கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

மணாளனே மனோகரா-15

hamsa

New member
இல்லறம்-15

"அப்பப்பா நீ ஒரு புடுங்கல்! " மனோவால் அவளின் தொல்லை தாங்க முடியவில்லை.
"அது இருக்கட்டும். எனக்கு பதில் தான் வேணும்" இவளும் தான் விடவில்லை.
"அது... எங்க அம்மாவுக்கு ஒன்னு போனதுலேர்ந்து தான் ஒரு ராசி இல்லாதவன்னு ஒரு எண்ணம். அது போனதுக்கு தான்தான் காரணம். நான்தான் கவனக்குறைச்சலா இருந்துட்டேன். ஒரு உசுரே போயிடுத்துன்னு, அந்த அதிர்ச்சிலேர்ந்து வெளில வர்றதுக்கே ரொம்ப வருஷம் ஆச்சு. அதனால எந்த விசேஷத்துக்கும் கிளம்பறதில்ல. இருந்தாலும் தவிர்க்க முடியாததுக்கு மட்டுந்தான் போயிண்டு இருக்கா. நாங்களும் எவ்ளவோ சொல்லி பார்த்துட்டோம். மனசதான் மாத்திக்க மாட்டேங்கறா"
"ஏன்! அதான் அவாளுக்கு நீங்க ஒரு புள்ள இருக்கேளே? இதோ கல்யாணம் ஆயிடுத்து , ஆத்துக்கு வாரிசு வர போகறது . அப்பவுமா இப்படி நினச்சுண்டுருக்கா? இந்த காலத்துலேயும் இப்படி எல்லாம் நம்பிண்டு இருக்காளே ? அதுலயும் ஒரு வலீட் (valid) ரீசன் சொன்னா பரவால்ல. ரெண்டாவது போயிடுதுன்னா எனக்கு ஒன்னும் புரியல"

"ஒருத்தொருத்தர் மனசு ஒவ்வொரு மாதிரி, இதுக்கு வலீட் (valid) ரீசன், அதுக்கு வலீட் (valid) ரீசன் இப்படியெல்லாம் கேட்க முடியாது. அது மட்டும் இல்லாம நீ சொன்ன எல்லாத்தையும் ஆத்துல நாங்க எல்லாரும் சொல்லியாச்சு. நமக்கு குழந்தை பொறந்தா கூட நீ ஆத்துக்கு வந்ததுக்கப்புறம்தான் பார்ப்பேன். ஆஸ்பத்திரிக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டா. அதுக்கே எப்படி மனச மாத்தறதுன்னு நானும் அப்பாவும் முழிஞ்சுண்டு இருக்கோம். நிலைமைய புரிஞ்சுக்காம இவ ஒருத்தி..." அலுத்துக் கொண்டான்.

