இல்லறம்-14
உடனேயே பெற்றவர்களை பார்த்து விட வேண்டும். மனதில் இருந்த உந்துதலில் மனோ வீடு வாயில் வரை வந்த ஹரிக்கு இப்போது வெட்கமாக இருந்தது. தான் செய்த செயலினால் வந்த வெட்கம். காலிங் பெல்லை கூட அழுத்த தயக்கமாக இருந்தது.
முதலில் ஹரிக்கு மனோவிடமும் சம்பந்தி மாமாவிடமும் பேச வாயே வரவில்லை. மனக்குன்றலில் உதடு ஒட்டிக் கொண்டது. அவர்களின் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை. தங்கை வீடு என்ற உரிமை இல்லை.
அவன் முகத்தை பார்த்தே புரிந்து கொண்டான் மனோ.அழகாக சூழ்நிலையை இலகுவாக்கினான்.
"வாங்கோ! வாங்கோ ! ஹௌ ஆர் யூ ?"
கை குலுக்கியபடி வரவேற்றான் .
"வாங்கோ ஹரி ஆத்துல எல்லாரும் சௌக்கியமா? காபி போடவா? லஷ்மி வாஞ்சையுடன் விசாரித்தார்.
"ஆல் பைன் மாமி!மாமா இல்லையா?" கேட்டுக் கொண்டே கையில் இருந்த பூ பழம் பையை கையில் கொடுத்தான்.
"மாமாவும் உங்க அம்மா அப்பாவும் பிள்ளையார் கோயில் வரைக்கும் போய் இருக்கா. இப்ப வந்துருவா. உக்காருங்கோ! காபி கொண்டு வரேன்"
"காபி எல்லாம் வேண்டாம் மாமி . இப்பதான் சாதம் சாப்பிட்டுத்தான் வந்தேன்"
"சரி! பேசிண்டு இருங்கோ. உள்ள வேலை இருக்கு. நான் போறேன்"
"ஓகே மாமி! " இப்போது முன்னிருந்த தயக்கம் குறைந்திருந்தது.
மாமி உள்ளே சென்றதும் இருவர் இடையே சற்று மௌனம். எப்படி ஆரம்பிக்க ஹரிக்கு தெரியவில்லை. இவர் எதற்காக வந்திருக்கிறார்? என்ன பேச வேண்டும் மனோவுக்கும் புரியவில்லை.
மெதுவாக ஆரம்பித்தான் ஹரி.
"மனோ! எனக்கு என்ன சொல்லறதுன்னே தெரியல. நீங்க இந்த பிரச்சனைய ஹாண்டில் பண்ண மாதிரி எனக்கு பண்ண தெரியல. அதனால தான் எல்லா சங்கடமும் . என்ன மன்னிச்சுடுங்கோ" தலை குனிந்தபடி சொன்ன மச்சினனை பார்த்தவனுக்கு பாவமாக இருந்தது.
அவனே தொடர்ந்தான்.
"ரொம்ப தேங்க்ஸ் மனோ. நீங்க மட்டும் சரியான நேரத்துல எங்க அம்மா அப்பாவை இங்க கூட்டிண்டு வரலைன்னா என்னென்ன சங்கடங்கள்லாம் வந்துருக்குமோ? எனக்கு என்ன நினச்சா ரொம்ப வெட்கமா இருக்கு. ரேவதிகிட்ட கூட என்னால மூஞ்சி பார்த்து முடியாது' தலை கவிழ்ந்த படி சொன்னான் ரேவதியின் அண்ணன் .
"என்னண்ணா இது? அவா உனக்கு மட்டும் தான் பெத்தவாளா? எனக்கில்லை? "சொல்லிக் கொண்டே கையில் சுவீட்டுடன் வந்தாள் ரேவதி.
"நீயும் மன்னியும் சந்தோசமா இருக்கணும். எங்காத்துல குழந்தை வர்ற மாதிரி உங்காத்துலையும் குட்டி பாப்பா வரணும்" அப்படியே தன் விஷயத்தையும் சொல்லி விட்டாள் .
முகம் பார்த்துக் கூறியவள் கண்கள், கன்னங்கள் எல்லாம் மின்னியது அண்ணனின் கண்களில் நன்றாகவே தெரிந்தது .
