இல்லறம்-2
இவள் அண்ணனுக்கு திருமணமான அடுத்த 4வது மாதமே இவள் திருமணம் நடந்தது. ரேவதியின் திருமணம் வேண்டாம் என்ற அழுகையும், மனோவின் தோற்றமும் மன்னிக்கு கிண்டலாகவே இருந்தது.
அதிலும் இவள் சீக்கிரம் திருமணம் ஆகி சென்று விட வேண்டும் என்று நினைத்தாள் . யார் திருமணம் ஆகாத நாத்தனாரின் பொறுப்பை ஏற்று கொள்வார்கள்?
இவளின் திருமணத்திற்கு பின் மாமியார், மாமனாரை விட்டு மெதுவாக தனிக் குடித்தனம் சென்று விடலாம். இருப்பினும் அவர்கள் எல்லா வேலைகளையும் செய்வதால் வேலைக்கு ஆள் வைப்பது மிச்சம் என்று எண்ணினாள். அதே சமயம் வீடும் சொந்த வீடாயிற்றே. அதனால் அந்த வீட்டில்,
அவர்களுக்கு பதிலாக தன் பெற்றோரை கொண்டு வந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. பெண்ணை பெற்றவர்கள் வந்து பெண்ணுடன் இருப்பது தவறா? புரியவில்லை.
அதற்கு அவள் கணவன் சம்மதிக்க வேண்டுமே? சம்மதிக்காமல் என்ன? பெரிய அழகு
கிடையாது. ஆனால் தவறாமல் பார்லருக்கு சென்று விடுவாள். பெரிய அறிவாளி என்று சொல்லி விட முடியாது. இதோ அதோ என்று இளநிலை படிப்பை முடிந்ததே பெரிய விஷயம். என்ன? நாக்கை சுழற்றும்
ஆங்கிலமும் அதை சரியான இடங்களில் பயன் படுத்திக் கொள்ளும் சாமர்த்தியமும் போதாதா? இதோ ஒரு பெரிய பர்னிச்சர் கம்பெனியில் ரிஷப்ஷனிஸ்ட்டாக வேலை பார்க்கிறாள். அவள் தான் அங்கு ஆள் இந்த ஆல் அழகு ராணி. அவளுக்கு தெரியாத கஸ்டமர்களும் இல்லை. க்ளைன்டும் இல்லை .
அலுவல் விஷயத்தில் எத்தனை சாமர்த்தியமோ. அதை விட சாமர்த்தியம் சொந்த விஷயங்களில். எதிலும் அவசரம் இல்லாமல் நிதானமாகத்தான் செய்ய வேண்டும் என்பது அவளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.
அதுவே ரேவதியோ வீட்டில் நடக்கும் எந்த சமாச்சாரங்களையும் தெரிந்து கொள்ளாமல்,
தன் தோழிகளின் கணவர்கள், அண்ணன்,அப்பா, தெரு முனை கடைக்காரன், சாலையில் பார்க்கும் ஆண்கள் என்று ஒவ்வொருவருடனும் மனோவை ஒப்பிட்டு ஒப்பிட்டு மனவருத்தம் கொண்டாள் . அதிலும் அலுவலகத்தில்
"ஏய் என்னடி அவரு போட்டோவ கூட காமிக்க மாட்டேங்கற?"
"நாங்களும் எத்தனை நாளா கேட்கறோம்? நிச்சயத்துக்கும் கூப்பிடல. கண்ணுல காட்டவே மாட்டேங்கற? "உன் ஆள நாங்க ஒன்னும் கடத்திட மாட்டோம்"
"ஏய்! போட்டோலையே நாம அவரை கடிச்சுடுவோமோன்னு பயப்படராடி! "
"ஏய் அவரு என்ன அஜித் குமாரு கலராடி? யாஷ் மாதிரி சும்மா செமையா இருப்பாரா?" கண்ணடித்து கேட்டார்கள்.
ஒருவர் மாற்றி ஒருவர் கிண்டல் செய்து கொல்லென்று சிரிக்கும்போதெல்லாம் ஒன்று ஓவென்று கதறவேண்டும்போல இருக்கும், அல்லது நிறுத்துங்க என்று கத்தவேண்டும்போல இருக்கும். அதை எல்லாம் மனதில் அடக்கிக் கொள்வாள். வீட்டில் வந்து அழுகை ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்வாள்.
இவள் வீட்டில் எத்தனை ஆர்ப்பாட்டம் செய்தும் ஒன்றும் நடக்கவில்லை. ஏன் கல்யாண மண்டபத்தை விட்டு ஓடி விடுவேன் என்று கூட மன்றாடி பார்த்தாள்,ம்ம்.. ஒன்றும் நடக்கவில்லை.
