geethasuba2007
Member
மஞ்சம் 4
நிரஞ்சனோ, என்னாச்சு இவளுக்கு, முன்னாடி என்னோடயாவது பேசுவா.. இப்போ சுத்தம்.. என அலுத்துக் கொண்டான். அவனால், அவளிடம் அழுத்தமாய் இருக்க முடியவில்லை. அவளது பாவமான பால் முகம், அவனை இம்சை செய்தது.
பிரண்ட்ஷிப் கொள்ள ஈகோ எதற்காக, என்று முடிவு செய்தவனாக தானே அவளிடம் சென்று பேசிவிடுவது என முடிவெடுத்து, வீட்டுப்பாடங்கள் செய்ய உட்கார்ந்தான்.
அன்று இரவு முழுவதும் நிரஞ்சன் தன்னை ஒதுக்குவதாக எண்ணி எண்ணி மருகிய சிறுமிக்கு ஜுரம் வந்தது தான் மிச்சம். உடல் சூடு வேகத்தில் அவள் புலம்பல் முழுதும் நிரஞ்சனை சுற்றியே. வேலை பளுவில் குழந்தையுடன் நேரம் செலவழிக்க முடியாத நிலைமை எண்ணி வெகுவாக களைத்தாள் வித்யா.
பெற்றோரிடம் கிடைக்காத தான் தேடும் ஏதோ ஒன்றை, இல்லை நெருக்கத்தை சிறுமி தோழனிடம் தேடினாள். அதுவும் கிடைக்காது எனும் எண்ணம் அவளுக்கு ஏக்கமாய், ஜுரம் வடிவில்.
விஸ்வம் வெகுவாக வியந்தார். தன் மகள் எப்படியோ ஒரு நெருங்கிய நண்பனை சம்பாதித்திருக்கிறாளே ! அவள் தனிமை அவரை எப்போதும் வதைக்கும் ஒன்று.
ஒருவேளை அதிதியை ஒற்றை பிள்ளையாக நிறுத்தாமல் வித்யா சொன்னது போல் இன்னொரு குழந்தை பெற்றுக் கொண்டிருந்தால் இன்று மகள் தனிமையை இவ்வளவு மோசமாக அனுபவிக்க மாட்டாளோ என்ற அவருக்கு இப்போதெல்லாம் தோன்றுகிறது.
உள்ளூர மகள் மீது பாசம். அவர் வேலை அவரை மகளுடன் நேரம் செலவழிக்க அனுமதி கொடுக்கவில்லை. தன்னால் முடிந்த அளவில் தான் சம்பாதிக்கும் பணத்தில் மகளுக்குத் தேவையான சந்தையில் விற்கும் நவீனரக விளையாட்டு சாமான்களும், எலக்ட்ரானிக் பொருட்களுமாக அவள் அறையை நிரப்பினார் விஸ்வம்.
ஆனால் சிறுமி ஆசையாக சைக்கிள் கேட்டால் கிடைக்காது. அவள் தனியாக ரோட்டில் ஓட்ட வேண்டாம் என்று விஸ்வம் பயப்படுவார். சொல்லி சொல்லி பார்த்து வித்யாவிற்கு அலுத்து விட்டது. மகளை தனியாக சைக்கிள் எடுத்து ஒட்டிக்கொண்டு வெளி அனுப்புவதற்கு கூட அவருக்கு உடன்பாடு இல்லை. அதேசமயம் அவளுடன் அவரும் சைக்கிளிங் வர வேண்டும் என்பது மகளின் எதிர்பார்ப்பு.
அவர் கொள்ளும் பதட்டத்தையும்,தன் மகள் மீது வைத்திருக்கும் பாசத்தையும் அனுபவிக்கும் , புரிந்து கொள்ளும் நிலையிலும் அதிதி இல்லை.
மறுநாள் பள்ளி வராத தோழிக்காக அதிகம் ஏங்கியது நிரஞ்சனின் மனது. அவளை பார்க்கும் பொழுது இருந்த துள்ளல் அவள் விடுமுறையால் வற்றியது.. ஒப்புக்கு பேசி தோழர்களுடன் சிரித்தான். இரண்டு நாட்கள் அவனை தவிக்க விட்டு வாடிய மலராய் வந்து சேர்ந்தாள் அதிதி.