"ரொம்ப சந்தோஷம் ரேவதி . ரொம்ப சந்தோஷம் மனோ. உங்களுக்குள்ள இருக்கற பிரச்சனைல நான் ரேவதியை பத்தி ரொம்ப கவலைப்பட்டேன். இப்ப எனக்கு வார்த்தையே வரல. எல்லாத்துக்கும் உங்களோட பொறுமைதான் காரணம். உங்களோட நல்ல மனசு தான் காரணம்" நிச்சயம் இது புகழ்ச்சி இல்லை. மனதில் இருந்து வந்த வார்த்தைகள். ஹரி மனோவை புகழ்வதை கேட்டுக் கொண்டிருந்த லஷ்மிக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி தான் . "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன்" என்று மற்றவர்கள் புகழ்ந்தால் எந்த அன்னைக்குத்தான் மகிழ்ச்சியாக இருக்காது?
"எல்லாராலையும் எல்லாத்தையும் ஹாண்டில் பண்ண முடியாது. ஆனா நல்ல சந்தர்ப்பத்துல அவா இங்க வந்தா. இல்லாட்டி அவ இன்னும் எவ்ளோ சங்கடபட்டிருப்பா ? ஆத்துல இருக்கற பெரியவாளோட ஆசிர்வாதம் நமக்கு என்னிக்கும் வேணும். முக்கியமா பெத்தவாளோடது . அவா இல்லன்னா நாமெல்லாம் எங்க?
நான் தப்பா பேசி இருந்தா தப்பா எடுத்துக்காதீங்கோ. பிரண்ட்லியாதான் சொன்னேன். அவா எப்ப வேண்ணாலும் அங்க வரட்டும். அதுவரைக்கும் நான் பாத்துக்கறேன். ரேவதிக்கும் அவளோட கடமை இருக்கு. ரேவதின்னா அது நான்தானே!"
மகனின் பதிலில் இன்னும் மனம் குளிர்ந்தாள் அன்னை.
மனோ ஹரியிடம் பேசிக் கொண்டிருந்தாலும், கண்ணை விரித்து ஓபனாகவே மனைவி சைட் அடித்தால் கணவனுக்கு எப்படி பேச்சு வரும்?
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே வீட்டு பெரியவர்கள் மூவரும் வந்து விட்டார்கள்.
பெற்றவர்களை பார்த்த மகன் கதறி விட்டான்.
"மகன் கை கூப்பி மன்னிப்பு கேட்டால் , எந்த பெற்றோர்தான் ஒத்துக்கொள்ளாதிருப்பார்கள் ? அவனின் சூடு சொற்களும், நடத்தையும் மறந்தே தான் போனது.
இருப்பினும்,
"இல்லப்பா இவளுக்கு பிரசவம் ஆகட்டும். ரொம்ப மசக்கைல கஷ்டப்படறா" தயங்கியபடியே சுந்தரம் தான் சொன்னாள் .
அவர்கள் கூறியதும் உண்மையே. அந்த பொறுப்பை மாப்பிளையிடமும், சம்பந்தியிடமும் ஒப்படைக்க விரும்பவில்லை.
இவளுக்கு வாந்தி வரும்போதே குவளையை நீட்டி கொண்டு மனோ வந்து விடுவான். அல்லது கையிலேயே தாங்குவான் . அன்னை முகம் துடைத்து, துணிகளை துவைத்து வைப்பார் . அப்பா காய போடுவார். மாமனார் வாய்க்கு ருசியாக ஏதாவது வாங்கி வருவார்.
"அப்பா(மாமனார்)நேக்கு உருளைக்கிழங்கு கார சிப்ஸ் வாங்கிண்டு வரேளா ? போனதடவ உப்புதான் வாங்கிண்டு வந்தேள் . வாய்க்கு ஒநகையாவே இல்ல"
"ஆமாண்டி! எப்ப பத்தாலும் காரமா சாப்பிடு . குழந்தைக்கு மூஞ்சியெல்லாம் சிவந்து போகும். அன்னையிடம் நறுக்கென்று திட்டு வாங்குவாள் . அவளை எப்பப்பாத்தாலும் வஞ்சுண்டே(திட்டிகிட்டே) இருக்கியே ? அப்பாவிடமிருந்து சப்போட் வரும். கணவனிடமிருந்து ஐஸ் கிரீம், சாக்கலேட்டு என்று விதவிதமாக வரும். அவன் வாங்கி வர மறுத்து விட்டால் மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டு பேச மாட்டாள். அவள் பேசவில்லை என்றாலும் மனோ பொறுத்துக் கொள்வான். ஆனால் அவ்வப்போது அவளின் முத்தமும், செல்ல கடிகளும் நிச்சயம் வேண்டும். இல்லை என்றால் வண்டி ஓடாது. வேலையும் ஓடாது. கணவனின் பலம், பலவீனத்தை அறிந்தவளாயிற்றே. கண் பார்வையில் அவனை ஆட்டி வைத்தாள் .
