கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

மஞ்சம் 5

மஞ்சம் 5

வீடு என்றால் வெறும் வீடல்ல... பிரமாண்ட மாளிகை. சென்னையாக இருந்தால் பராமரிப்புக்கு என்றே இரண்டு அல்லது மூன்று நபர்கள் இருக்கவேண்டும். ஏறக் குறைய ஐயாயிரம் சதுர அடிகள்.இங்கு வீட்டு வேலைக்கு என்று அப்படி யாரும் இல்லை.ஆனாலும் வீடு படு சுத்தமாய், நேர்த்தியான வகையில் பராமரிக்க பட்டிருந்தது.வினய் தினமும் இங்கிருக்கும் சமயங்களில் புழங்கும் பகுதிகளை தானே சுத்தம் செய்வானாம். மற்ற அறைகளை விடுமுறை நாட்களில். இங்கு வீட்டு வேலைக்கு ஆட்களை வைத்தால் என் சம்பளப் பணம் முழுவதும் அவர்களுக்கு தான் கொடுக்க வேண்டும் என்று சிரித்துக்கொண்டே சொன்னான், இவள் இந்த வீட்டுக்கு வந்து மலைத்த பொழுதில் இவள் இடையை பின்னிருந்து தழுவிக்கொண்டு .அன்று அவள் இளம் பச்சை நிற மென்பட்டு கட்டியிருந்தாள். வினய்க்கு புடவை கட்டினால் பிடிக்கும். வடிவழகை தூக்கி நிறுத்தும் என்பான். பட்டு கட்டினால் குளிர் அவ்வளவு தெரியாது என்பாள் இவள் அம்மா வித்யா.

எண்ண அலை எங்கெங்கோ அவளை இழுத்து சென்றது. அதன் போக்கில் அவளும் செல்கிறாள்.


இனி,எல்லா வேலைகளும் அவளே செய்ய வேண்டும் என்றும்தான் அவன் சொன்னான். அவன் கைகள் பேசிய காதல் மொழியில் வாய் மொழி சொல்லும் தீவிரம் புரியவில்லை.


வார இறுதி நாட்கள் வினய் இங்கு வருவான்.


'இந்த ப்ராஜெக்ட் கலிபோர்னியால, ஸோ அங்க தங்கிதான் ஆகணும் 'என்றவன் எத்தனை மாதங்கள் என கூறவில்லை. இவளும் கேட்கவில்லை.


அவள் வாங்கி வந்த வரமது. தனிமை. இவளுடன் அவனும் அதிகம் பேசுவதில்லை. இவளிடம் பேச அவனுக்கு ஒன்றும் இல்லை போலும். தினமும் காலையில் குறுஞ்செய்தி வரும். எப்படி இருக்க... இஸ் எவேர்ய்திங் நார்மல்? என. இவளும் எஸ். என்று பதிலுடன் முடித்துக் கொள்வாள். இவளிடம் பேசுவது அவனுக்கு அவ்வளவு ஈடுபாடாக இல்லை போலும்.இவளுக்கும் அவனுடன் பேச அவ்வளவு விருப்பம் இல்லை.


அவன் வரும் சமயங்களில் இருவரும் இந்தியன் கிரோசரி ஷாப் சென்று வேண்டியதை வாங்குவார்கள்.

அவர்கள் இருவருக்குமான நேரம் அவ்வளவு தான்.


மாளிகை சுற்றி இருக்கும் பெரிய புல்தரையை சரி செய்வதும், புது காய்கறிகள், பூக்கள் என பயிரிடுவதும் அவளுக்கு பொழுது போக்கு. பிறகு, அவளது சி .ஏ புத்தகங்கள், வீட்டு வேலை... இது அவளுக்கு பழகிவிட்டது.


வாரம் ஒரு முறை அப்பா -அம்மாவிடம் பேசுவாள். மாமனார் மாமியார் அவர்களே அழைப்பார்கள். ஏனோ, பெரும்பாலும் அவர்கள் பேசுவது தோண்டி துருவும் வார்த்தைகளாக... ம்ஹும், ஒரு வேளை பல வருஷங்களாக புகுந்த வீட்டினரை ஒரு மாதிரி சித்தரிக்கும் விஷயங்கள் இவள் அறிவை குழப்பி விட்டதோ?

நிச்சயம் தெரியவில்லை.


