கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

மஞ்சம் 10

மஞ்சம் 10

நிரஞ்சனின் அலுவலகம் வழக்கம் போல் பரபரப்பு நிறைந்து காண பட்டாலும் அமைதியாய் தன்னில் மூழ்கி இருந்தது. சி ஏ இன்டர் முடித்து ஆர்டிகல் ஷிப் எனும் மூன்று வருட பயிற்சிக்காக அந்த நிறுவனத்தில் சேர்ந்து இருக்கும் பயிற்சி மாணாக்கர்கள் தாங்கள் ரிப்போர்ட் செய்யும் ஆடிட்டர்களிடம் தங்கள் சந்தேகங்களை கேட்டுக் கொண்டிருந்தார்கள். சமீபத்தில்தான் சிவகாசி, கோவை போன்ற இடங்களில் இருக்கும் சில நிறுவனங்களுக்கு அவர்களை அந்த நிறுவனம் ஆடிட்டிங் செய்ய அனுப்பியிருந்தது. ஒரு சம்பந்தமான சந்தேகங்களைதான் அவர்கள் எழுப்பிக் கொண்டிருந்தது. இவற்றில் எல்லாம் மனம் லயிக்காமல் அங்கு தனது அறையில் லேப்டாப்பில் மூழ்கியிருந்த நிரஞ்சனிடம் தனது எண்ண குவியல்களை தேக்கி லயித்திருந்தாள் சுமனா. அவளுக்கு இன்னும் ஆறு மாதங்கள் தான் பயிற்சி மீதமிருக்கிறது. அதன் பிறகு அவள் தன்னை பரீட்சைக்கு தயார் செய்து கொள்ள வேண்டும். சுமனா சிஏ இன்டரில் பதினோராவது ராங்கில் தேர்ச்சி பெற்றவள். அதனாலேயே முதல் நிலையில் இருக்கும் இந்த நிறுவனத்தில் அவளுக்கு பயிற்சிக்கான வாய்ப்பு எளிதாக கிடைத்தது. ஏற்கனவே எம்.காம் முடித்திருக்கிறாள்.

இங்கு வந்த அன்றிலிருந்து அவள் மனதில் ஒட்டிக் கொண்டான் நிரஞ்சன். முதலில் பொழுது போக்கிற்காக பார்த்துக்கொண்டிருந்தாள்அவனிடம் நேரடியாக ரிப்போர்ட் செய்வதற்கு அவளுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்றாலும், நிரஞ்சன் அலுவலகத்தில் இருக்கும் நேரம் எல்லாம் அவள் கண்கள் அவனையே தான் வட்டமிடும். சுமனாவின் அம்மா குடும்பத் தலைவி. அப்பாவோ வங்கியில் மேலாளராக இருக்கிறார். அப்பர் மிடில் கிளாஸ் எனும் வகையை சேர்ந்தது அவர்களது குடும்பம். இருபத்திநான்கு வயதான சுமனா இத்தனை வருடங்கள் படிப்பில் மட்டும் தான் தனது எண்ணத்தை வைத்திருந்தாள். ஆனால் இப்போது சமீப காலமாக நிரஞ்சனின் கண் பார்வைக்காக காத்திருக்கிறாள். இங்கு வந்து இது மூன்றாவது வருடம் ஆனால் இதுவரை அவனது பார்வை இவளிடம் திரும்பியதே இல்லை. எத்தனையோ மாணாக்கர் போல் இவளும் அவனுக்கு. இவள் இங்கு வந்து சேரும்போது தான் அவன் இங்கு வேலைக்கு சேர்ந்து இருந்தான். அவன் வேலைக்கு சேர்ந்த பிறகு நிறுவனத்திற்கு அசுர வளர்ச்சி. இன்டர்நேஷனல் டாக்ஸ்சேஷனில் அவன் வேகம் அதிகம். வரி சம்பந்தமான அத்தனை நுணுக்கங்களும் அவன் விரல் நுனியில். இதனாலேயே துபாய் மற்றும் அரபு நாடுகளிலும், தொழில் செய்து கொண்டிருக்கும் இந்தியர்கள் அவனை நாடுவது அதிகரித்திருந்தது. நிறுவனத்திற்கு இது பெருமதிப்பு. அதனால் அவனுக்கு நிறுவனத்தில் சலுகைகள் அதிகம்.


