கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

மணாளனே மனோகரா-11

hamsa

New member
இல்லறம்-11

அவன் அப்படி சொன்னவுடன் ரேவதிக்கு ஒரு துளி குஷி தெரிந்தது. டக்கென அவன் பார்க்காதபடிக்கு மறைத்துக் கொண்டாள் .
அவன் மனோ டீ! அவனை அவ்ளோ ஈஸியா ஏமாத்த முடியாது. ஒன்றும் தெரியாத அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு,
"ஏதோ நீங்க இவ்ளோ தூரம் கூப்புடறேள் . நான் வேண்டான்னு சொன்னா உங்களுக்குதான் மனசு சங்கடம். போகலாம்"
அங்கே வேண்டியதை சாப்பிட்டாள் . "நான் மிச்சம் வெச்சா திட்டுவேளா? "
"ம்ம்., நோ!"
வேண்டுமென்றே மிச்சம் வைத்தாள் . அதை இவன் சுவைத்து சாப்பிட்டான்(இதுவும் அப்பாவோட ஐடியாவா? இல்லையே 🤔மனோ புல் பார்ம்ல இருக்கடா)
இவளுக்குத்தான் என்னவோ போல ஆயிற்று.
ஆனால் வீட்டுக்கு மலர்ந்த முகத்துடன் வந்தாள் .
வீட்டுக்கு வந்து அப்பா அம்மாவின் ஷாரை தந்தான். அப்பாவை மட்டும் அறைக்கு அழைத்து, "அப்பா நீ தெய்வம்...."
"பொண்ணுங்களுக்கு எதுன்னாலும் கட்டிணவன் வந்து தாஜா பண்ணனும், கொஞ்சனும், தப்பு அவாதான் பண்ணிருப்பா! ஆனா , புருஷன்தான் வந்து சாரி கேட்கணும். பண்ணாத தப்புக்கு கிப்ட் வாங்கி குடுத்து சமாதானபடுத்தனும். இன்னும் எவ்ளவோ இருக்குடா., இதெல்லாம் ஒரு கடல்.,போகப்போக புரிஞ்சுப்ப !"
அன்றைய நிகழ்ச்சிகளை நினைத்து பார்த்தவனுக்கு தன்னுடைய பெற்றோரின் காதலுக்கு பின்னால் எத்தனை சமாதானங்கள் இருந்திருக்கும் என்று புரிந்து கொள்ள முடிந்தது. ஏன் , அப்பா மட்டும்தான் சமாதானப்படுத்துவாரா ?
அம்மா., எத்தனை நாட்கள் அப்பா, போனை மறந்ததற்கும், பர்ஸை மறந்ததற்கும் திட்டு வாங்கி இருப்பாள்? அலுவகத்தில் எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும், அது எல்லாம் அம்மா மேல்தானே காட்டி இருக்கிறார். அப்பாவுக்கு இது பிடிக்கும், உனக்கு இது பிடிக்கும், இப்படி தன்னை பற்றிய நினைவே இல்லாமல் அம்மா வாழ்ந்திருக்கிறாளே! வேலைக்கு சென்ற போதிலும் எதற்கும் என்றும் , மூஞ்சி சுணங்கியதில்லை . எந்த குறைவும் வைத்ததும் இல்லை.
ரேவதிக்காக, அவளை சமாதானபடுத்துவதற்கு சிறிது சிரமப்பட்டாலும், அவனுக்கு அது இன்பமாகவே இருந்தது. பொண்ணுங்களுக்கு எதுன்னாலும் கட்டிணவன் வந்து தாஜா பண்ணனும், கொஞ்சனும், தப்பு அவாதான் பண்ணிருப்பா! ஆனா , புருஷன்தான் வந்து சாரி கேட்கணும். பண்ணாத தப்புக்கு கிப்ட் வாங்கி குடுத்து..........முகத்தில் புன்னகை தவழ .,மனைவியின் முகத்தை பார்த்துக் கொண்டே உறங்கினான்.
டேய் !இதெல்லாம் அனுபவ பாடண்டா மகனே.....
