சமந்தா கதவை சாற்றிக்கொண்டது குமாருக்கு கோபம் கொடுத்தாலும் திலீப் “குட்” என்றான் பெருமையாக, அது இன்னும் எரிச்சலாக இருந்தது.
8 பிளாக் கொண்ட அப்பார்ட்மெண்ட் வளாகத்தை பற்றி பேசிக்கொண்டே படி வழியே இறங்கி வந்தார்கள் இருவரும்.
“ஹே நீங்க திலீப் தானே என்ன சார் வீடு தேடி வந்தீங்களா நான் இந்த அப்பார்ட்மெண்ட் அசோசியேஷன் மெம்பர் வாங்க கைவசம் மூணு வீடு இருக்கு காட்டுறேன்” உற்சாகமாக அழைத்தார்
குமார் “இல்ல சார் தெரிஞ்சவங்க..” என்று சொல்லவர அதற்குள் திலீப் குமார் கையை பிடித்து அழுத்தியவன் “ஆமா ஆமா காட்டுங்க” என்றான். அவரும் வாங்க இந்த பக்கம் போவோம் என்று சமந்தா வீடு இருக்கும் பிளாக் எதிர் பிளாக் அழைத்துச் சென்றார்.
“ஏன் சார் அந்த பிளாக்ல வீடு இல்லையா”
“அது எதுக்கு சார் வாங்க நான் சூப்பர் வீடு காட்டுறேன்” சொல்லி வீட்டையும் காட்டினார்.வீடு நன்றாக இருந்தாலும் மனிதர் அறுவையையோ சகித்துக்கொள்ளவே முடியவில்லை.
காலி வீட்டின் கிச்சன் அழைத்துச் சென்றவர் ‘இதுதான் கிச்சன்’ என்று ராகமாக சொல்லியதோடு மட்டும் நிற்காமல் “பால்ல பால்கோவா பண்ணலாம் ரசத்துல ரசமலாய் பண்ண முடியுமா இங்க அத டெஸ்ட் பண்ணலாம் ஹ்ஹ்ஹா” சிரித்தும் வைத்தார்.
திலீப் ரகசியமாய் “என்ன கன்றாவிண்ணே இது” குமார் காது பக்கம் முணுமுணுக்க
“தம்பி நீ சொன்ன ஜோக் தான்டா”
திலீப் “ஆத்தி இவ்வளவு மொக்கை ஜோக்கெல்லாமா சொன்னேன்”
“நீ நல்லா தான் சொன்ன மனுஷன் சொல்றப்பதான் லைட்டா மொக்கையா தெரியுது”
“ஹீஹி”
“கிளம்பலாமா” குமார் கேட்க
“இல்ல இன்னும் வீடு செட் ஆகலண்ணே” அழுத்தி சொன்னான் திலீப்.
“டேய் டைம் ஆகுதுடா” குமாரும் அழுத்தி சொல்ல
அவர் “வாங்க வாங்க இன்னொரு வீடு காட்டுறேன்”
இன்னொரு புது வீட்டுக்கு அழைத்துச் சென்றவர் அங்கே ஒரு ஜோக் சொல்ல தொடங்கினர்
“டீச்சர் ஸ்டூடண்ட் பார்த்து உனக்கு பிடிச்ச ஊர் எதுன்னு கேட்டாங்களாம், அதுக்கு ஸ்டூடன்ட் சுவிஸர்லாந்து சொன்னானாம். டீச்சர் எங்க ஸ்பெல்லிங் சொல்லு சொன்னாங்களாம். அதுக்கு அந்த பையன் என்ன சொல்லிருப்பான் சொல்லுங்க ஹ்ஹ்ஹா”
குமார் “என்ன சொல்லி இருப்பான்”
திலீப் “ஸ்பெல்லிங் சொல்லியிருப்பான்”
அவர் "ஐயோ அப்படின்னா எனக்கு பிடிச்ச ஊருக்கு கோவான்னு சொன்னானாம் ஆஹாஹாஹா"
குமார் காதில் புகை வராத குறை.
“இந்த வீட்டு ஓனர் நமக்கு தெரிஞ்ச டீச்சர் எப்படி சார் நம்ம சோக்கு ஹ்ஹாஹா”
திலீப் “சூப்பர் சார் அந்த பிளாக்ல வீடு எதுவும் இல்லையா”
“சார் அந்த பிளாக்ல ராங்கி ராட்சசி ஒரு பொண்ணு இருக்கு, சரியான திமிர் பிடிச்ச பொண்ணு சார் அதெல்லாம் நமக்கு செட்டாகாது”
திலிப் “அப்படியா”
“ஆமாங்குறேன். மத்த பிளாக்ல எல்லாம் மெயின்டனன்ஸ்க்கு ஒரு அமௌண்ட் கொடுத்தா இந்த பிளாக்ல வேற மாதிரி கொடுப்பாங்க. உங்கள போல சிங்கள் சிங்கம்க்கு எல்லாம் ஒத்து வராது”
சிங்கள் சிங்கமாம்!
