geethasuba2007
Member
ஒருவாறு, அதிதி கிளம்பிச்செல்ல, பகல் நேரம் வேலை தளத்தில் முடிந்தாலும் இரவு நேர தனிமை அவனை தவிக்க விட்டது. தகிக்கும் காமத்தை அடக்கவியலாது அதிதி மீது தீரா கோவம். திரும்ப அழைக்க இஷ்டம் இல்லை. இவ்வாறான ஒருவார கழிதல்.
திங்கள் அன்று எதிர்பாரா விதமாக நடாலியை அலுவலக வளாகத்தில் சந்தித்தவனின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன. அவள் மாற்றலாகி வந்ததாக வினயிடம் சொன்னாலும், மாற்றல் கேட்டு வாங்கிக்கொண்டு சியாடேல் வந்தாள் என்பது தான் உண்மை.
வேறு இடம் கிடைக்குமா என பார்க்கணும் என்றவளின் கீழ் கண்கள் இவனை நோட்டம் பார்க்க தவறவில்லை.
அவள் கணிப்பு மெய்யாக, தனிமை அலுப்பை தர, என் வீட்டில் நீங்கள் தங்கிக்கொண்டு இடம் பார்க்கலாம் என்றான் வினய்.
இருவரும் ஒரே ப்ராஜெக்ட் என்பதால் வீட்டிலிருந்து வேலை பார்க்க தோதுதான். நிலைமையோ ஒரே அறையின் அமர்ந்து வேலை பார்ப்பதில் தொடர்ந்து இருவரும் ஒரே படுக்கை அறையில், ஒரே படுக்கையில் பகிரல் என்பதில் நின்றது. இவை நடக்க அதிகபட்சம் பத்தே நாட்கள்தான்.
நடாலிக்கு இது போன்று விஷயங்கள் புதிதும் அல்ல, தவறும் அல்ல...
"தகிக்கும் காமம்" அவனை தீயாய் சுட்டது.
மோகம் வினயனை நியாயம் தப்பி கூட்டி சென்றது. தேக சுகத்திற்கு அவன் அடிமையாகி பல வருஷங்கள் ஆகி விட்டது.
அதிதி அவன் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்பவளாயின் அவளை தான் பணி செய்யும் இடத்திற்கு கூட்டி சென்றிருப்பான்.
இவ்வளவு நாட்கள் நற்குடி பிறப்பு வேலை செய்ததால் எல்லை மீறவில்லை.
இப்போதோ ஊழ்வினை உறுத்துவந்துவட்ட ஆரம்பித்து விட்டது.
தன் மனைவி தனக்கு மட்டுமேயான பெண்ணாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் சில ஆண்கள், அவளுக்கு ஆண் நண்பர்கள் இருந்தால் கூட சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் அதே சமயம் தானும் கற்புடன் அவளுக்கு கொண்டவனாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பதில்லையே ஏன்?
இங்கு விநயனும் இதற்கு விதிவிலக்கல்ல.
கனடா சென்றிருந்த அதிதிக்கு ஏனோ மனம் நிலை கொள்ளவில்லை. வினய் அவளை அழைத்து பேசவும் இல்லை. அவள் அழைப்பை ஏற்கவும் இல்லை. இன்னும் வளைகாப்பு நிகழ ஒரு வாரம் இருக்கும் நிலை. இப்போது திரும்ப செல்வது சரியில்லை என பொறுத்துக்கொண்டாள். ஏதோ ஒன்று தன்னை விட்டு அகலும் உணர்வில் தத்தளித்தாள். அது என்னவென்று தான் புரியவில்லை. கிட்டத்தட்ட எதையோ தொலைத்த உணர்வு...
வினய்க்கு அவள் மீது கோவம் என்று தெரியும். இவ்வளவு காண்பிப்பான் என இவளுக்கு அதிரடியாக புரியவைத்தான் வினயன்.
வளைகாப்பு அன்று இவள் மாமா வீட்டில் இவளுக்கென எடுத்து கொடுத்த ஆரஞ்சு நிறத்தில் உடலும் சிவப்பும் கிளி பச்சையும் கலந்து பார்டர் வைத்த புடவையையும், ரூபி நகைகளையும் அணிந்து கொண்டு நின்றவளை விழாவுக்கு வந்த அத்தனை பேரும் விழுங்கி விடுவதை போல பார்க்க, ஒரு சிலர் இவள் 'மணமாகாதவள் எனில் தங்கள் மகனுக்கு பார்க்கலாமே'என்ற எண்ணம் மேலோங்க இவள் கழுத்தை ஆராய்ந்தனர்.