பள்ளி வாசலிலேயே நிரஞ்சனை பார்த்துவிட்டாள் வித்யா. " நீரு, அவளுக்கு இப்போதான் ஜுரம் விட்டிருக்கு, ரெண்டு நாள் கிளாஸ் ஒர்க் எழுத ஹெல்ப் பண்ணமுடியுமா? "
கேட்டவளை வினோதமாக பார்த்தவன்,' எஸ் அத்தை. என்றான். அவன் பார்வையோ, இதை எல்லாம் நீங்கள் சொல்லணுமா, எனக்கு தெரியாதா என அழுத்தமாய் கேள்வி கேட்டது.
சமாதானப்புறா பறக்கவிட நினைத்த வித்யா கடைசியில் விழித்துகொண்டு நின்றாள். இரண்டு நாட்களாக பெண்ணரசி படுத்திய பாடு அப்படி.
'குழந்தையை பார்ப்பதை விட வேறு என்ன வேலை என மாமியார் காய்ச்சி எடுக்க 'இன்று தான் அவளுக்கு மூச்செடுக்க முடிகிறது. மாலை நிரஞ்சனுடன் பேசுவதே சரி என மனதினுள் குறித்து வைத்துக்கொண்டு அவளது வண்டியை கிளப்பினாள்.
மாலை நிரஞ்சனுடன் வித்யா பேசியவை நிரஞ்சனின் மனதில் என்றுமே தோழியை விடுவதில்லை என முடிவு செய்துக்கொண்டான்.
வித்யா சொன்னது,
'அதிதி தன்னோட மனசளவுல தனியா பீல் பண்ணுறா நிரஞ்சன். ஸ்கூல் திறந்தது முதலே நீ சரியா பேசல போல. நான் கேட்ட பார்த்ததற்கும் அவ கிட்ட இருந்து பதில் இல்லை. இந்த சம்மர் வெக்கேஷன் முழுக்க அவ உன்ன மிஸ் பண்ணா.
இப்போ ஜுரம் விடாம அடிச்ச போது கூட உன்னுடைய பெயர் தான் சொல்லிகிட்டே இருந்தா. உன்னை மட்டும் எப்படியோ மனசுக்கு நெருக்கமா யோசிக்க ஆரம்பிச்சிட்டா. பார்த்துக்கோ நீரு ' என்ற வித்யாவின் குரல் மாலை வீடு வந்து சேர்ந்தபோதும் கூட அவன் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. இதைப் பற்றி அம்மாவிடம் சொல்ல வேண்டும், அம்மா தான் எல்லாத்துக்கும் சரியான தீர்வு சொல்லுவாள் என்று மனதுள் நினைத்தவன் அப்பா வீட்டில் இருக்கிறாரா என்று பார்த்துக்கொண்டு, தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு வந்தவன் அம்மா சூடாக வார்த்துக் கொடுத்த தோசையையும், சட்னியையும் தட்டில் எடுத்து வைத்துக்கொண்டு அடுப்பு மேடை மேல் அமர்ந்து கொண்டான்.
நிதானமாய் நான் அம்மாவிடம் அன்றைய பல விஷயங்களை சொல்லிக் கொண்டு வந்தவன், பேச்சுவாக்கில் அதிதி பற்றியும், அவள் அம்மா பள்ளி முடிந்தவுடன் அதிதி வருவதற்குள் சொன்னவற்றையும் சொல்லிவிட்டான்.
சற்று நேரம் மௌனம் காத்த நிரஞ்சனின் அம்மா ' இந்த காலத்தில் பெண் குழந்தைகள் யாரையும் நம்பி வாழக் கூடாது. அந்த பொண்ணு கொஞ்சம் தைரியத்தை வளத்துக்கணும். அவங்க வீட்ல அந்த பொண்ண
இவ்வளவு கண்ணாடி மாதிரி வைத்திருப்பது நல்லதல்ல. உன்னால முடிஞ்சத பண்ணு. அந்தப் பெண் தன்னுடைய மனசளவுல சுதந்திரமாக உணரனும். அதுக்கு என்ன முடியுமோ அதை செய்யு. இந்த வருஷம் முடியறதுக்குள்ள அவ கொஞ்சமாவது மற்ற பசங்களோட பழகணும். அப்ப தான் அவ தைரியமா வளறுவா.. என்று விட்டு அடுத்த வேலை கவனிக்க சென்றுவிட்டாள்.
அம்மா சொன்ன அவற்றை நடைமுறைப்படுத்த தான் நிரஞ்சன் அந்த வருடம் முழுவதும் முயன்றான். ஆனால் வழக்கம் போல அவனைத் தவிர வேறு யாரையும் அவள் தன் அருகில் நெருங்க விடவில்லை. அதற்கு பதிலாக அவளிடம் இன்னும் ஒன்றிக் கொண்டாள்.
