geethasuba2007
Member
மஞ்சம் 9
"இந்தியாவின் நடக்கும் பெரும்பான்மை திருமணங்கள் பெற்றோர் நிச்சயம் செய்பவையாக உள்ளது. அதை உள்ள பூர்வமாக எடுத்துக்கொண்டு நேர்கொண்ட காதலை வளர்த்துக் கொள்பவர்களும் உண்டு. நம்பி திருமணம் செய்தவரை நோகடிப்பவரும் உண்டு. வெறும் சத்தியங்கள் பேசுமாயின் அக்னி பகவானை சாட்சியாக வைத்து நடக்கும் திருமணங்கள் தோற்பது ஏன்?
காதல் திருமணங்கள், அவையும் இதே நிலைதான். தவறுகள் நிகழ்வது மனித மனங்களில். திருமண பந்தத்தில் இல்லை."
பல வருஷங்கள் காதலித்து திருமணம் செய்து ஒரு வருஷத்திற்கும் குறைவாகவே விவாகரத்து செய்யும் தம்பதிகள் உண்டு.
இரவு...இல்லையில்லை,
விடிகாலையில் வீடு வந்தவள் காலிங் பெல் அழுத்தியவள் கதவு திறக்காமல் போகவே, தன்னிடம் உள்ள சாவி கொண்டு திறந்து கொண்டு உள் சென்றாள். வீட்டில் யாருமில்லை. கலங்கிய முகத்துடன் தன்னறை சென்று படுத்துக்கொண்டாள். அவளுக்கு தூக்கம் வரவில்லை. துக்கம் அடைக்க கண்களை மூடிக்கொண்டாள்.
எப்படியோ உறங்கிவிட காலை கணவனின் குரலும் அத்துடன் பெண் குரலும் கேட்க அவசரமாய் காலை கடன்கள் முடித்துகொண்டு ஹாலுக்கு வந்தவளுக்கு நடாலியை பார்த்தவளுக்கு மயக்கம் வராத குறை.
சகஜமாய் நடாலியுடன் பேசிகொண்டிருக்கும் வினய் அதிதிக்கு புதியவன். அவனது புன்னகை தவழும் முகம் அவளுக்கு புதியது. எப்பொழுதுமே அவளிடம் அதிகம் பழக்கம் இல்லாத நபரிடம் பேசுவது போன்ற பாவனையில் தான் பேசிக் கொண்டிருப்பான். எதற்காக இந்த ஒதுக்கம் காண்பிக்கிறான் என்று பலமுறை அவள் குழம்பி இருக்கிறாள்.
இன்னொடி வரை கணவன் மனைவியிடம் இது போன்ற சுலப உரையாடல்கள் நிகழ்ந்ததில்லை.
மனதில் தோன்றிய வலி, கண்களில் அருவியாய் இறங்கியது. அதை மறைக்க அவள் முயன்றாளில்லை. சட்டென்று திரும்பி பார்த்த
நடாலிக்கு சற்று வியப்பு மேலிட ஒற்றை புருவத்தை உயர்த்தி கேள்வியுடன் அதிதியையும் பின்னர் விநய்யையும் பார்க்க அந்த நொடியில் அதிதி வினய் இருவரும் அவள் அழகிலும் கம்பீரத்திலும் ஒரு நொடிக்கும் மேலாக மயங்கியதும் நிஜம்.ஒரு மாதம் கழித்து வந்தவளுக்கோ
கணவனுடன் தனிமை எதிர்பார்த்தவளுக்கு அது கிடைக்கவில்லை. ஏனோ,அவ்வாறான சந்திப்பு நிகழாமல் வினய் எச்சரிக்கையாக நடந்து கொண்டான்.
தன் மனைவியிடம் நடாலி தனது ப்ராஜக்ட் ஹெட் என்று அறிமுகப்படுத்தியவன், அவங்களுக்கு இன்னும் லொகேஷன் சரியா புரியல, ஸோ வேற வீடு கிடைக்கிற வரைக்கும் நான் தான் அவங்களை இங்க தங்க சொன்னேன். நீயும் கனடா போயிட்ட. என்னாலயும் 'தனிமை'தாங்க முடியல... என்ற இரு பொருள்பட பேசியவனயே கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் அதிதி. தான் கேட்டவற்றின் அர்த்தங்களை எவ்விதம் எடுத்துக் கொள்வது என்று கூட யோசனை வந்தது அதிதிக்கு.