இவள் 'தான் எடுத்துக்கொண்ட படங்களை வித்யாவுக்கும், வினய்க்கும் அனுப்ப வித்யா மகிழ்ச்சியை தெரிவிக்க பதில் அனுப்பினார்.
வினய்? அவனிடம் கண்டுகொண்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
தனக்கு வந்த அந்த படங்களை அலட்சியம் மிக,'இதுலலாம் குறைச்சல் இல்ல ' என்று மொபைலில் இருந்து அழித்து விட்டான்.
வித்யா தனக்கு வந்த புகைப்படங்களை நிரஞ்சனுக்கு அனுப்பி வைக்க, இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்து தன் அந்தரங்க எண்ணின் வாட்சப்பில் வந்திருந்த அந்த புகைப்படங்களை பார்த்தவனுக்கோ இரவுதூக்கம் எட்டாமல் போனது. வெகு நாட்களுக்கு பிறகு அவளை பார்க்கிறான். அவன் விலகி போனாலும் விலக்க முடியாமல் தவிக்கும் நட்பெனும் வர்ணம் பூசிய விளங்க முடியா கவிதை! அவளை பொருத்தமட்டில் நட்பு. இவனுக்கோ...
என்ன இருந்தாலும் அதிதி திருமணமான பெண், பிறன்மனை நோக்குவது மகாபாவம் என்று தன்னைத்தானே கட்டுக்குள் கொண்டு வந்தான்.
குளிர் அவளை இன்னும் அதிகம் ரோஜா நிறத்தில் காட்ட, சற்று பூசினாற்போல் இருந்தாள் அதிதி.
ஆனாலும், கண்களை எட்டாத அவள் முறுவலை கண்டுகொண்டான் நிரஞ்சன். அவளுக்காக அவன் மனம் துடித்தது.
அவள் அணைப்பில் இருந்த அவளது மெயில்கள் மூலம் சந்தோஷம் என்பது அவள் வாழ்க்கையில் இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொண்டான். எப்படியோ இருக்க வேண்டிய அதிதியின் வாழ்வை இப்படி மாற்றிவிட்ட விதியை வைய்வதா, இல்லை அவசர அவசரமாக அவளை திருமணம் செய்து அமெரிக்கா அனுப்பி வைத்து அவளது பெற்றோரை சொல்ல முடியுமா?
பெருமூச்சுடன் அந்த அகல கட்டிலில், தனிமையை உணர்ந்தவனாக அவளுடனான காலங்களை அசைபோட, அவள் திருமண நிகழ்வுகளில் நிரஞ்சன் மீதான அவள் ஏக்க பார்வைகளில் வந்து நிற்க, கைமீறிப் போன அவற்றைப்பற்றி நினையாதே மனமே என தன்னை தேற்றியவனாக தூங்க முயற்சித்தான். இரவு முழுவதும் அவள் நினைவு அவனை கல்லாக்கியது.
வினய்யிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. வளைகாப்பு வைபவத்தில் கடைசியாக இவளையும் மனையில் இருத்தி, சீக்கிரம் இவளும் கருத்தரிக்க வேணுமென ஆசிர்வதித்திக்கும் நிகழ்வுடன் இவளுக்கும் கைகளில் வளையல்கள் அடுக்கினார் மாமி.அனைவரும் கிளம்ப, தன் மாமன் மகளை கண்டவளுக்கோ, தாயாகும் ஏக்கம் துளிர்விட ஆரம்பித்தது. கைகளில் பூட்ட பட்டிருந்த கண்ணாடி வளையல்கள் இவளை பார்த்து ஏளனம் செய்வதாய் ஒலி எழுப்பின.
திருமணம் முடிந்து இத்தனை மாதங்கள், கடந்தும் தனக்கு ஏன் இது பற்றிய எண்ணமில்லை என்பது அவளுக்கு வியப்பாக இருந்தது.
