இல்லறம்-13
ரேவதிக்கு இப்போது எதை பற்றியும் கவலை இல்லை. அவளுக்கு அவன் தான் வேண்டும். இந்த நிமிடம் அவன் மட்டும் தான் வேண்டும். அவனின் கொஞ்சல்கள், முத்தங்கள்,தாபம்,ஆசை,காமம் இவற்றிற்காக காத்துக் கொண்டிருக்கிறாள் . விடமால் அவனை கரித்து கொண்டு இருந்தவள் இதோ இப்போது மூச்சு கூட விடாமல் அவனின் ஒற்றை வார்த்தைக்காக ஏங்கி கொண்டிருக்கிறாள். அவள் கண்களை அவனையே பார்த்துக் கொண்டிருந்தன. அதில் இருக்கும் தவிப்பும், பயமும், ஏக்கமும் அவனால் புரிந்து கொள்ள முடியுமா?
மனோ என்ன சொல்ல போகிறான்? அவன் என்ன வேண்டுமானலும் சொல்லட்டும். அதை பற்றி அவளுக்கு கவலையே இல்லை. இது இவள் விருப்பம். அவள் கணவன். அவள் காதல். அவள் உடமை. அவள் உரிமை? யாரால் என்ன கேள்வி கேட்க முடியும்?
அவள் கூறிய இதே கண்ணு இதே மூக்கு தான் வேணும். சொன்னவள் அதை செய்கையிலும் காண்பித்தாள். ஒவ்வொரு இடமாக முத்தங்களை வாரி வழங்கி கொண்டிருந்தாள் . அவள் உதட்டின் உஷ்ணம் அவனை என்னவோ செய்தது. ஆணின் உணர்ச்சிகளை தூண்டியது. மனோவும் ஒரு இயல்பான ஆடவன் தானே? எத்தனை பெண்கள் தன்னை தன் உருவத்தை கிண்டல் செய்திருந்தாலும் அதை பற்றி எல்லாம் அவன் கவலை அடைந்ததே இல்லை. அதுவே தன் மனையாளின் வாயில் இருந்து வார்த்தைகள் மட்டுமே அவன் மனதை குத்தி கிழித்தது. அவள் அவனை முதலில் ஏற்றுக் கொள்ளாதபோது கூட, இவன் அவளை அவளாகவே ஏற்றுக் கொண்டவன். விவாகரத்துக்கு கூட அவளின் நன்மைக்கு என்று யோசித்தவனால், முதலில் இதை நம்ப முடியாமல் தவித்து போனான். அவளின் பட்டு போன்ற இதழ் ஒற்றல்களும், கைகளின் பிணைப்பும் அதை உறுதி செய்தன. அவளை முதலில் இதயத்தில் சிறை செய்தவன் இப்போது உதட்டினால் சிறை செய்தான்.
அடுத்த நொடிஅவளை அப்படியே தூக்கி கொண்டு கட்டிலில் கிடத்தியவனுக்கு, அன்று முழுவதுமே தன் காதலை,காமத்தை காட்டும் வெறி இருந்தது.
அவளோ அவனை ரசித்தாள். அணுஅணுவாக ரசித்தாள். இன்பம் அனுபவித்தாள் அவளுக்கு இந்த சிறை பிடித்திருந்தது.தன் வார்த்தைகளை அவன் மறக்க வேண்டும், அது ஏற்படுத்திய காயங்கள் ஆறுவதற்கு, முத்தங்களால் மருந்திட்டாள். அதில் ஓரளவு வெற்றியும் கண்டாள். அவனின் காதலை அனுபவித்தவளுக்கு கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது.
"என்ன ரேவதி ரொம்ப கஷ்டப்படுத்தறேனா?"
"இல்லடா! இது சந்தோஷம்"
"என்ன டா வா?"
"ஆமா! புடிக்கலையா?"
"புடிச்சிருக்கு.எல்லாமே புடிச்சிருக்கு"
"நீ என்னடி இவ்ளோ மென்மையா இருக்க? பால்கோவா "
"என்ன பால்கோவாவா ?"