நிரஞ்சனுக்கு வாரம் ஒரு மெயில். அவனிடமிருந்து ஒற்றை ஸ்மைலி மட்டும் பதிலாய் வரும். அதற்கு மேல் ஒன்றும் இல்லை. அவனிடம் பேச்சை வளர்க்க இவளும் விடாமல் மெயில் அனுப்புகிறாள் தான். ஆனால் அவன் மனதில் என்ன? இந்நேரம் அவன் என்ன செய்துகொண்டிருப்பான்? என்னை யோசிப்பானா?


நீரு...அவன் இவ்வளவு அழுத்தமானவன் என அதிதி நிச்சயம் நினைக்கவில்லை. எப்பொழுதும் அவனது சிரித்த முகத்தை தான் அதிகம் இவளிடம் காட்டியிருக்கிறான்.

அவளுக்கு தெரிந்த நிரஞ்சன் இவளது தோழன். இவளது விருப்பு- வெறுப்பு -பயம் எல்லாம் நிரஞ்சனுக்கு அத்துப்படி.இவளை இவளுக்காக அப்படியே ஏற்றவன்.


எனில், அவனிடம் இருந்து இந்த மௌனம் ஏன்? அவனை நான்தான் சரியாக புரிந்துகொள்வில்லையோஎனும் குழப்பம் அவளை ஆக்ரமித்து சுழற்றியது.


திருமண சமயத்தில் அவன் கண்கள் சொன்ன செய்தி? அதை தவற விட்டேனோ எனும் கேள்வியை இத்தனை மாதங்களில் ஓராயிரம் முறைகள் கேட்டிருப்பாள் தான். விடை அறியா எத்தனையோ கேள்விகளில் இதுவும் ஒன்றோ?


சட்டென நினைவு வந்தவளாக, ஓ, மை காட். எனக்கு கல்யாணம் ஆகி யு. எஸ் வந்திட்டேன். இப்போ நவோம்பர் மாசமாச்சே, அவனுக்கு எக்ஸாம் நேரம் என தன்னையே தேற்றி கொண்டாள்.


அது மட்டும் தான் காரணமா? நிரஞ்சனை பொறுத்தவரை தன் தோழி திருமணமானவள். எந்த காரணத்தாலும், அவள் வாழ்க்கையில் தன்னால் ஒரு குழப்பம் வருவதை அவன் நிச்சயம் விரும்பவில்லை.

மேலும் வினைய் என்ன தான் அமெரிக்க மண்ணில் மேல் படிப்பு படித்து வேலை செய்ய என்பதற்காக சென்றிருந்தாலும், அவனது மனம் முழுக்க முழுக்க இந்திய ஆணாகத்தான் இருக்கும். அந்த மனம் தனது மனைவியை அந்நிய ஆணுடன் பேசுவதை என்றும் விரும்பாது. ஆண்களுடன் பெண்கள் நட்பு பாராட்டுவது பெரும்பாலும் கேட்பதற்கு எவ்வளவு இனிமையாக இருக்கிறதோ, கணவன் பார்வையில் மனைவியும், மனைவி பார்வையில் கணவனும் சந்தேகத்தின் கீழே வந்து விடுகிறார்கள். இது ஒரு விதமான பொசசிவ்னஸ். தவறு என்று கூற முடியாது. தான் அவர்களுக்கு இடையில் செல்வது சரி இல்லை என்று அதிதி திருமண நிச்சயம் சமயமே முடிவு செய்து விட்டான்.


ஒரு வேளை அதிதிக்கு திருமணம் செய்ய விஸ்வம் - வித்யா முடிவெடுத்து இவனிடம் தகவலாக சொன்ன பொழுது அவன் அதை செய்யாமல் இருந்திருந்தால் இந்த உணர்வு அவசியம் அற்ற ஒன்றாக ஆகி இருக்கலாம். அவன் மனதில் ஒரு குறுகுறுப்பு.

விதி யாரை விட்டது?


பெண்ணின் மனதில் நிரஞ்சனிடம் தெளிவாக பேசி இருக்கலாம்?அவன் நல்ல தோழன். என்னை பிரியும் ஏக்கம் அவனிடம் உண்டு எனில் எனக்கும் அவன் இங்கு இல்லாத ஏக்கம். அவனுக்கு புரியுமா?


வினய் கொஞ்சமும் என்னுடன் நட்பு, புரிதல் இரண்டும் இன்றி இருப்பது ஏன்?