"என்னால முடியல" என்று ரேவதியே சொன்னாலும், ஆண்கள் அனைவரும் கோரஸாக," வாந்தி எடுக்க தெம்பு வேண்டாமா" என்று திட்டுவார்கள்.
"மாமி! அவளை பார்த்தா ரொம்ப பாவமா இருக்கே? நான் திரும்பாரறத (கடுகு தாளிப்பது) கொஞ்ச நாளைக்கு நிப்பாட்டிட்டமா?"
"ஏன் மண்ணி ! இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல ?"
"நீங்க வாந்தி எடுக்கல ? நான் எடுக்கல? நாம புள்ள பெத்துக்கல? அப்பா உங்காத்துல பண்ற மாதிரி நான் யாரையும் பாக்கல" அலுத்துக் கொண்டார் ரேவதியின் அன்னை.
லஷ்மி பயந்து கொண்டு வாய் மூடிக் கொண்டார்.
தான் அப்படி சொல்லி இருக்க கூடாதோ? லஷ்மியின் முகத்தை பார்த்த சுந்தரத்திற்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.
"தப்பா நினைக்காதீங்கோ மண்ணி . அவளுக்கு இத்தனை செல்லம் ஆகாது. அவ ஒன்னும் குட்டி குழந்தை இல்ல"
"இல்ல சுந்தரம்! எங்களுக்கு அவ குழந்தைதான். மனோ முத குழந்தை. இவ ரெண்டாவது.
பெரு மூச்சு விட்டாள் ரேவதியின் அன்னை.
இவர்களின் நடவடிக்கைகள் சுந்தராம்பாளுக்கு மிகவும் கவலையாக இருந்தது. ஆனால் இதுவே தேவலாம் என்று மற்றொரு சம்பவம் நடந்தது.
ஒருநாள் காலை வேலைக்கு கிளம்புவதற்கு ரேவதிக்கு தாமதம் ஆகி விட்டது. மாமியார் ஓடி வந்து மருமகளுக்கு ஊட்டி விட்டார்.
அதை பார்த்த ரேவதியின் அன்னைக்கு கோபம் தலைக்கேறியது.
"இங்க பாருங்கோ மாப்பிள்ளை இவளுக்கு இவ்ளோ செல்லம் ஆகாது. ஏண்டி அவாதான் ஊட்டரான நீயும் வாய நீட்டற ?"
"ம்ம்! அவாளுக்கு தன்னோட மாமியார் இப்படி கவனிக்கலையேன்னு பொறாமை. வாயில் மென்று கொண்டே சொன்னாள் .
"வாயில வச்சுண்டு பேசாத , இந்தா தண்ணி குடி, சீக்கிரம் ஓடு, லேட்டாய் போய் நிக்க கூடாது" லஷ்மி விரட்டினாள் தண்ணியை குடித்தவள் .
மாமியாருக்கு மட்டும் கன்னத்தில் ஒரு முத்தத்தை வழங்கி விட்டு ,
"ஒனக்கு கிடையாது போ, என்ன திட்டினல்ல" என்று பழிப்பு காட்டி ஓடினாள்.
"இன்னும் குழந்தையாவே இருக்காளே? கன்னத்தில் கை வைத்து சொன்னார் மாமியார்.
"ம்!ம்! ஆமா இல்ல! பாவம் குழந்தை நடக்கறதே? இடுப்புல வச்சுக்கோங்கோ .