அவளை எப்படியாவது எப்போதும் சந்தோஷமாக வைக்கவேண்டும் தன் கூட்டில் இருந்து அவள் வெளியே வர என்ன செய்யலாம் என்று யோசித்தான்.
'தான் ஒன்றுமே செய்ய முடியாமல், அவளுக்காக தவிக்க கூடும் என்றோ, கையாளாகதனத்தினால் கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருக்க வேண்டிய நிலையும் வரும் என்றெல்லாம் அவன் நிச்சயம் நினைத்திருக்கப் போவதில்லை.'
அவனது தோழமை தந்த தெளிவில் அந்த பறவை கொஞ்சம் தன் கூட்டிலிருந்து வெளிவர தொடங்கியது. கலகலப்பாக பேசுவதெல்லாம் நிரஞ்சன் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும்தான். தோழமைகளுடன் ஒன்றாக நிற்கவும் பேசவும் கற்றுக்கொண்டாள்.
நிரஞ்சன் செய்வது போல் உணவு வகைகளை பகிர்தல், கொஞ்சம் கொஞ்சமே சத்தமாக சிரிக்கவும், குரல் கூட்டி பேசவும் கூட பழகினாள்.
ஆனால், மனதில் உள்ளதை சொல்ல மட்டும் அவளுக்கு பழக்கவில்லை. ஒரு ரகசிய விரும்பி?
ஒற்றை பிள்ளைகள் பொதுவாக கொஞ்சம் அப்படித்தான் இருப்பார்களா, இல்லை இவள் இப்படியா என்னால் உறுதியாக, அறுதியாக கூற முடியவில்லை.
எட்டாம் வகுப்பில், கொஞ்சம் அரும்பு மீசையுடன், குரல் உடையும் சமீபத்தில் நிரஞ்சன் அவனின் சில சகாக்கள். நம் பூனை குட்டி கூட கொஞ்சம் வளர்ந்து விட்டது தான். கொழுகொழு உடல்வாகு சற்றே இளைக்க தொடங்கி, இரட்டை பின்னலின் நீளம் கூடி, குழந்தைகள் கண் முன்னே வளர்வதும், அவற்றை ரசிப்பதுவும்கூட சுகமல்லோ?
நிரஞ்சனின் உயரம் தன்னை சற்றே நிதானப்படுத்துக்கொண்டு வளர்ந்தது. அவனது பிரச்சனைகளும் தான்.
அவன் அம்மா, தனது மூன்று மாத கருவை கலைத்துவிட்டு, சோர்வாக படுத்திருக்கிறாள் வீட்டில். புரிந்தும் புரியாமலுமான ஒரு தவிப்பு நிலை அவனுக்கு. அப்பா நான்கு நாட்களாக வீட்டுக்கு வரவில்லை. சுகுமாரன் அண்ணாவை பார்க்க தில்லி சென்றிருக்க வாய்ப்புண்டு... அவரை கேள்வி கேட்கும் அதிகாரத்தை என்றுமே அவர் தன் இரண்டாவது மனைவிக்கு கொடுக்க போவது இல்லை.
சுகுமாரன் அவரை விட்டு விலகி இருக்க தனது இரண்டாவது திருமணம் முக்கிய காரணம் என வெகுவாக நம்பும் ஒருவரிடம் என்ன மரியாதை கிடைக்க முடியும்?
வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும், தகிக்கும் தன் அம்மாவுக்காகவும், தனக்காகவும் சமைத்து, வீட்டையும் ஒழுங்கு செய்து, ரத்தபோக்கு காரணமாக, மிகுந்த உடற்சோர்வுடன் தனது சானிட்டரி நாப்கின் கூட சரியாக எடுத்துப் போட இயலாமல் அந்த பெண்மணி உள்ளூர வெந்து தணிந்தாள்.
அந்த பொறுப்பை தாயின் பிரச்சனைகளை தனதாக்கி மகன் செய்வதை காணும் வேளையில் அந்த தாயின் மனம் படும் பாடு? வறுமையில் தவித்து, இரண்டாவது தாரமாய் வாழ்க்கையை வரமாய் அல்ல, சாபமாய் அவர் பொறுப்பது நிரஞ்சன் எனும் சந்தோஷத்திற்காக மட்டுமே !