"ஆமாண்டி! குளோப் ஜாமுன்....."
அவளின் பெண்மையின் மென்மையில் அவன் தன்னை தொலைத்தான். அவனின் அன்பின் ஆளுமையில், அவள் தன்னை தொலைத்தாள் . தாமதமாக வந்த காதலையும் காமத்தையும் இருவருமே நன்றாக அனுபவித்தனர்.
"மாமி, ரேவதி இன்னும் எழுந்து வரலையே? தெனோமே இப்படிதானா?"
தயக்கமாய் கேட்டார் ரேவதியின் அன்னை.
"மாமி! இன்னிக்குதான் முதல் தடவையா எம் பையனும் எழுந்து வரல. நீங்க கவனிக்கலையா ?"
"ஓஓ !!
"ம்ம்ம் !!!"
வயதையும் மீறி சம்மந்திகள் இருவரும் தோழிகளாய் வெட்கப்பட்டுக் கொண்டனர்.
"மன்னி !இன்னிக்கு நான் கோலம் போடறேன்"
" மாமி! எனக்கு டயர்டா இருக்கு இன்னிக்கு நீங்க காபி போடறேளா?"
"அதுக்கென்ன! நீங்க படுத்துகோங்கோ, எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்"
"மன்னி ! மத்தியானம் என்ன டிபன் பண்ணறது?"(சுந்தரம் லஷ்மியை இப்போது மன்னி என்று அழைக்க ஆரம்பித்திருந்தார்)
" மாமி என்ன காய் பண்ணறது?"
"அடிச்ச வெயில்ல எல்லா துணியும் பட படன்னு காஞ்சுடுத்து . அதான் எடுத்துண்டு வந்துட்டேன்.
"மாமா வரேளா! அப்படியே காலார நடந்துட்டு வருவோமா? "
"வாங்கோளேன் ! போய் நாலு காய் புடிச்சுண்டு வரலாம்"
"லஷ்மி! லஷ்மி! "
"மாமி மடில இருக்க. சொல்லுங்கோ அண்ணா"
"இந்தாங்கோ மாமி. இதை புடிங்கோ. ஒடஞ்சு போகாம பத்திரம். நீள புடலங்கா . அவளுக்கு ரொம்ப புடிக்கும்"
"தினமும் மறு நாளைக்கு தேவையான கீரை, காய்கறி தேங்காய் வாங்கி கொன்டு வருவார்கள்.
"சுந்தரம்! நாங்க ரெண்டு பேரும் பிரதோஷத்துக்கு போயிட்டு வரோம்"
"சரின்ன! இருங்கோ. பிடி அரிசி தரேன்"
"மறக்காம வில்வம் வாங்கிக்கோங்கோ"
ஆண்கள் இருவரும் எதையாவது பேசிக் கொண்டும் ஷாப்பிங் செய்து கொண்டும் சந்தோசமாக இருந்தார்கள்.
"சுந்தரம்! வாங்கோ! சங்கட ஹர சதுர்த்தி, இப்போ போனதுதான் சரியா இருக்கும்"
"ஏன்ன! சத்யா நாராயண பூஜைக்கு பணம் கட்டியாச்சா?"
இப்படியே பெரியவர்கள் எந்த வம்பும் இல்லாமல் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தனர். அவர்கள் யாரும் இளையவர்களை கண்டுகொள்ள வில்லை. இளையவர்களுக்கு அதை கண்டு கொள்ளும் நிலையில் இல்லை. ஆனால் இவர்களின் கூடலுக்கு சில நாட்கள் கழித்து இரவில் டீவி பார்த்து கொண்டிருந்த அன்னையின் மடியில் வந்து படுத்துக் கொண்டான். மாப்பிள்ளையை கண்டதும் முந்தியை எடுத்து போர்த்திக் கொண்டு,
"மாமி! நான் உள்ள போறேன். குட் நைட் மாப்பிள்ளை" என்றுவிட்டு சம்பந்தி மாமி சென்று விட்டார். இவனும் டீவியை அனைத்து விட்டு அம்மாவை இடுப்போடு கட்டிக் கொண்டான். பரிவுடன் தலையை கோதியவள், "என்னடா கண்ணா?"என்றாள் .