மூன்று வாரங்களுக்கு முன்புதான் தைரியத்தை கூட்டி கொண்டு தனது மனதில் இருப்பதை அவனிடம் சொல்லி விட்டாள் சுமனா. அவள் சொன்னவற்றை ஒன்றும் நிரஞ்சன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் வீட்டில் இருப்பவர்களிடம் என்னவென்று சொல்லியிருப்பாளோ தெரியாது... அவள் தந்தையே ஒருமுறை இவனை சந்திக்க வேண்டும் என்று கூறி, இவனிடம் சுமனாவை திருமணம் செய்து கொள்வது பற்றி கேட்டு விட்டார். அதற்குப் பிறகு அவனுக்கு நிஜமாகவே என்ன சொல்வது என்று புரியவில்லை. அதிதியின் நினைவுகள் இதயத்தில் அழுத்தம்தான். ஒரு தலையாக உண்டான காதல் இவனளவில் ஈரம் இன்னும் காயவில்லை. அவளை மறந்து விட்டு இன்னொரு பெண்ணை தனது மனைவியாக ஏற்க முடியும் என்றெல்லாம் இதுவரை நினைக்கவில்லை. ஆனால் அம்மாவுக்காக என்று இருந்தாலும் யாராவது ஒரு பெண்ணைத் திருமணம் செய்து தான் ஆகவேண்டும் என்பதில் மட்டும் தெளிவாக இருக்கிறான்.


இவன் காதலித்த பெண்ணுக்கு திருமணமாகி மூன்று முழு வருடங்கள் முடிந்து விட்டது.இப்போது அவள் வேறு ஒருவனின் மனைவி, அவளை மனதில் நினைப்பது மஹா பெரிய தவறு என்பதெல்லாம் புரிந்தாலும் கூட இவனால் அவள் நினைவுகளில் இருந்து வெளிவர முடியவில்லை.


சுமனா தன் அப்பாவிடம் இவ்வளவு விரைவாக சென்று தன் காதலை சொல்லி விடுவாள் என்றும் இவன் நினைத்திருக்கவில்லை. அவள் வெறும் நேரம் கடத்துவதற்காக காதலிப்பதாக சொல்லவில்லை.அவள் தன்னை காதலிப்பதாக சொன்ன போது இது வெறும் ஈர்ப்பு என்று நினைத்திருந்தான் நிரஞ்சன்.திருமணம் என்ற வாழ்நாள் முழுமைக்குமான பந்தத்தில் நிலைக்க விரும்புகிறாள் என்பதே மனதில் ஏதோ இதம் கொடுத்தது. இதை பற்றி யோசித்தால் என்ன என்று தோன்றியதால் தான் இந்த விஷயங்களுடன் மனதில் இருப்பதை தன் அம்மாவிடமும் அவன் பகிர்ந்து கொண்டிருந்தான்.


சமீபகாலமாக அதியிடம் இருந்து கூட எந்த மெயில்களும் வருவதில்லை.அப்போது என்றால் அவள் தன் திருமண உறவில் நிலைத்து விட்டாள் என்றுதானே அர்த்தம்! தான் என்ன எதிர்பார்க்கிறோம் என்பது அவனுக்குப் புரியவில்லை. எந்தப் பெண்ணைப் பற்றி நினைத்தாலும் அவன் மனமோ அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறது.

சரி தவறு என்பதற்கெல்லாம் அப்பால் இதயம் அதில் இருக்கும் காதல் என்பது இது வேறு மாதிரியான உணர்வு. இதை எல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது. சுமனாவிடம் இவற்றைப்பற்றி எவ்வாறு ஆரம்பிப்பது... அவளை மறுக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை. ஆனால் தனது மனதில் இருக்கும் பெண்ணை பற்றி தன்னிடம் திருமணம் பற்றி கேட்டிருக்கும் பெண்ணுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும் என்று அவன் நினைத்தான். இதில் தவறு இல்லை.