முதல் நாள் நிச்சயம் . வேட்டி சட்டையில் அத்தனை அழகாக பொருந்தி இருந்தான் மனோ. பர்பிள் நிற புடவையில் மிக மிக அழகாக இருந்தாள் ரேவதி .
மகா பெரியவர் சொன்னதால் லஷ்மியின் வீட்டில் பட்டை விட்டிருந்தார்கள். அதேதான் மனைவிக்கும் என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டான் மனோ.
"ஆமா ! இந்த அவலட்சண கல்யாணத்துக்கு பட்டு ஒன்னு கேடா ?" மனதில் அனைத்தையும் வெறுத்திருந்தாள் ரேவதி.
நிச்சயத்தின் இரவில்,
"என்னடா கண்ணா? ஜான்வாசம் ஆயிடுத்து . இனிமே நீ வேஷ்டியை கீழ் வரைக்கும் கட்டிக்க எலிஜிபிள்' தந்தையாக சங்கரனுக்கு அத்தனை சந்தோஷம். தோளில் தட்டி உற்சாகப படுத்தினார்.
"தேங்க்ஸ் பா !" முகம் அழகாக இல்லை என்றாலும் அவனின் கூச்சமும் வெட்கமும் அத்தனை அழகு! நாளை பெரிய சுமங்கலிகள் பிடி சுற்றி போதும்போது திருஷ்டி எல்லாம் கழியட்டும் .
ஏதேதோ இனிய கற்பனைகளில் இருந்த மனோவுக்கும் உறக்கம் வரவில்லை. மனோவை நினைத்த ரேவதிக்கும் உறக்கம் வரவில்லை.
எத்தனை போராட்டம் செய்தும் அவளால் இந்த கொடுமையில் இருந்து தப்பிக்க முடியாமல் போனது. மண்டபத்தை விட்டு ஓடி விடலாமா? பெரியவர்களை அவமானப்படுத்த மனம் வரவில்லை. தற்கொலை செய்து கொள்ளலாமா? வயிற்றில் பயப் பந்து உருண்டது. எந்த முடிவுக்கும் வர முடியாமல் தவித்துப் போனாள் ரேவதி.
இறுதியில் விதியே சதி செய்தது. இருவருக்கும் திருமணம் நடந்தது.
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே !
எங்கள் மனோவும் மணமகன் ஆனானே ...
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
எங்கள் ரேவதியும் மன மகள் ஆனாளே ...
காசி யாத்திரை வேண்டாம் என்று சொல்லி விட்டான்.
"நான் வேதமே படிக்கலை. இது வேறையா ?"
ஏற்கனவே துக்கத்தில் இருந்தவளுக்கு தாலி காட்டும் முன் மந்திரம் சொல்லி தலையில் நுகத்தடி வைத்தார்கள்.
எப்படி ரெண்டு மாடு ஒண்ணா சேர்ந்து வேண்டிய இழுத்துண்டு போகறதோ அதே மாதிரி நீங்களும் ஒண்ணா சேர்ந்து வாழ்க்கையை சேர்ந்து வாழனும். யாரோ விவரம் அரைகுறையாக தெரிந்த மாமி வேறு ஏத்தி விட்டார்.
ஒரு பொய்யாவது சொல் கண்ணே பாட்டில் வருவது போல ரேவதியும் சிம்ரன் போல மாலையை அவிழ்த்துவிட்டு ஓடி விடுவாளா?
டும் டும் டும் ........
மந்திரங்களை சின்சியராக சொல்லி தாலி கட்டினான்.
அடுத்த மந்திரத்தை சொல்லி இடுப்பில் தர்ப்பை புல்லை கட்டினான்.
அருகில் . மிக அருகில் அவன். அவனின் சுவாசம்...
இவளுக்கோ அவன் முகத்தை காண சகிக்கவில்லை . மனைவியின் வெறுப்பு பார்வை இவனை சுட்டெரிக்காமல் பெரியவர்கள் செய்த ஆசீவாதம் தான் காப்பாற்றியது போலும்.
யாராவது சந்தோசமாக பேசி சிரித்தாலும் இவளை பார்த்து கிண்டல் செய்வதாகவே எண்ணினாள் . மணமேடையிலும் ,தன் தோழர்கள், தோழிகளின் கணவர் என்று அனைவருடனும் ஒப்பு செய்து பார்த்தவளுக்கு, கண்களில் கண்ணீர் வழிந்தது. மனதில் கூனிக் குறுகி போனாள் . அதுவே பெற்றோர் மீதும் கணவன் மீதும் எல்லையில்லா வெறுப்பை தந்தது.
அவள் கண்களில் கண்ணீரை பார்த்த லஷ்மி இது ஆனந்த கண்ணீர் என்று நினைத்துக் கொண்டார்..