'நான் ஏங்கும் விஷயங்கள் எதுவும் இன்று வரை எனக்கு கிடைக்கவில்லை. எல்லாமே அதிகமாக, தேவைக்கு மேலாக கிடைக்கும் பொழுது என்னால் பயன்படுத்த முடியவில்லை. தெரியவும் இல்லை.

இதுபோன்ற விஷயங்கள் அதிதியின் மூளையை ஆக்ரமிக்க '


"நான் வேண்டும் விஷயங்கள் எதுவும் இன்று வரை எனக்கு அமைந்தது இல்லை. என் கை விட்டு போனது தான் அதிகம்,என நிரஞ்சன் மனமோ நிலை இன்றி தவித்தது.


வினய், நாயகியின் நாயகன். அவள் மீது அவனுக்கு இந்த நிமிஷம் வரை எந்த உணர்வும் வரவில்லை. அந்த பெண் அவனது சரி பாதி... அப்படித்தான் அவன் நம்ப முயற்சி செய்கிறான்.

அவன் எதிர் பார்ப்புகள் வேறு விதம்.

"ஜாதகம், பணம், சமூக நிலை, கல்வி, குடும்பம், பெண்ணின் அழகு, உயரம் இதெல்லாம் ஒரு திருமணம் நடக்க போதும் எனில், திருமண உறவு நிலை பெற என்னவெல்லாம் தேவை?


அவனுக்கு சுத்தமாக புரியவில்லை. கட்டில் அளவில் அவன் சந்தோஷமாக இருக்கிறான்? அதுவும் கேள்விக்கு உரிய ஒன்றாய்.


உண்மையில், அவன் பார்த்த நீள (ல )படங்களில் உள்ளது போல் அவள் இல்லை. பள்ளிப் பாடங்கள் தெரிந்த அளவுக்கு பள்ளியறை பாடங்கள் அவளுக்கு தெரியவில்லை. இவன் எதிர் பார்த்த ஒத்துழைப்பு அவளிடம் இல்லை.


"கற்று தெளிவது இல்லை காமக் கலை " என்பது அவனுக்கு புரியவில்லை.

பன்னிரண்டு வகுப்பு முதல் நான் இந்த படங்கள் பார்த்து ரசித்த விஷயம்... இவள் சரியான மண்.ஒன்றும் தெரியல என அவளை மனதில் வறுத்தான்.


அவன் தேவைக்கு அவள் சரி இல்லை எனில், கட்டில் அறை பற்றி சொல்லி தர வேண்டிய கடமை யாருக்கு? உரிமை உள்ளவன் யார்?


இல்லை, இந்த மாதிரி படங்கள் எல்லாவற்றையும் கற்று கொடுத்து விடுமா?

காமக்கலையை கரைத்து குடித்து பெண் முதலிரவு அறைக்குள் நுழைந்தால் ஆணின் மனம் அந்த பெண்ணை பற்றி என்ன நினைக்கும்?


தன்னை அலை பேசியில் அழைத்த பெற்றோரிடம், இப்படி ஒன்னும் தெரியாத, லாயக்கு இல்லாத பொண்ண என்னோட தலையில் கட்டி வச்சி உயிரை வாங்கறீங்க... என்று வினய் எரிந்து விழ, அவர்கள் வேறு விதமாக கொண்டு கவலை கடலில். அவர்களுக்கு வினய் கூறுவதின் பொருள் புரியவில்லை.


வினயின் பெற்றோர் வித்யாவின் எண்ணிற்கு அழைத்து பேசினால், தன் மகள் மகிழ்ச்சியாக இருப்பதாக போன் பண்ண சமயம் சொன்னாள்.


மறை முகமாக அதிதி வீட்ல வேலை செஞ்சு பழக்கம் இருக்கா? போன்ற கேள்விகள் கேட்டு விடை தெரிந்து கொண்டவர்களுக்கு மகன் சொல்லும் சம்சார சாரம் புரியவில்லை.


நடக்கும் எந்த விஷயமும் தெரியாமல், மாளிகையின் பின்னால் இருக்கும் ஆப்பிள் மரத்தில் இருந்து புதிதாக பழங்கள் எடுத்து ருசித்து கொண்டிருந்தாள் அதிதி.

தெரிந்தால் மட்டும் என்ன செய்வாள் நம் நாயகி...


இன்னும் மனதளவில் அவள் எதையோ தேடும் சிறுமிதான்.

