geethasuba2007
Member
வித்யா வீட்டிலிருந்து ஒரு ஹோட்டலில் தனக்கான அறையை எடுத்துக்கொண்டு ஒரு வாரம் தங்கி கொண்டான் நிரஞ்சன். Lஎப்படியும் வீட்டுக்கு சென்று உரிமையுடன் அப்பா -அம்மா என்று அழைத்துக் கொண்டு அண்ணன் குடும்பத்துடன் சந்தோஷமாக நேரத்தைக் கழிப்பதற்கு அவனுக்கு வாய்க்கவில்லை.
அதேபோல் இப்போது ஒரு வாரமாக இங்குதான்சென்னையில் தங்கி இருக்கிறேன் என்று அம்மாவுக்கு சொன்னால் அம்மாவின் மனது எப்படி யோசிக்கும் என்றும் அவனுக்கு தெரியவில்லை.அதனால்தான் சென்னையில் இருப்பதை பற்றி யாருக்கும் சொல்லாமல் அமைதியாக இருப்பதே சாலச் சிறந்தது என்று முடிவு செய்து கொண்டான்.
பள்ளியில் படிக்கும் போது இருந்த அதே கோவம், வேகம் அவனிடம் உண்டு. ஆனால் படிப்பு,அந்தஸ்து, போன்ற விஷயங்களால் அவற்றை மூடி வைக்க புரிந்து கொண்டான். அதேபோல் கோபத்தை காண்பிக்கும் வழிமுறையையும் மாற்றிக் கொண்டான்.
வினயனை வித்யா -விஸ்வம் இருவராலும் ஒன்றும் செய்ய முடியாமல் போகலாம். ஆனால் எனது கைகளை அவனால் கட்டிப் போட முடியாது என்று சிரித்துக்கொண்டவன் ஏதேச்சையாக வினயனை இரண்டு நாட்களின் பின் சென்னையின் மிகப்பெரிய மாலில் பார்த்தான். வினயன் முதலில் நிரஞ்சனை பார்க்கவில்லை.கஃபேயில் அமர்ந்து தன் போக்கில் ஞாயிறு அன்று யு எஸ் திரும்ப டிக்கெட் புக் செய்ய எஜன்டிடம் பேசி கொண்டிருந்தான். அதாவது இன்னும் மூன்றே நாட்கள். அவன் முயற்சி செய்து பார்த்துவிட்டான். நிஷ்பலன் தான். அதனால் ஏஜென்ட் மூலம் அடுத்த முயற்சி. அங்கு நடாலி இவனை எப்போது வருவாய் என்று உருகுகிறாள். அவள் உருகலில் இவன் கரைகிறான்.. தெய்வீக காதல். இவன் பேசுவதை கஃபே காபி டேயின் இன்னொரு புறம் அமர்ந்து கேட்டு கொண்டிருந்தது சாட்சாத் நிரஞ்சன்தான். அவன் மனதில் சிறு திடுக்கிடல். வினயன் இங்கிருந்து சீக்கிரம் கிளம்புவது அவ்வளவு சரி இல்லையே! என்ன செய்யலாம் என்று அவன் மனம் வேகமாக கணங்கிட்டது.வினயன் கிளம்பும் வரை காத்திருந்தவன் அவன் பின்னோடே சென்றான். வினய் தனது யூனிகார்னில் வந்திருக்க நிரஞ்சன் காரில். வழியில் யாருடனோ பேசியவன் வினயன் பின்னோடே சென்றான். மாலில் இருந்து வினயன் கிளம்பும் போதே மணி எட்டுக்கு மேல். வழியில் டிராபிக் தாண்டி நங்கநல்லூர் செல்ல அவனுக்கு பத்து மணிக்கு மேல் ஆகியது. நிரஞ்சன் காரால் விநயனை தொடர முடியவில்லை. ஆனால், வினயன் ஏர்போர்ட் எதிரில் பாலம் தாண்டி திரும்புகையில் எதிரில் வந்த வாகனத்தில் மோதி கீழே விழுந்தவனுக்கு காலில் எலும்பு முறிவு, வலது கையிலும் தான். மோதிய வாகனம் நிற்காமல் பறக்க, அந்த நேரம் அங்கு ஆள் நடமாட்டம் இல்லை.அதற்குள் விநயனை தேடி நிரஞ்சன் வந்துவிட்டான். வலி தாங்காமல் வினயன் மயங்கிவிட விநயனை ஆம்புலன்ஸ் அழைத்து அருகிருந்த பிரபல மருத்துவமனையில் சேர்த்தவன் அவனது பெற்றோருக்கு அழைத்து தகவல் சொல்லி விட்டு காத்திருந்தான்.வித்யாவுக்கும் அழைத்து சொன்னவன் அதிக்கு சொல்ல வேண்டாம் என்றுவிட்டான்.