எனக்கு தெரிந்து அதிதிக்கு இருக்கும் ஒரே குறை பயம் மட்டும்தான்! மற்றபடி முழுமையான பெண்ணவள்.
மனைவியிடம் நடாலியை அறிமுகப்படுத்தியவனுக்கோ, நாடாலியிடம் தன் மனைவியை அறிமுகப்படுத்துவதில் எந்த விருப்பமும் இருக்கவில்லை. ஆனாலும் கேள்வியாக நோக்கிய நடாலியிடம் வேறுவழியின்றி ஷி இஸ் அதிதி. மை ஃவைப் என்ற பட்டும்படாமலும் அறிமுகப்படுத்திய தோனியில் இரு பெண்களுமே எப்படி உணர்ந்தார்கள் என்று சொல்வதற்கில்லை.
வந்திருக்கும் பெண்ணிடம் தான் ஒரு படி கீழே இறங்கி விட்டதாக அதிதிக்குள் ஒரு எண்ணம் தோன்ற ஆரம்பிக்க,
நடாலிக்கோ மெல்லிய அதிர்ச்சியுடன் விநயன் சொன்ன குரல் பேதம் அவன் தன் மனைவியை எப்படி நினைக்கிறான் என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூற அவள் உள்ளூர சிரித்து கொண்டாள். அவளுக்கு விநயன் உடனான உறவு மிகவும் பிடித்திருக்கிறது. அவனும் மனைவி பற்றி பெரியதாக எந்த எண்ணமும் வைத்திருப்பது போல் தெரியவில்லை. அவனும் தன்னுடனான உறவை விரும்புகிறான் என்பதே அவளுக்கு போதுமானதாக இருந்தது.
அலுவலகத்திலும் இருவரும் ஒன்றாக இருப்பது பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக பேச்சுக்கள் கிளம்பியது. ஆனால் பெரும்பாலும் இதெல்லாம் சகஜம் தான் என்பதுபோல் இவர்களைப் பற்றி அதிகம் யாரும் யோசிக்கவில்லை. இந்தியாவிலிருந்து விநயனுடன் சேர்ந்து படிக்க வந்த ராகுல் இப்போது இவனுடைய அலுவலகத்திலேயே சேர்ந்திருக்கிறான். நோர்த் காரோலினாவில் இத்தனை வருடங்களாக இருந்தவன் சமீபகாலத்தில் சியாட்டல் வந்துவிட்டான். அவனுக்கு திருமணமாகி மூன்று வயதில் குழந்தையும் இருக்கிறது. அவன் மட்டும் தன் நண்பனிடம் இதெல்லாம் தவறு என்று எடுத்துச் சொன்னான் தான்.
அவனைப் பொறுத்தவரை திருமணம் ஆனபின் இது போன்ற உறவுகளை வளர்ப்பது சரியல்ல. இந்த உறவுகள் திருமணத்தின் எதிர்காலத்தையும், வேலைவாய்ப்புகளில் எதிர்காலத்தையும் ஒரு புள்ளியில் மொத்தமாய் நிறுத்தி விடக்கூடும். ஆனால் இவற்றையெல்லாம் எடுத்துச் சொல்லியும் புரிந்து கொள்ள விநயன் இல்லையேல் ராகுல் மட்டும் செய்வதற்கு என்ன இருக்கிறது?
தனக்கு தன் நண்பனை செயல் பிடிக்கவில்லை என்பதை ராகுல் நேரடியாக தெரிவிக்கப்பட்டாலும் விநய்யுடன் நட்பை கொஞ்சம் கொஞ்சமாய் தள்ளி நிறுத்திக்கொண்டான். இந்த தேசத்தில் தாய் மகனாக இருந்தால் கூட ஒரு வயதிற்கு மேல் மற்றவரின் அந்தரங்கத்தில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை எனும் போது தான் யார் வினய் வாழ்க்கை பற்றி பேசுவதற்கு என்ற எண்ணம் ராகுலை மௌனமாய் இருக்க செய்தது. சில சமயங்களில் நாடாலி வினய் இருவர் உடனான நெருக்கம் கண்டு இதைப்பற்றி அவனை மனைவியிடம் பேசி விடுவோமா என்று கூட யோசித்து இருக்கிறான். பிறகு தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டு விடுவான்.