அவன் சுமனாவை பற்றி யோசித்தான்.

மிக அழகான பெண் புத்திசாலியும் கூட.தைரியசாலி... தான் இருக்கும் இடத்திற்கு தக்கவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் குணம் அவளுக்கு உண்டு. குடும்ப பாங்கான பெண்.


என்னை காதலிப்பதாக சொல்கிறாள்.ஒரு ஆணாக எனக்கு வேறு என்ன வேண்டும் என்றெல்லாம் யோசித்து பார்த்தான். ஆனாலும் அவன் மனம் அதியுடன் சுமனாவை ஒப்பிட்டு பார்த்தது. எதற்கும் இந்த விஷயத்தை தள்ளிப்போடுவது தான் சரி என்று மனதில் தோன்றியது. அவனால் அதியிடமிருந்து தன்னை பிரித்து எடுக்க முடியவில்லை. ஆனால் அதை அவன் செய்தாக வேண்டும்.


சுமனாவின் அப்பாவிற்கு ஃபோன் செய்து தனக்கு இதை பற்றி யோசிப்பதற்கு நேரம் வேண்டும்.அவளது பரிட்சைகள் முடிந்து அவள் வேலைக்கு சேர்ந்த பிறகு இந்த விஷயத்தை பற்றி பேசிக் கொள்ளலாம். படிக்கும் நேரத்தில் இதுபோன்ற எண்ணங்கள் அவள் மனதில் அலைபாய வைக்கக் கூடும். எனக்கும் என் வீட்டில் பேச வேண்டும் எதைப் பற்றி யோசிக்க நேரம் வேண்டும் என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டான் . அவன் கூறுவதில் நியாயம் புரிந்தவராக

அவரும் ஒத்துக் கொண்டார்.அதைத் தன் பெண்ணிடமும் சொல்லிவிட்டார்.


சுமனாவுக்கோ நிரஞ்சன் மீதான காதல் கூடிக்கொண்டே சென்றது. இதுபோன்ற அக்கறை காட்டும் ஒருவனை விட்டு விடக் கூடாது என்பதில் தீவிரம் மனதில் உண்டானது.


நிரஞ்சனின் மனதிலோ தான் தீர்மானமாக எதையும் சொல்லாத சமயத்தில் அந்தப் பெண்ணின் மனதை எந்தவித காரணத்தைக் கொண்டும் சலனப்படுத்தி விட கூடாது என்ற எண்ணம்.

உண்மையை சொல்லப்போனால் அவளால் தன்

கைவேலையில் தனது எண்ணங்களை செலுத்த முடியவில்லை.அவள் என்னை முழுவதும் நிரஞ்சனின் ஆக்கிரமிப்பு.

ஒவ்வொரு நொடியும் அவனது ஆளுமை, அவனது கம்பீரமான தோற்றம்,அவனது அழகு,அவனது திறமையை, அவனது பேசும் சாமர்த்தியத்தை,

அவனைப் பற்றி சக ஆடிட்டர்கள் புகழ்வதை , கிளையன்ட்கள் அவனையே தேடி வருவதை அவனது பொறுப்பு,வேகம்,

நிதானம் ஒவ்வொன்றையும் அணுவணுவாக ரசிக்க தொடங்கி இருந்தாள்.

நிரஞ்சனின் நினைவுகளில் தான் தேர்வுகளுக்கு தயாராக வேண்டும் என்ற எண்ணம் கூட அவளுக்கு வரவில்லை.

இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அவள் அப்பாவுக்கு நிரஞ்சனின் கூற்று எவ்வளவு சதவிகிதம் சரியானது என்பது புரிந்தது.