என்ன இருந்தாலும் நம்ம நீரு பக்கா ஜெண்டில்மேன் இல்லையா மக்களே?
ஏனோ வித்யாவுக்குதான் நிரஞ்சன் இன்னும் சென்னையிலா இருக்கிறான் என்று தோன்றுகிறது.
நிரஞ்சன்மருத்துவ மனையில் காரிடோரில் அமைதியாக உட்கார்ந்திருந்தான். யாராவது வினயின் வீட்டிலிருந்து வந்தால் தான் அங்கிருந்து செல்ல முடியும். அட்டெண்டர் இல்லாமல் சேர்க்க முடியாது. ஏற்கனவே அவனை சேர்ப்பதற்குள்,'இது அக்சிடேன்ட் கேஸ்,அதனால போலீசில தகவல் சொல்லிடுங்க'என்று மருத்துவமனையில் நிர்பந்திக்க அந்த மருத்துவ மனையில் வேலை பார்க்கும் தோழன் மூலம் பிரச்சனையை சமாளித்தாயிற்று. இப்போது விநயனின் பெற்றோர் அவர்கள் வேறு எந்த நிலையில் வருவார்களோ?
உப்ஸ்... இன்னும் எவ்வளவு சமாளித்தாக வேணுமோ?அவனுக்குள் பெருமூச்சு எழ,கேன்டீன் சென்று சூடாக ஒரு டீ வாங்கிக்கொண்டான். அவனுக்குள் மனதில் சந்தோஷ சாரல்.
மனிதாபிமானம் இல்லாமல் இதென்ன சந்தோஷமா என்று யாரேனும் கேட்டால் அவனுக்கு சிரிப்பை அடக்க முடியாமல் பெரும்சிரிப்பு சிரிக்க கூடும்.அந்த அளவுக்கு அவன் மனதில் வடிகால். அடித்து பிடித்து வினயனின் அம்மாவும் அப்பாவும் வர சற்றே ஆசுவாசமாய் உணர்ந்தான் நீரு.
அவர்கள் வர விடி காலை ஆகி விட்டது.இருவரும் அறுபதை தாண்டியவர்கள். முகத்திலேயே பதட்டம்- சோர்வு. அவர்களை பார்க்கும் பொழுதே புரிந்தது தான் இப்போது கிளம்ப முடியாது என்று. அவர்களுக்கு நீருவை ஞாபகம் இல்லை. ஆனால் நீரு மறக்கவில்லை. அவர்களிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டான். இருவருக்குமாக டீ வாங்கி வந்தான். அவர்கள் முகத்தில் வியப்பு.
கொஞ்சம் மௌனம்...இந்த பையன் இங்க எப்படி எனும் கேள்வி அவர்கள் முகத்திலேயே தெரிய, நா கார்ல பழவந்தாங்கல் வந்துக்கிட்டிருந்தப்போ, பாத்தேன்... ஸோ ஹாஸ்பிடலைஸ் பண்ணிட்டு உங்கள கூப்பிட்டேன். அந்த நேரத்திலும் வினயனின் அப்பாவுக்கு திடீரென்று சந்தேகம் முளைத்தது,எங்க நம்பர் உங்களுக்கு எப்படி தெரியும் தம்பி...
இதற்கு நிரஞ்சன் என்னவென்று பதில் சொல்லுவான்? அது... அது வந்து வித்யா அத்தைகிட்ட இருந்து வாங்கிக்கிட்டேன். பெரியவரும் வித்யா இவனுக்கு அத்தையா என்று யோசித்துக் கொண்டிருந்தார். அவருக்கு இப்பொழுது தான் ஞாபகம் வந்தது, அதிதி திருமணத்தின் சமயம் இந்தப் பையன் அதிதியின் கூடவே இருந்ததும் அங்கு திருமணத்திற்கு வந்திருந்த நிறைய பேர் இவன் யாரு என்று இவரை துளைத்து எடுத்ததும், அதிதியின் உடனான நிரஞ்சனின் நெருக்கம் அப்போதே அவருக்கு கவலையாக இருந்தது. மேடையிலிருந்து அதிதி பக்கத்தில் நின்றுகொண்டிருந்த விநயனை பார்க்காமல் கீழே சுற்றிக்கொண்டிருந்த நிரஞ்சனையே பார்த்துக் கொண்டிருந்தாள். காலப்போக்கில் அதிதி அமெரிக்கா சென்றுவிட நிரஞ்சன் பற்றிய ஞாபகங்கள் அவருக்கு சுத்தமாக போய்விட்டது.