குமார் “ஏன் சார் அப்படி”
அவர் "சார் சென்னை சிட்டி ஜனம் ஜாஸ்தி, சிலதெல்லாம் அப்படி இப்படி முன்ன பின்ன இருக்கத்தான் சார் செய்யும். இவங்களுக்கு எல்லாம் பெர்பெக்ட்டா இருக்கணும், வேலைகாரி மாடிப்படி கூட்டல அதுக்கு காசு கம்மியா கொடுக்கறாங்க. லிஃப்ட் தானே யூஸ் பண்றாங்க. ஒரு நாள் விட்டு ஒரு நாள் பெருக்குன்னா என்னவாம். செக்யூரிட்டி ஒரு நாள் லீவு, அன்னிக்குன்னு பார்த்து ஒரு தண்ணீ பாம்பு உள்ள வந்திருச்சு, இந்த பொண்ணு கத்தோ கத்துண்ணு கத்துதூ. கஷ்டம் சார் அந்த பொண்ணு இருக்கிற இடத்தில எல்லாம் இருக்கிறதெல்லாம்"
குமார் "ஏன் சார் அந்த பாம்ப யார் புடிச்சு வெளியப்போட்டது"
அவர் "அந்த பொண்ணுதான் சார்"
திலீப் "அவங்க பேர்...."
"சமந்தா... ஆனா கொஞ்சமும் எதுலயும் சம்மதமே சொல்லாது"பேசிக்கொண்டே அடுத்த வீடு காட்ட போனார்.
இப்படி அவர் சொல்லும் ஜோக் கேட்டுகொண்டே ஆறு வீடு பார்த்துவிட்டு "சரி சார் நாங்க கிளம்புறோம்" என்று இவர்கள் விடைபெற்று திரும்ப கார் பக்கம் வரும் வேளை சமந்தா குளித்து, உடைமாற்றிக்கொண்டு சாப்பாட்டு பொட்டலத்துடன் இவர்களை முறைத்துப்பார்த்துக்கொண்ட எதிரில் வந்து நின்றாள்.
சமந்தா “ இன்னும் என்ன செய்றீங்க இங்க”
திலீப் “ஹிஹீ வீடு பார்க்க..”
சமந்தா “கிடைச்சதா”
திலீப் “ரொம்ப காஸ்டலி”
சமந்தா “உங்க வீட்டுக்கு இந்த வீட்டு விலையெல்லாம் கம்மிதான் திலீப் சார்”
திலீப் வசிப்பது நீலாங்கரையில் அவன் சொந்த வீட்டில் என்பது யூடியூபில் வெட்ட வெளிச்சமாக காட்டி இருக்கிறார்கள், இதில் ஐயா வீடு வாடகைக்கு பார்க்க வந்தாராம்.
சமந்தா எரிச்சலாக “என்னை பத்தி தெரிஞ்சிக்க என்கிட்டயே விசாரிக்கலாம்”
திலீப் சாரி சொல்லி தப்பு செய்து மாட்டிக்கொள்ளும் குழந்தை போல தலைகுனிந்து நிற்க..,
குமார் “ஊர்காரபுள்ள, தனியா இருக்க! சுத்தி இடம், மனுஷங்க எப்படின்னு தெரிஞ்சுக்க நெனச்சோம், அதுல என்ன தப்பு”
சமந்தா “தப்பு இல்ல, ஆனா இத்தனை வருஷம் கழிச்சு பண்றதுதான்…”
குமார் “ஆமாம்மா தப்புதான். எங்கத்த, நாங்க என்ன உன்ன மாதிரி படிச்ச ஆட்களா,கால் ஊனி நிக்கவே முடியல இன்னும் தொழில்ல, இதுல சோறு,தண்ணிக்கு எல்லாம் நாய்பட்ட பாடுதான். பொம்பளபிள்ள பத்தி துருவி துருவி விசாரிக்க முடியுமா சொல்லு.ஊருக்குள்ள இருக்கற கொஞ்சம் நஞ்சம் ஒட்டி இருக்கிற மானம் மரியாத போயிடாது.எங்கக்கா சின்னப்பிள்ள எங்க போனாளோ தேடுறா தம்பின்னு எத்தனை நாள் கேட்ருக்கு தெரியுமா. நான் உன்ன பார்த்ததும் அதுக்கு சொல்லிப்புட்டேன். சென்னை வந்தா எங்கக்கா உன்னை பார்க்க வரும் என்ன”