பெண் அவளது தேடல்கள் என்ன என்பது இதுவரை அவளால் நிச்சயம் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் தன் கணவனை விட நிரஞ்சனின் துணையைதான் அவள் மனம் தேடியது.இந்த பிரிவுதான் அவளை மிகவும் சோர்வடைய செய்தது. அவளைப் பொறுத்தவரை நிரஞ்சனின் பிரிவு இனி நிரந்தரம். அவனது கம்பீரம் நிறைந்த கண்கள் அதில் ஏக்கம் நிறைந்த பார்வை. ஏக்கம் அவளுக்காக மட்டுமே... திருமண சமயத்தில் அவன் ஏதேனும் தம்மிடம் சொல்ல நினைத்தானா... என்ற குழப்பம் அவளை விட்டு நீங்கவே இல்லை.


அதிதி, அவள் தன் கணவன் வினயனை விட அதிகம் நிரஞ்சன் பற்றியே சிந்திக்கிறாள். சரியா தவறா என்றால் சிறு வயது முதல் தன் குடும்ப நபரில் ஒருவன் போல அவனை நினைந்து கொண்டிருக்கிறாள். அவளைப் பொறுத்தவரை வித்யா, விஸ்வம், பாட்டி, அத்துடன் நிரஞ்சன்.


இந்த உறவு தவறான நோக்கம் உடையது இல்லை தான். சரியாக சொல்ல வேண்டும் எனில் பதினோரு வயதில் அவனுடன் ஆரம்பித்த தோழமை இதோ, இருபத்து மூன்று வயது வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.


ஆனால், பெற்றோர் எவ்வளவு நெருக்கமோ, நீரு,அவன் தன் வயதின் ஒத்த தோழன். அந்த புனிதத்தை மாற்ற அவள் என்றும் நினைக்க போவதில்லை. அவள் மனதளவில் அவன் வெறும் தோழன் மட்டும்தான். ஆனால் இதை வினையன் புரிந்து கொள்வான் என்பது திட்டவட்டமாக சொல்ல முடியாதே!


ஆனால்,பெற்றோரின் அரவணைப்பு... சூழ்நிலையின் கதகதப்பு இரண்டையும் விடுத்து, இதோ இந்த அந்நிய மண்ணில் இவள் தனியாக இருப்பதன் காரணம், வினய் மட்டுமே, இதை அவன் ஏன் இன்னும் புரிந்து கொள்ளவில்லை?


அவன் வரும் நேரங்களில் நிச்சயம் கணவன் எனும் உரிமையை நிலை நாட்டுகிறான். எல்லா விதத்திலும். ஆனால், மனைவிக்கு பள்ளியறையில் எவ்வளவு கடமையும், கணவன் மீதான உரிமையும் உண்டோ, அவனது எல்லா விஷயங்களிலும் அவளுக்கு உரிமை உண்டே? இருவரும் உடலால் தனித்தனி எனினும் உயிர் ஒன்றியிருத்தல் தாம்பத்தியதின் அடி நாதம் அல்லோ? வினயன் பற்றி என்ன சொல்வது?அவனும் தன் மனைவியை பற்றி புரிந்து கொள்ள தனது முதல் அடி கூட எடுத்து வைக்கவில்லை. தன் மனைவியையும் தன் மனதருகில் நெருங்க விடவில்லை. ஒருவேளை இதெல்லாம் அவசியம் இல்லை என்ற எண்ணம் அவனுக்குள் இருக்கிறதா என்பதும் தெரியவில்லை.


ஒரு வேளை பள்ளியறையில் கூட அவன் அவளுக்கு உரிமையை கொடுக்கவில்லையோ? நினைக்க நினைக்க அவளுக்கு தலை சுற்றல் அதிகமாக உணர்ந்தாள் அதிதி.


அவன் தேவை தீர்ந்த பிறகும், தன்னை அர்ப்பணிக்கும் சஹிக்கும், தேவை, தாகம், மோகம், காமம் உண்டென அவன் யோசித்ததில்லையோ? இன்று வரை சுகித்து, சுவைத்து முடித்த பிறகு ஏற்படவேண்டிய திருப்தியை விட உச்சு கொட்டல்களே அதிகம்!


இவ்வளவு மாதங்களில் அவன் இவளுக்கு மனைவிக்கு உரிய எந்த. அங்கீகாரமும் கொடுக்கவில்லை.
 
Top