இல்லறம்-9
பரிசோதனை முடிவு நல்ல விதமாகவே வந்ததில், அனைவருக்குமே ஏதோ ஒரு இனம் புரியாத நிம்மதி.
ஒரு முறை குல தெய்வம் கோவிலுக்கும் சென்று வந்தனர்.
அவன் கார் புக் செய்வதிலிருந்து, ஹோட்டல் பார்ப்பது அத்தனையிலும் அவளுக்கு அவன் மீது பிரமிப்பே ஏற்பட்டது. அவளுக்கே தெரியாமல் அவளை அவன் ஆக்ரமிக்கத் தொடங்கி இருந்தான்.
கார் பயணம் அவளுக்கு ஒத்துக்கொள்ளாது என்பது அவனுக்கு தெரியாது. செல்லும் வழியெல்லாம் அவள் வாந்தி எடுத்து மிகவும் சிரமப்பட்டாள். வாந்தி எடுப்பதும் அவன் தோளிலேயே சாய்ந்து தூங்குவதுமாக இருந்தாள். வெகு தூரம் சென்றதும் முதலில் காரை நிறுத்தி , அவளுக்கு மாத்திரை வாங்கி கொடுத்து அழைத்து சென்றனர். சிறிது நேரம் தூங்கி எழுந்தவள், உற்சாகமாக வேடிக்கை பார்த்து,
"அம்மா அது பாருங்களேன் , இங்க பாருங்களேன்" என்று குதுகளித்ததில் , அவர்களின் பயணம் இனிமையாகவே இருந்தது.
முதலில் அவனின் உருவத்தினால் அவளை முழுவதுமாய் வெறுக்க ஆரம்பித்தவள் இப்போது அவன் உருவத்தை மட்டும் வெறுக்க ஆரம்பித்தாள். "ச! (இவன் என்பது இப்போது இவர்) மட்டும் கொஞ்சம் பாக்க நான் இருந்தா என்ன யாரும் கையில புடிக்க முடியாது. ம்ம்ம்ம்ம் ... அதான் குடுத்து வைக்கலியே ?"
இன்னும் சில சந்தர்ப்பங்களும் அவனின் திறமையை கண்டு இவள் பிரமிக்கும்படி நடந்தது.
அழகுதான் முக்கியம் என்று நினைத்திருந்தவளுக்கு அது எத்தனை ஆபத்தானது என்பதையும் புரிய வைத்தது.
இவள் அலுவலகம் நட்டத்தில் செல்வதால் வேறு ஒரு கம்பெனி இவள் கம்பெனியை கையகப் படுத்தியது அதன் புது முதலாளி சூர்யா சில காலங்களுக்கு இவள் கம்பெனியை பார்த்துக் கொள்ள வந்திருந்தான்.
சூர்யா அழகன். பேரழகன், ஆணழகன். பேசவே வேண்டாம், பார்த்தாலே போதும். கண்கள் சிரிக்கும். உதடுகளும் மீசையும், பார்ப்போரை மயக்கும். குறிப்பாய் பெண்களை. தன்னுடைய உருவமே தன்னை பாதிக்கிறது என்று அவன் உணர்ந்திருந்தான். தன்னுடைய பணம், உருவம், ஆளுமை, அதிகாரம் அத்தனையும் இருந்தும், தப்பான வழிக்கு அவன் சென்றதில்லை. அதற்கு காரணம் அவனுடைய வளர்ப்புதான். சூர்யா சிறு வயதிலேயே தாயை இழந்தவன். அவன் தந்தை மகனுக்காகவே வாழ்ந்தவர். மறுமணம் செய்ய வயதும், வசதியும் இருந்தும், அவர் மகனுக்காகவே மறுமணம் செய்யாதிருந்தார். அதுவும் ஒழுக்கமாகவே இருந்தார். அதற்கான இன்னொரு காரணம் அவர் தன் மனைவி மேல் கொண்டிருந்த காதல். காதல் என்பதன் அர்த்தத்தை சினிமாவில் (தவறாக) தெரிந்து கொண்டிருந்தவனுக்கு, அதற்கான வயது வந்த போது உண்மையான அர்த்தம் என்பது புரிந்தது. நல்ல தோழமையால்தான் அவனுக்கு இவை எல்லாம் புரியவைக்கப் பட்டது. இத்தனை நல்லவனால் அடக்க முடியாததாய் இருந்தது, பெண்களின் மீதிருந்த வெறுப்பு. பெரும்பான்மையானவர்கள் அவன் மீது வந்து விழுவதும், அவனை அடைய விரும்புவதும் காரணம். அழகு, படிப்பு,பணம், திறமை,எல்லாம் இருப்பவனை யாருக்குத்தான் பிடிக்காது ?
அவனுக்கும் இது எல்லாம் தெரியும். இருப்பினும் அவனுக்கு இவை எல்லாம் நிரந்தரம் இல்லை என்பதையும் புரிந்து வைத்திருந்தான். அன்னையை இழந்தவனுக்கு மனையாள் எல்லாமுமாக இருந்தாள். பின் அவளை விட்டு எதற்கு இன்னொரு இடம் போக வேண்டும்?