"சரி!சரி! அலுத்துக்காதீங்கோ . நான் அம்மாகிட்ட பேசி பாக்கறேன்"
ரேவதி தன் அன்னையிடம் விஷயத்தை கூறினாள் .
"என்ன ஆனாலும் சரி, மாமி மனச மாத்தியே ஆகணும்"என்று இருவரும் சேர்ந்தே மாமியிடம் பேசினார்கள் .
"மாமி! இந்த தடவ இவளுக்கு நீங்க போயிட்டு வேறேளா . நேக்கு என்னமோ உடம்பே முடியல"
"என்ன மாமி இது. உங்க பொண்ணுக்கு நீங்கதான் போகணும். நான் எப்படி போகறது?"
"அதெல்லாம் இல்ல. நீங்க தான் வரணும். எனக்கு எங்க அம்மா வர்றதுன்னா வரட்டும். ஆனா நீங்க கண்டிப்பா வரணும். இவா என்ன வஞ்சுண்டே இருப்பா "மூஞ்சி சிணுங்கினாள்.
"இல்லடா கண்ணு ! இந்த ஒரு தடவ அம்மாவோட போயேன்" கன்னம் தடவி கொஞ்சினார் லஷ்மி.
"அதெல்லாம் இல்லை" என்று ரேவதி முரண்டு பிடித்தாள் .
பின்னர் தான் விஷயம் வெளி வந்தது.
இந்த உலகத்துல எல்லாமே நம்மோட விதிப்படிதான் நடக்கும் அது இதுவென்று எத்தனை முயற்சி செய்து பார்த்தும் ம்ம்.. நடக்கவில்லை.
"இங்க பாருங்கோ! உங்களுக்கு இவ்ளோ பிடிவாதம் இருந்தா எனக்கு இருக்காதா? நீங்க வந்தாதான் நான் போவேன். இந்த ஸ்கேன் பாக்கலைனா என்ன? அடுத்தது பாத்துக்கலாம். எனக்கு ஒண்ணுமே இல்ல. உங்காத்து வாரிசு. எனக்கென போச்சு?" மூக்கு உறிந்து அழுகையை அடக்கிக் கொண்டு போனாள் .
சிறிது நேரம் லக்ஷ்மிக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர்கள் சென்றதும் கணவர் வந்து அவர் பங்கிற்கு சிறிது அறிவுரை வழங்கினார்.
'சரி போனால் போகட்டும். ஒன்று அவள் அம்மா இல்ல மகன் யாராவது அழைத்து செல்வார்கள்' என்றே லஷ்மி பிடிவாதமாக இருந்தார்.
இரவு படுக்கையில் விழுந்ததும் மீண்டும் ரேவதியின் குரல் காதில் எதிரொலித்தது.
மனம் தாங்காமல், 'நம்மோட தப்புனால குழந்தைக்கு?'பயம் வந்தது. ' நாம தப்பு பண்ண கூடாது' என்று நினைத்தவர் ரேவதியின் அறைக் கதவை அவசரமாக தட்டி,
" நாளைக்கு கார்த்தாலே ரெடியாயிடு. நீயும் நானும் போகலாம்" என்றதும் தயங்காமல்
ரேவதி மாமியாரின் கன்னத்தில் முத்தமிட்டு ஐ லவ் யு சொன்னாள் .
"உங்காத்துக்காரர் கோச்சுப்பர்டி"கன்னத்தை துடைத்து வெட்கத்துடன் சொன்னாள் லட்சுமி.
மனைவியை இந்த கோலத்தில் பார்த்த கணவனுக்கு மனதில் பரவசம் பிறந்தது.
மறுநாள் ஸ்கேன் முடிந்து வந்ததும், லட்சுமி குளிக்க போனார்.
அந்த சமயத்தில் மருமகளை பார்த்து விசாரித்தார் மாமனார்.
"எல்லாமே நார்மல்தான் பா . இருந்தாலும் நாம டாக்டர் கிட்ட போனாதான் அவா எல்லாமே விளக்கமா சொல்லுவா"
"நீங்க ,எங்கப்பா எல்லாரும் சாப்ட்டேளா ? எங்க அம்மா நான்னா பாத்துண்டாளா ?"
"அதுக்கெல்லாம் ஒன்னும் குறை இல்ல. நீங்க சௌகரியமா போனேளா . என்னதான் வர வேண்டாமுன்னு சொல்லிட்ட " குறைபட்டுக் கொண்டார்.
"இல்லப்பா! அம்மாவுக்காக தான். அம்மாக்கு மனசுல எந்த குறையும் இருக்க கூடாது. இது ஒரு மாதிரி ஊசி போடற வேலைதான். வலிக்குமேன்னு பயந்தா சரிப்பட்டு வராது . உங்களுக்கு தெரியாததா ? என்ன கோச்சுக்காதீங்கோ ப்ளீஸ்.. "கண்களில் கெஞ்சலுடன் கேட்டாள் .
"எவ்ளோ பெரிய விஷயத்தை எவ்ளோ சாதாரணமா நீ செஞ்சுருக்க தெரியுமா? இத்தனை வருஷமா நான், மனோ , அவ அண்ணன் யாரு சொல்லியும் கேட்காதவ இன்னிக்கு நீ சொல்லி கேட்டுருக்கானா அது, அவ உன்ன தன்னோடபொண்ணாவேதான் பாக்கறா., நேத்திக்கு ராத்திரி அவளே தான் இதை சொன்னா .எனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல " சொன்னவர் கண்களில் லேசான சந்தோஷ கண்ணீர்.
"நான் உங்க பொண்ணு இல்லையா? இப்படித்தான் உங்க புள்ளைக்கு சொல்லுவேளா?" பதில் கூறாமல், கண்ணை துடைத்துக் கொண்டு சென்று விட்டார்.
"எனக்கு மனசு ரொம்ப நிறைவா இருக்கு ரேவதி... " ஊரில் இருந்து வந்த கணவனின் அணைப்பில் இவளுக்கும் மனம் நிறைவாக இருந்தது.
இந்த மன நிறைவுடன் மனோவும் ரேவதியும் நம்மை சீமந்ததிற்கு அழைக்கிறார்கள் .
அவர்களையும், வரவிருக்கும் தேவதையையும் வாழ்த்த நான் செல்ல போகிறேன். நீங்களும் வந்துடுங்க...........
இன்று மனோ மட்டும் இல்லை, அவனின் சீமந்த விருந்தும் நம்மை மயக்கும்..........