வினயனிடம் இது பற்றி ஆலோசிக்க வேண்டும் என இதயம் துடித்தாலும், இது பற்றி அந்நிய ஆடவனிடம் பேசும் மாதிரியான தயக்கம் அவளுள். அவர்கள் உறவு அவ்வளவு நெருக்கம். கட்டிலை தவிர அவளை நெருங்காத, நெருங்க விடாத அபூர்வ கணவன் அவன்.
ஏதோ இழந்தவளாக பெரும் வலி அதிதிக்குள்.
பெருமூச்சு விட்டவள் கிளம்பும் நாளுக்காக காத்திருந்தாள்.
மாமா -மாமியின் வற்புறுத்தலால் இன்னும் இரு நாட்கள் கூடுதலாய் அவள் கழித்து விட்டு கிளம்பினாள். அப்பொழுதும் வினய் ஒன்றும் சொல்லவில்லை.
அவன் இரவுகள் நடாலியுடன் அவன் படுக்கை அறையில், பகல் பொழுதுகளோ நடாலியுடன் அலுவலத்தில். மொத்தத்தில், அவன் நாட்கள் நடாலியுடன் முத்தத்தில் ஆரம்பித்து முத்தத்தில் முடிகிறது. மனையாள் பற்றி ஞாபகம் வைத்துக்கொள்ள அவனை நேரம் அனுமதிக்கவில்லை.
அவன் விமான நிலையம் வருவான் தன்னை அழைத்து செல்ல, என்று நினைத்திருந்த அதிதிக்கு கண்கள் குளம் கட்டியது. மாமா வற்புறுத்தி கையில் திணித்த ஐயாயிரம் அமெரிக்கடொலர்கள் அவளிடம் இப்போது உண்டு.
இவள் நிலை சரியாக இல்லை என்ற சந்தேகம் அவள் மாமனுக்கு உண்டு. மாப்பிளை வினய் நல்ல வேலை, சம்பளம் எனினும் இவளை சரியான முறையில் பார்த்துக்கொள்ளவில்லை என்று அவர் சுலபமாய் கணித்து விட்டார். வினய் இவளை முற்றிலும் தவிர்க்கிறான் என்பது அவருக்கு புரிந்தது. காரணம் நிச்சயம் அவர்கள் 'அந்தரங்கம்.'இதை பற்றி யோசிக்க அவரால் முடியாது... ஆனால் வீட்டுப்பெண், கலங்கி நிற்கிறாள் எனும் எண்ணம்.
அதிதி கிளம்பிய பின், அவர் தன் அக்கா வித்யாவிடம் தான் நினைப்பதை பகிர்ந்து கொள்ள தவறவில்லை.தானும் பெண்ணை பெற்றவர் எனும் நிலையில் அவர் செய்வது சரியே!
வெகு மாதங்களாக மனதுள் தவிப்பு வித்யாவுக்கு. இன்று தம்பி சொன்னதை கேட்ட பிறகு அதிகமாகியது. நீரு, அருகில் இருந்திருக்கலாம் என்று யோசித்தாள் பெண்ணின் தாய். சற்றே உடல் நிலை சரியாகாத, பெண்ணின் மீது அதீத பாசம் கொண்ட கணவரிடம் எப்படி இவற்றை பகிர்ந்து கொள்வது என வித்யாவுக்கு சத்தியமாக புரியவில்லை.
ஏனோ, அதிதி திருமணத்திற்கு முன், இதே வீட்டில் விஸ்வமும், நிரஞ்சனும் பேசிகொண்டவையும், நிரஞ்சன் கோவத்தில் கண்கள் சிவக்க அங்கிருந்து சென்றதும் வித்யாவின் கண்களில் நிழலாடியது.
அன்று அவன் பேசியது, இன்றும் வித்யாவின் காதுகளில் அகலாமல் ஒலிக்கிறது. பின்பு, அதிதி திருமண நிகழ்வுக்கு பின்னர் முற்றிலும் இங்கு வருவதை தவிர்த்தான். விஸ்வத்துடன் பேசுவதையும் தான்.
வெப்பக்காற்றை வேகமாக வெளியிட்டவள் தன்னை ஆஸ்வாசப்படுத்திக்கொள்ளும் வகை புரியாது தவித்ததுதான் மிச்சம்.