அடுத்த சில வாரங்களில் ,மாமனாரும் மாமியாரும், கோயில்களுக்கு சென்று வரலாம் என்று முடிவெடுத்தனர். அதை பற்றி ரேவதியிடம் கேட்டதற்கு ,
"என்னம்மா இது,நான் பார்த்துக்கறேன். நீங்க போயிட்டு வாங்கோ"
அவர்களை விட்டு பத்து நாள் பிரிந்திருக்க வேண்டுமா ?
மலைப்பாக இருந்தது. அவர்கள் கிளம்பும்போது அழுகை வந்தது. அடக்கி கொண்டாள்(ஏற்கனவே சிறு பெண் என்பவர்கள் குழந்தையை விட்டு விட்டு போகாவிட்டால்? )அவர்களே பாவம். இப்போதுதான் வெளியேக் கிளம்புகிறார்கள். இவளுக்கே தெரியாமல் அவர்கள் மீது பாசம் வந்திருந்தது.
பொறுப்பான மருமகளாக நடந்து கொண்டாள். விடியலிலே எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு, குளித்து விளக்கேற்றி சமையல் செய்து சிற்றுண்டி உண்டு, அவனுக்கும் போட்டு, இருவருக்கும் டப்பா கட்டி, ஸ்ஸ்...... அப்பா அவளால் அத்தனையும் செய்துவிட்டு, அவனுடன், காரில் ஏறி அமர்ந்தால் , சுகமாய் தூக்கம் வந்தது.
அவளை பார்த்தவனுக்கு பாவமாய் இருந்தது. மறு நாள் முதல் அவனே தண்ணீர் தெளித்து கோலம் போட்டான். காபி போட்டான். காய் நறுக்கி கொடுத்தான். இவளுக்கு மிக உதவியாக இருந்தது.
ஆனால் அடுத்த வாரம், இவளுக்கு மாதத்தின் அந்த மூன்று நாட்கள் வந்தது. எப்போதும் மாமியாரிடம் கூறி விடுவாள். இந்த முறை அவனிடம் எப்படி கூறுவது. புரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் .
இவளின் நடவடிக்கையையும் முகத்தையும் பார்த்தவன், கண்டு பிடித்து விட்டான்.
என்ன தீட்டா ?"
"உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ? "
"ஏன் ? எங்கம்மாவை பார்த்ததில்லை?"
தன் வீட்டில் இதெல்லாம் பற்றி அண்ணாவுக்கு தெரியாது . அம்மா வீட்டிலிருந்து விலகிக் கொள்வாள். இவளும் அப்பாவும் சேர்ந்து வீட்டு வேலைகளை பார்த்துக் கொள்வார்கள்.
ம்ம்.,
சரி, நீ உன்னோட வேலைய பாரு. எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்.
இவள் வயிற்றை பிடித்துக் கொண்டு உட்கார்ந்தாள். உனக்கு ஏதாவது வாங்கணுமா? பேப்பர்ல எழுதி குடு. நான் போய் வாங்கிண்டு வரேன். கடைக்கு போனவன், சிறிது வெங்காயமும் வாங்கி வந்தான்.
"நாம இது சாப்பிட மாட்டோமே ?"
"இது வெண்ணீர்ல போட்டு குடிச்சா வயதை வலிக்காது"
"இந்தா பால் குடி. தேன் போட்டுருக்கேன். நன்னா தூக்கம் வரும்"
"என்ன இத்தூனுண்டு சாப்பிடற? நன்னா சாப்பிடு"
"அசோ! இவ்ளோ நெய்போட்டு பருப்பு சாதம் சாப்பிட்ட நான் அவ்ளதான்"
"அதெல்லாம் இல்ல. இந்தா கட்டி தயிரா சாப்பிட்டு"