பத்து நாட்கள் இப்படியும் அப்படியுமாய் நகர, அதிதியும் தன் கணவன் என்று வரும்போது கேட்டுவிட வேண்டும் என்று ஒவ்வொரு நாட்களாய் தள்ளிக் கொண்டிருந்தாள். அதைப் போன்று ஒரு நாள் மதியம் அவளது பொறுமை எல்லை கடக்க இன்று இரவு உன் வீடு வந்து சேர்ந்த பிறகு எப்படியாவது தனிமையில் அவனிடம் பற்றி கேட்டு விட வேண்டும் அவள் யோசிக்க அவனோ நடாலியுடன் அவளது மகளை காண நியூஜெர்சி சென்றுவிட்டான். இதுபோன்ற கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்து கொண்டிருந்தன. அதிதியின் மனதில் வார்த்தைகளில் வடிக்க முடியாத வேதனை. எப்படி சொல்வது,தன் அம்மாவிடம் இதைப் பற்றி பேசலாமா என்றெல்லாம் யோசித்து அவளுக்கு அவர்களை வேறு எதற்காக கலங்க அடிக்க வேண்டும் என்று தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டாள். ஒருவழியாக வினயன் வந்து சேர்ந்தான் தன் இணையுடன் தான்.
வந்திருக்கும் பெண் இவனை விடுவதாக இல்லை. இவனும் அவளை விட்டு நகர்வதாக இல்லை. ஆரம்ப காலகட்டத்தில் பின்னிரவு நேரம் வந்து இவள் அருகில் படுத்துக் கொள்வான். இப்போதெல்லாம் அது கூட இல்லை. கேட்டால் ஹாலிலேயே படுத்து தூங்கி விடுவதாக சொல்லி விடுகிறான். எப்படி கையாள்வது என்பது அதிதிக்கு சுத்தமாக புரியவில்லை. சத்தம் போட்டோ,சண்டை போட்டு ரகளை செய்து அவளுக்கு இன்று வரை பழக்கமில்லை. ஏதோ ஒன்று இருவருக்குள்ளும் ஓடுகிறது என்பது மட்டும் அவளுக்கு தெரிந்திருந்தது. சந்தேகமாய்தான். முன்பெல்லாம் இவளை தனியே ஒரு நிமிடம் கூட நிற்க விடமாட்டான். எப்பொழுது எல்லாம் இவள் இருக்கும் இடத்திற்கு கூட வருவதை தவிர்க்கிறான். காலை எழுந்தவுடன் வீடு பராமரிப்பு,சமையல் போன்ற வேலைகளை அதிதி செய்கிறாள். வினையனும் சரி நட்டாலியும் சரி அவள் செய்யும் வேலைகளை ஏற்கிறார்கள். சமையல் செய்து வைத்தால் சாப்பிடுகிறார்கள். அதில் வேறு நடாலிகாக அதிகம் காரம் இல்லாத அந்த நாட்டு உணவு வகைகளாக சமைக்க வேண்டியிருக்கிறது. கிட்டத்தட்ட அதிதி ஒரு வேலைக்காரி போல் நடத்தப்பட்டாள். எந்த மரியாதையும் அவளுக்கு இல்லை. சில சமயங்களில் தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? தனக்கு ஏன் இந்த நிலைமை என்றெல்லாம் யோசித்து யோசித்து பைத்தியம் பிடித்துவிடும் போல இருக்கிறது அவளுக்கு.
சூழ்நிலை சற்று ஏதுவாக இருக்கும் போதுதான் இதைப்பற்றி எல்லாம் கையாள முடியும் என்றும் மவுனம் காக்கிறாள்.