சமந்தா “நல்லா பேசுறீங்க. சரி வாங்க சாப்பிடலாம். உங்களுக்கும் சேர்த்துதான் வாங்கி இருக்கேன்” சொல்லிவிட்டு முன்னே நடக்க
“ண்ணே என்னண்ணே சடசடன்னு பேசிப்புட்ட”
குமார் “இதப்பாரு போனோமா, சாப்ட்டோமான்னு வந்துட்டே இருக்க, உன்ன கொண்டு போய் கிரௌண்ட்ல விடணும் நானு”
“ சரிண்ணே சரிண்ணே”
மூவரும் சேர்ந்து சாப்பிட தட்டு தண்ணீர் எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள் சமந்தா
திலீப் குமாரை ‘பேச்சு கொடு பேச்சு கொடு’ என தொந்திரவு செய்ய
குமார் “ஏன் சம்மு இங்க சண்டை சச்சரவு நிறைய இருக்கோ”
சமந்தா “ஐயோ அண்ணா, இங்க மாடிப்படி எல்லாம் கூட்டுற பொம்பள அவங்க வீட்ல எல்லாம் வேலை செய்றாங்க. அந்த பொம்பள மாடிப்படி கூட்டி வார வேற ஆள் கூட்டிவந்தா வேலையை விட்ருவேன்ன்னு அவங்கள பயமுறுத்துது. அவங்க பயப்படலாம் நான் ஏன் பயபடனும். எங்க ப்ளாக்லே இருக்குறது எல்லாம் வயசான ஆட்களே .அவங்க படியும் யூஸ் பண்றாங்க. அப்போ அது சுத்தமா இருக்கனும் தானே, தண்ணீ கொட்டியிருக்கு வந்து தொடச்சி கொடுன்னு சொன்னா கூட செய்யலன்னா எப்படி”
முந்தின நாள் இரவு அவனை பார்த்து ஒதுங்கி போக நினைத்தவள், கார் இடித்ததும் நடுங்கியவள் அல்ல இப்போது அவன் காணும் சமந்தா சுட்டிப்பெண். அவர்கள் ஊரில் பூர்விக சொத்து பிரிக்க மத்தியஸ்தம் செய்ய இவன் தந்தையும், அவள் தந்தையும் போவார்கள். சமந்தாவின் தந்தை நியாயம்ன்னா நியாயம்தான் என்று அடித்து பேசுவார், அவர் மகள் நானென குரலில் காட்டுகிறாள் பெண். இன்னமும் க்யூட், இன்னமும் அழகு, இன்னமும் கவர்ச்சியாக தெரிகிறாள். கடவுளே..! இதென்ன அவன் லட்சியம், கொள்கை எல்லாம் மறந்து மூளை முழுக்க இந்த பெண்ணும் இவள் சார்ந்த நினைவுகள் மட்டுமே வலம் வருகிறது..? திலீப் தன்னை தானே வியந்துகொண்டிருக்க,
குமார் “தொந்திரவு ஏதாச்சும் இருந்தா சொல்லும்மா, பார்த்துக்கலாம்”
சமந்தா பதில் சொல்லாமல் சிரிக்க
குமார் “ஏன் சிரிக்க”
சமந்தா “இப்படி நிறைய பேர் என்கிட்டே சொல்லவும் தான் யாருக்கும் தெரியாம ஒரு எடத்துல வந்து செட்டில் ஆகிட்டேன்”
மூவரும் சற்றுநேரம் அமைதியாகிவிட்டனர். சமந்தா தெரிவிக்க வருவது ஆண்கள் இருவருக்கும் புரிந்தது. அனுபவம் என்பது அதுதானே..! அப்பாவியாக ஒருவரை நம்புவோம், அடப்பாவி என எண்ண வைத்துவிடுவார்கள். நல்ல எண்ணத்தில் நெருங்குபவரை மனம் தானாக சந்தேகிக்கும். இந்த லட்சணத்தில் இந்த திலீப் பையன் ஐஸ்க்ரீம் பார்த்த குழந்தை போல ஐ சமந்தா! ஐ சமந்தா! என துள்ளி குதித்து சொதப்பிக்கொண்டிருக்கிறான்.