காலையில் நிரஞ்சன் வித்யாவிற்கு மீண்டும் அழைத்த மருத்துவமனையின் நிலவரங்களை பகிர்ந்துகொண்டவன் ' நீங்க வந்து பாக்குறதாக இருக்கீங்களா அத்த...என்று கேட்டு வைத்தான். நியாயத்தில் வித்யாவிற்கும் செல்வதா வேண்டாமா என்ற குழப்பம் தான்.
தெரியல நீரு... அதி அப்பா கிட்ட கேட்டு தான் முடிவு பண்ணனும். எனக்குமே அங்க போகணுமானு குழப்பம்தான் என்றாள்.
தன்னை சட்டென்று சுதாரித்துக் கொண்ட நிரஞ்சன், நீங்களும் சாரும் வேணா வந்துட்டு போங்க, அதி வரவேணாம். இதுதான் சாக்கு என்று அவளை இங்கே நிறுத்தி வச்சிடுவாங்க. இனிமேலாவது அவ கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டும் என்று விட்டு அழைப்பை துண்டித்தான். ஒரு அரை மணி நேரத்தில் வித்யா மீண்டும் அவனை அழைத்து' நீ எங்கே இருக்க நீரு என்றாள்.' 'இதோ கிளம்பி கிட்டு இருக்கேன் அத்த... என்றான் நிரஞ்சன்.
உடனே வித்யா பதறியவளாக' ஐயோ கிளம்பாத நீரு... நானும் அவரும் இப்போ அங்க வரோம். நீ கூட இருக்கணும்னு சார் யோசிக்கிறார் என்றாள்'.
'நிரஞ்சனிடம் வெளிப்படையாகவே புன்னகை. சரி அத்தை,நீங்க வாங்க நான் வெயிட் பண்றேன்' என்றுவிட்டு வாட்ஸப்பில் மருத்துவமனை சார்ந்த விபரங்களை வித்யாவிற்கு பதிவு செய்து அனுப்பினான்.
அடுத்த முக்கால் மணி நேரத்தில் வித்யாவும் விஸ்வமும் அங்கு வந்து சேர்ந்து விட்டார்கள். நேராக வெளியே காரிடாரில் வினயனின் அப்பா அம்மாவை சந்தித்து விட்டு வினயனின் அறைக்குள் சென்று பார்த்துவிட்டு வந்தார்கள். அவன் மருந்துகளின் உபயத்தால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அவனைத் தொந்தரவு செய்வதற்கு இவர்களுக்கு விருப்பம் இல்லை. வெளியே வந்தவர்கள் மீண்டும் வினயின் அப்பா அம்மாவிடம் 'உங்களுக்கு என்ன வேணும்னாலும் எப்போ ஹெல்ப் வேணும்னாலும் எங்க கிட்ட கேளுங்க தயங்க வேண்டாம் என்றார் விஸ்வம். சட்டென்று வினயனின் அம்மா விஷ்வத்திடம் ' அண்ணே, அதி பொண்ண அனுப்பி தரமுடியுமா... எங்களால் சமாளிக்க முடியுமான்னு தெரியல ' என்றாள்.
அருகில் நின்று கொண்டிருந்த நிரஞ்சனுக்கு கோபத்தில் கைமுஷ்டி இறுகியது. ஆனால் இதற்குத் தான் பதில் சொல்வது அவ்வளவு சரியாக இருக்காது என்று அமைதி காத்தான். வித்யாவிற்கு மகளின் அழுகையை கண்ட பிறகு இந்த உறவை வேண்டாம் என்ற எண்ணம்தான். ஆனால் விஸ்வம் என்ன சொல்லுவார் என்ற பதைபதைப்பு அவளுக்கும் இருந்தது.
சற்று அமைதியாக இருந்த விசுவம் 'உங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது உதவி வேணும்னா என்கிட்ட கேளும்மா... என்னால முடிஞ்சத நான் செய்கிறேன். ஆனா அதிதியை இதுல இழுக்க வேணாம். அவ பட்டதெல்லாம் போதும் என்றார்'. அந்த வார்த்தைகளில் அவ்வளவு தெளிவு... இதுதான் முடிவான முடிவு என்றது அவர் சொன்ன பாவம்.
நிரஞ்சன் வித்யா இருவருக்கும் இப்பொழுதுதான் மூச்சே வெளியே வந்தது.