நேரடியாக சுமனாவின் அப்பா நிரஞ்சனிடம் பேசிவிட,நிரஞ்சன் சுமனா அவளிடம் 'நீ பரிட்சையில் வெற்றி பெற்றாக வேண்டும். இல்லாவிட்டால் இதைப் பற்றிய பேச்சு பேசியதாக யோசிப்பதற்கு கூட நான் தயாராக இல்லை என்று விட்டான்.

சுமனாவுக்கு மனது அளவு இது பெரிய அடி.

தான் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் அவளுக்கு புரிந்தது.

ஆனாலும் அவளால் அவனிடமிருந்து தன்னை மீட்டுக் கொள்ள முடியவில்லை. அதே அலுவலகத்தில் சுமனா உடனேயே பயிற்சியில் சேர்ந்திருக்கும் அர்மானுக்கு சுமனாவின் மீது கண்ட நாள் முதலாய் காதல். ஆனால் அவள்தான் கண்டுகொள்வதாக இல்லை.


சியாடல் வீட்டில்...


அதிதிக்கு விநயனுடன் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று தான் தோன்றுகிறது. அத்தனை நடந்த பிறகும் தன் மீது எந்த தவறும் இல்லை என்று பேசுபவரிடம் என்ன சொல்வது எதை பற்றி கேட்பது...

அவனுக்கும் இந்த வாழ்க்கை சலித்து விட்டது. அவள் மீது எந்த ஈர்ப்பும், காதலும் இல்லை. மூன்று வருடங்களாக அவன் எதிர்பார்த்த எந்த விஷயமும் அவளிடம் கிடைக்கவில்லை. மூன்று வருடங்களாக அவள் இன்னும் முதல் கட்டத்தில் தான் இருக்கிறாள். அவர்களது உறவு சீரடைய எந்த வழியும் இல்லை என்று அவனுக்குத் தோன்றியது. இதற்கு மேல் இழுத்து பிடித்து நிலைக்க வைப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?


அதிதி தனது அறைக்குள் சென்று விட்டாள்.அவளுக்கு யோசிப்பதற்கு நிறைய இருக்கிறது அடுத்தது என்ன என்று அவளுக்கு புரியவில்லை. என் வீட்டில் இந்த விஷயங்களை எப்படி பகிர்ந்துகொள்வது? அப்பாவிற்கு இவற்றை எப்படி புரிய வைப்பது...

"சுயமரியாதை என்பது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அடிப்படையான ஒன்று. அவற்றை இழந்து விட்டு உயிர் வாழ முடியாது. அதுமட்டுமின்றி இங்கு அவமான பட்டிருப்பது அவளது பெண்மை. மூன்று வருடங்களாக வாழ்க்கையை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும் என்று இருந்த நம்பிக்கை சமீப கால இரவுகளில் சுக்குநூறாக உடைந்து இருக்கிறது. இந்த அந்தரங்கத்தை எப்படி அப்பாவிடமும் அம்மாவிடமும் பகிர்ந்து கொள்ள முடியும்?


தவறு செய்வது ஆணாக இருந்தாலும் அவனை திருத்தி அவனுடன் தான் வாழவேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் சூழல் நமது.

ஆணின் எல்லாத் தவறுகளுக்கும் பெண்ணைத் தான் குற்றம் சொல்கிறார்கள். என்ன செய்வது என்று தெரியவில்லை. கணவன் அவனைத் திருத்தி வழிக்கு கொண்டு வர தெரியவில்லை, இவளெல்லாம் என்ன பெண் என்று பலப்பல அதிருப்திகளை பெண்ணின் மீது பொருத்தி அவளை அதிரடியான தனது வாழ்க்கை பற்றிய தெளிவான முடிவுகளை எடுப்பதற்கு அனுமதிக்காமல் புழுங்கி தவிக்க செய்கிறது இந்த சமூகம்.

பெண்ணின் உணர்வுகளை கொன்று அவள் அந்த ஆணுடன் தான் வாழவேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் சுற்றுப்புறம்.

இதை பெற்றோரிடம் சொன்னால் அவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள், என்னவென்று சொல்லி புரிய வைப்பது சுற்றும் இருப்பவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் விடை என்ன?
 
Top