நிரஞ்சன் அடுத்த நாள் காலை வழக்கம் போல் அம்மாவிற்கு அழைத்து பேசினான். அவனை பொறுத்தவரை தந்தை எனும் உறவு ஏனோ தொலைதூர கனவாக போய்விட்டது. தமையன்? அவன் தானே நிரஞ்சனின் இத்துணை இழப்பிற்கும் காரணம்.
அம்மாவிடம் வழக்கம் போல் தன்னுடன் வந்து விடுமாறு கேட்க அவரோ இந்த வாரம் ரெண்டு நாள் உன்னோட இருக்கேன். டிக்கெட் போடு என்றார் சாவதானமாக. தன் விதியை நொந்தவன் செவ்வாய் கிழமை சென்னையில் இருந்து வர டிக்கெட் புக் செய்தவன் பெங்களூருவில் இருந்து தானே காரில் கூட்டி செல்லலாம் என முடிவெடுத்தான்.
வாழ்க்கை பாதை மீண்டும் அவனை பார்த்து சிரித்தது.
அவன் பாதையை இணைத்து கொண்டு பயணம் செய்ய அவனுக்காய் படைக்கப் பட்டவளை சந்திக்க போவது தெரிந்தால்?
நிரஞ்சனுக்கு அவன் அம்மாவை தன் கூடவே வைத்துக்கொள்ள கொள்ளை ஆசை உண்டு. ஆனால், ஆண் பிள்ளை ஆனாலும் அவனுக்கு திருமணத்திற்கு பார்க்கும் பொழுது, தான் கணவருடன் இல்லை எனில் பிள்ளை தலை குனிந்து பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்று அவர் தீவிரமாக நம்பியதால் நிரஞ்சனுடன் சென்று நிரந்தரமாக தங்க விழையவில்லை. வெளியே வாய் விட்டு சொல்ல அவர் விரும்பவில்லை. ஆனால், மாதம் ஒரு முறை அவனுடன் இரண்டு, மூன்று நாட்கள் சென்று தங்குவதை வழக்கம் ஆக்கி கொண்டிருந்தார்.
அதிதியை மகன் ஒரு தலையாக விரும்பியதும் அவருக்கு தெரியும். ஆனால் என்ன நடந்தது? மகன் இன்றும் அதிதி குடும்பத்துடன், அவளுடன் தொடர்பில் இருக்கிறானா என்றெல்லாம் நிச்சயம் தெரியாது. இன்னும் நிரஞ்சன் அவள் நினைவில் இருந்து வெளியே வரவில்லை எனும் ஐயம் உண்டு. அவன் அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் பெண்ணுக்கு இவன் மீது நாட்டம் உள்ளது... யோசிக்க வேண்டும் என்று போன முறை சென்ற பொழுது சொல்லி இருந்தான் நிரஞ்சன். ஆனால், அதுவும் கிணற்றில் போட்ட கல் போல் உள்ளது.
என்று இருந்தாலும் திருமண பந்தத்தில் நுழைவது பற்றி அவன் மாற்று கருத்து சொன்னதில்லை. தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அம்மாவுக்கு நிரம்ப ஆசையுண்டு என்றும் அவனுக்கு தெரியும்.
பெற்றவளின் மனமோ,அதன் எண்ண போக்கு தன் மகன் அதிதியின் நினைவில் தனியே நின்று விடுவானோ எனும் பயம்.
வாயைவிட்டு புலம்பவும் நெருக்கத்தில் யாருமில்லை. இரண்டாவது மனைவியாக, கட்டிய கணவனிடம் மனைவி எனும் அங்கீகாரம் கிடைக்காமல்,ஊர் உலகத்திற்காக கழுத்தில் தாலியை கட்டிக்கொண்டு ஒற்றை மகனுக்காக தாக்கு பிடித்ததும், இன்று வரை பல விஷயங்களைப் பொறுத்து கொண்டு மௌனமாக இருப்பதும் அவன் இப்படி ஒற்றையாய் நிற்பதை காணத்தானா.... என்று அவர் மனம் கதறியது. இம்முறை மகனிடம் திருமணம் செய்து கொள்வதாக சத்தியமே வாங்கிவிடவேண்டும் என்று நினைத்து கொண்டார்.
சில சமயங்களில் நினைப்பது எதுவும் நடப்பதில்லை. அவன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வேண்டுமானால் கேட்கலாம். எப்போது என்பது யாருக்கு தெரியும்?