"இட்லிக்கு என்ன சக்கர போட்டுக்கறியா இல்ல கொழம்பு குத்திக்கறயா ? மொளகாப்பொடி கிடையாது"
இந்தா ஹார்லிக்ஸ் . என்னேரமும் காபி குடிக்காத"
"இந்தா!மத்ததெல்லாம் யூஸ் பண்ணாத, இது ஆர்கானிக் . உடம்புக்கு கஷ்டப்படுத்தாது"என்று நாப்கின்ஸ் வாங்கித் தந்தான்.
இவளுக்கு கண்ணை கரித்துக் கொண்டு வந்தது.
முதல் தரம் இவள் சமைத்த போது இவனுக்கு காரம் ஒத்துக்கொள்ளாமல் வாய் வெந்தது. அதை கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தான்.
"என்ன பார்த்தாலும் மூஞ்சி அவ்வளவு தான். பெருசா அழகு கூடப்போறதில்ல"
அவன் அம்மா அவனுக்கு தேன் தடிவி விட்டார்.பின்னர்தான் சரியானது. இந்த சமயத்தில் அவளுக்கு இது நினைவு வந்தது.
வார இறுதி நாட்கள் ஆனதால், இருவருக்குமே எந்த டென்ஷனும் இல்லாமல் போயிற்று. திங்கள் அன்று விடியற் காலையிலேயே எழுந்து, இருவருக்கும் டிபன் செய்தான்.
"சாரி ரேவதி! லஞ்சுக்கு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. ராத்திரிக்கு, நான் ஏதாவது பண்ணறேன்"
"இல்லன்னா!,ராத்திரிக்கும் , ஏதாவது வெளிலையே பாத்துக்கலாம். நீங்க ரொம்ப டயர்டா வருவேள் . கஷ்டப் படவேண்டாம்(அட , ரேவதி யாரும்மா உனக்கு மந்திரிச்சு விட்டது?)
மூன்று நாட்கள் வரை பொறுத்திருந்தவளுக்கு குளித்து முடித்ததும் தாங்க வில்லை.
அவனை வந்து கட்டிக் கொண்டாள். இது அவன் எதிர்பாராதது. அவனுக்கு மூச்சடைத்து. தன் வாழ்வில் இதற்கெல்லாம் அனுமதி இல்லை என்று மனதை தேற்றிக் கொண்டு வாழ ஆரம்பித்திருந்தான். ஆனால் இது... அவனால் யோசிக்க கூட முடியவில்லை.
இருப்பினும் அவளை சமாதானத்திற்குக் கூடத் தொடவில்லை . கவனமாய் கைகளை அடக்கிக் கொண்டான்.
"நான் உங்கள எவ்ளோ திட்டியிருக்கேன். எப்டில்லாம் பேசியிருக்கேன். நீங்க மட்டும் என்ன "ஏன் பார்த்து பார்த்து கவனிச்சுக்கறேள் ?"
தெரியலையே ?"
அவன் கைகளை எடுத்து இவளே கட்டிக் கொண்டாள் .
இருவருக்கும் அடுத்த நிகழ்வுகளை பற்றிய நினைவே இல்லை. அதில் நிச்சயம் காமம் இல்லை. ஆனால் அன்யோன்யம் இருந்தது. ஆசை இருந்தது. இந்த அணைப்பு வாழ்க்கை முழுமைக்கும் வேண்டும் என்றே இருவருக்கும் தோன்றியது.
இதற்கு பின் இருவரும் உடலாலும் இணைய ஆரம்பித்தனர். சிறு சிறு உரசல்கள், தொடுதல் எல்லாமே வர ஆரம்பித்தது. இருப்பினும் இருவருக்கும் ஏதோ ஒரு திரை இருந்தது போலவே இருந்தது. இவன் காதலித்தான். அதை அவளிடம் கூற தயக்கம். அவள் அவனின் அருகாமையை விரும்பினாள். ஆனால் அவளால் இன்னும் அவனின் உருவத்தை கணவனாக ஏற்க முடியவில்லை.
அதுவும் சில நாட்களுக்குத்தான்,
