அத்தியாயம் 11
மகன் கேட்ட கேள்விகளாலும், பணம் தொலைந்து விட்ட அதிர்ச்சியினாலும் இடிந்துபோய் வெளியே வந்தார் தங்கமாரியப்பன். அந்த வளாகத்தில் இருந்த மற்ற கடைக்காரர்கள் அவருக்கு வணக்கம் போட்டதைக் கூட கவனிக்கவில்லை அவர். அந்தத் தெரு முக்கு மறையும்வரை கொஞ்சம் மறைவாகவே அவரைப் பின் தொடர்ந்தான் சபரி. "என்ன தாத்தா ஒரு மாதிரி இருக்கீங்க?" என்று அவரிடம் கேட்டு விஷயத்தை வாங்கியவன், "ஒரு ஆள் வந்து இப்ப பேசிக்கிட்டு இருந்தாரு.. அப்புறமா பணத்தை வாங்கிட்டுப் போயிருப்பார்னு நினைக்கிறேன். ஏன்னா அவர் முதல்ல கொண்டு வந்த பை சின்னதா இருந்தது. அதற்கு அப்புறம் குண்டா இருந்ததை நான் பார்த்தேன்" என்றார்.
"எனக்குத் தெரியும்.. கட்டுச் சோத்துக்குள்ளே பெருச்சாளியை வச்சுக் கட்டின மாதிரி வீட்டுக்குள்ளேயே திருட்டுப்பயலை வச்சிருக்கேன்.. என்ன வார்த்தை கேட்டான் தெரியுமா? என்னால தாங்க முடியலை டா!" தங்க மாரியப்பனின் கண்கள் குளமாகின.
"தாத்தா தாத்தா!" என்று சபரி தேற்ற,
"இல்லடா! நான் எங்கேயாவது போய் தண்டவாளத்துல தலையக் குடுக்கப் போறேன்.. இத்தனை வயசுக்கு மேல இந்தப் பேச்சு எனக்குத் தேவையா?" என்று அவர் கண்ணீருடன் கேட்க,
"நீங்க மனசைத் தளர விடக்கூடாது.. போஸ்ட் ஆபீஸ்ல, பேங்க்ல அப்பப்ப பணம் போட்டு வச்சிருக்கீங்கல்ல.. அதுல ஏதாவது ஒண்ணை எடுத்துக் கோயிலுக்குக் குடுங்க.. கஷ்டப்பட்டு உழைச்ச காசு என்னைக்கும் உங்களை விட்டுப் போகாது.. திரும்ப வந்துரும். அப்படியே இல்லைனாலும் விநாயகம் அண்ணன் இதுவரைக்கும் எவ்வளவு தொலைச்சு இருக்காரு.. அது கூட இதுவும்னு நினைச்சுக்கோங்க.. நீங்க தெம்பா இன்னும் பத்து வருஷம் இருந்தீங்கன்னா, உங்க பேரன் வளர்ந்து இந்தக் கட்டடத்தை எல்லாம் அழகா பராமரிப்பு பண்ணிருவான்" என்றான் சபரி.
வசதியில் பின்தங்கிய, மிகுந்த வறுமையான குடும்பத்திலிருந்து வந்த சபரி பன்னிரெண்டு வயது முதலே கிடைத்த வேலைகளைச் செய்வதைப் பார்த்திருந்தார். இப்போது இருபது வயது இருக்கும் அவனுக்கு. எப்படி பண்பட்ட அனுபவஸ்தன் போல் பேசுகிறான் என்று அந்த நிலையிலும் சபரியை நினைத்து பெருமைப்பட்ட தங்கமாரியப்பனுக்கு, இவன் எனக்கு மகனாக பிறந்திருக்க கூடாதா என்ற ஒரு அங்கலாய்ப்பும் மனதில் தோன்றியது.
அதற்குப் பின் சபரியாலும் அவருடன் துணைக்குச் செல்ல முடியாமல் இருக்க, ஒற்றை ஆளாக வீட்டிற்குச் சென்ற தங்கமாரியப்பன் தன் வங்கிக் கணக்குப் புத்தகம், போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு பத்திரங்களையும் எடுத்துக்கொண்டு அன்றைய காலைப் பொழுது முழுவதும் அலைந்தார். ஏனோ அந்த நேரத்திற்கு கடவுள் மறதியைக் கொடுக்கவில்லை.
பணமாகவும் இடங்களாகவும் கட்டிடங்களாகவும் வைத்திருந்த சேமிப்பை அவரது நண்பரான ஒரு போஸ்டல் ஏஜன்ட் நல்ல வழியில் முதலீடு செய்ய சொல்லித்தந்தார். "அப்பப்ப போஸ்ட் ஆபீஸ் பத்திரங்களா வாங்கி வச்சுக்கோங்க.. இல்ல, பேங்க்ல ஃபிக்சட் டெபாசிட் போடுங்க" என்பார்.