"ஒன்னும் இல்லம்மா. சும்மாதான்" அம்மாவின் வயிற்றில் தன்னுடைய வெட்கத்தை மறைத்து முகம் புதைத்துக் கொண்டான்.
" இப்போ நீ சந்தோசமா இருக்கியாடா? உன்னோட சங்கடமெல்லாம் தீர்ந்ததா?"
"ம்ம் மா "
"ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கேளா ?
"ம்!"வெட்கத்துடன் அன்னையின் வயிற்றில் முகம் தேய்த்தான்.
அன்னைக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.
"டேய்! எல்லா பிரச்சனையும் முடிஞ்சு இப்பதான் ரெண்டு பேரும் ஒண்ணாயிருக்கேள். அவளை ரொம்ப படுத்தாதடா. அவளை நீ பூ மாதிரி பாத்துக்கணும் . அதுக்கும் எதுக்கும். சரியா ?"
"என்னம்மா நீ இதெல்லாம் பையன்கிட்ட பேசற?" மகன் இன்னும் தலை நிமிர்த்தவில்லை.
"டே ய்! பொண்ணுங்கள எப்படி பாத்துக்கனுன்னு அம்மாதான்டா சொல்லி தரணும். அதுதாண்டா சமுதாயத்துல இருக்கற பொண்ணுங்களுக்கு பாதுகாப்பு அந்தஸ்து எல்லாமே தரும்"
மகனின் தலை முடியை கலைத்து சொன்னாள் அன்னை. இவன் கூச்சத்துடன் நெளிந்தான்.
"சரிம்மா ! அவளை நான் படுத்தலை .ஆனா அவ என்ன படுத்தினா நான் என்னம்மா பண்ண?" முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு கேட்டான்.
"ம்! போய் உங்க மாமியார் கிட்ட சொல்லு"
"அது சரி! என்ன புது பொண்டாட்டிய கொஞ்சாம அம்மாகிட்ட கொஞ்சற?" கேட்டுக் கொண்டிருக்கும்போதே பத்திர காளியாக வந்து நின்றாள் ரேவதி . "நன்னா கேளுங்கோ! இவருக்கு நான் ஒருத்தி இருக்கறதே நினைவில்ல "
இவனும் சண்டைக்கு தயாராக நின்றான்.
"எங்க அம்மாவை நான் கொஞ்சறேன். உனகென்னடி ?"
லஷ்மிக்குத்தான் அவஸ்தையாக இருந்தது. மகன் செய்ததும் தவறுதானே என்று எண்ணினாள் . ஆனால் இவர்கள் இருவருமே அவளை பேச விடவே இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டு அமர்ந்திருந்தாள்.
"ம்! அது என்ன உங்க அம்மாவை நீங்க மட்டும்தான் கொஞ்சுவேளா?நானும்தான் கொஞ்சுவேன். இப்ப என்ன பண்னுவேள் ? "என்று இவளும் வந்து மடியில் படுத்துக் கொண்டாள் . இதை பார்த்த மாமியார்,
"அது சரி! நீங்க ரெண்டு பேரும் என் மடில கொஞ்சிண்டு இருந்தா எப்ப நான் பேரன் பேத்திய கொஞ்சறது? போங்கோ அதுக்கு வழிய பாருங்கோ" என்று அவர்களை விரட்டினார். வெட்கத்துடன் இருவரும் ஓடினர்.
அப்போது,
"ரேவதி இரும்மா! என்றவர், அவளுக்கு தலை நிறைய பூவை சூட்டினார். பால்கோவா மாதிரி இருக்க. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு என்று திருஷ்டி கழித்தார்.