என்ன மாமி இது? இந்த அநியாயம் வேற எங்கையானு நடக்குமா ? நீங்க அவளை இப்படி கொஞ்சறது அவளுக்கு நல்லதே இல்ல. இவ்ளோ இடம் கொடுத்தா அவ உங்க தலையிலேயே உக்காந்து மொளகா அரைக்கப் போறா"
"நான் ஊட்டறது அவளுக்கும் குழந்தைக்கும் சேர்த்து தானே?
"அது சரி!நீங்க அவகிட்ட கண்டிப்பு காட்டலானா அவ ஏறி உட்கார்ந்து மொளகா அரைச்சுடுவா "
"நீங்க சொல்லறது எனக்கு புரியறது. ஆனா நீங்க எவ்ளோ சொன்னாலும், நாங்க எங்களை மாத்திக்கனுன்னு நினைச்சாலும் என்னாலையும் மாமாவாலையும் முடியாது"
"ஏன் ?"
அப்போதுதான் தனக்கு இரண்டாவது அழிந்து போனது பற்றி சொன்னார்.
"ரொம்ப சாரி மாமி!" ஆனா நான் அவளோட நல்லதுக்குதான் மாமி சொல்லறேன்.
"எங்காத்துல மனோ ரொம்ப திறமைசாலி. ரொம்ப பொறுப்பு . எங்களை விட்டுட்டு எங்கையும் போக மாட்டேன்னு பாவம் படிப்புக்கு, வேலைக்கு வந்த நல்ல நல்ல வாய்ப்புகளை கூட விட்டுட்டான். பாவம் அவனுக்கு இந்த மாதிரி கொஞ்சறத்துக்கெல்லாம் தெரியாது. இப்போ உங்க பொண்ணாலதான் இங்க எங்காமே கலகலப்பா இருக்கு. நமக்கு வயசாயிடுது . இவாள விட்டா நமக்கு யாரு? அன்பு கொஞ்சல் இதெல்லாமே இன்னும் எத்தனை வருசத்துக்கு அவா நம்மள்ட்ட எதிர்பார்ப்பா? நீங்க ரொம்ப கண்டிச்சு வளர்ததுனால இப்போ எங்கிட்ட கொஞ்சறா . கொஞ்ச நாள், கொஞ்ச வருஷம் அவ்வளவு தானே ?"
"மாமி உங்கள மாதிரி யாரும் வர முடியாது.என் பொண்ணு ரொம்ப குடுத்து வச்சவ. கண்களை முந்தானையால் கண்ணீரை துடைத்து கொண்டார். சட்டென்று எழுந்து உள்ளறைக்கு சென்றவருக்கு தான் தன் மாமியாரிடம் பட்ட கஷ்டங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தது. எத்தனை எத்தனை நாட்கள் கோரமான வார்த்தைகள்? தோசை சரியாக வரவில்லை என்று கையில் சூடு போட்டது என்று பட்ட கஷ்டங்கள் எல்லாம் முட்டி மோதி நினைவுக்கு வந்தன. இவள் கேவி கேவி அழுவதை பார்த்த லஷ்மிக்கு ஒன்றும் புரியவில்லை.
"மாமி நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா? தப்பா சொல்லிட்டேனா ? "பதறினார்.
"இல்ல மாமி! தலை மட்டும் ஆடியது .வார்த்தை வரவில்லை.
"எதுவா இருந்தாலும் சொல்லுங்கோ மாமி. மனசுல எதையும் வச்சுண்டு கஷ்ட படாதீங்கோ" மெதுவாக தலை கோதினார் லஷ்மி.
"மாமி!" என்று கூறி அவர் மடியிலேயே புதைந்து அழுதார்.
இப்போது அவர் சம்மந்தி என்பதெல்லாம் நினைவுக்கு வரவில்லை. அன்னைக்கு மனம் வேதனை படுமே என்று தன் அன்னையிடம் கூட பகிர முடியாததை, லஷ்மியிடமும் பகிர முடியவில்லை. என்றாலும் மனம் சாந்தம் அடையும் வரை அழுதார். மடியில் புதைந்து அழுபவரை மெதுவாக தலை கோதினாள் லஷ்மி. சிறிது நேரத்திலேயே இத்தனை வருஷத்து பாரங்களும் மனதில் இருந்து விலகிய மாதிரி இருந்தது.