ஒரு நாள் வேஷ்டி பனியனில் பளிச்சென்றிருந்தான். வேறு ஒருநாள், அலுவலகத்துக்கு கிளம்பிக் கொண்டிருந்தான். கரு நீல சட்டையும், அதற்கேற்ற பேண்ட்டும் கச்சிதமாக இருந்தது. அவனை பார்த்தவளுக்கு அழகாக இல்லை என்றாலும் ஸ்மார்ட்டாக தெரிந்தான்.
தன்னால் இனி இன்னொரு வீட்டில் சென்று வாழ முடியாது, என்பது அவளுக்கு புரிய ஆரம்பித்தது. மனோ, அவன் அன்னை தந்தை யாரையுமே பிரிந்திருக்க முடியாது என்பது தெளிவாய் தெரிந்தது.
இதற்கு நேர் மாறாக , அவள் பெற்றோரின் நிலை அவல நிலையானது. சொந்த வீட்டிலேயே அவர்கள் இருக்க முடியாது என்ற நிலை வந்தது. அது யாருமே சற்றும் எதிர் பார்க்காதது.
சம்பந்திக்கு உடம்பு சரியில்லை என்று கூறி ஊரில் இருந்து வந்தவர்களுக்கு மீண்டும் வீடு திரும்பும் எண்ணமே இல்லாமல் போயிற்று. இவர்களின் படுக்கை அறை, அவர்களுக்கு தரப்பட்டது. இவர்கள் ஹாலில் படுக்க ஆரம்பித்தனர்.
யதேச்சையாக அண்ணன் வீட்டிற்கு வந்தவளுக்கு அதிர்ச்சி.
அண்ணனிடம் பேசினாள்.
என்ன ., என்ன பண்ண சொல்லற? அவ பேச்ச கேட்கலைன்னா அவ அம்மா வீட்டுக்கு போறேன்னு மிரட்டறா. இப்ப இவளுக்கு 3வது மாசம் வேற. எனக்கு என்னோட மனைவியும் குழந்தையும் வேணும்.
அப்பா அம்மா வேணாமா?
இந்த மாதிரி விதண்டாவாதம் பண்ண முடியாது. நான் என்ன அவங்கள ஏதாவது ஹோமுலையா விட்டேன். இது நம்ம வீடு. ஹால்ல படுத்தா என்ன ?
வெளில திண்ணைல கூட படுக்கலாம். ஆனா அது அவங்களோட இஷ்டமா இருக்கணும். உங்களுக்கு வேற இடம் இல்லனு துரத்த கூடாது.
இப்ப என்ன அவங்கள வீட்டை விட்டு வெளில போங்கன்னு சொல்ல சொல்றியா?
இல்ல, அவங்க வீட்டுல அவங்க இருக்க சொல்லலாம் . இல்லாட்டி ஏற்பாடு பண்ணு .அவாளுக்காக நம்ம அப்பா அம்மாவை கஷ்டப்படுத்தக் கூடாது. அவமான படுத்தவும் கூடாது.
வேணுன்னா நீ அப்பா அம்மாவை கொஞ்ச நாளைக்கு வைச்சுக்கோயேன் ரேவதி. ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த மன்னி அறிவுரை சொன்னாள் .
என்ன ரேவதி மன்னிய முறைக்கிற ?
நீ என்ன பேசறன்னு தெரிஞ்சுதான் பேசறியா ?
முடியாது இல்ல? அப்போ வந்து எனக்கு அட்வைஸ் பண்ணறத நிறுத்து. அப்புறம் இன்னொரு விஷயம், முதல்ல நீ உன்னோட புருஷனோட ஒழுங்கா குடுத்தனம் பண்ணற வழிய பாரு. சின்ன சின்ன விஷயத்தை எல்லாம் பெருசாக்கி இங்க வந்து வந்து ஒப்பாரி வைக்கறத முதல்ல நிறுத்து.
அண்ணனின் வார்த்தைகள் இத்தனை கடுமையையாக இருக்குமா ? தனக்கே இப்படி என்றால் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எத்தனை சூடு சொல் தந்திருப்பான் ?

அன்றிலிருந்து தூக்கம் தொலைந்தது.

மயக்குவான் மனோ .,....
 
Top