அவள் மனதில் தொடர்ந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சி கொடுத்த கலக்கம் பொய் இல்லை என்று, அவள் வாழ்க்கையின் சூறாவளியின் மையப்புள்ளியை எட்டி விட்டாள்.
ஒரு நாள் விடிகாலையில் தனது அறையில் தண்ணீர் தீர்ந்து விட்டது என்று மாடியில் இருக்கும் தனது அறையிலிருந்து கீழே வரும் வழியில் நடாலியின் அறை. இருவரும் மோகத்தில் முத்து எடுக்கும் வேகத்தில் அறைக் கதவையும் ஜன்னல்களையும் சரியாக மூட மறந்து விட்டு காம கடலில் நீந்தி கொண்டிருப்பதை கண்டுவிட்டாள் அதிதி. அவள் தெரிந்து கொண்டுவிட்டாள் உள்ளிருப்பது பூதம் தான் என்று.
என்ன தான் மனம் முழுவதும் வினையன் உடனான திருமண பந்தத்தை நிலைக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் கூட சுயமரியாதையை விட்டு விட்டு இவ்வாறு வாழ முடியாது என்பது அவளுக்கு தெள்ளத் தெளிவு. அவன்மீது மோகம் -காதல் -ஈடுபாடு போன்ற உணர்வுகளைத் தாண்டி பெற்றோர் செய்து வைத்த திருமண பந்தத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு உண்டு.
தன்னிடம் என்ன தவறு எவ்வாறு இது நிகழ்ந்தது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டவளுக்கு அவனது அளவுகடந்த கலவியின்பால் கொண்ட ஈடுபாடு இத்தனை தவறுகளுக்கும் அடிப்படை என்று புரிந்தது. இதற்கெல்லாம் அவள் என்ன செய்ய முடியும்?
இனி இந்த நாட்டில்
அவ னுடன் இருப்பது முடியாத காரியம் என்பது அவளுக்குள் நிச்சயம். எவ்வளவு கனவுகளுடன் கனடாவிலிருந்து இங்கு வந்தாள்... தன் கணவனுடன் பேசி குழந்தை பெற்றுக் கொள்வது பற்றி இந்த முறை நிச்சயம் செய்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் யோசித்து வைத்திருந்தாள். கல்யாண வாழ்க்கை நிலை இல்லை என்னும்போது குழந்தை பற்றி என்ன சொல்வது... அழுது அழுது அவள் கண்கள் இரண்டும் தீக்காயம் கொண்டது போல் சிவந்தது. மறுநாள் காலையில் வழக்கம் போலவே எல்லா வேலைகளும் முடித்தவள் அவர்கள் இருவரும் டைனிங் டேபிள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்து அவரும் அமர்ந்து கொண்டாள். விநயனுக்கு ஆச்சரியம்! இவர்கள் இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பரிமாறும் வேலையை மட்டும் செய்பவள் இன்று வந்து உட்கார்ந்து இருக்கிறாள் என்றால்... அவன் முகம் யோசனையைத் தத்து எடுத்துக் கொண்டது. நட்டாலிக்கு இதிலெல்லாம் ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை.
' நான் உங்க கூட கொஞ்சம் பேசணும்... இன்னிக்கி லீவு எடுத்துடுங்க... நானும் கனடாவிலிருந்து வந்ததிலிருந்து உங்களோட பேசுவதற்கு வெயிட் பண்றேன். நீங்கதான் என் கைல கிடைக்கவே மாட்டேங்கிறீங்களே...' அதிதியின் குரல் தீர்மானமாக ஒலிக்கிறது. அந்த குரலில் இருக்கும் ஏதோ ஒன்று அவனை சரி என்று சொல்ல வைக்கிறது.
நட்டாலியிடம் விடுப்பு பற்றி சொல்லிவிட்டு அபிஷியல் மெயில் ஒன்றையும் அவளுக்கு அனுப்பி விட்டு வீட்டிலேயே தங்கி விடுகிறான் வினயன். நட்டாலி கிளம்பும் முறை பொறுமை காக்கிறாள் அதிதி.
இருவரின் பேச்சும் எதில் முடியுமோ...