"போய் மூஞ்சிய அலம்பிண்டு வாங்கோ , கொஞ்சம் சூடா காபி தரேன் . சாப்ட்டேள்னா எல்லாம் சரியாயிடும்" கண்களை துடைத்து சம்பந்தியை ஆறுதல் படுத்தினார் .
இந்த மாதிரி ஒரு அன்புக்காகத்தான் தானும் ஏங்கி இருக்கிறோம் என்பது ரேவதியின் அன்னைக்கு இப்போது தான் புரிந்தது.
அன்பும் பாசமும் மற்றவர்க்கு தர தர இன்னும் பண் மடங்காக மாறும். என்றுமே குறையாத அட்சய பாத்திரம்தான்...........
ஆனால் மனோவுக்கும் ரேவதிக்கும் இடையில் இடைவெளி வர ஆரம்பித்தது. காதல் தீர்ந்ததா இல்லை காமம் தீர்ந்ததா ? மனோ எந்த வகையிலும் ரேவதியை பிரியவில்லை என்றாலும் ஏன் இந்த பிரிவு?.......
இப்படியே கொஞ்சலும் சீராடல்களும் என்று இருந்தாலும், ரேவதி இரவில் மனோவுக்காக ஏங்க ஆரம்பித்தாள். முதலில் இவளின் மசக்கை அது இது என்று இவளுக்கு உடம்பு முடியாமல் இருந்தாள் . அதற்கு பின்னும், இவளுக்கு சக்தி குறைவாக இருந்ததால், இவர்கள் என்றாவது ஒரு சில நாள் மட்டுமே கூட முடிந்தது. எத்தனையோ முத்தங்கள், அரவணைப்பு அன்பு அள்ளி தந்தான் மனோ. இருப்பினும் நாட்கள் நெருங்க நெருங்க அவனுக்கே தெரியாமல் அவளிடமிருந்து நகர ஆரம்பித்தான். அவனுக்கும் அவள் உடல் நிலையில் கவலையும், பயமும் வர ஆரம்பித்தது. அதனால் அவளிடம் இருந்து தன்னை மிகவும் கடினப்பட்டு தள்ளி நிறுத்திக் கொண்டான். அவனுக்கும் ஏக்கங்கள் இருந்தன. ஆனால் அதை எதையும் இவளிடம் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் ரேவதி தான் அவனை எந்த அளவுக்கு வெறுத்தாளோ அதை விட மிக அதிகமாக நேசிக்க ஆரம்பித்திருந்தாள். அவர்கள் ஒன்று சேர்ந்த அடுத்த இரண்டாம் மாதமே அவள் கருவுற்றாள். அது சந்தோஷம்தான் என்றாலும், இவர்களுக்கு தனிமையை அனுபவிக்க முடியாமல் போயிற்று. அதனால் சில சமயங்களில் அவளுக்கு தன் மீதே கோபமும் வருத்தமும் வந்து விட்டது. மன வேதனை, உடல் பாடு, என்று இவளுக்கு எரிச்சல் நிறையவே வந்தது. ஆனால் இவளை வீட்டில் பொத்தி பொத்தி வைத்தார்கள். அதுவே இவளுக்கு பெரிய ஆறுதலாக இருந்தது. சந்தோஷம் சிரிப்பு, உடல் வேதனை,மன குமுறல்களுடன் இவளுக்கு நாட்கள் பறந்தன.
இதில் இவளுக்கு ஐந்தாம் மாதம் ஸ்கேன் எடுக்க நாள் தந்தபோது மனோவுக்கு அவசர வேலையாக அலுவகத்தில் வேறு ஒருவருக்கு பதிலாக போயிற்று. இரண்டு நாட்கள் என்று சென்றது 4 நாட்கள் என்று நீண்டது. இவளுக்கும் ஸ்கேன் செய்ய வேண்டியதாக இருந்தது.
"இந்த ஒரு தடவை எங்க அம்மாவை இல்ல உங்க அம்மாவை கூட்டிண்டு போ"
"ஏன் உங்க அம்மாவை கூட்டிண்டு போன என்ன?"
"இல்ல! அதெல்லாம் சரிப்பட்டு வராது"
"அதான் ஏன் ?"
தெரிந்து கொள்ள காத்திருப்போம்...........
அடுத்த பகுதியில் நம்மை மயக்க வரப்போவது ...ரேவதி