருக்கேன்
ஆனா நீங்க இப்படி சாப்பிடாம ரூம்லேயே அடைஞ்சி கிடந்து என்னை வேதனை படுத்தறீங்க
சின்ன வயசுல தான் பணம் வேலைனு ஓடிட்டு இருந்தீங்க இனியாவது எனக்காக நேரம் ஒதுக்கி என்னோடு இருங்கப்பா நீங்க உங்க ரூம்ல அடைஞ்சிக்கறீங்க
நான் என் ரூம்ல அடைஞ்சிக்கறேன்
என்னப்பா இது வாழ்க்கை அஞ்சு வயசுல எனக்காக ஆசையா வாங்கிட்டு வந்த பலகாரத்தை தூங்கிட்டு இருந்த எனக்கு ஊட்டி விட்டீர்களே அந்த அப்பா எனக்கு வேணும் பா
இப்படி சாப்பிடாம இருந்து வேதனை படுத்தாதீங்க உங்க பொண்ணான என்னை இத்தனை வருஷத்துல ஒரு வேளை சாப்பாடு கூட லேட்டா சாப்பிட விட்டது இல்ல
அந்த மாதிரி வளத்தினிங்க ஆனா இன்னைக்கு நீங்க பட்டினி கிடக்கறீங்க அம்மா ஆன்மா என்னை என்னைக்குமே மன்னிக்காது பா என்ன பாவி ஆகிடாதிங்க ஆனா ஒன்னு மட்டும் உறுதியா தெரிஞ்சுக்கோங்க பா போகட்டும் போனு சொன்னிங்களே இந்த மகள் உயிரோடு இருக்கிற வரைக்கும் உங்க உயிரை போக விடமாட்டேன் உங்களுக்கு எது வந்தாலும் என்ன தாண்டி தாம்பா வரும் அத மனசுல வச்சுக்கோங்க என்று உறுதியாக கூறியபடி அறையை விட்டு வெளியே வந்தவள் மீண்டும் பால்கனியில் வந்து அமர்ந்துகொண்டார் இப்பொழுது அழவேண்டும் போல் தோன்றியது பாப்பாத்திக்கு எத்தனை கனவுகளுடன் தனது தந்தையை தன்னுடன் வைத்துக் கொள்வதற்காக அழைத்து வந்தாள் ஆனால் எல்லாமே கானல் நீராகி விட்டதே ஐந்து வயது முதல் தந்தையின் முகத்தை நேருக்கு நேர் பார்க்க வேண்டும் என்ற ஆசை இன்று பார்த்தும் விட்டாள் பேசியும் விட்டாள் ஆனால் சந்தோஷம் துளி கூட இல்லை அந்த கிராமத்தில் ஐந்து வயது சிறுமி ஆகவே இருந்திருக்கலாமோ தனது தந்தை தன்னிடம் பாசமாக நடந்து இருப்பார் என்றெல்லாம் தோன்றியது இப்படியே எவ்வளவு நேரம் அழுதால் என்று தெரியாது திடீரென அவளுக்கு மூச்சு விட சிரமம் ஏற்படுவது போலிருந்தது உள் இழுக்கும் மூச்சு வெளியே வர கடினம் ஏற்பட உடல் முழுவதும் வேர்த்து கொட்ட திடீரென அவளுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது
ஹக்க்….. என்ற சத்தத்துடன் அவள் அமர்ந்திருந்த ஸ்டூல் பின்புறம் சாய அவளையுமறியாமல் அம்மா என்று கத்த தொடங்கினாள்
சற்றுமுன் அவள் கண்டாளே ஒரு கனவு தாயின் கழுத்தை கட்டிக் கொண்டிருக்கும் போது தானாக கீழே விழுவது போல் அதேபோல் இப்பொழுதும் விழுகிறாள் ஆனால் இம்முறை அவள் கீழே விழவில்லை அவளின் தாய்மடி அவளை தாங்கிக் கொள்கிறது பாப்பாவோ பயந்தபடி கண்விழித்து பார்க்க தாயின் மடியில் கிடக்கிறாள் ஐந்து வயது சிறுமியாக சிரித்தபடி அம்மா என்று தாயின் கழுத்தை கட்ட இப்பொழுது அந்த பங்களா அவளின் சொகுசு அறை எல்லாமே மறைகிறது
அவர்களின் கிராமம் அந்த குடிசை வீடு ஆனால் அந்த லாந்தர் வெளிச்சம் இல்லை வீடு முழுவதும் நிலவொளி பார்க்கவே ரம்மியமாக இருக்கிறது
ஐந்து வயதில் அவள் தந்தை அவளுக்காக அணிவித்த அந்த கவுனை அணிந்திருக்கிறாள். பாப்பாவிற்கு எல்லாமுமே மறந்துவிட்டது
இப்பொழுது அவளின் ஆசை தந்தையின் முகத்தை காண வேண்டும் என்று மட்டுமே இருக்கிறது
தனது தாயிடம் ஆச்சரியமாக கேட்கிறாள் அம்மா அப்பா வந்துட்டு போய்ட்டாங்களா என்று அதற்கு அவரோ இல்லை என சிரித்தார்