சீமந்தம் சிறப்பாக நடந்தது. புடவை சரசரக்க வயிற்றை தள்ளி வைத்து நடையில் வந்த ரேவதியை பார்த்தவனுக்கு கண் தட்ட முடியவில்லை.
"டே! உம் பொண்டாட்டிதான்டா , சைட் அடிச்சுதானடா இப்போ சீமந்ததுல நிக்கற! இங்கையுமா? உங்க மாமனார் பாக்கறாரு. ஜொள்ள தொட"
சூர்யா கிண்டல் செய்ததும்தான் தன் நிலை உணர்ந்தான் மனோ. கணவனின் முகத்தை பார்த்தவளுக்கு எந்த அழகு சாதனமும் தேவையே இல்லை. முகத்தில், அவளுக்கு அத்தனை சந்தோஷம், வெட்கம், மகிழ்ச்சி ..... அவளின் புகைப்படங்கள் அயர்வையும் மீறி அற்புதமாக இருந்தது.
மண்ணியும் கப்சிப்பெண ஆகிவிட்டாள் . அவளுக்கு கணவனின் கோபமும் வருத்தமும் தாங்க முடியாததாக இருந்தது. ரேவதியை போல வெளிப்படையாக காட்டாவிட்டாலும் , அவளுக்கும் அவள் கணவனுக்கும் காதல் நிரம்பவே இருந்தது. அவள் செய்த ஒரே தவறு, தன் பெற்றோரிடத்தில் வைத்த அன்பை அவன் பெற்றோரிடத்தில் வைக்க வில்லை . விரைவில் அதுவும் சரியாகி விடும்.
வயதான காலத்தில் அவர்கள் தனியாக இருப்பதும் சரியில்லை என்றே நாராயணன் கருதினார். ஆனால் ஹரியின் மனைவி,
"இல்லப்பா, அவா கொஞ்ச நாளைக்கு தனியாவே இருக்கட்டும், அவாளுக்கு ரொம்ப முடியலைன்னா பாத்துக்கலாம்" என்று விட்டாள் .
"இல்லடா, நாங்க வேணா ஏதாவது முதியோர் இல்லம், இல்ல சீனியர் சிட்டிசன் ஹோமோ எங்கையாவது போய்க்கறோம் . அவளை அவ பேரண்ட்ஸ் கிட்டேர்ந்து பிரிச்சதா இருக்க வேண்டாம்"
"அப்ப நான் மட்டும்? அப்பா இதுதான் நம்ம நாட்டோட சிஸ்டம். நாம இப்படித்தான் பல காலமா வாழறோம் . ஏன் அம்மா கல்யாணம் ஆன ஒடனே அவங்க பேரெண்ட்ஸ் கூடவா இருந்தாங்க?"
"இல்லப்பா அது பழைய காலம். இப்போ எல்லாமே வேற. நீ இப்படியெல்லாம் பேசறது சரி இல்ல"
"அவாளுக்கு நான் பையன் மாதிரிதான். அப்படியே அவாளை விட்டுட மாட்டேன். இது இப்போதைக்குதான். அப்புறம் கதையை அப்புறம் பாக்கலாம்.கொஞ்ச நாளைக்கு அப்புறம் எதுவா இருந்தாலும் யோசிக்கலாம். இப்போ நீங்க எதுவும் மனச போட்டு குழப்பிக்காதீங்கோ" தீர்மானமாக சொல்லி விட்டான் ஹரி. அதற்கு மேல் யாரும் எதுவும் யோசிக்கவில்லை.
அதன்படியே,அவளின் பெற்றோர் ஊரில் இருந்த வீட்டை விற்றுவிட்டு, இவர்களின் வீட்டு அருகிலேயே ஒரு வீடு வாங்கிக் கொண்டனர். தேவையான அனைத்து உதவிகளையும் இவர்கள் செய்து கொடுத்தனர். தினமும், மாலை வேளையில் மகள் பெற்றோரிடம் இருந்து விட்டு, இரவில் வீடு திரும்புவாள்.
ரேவதிக்கு பிள்ளை பேறு முடிந்ததும், இவள் பெற்றோர் அடுத்த சில மாதங்களிலேயே மகனிடம் சென்று விட்டனர்.என்னதான் இருந்தாலும் நீங்க இங்கேர்ந்து போக வேண்டாமே? இது உங்க அண்ணா ஆம்தானே?(house )
"கண்டிப்பா மன்னி ! கணுவுக்கு மஞ்ச தீத்தீக்க இங்க தான் வருவேன்.அண்ணா! நீங்கதான் எனக்கு கணு சீர் கொண்டு வந்து தரணும், மறு வார்த்தை பேச முடியாமல் வாயை பொத்தி கொண்டு விம்மியவள் சட்டெனெ கண்களை துடைத்து சிரித்துக் கொண்டாள் . அவளை பாவமாக பார்த்த லஷ்மிக்கும் மனம் பிசைந்தது. ரேவதிக்கும் மனம் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் அவளின் அழுகை கோட்டா முந்தைய தினமே முடிந்து விட்டதால், அவள் அமைதியாகவே இருந்தாள் . ஆண்கள் மனதில் இருப்பதை வெளி காட்டவில்லை .
அனைவரின் ஆசைப்படி முதலில் ஒரு பெண் பிறந்தாள் . அவள் அங்கே தேவதையாகவே பார்க்கப்பட்டாள் .
நம்மை மயக்க வருவாள் லாஸ்யா..........
 
Last edited:
Top