"நான் சொன்ன மாதிரியே சீக்கிரமா நம்மாத்துல குழந்தை விளையாடனும், சரியா? அது உன் பொறுப்பு"
வெட்கத்துடன் உள்ளே நுழைந்தவளை கதவின் பின்னிருந்து அணைத்தான், அவளின் கள்வன் .
"என்ன மாமியார் மருமகளுக்குள்ள என்ன? "
"பூ வச்சு விட்டாங்க."
பூவை முகர்ந்தவன், அவளின் கழுத்தில் தன் இதழ்களை பதித்தான்.
"அம்மா நீ கிரேட் மதர்" என்று மனதில் வாழ்த்தினான்.
"அப்புறம்?" வாசம் இழுத்தான்.
"பால்கோவா மாதிரி இருக்கேன்னு சொன்னாங்க"
"ம்! பாத்தியா நானும் அதையேதான் சொன்னேன்"
"நீங்க சொன்னது வேற, அவங்க சொன்னது வேற"
"நான் சொன்னது என்னது சொல்லு?"
"நீங்க சொன்னது" என்று ஆரம்பித்தவள், சொல்ல முடியாமல் வெட்கத்தில் முகத்தை மூடிக் கொண்டாள் . கைகளை விலக்கியவன் , அது என்னன்னு நான் சொல்லறேன் என்று கட்டிலில் கி(க)டத்தினான்.
நேற்றுவரை மனதில் இருந்த பாரம் நீங்கி இன்று இப்படி மனம் மகிழும் என்று ரேவதியின் அன்னை நினைத்திருக்கவே இல்லை. அனைத்திற்கும் காரணம், மாப்பிளைதான். இவர்கள் எல்லாரும் எந்த குறையும் இல்லாம சந்தோசமா இருக்கணும் கடவுளே...
இவர்களின் காதல் இன்னும் இன்னும் என்று வளர்ந்து கொண்டே போனது. ரேவதியை ரதி ரதி என்று கொஞ்சிக் கொண்டிருந்தான். அவளும் ன்ன ன்ன (என்னங்க) என்று அவனை காரணமே இல்லாத போது கூட சுற்றி சுற்றி வந்தாள் .
ஆனால் இது நிலைக்குமா. இது ஆசை அறுபது நாள். மோகம் முப்பது நாளா? இவள் இடத்தை பிடிக்க இன்னொருத்தி வரும்போது? அதை எப்படி ரேவதி எதிர்கொள்வாள்? வீட்டு பெரியவர்கள் எப்படி உதவுவார்கள்?
இப்படியே நாட்கள் செல்ல செல்ல, ரேவதி பிள்ளை உண்டானாள் .
இவளையே குழந்தையாக கொஞ்சிக் கொண்டிருந்தவர்களுக்கு இன்னொரு குழந்தை வீட்டுக்கு வரப் போவது இன்னும் சந்தோசத்தை அள்ளி தந்தது. அதை கொண்டாட இரண்டு பாட்டிகளும் தாத்தாக்களும் ஒரே வீட்டில் இருந்தால் கேட்கத்தான் வேண்டுமா? செய்தியை கேட்டதும், வீடு இரண்டாகியது. தாம் தூம் என தாத்தாக்கள் குதித்தனர்.
"ஏண்டி! எல்லாருக்கும் சொல்லணும். எத்தனை கிலோ ஸ்வீட் வாங்கணும்? என்ன வாங்கணும்? நம்மாத்துக்கு எவ்ளோ வாங்கணும்.? அவ அண்ணாக்கு சொல்ல போறாளா ?"
"அப்பப்பா கொஞ்ச நேரம் சும்மா இருக்கேளா ? நீங்க போய் யாருக்கும் ஒன்னும் சொல்ல வேணாம். ஒரு நாள் பார்த்து பக்கத்துல அம்பாள் கோயில்ல அபிஷேகத்துக்கு கொடுப்போம். அம்பாள் தான் எந்த கஷ்டமும் இல்லாம அவளுக்கு சுக பிரசவத்தை தரணும். அப்புறம் 5 மாசத்துக்கு அப்புறமா யாராவது கேட்டா சொல்லலாம் . இப்ப என்ன அவசரம்? அப்புறமா வேணுன்னா அவா ஆபிசுல சொல்லிக்கட்டும். நீங்க ஒன்னும் குதிக்க வேணாம்"
அப்பாவின் முகம் சுணங்கியது மகனால் பொறுக்க முடியவில்லை .