அவன் தலை எடுக்க வேண்டும். பெற்றோர் வினை பிள்ளைக்கு, தாயின் தியாகம் அவனை தலை எடுக்க செய்யுமா இல்லை, அவன் விதை க்கும் கோவம் எனும் விதைக்கு வினை அறுக்க போகிறானா என நிச்சயம் தெரியவில்லை.
பெற்றவள் படும் வேதனையானது தனயனை என்றேனும் அமைதி கொள்ள செய்யுமா? பெற்றவளின் பொறுப்பும் ஆசீர்வாதமும் அவனை நிமிரச் செய்யுமா?
பள்ளியில் திங்கட்கிழமையில் இருந்தே அதிதி முகம் சோர்ந்து காணப்படுகிறது. இன்று வியாழன்... அவள் உடம்புக்கு என்னவோ தெரியல. அவளுக்கு விளையாடவும் பிடிக்கவில்லை. இடுப்பு பக்கம் வேறு அப்போது அப்போது பிடித்துக் கொள்கிறது. ஒருவேளை வாய்வு தொல்லையாக இருக்கலாம். அவள் உடல்நிலை ரஞ்சனுக்கு சற்றே பயமாக இருக்க வீட்டில் அம்மாவிடம் சொல்கிறான். அவன் அம்மா அவனை சமாதானம் செய்கிறாள்.
அதிதியின் வீட்டிலேயோ வித்யா அதிதியை இரண்டு மூன்று நாட்களாக விடுப்பு எடுக்க சொல்லி வற்புறுத்தியும் வகுப்பு தேர்வு இருக்கிறதாக சொல்லி அதிதி விடுப்பு எடுக்க மறுத்து விட்டாள்.
காலை எழும்பொழுதே ஒரு மயக்கத்துடன் எழுந்தாள் அதிதி... சமீப காலமாக அவள் உடல் அவள் சொல்வதை கேட்காமல் படுத்துகிறது. இந்த காலநிலை இன்னும் அவளுக்கு பழகவில்லை.
இங்கு சியாடெலில் குளிரும் அதிகம்தான். மதியம் பாத்திரம் தேய்க்க கழுவி போடுவதற்குள் பனி சேர்ந்த நீர் அவள் கைகளை உறைய வைக்கும். முதலில் தெரியாது கை வைத்து விட்டாள். இப்போது ஹீட்டர் போட்டு நீரை உபயோக படுத்திக் கொள்கிறாள்.
இங்கு வந்து ஆறு மாதங்கள் ஆகிறது. ஆனாலும், இன்னும் இந்த இடம், வாழ்வு, சூழ்நிலை கட்டிய கணவன் ம்ஹும் எதுவும் பழகவில்லை.
பழகிக்கொள்ள விருப்பமும் இன்னும் அவளுக்கு வரவில்லை. அவள் எண்ணம் முழுவதும் சென்னை வீட்டை சுற்றியும், அவள் மனதை நெருங்கியவன் பற்றியுமே சுற்றிக் கொண்டிருந்தால், இங்கு எப்படி ஒட்டும்?
ஏற்கனவே, அதிகம் மனிதர்களுடன் பழகி பழக்கமில்லை. இப்பொழுது சுத்தம். பேசுவது மறந்து விட கூடும்.
மற்றவை சரி...கணவனிடமும் இன்னும் அவள் அதிகம் பழகவில்லைதான். கட்டிலை தவிர வேறு சமயங்களில் அவன் இவளிடம் தனக்கான இடத்தை கொடுக்கவில்லை. திருமணம் முடிந்து இவ்வளவு சீக்கிரம் அவனிடம் தன் இடத்தை எதிர் பார்க்கக் கூடாதா என்றும் அவளுக்கு தெளிவு இல்லை.
அவள் கணவன் வினய் கலிபோர்னியா மாகாணம் சென்றுள்ளான். அவன் அப்படிதான்.அடிக்கடி வேலை விஷயம் என கிளம்பி விடுவான். திருமணம் முடிந்து ஆரம்ப காலகட்டத்தில் அதிதி இந்தியாவில் இருந்து பேசும்பொழுது கேட்டு தெரிந்து கொண்டது, அவன் வேலை நிமித்தமாக அடிக்கடி வேறு மாகாணங்களுக்கும் செல்லக் கூடும் என்பது.
பின்னர், இங்கு எதற்கு சொந்தமாக வீடு வாங்கியுள்ளான் என்பது அவளுக்கே புதிர்.
அவனிடம் கேட்டு விட வேண்டும் என்று நினைப்பாள். ஆனாலும் தயக்கம்.
அவன் அந்தரங்கத்தை இவள் எப்படி கேட்க கூடும்?