அவன் தன் மனைவிக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக பல நல்ல பெண்களையும் சேர்த்தே அசிங்கப் படுத்தியிருக்கிறான். (என்னுடைய எண்ணத்தில் பார்த்தால் அதில் ஒன்றும் தவறேயில்லை என்றே தோன்றுகிறது. அவன் தன் மனையாளுக்கு உண்மையாக இருக்க விரும்புபவன். அவனையும் யாரும் தவறாக பேசிவிடக் கூடாது)
அதில் ஒருவள் ரேவதி.
புதிய முதலாளி மட்டும் இல்லை. இவர்களுக்கு புதியதாக அறிமுகப்படுத்த பட்ட கணிப்பொறி சாப்ட்வேரும் சேர்த்தே படுத்தியது. அதைப் பற்றி அவளுக்கு இதற்கு முன் ஒன்றும் தெரியவில்லை. புரிந்துகொள்வதற்கு சற்று கடினமாய் இருந்தது. அலுவலகத்தில் இவளுக்கும், இன்னும் இருவருக்கு மட்டுமே இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தது. அதில் இவள் தோழி பிரசவத்திற்கு சென்றிருந்தாள் . அந்த இன்னொருவருக்கு தெரியுமா தெரியாதா என்று கூட தெரியாது. சரியான சிடு மூஞ்சி. ஏதாவது சந்தேகம் என்றால் கூட கேட்க முடியாது.
அவள் அண்ணனிடம் கேட்டதற்கு, தெரியும் ஆனால் டைம் இல்லை என்று கூறி விட்டான்.
சிறு சிறு திட்டுக்களாக வர ஆரம்பித்தது, பின்னாளில் அவள் தன்- மானத்தையே தீண்டும்படியான வார்த்தைகளாக வர ஆரம்பித்தது.
"உங்களுக்கு வேலை செய்ய தெரியலன்னா வீட்ல புள்ளை குட்டிங்கள பார்த்துக்க வேண்டியதுதானே? சரியான மக்குங்களா இருக்கு"
அன்று அவள் எவ்வளவு கட்டுப் படுத்தியும், நிற்காமல் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. சரி அன்னையை பார்த்து ஒரு மூச்சு அழுகலாம் என்று அம்மா வீட்டுக்கு வந்தாள்.
"என்ன ரேவதி எப்படி இருக்க?"
"நன்னாருக்கேன் மன்னி, நீங்க இன்னிக்கு வேலைக்கு போகல?"
"இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரமே வந்துட்டேன்"
"நீ என்ன ஆஃபீசுலேர்ந்தா வர்ற? ஆத்துக்காரர் வரல?" நிச்சயம் குரலில் நக்கலும் குத்தலும் தெரிந்தது.
"இல்ல மன்னி அவர் தெனம் வரதுக்கே எட்டுக்கு மேல ஆகிடும்"
"ஓ ! இரு. உட்கார்ந்துக்கோ. அம்மா இதோ வந்துடுவா"
இவளை பார்த்ததுமே அன்னைக்கு பகீர் என்றது. எப்போதுமே கணவனை பற்றி குறை கூறத்தான் வருவாள் பெண். அதை வைத்தே நல்லது சொல்கிறேன் என்று மகனும் மருமகளும் சேர்ந்தே ஏதாவது நக்கல் அடிப்பார்கள்.
"மகனோ உன் பொண்ணுக்கு புத்தி எப்பதான் வருமோ" என்று கூறி முடிப்பான். என்னதான் இருந்தாலும் பெற்றவர்க்கு அது வருத்தம்தான் .
"என்னடி! என்ன விஷயம்? " உள் அறைக்கு இழுத்து சென்றாள்.
"என்னம்மா நீ! ஆத்துக்கு வந்த பொண்ண பார்த்து எப்படி இருக்கன்னு கூட கேட்க மாட்டியா? "
இதற்குள்ளே,
"ரேவதி!இந்தா காபி சாப்பிடு. பாவம் உனக்கும் ஆத்துல வேல இருக்கும். சீக்கிரம் போக வேண்டி இருக்கும்". சீக்கிரம் கிளம்பிவிடு என்று நாசுக்காக சொன்னாள் .
"சரி மன்னி. காபியை குடித்தாள்" இது தன் வீடு இல்லை என்பது தெரிந்தது. அன்யோன்யத்திற்கு பதில் அந்நியமாகவே உணர்ந்தாள் எல்லா பெண்களுக்குமே அது தோன்றுவது இயல்புதான். திருமணமான சில நாட்களிலேயே பெற்றோரின் வீடு தன்னுடையது இல்லை என்று தோன்றி விடும். எந்நேரமும் கணவனின் நினைவே ஆட்டிப் படைக்கும்.(வீட்டை என்ன பண்ணி வச்சுருக்கோ என்ற நினைப்புதான் பலருக்கு )
"சரி மா! நான் கிளம்பறேன்"
"என்னடி இது இப்பதான் வந்த, அதுக்குள்ள கிளம்ப? டிபன் சாப்பிட்டுட்டு போ"
"இல்லமா! நான் கிளம்பறேன். அங்க மாமியார் காத்துண்டு இருப்பா"
டம்ளரை எடுக்க வந்த மன்னி, குங்குமம் குடுத்து வழி அனுப்ப நின்று கொண்டாள்.