"என்னமா இது அப்பாவை இப்படி நோஸ் கட் பண்ணற?"
"ஆமாடா! இது நம்மாத்துல வர்ற முதல் வாரிசு. யார் கண்ணும் படக் கூடாது. புள்ள பெத்துக்கறது ஒன்னும் சும்மா இல்ல. பொண்ணுங்களுக்கு உயிர் போய் உயிர் வரும். யாருக்கு சொல்லணுமோ 4,5மாசம் கழிச்சு சொல்ல வேண்டியதுதான். முதல்ல அவளுக்கு குழந்தை நிக்கணும். மசக்கை படுத்தும். நிறைய விஷயங்கள் இருக்கு. ஒனக்கு ஒன்னும் தெரியாது.போடா அப்பாவுக்கு சப்போட்டு "
இதற்குள் பெற்றோரை விட்டு பிரிந்த ரேவதியின் அண்ணனுக்கு, அவர்களின் பிரிவு வலியை உண்டாக்கியது. அவர்கள் எந்த அளவுக்கு மனம் நொந்து போயிருந்தால் தன்னிடம்கூட ஒரு வார்த்தை சொல்லாமல் கிளம்பி போயிருப்பார்கள்?
நான் ஏன் அந்த அளவுக்கு சுய நலமியாக போனேன் ? ஒருவேளை அவர்களின் மனத்தாங்கலினால் தான், மனைவிக்கு குழந்தை பெறுவதில் பிரச்னை என்று மருத்துவர் கூறினாரோ?
மனம் அன்னையின் மடிக்காக ஏங்கியது. தந்தையின் தோளுக்காக ஏங்கியது. தங்கையின் சீண்டல்கள் ஏன் மறந்து போயிற்று? குழந்தைகளாகவே இருந்திருக்கலாம். ஏனோ அவர்கள் இல்லாமல் அங்கே மூச்சு முட்டியது.
"என்னால் இனி தாங்க முடியாது" உடனே அவர்களை அழைத்து வர வேண்டும் என்று கிளம்பி விட்டான் .
அங்கே தான் சம்பந்திகள் கூட இவ்வளவு அன்பாக இருக்க முடியும் என்று தெரிந்துக் கொண்டான். பின் நாட்களில் தன் தங்கை எப்படி இப்படி மாறிப்போனாள். எல்லாவற்றிற்கும் கணவனையே சுற்றி சுற்றி வருகிறாள்! எப்போதும் அவனை பற்றி குறை கூறிக்கொண்டிருந்தவாளா இவள்?
ஆச்சர்யமாக இருந்தது. அந்த வீட்டு சூழ் நிலையே அவர்களின் சந்தோசத்தை உணர்த்தியது. இவனுக்கும் இந்த சூழலுக்கான ஏக்கத்தை மனதில் உண்டு பண்ணியது.
எல்லாவற்றிற்கும் மனைவியின் சம்மதம் வாங்கியே பழகியிருந்தவன் முதல் முறையாக தானே முடிவெடுத்தான். அவனுடைய இந்த முடிவுதான் அவனுடைய எல்லா சங்கடங்களையும் தீர்த்து வைக்கப் போகிறது. தனக்காகவும், மனைவியின் நலனுக்காகவும் தான்.
சில சமயங்களில் தானே முடிவெடுப்பதும், மீதி நேரங்களில் வீட்டில் உள்ளவர்களிடம் சம்மதம் கேட்பதும் எத்தனை நல்லது என்பது மனோவை பார்த்தபின் ஹரிக்கு புரிந்தது.
மயக்குவான் மனோ...........