குழந்தையின் முகம் நொடியில் வாட
அவளின் முகவாட்டத்தை பொருத்துக் கொள்ளாத தாய்
வருவார் என்பது போல் ஜாடை செய்கிறார் அதுவரை நீ என் மடியில் உறங்கு என்று அவரின் மடியை காட்டுகிறார்
அதற்கு பாப்பாவோ இல்லை இல்லை நான் உறங்கி விட்டால் தந்தை வந்து விட்டு சென்று விடுவார் அதனால் நான் உறங்க மாட்டேன் தந்தை வரும்வரை நான் முழித்து இருப்பேன் என்று வாதம் செய்கிறாள்
உடனே தாய் கனியோ இல்லை இல்லை தந்தை கண்டிப்பாக வருவார் நீ மடியில் படு என்று கூற சரி என சமாதானமடைந்த பாப்பா தாயின் மடியில் தலைவைத்து படுக்க சற்று நேரத்திற்கெல்லாம் கோணிப்பை சற்று நகர கனி என்று பாண்டி அழைக்க சந்தோஷமாக சிரித்த கனியோ இப்பொழுது பாப்பாவை எழுப்புகிறார்.
பாண்டியும் சத்தம் செய்யாது நானே எழுப்புகிறேன் எனது மகளை என்பதுபோல் உதட்டின் மீது விரலை வைத்து சைகை செய்தபடி மெதுவாக வந்து கனியின் மடியிலிருந்த பாப்பாவை தூக்க பாப்பா இப்பொழுது நன்றாக விழிக்கிறாள்
சந்தோஷமாக தந்தையின் கழுத்தை கட்டிக்கொண்டு அவரின் முகத்தை பார்க்க தந்தையின் முகமோ அப்படி ஒரு அழகு
அழகிய வட்ட முகம், சுருள்முடி ,துறுதுறு கண்கள்,கடா மீசை வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை என மிகக் கம்பீரமாக இருக்கிறார் தனது தந்தை இளைஞனாக இருக்கும் பொழுது இத்தனை அழகா என்று பெருமை கொண்ட பாப்பா சந்தோஷத்தில் அப்பா என்று தந்தையின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்
பிறகு தாய் தந்தை இருவரையும் எழுப்பி இருவர் நடுவிலும் கைகளைக் கோர்த்தபடி அந்த இடத்திலே சந்தோஷத்தில் சுற்றுகிறாள்...இனி அவளின் இளவயது தந்தையுடன் தினமும் விளையாடலாம் அந்த பாசத்தை நேரடியாக அனுபவிக்கலாம் தந்தை இனி அவளை விட்டு எங்கேயும் செல்ல போவதில்லை
அவர்களின் குடிசையை சுற்றிலும் இப்பொழுது நீலா வெளிச்சத்துடன் அவர்களின் மூவர் சிரிப்பு சத்தம் மட்டுமே
ஆனால் இங்கு பாப்பாவின் உடல் அருகிலேயே தட தட வென சத்தம் அவள் கன்னத்தில் ராஜா அதிர்ச்சியில் தட்ட சில நேரத்திற்கெல்லாம் மருத்துவர் ஒருவர் வந்து அவள் இறந்ததை உறுதி படுத்த…
மகளின் இழப்பை பாண்டியிடம் கூற சென்ற வேலையாள் ஒருவர் வாசல் அருகே வந்து அய்யா பெரியய்யா அப்படியே கிடக்கறாரு என்று கத்த
மருத்துவர் உடனே அவரின் அறைக்குச் சென்று அவரை பரிசோதிக்க அவரும் சற்று நேரத்திற்கு முன்புதான் மாரடைப்பால் காலமாகி இருக்கிறார் என்பது தெரிந்தது.
ராஜாவோ அழுகையுடன் தொலைபேசியில் உறவினர்களுக்கு எல்லாம் தொலைபேசியில் கூறுகிறார் அப்பாவும் பொண்ணும் ஒன்னாவே போய் சேர்ந்துட்டாங்க என்று
மறுநாள் இவர்களின் பூத உடல்களை ஒரே வாகனத்தில் எரியூட்டும் நிலையத்திற்கு எடுத்துச் செல்ல
அங்கு கிராமத்தில் அந்த சிறிய வீட்டில் கனி பாண்டி பாப்பா என மூவரும் மிகவும் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் அங்கிருந்தபடியே இங்கு நடக்கும் சடங்கு சீர் அழுகை எல்லாவற்றையும் பார்த்து ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் சிரித்துக் கொள்கின்றனர்.
முற்றும்.