சமந்தா விளக்கம் கொடுக்க கடமைப்பட்டவளாக “என்னை பார்த்தா ஐயோ பாவமா தெரியுது, இல்லன்னா நிறைய பணம் இருக்கிற பொண்ணு ஏமாந்து போயிருவா அதனால் நாமளே இவளை ஏமாத்திடலாம் தோணும் போல..அவங்க பரிதாபமோ, பொய்யான அக்கறையோ தேவைப்படல. அதே சமயம் என்னை நானே மீட்டெடுக்க என்னை யாருக்கும் தெரியாத இடத்துல வந்து நிறுத்திக்கிட்டேன். திலீப் நினைக்கிறது போல பெருசா பணம் ஏமாறல ஆனா என்னை ஏமாத்த நினைச்சாங்கங்கறதே ரொம்ப கஷ்டமா இருக்கு.சோ எந்த வகையிலும் ஊர்காரங்க, தெரிஞ்சவங்க கிட்ட நெருங்கினா பயமா இருக்கு”
திலீப் “ஒன்னும் கவலை வேணாம் நாங்க உங்களை எந்த வகையிலும் தொந்திரவு செய்யமாட்டோம்” உறுதியாக அழுத்தி கூற
குமார் வெறுமென சம்பிரதாய சிரிப்பு சிரித்துவிட்டு சாப்பிட்ட தட்டு எடுத்து கழுவி வைத்துவிட்டு “கிளம்பறோம் சமந்தா” சொல்ல இம்முறை திலீப் “ஆமாங்க கிளம்புறோம். ப்ராக்டீஸ் போனும்.அப்பறம் மூணு நாள்ல துபாய் போறேன். மேட்ச் பாருங்க முடிஞ்சா”
சமந்தா “கண்டீப்பா பார்ப்பேன்” சொல்லி வழியனுப்பி வைத்தாள்.
உடல் சோர்வு தூங்கு பெண்ணே என்று கெஞ்ச, மனதின் ஓரத்தில் தன் எண்ணத்தை அவளை நெருங்க நினைக்கும் ஆண்களுக்கு எடுத்து சொல்லிவிட்ட திருப்தியும், ஓவரா ஆட்டிட்யூட் காட்டிட்டோமா? சந்தேகமும் எழுந்து தக்கதிமிதா ஆடியது.
திலீப் ப்ராக்டீஸ் கோர்ட் சென்ற நேரம் காண்டு-கிளி கோச் இன்னமும் காண்டாக இருக்க “பிளேயர்க்கு முக்கியம் டைமிங் சென்ஸ்,டெடிகேஷன், ஒழுக்கம்.அதெல்லாம் இல்லாதவன் எல்லாம் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் ஆகணுமின்னு ஆசைபடாதீங்கடா, எரிச்சல் ஆகுது.நாங்க நாள் முழுக்க வெயில்ல காத்துக்கிட்டு இருப்போமாம் இவங்க ஊர் மேஞ்சிட்டு வருவாங்க. அடுத்த மூணு நாள்ல மேட்ச் இருக்கு.அடுத்த செலெக்ஷனுக்கு ஒரு மாசம்தான் இருக்கு, அதுல செலெக்ட் ஆகலேன்னா திரும்ப இங்க வந்து மைக் புடிச்சுகிட்டு பைத்தியமாட்டம் ஆடணும் தெரியும்தானே”
திலீப் அவர் பேசி முடிக்கும் வரை காத்திருந்துவிட்டு பேட் எடுக்க செல்ல
குமார் “சாரிங்க சார்,ஒரு ஆக்சிடென்ட்”
கோச் “இவனுக்கு எதுவும் இல்ல தானே அப்பறம் ஏன் ப்ராக்டீஸ் கட் பண்ணனும்”
குமார் மனதிற்க்குள் ‘யப்பா மனுஷனா இவனெல்லாம், அதுசரி இந்த திலீப் மட்டும் என்ன…’ எண்ணிக்கொண்டே வருகிறேன் என்று விடைபெற்றுக்கொண்டான்.
திலீப் அதிகாலை ப்ராக்டீஸ் தவிர்த்த தண்டனையாக நூறு ஓட்டம், நூறு தண்டால் எதையும் கண்டுக்கொள்ளாமல் கருமமே கண்ணாக செய்ய தொடங்கிவிட்டான்.
திலீப் வெற்றி பெற வேண்டும். அவன் வெற்றி அவர்கள் வெற்றி, இதோ இந்த காண்டுகிளியின் வெற்றி, அவன் ‘மிருகம்’ என கேளிக்கை துறையில் தனக்கென ஓர் பெயர் உருவாக்கி வைத்திருக்கிறான், அதன் வெற்றி. சும்மா விடமுடியாது. பையன் கொஞ்சம் தடுமாறினாலும் அடுக்கடுக்காய் உருவாகி வரும் அவர்கள் கோட்டை சரிந்துவிடும்.