இந்தத் திட்டத்தில் அதிக வட்டி தருகிறார்கள் என்று கூறுவதாகட்டும், எல்ஐசியில் எந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறுவதாகட்டும், தங்கமாரியப்பனுக்காக கூடுதல் சிரத்தை எடுத்தே செய்தார் அவர். அதன் பலனாக அங்கங்கே திரவ நிலையில் இருந்த பணம் நிதியாகச் சேர்ந்திருந்தது.
போஸ்ட் ஆபீஸில், இவருடைய பத்திரங்களை இப்போது உடைக்க முடியாது, ஒரு பத்திரம் முடிவதற்கு ஆறு மாதம் இருக்கிறது, இன்னொன்று முடிவதற்கு இரண்டு வருடம் இருக்கிறது அப்போது தான் எடுக்க முடியும் என்று கூறிவிட்டார்கள்.
ஒரு வங்கியில், "கையெழுத்துப் போட்டுக் குடுத்துட்டுப் போங்க.. இன்னும் ரெண்டு நாள்ல உங்க அக்கவுண்ட்ல கிரெடிட் பண்ணிடலாம்.. ஆனா நீங்க 7% வட்டிக்கு போட்டு இருக்கீங்க.. இப்ப எடுத்தீங்கன்னா நான் நாலரை சதம் தான் கிடைக்கும்" என்று கூறி அனுப்பியிருந்தார்கள். "கையெழுத்துப் போட்டுக் குடுத்தா ரெண்டு நாள்ல வந்துரும்ல?" என்று உறுதிப்படுத்திக்கொண்டு, "நாளைக்குக் கொண்டு வந்து தரேன்" என்று அந்தப் படிவத்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டார்.
தொலைந்து போன பணத்தைத் திருப்பித் தேடுவதற்கு ஒரு நாளாவது முயன்று பார்க்கலாம் என்று நினைத்தார். ஆனால் அவரது மனதில் அந்த பணத்தை மறுபடியும் கண்ணால் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையே இல்லை. துளசியும் வாசலிலேயே அமர்ந்து மாமனாரின் வருகைக்காகக் காத்திருந்தாள். அன்று, அவளுக்கு மனமே விட்டுப் போயிருந்தது.
'இருந்தாலும் இந்த மனுஷன் இப்படிச் செய்யக்கூடாது' என்று எதிர்வீட்டு சண்முகத்தாயிடம் கணவன் பற்றிப் பலமுறை புலம்பி விட்டாள். மாமனாரை முழுவதுமாகக் கண்ணால் பார்த்த பின்புதான் அவளுக்கு நிம்மதி. "வாங்க மாமா! உட்காருங்க சாப்பிடுங்க! பணம் கிடைச்சுதா?" என்று அவள் கேட்க,
வங்கி விவரங்களை அவளுக்குப் புரிந்த அளவில் விளக்கிவிட்டு, "இதை சாமி முன்னாடி வைம்மா.. அம்மா மனசு வச்சா அந்தப் பணம் கிடைக்கும்.. அந்தக் காசு எனக்கு வேண்டாம்டா, விட்டுத் தொலை.. அப்படின்னு அவ சொன்னா ஏத்துக்கணும்மா.. வேற என்ன செய்ய?" என்று கூறியவர் அரைவயிற்றுக்குச் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொண்டார்.
வெள்ளந்தியான ஒரு பெண்ணை மனைவி மருமகளாகப் பிடித்து வந்தாள்.. சரிதான். ஆனால் நானாவது இவளுக்குக் கொஞ்சம் விவரத்தைச் சொல்லிக் கொடுத்திருக்கலாம்.. எல்லாப் பொறுப்பையும் என் தலையிலேயே போட்டுக்கொண்டு இப்போது மறதிநோய் வந்து அவதிப் படுகிறேன், மகனையும் வளர்க்கத் தெரியவில்லை, சம்பாதித்த சொத்தையும் காப்பாற்றத் தெரியவில்லை என்று சுய பரிதாபம் அழுத்த, அப்படியே தூங்கிப் போனார்.
இந்த வயதில் இருக்கும் எல்லா பெற்றோர்களையும் போலவே தன்னை நோக்கியே விரல்களை நீட்டி குற்றம் சுமத்திக் கொண்டார். அந்த குற்ற உணர்ச்சி காரணமாக அன்றைக்குப் பின் அவர் தெளிவாகப் பேசவும் இல்லை, வழக்கமான உற்சாகத்துடன் நடமாடவும் இல்லை.