உடனே ஆட்டோ புக் செய்து கிளம்பி விட்டாள்.
பாவம் குழந்தை மூஞ்சியே நன்னால . என்னவோ உடனே கிளம்பிட்டா. என்னவோ பாவம். காய்கறி வாங்க வந்த கணவனிடம் கவலையாக சொன்னாள் அன்னை.
சரி அப்புறமா போன் பண்ணி பேசலாம். அவரே பெருமூச்சு வீட்டுக் கொண்டார்.
வீட்டிற்கு வந்தவளுக்கு தலை வின் வின்ணென்று வலித்தது. இவளுக்கும் மற்றவர்க்கும் பெரியதாய் பேச்சு வார்த்தை இல்லை. இருப்பினும் மாமியாரும் மாமனாரும் இவளை நன்றாகவே பார்த்துக் கொண்டனர். பெண் இல்லாத காரணத்தினால் இவளை பெண்ணாகவே பார்த்தனர். சிறு பெண்ணாகவே இருக்கிறாள், இன்னும் முதிர்ச்சி அடைய வில்லை என்று அவளை மகளாகவே ஏற்றுக் கொண்டனர். இவளும், கணவனை ஏசினாளே தவிர, அவனை பெற்றவர்களை மரியாதையாகவே நடத்தினாள் , நடந்து கொண்டாள் .
தினமும் அலுவகத்தில் இருந்து மகிழ்ச்சியாக வரும் மருமகள் சிறிது காலமாக சோர்வாக வருவது கண்ணில் பட்டது. மனது அடித்துக் கொண்டாலும், யாரும் இவளிடம் எதுவும் கேட்கவில்லை. ஆனால் இன்று தாமதமாக வந்தவள் கண்கள் அழுதிருந்தது போல தோன்றியது. இவள் வருவதற்குள் அவள் அன்னை அங்கிருந்து போன் செய்திருந்தாள் . அதனால் மாமியாருக்கும் கவலை தொற்றிக் கொண்டது.
வந்தவள் அப்படியே கட்டிலில் விழுந்து ஆழ ஆரம்பித்தாள். மாமியாருக்கு நிற்க கொள்ள வில்லை. மெதுவாய் கதவை திறந்து, தலை தடவி என்னமா என்ன ஆச்சு?
அம்மா என்று கட்டிக் கொண்டு ஆழ ஆரம்பித்தாள். தன் அன்னையிடம் கொட்ட நினத்தவளுக்கு மாமியார் வந்து கேட்டதும்.அணை உடைந்து விட்டது. அந்த புது பாஸ் என்ன ரொம்ப கேவலப்படுத்தறாரு. நான் வேலைய விட்டுடறேன். மாமியாரின் இடுப்பைக் கட்டிக் கொண்டு அழுதாள்.
"சரிடா கண்ணு. புடிக்கலானா போகாத. இதுக்கெல்லாம் போய் அழுவாளா?"
நடப்பதை கவனித்துக் கொண்டிருந்த மாமனார்,
"இதுக்கா கவலைபட்டுண்டு அழுதுண்டிருக்க? நாங்க என்னவோ ஏதோவோன்னு பயந்துட்டோம் தலை தடவி சொன்னார்.
"அந்த ப்ரோகரம்தான மனோகரன் சூப்பரா பண்ணுவான். அவன்கிட்ட கேளு. மண்டவே (திங்கள் ) நீ தைரியமா பண்ணலாம். இதெல்லாம் பிசாத்து. இதுக்கு போய் அழுதுண்டிருக்க?"
குளிச்சிட்டு வா , டிபன் சாப்பிடலாம்.
இதைத்தானே தன் அன்னையிடம் எதிர்பார்த்தது. அம்மா என்ற சொல்லிற்கான அர்த்தம் புரிந்தது. (பொதுவாக பிராமணர்கள் வீட்டில் மாமனார் மாமியாரை அப்பா அம்மா என்று கூறுவதே வழக்கம்)
"தேங்க்ஸ்பா" சொன்னவளுக்கு இப்போது அழுகை குறைந்திருந்தது.
"இதெல்லாம் ஒரு விஷயமா. போடா குழந்தை. ஒரு காபி குடி. தெம்பா இருக்கும்"
"காபி அவளுக்கு மட்டும்தான். நீங்க அடிபோடாதீங்கோ!" பெரியவர்களின் செல்ல சண்டையை ரசித்தவள் சிரித்து கொண்டே குளிக்க போனாள் .
மயக்குவான் மனோ.....
காபி அவளுக்கு மட்டும்தான். நீங்க அடிபோடாதீங்கோ! கணவன் மனைவியின் செல்ல சண்டையை பார்த்து விட்டு சிரித்து கொண்டே குளிக்க போனாள் .