பின் வந்த நலங்கு,விளையாடல் அனைத்திற்கும் நல்ல வேளை !யார் சொன்னதையும் அவன் கேட்கவில்லை. இல்லை என்றால் இருந்த வெறுப்பில் தேங்காயை உருட்டுவதற்கு பதிலாக தேங்காயை மண்டையில் தூக்கி போட்டு மனோவின் தலையை உருட்டி இருப்பாளோ? அதனால் என்ன? இப்போது இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறதே முதலிரவு! நீ கவலை படாதடி செல்லம்! ஒனக்கு ஒத்து ஊத நான் இருக்கிறேன்.
"என்னம்மா இது? அது அந்த காலத்துல குழந்தைகளுக்கு கல்யாணம் பண்ணா . தேங்கா உருட்டறது அது இதுன்னு. இந்த வயசுல. அசிங்கமா இருக்கு. சாஸ்திரம் என்ன சொல்லி இருக்கோ அத கண்டிப்பா பண்ணறேன். மத்தபடி இதுக்கெல்லாம் நான் வர மாட்டேன். வாத்தியார் சொன்னாலும் கேட்கவில்லை.
திருமணம் ஆனாலும் ரிசப்ஷன் வேண்டாம் என்று ரேவதி முடிவாக சொல்லி விட்டாள் . அதனால் அலுவக தோழர்கள் அனைவரும் முதல் தினமே வந்து விட்டனர். ரேவதிக்கு பத்திரிக்கை வைக்கவே விருப்பம் இல்லை. அண்ணனின் திருமணம் எத்தனை வைபவமாக இருந்தது. ரிசப்ஷனுக்கு என்று தனியாக பத்திரிக்கை வைத்தார்கள். மிகவும் காஸ்லியான பத்திரிக்கை. மன்னிக்கு இவர்கள் எடுத்த புடவை மட்டுமே ஐம்பதாயிரம். முதலிரவை ஸ்டார் ஹோட்டலில் வைத்திருந்தான் அண்ணா. அதுவும் மன்னியின் ஆசைக்காக.
திருமணம் முடிந்து மனோவின் வீட்டிற்க்கே வந்து கிரக பிரவேசம் செய்தார்கள்.
காபி பொடி நிறத்தில் மெல்லிய சரிகை வைத்த புடவையில் இருந்த மனையாள் பேரழகியாக இருந்தாள் .
புகுந்த வீட்டிற்கு வந்து விளக்கேற்றினாள் . பால் பழம் தந்தார்கள். யார் யாரோ ஏதேதோ பேசினார்கள். இவளுக்கு எதுவும் காதில் விழவில்லை. தான், தன்னுடைய மன அழுத்தம். இது போதுமே வாழ்க்கை வாழ.
அத்தனை எளிதாக கடந்து விட முடியுமா?
அன்றே அவர்களுக்கு முதல் இரவு.
சிறிய நகைகளை அணிவித்து மனதிற்கு திருப்தி வரும்வரை மகளை அழகு பார்த்தாள் அன்னை. மகளின் முகத்தை பார்த்தவளுக்கு அத்தனை கர்வம். எத்தனை அழகு என் மகள்? எப்படியோ ஒரு நல்ல இடத்தில மகளை சேர்த்தாகிவிட்டது. மனதின் பாரம் நீங்கியது. பெண்ணை பெற்றவர்களுக்கு எப்போதுமே வயிற்றில் ஒரு பயப்பந்து உருண்டு கொண்டேதான் இருக்கும். காலம் கெட்டு கெடக்கு, காலம் கெட்டு கெடக்கு. இதுதான் பெரும்பாலும் பெண்ணை பெற்றோர்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் பயம். திருமணம் என்று ஒருவர் கையில் பெண்ணை பிடித்துக் கொடுத்து விட வேண்டும் என்றே அவர்களுக்கு மனதில் ஓடிக் கொண்டே இருக்கும். அது ஏனோ இளையவர்களுக்குத்தான் புரிவதில்லை.
என் மாமியார் ஒரு வார்த்தை சொல்வார்கள். பதினாறு வயதில் பன்னிக் குட்டியும் பேரழகாம். எனக்கு அது தெரியாது. ஆனால் இருபத்து மூன்று முடிய போகும் ரேவதி பேரழகிதான். அய்யங்கார் வீட்டு அழகி இல்லை. அய்யர் வீட்டு அழகி. எந்த ஆண் மகனையும் நின்று திருப்பி பார்க்கச் செய்யும் அழகிதான் அவள்.
இதோ கையில் பால் சொம்புடன் தயாரானாள் ரேவதி.
எதற்கு?
எல்லாம் அதுக்குத்தான்......
மயக்க வருவான் மனோ..............
(வாடா இருக்கு உனக்கு ஆப்பு)