அதே சமயம் வினயனின் அப்பா, 'இந்த பையனுக்கும் உங்களுக்கும் இன்னும் காண்டாக்ட் இருக்கா... இல்ல இந்த பையன் உங்களுடனே சுத்துறானே அதுக்கு தான் கேட்டேன் என்று விஷத்தை கக்கினார்.விஸ்வம் சொன்ன பதிலில் அவருக்கு கோவம் என்று வெளிப்படையாகவே தெரிந்தது.அதிதியின் வாய்மொழியாக வினயனை பற்றி அறிந்திருந்த வித்யாவிற்கு இவர் அவனுக்கு சரியான அப்பா தான் என்று தோன்றாமல் இல்லை.
ஆனால் விஸ்வம் வித்யா ஏதும் பதில் சொல்லவில்லை.கீழே வந்த விசுவம் டாய்லெட் செல்ல வேண்டுமென்று சென்றுவிட, வித்யாவின் பார்வை நிரஞ்சனை கூறு போட்டது. அவள் பார்வை கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு நிரஞ்சனுக்கு தயக்கம்.
நிரஞ்சன் ஏதாவது சொல்லுவான் என்று அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த வித்யாவிற்கு பொறுமை பறக்க, அவனும் கல்லுளிமங்கனாய் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
வித்யாவே வாயை திறந்து கேட்டுவிட்டாள் 'நீ இன்னும் பெங்களூரு போகலைன்னா வீட்டில் இருந்து ஏன் கிளம்பினே நீரு?'
இல்லத்த... அதி அழுவது பார்த்து என்னால தாங்க முடியல... அதோட நா அங்கேயே இருந்தா அவளுக்கும் சங்கடமா இருக்கும் என்ற அவனின் பார்வை கண்டிப்பாய் வித்யாவின் பார்வையை பார்த்து இல்லை. எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் பதில் சொன்னான். அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது வித்யாவுக்கும் புரிகிறது. அதிதி தன்னுடன் பேசிக் கொண்டிருந்ததை நிரஞ்சன் எவ்வளவு தூரம் கேட்டிருந்தான் என்பது வித்யாவிற்கு தெரியாது. ஆனால் அதியின் கதறல் குரலில் நிரஞ்சன் அவளது அறைக்கு வந்து விட்டான். ஒருவேளை அவள் சொன்னதை நிரஞ்சன் முழுதாக கூட கேட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வித்யாவிற்கு இப்பொழுது புதிதாக எழுந்தது.
விஸ்வம் வருவதற்குள் நிரஞ்சனிடம் இதையும் கேட்டுவிட வேண்டும் என்று முடிவு செய்த வித்யா நிரஞ்சனிடம் ' அப்போ இந்த ஆக்சிடென்ட் ஏற்பாடு செஞ்சது நீ தான் இல்லியா நீரு ' என்று வெகு அமைதியாக கேட்டாள். நிரஞ்சனுக்கு தன்னை சுதாரிக்கவே நேரம் தேவைப்பட்டது. வித்யாவுக்கு இப்படி தோன்றக் கூடும் என்று நிரஞ்சன் நினைத்து பார்க்கவில்லை.
சற்று திகைத்தாலும், சச்ச... இப்படி எல்லாம் ஏன் அத்தை யோசிக்கிறீங்க? இதையெல்லாம் நான் பண்றவன் இல்லன்னு உங்களுக்கு தெரியாதா என்று பதில் கேள்வி கேட்டான்.
ஆனால் வித்யா அசர்வதாக இல்லை. ஆமா நீரூ... எனக்கு தெரிஞ்சு நிரஞ்சன் இதையெல்லாம் பண்றவன் இல்ல. பட் அதி அழுவதை தாங்கமுடியாத நிரஞ்சன் இதையெல்லாம் செய்யக்கூடும் என்று விட்டாள்.
நிரஞ்சன் முகம் போன போக்கை பார்த்து வித்யா அடுத்த கேள்வியை கேட்டாள். என் வீட்டிலிருந்து கிளம்பி நேரா பெங்களூர் போறேன்னு தானே சொன்னே. இப்போ எங்க தங்கி இருக்க?
நிரஞ்சன் வித்யா இதை எதற்காக கேட்கிறாள் என்று புரிந்து கொண்டவனாக தலையை குனிந்து கொண்டு, இப்போ பார்க்ல தங்கியிருக்கேன் அத்தை என்றான்.
நீ இன்னும் சென்னையில தான் இருக்கேனு உங்க அம்மாக்கு தெரியுமா நீரு? அடுத்ததாக வித்யாவிடம் இருந்து.